Untitled Document
April 19, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
டென்மார்க் மாலதி தமிழ்க்கலைக்கூடம் நடாத்திய மாவீரர் நினைவு தமிழ்த்திறன் போட்டிகள் 2017 Top News
[Monday 2017-04-24 07:00]

டென்மார்க் மாலதி தமிழ்க்கலைக்கூடத்தில் கல்வி கற்கும் மாணவர்களின் தமிழ்மொழித் திறனை வெளிக்கொணரும் நோக்குடனும் அவர்களின் மொழியாளுமையை வளப்படுத்தும் வகையாகவும் ஆண்டுதோறும் மாவீரர் நினைவாக தமிழ்த்திறன் போட்டிகள் நடாத்தப்பட்டு வருகின்றன. அவ்வகையில், இவ்வாண்டு இப்போட்டிகள் 22.04.2017 ஆம் நாளன்று வைல எனும் நகரில் வெகு சிறப்பாக நடைபெற்றன. லெப். மாலதி, தியாகி அன்னைபூபதி அவர்களுக்கு விளக்கேற்றல், அகவணக்கம் ஆகிய நிகழ்வுகளுடன் போட்டிகள் தொடங்கின. இப்போட்டிகளில் கிட்டத்தட்ட 150 மாணவர்கள் மிக ஆர்வத்துடன் பங்குபற்றினர். நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் வருகைதந்து, இவர்களின் திறமைகளைக் கண்டுகளித்தனர்.

இத்தமிழ்த்திறன் போட்டிகளில் பேச்சு, பொதுவறிவு, கவிதைவாசித்தல், கட்டுரை எழுதுதல் போன்ற போட்டிகள் ஒரே நேரத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றன. இறுதியில், பங்குபற்றிய அனைத்து மாணவருக்கும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. அத்துடன், இப்போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவருக்கு வெற்றிக்கிண்ணங்களும் வழங்கப்பட்டன.

மாலதி தமிழ்க் கலைக்கூடம் டென்மர்க்

  
  
   Bookmark and Share Seithy.com


Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா