Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
June 20, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
முட்டாள்களின் மூடச்செயல் தற்கொலை !

தன்னம்பிக்கையற்றவர்களின்
தரமற்ற செயல்
தற்கொலை !

தாழ்வு மனப்பான்மையின்
வெளிப்பாடு
தற்கொலை !

கோழைகளின்
கோழைத்தனம்
தற்கொலை !

பகுத்தறிவு மனிதனுக்கு
அழகற்ற செயல்
தற்கொலை !

அவலம் கேவலம்
செயற்கை மரணம்
தற்கொலை !

தீர்வு அல்ல
தீராத அவச்சொல்
தற்கொலை !

மனச்சிதைவால்
உயிர்ச்சிதைவு
தற்கொலை !

முடிவு அல்ல தொடக்கம்
உறவுகளின் துக்கம்
தற்கொலை !

முடிவல்ல ஆரம்பம்
பெற்றோரின் துன்பம்
தற்கொலை !

மடத்தனத்தின் உச்சம்
உயிர் போவதே மிச்சம்
தற்கொலை !

வாழ்க்கை ஒருமுறைதான்
வீணடிப்பது முறையோ ?
தற்கொலை !

உங்களின் செயலால்
உறவுகளுக்கு இன்னல்
தற்கொலை !

தலைமுறைக்கே அவமானம்
காற்றில் பறக்கும் மானம்
தற்கொலை !

ஒரே பிறப்பு உண்மை
மறு பிறப்பு பொய்
தற்கொலை ?

கோடிகள் கொடுத்தாலும்
மீட்க முடியாது உயிர்
தற்கொலை ?

உன்னால் உருவானதல்ல உன்னுயிர்
உனக்கேது உரிமை
தற்கொலை ?

சாதிக்கும் மாற்றுத்திறனாளிகள்
உயிர் மாய்க்கும் குறையற்றவர்கள்
தற்கொலை ?

ஒழியட்டும் ஒழியட்டும்
உலகை விட்டு ஒழியட்டும்
தற்கொலை !

முற்றுப்புள்ளி வைத்திடுவோம்
முடிவு கட்டுவோம்
தற்கொலைக்கு !

வாழட்டும் வாழட்டும் உயிர்கள்
இயற்கையாக வரட்டும் மரணம்
வேண்டாம் வேண்டாம் தற்கொலை
.


[Friday, 2012-06-29 21:06:46]
  Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome
நந்திக்கடல் சுடர்ந்த இரத்தம் குமரியில் குமுறி - உலக நதிகளை உடைத்தது
[Saturday, 2013-05-18 21:40:07]
மேதின சாபமும் தீக்குச்சி ஏற்றும் தீபங்களும்
[Friday, 2013-05-10 12:07:41]
உழைப்பாளர் தினம்!
[Wednesday, 2013-05-01 20:29:20]
வெம்புலி பெற்ற அம்புலி
[Wednesday, 2013-04-24 23:40:58]
பல கோடி அவதாரம்
[Monday, 2013-04-08 01:20:21]
சிந்தனையில் தீ வை...!!!
[Tuesday, 2013-03-26 09:22:51]
மனித விலங்குக்கு மனசாட்சி இருக்குமா ?
[Tuesday, 2013-03-26 09:21:58]
மண்ணிருந்து வானேறி வந்தது
[Tuesday, 2013-03-26 09:12:29]
என்றும் சாகாத பிறப்பின் விடியல்..
[Sunday, 2013-03-24 22:06:00]
நாங்கள் அன்றும் இப்படித் தான் கொதித்துப் போயிருந்தோம்..
[Thursday, 2013-03-21 21:21:36]
Mahesan supramaniyam 031109
NIRO-DANCE-100213
AJRwindows22.05.13
TamilsGuid-191012-2013
RoyaShades-l2011(04-12-11)
Suresh-remax-2013-01-01
TDE_Computers2011
Ramans2011
INNSYS-20120930
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com