Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
October 26, 2014 [GMT]
  • Welcome
  • Welcome
ஸ்ரீலங்கா மீது அழுத்தங்களை பிரயோகிக்க பொதுநலவாயம் நல்ல வாய்ப்பு - பிரித்தானியா!
[Friday 2013-06-21 17:00]
News Service

பிரச்சினைகள் காணப்படும் விடயங்களில் தீர்க்கமான முன்னேற்றத்தை காண்பதற்கு இலங்கையிடம் வற்புறுத்துவதற்கு தனக்கு வாய்ப்பு கிடைக்குமென பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. 'உயர்ஸ்தானிகரை கேளுங்கள்'என்ற நிகழ்வின்போது பிரித்தானிய அரசாங்கம் ஏன்? இந்த மாநாட்டை பகிஸ்கரிக்கவில்லையென கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பிரத்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் றன்கின், மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் அரசியல் தீர்வு என்ற விடயங்களில் தீர்க்கமான முன்னேற்றத்தை காணுமாறு இலங்கையிடம் வலியுறுத்துவதற்கு பொதுநலவாய உச்சிமாநாடு நல்ல வாய்ப்பாக அமையும் என்றும் அவர் கூறினார்.

  

பொதுநலவாய உச்சிமாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கான தீர்மானம் இரண்டு வருடங்களுக்கு முன்னதாகவே எடுக்கப்பட்டுவிட்டது என்றும் ஜோன் றன்கின் தெரிவித்தார். பொதுநலவாயத்தை மிக முக்கியமான விடயமாக பிரித்தானியா கருதுகின்றது. இதனால் பிரதமர் டேவிட் கமருன் இந்த கூட்டத்துக்கு வருவதாக முன்னரே கூறிவிட்டார். பொதுநலவாயத்தின் விழுமியங்களான ஜனநாயகம், அபிவிருத்தி,மனித உரிமைகள்,நீதி,சட்டத்தின் ஆட்சி என்பவற்றின் மீதான அதன் உறுதிப்பாட்டை இலங்கை வெளிப்படுத்துமென பிரித்தானியா அரசாங்கம் எதிர்;பார்ப்பதாக ஜோன் றன்கின் மேலும் கூறினார்.

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

விக்னேஸ்வரனை இந்தியாவுக்கு அழைத்தது ஏன்? - சிவில் உரிமைகளுக்கான மக்கள் ஒன்றியம் விளக்கம்
[Sunday 2014-10-26 09:00]

ஜனநாயகம், அரசியல், பொருளாதாரம் தொடர்பான தெளிவு, நீதித்துறையில் அனுபவம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டே விக்னேஸ்வரனை தமது நிகழ்வுக்கு அழைத்ததாக, சென்னையில் உள்ள சிவில் உரிமைகளுக்கான பொதுமக்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது. இந்த அமைப்பு ஏற்பாடு செய்துள்ள சொற்பொழிவு நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் பங்கேற்பார் என்று ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.ஒன்றியத்தின் பொதுச்செயலாளர் வி.சுரேஸ் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார்.வரவுசெலவுத் திட்ட வாக்கெடுப்பில் பலப்பரீட்சை! – இருதரப்பும் தீவிர முயற்சி.
[Sunday 2014-10-26 09:00]

வரவுசெலவுத் திட்ட வாக்கெடுப்பின் போது தமது பலத்தை வெளிக்காட்டும் முயற்சியில், ஆளும்கட்சியும், எதிர்க்கட்சிகளும் ஈடுபட்டுள்ளன. ஆளும் கட்சி உறுப்பினர்களை தம் பக்கம் இழுக்க எதிர்க்கட்சிகளும், எதிர்க்கட்சி உறுப்பினர்களை தமது பக்கத்துக்கு இழுக்க ஆளும் கட்சியும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பின் போது ஐ.தேக உறுப்பினர்கள் சிலரை அரச தரப்புக்கு இழுக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.வெளிநாட்டில் பிறந்தவர்களே வடக்கே செல்வதற்கு அனுமதியை பெற வேண்டும்! – பாதுகாப்பு அமைச்சு அறிவிப்பு.
[Sunday 2014-10-26 09:00]

வட மாகாணத்துக்குச் செல்லும் வெளிநாட்டவர்களுக்கு விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடு குறித்து பாதுகாப்பு அமைச்சு புதிய தளர்வு ஒன்றை அறிவித்துள்ளது. இலங்கையில் பிறந்த வெளிநாட்டு கடவுச்சீட்டு உரிமையாளர்களுக்கு இந்த விதிமுறை கடுமையாக நடைமுறைப்படுத்தப்படமாட்டாது என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையில் பிறந்த- வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை கொண்டிருப்போர் தமது உறவுகளை பார்வையிட வடக்கிற்குச் செல்லும் போது அவர்களுக்கு பாதுகாப்பு அமைச்சின் முன்னனுமதி தேவையில்லை என்றும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.எமது வரலாற்றை ஆவணப்படுத்துவதன் மூலமே இனத்தின் இருப்பை தக்கவைக்க முடியும்! – மாகாணசபை உறுப்பினர் கஜதீபன். Top News
[Sunday 2014-10-26 09:00]

எமது இனத்தின் வரலாற்றையும் தனித்தன்மையையும் உரிய முறையில் ஆவணப்படுத்துவதன் மூலமே எமது இனத்தின் இருப்பை தக்கவைக்க முடியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் தெரிவித்துள்ளார். சுன்னாகம் இராமநாதன் கல்லூரியில் நேற்று முன்தினம் பிற்பகல் 1 மணியளவில் அதிபர் திருமதி.கமலராணி கிருஸ்ணபிள்ளை தலைமையில் இடம்பெற்ற தேசிய வாசிப்பு மாத நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.அதுரலிய ரத்ன தேரரின் 19 வது அரசியலமைப்புத் திருத்த யோசனையை ஆதரிக்கத் தயார்! – ரணில் அறிவிப்பு.
[Sunday 2014-10-26 08:00]

ஜனாதிபதி முறைமையை நீக்கி, பிரதமருக்கு அதிகாரங்களை அளிக்கவும், அமைச்சர்கள், பிரதி அமைச்சர்களின் எண்ணிக்கையை குறைக்கவும் வலியுறுத்தும் ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்ன தேரரினால் முன்வைக்கப்பட்டுள்ள 19 வது அரசியலயமைப்புத் திருத்த யோசனையை தாம் ஆதரிப்பதாக, ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரம சிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய அவர், அரசியல் கட்சிகள் இணங்கினால் நாடாளுமன்றில் விவாதம் நடத்தாமலேயே இந்தச் சட்டத்தை நிறைவேற்ற முடியும் என்றும் தெரிவித்தார்.உப்புமடம் பிள்ளையார் மணிக்கூட்டுக் கோபுரத்தைத் தாக்கியது மின்னல்! – ஒருவர் காயம்.
[Sunday 2014-10-26 08:00]

கோண்டாவில் உப்புமடம் பிள்ளையார் கோயில் மணிக்கூட்டுக் கோபுரத்தின் மீது நேற்று மாலை மின்னல் தாக்கி ஒருவர் காயம் அடைந்தார். நேற்றுமாலை பெய்த அடைமழையின் போதே, இந்தச் சம்பவம் இடம்பெற்றது. இதனால் கோபுரத்தில் இருந்து பிள்ளையார் சிலை உடைந்து கீழே வீழ்ந்ததுடன், கோபுரத்திலிருந்த கலசமும் காணாமல் போயுள்ளது. இதனையடுத்து ஆலயத்தின் நிர்வாகத்தினர் அப்பகுதி மக்களின் உதவியுடன் சுற்றுப் புறத்தில் தேடுதல் நடத்திய போதும், கலசத்தை காண முடியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.பாதுகாப்புக்குக்குப் பெருந்தொகை நிதி; நாட்டில் மக்களுக்குப் பாதுகாப்பு இல்லை! – ரவி கருணாநாயக்க குற்றச்சாட்டு.
[Sunday 2014-10-26 08:00]

தேசிய பாதுகாப்புக்காக அரசாங்கம் பெருந்தொகை நிதியை ஒதுக்கியுள்ள போதும், நாட்டில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க விசனம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர், ஜெனீவாவில் இலங்கைத் தூதரகத்தை புனரமைக்கும் வேலையை வழங்கியமை தொடர்பான விடயத்தை அரசாங்கம் குழிதோண்டிப் புதைத்து விட்டது. நாட்டில் யுத்தம் இடம்பெற்ற காலத்தை விட அதிகமாக, யுத்தம் முடிந்து விட்ட தற்போதைய நிலையில் இந்த வரவு - செலவுத்திட்டத்தில் தேசிய பாதுகாப்பிற்காக 35, 800 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.அக்கராயன் குளம், வன்னேரிக்குளத்தில் ஒன்றரை இலட்சம் மீன்குஞ்சுகள்! Top News
[Sunday 2014-10-26 08:00]

கிளிநொச்சி மாவட்டத்தில் நன்னீர் மீன்பிடியை ஊக்குவிக்கும் நோக்கில், வடமாகாண மீன்பிடி அமைச்சினால் அக்கராயன் குளம், வன்னேரிக்குளம் ஆகியவற்றில் நன்னீர் மீன் குஞ்சுகள் விடப்பட்டுள்ளன. நேற்றுமுன்தினம் மேற்படி இரு இடங்களுக்கும் சென்றத மாகாண கடற்றொழில் அமைச்சர் பா.டெனீஸ்வரன், இரு குளங்களிலும் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் மீன் குஞ்சுகளை விட்டார். நிகழ்வில் பெருமளவான மக்கள் கலந்து கொண்டிருந்ததுடன் மக்கள் தங்கள் குறைகள் தொடர்பாகவும் அமைச்சருக்கு சுட்டிக்காட்டியிருந்தனர்.ஐ.நாவின் தலையில் ஐஸ் வைக்கிறார் பீரிஸ்! – திடீரென உதித்த ஞானம்.
[Sunday 2014-10-26 08:00]

ஐக்கிய நாடுகள் அமைப்புடன் ஆக்கபூர்வமான வகையில் இணைந்து செயற்படத் தயார் என்று வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பின் முக்கியத்துவத்தை இலங்கை உணர்ந்து கொண்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்புடன் தொடர்ச்சியாக இணைந்து செயற்பட விரும்புகிறது. ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு பதிலீடான அமைப்பு கிடையாது, அமைப்பின் பணிகளை வேறு எவரினாலும் மேற்கொள்ள முடியாது.டொலர்களைக் கொட்டி நன்மதிப்பைப் பெற முனைகிறது இலங்கை! – பிரித்தானிய நாளிதழ் விமர்சனம்.
[Sunday 2014-10-26 08:00]

இலங்கை அரசாங்கம் நாட்டின் நன்மதிப்பை மேம்படுத்திக் கொள்ளும் நோக்கில் பல மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டு வருவதாக லண்டனில் இருந்து வெளியாகும் தி இன்டிபென்டன்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் இலங்கை தொடர்பில் நடத்தப்பட்டு வரும் விசாரணை குறித்த அறிக்கை விரைவில் வெளியிடப்பட உள்ளது. இந்த நிலையில் சர்வதேச அரங்கில் நாட்டின் நன்மதிப்பை மேம்படுத்தி தக்க வைத்துக் கொள்ள அரசாங்கம் பெருமளவு பணத்தை செலவிட்டு வருகிறது.ஜனாதிபதியின் அழைப்பு பழைய பல்லவி தான்! – பொன்.செல்வராசா எம்.பி
[Saturday 2014-10-25 19:00]

அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஜனாதிபதி மீண்டும் அழைப்பு விடுத்திருப்பது, பாடிய பாட்டையே மீண்டும் பாடிக் கொண்டிருப்பதற்கு ஒப்பானது என்று நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழு மற்றும் அதற்கான அழைப்பு ஆகியன தொடர்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு மிகத் தெளிவாகவே அறிவிக்கப்பட்டு விட்டது.எனது மனைவியையும் ஏமாற்றி விட்டார் ஜனாதிபதி மஹிந்த ! – சுனின் ஹந்துன்நெத்தி குற்றச்சாட்டு.
[Saturday 2014-10-25 19:00]

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சமர்ப்பித்துள்ள வரவு செலவுத் திட்டத்தில் ஆசிரியையான தனது மனைவியும் ஏமாற்றப்பட்டு விட்டதாகத் தெரிவித்துள்ளார் ஜேவிபி நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன் நெத்தி. நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நேற்று பாராளுமன்றத்தில் 2015 ஆம் ஆண்டு நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது. இதில் பல்வேறு நிவாரணங்கள் தொடர்பான அறிவிப்புக்களை அடுக்கிச் சென்றிருந்தார்.அடுத்தமாதம் மோடி - விக்னேஸ்வரன் சந்திப்பு? – இந்திய அதிகாரிகள் முயற்சி.
[Saturday 2014-10-25 19:00]

வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனை இந்திய பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் சந்திப்பதற்கு சாத்தியங்கள் உள்ளதாக, இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.. இந்தச் சந்திப்புக்கான நேரத்தை ஒதுக்கீடு செய்யும் நடவடிக்கைகளில் இந்திய அதிகாரிகள் முனைப்புக்காட்டி வருகின்றனர். இந்திய தன்னார்வ தொண்டு நிறுவனமான 'சிவில் உரிமைகளுக்கான மக்கள் ஒன்றியம்' வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு இந்தியா விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுத்துள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் 9ஆம் திகதி நடைபெறவுள்ள நிகழ்வு ஒன்றில் பங்கேற்குமாறே அவருக்கு குறித்த அமைப்பு அழைப்பு விடுத்திருக்கிறது.காணாமற்போனோரின் உறவுகள் பாப்பரசருக்கு கடிதம்! – இலங்கை வரும் போது சந்திக்குமாறு கோரிக்கை
[Saturday 2014-10-25 19:00]

தமது நிலைமை தொடர்பாக கரிசனை கொள்ளுமாறு காணாமல் போனவர்களின் உறவுகள் பாப்பரசருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். இது தொடர்பாக, வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு முக்கியஸ்தர் ஒருவர் தெரிவிக்கையில், வவுனியா, மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் காணாமல் போனோரின் உறவுகளுடனான சந்திப்பு ஒன்று கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றது. இச் சந்திப்பின் போது காணாமல் போனவர்களின் உறவுகள் 60 பேரின் கையொப்பம் அடங்கிய கடிதம் ஒன்று பாப்பரசருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.மன்னாரில் மீண்டும் இராணுவத்தின் இரவு ரோந்து! - பீதியில் பொதுமக்கள்.
[Saturday 2014-10-25 19:00]

மன்னார் மாவட்டத்தில் திடீரென இராணுவத்தின் ரோந்து நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மத்தியில் பீதியுணர்வு ஏற்பட்டுள்ளது. ஜரோப்பிய ஒன்றியம் புலிகள் மீதான தடையை நீக்கியுள்ள நிலையில் இலங்கையில் புலிகள் மீள அணிதிரள வாய்ப்பிருப்பதாக இராணுவத்தரப்பு அறிவித்துள்ளது. இந்தநிலையில் வடக்கு, கிழக்கு பகுதிகளில் இராணுவப் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படவுள்ளதாகத் தெரியவருகிறது.வட்டமடுவில் காணி அபகரிப்பாளர்களுக்கும், கால்நடை உரிமையாளர்களுக்கும் இடையில் முறுகல்! Top News
[Saturday 2014-10-25 19:00]

அம்பாறை, திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வட்டமடு பிரதேசத்தில், அத்துமீறி விவசாயம் செய்ய முயன்றவர்களுக்கும், அங்கு கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடும் கால்நடை வளர்ப்பாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகலால் இன்று பதற்றநிலை ஏற்பட்டது. இப்பிரதேசத்தில் மகா போகத்துக்கான நெற்செய்கையை மேற்கொள்ளவதற்கென உழவு இயந்திரங்கள், உபகரணங்களுடன் ஒரு தரப்பினர் அங்கு சென்ற போது மற்றுமொரு தரப்பினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.கொழும்பு வந்தார் கமலேஷ் சர்மா!
[Saturday 2014-10-25 19:00]

கொமன்வெல்த் அமைப்பின் செயலாளர் கமலேஷ் சர்மா இன்று கொழும்பு வந்தடைந்தார். அவர், கொமன்வெல்த் அமைப்பின் தற்போதைய தலைவரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் 2013 நவம்பர் மாதம் நடந்த கொமன்வெல்த் மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகள் மற்றும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதில் தற்போது வரை உள்ள முன்னேற்றங்கள் குறித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் யுத்தத்தின் பின்னர் இலங்கையில் மனித உரிமைகள் விடயத்தில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்தும் இவர் ஆராயவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.தேர்தலில் மகிந்தவுக்கு ஆதரவா? – இடதுசாரிகள் முடிவெடுக்கவில்லை.
[Saturday 2014-10-25 19:00]

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பாக இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கவில்லை என்று லங்கா சமசமாஜக் கட்சி மற்றும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி ஆகியன தெரிவித்துள்ளன. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவரான அமைச்சர் திஸ்ஸ வித்தாரண, கட்சியின் மத்திய செயற்குழுவில் கூடிய கலந்துரையாடி தீர்மானம் எடுக்கப்படும். இதுவரை கட்சி எந்த தீர்மானங்களையும் எடுக்கவில்லை எனக் கூறியுள்ளார்.பாப்பரசரின் இலங்கைப் பயணம் குறித்து விரைவில் தீர்மானம்! – கத்தோலிக்கத் திருச்சபை
[Saturday 2014-10-25 19:00]

பாப்பரசரின் இலங்கைப் பயணம் குறித்து விரைவில் தீர்மானிக்கப்படும் என்று கத்தோலிக்க திருச்சபையின் மதகுருமார் தெரிவித்துள்ளனர். பாப்பரசரின் இலங்கை பயணத்தை ஊக்குவிப்பதா அல்லது இலங்கை பயணத்தை ரத்து செய்யுமாறு கோருவதா என்பது குறித்து கத்தோலிக்க மதகுருமார் விரைவில் தீர்மானிக்க உள்ளனர். பொதுவாக எந்தவொரு நாட்டிலும் தேசிய தேர்தல் நடைபெற்றால் அதற்கு முன்னைய மாதத்திலோ அல்லது தேர்தல் நடைபெற்றதன் பின்னரான மாதத்திலோ பாப்பரசர் உத்தியோகபூர்வ பயணங்களை மேற்கொள்ளமாட்டார்.மன்னார் பனங்கட்டிக்கோட்டு கிழக்கில் அரைக்கும் ஆலைக்கு அடிக்கல்! - வட மாகாணசபை அமைக்கிறது. Top News
[Saturday 2014-10-25 19:00]

மன்னார் பனங்கட்டிக்கோட்டு கிழக்கில் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கு அமைக்கப்படவுள்ள அரைக்கும் ஆலைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது. வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து, கிராமிய அபிவிருத்தி மற்றும் வர்த்தக வாணிப அமைச்சர் பா.டெனிஸ்வரனின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் சுமார் 20 இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள அரைக்கும் ஆலைக்கான அடிக்கல்லை வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் வைபவ ரீதியாக நாட்டி வைத்தார்.


NIRO-DANCE-100213
SUGAN-SIVARAJHA 2014
AJRwindows22.05.13
ALLsesons-15-06-14
AIRCOMPLUS2014-02-10-14
Mahesan supramaniyam 031109
RoyaShades-l2011(04-12-11)
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com