Untitled Document
September 25, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
புலம்பெயர் தேசத்து தமிழர் கலை கலாச்சார நிகழ்வுகள் பற்றிய இலவச அறிவித்தல் பகுதி
Oct-14-2017 இசையமுதம் - தித்திக்கும் திரையிசை மாலை.
Toronto
[Friday, 2017-09-08 05:42:53]

"தித்திக்கும் திரையிசை மாலையாகப்" பரிமளிக்கப் போகும் "சரவணப் பொய்கை" வழங்கும் "இசையமுதம்"

பூ நகரி - அரிசி என்றாலே......
நாவில் சுவையூறும், வாய் மணக்கும்..... அத்தகைய பூ நகரி யின் புகழ் மணக்கும் பாடல்களை உருவாக்கி பூநகரியின் புகழ்மாலை எனும் தலைப்பில், இறுவட்டு வடிவில் வெளியிட்டு சாதனை படைத்தவர்கள் கனேடிய மண்ணில் வாழ்ந்துகொண்டிருக்கும், பூநகரி மண்ணின் மைந்தர்களான திருஞான பவன்- சதானந்த பவன் சகோதரர்கள்.

தம் முதல் படைப்புக்குப் புலம்பெயர்ந்த மண்ணில் கிடைத்த பெரும் வரவேற்பினைத் தொடர்ந்து தமது இரண்டாவது படைப்பினை "இசை அமுதம்" எனும் தலைப்பில் இறுவட்டு வடிவில் எதிர்வரும் அக்டோபர் 14 ம் திகதி பெருமையுடன் வெளியிடக் காத்திருக்கிறார்கள்.

சரவணப் பொய்கை வழங்கும் "இசையமுதம்" எனும் இவ்விறுவட்டில், திருஞான பவன்- சதானந்த பவன் சகோதரர்கள் இயற்றிய பாடல்களை பத்மபூஷன் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களும் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தின் புகழ்மிகு இசையமைப்பாளர் அக்னி கணேஷின் இசையில் உருவான பாடல்களை எஸ்.பி.பியோடு நமது மண்ணின் பெருமைக்குரிய பாடகி சூப்பர் சிங்கர் புகழ் ஜெசிக்கா, ஈழத்து மண்ணின் இளம் குயில் மதுஜா, ஏ.ஆர்,ரகுமான் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட பெருமைக்குரிய முகேஷ், பன்மொழிப் பாடகி அனுராதா ஸ்ரீராம், மண்ணின் உணர்வு பொங்கும் பாடல்களால் நம் நெஞ்சில் நிறைந்த எஸ்.ஜி.சாந்தன், மக்களிசைப் பாடகி கும்கி திரைப்பட, சொய்.. சொய்.. புகழ் - மகிழினி மணிமாறன், ஐயப்பதாசன், ஆகியோருடன் பாடலாசிரியர் திருஞானபவனும் ஒரு பாடலைப் பாடியுள்ளார்.

இந்த இறுவட்டின் வெளியீடு, வெறும் வெளியீட்டு விழாவாகவன்றி தித்திக்கும் திரையிசை மாலையாகப் பரிமளிக்கப் போகும் ஒரு கோலாகல விழாவாக அமையவிருப்பது, இசை ரசிகர்களுக்கு மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும். அதுவும் எந்தவித வர்த்தக நோக்கும் இன்றி முழுக்க முழுக்க இலவசமாக நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.

நமது மண்ணின் பெருமைக்குரிய இசையமைப்பாளர் Fayas Zawahirன் இசையில், புகழ்பெற்ற திரையிசைப் பின்னணிப்பாடகர் முகேஷ், மற்றும் நமது மண்ணின் ஜெசிக்கா மற்றும் பலர் கலந்துகொண்டு, வழக்கமாக மேடையில் பாடக்கேட்டு அலுத்துப்போன பாடல்களைப் பாடாமல் உங்கள் பசுமையான நினைவுகளோடு ஒன்றிக் கலந்த மனது மறக்காத பாடல்களை பாடவிருக்கிறார்கள்.

சிறப்புக் கலைஞராக, இசைவாழ்வில் 60 ஆண்டுகள் கலைப் பணி புரிந்த பெருமைக்குரிய நமது மண்ணின் மூத்த கலைஞர் "அமுதன் அண்ணாமலை" அவரது புகழ்பெற்ற மெல்லிசை- மற்றும்- பொப்பிசைப் பாடல்களை பாடி நம்மை மகிழவிக்கக் காத்திருக்கிறார்.

எதிர்வரும் அக்டோபர் 14 சனிக்கிழமை மாலை, 1120-Tapscott Road, Unit-3, Scarborough.On.M1x1e8 ல் உள்ள "தமிழிசைக் கலாமன்றத்தில்" நிகழவிருக்கும் இவ்விசை விழாவினை நெறிப்படுத்தித் தொகுத்து வழங்க வருகிறார் உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் அன்புக்குரிய ஓலி-ஒளிபரப்பாளர் திரு. B.H.அப்துல் ஹமீத்.

  
  
   Bookmark and Share Seithy.com

Entering ::4
Entering ::8
Entering ::11

Nov-05-2017 TamilMirror Awards Gala Night
Toronto
[Friday, 2017-09-22 06:09:16]
Oct-08-2017 கலையரசி 2017
Toronto
[Thursday, 2017-09-21 07:00:24]
Oct-09-2017 இளம் தலைமுறையினரது மாபெரும் இலவச இசைநிகழ்வு
சஹானா இசைக் கல்லூரி
[Wednesday, 2017-09-20 04:54:09]
Oct-15-2017 Easy Entertaining Night 2017
Toronto
[Tuesday, 2017-09-19 06:11:53]

Oct-08-2017 முகவரி CTR வானொலி
Toronto
[Wednesday, 2017-09-13 05:22:05]
Sep-24-2017- கேசவம்
Toronto
[Saturday, 2017-09-09 06:01:38]
Oct-07-2017 கலைக் கோலங்கள்
Toronto
[Saturday, 2017-09-09 05:46:21]
Oct-01-2017- ஈழநாடு - இன்னிசை விருந்து
Toronto
[Friday, 2017-09-08 04:33:44]

Oct-14-2017 இசையமுதம் - தித்திக்கும் திரையிசை மாலை.
Toronto
[Friday, 2017-09-08 05:42:53]
Sep-23-2017 சந்தியாராகம் 2017 Toronto
[Friday, 2017-08-18 04:07:48]
Sep-24-2017 இமைகள் - எழுந்துவரும் துளிகள்
Toronto
[Friday, 2017-07-28 05:51:51]