Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 19, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
இறுதிப்போரில் இந்திய அரசும் தமிழக அரசும் கூட்டு சேர்ந்துதான் செயல்பட்டன!
[Friday, 2012-08-03 21:05:10]

இறுதிப்போரில் இலங்கை அரசுடன் இந்திய அரசும் தமிழக அரசும் கூட்டு சேர்ந்துதான் செயல்பட்டன. எல்லாம் சுயநல அரசியல். இப்போதும்கூட தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களை நேரில் பார்த்து, அங்குள்ள மக்களின் இழிநிலையைப் பற்றி நான் பேசி இருக்கிறேன். இவ்வாறு அருந்ததி ராய் குற்றஞ்சாட்டுகிறார்.


  

இவ்வாறு மனித உரிமைச் செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான அருந்ததி ராய் விகடனுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.

அருந்ததி ராயுடன் பேசுவது மனசாட்சியுடன் உரையாடுவதுபோல. உரையாடல் மிக நெருக்கமானதாக இருக்கும். ஆனால், உண்மையை எதிர்கொள்ளும் திராணி வேண்டும். தன்னுடைய 'தி காட் ஆப் ஸ்மால் திங்ஸ்' தமிழ் மொழிபெயர்ப்பு நூலான - 'சின்ன விஷயங்களின் கடவுள்' - வெளியீட்டுக்காக சென்னை வந்திருந்த அருந்ததியைச் சந்தித்தேன்.

அவரின் நேர்காணலில் முக்கியமான சில பகுதிகளை இங்கு தருகிறோம்:

கேள்வி. அரச பயங்கரவாதம், சுதந்திரம் குறித்துப் பேசுகிறீர்கள். ஆனால், இலங்கையின் பின்னின்று ஒரு போரை இந்திய அரசு நடத்தியபோது நீங்கள் என்ன செய்தீர்கள்?"

பதில். இலங்கைப் போருக்கு எதிராகப் பேசிய ஒரு சிலரில் நானும் ஒருத்தி. ஆனால், நான் என்ன பேசினேன், என்ன செய்தேன் என்பது அல்ல முக்கியம். நீங்கள் என்ன செய்தீர்கள்? உங்கள் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் என்ன செய்தார்கள்? இலங்கை அரசுடன் இந்திய அரசும் தமிழக அரசும் கூட்டு சேர்ந்துதான் செயல்பட்டன. எல்லாம் சுயநல அரசியல்!

இப்போதும்கூட தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களை நேரில் பார்த்து, அங்குள்ள மக்களின் இழிநிலையைப் பற்றி நான் பேசி இருக்கிறேன். நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை உங்கள் மனசாட்சிக்கே விட்டுவிடுகிறேன்."

கேள்வி: இன்றைய அருந்ததி ராய் உருவாக, சின்ன வயது வாழ்க்கை எந்த அளவுக்கு அடிப்படையாக இருந்தது என்று சொல்ல முடியுமா?

பதில்: நான் ஒரு வயதுக் குழந்தையாக இருந்தபோது என் பெற்றோருக்கு விவாகரத்து ஆனது. கலப்புத் திருமணம் செய்து அந்தக் கணவனையும் பிரிந்த ஒரு பெண், தன் கிராமத்துக்கு மீண்டும் திரும்பும்போது நம் சமூகம் எப்படி வரவேற்கும் என்று சொல்ல வேண்டுமா என்ன? எல்லோராலும் நிராகரிக்கப்பட்ட நிலையில் நாங்கள் இருந்தோம். இப்படித்தான் உறவுகளும் சமூகமும் எனக்கு அறிமுகம் ஆனது.

கேள்வி: உங்கள் வாழ்க்கையை வடிவமைத்ததில் உங்கள் அம்மாவுக்கு முக்கியப் பங்கு உண்டு என்று சொல்லி இருக்கிறீர்கள்..?

பதில்: அப்பா ஒரு குடிநோயாளி. என்னுடைய 20 வயதில்தான் அவரைப் பார்த்தேன். அதுவரை அப்படி ஒருவர் இருக்கிறார் என்ற நினைப்பே எனக்குக் கிடையாது. ஆனால், நான் பார்த்த உன்னதமான பெண்களில் ஒருவர் என் அம்மா. அப்பாவைவிட்டுப் பிரிந்து வந்த பிறகு, ஊட்டியில் ஒரு சின்ன இடத்தில் நாங்கள் இருந்தோம். சாப்பாட்டுக்கே வழி இல்லை. அப்புறம் கேரளத்துக்குப் போனோம். வாழ்க்கையின் சங்கடங்களை அந்த வயதிலேயே நேரடியாகப் பார்த்ததால், 'உன்னைப் பாதுகாக்க யாரும் இருக்க மாட்டார்கள்... நீதான் மற்றவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்கிற பாடம் கிடைத்துவிட்டது. முழுமையான சுதந்திரத்தின் பரவசம், பயங்கரம் இரண்டையும் அந்தச் சூழல்தான் எனக்குக் கற்றுக்கொடுத்தது.

கேள்வி: இப்போது நீங்கள் தனியாகத்தான் இருக்கிறீர்கள் அல்லவா?

பதில்: ஆமாம். நான் செயல்படும் முறைக்கு அளவற்ற சுதந்திரம் தேவை. அது திருமண வாழ்க்கையில் கிடைக்காது என்பதை என்னுடைய மண வாழ்க்கைகளின் மூலமும் தெரிந்துகொண்டேன். எனக்குக் குழந்தைகள் கிடையாது. குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் விரும்பியதும் இல்லை. என் முதல் கணவருக்கு இரு குழந்தைகள் உண்டு. அவரைவிடவும் அவர்கள் எனக்கு நெருக்கமானவர்கள். நான் நேசித்தவர்களை இன்னமும் நான் நேசிக்கிறேன். ஆனால், ஒரு சுதந்திரப் பெண்ணால் இன்னொருவர் விதிமுறைக்குக் கீழ் வாழ முடியாது. சமயத்தில் 10 நாட்கள் சாப்பிடாமல், தூங்காமல் எழுதுவேன். குடும்ப வாழ்க்கையில் இருந்துகொண்டு இது எல்லாம் சரிப்படாது!

கேள்வி: இந்தியா உடையும் என்று தொடர்ந்து சொல்கிறீர்கள். அப்படி உடைந்தால், ஓர் இந்தியராக அது உங்களைப் பாதிக்காதா?

பதில்: இந்தியா என்கிற வார்த்தையை நாம் எப்படிப் புரிந்துகொள்கிறோம் என்பதே எனக்குத் தெரியவில்லை. தொன்மைமிக்க நாடு என்றா? உண்மையில் 1947-ல்தான் இந்தியா என்ற நாடு உருவானது. அதுவும் பிரிவினையில் இருந்து. அப்படிப் பிரிவினையால் உருவான ஒரு நாடு காலனி ஆதிக்கச் சக்திபோலத்தான் செயல்படுகிறது.

மக்கள் போராட்டத்தை அடக்க இராணுவத்தை அனுப்புவது ஆகட்டும், மற்ற நாடுகளிலும் பிரிவினையை உருவாக்குவது ஆகட்டும். தேசியம் என்பது தவறு அல்ல. ஆனால், அதில் நியாயம் இருக்க வேண்டும்.

வரைபடத்தில் என்னுடைய நாட்டின் அளவு பெரியதாக அல்லது சிறியதாக இருக்கிறது என்பது என்னைப் பாதிக்காது. ஆனால், நான் சார்ந்திருக்கும் நாட்டின் பெயரால் நடத்தப்படும் வன்முறையும் ஒடுக்குமுறையும் என்னை வெகுவாகப் பாதிக்கும்.

கேள்வி: இதுவரையிலான இந்தியப் பிரதமர்களிலேயே சிறந்தவர் என்று நீங்கள் யாரைச் சொல்வீர்கள்?

பதில்: அப்படி யாரும் இல்லை. ஆனால், மன்மோகன் சிங் மோசமானவர். இந்தியாவை விற்றவர்.

கேள்வி: மோடி - ராகுல். பிரதமர் பதவிக்கு யாரைத் தேர்ந்தெடுப்பீர்கள்?

பதில்: எவ்வளவு மோசமான நாடு இது... (சிரிக்கிறார்). இருவருமே பெரும் சீரழிவையே கொண்டுவருவார்கள். மோடி இன்னமும் பேரழிவைக் கொண்டுவருவார்."

-விகடன்-

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome
தமிழ்நாட்டை தனிநாடாக்கி இலங்கையை ஆபத்தில் தள்ள வேண்டாம்.
[Wednesday, 2013-04-03 17:18:26]

தமிழ் நாட்டை தூண்டி விட்டு இந்திய மத்திய அரசை நெருக்கடியில் தள்ளி, இலங்கையை ஆபத்தில் தள்ள வேண்டாம் என இலங்கை அரசாங்கத்தையும், சிங்கள-பெளத்த தீவிரவாத கட்சிகளையும் கோருகிறேன். இவ்வாறு ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இந்தியா துண்டு துண்டாக உடைந்து போக வேண்டும் என தேசிய தேசப்பற்று இயக்க தலைவர் குணதாச அமரசேகர என்ற பல் வைத்தியர் இந்தியாவை நோக்கி சாபம் போடுகிறார். விமல் வீரவன்சவும், சம்பிக்க ரணவகவின் தலைவர் ஓமல்பே சோபித தேரரும் தமிழகத்தை திட்டி தீர்க்கிறார்கள். போதாக்குறைக்கு கிரிக்கட் வீரர் குமார் சங்கக்காரவும் சின்ன ஒரு தமிழ்நாடு என்பது மிகப்பெரிய இந்தியா இல்லை என்று கிண்டல் செய்கிறார். நீங்கள் எல்லோரும் சேர்ந்து உங்கள் முட்டாள்தனமான சிங்கள பெளத்த தீவிரவாதம் மூலம் எட்டு கோடி மக்கள் தொகை கொண்ட தமிழ்நாட்டை சீண்டி விட்டு, அதை தனிநாடு ஆக்கிவிட வேண்டாம்.

இனவாதிகளின் செயற்பாடுகளாலேயே தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு உருவெடுத்தது.
[Wednesday, 2013-03-27 18:02:18]

கடும்போக்குடைய இனவாதிகளின் செயற்பாடுகளினாலே ஆரம்பத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற அமைப்பு உருவெடுத்தது என இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ண தெரிவித்தார். கொழும்பு பான்ஸ் பிளேஸில் அமைந்துள்ள அசாத் சாலி மன்றத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பிராந்திய அதிகாரமாக திகழும் இந்தியாதான் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை கொண்டு வந்திருக்க வேண்டும்.
[Wednesday, 2013-03-20 10:35:02]

தென்னாசியப் பிராந்திய அதிகாரமாக திகழும் இந்தியாதான், ஐ.நா மனித உரிமைச சபையில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தினை கொண்டு வந்திருக்க வேண்டுமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார். சென்னையில் கடந்த திங்கட்கிழமை இணையவழி காணொளியூடாக இடம்பெற்றிருந்த ஊடக மாநாட்டிலேயே பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் இக்கருத்தினை தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமைச் சபையினை மையப்படுத்திய சிறிலங்கா விவகாரத்தில், இந்தியாவின் நிலைப்பாடு முக்கியமானதொரு விடயமாக கருத்தபடுவதோடு, இந்தியா மத்திய அரசினை நோக்கிய அழுத்தங்கள் தமிழகத்தின் பல்வேறு மட்டங்களில் வலுத்தவரும் நிலையில், பிரதமர் வி.உருத்திரகுமாரனது இக்கருத்து வெளிவந்துள்ளது.

ஈழத் தமிழர்கள் மகிழ்வாக, நிம்மதியாக வாழ்வதற்கு தமிழ் ஈழம் தான் தீர்வு..
[Monday, 2013-03-18 09:38:49]

ஈழத்தமிழர்கள் மகிழ்வாக, நிம்மதியாக வாழ தமிழ் ஈழம் தான் தீர்வு. அது நிலைநாட்டப்படும் வரை மத்திய அரசுக்கு எதிரான மக்கள் போராட்டத்தை சமத்துவ மக்கள் கட்சி தொடர்ந்து நடத்தும் என அக்கட்சியின் நிறுவன தலைவர் ஆர். சரத்குமார் தெரிவித்தார். அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இலங்கையை காப்பாற்றும் முயற்சிகளில் இந்தியாவால் இனி ஈடுபட முடியாது.
[Saturday, 2013-02-23 11:45:03]

கடைசி கட்ட யுத்தத்தின் போது இலங்கை அரசை, கேடயமாக இருந்து இந்திய மத்திய அரசு காப்பாற்றியது. இந்நிலையில் இன்று அத்தகைய ஒரு முயற்சியை இந்திய மத்திய அரசு விரும்பினாலும்கூட செய்ய முடியாத ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கான முழுமையான பொறுப்பையும், இந்தியாவுக்கும், உலகத்துக்கு அளித்த அனைத்து உறுதிமொழிகளையும் காற்றில் பறக்க விட்ட இலங்கை அரசே ஏற்றுக்கொள்ளவேண்டும் என என மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இது குறித்து ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் மேலும் தெரிவித்ததாவது, இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான பொதுஜன அபிப்பிராயம் இன்று இந்தியாவில் அகில இந்திய மட்டத்தில் ஏற்பட்டு வருகிறது. இதை இந்தியாவின் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களும் இன்று எதிரொலிக்கின்றன.

பௌத்த அடிப்படைவாத குழுக்கள் நாட்டில் இனமுரண்பாட்டை ஏற்படுத்த தீவிரம்.
[Wednesday, 2013-02-20 06:44:52]

முஸ்லிம் மக்கள் மீதான அழுத்தங்கள் அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஹிரியாலை மற்றும் குருநாகல் பகுதிகளில் மத நல்லிணக்கத்தை சீர் குலைக்கும் வகையிலான செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இஸ்லாமிய மதத்தவர் மீதான தாக்குதல்கள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றில் விசேட உரையாற்றியுள்ளார்.

இலங்கையில் பேச்சளவில் மாத்திரம் தான் சுதந்திரம் உள்ளது.
[Monday, 2013-02-04 09:53:58]

நாட்டு மக்களுக்கு தற்போது அனைத்துத் துறைகளினதும் சுதந்திரம் என்பது வாக்குறுதிகளிலும் பேச்சளவிலுமே காணப்படுகின்றது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கைக் குடியரசின் 65ஆவது சுதந்திரதினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள செய்தியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

யாழ். குடாநாட்டில் திட்டமிட்ட கலாசாரச் சீரழிவு.
[Tuesday, 2013-01-15 09:50:24]

யாழ். குடாநாட்டில் இப்போது திட்டமிட்ட கலாசாரச் சீரழிவு நடைபெற்று வருகிறது. எமது அருமந்த இளைஞர்களும், யுவதிகளும் சீரழிந்த ஒரு வாழ்க்கை முறைக்குத் திட்டமிட்டு இழுத்துச் செல்லப்படுகின்றார்கள். இவ்வாறு தெரிவித்தார் உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன். நேற்றுத் திங்கட்கிழமை வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் தலைமைக் காரியாலயக் கட்டடத் திறப்புவிழா இந்து வாலிபர் சங்கத்தின் தலைவர், சட்டத் தரணி க.சுகாஷ் தலைமையில் நடைபெற்றது.

ஆட்கடத்தல்காரர்கள் மூலம் கனடா வர முயல்பவர்கள் தங்களது வாழ்க்கையையே தொலைக்கிறார்கள்:
[Monday, 2013-01-07 10:28:08]

இன்று கொழும்பிலுள்ள சினமன் கிராண்ட் கோட்டலில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய கனடிய குடிவரவு மற்றும் பல்கலாச்சார அமைச்சர் ஜேசன் கெனி அவர்கள் ஆட்கடத்தல்காரர்கள் மூலம் கனடா வர முயல்பவர்கள் தங்களது வாழ்க்கையையே தொலைக்கிறார்கள் என்று தெரிவித்தார். ஆட்கடத்தல்க் காரர்கள் மூலம் கனடா வர விரும்புபவர்களிற்கு நாங்கள் விடுக்கும் காட்டமான செய்தி யாதெனில், தயவு செய்து அப்படியான வழிகளில் கனடா வரும் எண்ணத்தைக் கைவிட்டு விடுங்கள்.

அரசுக்கும் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சைக் குழப்பியது அரசு தரப்புதான்!
[Sunday, 2013-01-06 15:27:04]

அரசுக்கும் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சைக் குழப்பியது அரசு தரப்புதான் என்பதை அடித்துக் கூறுகின்றோம். அத்துடன் திராணியற்ற இந்த மஹிந்த அரசு அமைத்த நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் தமிழ்க் கூட்டமைப்பு கலந்துகொண்டிருந்தால் இன்று பிரதம நீதியரசர் ஷிராணி எதிர்நோக்கும் சவால்களை நாமும் சந்தித்திருப்போம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

NIRO-DANCE-100213
TamilsGuid-191012-2013
TDE_Computers2011
RoyaShades-l2011(04-12-11)
Ramans2011
Mahesan supramaniyam 031109
Suresh-remax-2013-01-01
INNSYS-20120930
Canada Kanthasamy Kovil
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com