Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 24, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
ஆசிரியர்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து பேஸ்புக்கில் தரவேற்றம் செய்த புகைப்பட கலைஞர் கைது!
[Friday, 2012-10-26 20:12:55]
News Service

பாடசாலை அதிபர், இரு ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் இருவரின் புகைப்படங்களுக்கு ஆபாசமான படங்களை பொருத்தி நீச்சல் தடாகத்தில் இருப்பதை போல வடிவமைத்து பேஸ் புக் இணையத்தளத்தில் தரவேற்றம் செய்த புகைப்பட கலைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

  

கொழும்புக்கு அண்மையிலுள்ள ஹோமாகமவை அண்மித்த பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றின் அதிபர், இரு ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் இருவரின் தலைகளுக்கே இவ்வாறு நிர்வாணப் படங்கள் பொருத்தப்பட்டு பேஸ் புக்கில் தரவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

அவ்வாறு தரவேற்றம் செய்த புகைப்பட கலைஞர் ஒருவரை கைது செய்த பொலிஸார் அவரை குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர். பாடசாலை வைபவமொன்றில் பிடிக்கப்பட்ட புகைப்படங்களை பயன்படுத்தியே குறித்த நபர் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த புகைப்பட கலைஞர் குறிப்பிட்ட பாடசாலை மாணவி ஒருவரிடம் தன்னை காதலிக்குமாறு கேட்டமை தொடர்பில் மேலே குறிப்பிட்ட அதிபர், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் அவரை எச்சரித்ததை அடுத்தே புகைப்பட கலைஞர் இவ்வாறு செய்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

13வது திருத்தத்தை மட்டுமன்றி முழு அரசியல் யாப்பையும் மாற்ற வேண்டும் - பொதுபல சேனா!
[Friday, 2013-05-24 13:48:12]

13ஆவது திருத்தத்தையும் மாகாணசபை முறைமையையும் மாற்றி இனங்களுக்கிடையில் நல்லுறவையும் நாட்டில் சமாதானத்தையும் கொண்டுவர முடியாது. இந்நாட்டின் அரசியல் அமைப்பில் வெளிநாடுகளில் அழுத்தங்கள் காணப்படுவதால் முழு அரசியல் யாப்பையும் மாற்றியமைக்க வேண்டும்மென பொதுபலசேனா அமைப்பின் இணைப்பாளர் டிலந்த விதானகே தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,



புகலிடக் கோரிக்கையாளர்கள் இருவருக்கு சட்டவுரைஞர் உதவி!
[Friday, 2013-05-24 13:34:45]

இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவிருந்த 2 தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் பிறென்டன் ஓ கொனர் சட்டவுரைஞர் உதவி வழங்குவதற்கு ஏற்பாடு செய்துள்ளார். இந்த 2 புகலிடக் கோரிக்கையாளர்களும் அகதிகளுக்கு உதவி செய்யும் சட்டவுரைஞர் டேவிட் மான் என்பவருக்கு கிறிஸ்மஸ்தீவிலிருந்து அகதி பாதுகாப்புக்காக விண்ணப்பிக்க உதவி கோரி கடந்த புதன்கிழமை மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியிருந்தனர். அண்மையில் கிறிஸ்மஸ்தீவிலிருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட 31 தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களும் வழமை போல சட்ட ஆலோசனை இல்லாத நிலையில் விசாரிக்கப்பட்டதாக மனித உரிமைகள் சட்டவுரைஞர் டானியல் வெப் கூறியுள்ளார்.



புத்த பிக்கு ஒருவர் வெசாக் தினமான இன்று தீக்குளிப்பு!Top News
[Friday, 2013-05-24 13:29:15]

வெசாக் தினமான இன்று கண்டி புனித தலதா மாளிகைக்கு அருகில் பௌத்த பிக்கு ஒருவர் தனக்கு தானே தீ வைத்துக் கொண்டுள்ளார். இச்சம்பவம் இன்று காலை சுமார் 11 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. மாடுகள் கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த பிக்கு தனக்கு தீ வைத்துக் கொண்டுள்ளார். உடம்பில் பெற்றோல் ஊற்றி தீ வைத்துக்கொண்ட பிக்குவை அருகில் இருந்தவர்கள் பிடித்து தீயை அணைத்து கண்டி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.



ஆட்கடத்தல் நடவடிக்கைகளுடன் தொடர்புடைய இலங்கையர்கள் கைது!
[Friday, 2013-05-24 13:24:03]

சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளுடன் தொடர்புடைய இலங்கையர்கள் டொமினிக்கன் குடியரசில் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட கனேடிய பிரஜையான கருணாநிதி நல்லதம்பி என்பவரே இந்த சட்டவிரோத ஆட்கடத்தல் கும்பலுக்கு தலைமை தாங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கனேடிய கடவுச் சீட்டுத் திணைக்களத்தில் கடவுச் சீட்டுக்களைத் திருடி அவற்றில் மாற்றங்களைச் செய்து வேறும் நாடுகள் மக்கள் சட்டவிரோதமான முறையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். நல்லதம்பி என்பவரே கடவுச் சீட்டுக்களை திருடியதாகத் தெரிவிக்கப்படுகிறது.



விபத்தில் மரணமடைந்த வாழைச்சேனை இந்துக்கல்லூரி ஆசிரியர் ஹேமராஜனின் பூதவுடல் உடலம் நல்லடக்கம் செய்யப்பட்டது. Top News
[Friday, 2013-05-24 12:27:40]

வாழைச்சேனையில் கடந்த புதன்கிழமையன்று இடம்பெற்ற வாகன விபத்தில் மரணமடைந்த வாழைச்சேனை இந்துக்கல்லூரியின் கணிதப் பாட ஆசிரியர் சி.ஹேமராஜனின் பூதவுடல் அடக்கம் செய்வதற்காக பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் என ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் மத்தியில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. மாணவர்கள் கண்ணீர் மல்க ஆசிரியரின் பூதவுடல் நல்அடக்கல் செய்யப்பட்டது.



இலங்கை போர்க்குற்றவாளிகள் சுதந்திர பறவைகளாக உலாவுகிறார்கள்: சர்வதேச மன்னிப்புச் சபை
[Friday, 2013-05-24 10:05:51]

இலங்கையில் போர் முடிவடைந்தாலும் போர்க்குற்ற முறையீடுகள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் ஆகியவை விசாரணைக்குட்படுத்தப்படவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் சுதந்திரப் பறவைகளாக உலாவுகிறார்கள் என லண்டனை தலைமையகமாகக் கொண்டு செயற்படும் சர்வதேச மன்னிப்புச் சபை அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது. கட்டாயத்தின் பேரில் காணாமற்போகச் செய்யப்பட்ட இருபதுக்கு மேற்பட்டோர் குறித்து இலங்கையில் கடந்தஆண்டு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு காணாமற் போகச் செய்யப்பட்டோரில் அரசியல்வாதிகள், வர்த்தகப் பிரமுகர்கள், சந்தேகத்துக்குரிய குற்றவாளிகள் ஆகியோர் அடங்குவர் என்றும் மேற்படி சபை அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. சர்வதேச மன்னிப்புச் சபையால் நேற்று வியாழக்கிழமை விடுக்கப்பட்டுள்ள இந்த அறிக்கை இலங்கையை கடுமையாக விமர்சிக்கிறது.



அன்னபூரணியின் அமெரிக்க பயணத்தின் வைர விழா வல்வையில் கொண்டாடப்பட்டது. Top News
[Friday, 2013-05-24 10:03:50]

இரு நிகழ்வுகளும் வல்வை வரலாற்று ஆவண காப்பகம் Images of Valvai அமைந்த வல்வெட்டித்துறை 'கீதாஞ்சலி" இல்லத்தில் 27 -04 -2013 காலை 10.00மணிக்கு ஆவண காப்பக நிறுவனர் ந.நகுலசிகாமணி அவர்கள் தலைமையில்; இ.குகதாஸ் அவர்களின் இறைவணக்கத் துடன் ஆரம்பமாகியது. சிறப்பு நிகழ்வுகளில் ஒன்றான சீமாட்டி அன்னபூரணியின் அமெரிக்க பயணத்தின் 75ஆவது ஆண்டை நினைவுகூரும் கேக் (Cake) ஐ கப்டன் கலைநேசன் கப்டன் விநாயகமூர்த்தி கப்பல் பொறியியலாளர் கா.றஞ்சனதாஸ் ஆகியோர் வெட்டி சிறப்பித்தனர்.



கொழும்பு துறைமுகத்தில் பாரிய தீ விபத்து
[Friday, 2013-05-24 09:58:24]

கொழும்பு துறைமுகத்தின் (CFS 1) களஞ்சியசாலையில் இன்று அதிகாலை பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் பாரிய சேதசங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது பொலிஸாரும், தீயணைப்புப் படையினரும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதேவேளை இச்சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.



அதிகாரப்பகிர்விற்கு ஆதரவளித்திருந்தால் பல உயிர்களை காப்பாற்றியிருக்க முடியும் - லக்ஸ்மன் கிரியல்ல
[Friday, 2013-05-24 09:48:33]

அதிகாரப் பகிர்விற்கு ஆதரவளித்திருந்தால் யுத்தத்தை தடுத்திருக்க முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். 2001ம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் அதிகாரப் பகிர்வு யோசனைத் திட்டமொன்றை முன்வைத்ததாககத் தெரிவித்துள்ளார். தற்போது அதிகாரப் பகிர்வு குறித்து பேசும் தரப்பினர் அதனை எதிர்த்ததாகக் குறிப்பிட்டுள்ளார். அதிகாரப் பகிர்வு யோசனைத் திட்டத்திற்கு ஆதரவளிக்கப்பட்டிருந்தால் யுத்தத்தினால் உயிரிழந்த பெரும் எண்ணிக்கையிலான உயிர்களை காப்பாற்றியிருக்க முடியும் என தெரிவித்துள்ளார்.



மாகாணசபைகளுக்கு காவல்துறை அதிகாரங்களை வழங்கினால் பாதுகாப்புத் தரப்பினருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் - கோதபாய
[Friday, 2013-05-24 09:39:48]

மாகாணசபைகளுக்கு காவல்துறை அதிகாரங்கள் வழங்கக் கூடாது என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 13ம் திருத்தச் சட்டத்திற்கு அமைவாக மாகாணசபைகளுக்கு காவல்துறை அதிகாரங்களை வழங்கப்படுவதனை ஒரு போதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறு அதிகாரங்களை வழங்குவதனால் பாதுகாப்புத் தரப்பினருக்கு அச்சுறுத்தல் ஏற்படக் கூடுமென தெரிவித்துள்ளார். அரசாங்க அதிகாரி என்ற ரீதியில் நாட்டின் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பில் ஆலோசனை வழங்குவது தமது கடமை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதனை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்பதனை அரசாங்கமே தீர்மானிக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். மாகாணசபைகளுக்கு காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்பட்டால் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது தொடர்பில் பாரிய பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.



நாட்டில் மத முரண்பாடுகள் கிடையாது, அவ்வாறு முரண்பாடுகள் ஏற்பட பௌத்தர்கள் இடமளிக்க மாட்டார்கள் - ஜனாதிபதி
[Friday, 2013-05-24 09:29:08]

இலங்கை பௌத்தர்கள் கடும்போக்காளர்கள் அல்ல என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாட்டின் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க சில அரச சார்பற்ற நிறுவனங்கள் முயற்சிக்கின்றன. பௌத்தர்கள் ஏனைய மதத்தவரை துன்புறுத்துவதாக குற்றம் சுமத்தப்படுகின்றது. ஏனைய மத வழிபாட்டுத் தலங்களை அமைத்துக் கொள்ள பௌத்த விஹாரைகளுக்கு சொந்தமான காணிகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பௌத்தர்கள் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்த எவ்வளவு முயற்சி எடுத்து வருகின்றனர் என்பது வெளிப்படையாகும். நாட்டில் மத முரண்பாடுகள் கிடையாது, அவ்வாறு முரண்பாடுகள் ஏற்பட பௌத்தர்கள் இடமளிக்க மாட்டார்கள் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். கண்டி தலதா மாளிகையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.



யாழில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 26 இந்திய மீனவர்கள் விடுதலை!
[Friday, 2013-05-24 09:23:25]

யாழ்பாணம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 26 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். விடுதலையான மீனவர்கள் இந்திய எல்லைப் பகுதிக்கு சென்றடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் காலை 8 மணியளவில் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் 5ம் திகதி இலங்கை எல்லைப்பகுதிக்குள் சென்று மீன் பிடித்து கொண்டிருந்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.



மன்னாரில் தமிழர்களை வெளியேற்றி 600 சிங்கள குடும்பங்களை குடியேற்ற நடவடிக்கை!
[Friday, 2013-05-24 09:12:46]

மன்னார், எமிழ் நகர் பகுதியில் அத்துமீறி குடியமர்ந்துள்ள காணிகளை விட்டு உடனடியாக வெளியேறுமாறு மன்னார் பிரதேசச் செயலாளர் டி.தயானந்தா உரிய தரப்பினரிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். மன்னார், எமிழ் நகர் கிராம சேவையாளர் பிரிவுக்குற்பட்ட பகுதியில் உள்ள அரச காணியில் அத்துமீறி குடியேறி தற்போது குறித்த காணிகளில் அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக எமிழ் நகர் கிராம சேவையாளரினால் கடந்த மாதம் 17 ஆம் திகதி மன்னார் பிரதேசச் செயலாளரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த பகுதியில் அரச காணிகளில் குடியிருக்கும் மக்கள் அமைத்துள்ள தற்காலிக குடிசைகள் மற்றும் சுற்று வேலிகளை பிரித்து காணியை விட்டு வெளியேறுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



13 ஆவது திருத்தம் குறித்து சர்வஜன வாக்கெடுப்பு நடாத்துமாறு அருண் தம்பிமுத்து ஜனாதிபதியிடம் கோரிக்கை!
[Friday, 2013-05-24 09:03:08]

13 ஆவது திருத்தம் மற்றும் மாகாணசபைகளிடம் இருக்கின்ற நிலம் மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் பற்றிய விவாதங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்ற நிலையில் இந்த பிரச்சினை தொடர்பாக சர்வஜன வாக்கெடுப்பை நடத்தவேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தமிழ் உறுப்பினர் ஒருவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மட்டக்களப்பு அமைப்பாளரும் இலங்கைக்கான தமிழர்கள் அமைப்பை தோற்றுவித்தவருமான அருண் தம்பிமுத்துவே மேற்கண்டவாறு கோரியுள்ளார். மாகாண சபைகள் பற்றி மக்களின் கருத்தை அறிவதற்கே சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்தவேண்டும் என்று தான் கோரியுள்ளதாக அவர் தெரிவித்தார். தமிழர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு மாகாண சபை தவறிவிட்டது என்றும் அவர் கூறினார்.



தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் 5 கட்சிகளும் இணைந்து கலந்துரையாட தீர்மானம்!
[Friday, 2013-05-24 08:42:59]

தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகளும் இணைந்து கலந்துரையாடுவதற்கு நேற்றைய கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத்தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினருக்கும் தமிழர் விடுதலை இயக்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று நடைபெற்ற இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. பம்பலபிட்டி தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை காரியாலயத்தில் இந்த கலந்துரையாடல் சுமார் 2 மணி நேரம் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.



தேசிய பாதுகாப்பு விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபையுடன் இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ள முடியாது - கோத்தபாய
[Friday, 2013-05-24 08:38:19]

தேசிய பாதுகாப்பு விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்புடன் இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ள முடியாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. வடக்கு காணி சுவீகரிப்பு தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பு கேள்வி எழுப்பிபியுள்ள நிலையிலே அரசாங்கம் இவ் அறிவித்தலை விடுத்துள்ளது. குறிப்பாக பலாலி விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகம் ஆகியவற்றை அமைப்பதற்காக 3000 ஏக்கர் காணி சுவீகரிக்கப்பட உள்ளது. எனினும் நாட்டின் தேசியப் பாதுகாப்பு விவகாரத்தில் எந்தத் தரப்புடனும் இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ளப் போவதில்லை என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இராணுவத்தினர் தமிழ் மக்களிடமிருந்து காணிகளை அபகரிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய நாடுகள் அமைப்பில் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



இலங்கையின் உட்கட்டமைப்பு பணிகளுக்கு 580 மில்லியன் டொலர்களை வழங்குகின்றது சீனா!
[Thursday, 2013-05-23 20:51:13]

இலங்கையின் பிரதான உட்கட்டமைப்பு பணிகளுக்கு உதவும் வகையில் சீனா 580 மில்லியன் டொலர்களை வழங்க முன்வந்துள்ளது. கடன் அடிப்படையில் வழங்கப்படும் இந்த நிதியுடன் இலங்கைக்கு சீனா வழங்கும் கடன் தொகை 1.4 பில்லியன் டொலர்களாக உயர்வதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தநிலையில் சீனா, இலங்கைக்கு வழங்கும் இந்த நிதியுதவி இந்திய நலன்களுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.



மத்திய மாகாணத்தில் முதலமைச்சர் உட்பட 4 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு வாபஸ்!
[Thursday, 2013-05-23 20:05:14]

மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க உள்ளிட்ட நால்வருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று வியாழக்கிழமை வாபஸ் பெற்றப்பட்டது. இதனையடுத்து அந்த குற்றச்சாட்டுகளிலிருந்து நால்வரும் விடுதலைச்செய்யப்பட்டனர். கண்டியிலுள்ள பாடசாலையில் பிள்ளையொன்றை சேர்க்குமாறு அந்த பாடசாலையின் அதிபர் மீது செல்வாக்கு பிரயோகித்ததாக அவர்களுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் குற்றஞ்சாட்டப்பட்டது. இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலபிட்டியவிடம் இன்று மனுவொன்றை சமர்ப்பித்தே வழக்கை வாபஸ் பெற்றுக்கொண்டனர்.



சிலாவத்தையில் புதிய நிர்வாகம் - பறிபோனது டக்ளஸின் பதவி!
[Thursday, 2013-05-23 19:43:49]

கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் சிலாவத்தை கிராம அபிவிருத்திச் சங்க உத்தியோகத்தர்கள் தெரிவு நீண்டகால இழுபறியின் பின்னர் நேற்று முன்தினம் முறையாக இடம்பெற்றது. முல்லைத்தீவு மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், கரைதுறைப் பற்று பிரதேச செயலக கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் கரைதுறைப்பற்று கிராம அபிவிருத்திச் சங்கங்கள், மகளிர் அபிவிருத்திச் சங்கங்களின் சமாசத் தலைவர் ஆகியோர் முன்னிலையில் தெரிவு இடம் பெற்றது. இந்தத் தெரிவின்போது சிலாவத்தை கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவராக இருந்து புதிய நிர்வாகத் தெரிவுக்கு முட்டுக்கட்டை போட்டு வந்தார் என மக்கள் குற்றஞ்சாட்டிய திருச்செல்வம் டக்ளஸ் பங்குபற்றவில்லை.



கட்சிக்கு நிதி கிடைக்கப் பெறும் வழிகள் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை!
[Thursday, 2013-05-23 19:38:44]

கட்சி நிதி தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். எந்த வழிகளில் கட்சிக்கு நிதி கிடைக்கப் பெறுகின்றது என்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். யுத்தத்தில் உயிர் நீத்தவர்களை நினைவு கூறும் நோக்கில் அச்சிடப்பட்ட சுவரொட்டிகளை வைத்திருந்தவர்கள் கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். தற்போது கட்சி நிதி மூலங்கள் பற்றி கேள்வி எழுப்பப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட கட்சி உறுப்பினர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்ட போதிலும், நாளாந்த அடிப்படையில் காவல் நிலையத்திற்கு ஆஜராகுமாறு அழைக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.


NIRO-DANCE-100213
TamilsGuid-191012-2013
AJRwindows22.05.13
Ramans2011
Canada Kanthasamy Kovil
Mahesan supramaniyam 031109
INNSYS-20120930
TDE_Computers2011
RoyaShades-l2011(04-12-11)
Suresh-remax-2013-01-01
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com