Untitled Document
April 19, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
உலகத் தமிழர் பூப்பந்தாட்டப் பேரவையின் 5 வது உலகக்கிண்ணப் போட்டி: ரொறன்ரோ
[Thursday 2017-06-22 06:00]

உலகத் தமிழர் பூப்பந்தாட்டப் பேரவையின் 5வது உலகக்கிண்ணப் போட்டிகளை கனடா ரொறன்ரோவில் எபிக் பாட்மின்டன் விளையாட்டு அரங்கத்தில் (நுpiஉ டீயனஅiவெழn ளுpழசவள ளுவயனரைஅ) நடாத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. உலகத் தமிழர் பூப்பந்தாட்டப்பேரவையின் கனடாக் கிளை கடந்த வருடம் உருவாக்கப்பட்டிருந்தது. அதன் நிர்வாகக் குழுவானது இந்த உலகக்கிண்ணப் போட்டிகளுக்கான ஆரம்ப வேலைகளை நுணுக்கமாக செய்து வருகின்றது.

உலகத் தமிழர் பூப்பந்தாட்டப் பேரவையின் நிறுவனரும்இ அதன் நிர்வாக இயக்குனருமான திரு. கந்தையா சிங்கம்இ அவர்கள் கடந்த வருடம் வைகாசி மாதம் சுவிட்சர்லாந்திலிருந்து கனடா வருகை தந்திருந்தார். கனடாவின் போட்டியாளர்கள் சர்வதேச தரத்திலான போட்டிகளில் ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் பங்குபற்றுவதை நன்றியுடன் நினைவு கூர்ந்ததுடன்இ கடந்த வருடம் ஜேர்மனியில் நடந்த போட்டிகளில் 30 க்கும் மேற்பட்ட கனேடியப் போட்டியாளர்கள் பங்குபற்றியதை பெருமையாகக் குறிப்பிட்டிருந்தார் .

தொடர்ந்து உரையாற்றுகையில் இறகுப் பந்து விளையாட்டிற்கான இந்த சர்வதேச அமைப்பு புலம் பெயர்வாழ் தமிழர்களைக் கொண்டு அமைக்கப்பட்டதென்பதும் அந்த அமைப்பு தமிழ் இளைஞர்களின் விளையாட்டு திறனை சர்வதேச தரத்திற்கு வெளிப்படுத்தும் நிமித்தமாக ஒவ்வொரு வருடமும் வெவ்வேறு நாடுகளில் போட்டிகளை நடாத்துவதென்பதும்இ ஒரு சிறப்பானதும் சவால்கள் நிறைந்ததுமான விடயம் என்றும் கூறினார்.

விளையாட்டுகளும் போட்டிகளும் பல்வேறு சமூகத்தினரையும் ஒன்றுபடுத்தி இணைக்கும் ஒரு வழியாக இருப்பதனால்இ வெவ்வேறு இடங்களில் வாழும் புலம்பெயர் தமிழர்களிடையே இத்தகைய போட்டிகளை நடாத்துவதன் மூலம் அங்கிருக்கும் இளைஞர்களிடையே விளையாட்டுத்துறை நோக்கிய ஆர்வத்தினையும் ஊக்கத்தினையும் வளர்ப்பது மட்டுமல்லாமல்இ அவர்கள் ஏனைய சமூக அங்கத்தவர்களையும் ஈர்த்து அவர்களோடு இணக்கமான ஒரு வாழ்வியல் சூழலை ஏற்படுத்தவும் முடியும்.

உலகம் முழுவதும் இறகுபந்தாட்டத்திற்கென ஆர்வலர்களும் வல்லுனர்களும் உள்ள நிலையில்இ புலம்பெயர் தமிழர்களிடையேயுள்ள இளைய சமூகம் அத்தகைய வசதிகளை பாவித்து இந்த விளையாட்டின் நுணுக்கங்களை கற்று தேர்ச்சி பெறவேண்டும். இதனை செயல்படுத்துவதற்காக உரிய பயிற்சிகள் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

போரினாலும்இ மற்றும் இயற்கை அனர்த்தங்களினாலும் பாதிக்கப்பட்ட எமது இளைஞர்களுக்கு இந்த இறகுப்பந்தாட்ட விளையாட்டை அறிமுகப்படுத்தி ஊக்கப்படுத்தி போட்டிகளை அங்கே நடாத்துவதன் மூலம் அவர்களையும் நிச்சயமாக தேசிய மட்ட இ சர்வதேசமட்ட போட்டிகளில்பங்குபெற சந்தர்ப்பமளிக்கமுடியும்.

கடந்த வருடம் யேர்மனியில் நடைபெற்ற உலக க்கிண்ணப்போட்டியில் (2016) ஜெர்மனிஇ ஹாலந்துஇ சுவிட்சர்லாந்துஇ இங்கிலாந்துஇ பிரான்சுஇ கனடாஇ நோர்வேஇ சுவீடன் டென்மார்க்இ நெதர்லாந்துஇ இலங்கை போன்ற நாடுகளிலிருந்து விளையாட்டு வீரர்கள் பங்குபற்றியதானது உலகளாவிய ரீதியில் ஒரு ஆர்வக் கிளர்ச்சியை தமிழர்களிடையே உருவாக்கியுள்ளது. மேலும்இ இந்த பேரவையின் ஒரு பிரதான நோக்கங்களுள் ஒன்று உலகம் முழுவதும் பரந்து வாழும் புலம் பெயர் தமிழர்களை ஒருங்கிணைத்து ஐக்கியப் படுத்துவதாகும்.

இந்த போட்டிகளின் இன்னொரு கருத்தில் கொள்ள வேண்டிய விடயம் என்னவெனில்இ 2013 இல் சுவிட்சர்லாந்தில் நடந்த முதல் உலகக்கிண்ணப் போட்டிகளின் பின்னர் பெருமளவிலான இளஞர்கள் போட்டிகளில் பங்குபற்ற முன்வருவது மட்டு மல்லாமல்இ இவ் விளையாட்டின் இரசிகர்களிடமிருந்து பரந்த அளவில் அதற்கான வரவேற்பும் கிடைத்து வருகிறது. அது மட்டுமல்லாமல்இ இது எமது இளைஞர்கள் எல்லாவிதமான விளையாட்டுத்துறைகளிலும் ஈடுபட்டு சர்வதேச தரத்தினை அடையக் கூடிய தன்மை உள்ளவர்கள் என்ற ஒரு வலுவான நம்பிக்கையையும் எமக்கு ஏற்படுத்துகிறது.

சுவிட்சர்லாந்துஇ பிரான்சுஇ ஜெர்மனிஇ இங்கிலாந்து போன்ற நாடுகளில் நடந்த உலகக்கிண்ணப் போட்டிகளை பார்வையிட்டவர்கள் இந்த இளைஞர்கள் தொடர்ந்தும் சிறப்பான பயிற்சிகளையும் நுணுக்கங்களையும் கற்றுக்கொள்வார்களேயானால்இ அவர்களால் சர்வதேச தரத்திற்கும் விளையாடமுடியும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார்கள்.

இந்த வருடம் பதினைந்துக்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து இரு நூறுக்கும் அதிகமான வீரர்கள் போட்டிகளில் பங்கு பற்றுவார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது. இவ்வகையான நிகழ்வுகளும் போட்டிகளும் தமிழ் இளைஞர்களிடையே ஒரு வித எழுச்சியையும் உணர்வையும் உண்டாக்கும் என தீர்க்கமாக நம்புகிறோம்.

உலகத் தமிழர்பூப்பந்தாட்டப் பேரவை

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா