Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 23, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
மொழிப்போர், இனப்போராக மாறி, இன்று இந்நாட்டில் மதப்போரும் உருவாகி இருக்கின்றது
[Sunday, 2012-06-17 23:23:47]

இந்நாட்டில் மொழிப்போர் ஆரம்பிக்கப்பட்டு, அது இனப்போராக மாறி, இன்று மதப்போராக அது உருமாறி வளர்ந்து இருக்கின்றது. இதுதான் இந்த நாட்டில் இன்று நாம் காணும் அற்புதமான வளர்ச்சியாகும்.


  

இத்தகைய ஒரு பின்னணியில் வடக்கு-கிழக்கு உட்பட நாடு முழுக்க உள்ள பன்னிரண்டு மாவட்டங்களில் இருந்து பிரதிநிதிகளையும், பெளத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மத தலைவர்களையும் அழைப்பித்து, கொழும்பில் மாநாடு நடத்துவதற்கு இதைவிட பொருத்தமான தருணம் வேறு எதுவும் கிடையாது, என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

தேசிய சமாதான பேரவையின் ஏற்பாட்டில், கொழும்பு ஹவ்லக் வீதி சம்புத்தத்வ பெளத்த மணடபத்தில், தேசிய சர்வமத மாநாடு நடைபெற்றது. நாடு முழுக்க இருந்து பெருந்தொகையான பிரதிநிதிகளுடன், ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள், மாதுலுவாவே சோபித தேரர், ஐதேக எம்பி கரு ஜயசூரிய, கூட்டமைப்பு எம்பி சுமந்திரன், பேரவை தலைவர் ஜெஹான் பெரேரா ஆகியோருடன் அதியாக கலந்துகொண்டு உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

வட-கிழக்கில் இருந்து ராணுவத்தை அகற்றும்படி உலகம் இன்று இந்த அரசாங்கத்தை வலியுறுத்துகிறது. இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களிலும் இந்த விடயம் பற்றி குறிப்பிடப்பட்டு இருக்கின்றது.

தமிழ் பகுதிகளில் இருந்து இராணுவத்தை வாபஸ் வாங்க அரசாங்கம் பிடிவாதமாக மறுக்கின்றது. இதை நாம் ஏற்றுகொள்ள மாட்டோம். அங்கே ராணுவம், சும்மா பாதுகாப்பு பணியில் ஈடுபடவில்லை. அது தமிழ் மக்களின் சமூக வாழ்க்கை விவகாரங்களில் தலையிடுகிறது. இது தமிழ் மக்களுக்கு தொல்லை தரும் ஆக்கிரமிப்பு நடவடிக்கை ஆகும். வடக்கில் தமிழ் மக்கள் வீடுகளில் நடைபெறும் பிறந்தநாள் விழாக்களுக்கு கூட, இராணுவ அதிகாரிகள் அழையா விருந்தாளிகளாக நுழைகிறார்கள். இதை நான் சொல்லவில்லை. இலங்கை வந்து சென்ற இந்திய எதிர்க்கட்சி தலைவி சுஷ்மா சிவராஜ், நாடு திரும்பியதும் இதை சொன்னார். இந்த செய்தி உலக தலைப்பு செய்திகளில் இடம் பெற்றது. இதுதான் வடக்கில் உண்மை நிலவரம். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஆளுநர்களாக முன்னாள் ராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருப்பதே, அங்கு இராணுவ ஆட்சி நடை பெறுவதை ஊர்ஜிதம் செய்கின்றது.

உலகில் எந்த நாட்டு இராணுவமும், சிவில் நியாயங்களுக்கு கட்டுப்பட்டு நடப்பதில்லை. இலங்கை வந்த, இந்திய அமைதிபடையும், யாழ்ப்பாணத்தில் அமைதி காக்கவில்லை. அந்த படையும் பல்வேறு சந்தர்ப்பங்களில் அப்பாவி மக்களை சுட்டு கொன்றது. இதையேதான் அமெரிக்க, பிரித்தானிய இராணுவங்களும் உலக நாடுகளில் செய்கின்றன. இதுதான் உலகளாவிய இராணுவ கலாச்சாரம். இதைதான் இலங்கை இராணுவமும் வடக்கில் செய்கிறது. இலங்கை இராணுவம் வடக்கில் பெளத்த மத போதனையையா செய்கிறது?

எனவே தேவைக்கு அதிகமாக, ஒரு நிமிஷம் கூட, இராணுவம், மக்கள் மத்தியில் நடமாட கூடாது. அரசாங்கம் தனது சித்து விளையாட்டுகளை நிறுத்தி விட்டு, இராணுவத்தை வாபஸ் வாங்க வேண்டும். காவல் பணிகளை பொலிஸ் துறையிடம் கையளிக்க வேண்டும். பொலிஸ் என்பது, சிவில் படையாகும். இராணுவம் என்பது சிவில் படை அல்ல. அவர்கள் சிவில் சட்டங்களுக்கு உட்பட்டு நடப்பதில்லை.

இது பற்றிய அடிப்படை அறிவு இந்த அரசாங்கத்திற்கு இல்லையா? பொலிஸ் என்றால் இராணுவம் என்று சொல்லி, சொல்லித்தான், பொலிஸ் அதிகாரம் மாகாணசபைக்கு தரக்கூடாது என்ற கருத்தை இவர்கள் தெற்கில் உருவாக்கி இருக்கிறார்கள்.

என் வாயில் துப்பாக்கியை வைத்து, பலவந்தமாக என் கையில் தேசிய கொடியை கொடுத்து, என்னை பலவந்தமாக தேசிய கீதம் பாடு என்று சொன்னால், எனக்கு தேசிய உணர்வு வராது என்பதை இங்கு வந்துள்ள கனவான்கள் உணர்ந்துகொள்வார்கள் என நான் நம்புகிறேன். தேசிய உணர்வு என்பது உள்ளிருந்து வர வேண்டும். அப்படி அது வரக்கூடிய சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும். இன்று தமிழ் மக்களை சுற்றி அத்தகைய சூழ்நிலை இல்லை. இந்நாட்டில் மொழிப்போர் ஆரம்பிக்கப்பட்டு, அது இனப்போராக மாறி, இன்று மதப்போராக அது உருமாறி வளர்ந்து இருக்கின்றது. இதுதான் இந்த நாட்டில் இன்று நாம் காணும் அற்புதமான வளர்ச்சியாகும்.

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome
தமிழ்நாட்டை தனிநாடாக்கி இலங்கையை ஆபத்தில் தள்ள வேண்டாம்.
[Wednesday, 2013-04-03 17:18:26]

தமிழ் நாட்டை தூண்டி விட்டு இந்திய மத்திய அரசை நெருக்கடியில் தள்ளி, இலங்கையை ஆபத்தில் தள்ள வேண்டாம் என இலங்கை அரசாங்கத்தையும், சிங்கள-பெளத்த தீவிரவாத கட்சிகளையும் கோருகிறேன். இவ்வாறு ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இந்தியா துண்டு துண்டாக உடைந்து போக வேண்டும் என தேசிய தேசப்பற்று இயக்க தலைவர் குணதாச அமரசேகர என்ற பல் வைத்தியர் இந்தியாவை நோக்கி சாபம் போடுகிறார். விமல் வீரவன்சவும், சம்பிக்க ரணவகவின் தலைவர் ஓமல்பே சோபித தேரரும் தமிழகத்தை திட்டி தீர்க்கிறார்கள். போதாக்குறைக்கு கிரிக்கட் வீரர் குமார் சங்கக்காரவும் சின்ன ஒரு தமிழ்நாடு என்பது மிகப்பெரிய இந்தியா இல்லை என்று கிண்டல் செய்கிறார். நீங்கள் எல்லோரும் சேர்ந்து உங்கள் முட்டாள்தனமான சிங்கள பெளத்த தீவிரவாதம் மூலம் எட்டு கோடி மக்கள் தொகை கொண்ட தமிழ்நாட்டை சீண்டி விட்டு, அதை தனிநாடு ஆக்கிவிட வேண்டாம்.

இனவாதிகளின் செயற்பாடுகளாலேயே தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு உருவெடுத்தது.
[Wednesday, 2013-03-27 18:02:18]

கடும்போக்குடைய இனவாதிகளின் செயற்பாடுகளினாலே ஆரம்பத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற அமைப்பு உருவெடுத்தது என இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ண தெரிவித்தார். கொழும்பு பான்ஸ் பிளேஸில் அமைந்துள்ள அசாத் சாலி மன்றத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பிராந்திய அதிகாரமாக திகழும் இந்தியாதான் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை கொண்டு வந்திருக்க வேண்டும்.
[Wednesday, 2013-03-20 10:35:02]

தென்னாசியப் பிராந்திய அதிகாரமாக திகழும் இந்தியாதான், ஐ.நா மனித உரிமைச சபையில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தினை கொண்டு வந்திருக்க வேண்டுமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார். சென்னையில் கடந்த திங்கட்கிழமை இணையவழி காணொளியூடாக இடம்பெற்றிருந்த ஊடக மாநாட்டிலேயே பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் இக்கருத்தினை தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமைச் சபையினை மையப்படுத்திய சிறிலங்கா விவகாரத்தில், இந்தியாவின் நிலைப்பாடு முக்கியமானதொரு விடயமாக கருத்தபடுவதோடு, இந்தியா மத்திய அரசினை நோக்கிய அழுத்தங்கள் தமிழகத்தின் பல்வேறு மட்டங்களில் வலுத்தவரும் நிலையில், பிரதமர் வி.உருத்திரகுமாரனது இக்கருத்து வெளிவந்துள்ளது.

ஈழத் தமிழர்கள் மகிழ்வாக, நிம்மதியாக வாழ்வதற்கு தமிழ் ஈழம் தான் தீர்வு..
[Monday, 2013-03-18 09:38:49]

ஈழத்தமிழர்கள் மகிழ்வாக, நிம்மதியாக வாழ தமிழ் ஈழம் தான் தீர்வு. அது நிலைநாட்டப்படும் வரை மத்திய அரசுக்கு எதிரான மக்கள் போராட்டத்தை சமத்துவ மக்கள் கட்சி தொடர்ந்து நடத்தும் என அக்கட்சியின் நிறுவன தலைவர் ஆர். சரத்குமார் தெரிவித்தார். அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இலங்கையை காப்பாற்றும் முயற்சிகளில் இந்தியாவால் இனி ஈடுபட முடியாது.
[Saturday, 2013-02-23 11:45:03]

கடைசி கட்ட யுத்தத்தின் போது இலங்கை அரசை, கேடயமாக இருந்து இந்திய மத்திய அரசு காப்பாற்றியது. இந்நிலையில் இன்று அத்தகைய ஒரு முயற்சியை இந்திய மத்திய அரசு விரும்பினாலும்கூட செய்ய முடியாத ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கான முழுமையான பொறுப்பையும், இந்தியாவுக்கும், உலகத்துக்கு அளித்த அனைத்து உறுதிமொழிகளையும் காற்றில் பறக்க விட்ட இலங்கை அரசே ஏற்றுக்கொள்ளவேண்டும் என என மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இது குறித்து ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் மேலும் தெரிவித்ததாவது, இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான பொதுஜன அபிப்பிராயம் இன்று இந்தியாவில் அகில இந்திய மட்டத்தில் ஏற்பட்டு வருகிறது. இதை இந்தியாவின் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களும் இன்று எதிரொலிக்கின்றன.

பௌத்த அடிப்படைவாத குழுக்கள் நாட்டில் இனமுரண்பாட்டை ஏற்படுத்த தீவிரம்.
[Wednesday, 2013-02-20 06:44:52]

முஸ்லிம் மக்கள் மீதான அழுத்தங்கள் அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஹிரியாலை மற்றும் குருநாகல் பகுதிகளில் மத நல்லிணக்கத்தை சீர் குலைக்கும் வகையிலான செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இஸ்லாமிய மதத்தவர் மீதான தாக்குதல்கள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றில் விசேட உரையாற்றியுள்ளார்.

இலங்கையில் பேச்சளவில் மாத்திரம் தான் சுதந்திரம் உள்ளது.
[Monday, 2013-02-04 09:53:58]

நாட்டு மக்களுக்கு தற்போது அனைத்துத் துறைகளினதும் சுதந்திரம் என்பது வாக்குறுதிகளிலும் பேச்சளவிலுமே காணப்படுகின்றது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கைக் குடியரசின் 65ஆவது சுதந்திரதினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள செய்தியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

யாழ். குடாநாட்டில் திட்டமிட்ட கலாசாரச் சீரழிவு.
[Tuesday, 2013-01-15 09:50:24]

யாழ். குடாநாட்டில் இப்போது திட்டமிட்ட கலாசாரச் சீரழிவு நடைபெற்று வருகிறது. எமது அருமந்த இளைஞர்களும், யுவதிகளும் சீரழிந்த ஒரு வாழ்க்கை முறைக்குத் திட்டமிட்டு இழுத்துச் செல்லப்படுகின்றார்கள். இவ்வாறு தெரிவித்தார் உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன். நேற்றுத் திங்கட்கிழமை வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் தலைமைக் காரியாலயக் கட்டடத் திறப்புவிழா இந்து வாலிபர் சங்கத்தின் தலைவர், சட்டத் தரணி க.சுகாஷ் தலைமையில் நடைபெற்றது.

ஆட்கடத்தல்காரர்கள் மூலம் கனடா வர முயல்பவர்கள் தங்களது வாழ்க்கையையே தொலைக்கிறார்கள்:
[Monday, 2013-01-07 10:28:08]

இன்று கொழும்பிலுள்ள சினமன் கிராண்ட் கோட்டலில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய கனடிய குடிவரவு மற்றும் பல்கலாச்சார அமைச்சர் ஜேசன் கெனி அவர்கள் ஆட்கடத்தல்காரர்கள் மூலம் கனடா வர முயல்பவர்கள் தங்களது வாழ்க்கையையே தொலைக்கிறார்கள் என்று தெரிவித்தார். ஆட்கடத்தல்க் காரர்கள் மூலம் கனடா வர விரும்புபவர்களிற்கு நாங்கள் விடுக்கும் காட்டமான செய்தி யாதெனில், தயவு செய்து அப்படியான வழிகளில் கனடா வரும் எண்ணத்தைக் கைவிட்டு விடுங்கள்.

அரசுக்கும் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சைக் குழப்பியது அரசு தரப்புதான்!
[Sunday, 2013-01-06 15:27:04]

அரசுக்கும் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சைக் குழப்பியது அரசு தரப்புதான் என்பதை அடித்துக் கூறுகின்றோம். அத்துடன் திராணியற்ற இந்த மஹிந்த அரசு அமைத்த நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் தமிழ்க் கூட்டமைப்பு கலந்துகொண்டிருந்தால் இன்று பிரதம நீதியரசர் ஷிராணி எதிர்நோக்கும் சவால்களை நாமும் சந்தித்திருப்போம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Mahesan supramaniyam 031109
Ramans2011
NIRO-DANCE-100213
INNSYS-20120930
TDE_Computers2011
Suresh-remax-2013-01-01
AJRwindows22.05.13
TamilsGuid-191012-2013
RoyaShades-l2011(04-12-11)
Canada Kanthasamy Kovil
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com