Untitled Document
April 25, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
மொன்றியால் கனடா தினக் கொண்டாட்டத்தில் தமிழ் அகதிப்படகு: Top News
[Tuesday 2017-06-27 20:00]

மொன்றியால் நகரில் கடந்த ஜூன் 24, 25 சனி, ஞாயிறு நடந்த கனடா தினக்கொண்டாட்டத்தில், சிறப்பு காட்சிப்பொருளாக 86ம் ஆண்டுத் தமிழ் அகதிப் படகு காட்சிக்கு வைக்கப்பட்டு வந்திருந்த அனைவரையும் பரவசப்படுத்தியது. கனடியத் தமிழர் பேரவையின் நாடு தழுவிய கனடாதினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக அமைந்த இந்த படகுக் கண்காட்சி மொன்றியால் திருமுருகன் ஆலய முன்றலில் நடைபெற்றது. மொன்றியால் திருமுருகன் ஆலயம் இந் நிகழ்வை அங்கு மிகச் சிறந்த முறையில் ஒழுங்கமைத்திருந்ததது. நிகழ்வில் Dollard-Des Ormeaux மேயரான Ed Janiszewski கலந்து கொண்டு சிறப்பித்தார்.

கனடா கொடியும், கியூபெக் கொடியும் அங்கு ஏற்றப்பட்டன. கவுன்சிலர்கள் Colette Gauthier, Alex Bottausci and Morris Vesley ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். கனடியத் தமிழர் பேரவையின் முன்னாள் தலைவர் ராஜ் தவரட்னசிங்கம் மற்றும் மொன்றியால் அருள்மிகு திருமுருகன் ஆலய அறங்காவலர் தலைவர் வி. விஜயகாந்தன் ஆகியோரும் அங்கு உரையாற்றினர். 86ம் ஆண்டு 155 தமிழ் அகதிகளையும் காப்பாற்றிய நியூபவுண்லாந்து மீனவர்களுக்கு அனைவராலும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் இந்த தமிழ் அகதிப் படகை மொன்றியால் நகருக்கு கண்காட்சியாக கொண்டுவரும் திட்டத்திற்கு நிதியுதவியுடன் ஆதரவளித்த கனடா மத்திய அரசாங்கத்திற்கும் பலரும் நன்றி தெரிவித்தனர். மேலும் இப் படகானது மொன்றியால் நகரையடுத்து ஜூன் 27, 28ம் திகதிகள் கிங்ஸ்ரன் நகரிலும் தமிழ்க் கலை நிகழ்ச்சிகளுடன் காட்சிக்கு வைக்கப்படும் என்றும், அதன்பின் ஜூலை 1ந் திகதி தலைநகரில் கோலாகலமாக கொண்டாடப்படவிருக்கும் கனடாவின் 150வது பிறந்த தினப் பெரும் கொண்டாட்டத்தையொட்டி, ஒட்டாவாவில் ஜூன் 30 முதல் ஜூலை 2 வரை தமிழ் கலை நிகழ்ச்சிகளுடன் காட்சிக்கு வைக்கப்படும் என்பதும் அங்கு பலத்த கரகோஷத்தின் மத்தியில் தெரிவிக்கப்பட்டது.

கியூபெக், கனடா கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு இரண்டு தினங்களாக கம்பீரமாகக் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த இப்ப‌டகினை ஆயிரத்திற்கும் மேற்பட்ட கியூபெக் வாழ் மக்கள் திரண்டு வந்து கண்டு களித்தனர். நிகழ்வை சிறப்பிக்கும் வகையிலும், பார்வையாளரை கவரும் வகையிலும் கலை நிகழ்ச்சிகளும் அங்கு இடம்பெற்றன. இப்படகின் பயணம் குறித்து ஆங்கிலத்திலும், பிரெஞ்சிலும் எழுதப்பட்டு நூல் வடிவில் அமைந்திருந்த விளக்கப் பிரசுரமும் அங்கு விநியோகிக்கப்பட்டது.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா