Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
June 20, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
புரூஸ்லி வீட்டை நினைவு இல்லமாக மாற்றும் திட்டம் தோல்வி - 23 மில்லியன் டொலருக்கு ஏலம்!
[Thursday, 2012-10-25 07:23:45]
News Service

குங்ஃபு கலை ஜாம்பவானான புரூஸ்லி கடைசியாக ஹாங்காங்கில் வசித்த வீட்டை நினைவு இல்லமாக மாற்றும் திட்டம் தோல்வியடைந்தது. இதை 23 மில்லியன் டொலருக்கு விற்கப் போவதாக இதன் தற்போதைய உரிமையாளர் அறிவித்துள்ளார்.

  

ஆங்கிலப் படங்களே அதிகம் கோலோச்சி வந்த காலத்தில், சீனாவிலிருந்து உலகமே திரும்பி பார்க்கும் வகையில் திரைப்படங்களை எடுத்த குங்ஃபு கலைஞர் புரூஸ்லி. இவர் 1971ம் ஆண்டில் பிஸ்ட் ஆஃப் பியூரி, 1973ல் எண்டர் தி டிராகன் ஆகிய படங்களை எடுத்து, உலக ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார். 32 வயதில் மருந்து எதிர்விளைவால் மூளையில் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

அமெரிக்காவில் வசித்த சீன பெற்றோருக்கு பிறந்தவர் புரூஸ்லி. அவர்களது பூர்வீகம் ஹாங்காங். கடைசியாக, புரூஸ்லி அங்கு வசித்த வீடு, தற்போது யு பாங்லின் என்பவரிடம் உள்ளது. இதை ஒருவர் வாடகைக்கு எடுத்து விடுதி நடத்தி வருகிறார். அந்த வீட்டை புரூஸ்லி நினைவு இல்லமாக மாற்றுவதற்காக பாங்லினுடன் ஹாங்காங் அரசு பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. அங்கு புதிதாக 3 மாடிகளை அமைத்து, சினிமா தியேட் டர்,நூலகம், தற்காப்புக் கலை பயிற்சி மையம் ஆகியவை அமைப்பது உள்பட பல நிபந்தனைகளை பாங்லின் விதித்தார்.

இதில் அரசுக்கும், அவருக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்படவில்லை. பேச்சுவார் த்தை தோல்வி அடைந்ததாகக் கூறிய அரசு, அருங்காட்சியகம் அமைக்கும் திட்டத்தை ஒத்தி வைத்தது. இந்நிலையில், 90 வயதாகும் யு பாங்லின், ஒரு சீன செய்தித் தாளுக்கு அளித்த பேட்டியில், இந்த கட்டிடத்தை அருங்காட்சியகம் ஆக்கும் திட்டத்துக்கு அரசு ஒத்துழைப்பு தரவில்லை. விடுதி நடத்துபவர்கள் 2 ஆண்டுகளாக வாடகை தரவில்லை. இதனால், வீட்டை 23 மில்லியன் டொலருக்கு விற்றுவிட முடிவு செய்துள்ளேன் என்று கூறியுள்ளார்.

இதனால், புரூஸ்லியின் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்நிலையில், ஹாங்காங் அருங்காட்சியகத்தில் புரூஸ்லிக்கு தனி அரங்கு அமைத்து கண்காட்சி அமைக்கப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

21 வயதில் 11 பிள்ளைகளுக்குத் தாயான பாலஸ்தீனப் பெண்!
[Thursday, 2013-06-20 17:51:02]

பாலஸ்தீனத்தில் உள்ள காசா பகுதியை சேர்ந்தவர் ரவுக் அல்ப்பதாஸ் (வயது 25). இவர் 7 ஆண்டுகளுக்கு முன்பு 14 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவரது மனைவிக்கு தற்போது 21 வயது ஆகிறது. இந்த 7 ஆண்டில் அவரது மனைவி 11 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். அவருக்கு 1 தடவை 4 குழந்தைகள் பிறந்தன. இன்னொரு தடவை 3 குழந்தைகள் பிறந்தன. பின்னர் அடுத்தடுத்து 2 இரட்டை குழந்தைகள் பிறந்தன. இதனால் அவர் 21 வயதிலேயே 11 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.



சூழலை மாசுபடுத்தினால் மரணதண்டனை - சீனாவில் புதிய சட்டம்!
[Thursday, 2013-06-20 17:46:46]

உலகிலேயே சுற்றுசூழலில் அதிக மாசு படிந்தவையாக சீனாவின் பீஜிங், ஷங்காய் உள்ளிட்ட நகரங்கள் முதலிடம் வகிக்கின்றன. இந்த சுற்றுச்சூழல் மாசினால் ஏராளமான சீன மக்கள் பல்வேறு நோய்களுக்கு இலக்காகி அவதிப்படுகின்றனர். மக்களின் ஆரோக்கியத்தை அழித்து வரும் மாசு பெருக்கத்தை பற்றி அரசு கவலைப்படுவதே இல்லை என அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில், அதிக மாசு ஏற்படுத்தும் வகையில் தொழிற்சாலைகளை இயக்கும் நபர்களுக்கு அதிகபட்சமாக மரணதண்டனை அளிக்கும் அதிகாரத்தை நீதிபதிகளுக்கு சீன அரசு நேற்று வழங்கியுள்ளது.



அமெரிக்காவுடன் கைதிகள் பரிமாற்றத்துக்குத் தயார் - தலிபான் அறிவிப்பு!
[Thursday, 2013-06-20 17:37:28]

அரசியல் பாதைக்கு திரும்ப முடிவு செய்துள்ள தலிபான் இயக்கம், கத்தாரில் அதன் அரசியல் அலுவலகத்தைத் தொடங்கியிருக்கிறது. ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் இயக்கத்துடன் அமைதி பேச்சுவார்தை நடத்த அமெரிக்கா தயாராகி வருகிறது. இந்நிலையில், கைதிகள் பரிமாற்றத்துக்கு முன்வந்துள்ள தலிபான் இயக்கம், 2009-ம் ஆண்டு தாங்கள் கைது செய்த அமெரிக்க ராணுவ வீரரை ஒப்படைக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது. இதற்குப் பதிலாக குவாண்டனாமோ சிறையில் உள்ள தங்கள் இயக்கத்தின் 5 மூத்த தலைவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது.



விண்வெளியில் இருந்து பாடம் நடத்தினார் சீன வீராங்கனை!
[Thursday, 2013-06-20 17:29:23]

சீனா கடந்த 11-ம் தேதி, ஷென்சு- 10 என்ற விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. அதில் இரண்டு விண்வெளி வீரர்களும், ஒரு வீராங்கனையும் சென்றுள்ளனர். இவர்கள் அங்கு 15 நாட்கள் தங்கி ஆய்வுப்பணிகள் மேற்கொள்கிறார்கள். அதில் சென்றுள்ள வாங் யாபிங் என்ற சீன விண்வெளி வீராங்கனை ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு அங்கிருந்தபடி இயற்பியல் வகுப்புகள் எடுப்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.



தமிழ் நாடு, திரு நெல்வேலி தமிழர் அமெரிக்காவின் உயர் நீதிமன்ற நீதியரசராக பதவி ஏற்பு:
[Thursday, 2013-06-20 11:07:20]

தமிழ் நாடு, திரு நெல்வேலி இனை பூர்விகமாக கொண்டவரும் சண்டிகாரை பிறப்பிடமாக கொண்டவருமான சிறிகாந்த்பத்மனாபன் சிறினிவாசன் அமெரிக்க உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றுள்ளார். அமெரிக்காவில் உச்ச நீதிமன்றத்துக்கு அடுத்தபடியாக, உயர் அதிகாரங்களை கொண்ட நீதிமன்றமாக இருப்பது வாஷிங்டன் டிசி மேல்முறையீட்டு உயர் நீதிமன்றமாகும்.



குண்டுப் பயணிகளுக்காக பெரிய இருக்கைகளை அறிமுகம் செய்கிறது சமோ எயர் நிறுவனம்!
[Thursday, 2013-06-20 07:39:58]

நியூசிலாந்துக்கு அருகில் இருக்கும் சமோ என்ற சிறிய தீவு நாட்டில் 130 கிலோ எடைக்கு மேல் உள்ளவர்கள் பயணிக்கும் போது அவர்களின் வசதிக்காக பெரிய இருக்கைகளை அறிமுகப்படுத்துகிறது. இரண்டு அல்லது மூன்று பேர் அமரக்கூடிய ஒரு இருக்கை எப்படி இருக்குமோ அவ்வகையில் இந்த விமான இருக்கைகள் இருக்கும் என சமோ ஏர் விமான சேவை நிறுவனம் கூறியுள்ளது. உடல் பருமன் காரணமாக பெரிய இருக்கைகளை பதிவு செய்துள்ளவர்கள் விமானத்தில் ஏறவும் அதிலிருந்து இறங்கவும் உதவி செய்வதற்காக தரையிலிருந்து ஒரு சாய்வுதளப் பாதை அமைக்கப்படும் எனவும் அந்த விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.



சோமாலியாவில் ஐ.நா அலுவலகம் மீது தற்கொலைப்படையினர் தாக்குதல் - 20 பேர் பலி!
[Thursday, 2013-06-20 07:29:38]

சோமாலியாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தில் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த தற்கொலைப் படையினர் நிகழ்த்திய தாக்குதலில் 20 பேர் உயிரிழந்தனர். சோமாலியாவின் தலைநகரான மொகாடிசுவில் உள்ள ஐ.நா. அலுவலகத்துக்கு அல்-காய்தா அமைப்புடன் தொடர்புடைய அல்-ஷபாப் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் 7 பேர் ஒரு வாகனத்தில் நேற்று சென்றனர். அலுவலகத்தின் வாயிலை குண்டுகள் வைத்து தகர்த்து உள்ளே நுழைந்த அவர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் மூன்று வெளிநாட்டவர்கள் உள்பட ஐ.நா. அலுவலக அதிகாரிகள் 13 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட ஏழு பயங்கரவாதிகளும் தங்கள் உடலில் இருந்த குண்டுகளை வெடிக்கச் செய்ததில் சம்பவ இடத்திலேயே அவர்களும் உயிரிழந்தனர்.



11 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிக்கு சீனாவில் மரணதண்டனை!
[Thursday, 2013-06-20 07:25:40]

சீனாவில் 11சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அந்நாட்டு கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் நிர்வாகிக்கு புதன்கிழமை மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. ஹெனான் மாகாணத்தில் உள்ள யாங்செங் நகர கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் லீ ஜிங்காங்குக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக ஹெனான் மாகாண உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டில் 11 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பான வழக்கில் லீ கடந்த ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்டார்.



சிறப்புப் படைப்பிரிவுகளில் பெண்களை சேர்க்க அமெரிக்கா அனுமதி!
[Thursday, 2013-06-20 07:20:24]

அமெரிக்காவில் 2016-ம் ஆண்டு முதல் கடற்படை கமாண்டோ உள்ளிட்ட சிறப்புப் படைப் பிரிவுகளில் பெண்கள் சேர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அமெரிக்காவின் ராணுவத் தலைமையகம் பெண்டகன் தெரிவித்தது.இதன் மூலம் போர்க்களத்தின் முன் நின்று பணிபுரியக் கூடிய வாய்ப்புகளை பெண்கள் விரைவில் பெற உள்ளனர்.இது குறித்து பாதுகாப்பு துறை இயக்குநர் ஜூலியட் பெய்லர் கூறுகையில், தகுதியுடன் கூடிய திறமையானவர்களை பணியில் அமர்த்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே பாதுகாப்புத் துறையின் நோக்கம். அதற்கு பாலினம் பேதமில்லை' என்று தெரிவித்தார்.



அமெரிக்காவுடன் நடத்தவிருந்த பேச்சுக்களை ரத்து செய்தார் ஆப்கான் அதிபர் - தலிபான்களுடன் பேச்சு நடத்த முயன்றதால் ஆத்திரம்!
[Thursday, 2013-06-20 07:15:45]

அமெரிக்காவுடன் நடைபெறவிருந்த பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தையை ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாய் ரத்து செய்தார். ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டுப் படைகள் 2014-ஆம் ஆண்டு முழுமையாக வெளியேறுகின்றன. இருப்பினும் அமெரிக்கப் படைகள் மேலும் சில காலம் ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருக்க வகை செய்யும் பாதுகாப்பு ஒப்பந்தம் தொடர்பாக இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்திருந்தன.



கடந்த ஆண்டில் 80 இலட்சம் பேர் அகதிகளாக இடம்பெயர்வு - ஐ.நா தகவல்!
[Wednesday, 2013-06-19 18:04:22]

தமது இருப்பிடங்களை விட்டு பலவந்தமாகத் தப்பி ஓடச் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான அமைப்பு கூறியுள்ளது. ருவண்டா மற்றும் முன்னாள் யூகோஸ்லாவிய நெருக்கடி காலகட்டத்துக்குப் பிறகு இதுதான் இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துக் காணப்படும் காலமாகும். கடந்த ஆண்டில் 80 லட்சம் பேர் இடம்பெயர்ந்திருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் போர் காரணமாகவே இடம்பெயர்ந்தனர்.இது மிகவும் மோசமான நிலைமை என்றும், சிரியாவின் மோதல் காரணமாகவே மிகவும் அதிகமானோர் இடம்பெயர்ந்ததாகவும் ஐநாவின் அறிக்கை ஒன்று கூறுகின்றது.



22 அணுகுண்டுகளை நெதர்லாந்தில் பதுக்கி வைத்துள்ளது அமெரிக்கா - முன்னாள் பிரதமர் பரபரப்புத் தகவல்!
[Wednesday, 2013-06-19 17:43:32]

அமெரிக்காவுக்கு சொந்தமான 22 சக்தி வாய்ந்த அணு குண்டுகள் நெதர்லாந்தில் பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டுள்ளதாக நெதர்லாந்து முன்னாள் பிரதமர் ரூட் லுபர்ஸ் தெரிவித்துள்ளார். நேஷனல் ஜியாக்ரபி என்ற சேனலின் செய்தி படத்திற்காக பேட்டியளித்த லுபர்ஸ் இவ்வாறு கூறியுள்ளார். 1982 முதல் 94 வரை அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட 22 சக்தி வாய்ந்த அணு குண்டுகள் பர்பண்ட் நகரில் உள்ள வோல்கெல் விமானப்படை தளத்தில் உள்ள பாதுகாப்பு பெட்டகத்தில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளன. 2013 வரை அவை இங்கேயே இருக்கும் என நான் நினைத்ததில்லை என்று அவர் கூறியுள்ளார்.



சந்திரனில் தூங்கிக் கொண்டிருக்கும் 280 எரிமலைகள் - அவுஸ்ரேலிய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!
[Wednesday, 2013-06-19 17:38:23]

அவுஸ்ரேலியாவில் உள்ள கர்டின் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சந்திரன் குறித்து ஆய்வு மேற்கொண்ட போது,சந்திரனின் மேற்பரப்பில் 66 எரிமலைகள் இருப்பதற்கான வாய்ப்பு தென்படுவது தெரிந்தது. அதே நேரத்தில் கண்ணுக்கு தெரியாமல் 280 எரிமலைகள் அங்கு மறைந்து கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவை சந்திரனின் மேற்பரப்பில் ஈரமற்ற நிலையில் இறுகி கிடக்கின்றன. இந்த தகவலை ஆய்வு மேற் கொண்டுள்ள பேராசிரியர் வில்பெதர்ஸ்டோன் தலைமையிலான விஞ்ஞானிகள் குழுவினர் அறிவித்துள்ளனர்.



ரஷ்ய இராணுவத் தளபாடக் கிடங்கில் பாரிய வெடிவிபத்து!
[Wednesday, 2013-06-19 17:35:03]

ரஷ்யாவின் தென்மேற்கில் உள்ள சமரா பகுதியில் ராணுவ பயிற்சி முகாம்கள் உள்ளன. அங்கு ராணுவத் தளவாடங்களுக்கான கிடங்கு ஒன்று இயங்கி வருகின்றது.நேற்று மாலை இந்தக் கிடங்கில் திடீரென தீப்பிடித்தது. பின்னர் தீ கிடங்கு முழுவதும் பரவி கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. ராணுவ தளவாடங்கள் இருந்த கிடங்கில் தீ பிடித்ததால் அங்கு வைக்கப்பட்டிருந்த பொருட்கள் தீயினால் வெடித்து சிதறின.முதலில் ஐந்து வெடி சப்தங்கள் கேட்டதாகவும், இதனால் ஏற்பட்ட தீ மளமளவென பரவ தொடங்கியதாகவும் அவசரகால அமைச்சகம் தெரிவித்துள்ளது. தீ பிடித்து பல மணி நேரங்கள் கழிந்தும் வெடி சப்தங்கள் கேட்டுக் கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் தாக்குதலில் 4 அமெரிக்கப் படையினர் பலி!
[Wednesday, 2013-06-19 17:29:49]

ஆப்கானிஸ்தானில் பஹ்ராம் விமான தளம் மீது தலிபான்கள் இன்று அதிகாலை நடத்திய தாக்குதலில் 4 அமெரிக்கப் படையினர் பலியானதாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஏவுகணை அல்லது மோட்டார் தாக்குதலிலே இடம்பெற்றதாக நம்பப்படுகிறது. எனினும் மேலதிக விபரங்கள் எதையும் அமெரிக்க அதிகாரிகள் வெளியிடவில்லை. இந்தத் தாக்குதல் காபூல் நகரின் வடபகுதியிலிருந்து 30 மைல் தூரத்தில் நடந்துள்ளது.



அமெரிக்காவில் 20 வாரக் கருவைக் கலைக்க தடை செய்யும் சட்ட மசோதா நிறைவேற்றம்.
[Wednesday, 2013-06-19 12:54:13]

அமெரிக்காவில் 20 வாரக் கருவைக் கலைக்க தடை செய்யும் சட்ட மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தின் காங்கிரஸ் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இங்கு இந்த சட்ட மசோதாவுக்கு அதிக ஆதரவு இருந்த நிலையில், எளிதாக மசோதா நிறைவேற்றப்பட்டாலும், அடுத்த கட்டமாக செனட் குழுவுக்கு இந்த மசோதா செல்லும். செனட் குழுவில் இந்த சட்ட மசோதாவுக்கு ஏராளமான எதிர்ப்புகள் உள்ள நிலையில், அங்கு மசோதா நிறைவேற்றப்பட்டு, பிறகு அதில் அதிபர் பராக் ஒபாமா கையெழுத்திட்ட பிறகே சட்டமாக்கப்படும்.



ஃபுகுஷிமா அணு உலையின் அடியிலுள்ள நிலத்தடி நீரில் STRONTIUM கதிர்வீச்சு!
[Wednesday, 2013-06-19 12:52:00]

ஜப்பானில் சுனாமியால் பாதிக்கப்பட்ட ஃபுகுஷிமா அணுவுலையின் அடியிலுள்ள நிலத்தடி நீரில் ஆபத்தான கதிர்வீச்சு கலந்திருப்பது தெரியவந்துள்ளது. ஸ்டிராண்டியம் (STRONTIUM), டிரைட்டியம் (TRITIUM) எனப்படும் கதிர்வீச்சு ரசாயனங்கள் கலந்திருப்பதாக டோக்கியோ மின்சார நிறுவனம் தெரிவித்துள்ளது. அணுவுலைகளிலும், அணு ஆயுதங்களிலும் பயன்படுத்தப்படும் யூரேனியம் (URANIUM) மற்றும் புளுட்டோனியம் (PLUTONIUM) ஒன்றோடு ஒன்று கலக்கும் போது ஸ்டிராண்டியம் (STRONTIUM) வெளியேறுகிறது.



4500 படையினரை வீட்டுக்கு அனுப்புகிறது பிரிட்டன் - செலவைக் குறைக்கும் நடவடிக்கை!
[Wednesday, 2013-06-19 07:43:40]

செலவுக் குறைப்பு நடவடிக்கை காரணமாக பிரிட்டனில் 4,500 படை வீரர்கள் பணியிலிருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.இது குறித்து பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ள தகவல்:தற்போது நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதாரப் பிரச்னையைத் தீர்க்க அரசு பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, பாதுகாப்பு அமைச்சகத்துக்கு ஒதுக்கப்படும் தொகை கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது. எனவே ராணுவத்தில் 20 சதவீதம் அளவுக்கு ஆள்குறைப்பு செய்ய அரசு முடிவெடுத்துள்ளது.



சிரியப் பிரச்சினைக்கு ஜெனிவாவில் பேச்சு - அமெரிக்கா, ரஷ்யா விருப்பம்!
[Wednesday, 2013-06-19 07:36:44]

சிரியாவில் நிகழ்ந்து வரும் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவர அரசும், கிளர்ச்சியாளர்களும் ஜெனீவாவில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அமெரிக்காவும், ரஷியாவும் விருப்பம் தெரிவித்துள்ளன. சிரியாவில் அதிபர் பஷார் அல் அஸாதின் ராணுவத்தை எதிர்த்துக் கிளர்ச்சியாளர்கள் போரிட்டு வருகின்றனர். கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதம் வழங்கத் தாங்கள் தயாராக இருப்பதாக அமெரிக்கா சமீபத்தில் தெரிவித்தது. எனினும், ரஷியா இதை விரும்பவில்லை. அரபு நாடுகளில் தனது முக்கியமான தோழமை நாடான சிரியாவின் அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கவே ரஷியா விரும்புகிறது.



ஈரானுடன் பேசத் தயார் - ஒபாமா அறிவிப்பு!
[Wednesday, 2013-06-19 07:32:45]

ஈரான் நாட்டுடன் பேச்சு நடத்தத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். அணு ஆயுதத் தயாரிப்பில் ஈடுபட்டதால் சர்வதேச அளவில் பல்வேறு பொருளாதார தடைகளுக்கு ஈரான் உள்ளானது. இப்போது அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஹசன் ரெஹானி புதிய அதிபராகத் தேர்வாகியுள்ளார்.அணு ஆயுத விஷயத்தில் வெளிப்படைத்தன்மையுடன் நடந்து கொள்ளத் தயார் என்றும் ரெஹானி கூறியுள்ளார்.


Mahesan supramaniyam 031109
TamilsGuid-191012-2013
RoyaShades-l2011(04-12-11)
Suresh-remax-2013-01-01
INNSYS-20120930
NIRO-DANCE-100213
TDE_Computers2011
AJRwindows22.05.13
Ramans2011
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com