Untitled Document
April 23, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
WTBF இன் 5 வது உலகக்கிண்ண பட்மின்ரன் போட்டிகள்
[Friday 2017-08-04 18:00]

உலகத்தமிழர் பூப்பந்தாட்டப்பேரவையின் 5 வது உலகக்கிண்ணப்போட்டிகள் இவ்வருடம் கனடா நாட்டிலே ரொறன்ரோ நகரிலே யூலைமாதம் 29 30 திகதிகளில் மிகச்சிறப்பாக நடந்தேறியுள்ளது WTBF இன் கனேடியப்போட்டிகளுக்கான உலகக்கிண்ண நிர்வாகக்குழு மிகநேர்த்தியாக செயலாற்றியுள்ளது.

இவ் உலகக்கிண்ணப்போட்டிகள் 13 வயதிற்குட்பட்டோர் தொடக்கம் 60 வயதிற்குமேற்பட்டோர் வரையில் ஆண்பெண் இருபாலாரையும் உள்ளடக்கியதாக 25 பிரிவுகளில் நடைபெற்றிருந்தது போட்டிகள் யாவும் மிகமிக இறுக்கமான போட்டிகளாக அமைந்திருந்தது இவ்வருடம் புதிதாக அமெரிக்கா அவுஸ்திரேலியா போர்த்துக்கல் பின்லாந்து ஆகிய 4 நாடுகளிலிருந்தும் மிகத்தரமான போட்டியாளர்கள் பங்குகொண்டு போட்டிகளை மிகத்தரமான ஓர் நிலைக்கு இட்டுச்சென்றிருந்தார்கள். வயதுவரம்பின்றி நடைபெற்ற WTBF போட்டிகளிற்கு பணப்பரிசுத்தொகையும் வழங்கி ஊக்குவிக்கப்பட்டதுடன் இப்போட்டிகள் சிறப்பாக நடந்தேற பல அனுசரணையாளர்கள் தங்களின் பாரியபங்காற்றலையும் வழங்கியுதவியிருந்தார்கள்

மேலும் இப்போட்டிக்கு சிறப்புவிருந்தினர்களாக GERMANY Hamburg மாநில முன்னைநாள் பொருளாதார மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் இயன் கரன்இ கனடா பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி இ நகரசபை உறுப்பினர்கள் லோகன் கணபதி நீதன் சாண் ஆகியோர் கலந்து பெருமைசேர்த்திருந்தார்கள்.

15 ற்கு மேற்பட்ட நாடுகளிலிருந்து 200 ற்கு மேற்பட்ட போட்டியாளர்கள் ஆயிரத்திற்குமேற்பட்டபார்வையாளர்கள் இணைந்துகொ ண்டிருந்தார்கள்.

WTBF ஆனது 2013 இலே சுவிஸ் நாட்டிலே தனது 1 வது உலகக்கிண்ணப்பயணத்தை ஆரம்பித்துஇ 2 ஆவதை 2014 இல் பிரான்சிலும்இ 3 ஆவதை 2015 இல் பிரித்தானியாவிலும் 4 ஆவதை 2016இல் யேர்மனிலும் நடாத்தி பெருவெற்றியை பதிவுசெய்திருந்தது. ஆனால் இவ்வாரம் கனடாமண்ணில் நடந்தேறிய 5 வது உலகக்கிண்ணப்போட்டிகள் மிகப்பெரும் உநதுதலை பாரிய மாற்றத்தை ஏற்படுத்தி சாதனைகளை நோக்கி நகரவைத்துவிட்டது. இதன்மூலம் மிகத்திறமையானபல வீரர்கள இனம்காணப்பட் டிருக்கின்றார்கள் இவர்களை முன்னுதாரணப்படுத்தி பலபுதியவீரர்கள் உருவாக்கம் பெறத் தூண்டப்பட்டிருக்கின்றார்கள்

மேலும் நமது வீரர்களில் குறிப்பிடக்கூடியளவிற்கு பலர் அந்தந்தநாடுகளின் தேசியதரப்பட்டியலில் மிகவேகமா முன்னேறி வருகின்றார்கள் பிரித்தானியா அவுஸ்திரேலியா நோர்வே போன்ற நாடுகளில் தேசிய அணிகளிற்குள்ளும் இடம்பெறத்தொடங்கி தமிழினத்தை தலைநிமிரவைத்துள்ளார்கள் அடுத்த ஆண்டு 2018 மார்ச் 31 மற்றும் ஏப்ரல் 1 திகதிகளில் 6 வது உலகக்கிண்ணப்போட்டிகளை DENMARK நாட்டிலே நடாத்தத்தீர்மானிக்கப்பட்டிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

நிகழ்வின் மேலதிக 1700 படங்களை பார்ப்பதற்கு www.puthinamphotos.com இணையதளத்திற்குள் நுழைக்க..

  
  
   Bookmark and Share Seithy.com


Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா