Untitled Document
April 25, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
மெல்பேர்ண் மேற்கு வாழ் தமிழ் மக்களின் பாரம்பரிய
[Sunday 2017-01-15 18:00]

தைத்திருநாள், தைப்பொங்கல் விழா நிகழ்வொன்று மெல்பேர்ண் மேற்கு வாழ் தமிழர்களால் கடந்த 14-01-2017 சனிக்கிழமையன்று விக்ரோரியா Ashcroft park வில்லியம்ஸ் லேண்டிங் என்னுமிடத்தில் காலை 10.00 மணியிலிருந்து பிற்பகல் 3.00 மணிவரை நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் மக்களால் நாடு மற்றும் சமய வேறுபாடுகளை கடந்து மிகவும் உணர்வுபூர்வமாகவும், உற்சாகத்துடனும் கொண்டாடப்பட்டுள்ளது.

காலை 10.00 மணிக்கு மண்பானை வைத்து கலாச்சார முறைப்படி ஆரம்பித்த பொங்கல் நிகழ்வு "விந்தம்" தமிழ்ப்பாடசாலை மாணவர்களது தைவணக்க நிகழ்வுகளுடன் சிறப்பாகஆரம்பித்தது, அடுத்து தமிழர் பண்பாட்டு விளையாட்டுக்களான சிலம்பாட்டம், உறியடித்தல், கயிறிழுத்தல் ஆகிய விளையாட்டுகள் நிகழ்வில் பங்குபற்றிய இளைஞர்கள்,யுவதிகள் மற்றும் முதியவர்களால் பாகுபாடின்றி மிகவும் உற்சாகத்துடன் விளையாடப்பட்டது அத்துடன் சிறுவர்களுக்கான குறுந்தூர ஓட்டம், பலூன் உடைத்தல் ஆகிய விளையாட்டுக்களும் சிறப்பாக நடைபெற்றன.

மிகவும் குறுகிய காலப்பகுதியில் மெல்பேரண் மேற்குவாழ் இளைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பாக நடந்த தைத்திருநாள், தைப்பொங்கல் விழா பலரது கவனத்தையும், பாராட்டுக்களையும் ஆதரவையும் பெற்றுக்கொண்டதுடன் மிகவும் முன்மாதிரியான தமிழ் கலாச்சார விழாவாக அமைந்தமையும் குறிப்பிடத்தக்கது.

  
  
   Bookmark and Share Seithy.com


Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா