Untitled Document
March 28, 2024 [GMT]
அவுஸ்திரேலியாவில் கலக்கும் யாழ் வீராங்கனை தர்ஜினி சிவலிங்கம்: Top News
[Wednesday 2017-06-07 19:00]

வலைப்பந்தாட்டத்தில் உலகின் மிகச்சிறந்த கோல் போடும் வீராங்கனை என்ற பெருமைக்குரிய இலங்கை வீராங்கனை தர்ஜினி சிவலிங்கம், அவுஸ்திரேலியாவின் விக்டோரியா லீக்கில் வெஸ்ட் சிட்டி பால்க்கோன்ஸ் வலைப்பந்தாடட கழகத்துக்காக விளையாடி வருகின்றார். தற்போது நடைபெற்று வரும் விக்ரோறியா லீக் தொடரில் 7 சுற்றுகள் முடிவடைந்த நிலையில், கடைசியாக இடம்பெற்ற மூன்று போட்டிகளிலும் தொடர்ச்சியாக ஏ.சி.யு சோவேரெயன்ஸ் (68-53), மொனாஷ் பல்கலைக்கழகம் ஸ்டார்ம் (55-40) மற்றும் பெனின்சுலா வெவ்ஸ் (62-45) ஆகிய மூன்று கழகங்களுக்கெதிரான போட்டியிலும் தர்ஜினியின் கழகம் வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்கது.


  

ஆறு போட்டிகளில் விளையாடியுள்ள தர்ஜீனி மொத்தமாக வெஸ்ட் சிற்றி பால்க்கோன்ஸ் அணிக்காக 227 கோல்ஸ் (90%) போட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியா வலைப்பந்தாடட சம்மேளனத்தினால் பயிற்றுநருக்கான அங்கீகாரமும் தர்ஜினிக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த அங்கீகாரத்துக்கு இவருக்கு பக்கபலமாக இருந்தவர்கள் சக வீராங்கனை ட்ரசி குக், மற்றும் தர்ஜினியுடைய தனிப்பட்ட பயிற்றுவிப்பாளர் நிக்கோலி ஆகியோர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான அனுசரணையை தர்ஜினி விளையாடும் வெஸ்ட் சிட்டி பால்க்கோன்ஸ் வலைப்பந்தாடட கழகமே வழங்கி இருந்தது. தர்ஜினி அவருடைய திறமையின் வெளிப்பாடால் அவுஸ்திரேலியாவில் ஜீனி (Genie) என அன்போடு அழைக்கப்படுவருகிறார்.

  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா