Untitled Document
April 25, 2024 [GMT]
ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம்..!
[Tuesday 2016-12-06 19:00]

தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா மரணமடைந்த விடயம் தமிழ்நாட்டை மட்டும் அல்ல அனைத்து தமிழர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது என்றால் அது மிகையாகாது. என்றாலும் அவரது மரணம் தொடர்பில் பல்வேறு வகையான மர்மங்கள் மறைக்கப்படுவதாக கூறப்படுகின்றது. அண்மைக்காலம் முதலாக ஜெயலலிதா இறந்து விட்டார், இறக்க வில்லை என்ற முன்னுக்கு பின் முரண்பட்ட செய்திகள் வெளிவந்த வண்ணமே இருந்தது. இந்த நிலையில் நேற்று மாலை திடீரென்று அவர் இறந்து விட்டதாக செய்தி பரவ ஆரம்பித்தது ஆனாலும் சட்டென்று அவர் இறக்கவில்லை என மறுப்புச் செய்தியையும் அப்பலோ வெளியிட்டது. ஊடகங்களும் கூட இதனை வெளிப்படுத்தியது.


  

இவ்வாறான சர்ச்சைகளைத் தொடர்ந்து ஜெயலலிதா இறந்து விட்டதாக உத்தியோகப்பூர்வமாக நேற்று இரவு 11.30 இற்கே அப்பலோ அறிவித்தது. ஆனாலும் அவருடைய மரண அறிக்கையில் 11.30 இற்கே அவர் இறந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறாக இரண்டும் ஒரே தடவை நடந்தது எவ்வாறு? ஜெயலலிதா மரணமடைந்ததன் பின்னர் அறிக்கை தயாரிக்கப்பட்டதா? அல்லது ஏற்கனவே அறிக்கை தயாரித்து விட்டு பின்னர் அறிவிக்கப்பட்டதா? இது மிகப்பெரிய சந்தேகமே.

அதேபோல் ஜெயலலிதாவிற்கு பல்வேறு வகையிலும் பொதுமக்களும், சர்வதேச அளவிலும் கூட அஞ்சலிகள் செலுத்த ஆயத்தமாகி இருக்கும் சந்தர்ப்பத்தில் மிக விரைவாக அவருடைய உடல் நல்லடக்கம் செய்யப்படுகின்றது. எந்த வொரு அரசியல் தலைவருக்கும் இவ்வாறு அதி வேகமான முறையில் அடக்க சடங்குகள் செய்யப்படுவதும் ஒருவகையில் மிகப்பெரிய சந்தேகமே.

மேலும் அவர் இறந்து விட்டதாக பல செய்திகள் ஏற்கனவே வெளிவந்த போது மறுப்பு செய்திகள் மட்டுமே வெளி வந்ததே தவிர அவரை பார்க்கவோ நம்பும் படியான ஆதாரங்களோ வெளிப்படுத்தப்பட வில்லை என்பதும் சுட்டிக்காட்டப்படத்தக்கது. ஆக 75 நாட்களாக இருக்காரா இல்லையா என்பது வெளிப்படுத்தப்படாமலே வந்தது. உண்மையில் 75 நாட்கள் இப்படி மர்மம் காக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது யாருக்கும் தெரிந்த விடயமே.

அரசு இது தொடர்பில் இலகுவாக வெளிப்படுத்தியிருக்கலாம், அதனை விடுத்து மர்மமாகவே அவரை வைத்திருந்ததோடு எவ்வாறான நோய் என்பதனையும் கூட மறைமுகமாகவே வெளியிட்டு வந்தது. இவற்றைப் பார்க்கும் போது சந்தேகங்கள் மெம்மேலும் வலுப்பெற்றே வருகின்றது.

எவ்வாறாயினும் ஜெயலலிதாவின் மரண மர்மங்கள் என்ன? இதன் பின்னணியில் எவ்வாறான அரசியல் உள்ளது போன்ற உண்மைகளும் வெளிப்படுத்தப்படுமா? அல்லது அவரது உடலோடு அடக்கம் செய்யப்படுமா என்பது இப்போதைக்கு மிகப்பெரிய சந்தேகமே பொறுத்திருந்து பார்ப்போம்.

  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா