Untitled Document
April 20, 2024 [GMT]
பிரித்தானியாவில் 20 ஆண்டுகளாக இறந்த பெற்றோருடன் வாழ்ந்து வந்த பாசக்கார மகன்!
[Saturday 2017-02-04 18:00]

பிரித்தானியாவில் மகன் ஒருவன் தனது பெற்றோர்கள் உடலை சென்ட் அடித்து அழகு செய்து கடந்த 20 வருடங்களாக வீட்டிலேயே வைத்து பாதுகாத்து வந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து நெகிழ வைத்துள்ளது.ஸ்காட்லாந்து Edinburgh பகுதியை சேர்ந்த Melvynலே இவ்வாறு தனது பெற்றோர்கள் உடலை பாதுகாத்து வந்துள்ளார்.கடந்த 2002ம் ஆண்டு பொலிசார் வேறொரு வழக்கு தொடர்பாக Melvyn வீட்டில் சோதனை செய்துள்ளனர். அப்போது வீட்டில் Melvyn பெற்றோர்களான Hilda Marcel, Eugenois உடலை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.பின்னர் நகர சவக்கிடங்கிற்கு கொண்டு சென்று பாதுகாத்து வந்துள்ளனர். இதனையடுத்து, 2012ம் ஆண்டு வரை உடலை அடக்கம் செய்வது குறித்து எடின்பரோ நகர ஆணையம் Melvynயுடன் பேச்சு வார்த்தை நடத்தி வந்துள்ளது.


  

அவர் அனுமதி தர மறுக்க, உடலை சட்டப்படி அடக்கம் செய்ய அனுமதி கோரி எடின்பரோ நகர ஆணையம் சார்பாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.குறித்த வழக்கை விசாரித்த நீதிபதி தீர்ப்பை வெளியிட்டுள்ளார், அவர் கூறியதாவது, உடலை அடக்கம் செய்வது நகர ஆணையத்தின் சட்டப்பூர்வ கடமை என உத்தரவிட்டுள்ளார்.மேலும், Melvyn மற்றும் அவரது குடும்பத்தின் விருப்பத்துடன் உடல்களை அடக்கம் செய்யுவும் அனுமதி அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.இதனையடுத்து, நீதிமன்றத்தின் உத்தரவு படி உடலை அடக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக எடின்பரோ நகர ஆணையம் தெரிவித்துள்ளது.

  
   Bookmark and Share Seithy.com


டைட்டானிக் கப்பல் மூழ்க காரணமாக இருந்த பனிப்பாறை: ஒரு அபூர்வ புகைப்படம்! Top News
[Saturday 2024-04-13 18:00]

மூழ்கடிக்க முடியாத கப்பல் என பெயர் பெற்ற டைட்டானிக் கப்பல் இரண்டு துண்டாக உடைந்து கடலில் மூழ்கிய சம்பவம், டைட்டானிக் திரைப்படம் வந்த பிறகு அனைவருக்கும் தெரிந்த ஒரு விடயம் என்றே கூறலாம். அந்த துயர சம்பவத்தில் 1,522 பேர் பலியானார்கள். தற்போது, அந்த கப்பல் மூழ்க காரணமாக இருந்த பனிப்பாறையின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.


சூரிய கிரகணத்தின்போது கனேடியர்கள் நிகழ்த்திய கின்னஸ் சாதனை!
[Tuesday 2024-04-09 18:00]

உலக நாடுகள் பல, முழு சூரிய கிரகணம் என்னும் அபூர்வ நிகழ்வைக் காண ஆங்காங்கே கூடியிருந்த அதே நேரத்தில், கனேடியர்கள் சிலர், கின்னஸ் சாதனை ஒன்றை முறியடிக்கத் திட்டமிட்டார்கள். ஆம், 2020ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் நிகழ்ந்த சூரிய கிரகணத்தின்போது, சீனாவின் Guangdong மாகாணத்தில், 287 பேர், சூரியனைப்போல உடையணிந்து ஒன்று திரண்டு கின்னஸ் சாதனை ஒன்றைப் படைத்தார்கள்.


பெரு குகையில் வேற்று கிரகத்தின் மம்மிகள்?
[Sunday 2024-04-07 16:00]

பெரு நாட்டின் நாஸ்கா பகுதியில் உள்ள குகை ஒன்றில் நூற்றுக்கணக்கான பழங்கால ஸ்பானிஷ் காலத்திற்கு முந்தைய கலைப்பொருட்கள் மற்றும் விசித்திரமான தோற்றமுடைய மம்மிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள பெரு நாட்டின் நாஸ்கா(Nazca) பகுதியில் குகை ஒன்றில், நூற்றுக்கணக்கான பழங்கால ஸ்பானிஷ் காலத்திற்கு முந்தைய கலைப்பொருட்கள் மற்றும் விசித்திரமான தோற்றமுடைய மம்மிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.


சுவிட்சர்லாந்தில் மஞ்சளாக மாறிய வானம்!
[Monday 2024-04-01 18:00]

சுவிட்சர்லாந்தில் வாழும் மக்கள், சனிக்கிழமை, வானம் மஞ்சள் நிறமாக மாறியதைக் கண்டார்கள். இப்படி வானம் மஞ்சள் நிறமாக மாறுவதற்குக் காரணம், ஆப்பிரிக்காவின் சஹாரா பாலைவனத்திலிருந்து அடித்துவரப்படும் தூசிதான் காரணம்.


பூமியில் இருக்கும் பாம்பு இனம் அழிந்தால் என்ன நடக்கும் தெரியுமா?
[Saturday 2024-03-30 18:00]

பாம்புகள் என்றால் நாம் எல்லோருக்கும் தெரிந்தது நிலத்தில் ஊர்ந்து செல்பவை மாத்திரம் தான். ஆனால் 11 கோடி ஆண்டுகளுக்கு முன் நான்கு கால்கள் கொண்ட பாம்புகள் உலகில் வாழ்ந்துள்ளன. இந்த இனம் டைனோசர்கள் வாழ்ந்த காலத்தில் இருந்து வாழ்கின்றன. இவற்றிற்கு கால்கள் இருப்பதற்கான காரணம் இரைகளை பிடிப்பதற்காகும்.


ஆண்டுக்கு ரூ.1.5 கோடி சம்பளம்: எங்கு தெரியுமா?
[Sunday 2024-03-10 17:00]

உலகில் பல அழகான தீவுகள் உள்ளன. அங்கு மக்கள் சுற்றுலா செல்கின்றனர். அதற்காக அவர்கள் பல லட்சம் ரூபாய் பணம் செலவிடுகின்றனர். ஆனால் ஒரு அழகான தீவில் உணவு, தங்குமிடம் அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. அதுமட்டுமன்றி அங்கு வசிப்பவர்களுக்கு ரூ.1.5 கோடி வழங்கப்படுகிறது. ஆனால் அதற்கு சில நிபந்தனைகள் உள்ளன. அவற்றிற்குள் நீங்கள் பொருந்தினால் மட்டுமே உங்களுக்கு ரூ.1.5 கோடி கிடைக்கும்.


கனடாவில் 10 டொலர்களுக்கு விற்பனை செய்யப்படும் காணித்துண்டு?
[Wednesday 2024-03-06 19:00]

கனடாவில் ஒரு துண்டு காணி பத்து டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளதாகவும் இவற்றை கொள்வனவு செய்ய மக்கள் கூடுதல் நாட்டம் காட்டுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஒன்றாரியோ மாகாணத்தின் கோச்ரென்ஸ் நகரில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. கோச்ரென்ஸ் நகரின் மேயர் பீற்றர் பொலிடிஸ் இது குறித்து அறிவித்துள்ளார்.


பிரித்தானிய கடலில் கண்டறியப்பட்ட புதிய கடல் வாழ் உயிரினம்!
[Friday 2024-03-01 18:00]

பிரித்தானியாவின் தென்மேற்கு கடற்கரை பகுதியில் "ப்ளூரோப்ராங்கியா பிரிட்டானிகா" (Pleurobranchaea britannica) என்ற தனித்துவமான உயிரினத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பிரித்தானியாவின் தென்மேற்கு கடற்கரை பகுதியில் இதுவரை அறியப்படாத, தனித்துவமான ஓர் கடல் நத்தை (sea slug) இனத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.


"பேய்களின் சமையலறை" - கொடைக்கானலில் உள்ள குணா குகை பற்றிய உண்மை தகவல்!
[Wednesday 2024-02-28 18:00]

கொடைக்கானலில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் குணா குகை பற்றி அனைவரும் அறிந்திருக்க வாய்ப்பு உண்டு. ஆனால் அது பேய்களின் சமையலறை என்பது குறித்து தெரியுமா?கொடைக்கானலில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் குணா குகையை முந்தைய காலத்தில் ‘டெவில்ஸ் கிச்சன்’ என்று தான் அழைத்துள்ளனர். அதாவது ‘பேய்களின் சமையல் அறை’ என அழைக்கப்பட்டது.


உலக சாதனை படைத்த 4 மாதக் குழந்தை!
[Sunday 2024-02-18 18:00]

ஆந்திரப் பிரதேசம் மாநிலம் நாடிகாமா பகுதியைச் சேர்ந்தவர் ஹேமா. இவருக்கு திருமணமாகி நான்கு மாதங்களுக்கு முன்பு கைவல்யா என்ற பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தை மிகச் சிறிய வயதிலேயே காய்கறிகள், பழங்கள், பறவைகள், புகைப்படங்கள் என வெவ்வேறு 120 பொருட்களை அடையாளம் காணும் திறமையைக் கொண்டுள்ளார்.


பேய்கள் மட்டுமே வாழும் அதிசய கிராமம்!
[Tuesday 2024-02-13 16:00]

ராஜஸ்தானில் அமைந்துள்ள குல்தாரா என்ற கிராமத்தில் மனிதர்களுக்குப் பதிலாக பேய்கள் உலா வருகின்றது. மற்றைய கிராமங்களை போல் செல்வச் செழிப்பாக இருந்த இந்த கிராமத்தில் தற்போது பேய்களும் ஆவிகளும் மட்டுமே வாழ்ந்து வருகின்றன. இந்த கிராமத்தில் பாலிவால் பிராமணர்கள் வசித்து வந்துள்ளார்கள். இங்கு வசித்த மனிதர்கள் எங்கே சென்றார்கள்? ஏன் இந்தக் கிராமம் பேயின் ஆட்சியாக மாறியது என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.


அபுதாபியில் திறக்கப்படும் முதல் இந்து கோயில்!
[Friday 2024-02-09 18:00]

அபுதாபியில் முதல் இந்து கோயிலை வரும் 14 -ம் திகதி இந்திய பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். அபுதாபியில் மத நல்லிணக்கத்தின் அடையாளமாக சுமார் 900 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள பிஏபிஎஸ் அமைப்பின் பிரமாண்ட இந்து கோயில் வரும் 14 -ம் திகதி திறக்கப்படவுள்ளது.


நாய்க்கு வளைகாப்பு நடத்தி ஊருக்கே பிரியாணி போட்ட குடும்பம்!
[Tuesday 2024-02-06 18:00]

நாய்க்குட்டி கர்ப்பமானதையடுத்து அதற்கு வளைகாப்பு நடத்தி ஊருக்கே பிரியாணி விருந்து வைத்துள்ளனர். பொதுவாகவே வீடுகளில் செல்லப்பிராணிகளை வளர்ப்பது உண்டு. அதிலும் முக்கியமாக நாய்க்குட்டியை மிகவும் விருப்பமாக வளர்ப்பார்கள். அதுவும் சிலரது பாசம் செல்லப்பிராணிகளிடம் அதிகமாக காண்பிக்கப்படும்.


எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்ட மர்ம சுரங்கப்பாதை!
[Sunday 2024-01-28 16:00]

சில ஆண்டுகளுக்கு முன்பு கிளியோபாட்ராவின் கல்லறையை தேடும் முயற்சியில் ஆராச்சியாளர்கள் இறங்கிய போதே அவர்கள் அந்த சுரங்கப்பாதை கண்டுபிடித்தனர். பண்டைய எகிப்து ராணி கிளியோபாட்ராவின் கல்லறையை தேடும்போது நிபுணர்கள் ஒரு சுரங்கப்பாதையைக் கண்டுபிடித்தனர். அதை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள் அது ஒரு மாபெரும் வடிவியல் அதிசயம் என்று தெரிவித்துள்ளனர்.


இறந்த குழந்தையின் சாம்பலை கற்களாக மாற்றி பாதுகாக்கும் தம்பதி!
[Saturday 2024-01-20 16:00]

அரிய வகை நோயால் உயிரிழந்த 15 மாத மகளின் சாம்பலை கற்களாக மாற்றி அமெரிக்க தம்பதி பாதுகாத்து வருகின்றனர். கெய்லி மற்றும் ஜேக் மாஸ்ஸியின் என்ற அமெரிக்க தம்பதியின் மகள் பாப்பிக்கு 9வது மாதத்தில் அரிய வகை TBCD என்ற மரபணு கோளாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா