Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 24, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
கண்டி மாவட்ட தமிழ் பிரதிநிதித்துவம் ஆகாயத்தில் இருந்து இறங்கி வராது.
[Wednesday, 2012-06-06 11:35:43]

கடந்த பாராளுமன்ற தேர்தலிலே கண்டி மாவட்ட தமிழ் வாக்காளர்கள், இழைத்த தவறு இனி எந்த ஒரு காலத்திலும் கண்டி மாவட்டத்தில் இழைக்கப்படக்கூடாது. தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவம், ஆகாயத்தில் இருந்து தானாக இறங்கி வராது என்பதையும், அதை பெறுவதற்காக தமிழ் வாக்காளர்கள், தமிழ் கட்சிகளுக்கும், தமிழ் வேட்பாளர்களுக்கும் அணிதிரண்டு வாக்களிக்க வேண்டும் என்பதையும் கண்டி மாவட்ட தமிழர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.


  

நாடு முழுவதும் தமிழ் வாக்காளர்கள், தமிழ் கட்சிகளுக்கும், பெரும்பான்மை கூட்டணிகளில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர்களுக்கும் மாத்திரமே வாக்களிக்க வேண்டும் என்று சொல்வது இனவாதம் அல்ல. இந்த பேரினவாத நாட்டில் அதுதான் எமது வாழ்வுரிமை. பேரினவாதத்திற்கு இதுதான் பதில். தமிழன் தமிழனுக்கு வாக்களிக்கவேண்டும் என்று நான் சொல்வதை, தமிழின உரிமைகளுக்காக நான் குரல் கொடுப்பதை, எனது இனம் இந்நாட்டில் ஏனைய சகோதர இனத்தவர்களுக்கு சமானமாக வாழவேண்டும் என்று நான் பாடுபடுவதை எவராவது இனவாதம் என்று சொன்னால், என்னை ஒரு தமிழ் இனவாதி என்று சொல்லிக்கொள்வதில் நான் நிச்சயம் பெருமை அடைவேன் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

ஜனநாயக மக்கள் முன்னணியின் கண்டி மாவட்ட கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்டு, ஜமமு மாவட்ட செயலாளர் வேலு குமாரின் தலைமையில், கண்டி இந்து இளைஞர் மன்றத்தின் கண்டி மாநகர மண்டபத்திலும், ஹந்தானை கிராமத்திலும் நேற்று நடைபெற்ற கூட்டங்களில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

இலங்கையில் தமிழர்கள் எங்கெங்கு வாழ்கிறார்களோ, அங்கெல்லாம் தமிழர்கள் தமிழ் கட்சிகளுக்கோ அல்லது தமிழ் வேட்பாளர்களுக்கோ இனவுணர்வுடன் வாக்களிக்க வேண்டும். தமிழர்கள் ஏனைய இனத்தவருடன் கலந்து வாழும், கண்டி போன்ற தென்னிலங்கை மற்றும் கிழக்கு மாகாண மாவட்டங்களுக்கு இந்த பொது விதி நன்கு பொருந்தும்.

நடைமுறையிலுள்ள தேர்தல் முறையில், இதன்மூலமாகவே தமிழ் பிரதிநிதித்துவங்களை நாம் தக்க வைக்கவும், புதிதாக ஏற்படுத்திக்கொள்ளவும் முடியும். இதை இன்று வேறு எவரையும் விட கண்டி மாவட்ட தமிழ் மக்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

இங்கே எனக்கு முன் உரையாற்றிய சிலர் உணர்ச்சிவசப்பட்டு சில கருத்துகளை சொன்னார்கள். கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது, கண்டியில் தமிழ் வாக்காளர்கள் விட்ட தவறு இனி எதிர்காலத்தில் ஒருபோதும் நடக்காது என்று உறுதி கூறினார்கள்.

அந்த தேர்தலின்போது தமிழ் வாக்காளர்கள் இனவுணர்வுடன் வாக்களிக்காததையும், கண்டியில் தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இல்லாத நிலைமையையும் நினைந்து தாம் இன்று மிகுந்த மனவேதனை அடைவதாகவும் சொன்னார்கள். ஆகவே அடுத்த தேர்தலில் மனோ கணேசன் மீண்டும் கண்டியில் போட்டியிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்கள்.

எமது கட்சியின், கண்டி மாவட்ட கிளையின் அழைப்பை ஏற்று நான் இன்று இங்கே வந்திருப்பதன் ஒரே நோக்கம், கண்டியில் ஜனநாயக தேர்தல்களில் தமிழ் பிரதிநிதித்துவம் எதிர்காலத்தில் இனி ஒருபோதும் தவற விடப்படக்கூடாது என்பதை வலியுறுத்துவதற்காக என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இலங்கையிலேயே மிக அழகான ஊரான இந்த கண்டி மாநகரத்திலேயே நான் என் மாணவ பருவம் முழுதும் வாழ்ந்தேன். இந்த கண்டி மாவட்ட அம்பிட்டி என் தந்தை வழி பிறந்த ஊர். எனவேதான் கண்டி தமிழர்களின் தன்மான பிரதிநிதித்துவம் எனக்கு எப்போதும் முக்கியமாக இருக்கின்றது. அது எனக்கு நேர்மையான அரசியல் வாழ்க்கையை கற்றுத்தந்த மறைந்த என் தந்தைக்கு, நான் ஆற்றும் கடமை என நான் நினைக்கின்றேன். வளர்த்து ஆளாக்கிய தமது தந்தையரை மதிக்கும் ஒவ்வொரு கண்டி மாவட்ட தமிழனுக்கும், தமிழச்சிக்கும் மனோ கணேசனின் இந்த இந்த உணர்வு புரியும் என நம்புகிறேன்.

இந்த இடத்தில் நான் ஒன்றை மிக தெளிவாக சொல்லி வைக்க விரும்புகிறேன். இனி ஒருபோதும் நான் கண்டியில் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை. அது ஒரேயொரு முறையுடன் முடிந்த முடிவு. இன்னமும் தெளிவாக சொல்லப்போனால், அரசியலிருந்து விலகும்வரை, இனி ஒருபோதும் நான் கொழும்பு மாவட்டத்தை விட்டு அகலப்போவதில்லை. ஆனால், கண்டியின் தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் பெறப்படுவதற்கு, எனது தலைமையில் ஜனநாயக மக்கள் முன்னணி முழுமையாக பாடுபடும். கண்டி மாவட்டம் தொடர்பில் எனக்கு உள்ள உரிமையை எவரும் பறிக்க முடியாது. அதனால்தான் அன்றும் கண்டிக்கு வந்தேன். இன்றும் வருகிறேன். இனியும் வருவேன்.

இங்கே இன்று நாங்கள், கண்டி மாவட்ட, ஜனநாயக தமிழ் பிரதிநிதித்துவ இயக்கத்தை அங்குரார்ப்பணம் செய்கிறோம். அதில் கட்சி, மத பேதம் இல்லாமல் அனைத்து கண்டி மாவட்ட தமிழர்களும் பங்களிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். கண்டி மாவட்ட தமிழ் இளைஞர்கள், வர்த்தகர்கள், தொழிலாளர்கள், புத்தி ஜீவிகள், ஆசிரியர்கள், சமூக தொண்டர்கள், தமிழ் இந்து-கிறிஸ்தவ மத தலைவர்கள் ஆகிய அனைவரும் இந்த இயக்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பது எனது கோரிக்கை.

கண்டியில், தமிழர்களின் ஜனத்தொகையைவிட முஸ்லிம் சகோதரர்களின் ஜனத்தொகை, சுமார் இருபத்தைந்து ஆயிரமே அதிகம் ஆகும். ஆனால், முஸ்லிம் சகோதரர்கள், இன்று கண்டி மாவட்டத்தில் நான்கு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களையும், ஐந்து முஸ்லிம் மாகாணசபை உறுப்பினர்களையும் தெரிவு செய்துள்ளார்கள். அதாவது முஸ்லிம் மக்கள் தங்கள் வாக்குரிமையை முழுமையாக பயன்படுத்தியுள்ளார்கள். சகோதர சிறுபான்மை மக்களின் இந்த இன உணர்வு தொடர்பில், முஸ்லிம் மக்களின் நண்பனான நான், கண்டி மாவட்ட முஸ்லிம் சகோதரர்களை உளப்பூர்வமாக பாராட்டுகிறேன்.

ஆனால் சுமார் எண்பத்தைந்து ஆயிரம் பதிவு செய்யப்பட்ட தமிழ் வாக்காளர்களைக்கொண்ட கண்டி மாவட்ட தமிழ் மக்களுக்கு இன்று, ஒரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரும் கிடையாது. ஒரே ஒரு தமிழ் மாகாணசபை உறுப்பினரும், ஒரு சில தமிழ் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களுமே இன்று கண்டி மாவட்டத்தில் இருக்கின்றார்கள். இது வேதனையும், வேட்கக்கேடும் நிறைந்த நிலைமை இல்லையா?

எண்பத்தையாயிரம் தமிழ் வாக்காளர்கள் என்ற எண்ணிக்கை கணிசமான தொகையாகும். இந்த ஜனநாயக சக்தியைக்கொண்டு குறைந்தபட்சமாக இரண்டு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களையும், மூன்று தமிழ் மாகாணசபை உறுப்பினர்களையும், பெருந்தொகையான தமிழ் உள்ளூராட்சிமன்ற பிரதிநிதிகளையும் கண்டி மாவட்ட தமிழ் மக்களால் தெரிவு செய்ய முடியும். ஆனால் இது நடைபெறவில்லை. இந்த நிலைமை கண்டித்தமிழர்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்துகின்றது. இதனால் இன்று கண்டி மாவட்ட தமிழ் மக்கள் அரசியல் அநாதைகளாகவும், எடுப்பார் கைப்பிள்ளைகளாகவும் வாழ வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமை மாறவேண்டும்.

ஏனைய இனத்து சகோதரர்களுக்கு இணையாக நாமும் இந்த நாட்டில் வாழ வேண்டாமா? கண்டி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பன்னிரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களில், எட்டு பேர் சிங்கள சகோதரர்கள், நான்கு பேர் முஸ்லிம் சகோதரர்கள், தமிழர்கள் ஒருவரும் இல்லை என்ற உண்மை எம்மை உறுத்தவில்லையா? கண்டித்தமிழர்களான நமக்கு தன்மானமும், சுயமரியாதையும் இல்லையா?

நான் இங்கு மீண்டும் வந்து போட்டியிடப்போவது இல்லை. கண்டியிலேயே பிறந்து வளர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கும் உங்கள் மத்தியில் இருந்து கண்டி மாவட்ட பாராளுமன்ற, மாகாணசபை, உள்ளூராட்சிமன்ற தமிழ் உறுப்பினர்கள் பெருந்தொகையில் உருவாக வேண்டும். இதுபற்றி கண்டித்தமிழர் சிந்திக்க வேண்டும். சிந்திக்ககூடியவர்கள் ஏனையவர்களுக்கு எடுத்து கூறவேண்டும். இதுதான் எனது கோரிக்கை.

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome
தமிழ்நாட்டை தனிநாடாக்கி இலங்கையை ஆபத்தில் தள்ள வேண்டாம்.
[Wednesday, 2013-04-03 17:18:26]

தமிழ் நாட்டை தூண்டி விட்டு இந்திய மத்திய அரசை நெருக்கடியில் தள்ளி, இலங்கையை ஆபத்தில் தள்ள வேண்டாம் என இலங்கை அரசாங்கத்தையும், சிங்கள-பெளத்த தீவிரவாத கட்சிகளையும் கோருகிறேன். இவ்வாறு ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இந்தியா துண்டு துண்டாக உடைந்து போக வேண்டும் என தேசிய தேசப்பற்று இயக்க தலைவர் குணதாச அமரசேகர என்ற பல் வைத்தியர் இந்தியாவை நோக்கி சாபம் போடுகிறார். விமல் வீரவன்சவும், சம்பிக்க ரணவகவின் தலைவர் ஓமல்பே சோபித தேரரும் தமிழகத்தை திட்டி தீர்க்கிறார்கள். போதாக்குறைக்கு கிரிக்கட் வீரர் குமார் சங்கக்காரவும் சின்ன ஒரு தமிழ்நாடு என்பது மிகப்பெரிய இந்தியா இல்லை என்று கிண்டல் செய்கிறார். நீங்கள் எல்லோரும் சேர்ந்து உங்கள் முட்டாள்தனமான சிங்கள பெளத்த தீவிரவாதம் மூலம் எட்டு கோடி மக்கள் தொகை கொண்ட தமிழ்நாட்டை சீண்டி விட்டு, அதை தனிநாடு ஆக்கிவிட வேண்டாம்.

இனவாதிகளின் செயற்பாடுகளாலேயே தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு உருவெடுத்தது.
[Wednesday, 2013-03-27 18:02:18]

கடும்போக்குடைய இனவாதிகளின் செயற்பாடுகளினாலே ஆரம்பத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற அமைப்பு உருவெடுத்தது என இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ண தெரிவித்தார். கொழும்பு பான்ஸ் பிளேஸில் அமைந்துள்ள அசாத் சாலி மன்றத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பிராந்திய அதிகாரமாக திகழும் இந்தியாதான் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை கொண்டு வந்திருக்க வேண்டும்.
[Wednesday, 2013-03-20 10:35:02]

தென்னாசியப் பிராந்திய அதிகாரமாக திகழும் இந்தியாதான், ஐ.நா மனித உரிமைச சபையில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தினை கொண்டு வந்திருக்க வேண்டுமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார். சென்னையில் கடந்த திங்கட்கிழமை இணையவழி காணொளியூடாக இடம்பெற்றிருந்த ஊடக மாநாட்டிலேயே பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் இக்கருத்தினை தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமைச் சபையினை மையப்படுத்திய சிறிலங்கா விவகாரத்தில், இந்தியாவின் நிலைப்பாடு முக்கியமானதொரு விடயமாக கருத்தபடுவதோடு, இந்தியா மத்திய அரசினை நோக்கிய அழுத்தங்கள் தமிழகத்தின் பல்வேறு மட்டங்களில் வலுத்தவரும் நிலையில், பிரதமர் வி.உருத்திரகுமாரனது இக்கருத்து வெளிவந்துள்ளது.

ஈழத் தமிழர்கள் மகிழ்வாக, நிம்மதியாக வாழ்வதற்கு தமிழ் ஈழம் தான் தீர்வு..
[Monday, 2013-03-18 09:38:49]

ஈழத்தமிழர்கள் மகிழ்வாக, நிம்மதியாக வாழ தமிழ் ஈழம் தான் தீர்வு. அது நிலைநாட்டப்படும் வரை மத்திய அரசுக்கு எதிரான மக்கள் போராட்டத்தை சமத்துவ மக்கள் கட்சி தொடர்ந்து நடத்தும் என அக்கட்சியின் நிறுவன தலைவர் ஆர். சரத்குமார் தெரிவித்தார். அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இலங்கையை காப்பாற்றும் முயற்சிகளில் இந்தியாவால் இனி ஈடுபட முடியாது.
[Saturday, 2013-02-23 11:45:03]

கடைசி கட்ட யுத்தத்தின் போது இலங்கை அரசை, கேடயமாக இருந்து இந்திய மத்திய அரசு காப்பாற்றியது. இந்நிலையில் இன்று அத்தகைய ஒரு முயற்சியை இந்திய மத்திய அரசு விரும்பினாலும்கூட செய்ய முடியாத ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கான முழுமையான பொறுப்பையும், இந்தியாவுக்கும், உலகத்துக்கு அளித்த அனைத்து உறுதிமொழிகளையும் காற்றில் பறக்க விட்ட இலங்கை அரசே ஏற்றுக்கொள்ளவேண்டும் என என மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இது குறித்து ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் மேலும் தெரிவித்ததாவது, இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான பொதுஜன அபிப்பிராயம் இன்று இந்தியாவில் அகில இந்திய மட்டத்தில் ஏற்பட்டு வருகிறது. இதை இந்தியாவின் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களும் இன்று எதிரொலிக்கின்றன.

பௌத்த அடிப்படைவாத குழுக்கள் நாட்டில் இனமுரண்பாட்டை ஏற்படுத்த தீவிரம்.
[Wednesday, 2013-02-20 06:44:52]

முஸ்லிம் மக்கள் மீதான அழுத்தங்கள் அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஹிரியாலை மற்றும் குருநாகல் பகுதிகளில் மத நல்லிணக்கத்தை சீர் குலைக்கும் வகையிலான செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இஸ்லாமிய மதத்தவர் மீதான தாக்குதல்கள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றில் விசேட உரையாற்றியுள்ளார்.

இலங்கையில் பேச்சளவில் மாத்திரம் தான் சுதந்திரம் உள்ளது.
[Monday, 2013-02-04 09:53:58]

நாட்டு மக்களுக்கு தற்போது அனைத்துத் துறைகளினதும் சுதந்திரம் என்பது வாக்குறுதிகளிலும் பேச்சளவிலுமே காணப்படுகின்றது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கைக் குடியரசின் 65ஆவது சுதந்திரதினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள செய்தியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

யாழ். குடாநாட்டில் திட்டமிட்ட கலாசாரச் சீரழிவு.
[Tuesday, 2013-01-15 09:50:24]

யாழ். குடாநாட்டில் இப்போது திட்டமிட்ட கலாசாரச் சீரழிவு நடைபெற்று வருகிறது. எமது அருமந்த இளைஞர்களும், யுவதிகளும் சீரழிந்த ஒரு வாழ்க்கை முறைக்குத் திட்டமிட்டு இழுத்துச் செல்லப்படுகின்றார்கள். இவ்வாறு தெரிவித்தார் உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன். நேற்றுத் திங்கட்கிழமை வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் தலைமைக் காரியாலயக் கட்டடத் திறப்புவிழா இந்து வாலிபர் சங்கத்தின் தலைவர், சட்டத் தரணி க.சுகாஷ் தலைமையில் நடைபெற்றது.

ஆட்கடத்தல்காரர்கள் மூலம் கனடா வர முயல்பவர்கள் தங்களது வாழ்க்கையையே தொலைக்கிறார்கள்:
[Monday, 2013-01-07 10:28:08]

இன்று கொழும்பிலுள்ள சினமன் கிராண்ட் கோட்டலில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய கனடிய குடிவரவு மற்றும் பல்கலாச்சார அமைச்சர் ஜேசன் கெனி அவர்கள் ஆட்கடத்தல்காரர்கள் மூலம் கனடா வர முயல்பவர்கள் தங்களது வாழ்க்கையையே தொலைக்கிறார்கள் என்று தெரிவித்தார். ஆட்கடத்தல்க் காரர்கள் மூலம் கனடா வர விரும்புபவர்களிற்கு நாங்கள் விடுக்கும் காட்டமான செய்தி யாதெனில், தயவு செய்து அப்படியான வழிகளில் கனடா வரும் எண்ணத்தைக் கைவிட்டு விடுங்கள்.

அரசுக்கும் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சைக் குழப்பியது அரசு தரப்புதான்!
[Sunday, 2013-01-06 15:27:04]

அரசுக்கும் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சைக் குழப்பியது அரசு தரப்புதான் என்பதை அடித்துக் கூறுகின்றோம். அத்துடன் திராணியற்ற இந்த மஹிந்த அரசு அமைத்த நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் தமிழ்க் கூட்டமைப்பு கலந்துகொண்டிருந்தால் இன்று பிரதம நீதியரசர் ஷிராணி எதிர்நோக்கும் சவால்களை நாமும் சந்தித்திருப்போம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

TamilsGuid-191012-2013
Ramans2011
Canada Kanthasamy Kovil
RoyaShades-l2011(04-12-11)
Suresh-remax-2013-01-01
NIRO-DANCE-100213
Mahesan supramaniyam 031109
INNSYS-20120930
AJRwindows22.05.13
TDE_Computers2011
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com