Untitled Document
April 19, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
யாழ்ப்பாணத்துக்கு கிடைத்த இரண்டு யாழ் இசைக்கருவிகள்! Top News
[Friday 2017-03-31 07:00]

யாழ்ப்பாணத்தின் குறியீட்டை பிரதிபலிக்கும் இரண்டு யாழ் இசைக்கருவிகள் யாழ்ப்பாண பொது நூலகத்திற்கும், யாழ். பல்கலைக்கழகத்திற்கும் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தின் குறியீடாகவும், அடையாளமாகவும் கருதப்படும் சின்னமான யாழ் இசைக்கருவி தற்போதுவரை யாழ்ப்பாணத்தின் எந்த பகுதியிலும் இல்லாத நிலையில், குறித்த இசைக்கருவியை புலம்பெயர் தமிழர் ஒருவர் வடிவமைத்து யாழ்ப்பாணத்திற்கு எடுத்து வந்துள்ளார்.

யாழ். மத்திய கல்லூரி பழைய மாணவரும் தற்போது நோர்வேயில் வசித்துவரும் புலம்பெயர் தமிழரான கந்தமூர்த்தி கலாரெஜி என்பவர் நீண்டகால தேடுதலின் பின்னர் இரண்டு யாழ் இசைக்கருவிகளை வடிவமைத்து யாழ்ப்பாணம் எடுத்துவ ந்துள்ளார். இந்த யாழ் இசைக்கருவியில் ஒன்றை யாழ் பொது நூலகத்திற்கும், மற்றொன்றை யாழ். பல்கலைக்கழக நுண்கலைப்பீடத்திற்கும் வழங்கியுள்ளார்.

யாழ். பொது நூலகத்தில் பிரதம நூலகர் சுகந்தி தலைமையில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் யாழ். மாநகர ஆணையாளர் பொ.வாகீசனிடம் இந்த யாழ் இசைக்கருவி கையளிக்கப்பட்டது. அழிவுநிலையில் இருக்கும் யாழில் அடையாள இசைக்கருவியை யாழ். பல்கலைக்கழக இசைத்துறையில் பாடமாக இணைக்க தாம் முயற்சித்து வருவதாகவும் கந்தமூர்த்தி கலாரெஜி குறிப்பிட்டுள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா