Untitled Document
April 19, 2024 [GMT]
பிரேசில் போலீசார் வெளியிட்டனர் வேற்றுகிரகவாசி புகைப்படம்! Top News
[Tuesday 2017-10-03 18:00]

உலகின் முதல் நிஜ வேற்றுகிரகவாசி என பிரேசில் போலீசார் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். பிரேசில் போலீசார் வெளியிட்ட இந்த புகைப்படமானது வேற்றுகிரகவாசி குறித்து பல ஆண்டுகளாக தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டுவரும் அமைப்பினர் தங்களின் இணையதளத்தில் பதிவேற்றியுள்ளனர். பிரேசிலின் பெர்குமெட்ர் பகுதியில் வழக்கத்துக்கு மாறான நிகழ்வுகள் நடைபெற்றுவருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அந்த பகுதிக்கு விரைந்த போலீசார் நள்ளிரவில் குறித்த உருவத்தை தங்களது மொபைல் போனில் புகைப்படமெடுத்துள்ளனர்.


  

ஆனால் குறித்த புகைப்படம் புகழ்பெற்ற திரைப்படக் காட்சி போன்று இருப்பதாகவும், இது திருத்தப்பட்ட புகைப்படம் எனவும் சிலர் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். கடந்த மாதம் 13 ஆம் தேதி பெர்குமெட்ர் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் முதலில் குறித்த உருவத்தை கண்டுள்ளனர். உடனடியாக தங்களிடம் இருந்த போனில் பதிவு செய்துள்ளதாக போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

அந்த வேர்றுகிரக உருவத்தின் நீண்ட கைகளில் வெறும் 3 விரல்களே இருந்துள்ளது. வெள்ளை நிறத்தில் இருந்த அந்த உருவம் நல்ல உயரமாக இருந்தது எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இருப்பினும் அச்சம் காரணமாக அந்த உருவத்தை நெருங்காமல் போலீசார் அங்கிருந்து கடந்து சென்றுள்ளனர். மேலும் அந்த உருவம் அப்பகுதியில் சுற்றித்திரிவதாக இளைஞர்கள் சிலர் மீண்டும் போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

  
   Bookmark and Share Seithy.com


Ambikajewellers-01-08-2021-seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா