Untitled Document
March 28, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
புதுக்குடியிருப்பில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களைச் சந்தித்து சித்தார்த்தன் ஆதரவு Top News
[Thursday 2017-02-16 22:00]

தமது நிலங்களையும் வீடுகளையும் கையகப்படுத்தியுள்ள பாதுகாப்பு தரப்பினர் அதனை விடுவிக்க வேண்டுமெனக்கோரி புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் முன்பாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவந்த மக்கள் நேற்று முன்தினம் முதல் சுழற்சி முறையிலான உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மேற்படி சுழற்சி முறையிலான அடையாள உணவுத் தவிர்ப்பு போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றது.

புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்க்கு முன்னால் பொதுமக்களுக்கு சொந்தமான 19-1ஃ4 ஏக்கர் காணியை விடுவிக்குமாறு வலியுறுத்தி கடந்த 3ஆம் திகதி தொடக்கம் இந்த தொடர் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது. போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்கள் தமது சொந்த நிலங்களையும் வீடுகளையும் பாதுகாப்பு தரப்பினர் விடுவிக்கவேண்டும் என்றும் காணிகள் விடுவித்த பின்னரே போராட்டத்தை கைவிடுவோமென்றும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன், வட மாகாணசபை உறுப்பினர் கந்தையா சிவநேசன் உள்ளிட்ட பிரமுகர்கள் அவர்கள் போராட்டம் நடாத்திவரும் இடத்திற்கு இன்றுமுற்பகல் நேரில் சென்று அவர்களது போராட்டத்திற்கு தமது ஆதரவினைத் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கருத்துக் கூறிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள்,

இந்த மக்கள் சுழற்சிமுறையிலான உண்ணாவிரதப் போராட்டமாக தங்கள் போராட்டத்தினை தற்போது விரிவுபடுத்தியிருக்கின்றார்கள். இந்த மக்களின் போராட்டத்திற்கு எமது பூரண ஆதரவினைத் தெரிவிக்கின்றோம். மேற்படி 19-1ஃ4 ஏக்கர் காணியிலே அரசாங்க அதிபரினுடைய அறிவித்தலின்படி அதில் 7ஏக்கர் காணி அரசாங்கத்தினால் ஏற்கனவே சுவீகரிக்கப்பட்டிருக்கின்றது. அந்த மக்களின் காணியை அவர்களுக்குத் தெரியாமல் சுவீகரிப்பு செய்யமுடியாது. மக்களுக்கு தெரியாமல் காணி சுவீகரிப்பு செய்திருந்தால் அது மிகவும் பிழையான ஒரு நடவடிக்கை. அந்தக் காணிகளுக்கான உறுதிகள் அந்த மக்களிடம் இருக்கின்றன. அவர்கள் அதற்காக எந்த ஒரு இழப்பீடும் இதுவரையில் பெற்றது கிடையாது. மேற்படி ஏழு ஏக்கர் காணி சுவீகரிப்பினை அவர்கள் ஏற்றுக்கொண்டதும் கிடையாது. ஆனால் அந்தக் காணிகள் சுவீகரிக்கப்பட்டிருப்பதாக வர்த்தமானி அறிவித்தல் வந்திருப்பதாக அரசாங்க அதிபர் வெளியிட்ட கருத்து ஏற்றுக்கொள்ள முடியாதது.

மிகுதியாகவிருக்கும் 10 ஏக்கர் காணியானது தனிநபர் ஒருவரின் பெயரிலே உள்ளது. அந்தக் காணியில் அவரது உறவினர்களின் பிள்ளைகள்தான் குடியிருந்தார்கள். ஆகவே, அதற்கு ஆவணம் இல்லையென்று கூறுவதை ஏற்க முடியாது. அந்தக் காணி தனிநபர் ஒருவருடைய பெயரில் இருந்தாலும் அவரது சந்ததியினர் அங்கு இருப்பதை தவறென்று எவரும் கூறமுடியாது.

இந்தக் காணிகளுக்கு ஆவணங்கள் கைதவறிப் போனதே தவிர ஆவணம் இல்லையென்று கூறுவது தவறு. அவற்றுக்கான ஆவணங்கள் அவர்களின் கைகளில் இருந்தன. அவற்றில் சிலபேரிடம் காணிகளுக்கான உறுதி இருந்தது. சிலபேரின் காணிகளுக்கு நில அனுமதிப் பத்திரம் இருந்துள்ளன. யுத்த இடம்பெயர்வுகள் காரணமாக அவை தவறவிடப்பட்டிருக்கலாமேயொழிய அவர்கள் அங்கு வாழ்ந்ததற்கான ஆதாரணங்கள், அடையாளங்கள் அங்கு இருக்கின்றன. அவற்றுக்கு அரசாங்க அதிபர், உதவி அராங்க அதிபர் மற்றும் கிராம சேவகர்களுடைய ஆதாரபூர்வமான தகவல்களும் நிச்சயமாக இருக்கின்றன.

அடுத்தது வைத்தியசாலை இருந்த 2ஏக்கர் காணியாகும். அதாவது பொன்னம்பலம் வைத்தியசாலை இருந்த பகுதி. ஏற்கனவே அது ஒரு பதிவுசெய்யப்பட்ட வைத்தியசாலையாகும். அந்த 2 ஏக்கரும் ஒரு தனியாருக்குரிய காணி. அந்தக் காணியும் விடுவிக்கப்பட வேண்டும். அது மாத்திரமல்ல, ஏனைய முல்லைத்தீவுpல் சுவீகரிக்கப்பட்ட காணிகளும் விடுவிக்கப்பட வேண்டும், அதுபோல் வட்டுவாகலில் உள்ள காணிகள் விடுவிக்கப்பட வேண்டும். கொக்குளாய், கொக்குத்தொடுவாய்ப் பகுதிகளில் இருக்கக்கூடிய பெருந்தொகையான காணிகள்; இன்னமும் உரியமுறையில் கையளிக்கப்படவில்லை. அது மாத்திரமல்ல தனியார் காணிகளில் அத்துமீறிய குடியேற்றங்கள்கூட அரங்கேற்றப்பட்டுள்ளன. எனவே, இந்த காணிகளை விடுவிப்பது தொடர்பாக நிச்சயமாக நாம் ஜனாதிபதி, பிரதமர், ஜனாதிபதியின் செயலாளர் உள்ளிட்ட தரப்புக்களுடன் பேசி அவற்றை விடுவிப்பதற்கான அழுத்தங்களை தொடர்ந்து கொடுப்போம் என்று தெரிவித்தார்.

  
  
   Bookmark and Share Seithy.com



யேர்மனி தமிழ்ப் பெண்கள் அமைப்பினரால் டோட்முன்ட் நகரில் நடத்தப்பட்ட வாகைமயில் 2024! Top News
[Friday 2024-03-22 18:00]

யேர்மனியில் ஆண்டுதோறும் வாகைமயில் என்னும் நடனப்போட்டியைத் தமிழ்ப் பெண்கள் அமைப்பு நடத்தி வருவது யாவரும் அறிந்ததே. இம்முறை டோட்முன்ட் நகரில் 16.03.24 சனி, 17.03.24 ஞாயிறு ஆகிய இரண்டு நாள்களும் தெரிவுப்போட்டிகளின்றி நிறைவுப்போட்டியாகப் பதினொரு ஆண்டுகளை நிறைவு செய்தபடி வாகைமயில் வெகு சிறப்பாகத் தோகை விரித்தாடியது. யேர்மனியில் உள்ள நடன ஆசிரியர்களால் பயிற்றப்பட்ட அவர்களின் மாணவ மாணவிகள் ஒருவரை ஒருவர் மிஞ்சிய வகையில் களம் கண்டனர். இவர்கள் அற்புதமான பதங்களுடன் பல வண்ணங்கள் உடுத்தித் தேர்போல (இரதங்கள்) அழகாக அசைந்து, மிதமான அணிகளோடு அவையில் இதமான பரதத்தால் நவரசம் தந்தது மண்டபம் நிறைந்த மக்களின் வரவேற்பைப் பெற்றிருந்தது. பிரான்சு, சுவிற்சலாந்து ஆகிய நாடுகளிலிருந்து வருகை தந்திருந்த திறமையும் பட்டறிவும்(அனுபவம்) வாய்ந்த நடுவர்களால் போட்டிகள் நடுவம் செய்யப்பட்டு, மதிப்பளிப்புகளும் வாகைமயில் விருதுகளும் வழங்கப்பட்டன.



இளம் இலங்கை தொழில் முனைவோர் பேரவையின் ரஜத ஜெயந்தி மாபெரும் மாநாடு! Top News
[Wednesday 2024-03-13 06:00]

COYLE அல்லது இளம் இலங்கை தொழில் முனைவோர் பேரவையின் ரஜத ஜெயந்தி மாபெரும் மாநாடு நேற்று (10) ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த ஆண்டு மாநாடு 25 வது முறையாக நடைபெற்றது. COYLE அல்லது இளம் இலங்கை தொழில் முனைவோர் பேரவை மார்ச் 10, 1999 இல் ஆரம்பிக்கப்பட்டது. "இன்றிலிருந்து முழு மனதுடன் தயாராவோம்" என்பதே இந்த ஆண்டு ரஜத ஜெயந்தியின் கருப்பொருளாக அமைந்துள்ளது.



கல்விக்கு முதலிடம், தமிழர் ஐக்கியத்துக்கு சிறப்பிடம், இரண்டிலும் கனடிய தமிழர், உலகத்தமிழருக்கு வழிகாட்டி - தெஹியோவிற்ற தமிழ் வித்தியாலய விஞ்ஞானகூட அங்குராப்பணம் தொடர்பில் மனோ கணேசன்! Top News
[Tuesday 2024-03-05 06:00]

இன்று, தமிழர்களாகிய எங்கள் ஒரே ஆயுதம், கல்வி. அதேபோல் எங்கள் ஒரே சிந்தனை தமிழ் ஒற்றுமை. இந்த இரண்டு கொள்கைகளையும் முன்னெடுத்து, கனடா தமிழர் பேரவை, அமெரிக்கா முதல் ஐரோப்பா, ஆசியா ஊடாக ஆஸ்திரேலியா வரை உலகம் முழுக்க பரவி, விரவி வாழ்கின்ற தமிழருக்கு, முன்மாதிரியாக நின்று வழி காட்டி உள்ளது. இந்த இரு கொள்கைகளின் அடையாளமாகவே, இங்கே இன்று இந்த மலையக தமிழரினுள் வரும் பெருந்தோட்ட பிள்ளைகள் பயிலும், தெஹியோவிற்ற தமிழ் மகாவித்தியாலய விஞ்ஞானகூடம் கட்டப்பட மற்றும் உபகரணங்கள் வழங்க, கனடா மற்றும் அமெரிக்கா வாழ் தமிழர்கள் மத்தியில் நிதி சேகரித்து, கனடா தமிழர் பேரவை சாதித்து காட்டியுள்ளது என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கூறியுள்ளார்.



சிகரம் தொட்ட தமிழ்த்திறன் போட்டியின் முத்தகவை நிறைவு! Top News
[Tuesday 2024-03-05 06:00]

1993ஆம் ஆண்டு மாமனிதர் இரா. நாகலிங்கம் ஐயா அவர்களினால் வித்திடப்பட்ட தமிழ்த்திறன் போட்டி, தமிழ்க் கல்விக் கழகத்தின்; வரலாற்றுத் தடங்களில் தனக்கெனத் தனிச்சிறப்புடன் வெற்றி நடைபோட்டு வருகிறது. தமிழாலயங்களில் தமிழ் பயின்றுவரும் மாணவர்களில் மொழித்திறனாளர்கள், உரையாற்றளாளர்கள், கட்டுரைத்திறனாளிகள், வரைஞர்கள் போன்ற வளமிக்க ஆற்றலாளர்களைக் கண்டறிவதும் அவர்களைச் சிறந்தவர்களாக உருவாக்குவதும் தமிழ்த்திறன் போட்டியின் இலக்காகக் கொண்டு ஆண்டுதோறும் நடாத்தப்பட்டுவருகிறது.



திரு.இரா மனோகரன் அவர்களுக்கு “தமிழ்த்திறனாளன்” மதிப்பளிப்பு – தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனி! Top News
[Monday 2024-03-04 06:00]

02.03.2024 அன்று யேர்மனியின் தமிழ்க் கலவிக்கழகத்தினால் முன்சன்கிளட்பாக் நகரில் நடாத்தப்பட்ட தமிழ்த்திறன் போட்டியின் முப்பாதவது அகவை நிறைவு விழாவின் போது யேர்மனியின் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினால் சிறப்பு மதிப்பு நிகழ்வு ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது.



இன்றிலிருந்து ஒன்ராறியோவில் அமுலுக்கு வரும் 'ஒற்றைக்கட்டண' திட்டம்! Top News
[Tuesday 2024-02-27 06:00]

இன்று முதல் ஒன்ராறியோ பொதுப்போக்குவத்துச் சேவையில் 'ஒற்றைக்கட்டண' திட்டம் அமுலுக்கு வருகின்றது. இன்று தொடக்கம் ரொறன்ரோ பொதுப்போக்குவரத்துச் சேவை (TTC) மற்றும் ரொறன்ரோ பெரும்பாகத்திலுள்ள 'கோ' (GO) போக்குவரத்துச் சேவை உட்பட இத்திட்டத்தில் பங்குபற்றும் அனைத்து சேவைகளுக்குமிடையில் பயணிக்கும் பயணிகள் ஒருமுறை மட்டும் கட்டணம் செலுத்தினால் போதும். இது பற்றி ஒன்ராறியோ முதல்வர் டக் ஃபோர்ட் அவர்கள் “ஒன்ராறியோ அரசானது, அனைத்து போக்குவரத்துப் பயணிகளுக்கும் அவர்களின் சொந்தப் பணத்தை சேமித்து மீண்டும் அவர்களுக்குத் திருப்பிக் கொடுக்கின்றது" என கூறுகின்றார்.



வவுனியாவில் இடம்பெற்ற மேழி எழுபது பிரமாண்ட விழா! Top News
[Tuesday 2024-02-27 06:00]

எழுத்தாளர் கலாநிதி மேழிக் குமரனின் எழுபது அகவையையும் ஐம்பதாண்டு இலக்கிய பயணத்தையும் முன்னிட்டு இரு நூல்கள் வெளியீட்டு நிகழ்வு (25.02.2024) காலை 9 மணிக்கு வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. வவுனியா தமிழ்ச் சங்கத்தின் நிறுவுனர், தமிழருவி த.சிவகுமாரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் த.மங்களேஸ்வரன், சிறப்பு விருந்தினர்களாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், கல்வி அமைச்சின் ஓய்வு நிலை மேலதிக செயலாளர் உடுவை எஸ்.தில்லை நடராஜா, கௌரவ விருந்தினர்களாக வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியின் ஓய்வு நிலை பீடாதிபதி க.பேர்ணாட், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் ந.சிவசக்தி ஆனந்தன், இலக்கியவாதிகள்,சமூக ஆர்வலர்கள்,திணைக்கள உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



‘ஒற்றைக்கட்டண’ திட்டம்! Top News
[Thursday 2024-02-08 18:00]

கடந்த திங்கட்கிழமையன்று, ஒன்ராறியோ முதல்வர் டக் ஃபோர்டும் போக்குவரத்து இணை அமைச்சர் விஜய் தணிகாசலமும் இணைந்து ஒன்ராறியோ அரசாங்கம் பொதுப் போக்குவரத்துப் பயணிகளுக்கான செலவைக் குறைப்பதற்காக 'ஒற்றைக்கட்டண' திட்டம் ஒன்றினை அறிவித்தனர். இந்த 'ஒற்றைக்கட்டண' நடைமுறை மூலம் சராசரியாக 1,600 டொலர்களை பயணிகள் சேமிப்பர். பிப்ரவரி 26, 2024 முதல், ரொறன்ரோ பொதுப்போக்குவரத்துச் சேவை (TTC) மற்றும் ரொறன்ரோ பெரும்பாகத்திலுள்ள 'கோ' (GO) போக்குவரத்துச் சேவை உட்பட இத்திட்டத்தில் பங்குபற்றும் அனைத்து சேவைகளுக்குமிடையில் பயணிக்கும் பயணிகள் ஒருமுறை மட்டும் கட்டணம் செலுத்தினால் போதும்.



தமிழ் மரபுத் திங்கள் 2024! Top News
[Thursday 2024-02-01 21:00]

நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் தமிழ் மரபத்திங்கள் செயலவையும் இணைந்து 28/01/2024இல் தமிழ் மரபுத் திங்கள் நிகழ்வு வெகு சிறப்பாகவும், கோலாகலமாகவும் நடைபெற்றது. நிகழ்வின் ஆரம்பத்தில் கனடாவின் பூர்வகுடி மக்களுக்கான அங்கீகாரம் செலுத்தப்பட்டு கனேடிய மத்திய பாராளுமன்ற உறுப்பினர், மாகாண உறுப்பினர்கள் ,மாநகர, நகர சபை உறுப்பினர்கள் மற்றும் கல்விச்சபை உறுப்பினர்கள் ,கலைஞர்கள், ஏராளமான பொது மக்கள் முன்னிலையில் கனேடிய தேசியக் கொடி ஏற்றப்பட்டு அடுத்து தமிழீழத் தேசியக் கொடி ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டு மிகவும் சிறப்பாக நிகழ்வுகள் ஆரம்பமாகி தொடர்ந்து தமிழரின் மரபு இசையான பறை இசை முழங்கி சிறப்பித்தனர் ,தொடர்ந்து கனேடிய மக்கள் பிரதிநிதிகளின் உரை ,நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதமர் விசுவநாதன் ருத்திரகுமாரனின் உரை, தமிழ் மரபுச் செயலவை மேலாளரும் கல்விச்சபை மேலாளருமான நீதன் சண் அவர்களின் உரைகள் இடம்பெற்றன.



உறை பனியிலும் இறைபணியே மேல் என மனிதம் காத்திடத் திரண்ட மக்கள் கூட்டம்! Top News
[Thursday 2024-01-25 00:00]

கடந்த 19-01-24 வெள்ளி மாலை Scarborough Metropoliton அரங்கில் நிகழ்ந்தேறிய திரு.செந்தில் குமரன் அவர்களின் தாயக மக்களுக்கான "நிவாரணம்" எனும் உயிர்காப்பு இன்னிசை மாலை " MGR 107 " மனிதநேயம் படைத்த மக்கள் வெள்ளம் அலைகடலாக ஆர்ப்பரித்து எழுந்தோடித் தளம்பிய காட்சியாய் விரிந்த காட்சி கண்கொள்ளாக் காட்சியாய் அமைந்தது.



"வரங்கலெல்லாம் தவங்களாவதில்லை" கவிதை நூல் வெளியீட்டு விழா! Top News
[Sunday 2024-01-21 19:00]

க.வசந்தகுமாரி எழுதிய ' வரங்கலெல்லாம் தவங்களாவதில்லை.' என்ற கவிதை நூல் வெளியீட்டுவிழா 20-01-2024 அன்று கொழும்பு ஜே.ஆர். ஜெயவர்த்தன மண்டபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு சிரேஷ்ட ஊடகவியலாளர் சக்தி Tv நிர்வாகி கஜமுகன் தலைமை தாங்கியதோடு பிரதம அதிதியாக முன்னாள் அமைச்சர் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கனேஷன் கலந்துகொண்டதோடு நூலின் முதல் பிரதியை இலங்கை பொன்மனச்செம்மல் தாஜ்மஹான் பெற்றுகொண்டார்.



