Untitled Document
April 19, 2024 [GMT]
காதலருடன் பாலியல் தொடர்பு வைத்துக்கொண்ட பெண்ணுக்கு பொதுமக்கள் மத்தியில் பிரம்படி!
[Saturday 2017-02-11 08:00]

இந்தோனேசியாவில் பெண் ஒருவர் தமது காதலருடன் பாலியல் தொடர்பு வைத்துக்கொண்டதாக கூறி அதிகாரிகளால் பொதுமக்கள் மத்தியில் பிரம்படி வழங்கப்பட்ட காணொளி காட்சிகள் தற்போது வெளியாகி வைரலாகியுள்ளது.இந்தோனேசியாவின் Aceh மாகாணத்தில் குறித்த சம்பவம் நடந்தேறியுள்ளது. 20 வயதான Nur Elita எனும் இளம்பெண் தமது காதலருடன் பாலியல் தொடர்பு வைத்துக்கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து அவருக்கு பொதுமக்கள் மத்தியில் பிரம்படி வழங்கப்பட்டுள்ளது.ஷரியா சட்டங்களை கடுமையாக நடைமுறைப்படுத்தும் மாகாணங்களில் ஒன்று இந்தோனேசியாவின் Aceh மாகாணம். இங்குள்ள மக்கள் மது மற்றும் போதை மருந்து பயன்படுத்துவதாக பிடிக்கப்பட்டால், பொதுமக்கள் மத்தில் பிரம்படி தண்டனை வழங்கப்பட்டு வருகின்றன.


  

குறித்த காணொளியானது கடந்த 2015 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது இந்தியாவில் உள்ள பிரபல ஊடகவியலாளர் ஒருவர் தமது சமூக ஊடக பக்கத்தில் பகிர்ந்துள்ளதுடன் கடுமையான கண்டனங்களையும் பதிவு செய்துள்ளார்.Aceh மாகாணத்தில் அமைந்துள்ள Baiturrahman மசூதியில் குறித்த தண்டனையை அதிகாரிகள் நிறைவேற்றியுள்ளனர். இதில் காதலர்கள் இருவருக்கும் பிரம்படி தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.காணொளியை பகிர்ந்த ஊடகவியலாளர், இது சவுதி அரேபியா அல்லது ஈரான் நாட்டில் அல்ல, மாறாக கடுமையான ஷரியா சட்டங்களை கடைபிடித்துவரும் இந்தோனேசிய மாகாணத்தில் அரங்கேறியுள்ளது. பொதுமக்களும் கண்டு களிக்கின்றனர் என அவர் கோபமாக குறிப்பிட்டுள்ளார்.

  
   Bookmark and Share Seithy.com


Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா