Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 21, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
கடத்தல் - காணாமல் போதல் சம்பவங்களின் பின்னணியில் படையினர்.
[Thursday, 2012-06-21 11:48:44]

கடத்தல் மற்றும் காணாமல் போதல் சம்பவங்களுடன் பல சந்தர்ப்பங்களில் ஆயுதப்படையினரே ஈடுபடுத்தப் பட்டுள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிர மசிங்க நாடாளுமன்றில் கூறினார்.இது தொடர்பில் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு உரையாற்றிய அவர் மேலும் கூறியவை வருமாறு:


  

நாட்டில் சட்டம், ஒழுங்கு முழுமையாகச் சீர்குலைந்துள்ளது. காட்டுச் சட்டமே நடைமுறையில் உள்ளது. ஹம்பாந்தோட்டையில் ஜே.வி.பி. நடத்திய பகிரங்கக் கூட்டத்தின் போது ஆயுததாரிகள் அங்கு வந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர் கள் இன்னும் தெற்கில் சுதந்திரமாக நடமாடித் திரிகின்றனர். பொலிஸார் சந்தேக நபர்களைக் கைதுசெய்யாது மௌனம் காக்கின்றனர். இறந்தவர்களுக்கான இறுதிக்கிரியையைக் கூட நடத்த விடாமல் பொலிஸார் தடுக்கின்றனர்.

இந்த ஆயுததாரிகள் வீதிகளில் ஆயுதங்கள் ஏந்தித் திரிவதற்கு யார் பாதுகாப்புப் பெற்றுக்கொடுத்தது? பொலிஸ் அரசியல் மயமாகிவிட்டது. நாடு முழுவதும் இதே நிலைதான்.

2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில்2,318 பாலியல் வல்லுறவு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. கடத்தல் மற்றும் காணாமல் போதல் சம்பவங்கள் 1,112 இடம்பெற்றுள்ளன. சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் 431 இடம்பெற்றுள்ளன. இந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அரசு எந்த நடவடிக்கையையும் இதுவரையும் எடுக்கவில்லை. பொலிஸாரின் கைகள் கட்டிப்போடப்பட்டுள்ளன. இதனால், எமது நாடு சர்வதேச மட்டத்தில் அபகீர்த்திக்குள்ளாகியுள்ளது.

இந்த நாட்டில் காட்டுச்சட்டமே நடைமுறையில் இருக்கின்றது என்பதை ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையே கூறுகின்றது. நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்தவும் நல்லாட்சியை நிலைநாட்டவும் அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

பொலிஸ் சேவை அரசியல்மயமாக்கப்பட்டிருப்பது நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையைப் படிக்கும்போது நன்றாகத் தெரிகின்றது. நல்லிணக்க ஆணைக்குழுவில் குறிப்பிடப்பட்டிருப்பதுபோல் பொலிஸிற்கு அரசு தனி அமைச்சை உருவாக்குமா? நகைகளை அணிந்துள்ள ஒரு பெண் தேவேந்திரமுனையில் இருந்து பருத்தித்துறைவரை எதுவித ஆபத்துமின்றி நடந்து செல்லக்கூடிய யுகம் ஒன்று இலங்கையில் இருந்தது என்று எமது மூதாதையர்கள் பெருமையுடன் கூறியிருக்கிறார்கள்.

இன்று நிலைமை வேறு. எவருமே வீதிகளில் சுதந்திரமாக நடந்துசெல்ல முடியாது. ஒருவரும் மாற்றுக்கருத்துகளைத் தெரிவிக்க முடியாது. அவ்வாறு செய்தால் அவர்கள் வெள்ளை வான்களில் கடத்தப்படுகின்றனர். கடத்தல் நடவடிக்கைகளுக்கு பல சந்தர்ப்பங்களில் ஆயுதப் படையினர் பயன்படுத்தப் பட்டுள்ளனர் என்று அறிக்கைகள் கூறுகின்றன.உயர் பாதுகாப்பு வலயங்களில் மாத்திரம் அன்றி நீதிமன்ற வளாகங்களில் வைத்தும் மக்கள் கடத்தப் படுகின்றனர். பொலிஸ் நிலையங்களில் கொலைகள் இடம்பெறுகின்றன. ஆயுதம் தாங்கிய காடையர்கள் மக்களைக் கொல்கின்றனர்.

காணாமல் போதல் மற்றும் கொலைகள் உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்குப் பொருத்தமான பொறிமுறை ஒன்று இல்லாததால் நிலைமை மோசமாகியுள்ளது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுகள் நடைமுறைப்படுத்தப்படும் என்று அரசு பல சந்தர்ப்பங்களில் வாக்குறுதிய ளித்துள்ளது. ஜெனிவாவிலும் ஹிலாரி கிளின்டனிடமும் வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த வாக்குறுதிகள் உடன் நடைமுறைப்படுத்தப்படுமா என அரசிடம் நாம் கேட்கின்றோம் என்றார்.

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome
தமிழ்நாட்டை தனிநாடாக்கி இலங்கையை ஆபத்தில் தள்ள வேண்டாம்.
[Wednesday, 2013-04-03 17:18:26]

தமிழ் நாட்டை தூண்டி விட்டு இந்திய மத்திய அரசை நெருக்கடியில் தள்ளி, இலங்கையை ஆபத்தில் தள்ள வேண்டாம் என இலங்கை அரசாங்கத்தையும், சிங்கள-பெளத்த தீவிரவாத கட்சிகளையும் கோருகிறேன். இவ்வாறு ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இந்தியா துண்டு துண்டாக உடைந்து போக வேண்டும் என தேசிய தேசப்பற்று இயக்க தலைவர் குணதாச அமரசேகர என்ற பல் வைத்தியர் இந்தியாவை நோக்கி சாபம் போடுகிறார். விமல் வீரவன்சவும், சம்பிக்க ரணவகவின் தலைவர் ஓமல்பே சோபித தேரரும் தமிழகத்தை திட்டி தீர்க்கிறார்கள். போதாக்குறைக்கு கிரிக்கட் வீரர் குமார் சங்கக்காரவும் சின்ன ஒரு தமிழ்நாடு என்பது மிகப்பெரிய இந்தியா இல்லை என்று கிண்டல் செய்கிறார். நீங்கள் எல்லோரும் சேர்ந்து உங்கள் முட்டாள்தனமான சிங்கள பெளத்த தீவிரவாதம் மூலம் எட்டு கோடி மக்கள் தொகை கொண்ட தமிழ்நாட்டை சீண்டி விட்டு, அதை தனிநாடு ஆக்கிவிட வேண்டாம்.

இனவாதிகளின் செயற்பாடுகளாலேயே தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு உருவெடுத்தது.
[Wednesday, 2013-03-27 18:02:18]

கடும்போக்குடைய இனவாதிகளின் செயற்பாடுகளினாலே ஆரம்பத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற அமைப்பு உருவெடுத்தது என இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ண தெரிவித்தார். கொழும்பு பான்ஸ் பிளேஸில் அமைந்துள்ள அசாத் சாலி மன்றத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பிராந்திய அதிகாரமாக திகழும் இந்தியாதான் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை கொண்டு வந்திருக்க வேண்டும்.
[Wednesday, 2013-03-20 10:35:02]

தென்னாசியப் பிராந்திய அதிகாரமாக திகழும் இந்தியாதான், ஐ.நா மனித உரிமைச சபையில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தினை கொண்டு வந்திருக்க வேண்டுமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார். சென்னையில் கடந்த திங்கட்கிழமை இணையவழி காணொளியூடாக இடம்பெற்றிருந்த ஊடக மாநாட்டிலேயே பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் இக்கருத்தினை தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமைச் சபையினை மையப்படுத்திய சிறிலங்கா விவகாரத்தில், இந்தியாவின் நிலைப்பாடு முக்கியமானதொரு விடயமாக கருத்தபடுவதோடு, இந்தியா மத்திய அரசினை நோக்கிய அழுத்தங்கள் தமிழகத்தின் பல்வேறு மட்டங்களில் வலுத்தவரும் நிலையில், பிரதமர் வி.உருத்திரகுமாரனது இக்கருத்து வெளிவந்துள்ளது.

ஈழத் தமிழர்கள் மகிழ்வாக, நிம்மதியாக வாழ்வதற்கு தமிழ் ஈழம் தான் தீர்வு..
[Monday, 2013-03-18 09:38:49]

ஈழத்தமிழர்கள் மகிழ்வாக, நிம்மதியாக வாழ தமிழ் ஈழம் தான் தீர்வு. அது நிலைநாட்டப்படும் வரை மத்திய அரசுக்கு எதிரான மக்கள் போராட்டத்தை சமத்துவ மக்கள் கட்சி தொடர்ந்து நடத்தும் என அக்கட்சியின் நிறுவன தலைவர் ஆர். சரத்குமார் தெரிவித்தார். அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இலங்கையை காப்பாற்றும் முயற்சிகளில் இந்தியாவால் இனி ஈடுபட முடியாது.
[Saturday, 2013-02-23 11:45:03]

கடைசி கட்ட யுத்தத்தின் போது இலங்கை அரசை, கேடயமாக இருந்து இந்திய மத்திய அரசு காப்பாற்றியது. இந்நிலையில் இன்று அத்தகைய ஒரு முயற்சியை இந்திய மத்திய அரசு விரும்பினாலும்கூட செய்ய முடியாத ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கான முழுமையான பொறுப்பையும், இந்தியாவுக்கும், உலகத்துக்கு அளித்த அனைத்து உறுதிமொழிகளையும் காற்றில் பறக்க விட்ட இலங்கை அரசே ஏற்றுக்கொள்ளவேண்டும் என என மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இது குறித்து ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் மேலும் தெரிவித்ததாவது, இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான பொதுஜன அபிப்பிராயம் இன்று இந்தியாவில் அகில இந்திய மட்டத்தில் ஏற்பட்டு வருகிறது. இதை இந்தியாவின் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களும் இன்று எதிரொலிக்கின்றன.

பௌத்த அடிப்படைவாத குழுக்கள் நாட்டில் இனமுரண்பாட்டை ஏற்படுத்த தீவிரம்.
[Wednesday, 2013-02-20 06:44:52]

முஸ்லிம் மக்கள் மீதான அழுத்தங்கள் அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஹிரியாலை மற்றும் குருநாகல் பகுதிகளில் மத நல்லிணக்கத்தை சீர் குலைக்கும் வகையிலான செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இஸ்லாமிய மதத்தவர் மீதான தாக்குதல்கள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றில் விசேட உரையாற்றியுள்ளார்.

இலங்கையில் பேச்சளவில் மாத்திரம் தான் சுதந்திரம் உள்ளது.
[Monday, 2013-02-04 09:53:58]

நாட்டு மக்களுக்கு தற்போது அனைத்துத் துறைகளினதும் சுதந்திரம் என்பது வாக்குறுதிகளிலும் பேச்சளவிலுமே காணப்படுகின்றது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கைக் குடியரசின் 65ஆவது சுதந்திரதினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள செய்தியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

யாழ். குடாநாட்டில் திட்டமிட்ட கலாசாரச் சீரழிவு.
[Tuesday, 2013-01-15 09:50:24]

யாழ். குடாநாட்டில் இப்போது திட்டமிட்ட கலாசாரச் சீரழிவு நடைபெற்று வருகிறது. எமது அருமந்த இளைஞர்களும், யுவதிகளும் சீரழிந்த ஒரு வாழ்க்கை முறைக்குத் திட்டமிட்டு இழுத்துச் செல்லப்படுகின்றார்கள். இவ்வாறு தெரிவித்தார் உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன். நேற்றுத் திங்கட்கிழமை வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் தலைமைக் காரியாலயக் கட்டடத் திறப்புவிழா இந்து வாலிபர் சங்கத்தின் தலைவர், சட்டத் தரணி க.சுகாஷ் தலைமையில் நடைபெற்றது.

ஆட்கடத்தல்காரர்கள் மூலம் கனடா வர முயல்பவர்கள் தங்களது வாழ்க்கையையே தொலைக்கிறார்கள்:
[Monday, 2013-01-07 10:28:08]

இன்று கொழும்பிலுள்ள சினமன் கிராண்ட் கோட்டலில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய கனடிய குடிவரவு மற்றும் பல்கலாச்சார அமைச்சர் ஜேசன் கெனி அவர்கள் ஆட்கடத்தல்காரர்கள் மூலம் கனடா வர முயல்பவர்கள் தங்களது வாழ்க்கையையே தொலைக்கிறார்கள் என்று தெரிவித்தார். ஆட்கடத்தல்க் காரர்கள் மூலம் கனடா வர விரும்புபவர்களிற்கு நாங்கள் விடுக்கும் காட்டமான செய்தி யாதெனில், தயவு செய்து அப்படியான வழிகளில் கனடா வரும் எண்ணத்தைக் கைவிட்டு விடுங்கள்.

அரசுக்கும் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சைக் குழப்பியது அரசு தரப்புதான்!
[Sunday, 2013-01-06 15:27:04]

அரசுக்கும் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சைக் குழப்பியது அரசு தரப்புதான் என்பதை அடித்துக் கூறுகின்றோம். அத்துடன் திராணியற்ற இந்த மஹிந்த அரசு அமைத்த நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் தமிழ்க் கூட்டமைப்பு கலந்துகொண்டிருந்தால் இன்று பிரதம நீதியரசர் ஷிராணி எதிர்நோக்கும் சவால்களை நாமும் சந்தித்திருப்போம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Suresh-remax-2013-01-01
INNSYS-20120930
Ramans2011
RoyaShades-l2011(04-12-11)
TamilsGuid-191012-2013
Canada Kanthasamy Kovil
TDE_Computers2011
Mahesan supramaniyam 031109
NIRO-DANCE-100213
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com