தென்னியங்குளம் பாடசாலைக்கு உபகரணங்கள் வழங்கி வைப்பு! Top News
[Sunday 2024-01-21 08:00]

அமரர் கனகாம்பிகை கனகசுந்தரம் அவர்களின் 02ஆண்டு நினைவு நாளில் “எர் நிலம்” தொண்டமைப்பின் ஊடாக… கற்றல் உபகரணங்கள் வழங்கல் நிகழ்வு இடம்பெற்றது. யாழ்பாணம் புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும்,பிரான்ஸ் நாட்டை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் கனகாம்பிகை கனகசுந்தரம் அவர்கள் இறைபாதமடைந்து 02ஆம் ஆண்டு நினைவு தினமான 19.01.2024 இன்று அன்னாரின் குடும்பத்தினரின் 200,000/= நிதி பங்களிப்பில் “ஏர் நிலம்”அமைப்பின் ஊடாக "கல்வியே எங்கள் மூலதனம்" எனும் தொனிப்பொருளுடன் கற்றல் உபகரணங்களும்,மதிய உணவு வழங்கும் நிகழ்வும் தாயகத்தின் முல்லைத்தீவு/ துணுக்காய் தென்னியன்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் சிறப்பாக இடம்பெற்றது….



BRITISH TAMILS FORUM CELEBRATED “THAI PONGAL” AND TAMIL HERITAGE IN THE BRITISH PARLIAMENT! Top News
[Saturday 2024-01-20 08:00]

The British Tamils Forum (BTF) celebrated Thai Pongal and Tamil Heritage month in the British Parliament on Monday,15 January 2024. Upon receiving overwhelming support from the British Tamil community including youth, charities, and business entrepreneurs, the demand for attending the celebration was exceptionally high, and the BTF had to have the celebration in two different halls, CPA Room and the Churchill Room in the UK Parliament to accommodate attendees for the event. The BTF received unparalleled support from cross-party Parliamentarians from Conservative, Labour, LibDem, SNP and DUP in the function. The BTF conveys its sincere gratitude to all the Parliamentarians for facilitating and participating in the hugely successful event.



தைப்பொங்கல் மற்றும் தமிழ் மரபுத் திங்கள் விழா - Queen's Park! Top News
[Saturday 2024-01-20 08:00]

கடந்த வெள்ளிக்கிழமை 12.01.2024 அன்று ஒன்ராறியோ மாநில சட்டசபையில் போக்குவரத்து இணை அமைச்சரும், ஸ்காபரோ ரூஜ் பார்க்கின் ஒன்ராறியோ பாராளுமன்ற உறுப்பினருமான விஜய் தணிகாசலம் அவர்களின் தலைமையில் தைப்பொங்கல் மற்றும் தமிழ் மரபுத் திங்கள் விழா இடம்பெற்றது. இவ்விழாவில் ஒன்ராறியோ பாராளுமன்ற அமைச்சர் மற்றும் உறுப்பினர்களான ரெய்மன்ட் சோ, அரிஸ் பபிக்கியன் மற்றும் டோன் கலகர் மேர்ஃபி ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.



ஒரு பாடசாலை நூறு கோவில்களுக்கு சமன் என்பதை நிரூபித்து காட்டியவர் அமரர் மாணிக்கவாசகம் - மனோ கணேசன் எம்பி! Top News
[Sunday 2024-01-07 20:00]

அரசாங்க பாடசாலைகளில் படிக்கும் பாமர பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு உதவிடுவதை போன்ற பெரும் புண்ணியம் ஏதுமில்லை. அதுவே இறைவனுக்கு ஆற்றும் பணி. அதுதான் “ஒரு பாடசாலை நூறு ஆலயங்களுக்கு சமன்” என்ற கொள்கையாகும். இந்த கொள்கையை, தனது சுமார் ஒரு ஏக்கர் விஸ்தீரண காணியை, வத்தளை வாழ் தமிழ் பிள்ளைகளின் பாடசாலை கனவுக்காக வழங்கி, தன் வாழ்வில் செய்து காட்டி நிரூபித்த மாமனிதர் அமரர் மாணிக்கவாசகம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கூறியுள்ளார்.


Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா