Untitled Document
April 19, 2024 [GMT]
முதல்வர் உடலுக்கு சசிகலாவுடன் இணைந்து இறுதிச்சடங்கு செய்த இளைஞர் யார்?
[Tuesday 2016-12-06 19:00]

உடல்நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், மாரடைப்பு காரணமாக நேற்றிரவு மரணமடைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல் இன்று மாலை மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் சமாதி அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. முதல்வரின் உடல் அடக்கம் செய்யப்படுவதற்கு முன்னர், அவரின் மத வழக்கப்படியான சம்பிரதாய சடங்குகள் மன்னார்குடியிலிருந்து வந்த ஒரு ஐயர் மூலம் அவரின் உடலுக்கு செய்யப்பட்டன. ஜெயலலிதாவின் உடலுக்கு இறுதிச் சடங்குகளை சசிகலாவுடன் இணைந்து ஒரு இளைஞர் செய்தார், சசிகலாவின் சகோதரர் ஜெயராமன் - இளவரசி தம்பதியரின் மகனான விவேக் தான் முதல்வருக்கு இறுதிச்சடங்குகள் செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல்வருக்கு இறுதிச்சடங்கு செய்த அந்த இளைஞர் யார் என்ற கேள்வி பலருக்கும் எழுந்தது.


  

இந்நிலையில், முதல்வரின் சகோதரரான மறைந்த ஜெயக்குமாரின் மகன் தான் அந்த இளைஞர் என்பது தெரியவந்துள்ளது. அவரின் பெயர் தீபக். ஊடக வெளிச்சத்தில் படாமல் வாழ்ந்து வந்த தீபக் மற்றும் அவரின் சகோதரி தீபா ஆகியோர் முதல்வரின் ஒரே ரத்த சொந்தமாவர், எனினும் முதல்வர் அனுமதிக்கப்பட்டிருந்த அப்போலோ மருத்துவமனையில் அவரை சந்திக்க இவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது என கூறப்படுகிறது.

தீபக்கின் தந்தை ஏற்கெனவே இறந்த நிலையில் அவரது தாயார் விஜலட்சுமியும் 2013ஆம் ஆண்டு காலமானார். இவர் சென்னையில் வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. சில ஆண்டுகளாக இவர்கள் இருவரும் ஜெயலலிதாவை சந்திக்க இயலாத நிலை இருந்ததாக கூறப்படும் வேளையில், இன்று தனது அத்தையான முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு இறுதிச்சடங்குகளை தீபக் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா