Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
June 18, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்களான பட்டதாரிகள் பழிவாங்கப்படுகிறார்கள்! - பொன்.செல்வராசா
[Friday, 2012-10-26 09:08:36]
News Service

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்களில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் ஏற்கனவே உள்வாங்கப்பட்ட பட்டதாரி பயிலுனர்களுக்குப் பதிலாக சில பிரதேச செயலகங்களில் மாகாண சபைத் தேர்தலின் பின் புதியவர்கள் உள்வாங்கப்பட்டமை அரசியல் ரீதியான பழிவாங்கலும் பாராபட்சமும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா குற்றம் சாட்டியுள்ளார்.

  

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் அல்லது அக்கட்சியுடன் தொடர்புடையவர்கள் என பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு தலைவர்கள் நான்கு பேரில் இருவரினால் அடையாளம் காணப்பட்ட பட்டதாரி பயிலுனர்களே அந்த பழிவாங்களுக்கும் பாராபட்சத்திற்கும் உள்ளானதாக சுட்டிக்காட்டியுள்ள அவர் இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்.

"நாடெங்கிலும் வேலையற்ற பட்டதாரிகள் பட்டதாரி பயிலுனர்களாக பத்திரிகைகளில் விண்ணப்பம் கோரப்பட்டு விண்ணப்பித்து நான்கு மாதங்களுக்கு முன்பு இணைந்து கொண்டார்கள். அதன் பின்னர் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் பிரதேச செயலகங்களில் அந்த பட்டதாரிகளில் ஒரு பகுதியினர் உள்வாங்கப்பட்டார்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரை நேர்முகப் பரீட்சை நடைபெற்று 426 பேர் தெரிவு செய்யப்பட்டிருந்தார்கள். இவர்கள் கடந்த நான்கு மாதங்களாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ்வரும் வேலைகளில் தான் பயிலுனர்களாக ஈடுபட்டுவந்தார்கள்.

அண்மையில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர்கள் எந்த பிரதேச செயலகத்தில் பணியாற்றுகிறார்களே அந்த பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் அங்கீகரிக்க வேண்டும் என்ற முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்கனவே பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் உள்வாங்கப்பட்ட பட்டதாரி பயிலுனர்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்களின் தலைவர்கள் அரசியல்வாதிகள் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதியமைச்சர்களான எம்.எல்.ஏம்.ஹிஸ்புல்லாஹ் பசீர் சேகுதாவூத் மற்றும் விநாயகமூர்த்தி முரளிதரன் மாகாண சபை உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகியோர் இந்த தலைமை பதவியை வகிக்கின்றார்கள்.

இவர்களில் பிரதியமைச்சர்; எம்.எல்.ஏம்.ஹிஸ்புள்ளாஹ் மாகாண சபை உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகிய இருவரும் தான் ஏற்கனவே பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் உள்வாங்கப்பட்ட பட்டதாரி பயிலுனர்களில் தங்களுக்குப் ஏற்புடையதாக அல்லாத பயிலுனர்களை நீக்கிவிட்டு தங்களுக்கு ஏற்புடையவர்களை உள்வாங்கியுள்ளார்கள்.

இவர்களுடைய சிபாரிசின் பேரில் அண்மையில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் உள்வாங்கப்பட்ட பட்டதாரி பயிலுனர்களுக்கு புதிதாக நியமனம் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் உள்வாங்கப்பட்டு தற்போது பறக்கணிக்கப்பட்டுள்ள பயிலுனர்களுக்கும் நியமனக் கடிதங்கள் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்தன.

ஏனைய இரு பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவர்களான பிரதியமைச்சர் பசீர் சேகுதாவூத் மற்றும் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோர் தனது பிரதேச செயலகங்களில் ஏற்கனவே நியமிக்கப்பட்டவர்களை எவ்வித மாற்றங்களுமின்றி நியமித்துள்ளார்கள்.

இந்நிலையில் அதிகாரிகளினால் நேர்முகப்பரீட்சையில் தெரிவுசெய்யபட்ட நியமனங்களில் அரசியல்வாதிகள் மாற்றம் செய்திருப்பது அரசியல் ரீதியான பழிவாங்கள் மற்றும் பாராபட்சம் மட்டுமல்ல தந்த பட்டதாரி பயிலுனர்களின் அடிப்படை உரிமையும் மீறப்பட்டுள்ளதாகவே கருதவேண்டியுள்ளது.

குறிப்பாக கூறப்போனால் மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னதான பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் 426 பேர் உள்வாங்கப்பட்டிருந்தார்கள் மாகாண சபைத் தேர்தலில் பின்பு தான் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்களின் தலைவர்கள் சிபாரிசு செய்ய வேண்டும் என்ற தீர்மானமெடுக்கப்பட்டு இந்த மாற்றம் இடம்பெற்றுள்ளது.

பாதிப்புக்குள்ளான பட்டதாரி பயிலுனர்கள் தமது புறக்கணிப்பை உரிய பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவர்களிடம் சுட்டிக்காட்டிய போது அவர்களே கூறியிருக்கிறார்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களித்ததற்காகத்தான் இப்படி செய்திருக்கிறோம் என்று கூறியிருக்கிறார்கள்.

இந்நிலையில் மாகாண சபைத் தேர்தலில் பின்னரான அரசியல் பழிவாங்கலாகவே இதனை கருத வேண்டியுள்ளது" என்றும் அவர் மேலும் கூறினார்.

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

இந்தியாவின் சிறப்புத்தூதரை நிராகரித்த இலங்கை..!
[Tuesday, 2013-06-18 09:47:31]

இலங்கை விவகாரங்களைக் கையாள்வதற்கு இந்தியா சிறப்புத் தூதுவர் ஒருவரைக் களமிறக்கும் பட்சத்தில் அத்தகையதொரு நியமனத்தை உத்தியோகபூர்வமாக ஏற்காதிருக்கக் கொழும்பு தீர்மானித்துள்ளது என நம்பகரமாகத் தெரியவருகின்றது. இது விடயத்தில் தனது நிலைப்பாட்டை மஹிந்த அரசு டில்லி நிர்வாகத்துக்கு இராஜதந்திர மட்டத்தில் அறியப்படுத்தியுள்ளது என்றும், டில்லியின் இவ்வாறானதொரு இராஜதந்திர நகர்வு குறித்து கொழும்பு அதிருப்தி வெளியிட்டுள்ளது எனவும் அறியமுடிகின்றது.



13ஆவது திருத்தச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வருவதா இல்லையா என்பதை தீர்மானிப்பது ஜெனிவாவோ ஜெயலலிதாவோ அல்ல! - அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல
[Tuesday, 2013-06-18 09:46:53]

13ஆவது திருத்தச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வருவதா இல்லையா என்பதை தீர்மானிப்பது ஜெனிவாவோ ஜெயலலிதாவோ அல்லது வை.கோ.வோ அல்ல இந்த நாட்டு மக்களே அதனைத்தீர்மானிக்க வேண்டும். ஏனென்றால் இந்த நாட்டின் இறைமையைக் கட்டிக் காக்கும் பாரிய பொறுப்பு அவர்களையே சார்ந்ததாகும். இந்த நாடு எக்காரணம் கொண்டும் இந்தியாவின் ஒரு பிராந்தியமாகவோ அல்லது அமெரிக்காவின் ஒரு பிராந்தியமாகவோ மாறுவதை நாம் எக்காரணம் கொண்டும் அனுமதிக்கத் தயாரில்லை என்று ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.



லண்டனில் ஆர்ப்பாட்டம் நடாத்திய ஈழத்தமிழர்கள் மீது சிங்களக் குண்டர்கள் தாக்குதல்! Top News
[Tuesday, 2013-06-18 09:29:40]

சிறிலங்காவில் நடக்கவுள்ள கொமன்வெல்த் உச்சிமாநாட்டைப் புறக்கணிக்கக் கோரி, லண்டன் ஓவல் துடுப்பாட்ட மைதானம் அருகே போராட்டம் நடத்திய ஈழத்தமிழர்களை, சிறிலங்கா அரச ஆதரவுக் குண்டர்கள் தாக்கியுள்ளனர். லண்டன் ஓவல் மைதானத்தில், சிறிலங்கா - அவுஸ்ரேலிய அணிகளுக்கு இடையில் ஐசிசி கோப்பைக்கான போட்டியின் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இந்த போட்டி நடைபெற்ற வேளை சிறிலங்காவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் போராட்டம் நடத்தப்பட்டது. இதன்போது சிங்கக் கொடியேந்திய சிறிலங்கா அரசு ஆதரவுக் குண்டர்கள், ஈழத்தமிழர்கள் மீது பாய்ந்து தாக்குதல் நடத்தினர். தாக்குதலில் பெண்கள்,சிறுவர்களும் தாக்கப்பட்டனர். பிரித்தானிய பொலிஸார் சிறிலங்கா அரச ஆதரவாளர்களைத் தடுக்க முயன்றபோது அவர்களுடனும் மோதினர். இதையடுத்து வன்முறையில் இறங்கிய சிங்கக்கொடியேந்திய ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பிரித்தானிய பொலிஸார் தடியடி நடத்தி கலைத்தனர்.



இலங்கை - இந்திய ஒப்பந்தம் காலாவதியாகி பல வருடங்களாகிவிட்டது - சம்பிக்க
[Tuesday, 2013-06-18 09:16:04]

இலங்கை - இந்திய ஒப்பந்தம் காலாவதியாகி பல வருடங்களாகி விட்டது. இனி அது குறித்து எவ்விதமான பேச்சுக்கும் இடமில்லை. தொட்டதற்கெல்லாம் இந்தியாவிடம் ஓடும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கொழும்பில் தான் வாழ வேண்டும் என்பதை மறந்து விடக்கூடாது. இது அமைச்சர் ரவூப் ஹக்கீம் குழுவினருக்கும் பொருந்தும் என்று ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சம்பிக ரணவக்க தெரிவித்தார். சம்பந்தன் குழுவினருக்கும் பிரிவினைவாத கொள்கைகளைக் கொண்ட 13 ஆவது திருத்தத்தை ஆதரிப்பவர்களுக்கும் இரண்டு வழிகள் மாத்திரமே காணப்படுகின்றன. ஒன்று முள்ளிவாய்க்கால் அழிவுப் பாதை, இரண்டாவது ஏ-9 சமாதான பாதை. இதில் எதனை அவர்கள் தெரிவு செய்தாலும் எமக்கு பிரச்சினையில்லை வடக்கை துண்டாட ஒருபோதும் இடமளிக்க போவதில்லை. தமிழீழக் கனவை இல்லாதொழிக்க அனைத்து வகையிலும் போராடுவோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.



பல்கலைக்கழக கட்டத்தில் இருந்து குதித்த மாணவி வைத்தியசாலையில் உயிரிழந்தார்.
[Tuesday, 2013-06-18 09:12:42]

கொழும்பு பல்கலைக்கழக கட்டடத்திலிருந்து கீழே குதித்து காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி உயிரிழந்துள்ளார். இவர் இன்று (18) அதிகாலை 2.30 மணியளவில் உயிரிழந்ததாக கொழும்பு தேசிய வைத்தியசாலைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.



வெள்ளை வானில் இளைஞன் கடத்தப்பட்டார் - யாழில் சம்பவம்!
[Tuesday, 2013-06-18 09:06:46]

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் வெள்ளை வானில் வந்தோரினால் நேற்று திங்கட்கிழமை மாலை கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சண்டிலிப்பாய் சங்குவேலி பிள்ளையார் கோவிலடியில் வைத்தே குறித்த இளைஞன் நேற்று மாலை 5.10 மணியளவில் கடத்தப்பட்டுள்ளார். ஆணைக்கோட்டை சோமசுந்தரம் வீதியைச்சேர்ந்த கந்தையா ஜெயசுதன்( வயது 28) என்ற இளைஞன் கடத்தப்பட்டுள்ளதாக அவரது உறவினர்கள் மானிப்பாய் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.



புலிகளின் நாடாளுமன்றக் குழுவே தமிழ்த் தேசிய கூட்டமைப்பு - விமல் குற்றச்சாட்டு!
[Tuesday, 2013-06-18 08:53:07]

"இந்திய அரசாங்கமோ அல்லது வேறெந்த நாடுகளின் அழுத்தத்தாலோ அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்ப்படுத்த முடியாது. அதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்" என வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார். "தமிழீழ விடுதலைப் புலிகளின் நாடாளுமன்றக் குழு, தமிழ்த் தேசிய கூட்டமைப்பாகும். அக்குழுவின் தேவைக்கேற்பவே இந்தியா செயற்படுகிறது. ஜே.ஆர்.ஜயவர்தனா கைச்சாத்திட்ட இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை முதலில் இந்தியாவே மீறியது. இலங்கை தரப்பினர் ஒப்பந்தத்தை எப்போதும் பாதுகாத்தனர்" என்றும் அவர் சுட்டிக்காட்டினார். திருகோணமலை நகரசபையில் நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற வடமாகாணசபை தேர்தல் தொடர்பாக மக்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.



முஸ்லிம்களுக்கு அநீதி நடக்க அரசு ஒருபோதும் அனுமதிக்காது - பிரதியமைச்சர் அப்துல் காதர்!
[Monday, 2013-06-17 21:24:25]

முஸ்லிம்களுக்கு அநீதி நடப்பதற்கு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது என்று சுற்றாடல்துறை பிரதியமைச்சர் அப்துல் காதர் குறிப்பிட்டார். இன்று திங்கட்கிழமை, கம்பளை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் 80ஆவது ஆண்டு நிறைவு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஆங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதியமைச்சர், 'அரசாங்கம் முஸ்லிம்களின் விடயத்தில் அக்கறையுடன் செயற்படுகின்றது. உண்மைக்குப் புறம்பாக சிலர் வதந்திகளைப் பரப்பி வருகின்றனர். இதில் எதுவித உண்மையும் இல்லை. முஸ்லிம்கள் அரசாங்கத்தை நம்ப வேண்டும்' என்றும் குறிப்பிட்டார்.



13 பேர் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்கம்!
[Monday, 2013-06-17 20:55:51]

இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து 13 பேர் நீக்கப்பட்டுள்ளனர். இன்று இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.



ஈழத்தமிழ் பற்றாளன் மணிவண்ணனின் இழப்பு தமிழருக்கு இவ்வேளையில் பேரிழப்பாகும். - சி. பாஸ்க்கரா
[Monday, 2013-06-17 20:24:35]

தனது வாழ்க்கையில் வாழ்ந்தபோதும் ஈழத்தமிழ் தமிழ் பற்றாளனாக வாழ்ந்த நடிகரும் இயக்குனருமான மணிவண்ணன் தனது இறப்பின் பின் தனது உடலை ஈழத்தமிழ் பற்றாளன் சீமானிடம் கொடுக்கும்படி கூறி இறந்த பின்னும் ஈழத்தமிழ் பற்றாளன் எனக் காட்டிய மாமனிதர் என தனது இரங்கல் செய்தியில் ஜனநாயக மக்கள் முன்னணி ஊடகச் செயலாளரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான சி. பாஸ்க்கரா தெரிவித்தார்.



பாடசாலை மாணவிக்கு அங்க சேட்டை புரிந்த மாணவர்கள் கைது - யாழில் சம்பவம்!
[Monday, 2013-06-17 19:32:04]

யாழில் பாடசாலை மாணவிக்கு அங்க சேட்டை விட்ட இரு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழில் பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவி ஒருவருக்கு அதே பாடசாலையைச் சேர்ந்த மாணவர்கள் இருவர் பாலியல் ரீதியில் தொடுகை செய்துள்ளதாக குறித்த மாணவியின் பெற்றோர் செய்த முறைப்பாட்டை அடுத்து இரு மாணவர்கள் விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குறித்த மாணவி தன்னை தொடர்ச்சியாக இந்த இரு மாணவர்கள் தன்னிடம் பகிடிவதை செய்வதாகவும் தான் பொறுமையாக சென்று வருவதாவும் தன்னால் பொறுக்க முடியாத நிலையிலேயே தனது பெற்றோரிடம் தனக்கு நடந்த சில சம்பவங்களை கூறியதாக அந்த மாணவி பாடசாலை நிர்வாகத்திடம் கூறினார்.



தமிழ் மக்களே!... தமிழீழம் அழிந்துவிடவில்லை தற்காலிக தோல்விதான் - கவிப்பேரரசு வைரமுத்து!Top News
[Monday, 2013-06-17 19:26:02]

தமிழ் மக்களே! தமிழீழம் அழிந்து போய் விட்டது என்று அஞ்ச வேண்டாம். தற்காலிக தோல்வி தான். தர்மம் வெல்லும், தமிழ் வெல்லும் என்று கவிப் பேரரசு வைரமுத்து தெரிவித்துள்ளார். கவிப் பேரரசு வைரமுத்து அவர்கள் படைத்த "மூன்றாம் உலகப் போர்" நூல் அறிமுக விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை அன்று சுவிசில் நடைபெற்ற போது கவிப் பேரரசு மேற்கண்டவாறு தெரிவித்தார். தமிழ் என்று செத்தது. தமிழ் என்றும் சாகாது. உலகத் தமிழர்கள் இருக்கும் வரை என்றும் வாழும் தமிழ். உலகத்தில் உள்ள 10 மொழிகள் என்றும் அழியாது. அதில் ஒன்று தமிழ் மொழி. தெரிந்து கொள்ளுங்கள்.



ஆசிரியையை முழங்காலிட வைத்த மாகாணசபை உறுப்பினருக்கு எதிராக மேலதிக ஒழுக்காற்று நடவடிக்கை - மைத்திரிபால
[Monday, 2013-06-17 19:13:04]

ஆசிரியையை விளையாட்டு மைதானத்தில் முழங்காலில் நிறுத்தி வைத்தமை வெறுக்கத்தக்க செயல் என இலங்கை சுதந்திரக் கட்சியின் செயலாளரும் சுகாதார அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி, மாகாண சபை உறுப்பினர் செய்தது கடுமையான குற்றம் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். குறித்த உறுப்பினர் தொடர்பில் இலங்கை சுதந்திரக் கட்சி விசேட தீர்மானம் மேற்கொண்டுள்ளது. இதன்படி வட மேல் மாகாண சபை உறுப்பினர் ஆனந்த சரத்குமாரவுக்கு எதிராக மேலதிக ஒழுக்காற்று ஒழுக்காற்று களை மேற்கொள்ள அமைச்சரின் கையெழுத்துடன் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.



அரசாங்கம் குண்டர்களின் பயிற்சி நிலையமாக மாறியுள்ளது - ஐ.தே.க குற்றச்சாட்டு!
[Monday, 2013-06-17 18:58:41]

அரசாங்கம் குண்டர்களின் பயிற்சி நிலையமாக மாறியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பேச்சாளர் கயந்த கருணாதிலக்க குற்றஞ்சாட்டியுள்ளார். நவகத்தேகம, நவோதைய பாடசாலையின் ஆசிரியை ஒருவரை முழந்தாளிடவைத்த வடமேல் மாகாணசபை உறுப்பினர் சரத்குமாரவின் செயலை கண்டித்தே அவர் இவ்வாறு தெரிவித்தார்.



தமிழ்த் தேசத்தின் விடிவுக்காய் அற்பணிப்புடன் உழைத்த உயர்ந்த உன்னதமான மனிதர் இயக்குனர் மணிவண்ணன்.
[Monday, 2013-06-17 18:45:14]

தமிழ்த் இனப் பற்றாளரும் இயக்குனருமான பெருமதிப்பிற்குரிய மணிவண்ணன் அவர்கள் 15-06-2013 அன்று எம்மைவிட்டு மறைந்துவிட்டார் என்ற செய்திகேட்டு அதிர்ச்சியும் ஆறாத் துயரமும் அடைகின்றோம். எமது மக்களது விடிவுக்காக பல தசாப்தங்களாக ஓய்வின்றி உழைத்த அந்த புனிதமான மனிதர் இன்று எம்மோடு இல்லை என்ற செய்திகேட்டு ஒட்டுமொத்த உலகத் தமிழினமும் துயரத்தில் மூழ்கியுள்ளது.



இந்திய வீட்டுத்திட்டத்தினூடாக கிழக்கில் சிங்கள குடியேற்றம் - கூட்டமைப்பு குற்றச்சாட்டு!
[Monday, 2013-06-17 18:32:56]

"இந்திய வீட்டுத்திட்டத்தினூடாக கிழக்கில் திட்டமிட்ட குடியேற்றத்தை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அறிகின்றோம். இவ்வாறானதொரு நடவடிக்கைக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஒருபோதும் இடமளிக்காது" என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா தெரிவித்தார். மட்டக்களப்பில் நடைபெற்றுவரும் பிரச்சினைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.யோகேஸ்வரனின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், "செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் இந்திய அரசின் உதவியுடன் வீட்டுத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த வீட்டுத் திட்டம் தொடர்பில் இந்திய அரசுடனும் அரச அதிகாரிகளுடனும் நாம் பலமுறை பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளோம்.



சிங்கள பௌத்த மக்களின் குடும்பக் கட்டுப்பாட்டினால் பிக்குமார்களின் தொகை குறைந்துள்ளது - கெஹெலிய
[Monday, 2013-06-17 17:44:46]

"சிங்கள பௌத்த மக்கள் மத்தியில் நிலவுகின்ற குடும்ப கட்டுப்பாடுக் காரணமாக இலங்கையில் பிக்குமார்களின் தொகை குறைவடைந்துள்ளது. இலங்கையில், 20,000 - 25,000 க்கும் இடைப்பட்ட பிக்குமார்களே உள்ளனர்" என்று ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். கண்டி, கொனகலகல விஹாரையில் நடைபெற்ற சமய நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.



இந்து கோயில்கள் உடைக்கப்பட்டமையை கண்டித்து மட்டக்களப்பில் போராட்டம்
[Monday, 2013-06-17 17:14:29]

மட்டக்களப்பில் இந்து கோயில்கள் உடைக்கப்பட்டமையை கண்டித்து விஷ்வ ஹிந்து பரிஷித் அமைப்பினால் மட்டக்களப்பில் இந்து கோயில்களை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று நடத்தப்பட்டது. மட்டக்களப்பு அரசடியிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு பீடத்திற்கு முன்பாக இந்து கோயில்களை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வு நிகழ்வு இடம்பெற்றது. விஷ்வ ஹிந்து பரிஷித் அமைப்பின் மட்டக்களப்பு இணைப்பாளர் எஸ்.எஸ்.சுதர்சனன் தலைமையில் இடம்பெற்ற இப்பேரணியில்; மட்டக்களப்பு இந்து அமைப்புகளின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர். இதற்கு வருகை தந்திருந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலார் பிரசாந்தனிடம், ஜனாதிபதி ஆலோசகரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கான மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது. பின்னர் அரசாங்க அதிபருக்கான மகஜர் மேலதிக அரசாங்க அதிபரிடம் வழங்கப்பட்டது.



வெளிநாட்டு தூதுவர்களுக்கு 13வது திருத்தம் தொடர்பில் விளக்கமளிக்க அரசு தீர்மானம்!
[Monday, 2013-06-17 16:26:49]

13வது திருத்தச் சட்டத்தில் மேற்கொள்ளவுள்ள மாற்றங்கள் குறித்து வெளிநாட்டு தூதுவர்களுக்கு விளக்கமளிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வெளிவிவகார அமைச்சின் ஊடாக இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. 13வது திருத்தச் சட்டம் தற்போது அதிகம் பேசப்படுகின்ற ஒரு விடயமாக காணப்படுகின்றது. குறிப்பாக வடமாகாண தேர்தலை 13வது திருத்தச் சட்டத்தின் கீழ் நடத்துவதா ? இல்லையா ? என்பது குறித்து, எதிர்க் கட்சிகளில் மாத்திரமன்றி, அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளிடையேயும் தற்போது நெருக்கடிகள் உருவாகியுள்ளன.



பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுகின்றார் ஜனாதிபதி - மேல் மாகாணசபை உறுப்பினர்!
[Monday, 2013-06-17 16:22:22]

வட மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதியின் வெளிப்பாடு பிள்ளையைக் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் செயற்பாட்டுக்கு ஒத்ததாகவுள்ளதென மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். ராஜகிரியவில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,


Suresh-remax-2013-01-01
Mahesan supramaniyam 031109
TDE_Computers2011
TamilsGuid-191012-2013
NIRO-DANCE-100213
AJRwindows22.05.13
INNSYS-20120930
Ramans2011
RoyaShades-l2011(04-12-11)
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com