Untitled Document
April 23, 2024 [GMT]
திருடன் என நினைத்து மனைவியை சுட்டுக்கொன்ற கணவன்: - அமெரிக்காவில் சம்பவம்
[Monday 2017-01-23 18:00]

அமெரிக்காவில் திருடன் என நினைத்து மனைவியை கணவன் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் உள்ள கோல்ட்ஸ்போரோ நகரை சேர்ந்தவர் பில்லி வில்லியம்ஸ் (49). இவரது மனைவி ஜினா வில்லியம்ஸ் (48) அங்குள்ள நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.இந்நிலையில் இரவு வேலை முடிந்து திரும்பிய அவர், தனது வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்றார்.


  

அப்போது தூங்கிக் கொண்டிருந்த பில்லி வில்லியம்ஸ் உடனே கண்விழித்தார்.திருடன் தான் வீட்டிற்குள் நுழைந்துவிட்டதாக எண்ணிய அவர், தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியால் ஜினா வில்லியமை நோக்கி சுட்டார். அதில் அவரது கழுத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது.உடனே அலறிய ஜினா வில்லியம்ஸ் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து பரிதாபமாக உயிரிழந்தார்.இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் பில்லி வில்லியம்ஸ் துப்பாக்கியை பறிமுதல் செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  
   Bookmark and Share Seithy.com


Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா