Untitled Document
April 25, 2024 [GMT]
உகந்த வரன் கிடைக்காத காரணத்தால் தன்னையே திருமணம் செய்துகொண்ட பெண்!
[Thursday 2017-09-28 17:00]

இத்தாலியில் 40 வயதான பெண் ஒருவர் தமக்கு உகந்த வரன் இதுவரை கிடைக்காத காரணத்தால் தன்னையே திருமணம் செய்து கொண்ட சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது.இத்தாலியின் லம்பார்டி நகரில் குறித்த சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது. Lissone பகுதியில் உடற்பயிற்சி பயிற்றுநராக இருக்கும் லாரா மெஸ்ஸி(40) கடந்த 20 ஆண்டுகளாக தமக்குரிய வரனை தேடி வந்துள்ளார்.இந்த நிலையில் 20 ஆண்டுகளாக எந்த வரனும் சிக்காததால் அவர் வித்தியாசமான இந்த முடிவுக்கு வந்துள்ளார்.


  

சம்பவத்தன்று புதுமண பெண் போன்று அலங்காரம் செய்து கொண்டு திருமண மோதிரம் அணிந்து நண்பர்கள் உறவினர்கள் முன்னிலையில் அவர் தமக்கு தாமே திருமணம் செய்துகொண்டுள்ளார்.எதிர்காலத்தில் தமக்குரிய நபரை தாம் சந்தித்தாலும் எனது மகிழ்ச்சியானது அவரை நம்பி இருக்காது என தெரிவித்துள்ள லாரா மெஸ்ஸி, இது என கனவுத் திருமணம், இந்த விழாவுக்காக நீண்ட 20 ஆண்டுகள் நான் காத்திருந்தேன் என சோகம் கலந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.திருமண விழா முடிவில் அனைவருக்கும் விருந்து உபச்சாரங்களும் இருந்தது.

மட்டுமின்றி இந்த விழா குறித்து சமூக வலைதளங்களில் லாரா பதிவேற்றிய நூற்றுக்கணக்கான புகைப்படங்களுக்கு பெருத்த வரவேற்பு எழுந்துள்ளது.விழா ஏற்பாடு செய்வதற்காக லாரா 8,700 பவுண்ட் செலவிட்டதாக கூறப்படுகிறது.மேலும் திருமணம் முடிந்த கையோடு அவர் எகிப்து நாட்டில் விடுமுறையை கொண்டாட சென்றுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா