Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
June 20, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
பாடகி சின்மயி மீது மானநஷ்ட வழக்கு தொடுப்பேன்! - எழுத்தாளர் லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் எச்சரிக்கை
[Wednesday, 2012-10-24 18:42:41]
News Service

பாடகி சின்மயி என்மீது கொடுத்துள்ள புகார் தவறானது; அதை வாபஸ் பெற்றுக் கொள்ளவேண்டும், என்மீதான வன்முறையைத் தொடர்ந்தால் மான நஷ்ட வழக்கு தொடுக்க வேண்டிவரும் என்று எழுத்தாளர் லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட பத்திரிகைச் செய்தியில்-   

பாடகி சின்மயி கொடுத்துள்ள போலீஸ் புகாரில் என்னுடைய ட்விட்டர் ஐடியும் சேர்த்து அளிக்கப்பட்டிருப்பதாக அறிந்து மிகுந்த மனவேதனையும் பெரும் மன உளைச்சலும் அடைகிறேன். கடந்த இரண்டு நாட்களாக என்னை ட்விட்டர், தனி மெயில், தொலைபேசி என்று பல விதங்களிலும் தொடர்பு கொண்டு தங்கள் ஆழ்ந்த கவலையைத் தெரிவித்த ரசிகர்களுக்கும், நல்லிதயங்களுக்கும் நன்றி.

கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கும் மேலாக எழுத்து, நாடகம், சினிமா என்று பல்வேறு மீடியா தளங்களிலும், சமீப காலங்களில் ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற வர்ச்சுவல் தளங்களிலும் நான் பிரபலமாக இருந்து வருகிறேன். கலக்கல் கபாலி, பாத்ரூம் பாகவதர், ரிக்சா முன்சாமி, தமிழ்ப் புலவர் ஆதிமந்தி போன்ற நான் உருவாக்கிய கதாபாத்திரங்களும் புகழ்பெற்றவையே.

தமிழ் சினிமாவில் நடிப்பது மட்டுமல்லாமல் ஹாலிவுட் படங்கள், அமெரிக்க டெலிவிஷனின் நீயா நானா ஷோக்களிலும் நான் அவ்வப்போது தலை காட்டுபவன். லாஸ் ஏஞ்சல்ஸ் தமிழ்ச் சங்கத்தின் தலைவராகவும் பணி புரிபவன். இவற்றையெல்லாம்விட, பல வருடங்களாக லாஸ் ஏஞ்செல்ஸ் நகரத்தில் ஐடி கம்பெனிகள், ரியல் எஸ்டேட் தொழில், இந்திய சினிமாக்காரர்களுக்கு ஹாலிவுட்டில் பல விதங்களிலும் உதவி என்று பல்வேறு தளங்களிலும் இயங்கிக் கொண்டிருக்கிறேன்.

நகைச்சுவையை மட்டுமே முதன்மையாகக் கொண்டு என் புத்தகங்கள், கதைகள், அரசியல் மற்றும் சமூகக் கட்டுரைகள் வெளியாகி இருக்கின்றன. விகடன், குமுதம், கல்கண்டு, கலைமகள், கல்கி, அமுதசுரபி போன்ற பல பத்திரிகைகளில் நான் தொடர்து எழுதி வருகிறேன். கலைமகளின் கி.வா.ஜகந்நாதன் நினைவு பரிசுப் போட்டியில் முதல் பரிசு வென்றவன்.

ட்விட்டருக்கு நான் வருவது ஒருவித ரிலாக்சேஷனுக்காக மட்டுமே. வர்ச்சுவல் உலகத்தில் பெண்களுக்கும் பல சிறுபான்மையினருக்கும் எதிராக அவ்வப்போது நடக்கும் நிழல் யுத்தங்களைக் கண்டு நான் வெறுப்பவன். பல நேரங்களில் சண்டை போடுபவர்களை நானே கிண்டல் செய்து விலக்கிவிடுவதும் உண்டு. என் ஆயுதம் எப்போதுமே நகைச்சுவைதான்.

என்னுடைய தளங்களுக்கு (http://losangelesram.blogspot.com http://writerlaram.com) ஒருமுறை வந்து பார்த்தாலே நான் காலை, நடுப்பகல், மாலை, இரவு என்று எந்நேரமும் நகைச்சுவையை மட்டுமே பிரதானப்படுத்தும் சாகபட்சிணி என்பதை அறிவீர்கள்! ட்விட்டர் என்பது இணையப் பொதுவெளியின் ஒரு அங்கம். என் டைம்லைனில் நீ ஏன் வருகிறாய்? என்று யாரையும் நாம் கேட்பதே படு அபத்தம். நமக்குப் பிடிக்காதவர்களை அன்ஃபாலோ அல்லது ப்ளாக் செய்துகொள்ள அதில் வசதிகள் உள்ளன.

நான் இதுவரை சின்மயியை ட்விட்டரில் தொடர்ந்தது கிடையாது. அவர் என்னைத் தொடர்கிறாரா என்பதும் எனக்குத் தெரியாது. நான் அவருடைய குடும்பத்தாரால் மிகவும் தவறாகப் புரிந்து கொள்ளப் பட்டிருக்கிறேன் என்பது எனக்கு பெருத்த வேதனை அளிக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு சின்மயியை கலாட்டா செய்தும் வம்புக்கு இழுத்தும் பல காரணங்களுக்காக ட்விட்டர் உலகமே அல்லோல கல்லோலப்பட்டது. அவரும் யாரையும் விடுவதாயில்லை. அவரை சின்னாத்தா என்று பலரும் கலாட்டா செய்து கொண்டிருந்தார்கள்.

அந்த நேரம் பார்த்து நான் என் அட்லாண்டா நண்பர் ஒருவரை ட்விட்டரில் ஜின்னாத்தா என்று கலாட்டா செய்யப்போக, சின்மயியின் அம்மா பத்மஹாசினி எனக்குக் காட்டமாக ஒரு கடிதம் எழுதினார். அதில் என் கலக்கல் கபாலி படத்தைப் பார்த்தாலே நான் ஒரு பேட்டை பொறுக்கி என்பது தெரிவதாகவும்(!), அவர்கள் உயர்குலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், சின்மயியை குறிவைத்து நான் எழுதியதாகவும் என்னவெல்லாமோ சொல்லி என்னை மிரட்டிய கடிதம் மிக நீண்டது.

நீங்கள் என்னை தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். நான் ஒரு காமெடி ரைட்டர், அந்த கலக்கல் கபாலி கார்டூன் படம் நகைச்சுவைக்காக நான் எப்போதும் பயன்படுத்துவது, அது என்னுடைய புகைப்படம் இல்லை. சரி இத்துடன் இதை முடித்துக் கொள்ளுங்கள் என்று பதில் எழுதி மங்களம் பாடி முடித்தேன். தன்னைத் தொடர்பு கொள்ளச்சொல்லி அவர் சொன்னதற்கு நான் மறுப்பும் தெரிவித்திருந்தேன்.

நானும் ஒரு நல்ல பெண்ணைப் பெற்று வளர்ப்பவனே. சின்மயி மட்டுமல்ல, எந்த ஒரு பெண்ணுமே எங்கேயுமே அசிங்கப்படக்கூடாது என்பதில் நான் தீவிரமாகவே இருக்கிறேன். பல நேரங்களில் மன இறுக்கத்தைக் குறைக்க நகைச்சுவையை பயன்படுத்த வேண்டி இருக்கிற காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். என்னால் முடிந்த அளவுக்கு நான் அதை நன்றாகவே செய்து வருகிறேன். என் மீதே புகார் கொடுக்கப்பட்டுள்ளது என்பது மனவேதனை அளிக்கிறது.

சரியான புரிதல் இல்லாமல், என் நகைச்சுவை, கலாட்டா, கிண்டலைப் புரிந்துகொள்ளாமல் என்னை போலீஸ் புகாருக்கு உட்படுத்தி எனக்கு மன உளைச்சல் ஏற்படுத்துவது எனக்கும் என் குடும்பத்தாருக்கும் என் ரசிகர்களுக்கும் நண்பர்களுக்கும் தரப்படும் அநாவசிய தண்டனை. பத்திரிகையாளனான எனக்கு எதிரான இந்த வன்கொடுமை இத்துடன் நிறுத்திக் கொள்ளப்படாவிட்டால் நானும் நீதி கேட்டுப் போராட வேண்டி வரும்; மானநஷ்ட வழக்கு போடவேண்டிவரும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். - இவ்வாறு எழுத்தாளர் லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் தனது பத்திரிகை செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

இமயமலை சுனாமி: சேற்றில் புதைந்து 1000 பேருக்கு மேல் பலி; சேறு, குப்பைகளால் மூடப்பட்ட கேதார்நாத்; 40 அடி உயர சிவன் சிலையின் மார்பளவுக்கு வெள்ளம்!
[Thursday, 2013-06-20 07:05:57]

உத்தரகாண்டில் மழை வெள்ளத்தால் யாத்திரிகர்களுக்கு பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது. வெள்ளம், நிலச்சரிவால் சேற்றில் கூட்டம் கூட்டமாக புதைந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம், அரியானா மாநிலங்களில் பருவமழையின் போது வழக்கமாக பெய்யும் மழையின் அளவை விட, கடந்த 3 நாட்களில் மூன்று மடங்கு அதிகமாக பெய்ததால் ஆறுகளில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஏராளமான பகுதிகள் மழை வெள்ளத்தில் சிக்கியுள்ளன. ஆங்காங்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.மழை காரணமாக வீடுகள் இடிந்துள்ளன.



ஆண் - பெண் உடலுறவு திருமணத்துக்குச் சமமே - பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பு!
[Thursday, 2013-06-20 06:56:16]

இருபத்தியோரு வயதான ஆணும், பதினெட்டு வயதான பெண்ணும் உடலுறவு கொண்டால் அவர்கள் திருமணமானவர்களாக கருதப்படுவர் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ் கர்ணன், அளித்திருக்கும் தீர்ப்பு தமிழ்நாட்டில் பெரும் சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது. இந்தத் தீர்ப்பு திருமணம் செய்துகொள்வதாகக் கூறி உடலுறவு கொண்டு பின்னர் ஏமாற்றும் ஆண்களுக்கு ஒரு எச்சரிக்கை என்று ஒரு சிலரும், திருமணத்திற்கு முன்னரே உடலுறவு கொள்ள இந்த தீர்ப்பு தூண்டக்கூடும் என்று ஒரு சிலரும், உடலுறவையே திருமணமாக்குவது என்பது தனிமனித சுதந்திரத்தில் தலையிடுவதாகும் என்று வேறு சிலரும் வாதிடுகின்றனர்.



இலங்கைப் படையினர் விரைவில் திருப்பி அனுப்பப்படுவர் என்கிறார் மத்திய அமைச்சர் நாராயணசாமி!
[Thursday, 2013-06-20 06:48:29]

குன்னூரில் ராணுவப் பயிற்சி பெறும், இரண்டு இலங்கை ராணுவ அதிகாரிகள், விரைவில் திருப்பி அனுப்பி வைக்கப்படுவர் என, மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறினார். சென்னை விமான நிலையத்தில் நேற்று அவர் கூறியதாவது: குன்னூரில் ராணுவப் பயிற்சி பெறும் இரண்டு இலங்கை அதிகாரிகளை, திருப்பி அனுப்புமாறு, ராணுவ அமைச்சர் மற்றும் செயலரிடம் கூறியுள்ளோம். விரைவில், இரு அதிகாரிகளும் திருப்பி அனுப்பப்படுவர். பா.ஜ.க சார்பில், பிரதமர் வேட்பாளராக, நரேந்திர மோடியை நிறுத்த அதிக வாய்ப்புள்ளது. அதேபோல், காங்கிரஸ் சார்பில், பிரதமர் வேட்பாளராக, ராகுலை நிறுத்த அதிக வாய்ப்புள்ளது.



இன்று உலக அகதிகள் தினம்: ஒரு ஈழ அகதியின் உரிமைக்குரல்!
[Thursday, 2013-06-20 06:39:50]

உலகில் போர், வன்முறை, வறுமை, வேலை இழப்பு போன்றவற்றால் உடமைகள், உரிமைகள், உறவுகள், இருப்பிடம் என அனைத்தையும் இழந்தவர்கள், அகதிகளாக உருவெடுக்கின்றனர். இவ்வாறு பாதிக்கப்பட்டு, அச்சுறுத்தலில் வாழ்ந்துவரும், ஆண்கள், பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார வசதிகளை ஏற்படுத்தும் விதமாக, ஜூன் 20ம் தேதி, உலக அகதிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இவர்களுக்கு உள்ள உரிமைகளை, திரும்ப அவர்களுக்கு வழங்கவேண்டும். அவர்களும் சமூகத்தில் மற்றவர்களைப் போல நடத்தப்பட வேண்டும் என்பதை இத்தினம் வலியுறுத்துகிறது.



இலங்கை கடற்படை அட்டூழியத்தால், தொழிலுக்கு முழுக்குப் போட்டு விட்டு 200 படகுகளை அரசிடம் ஒப்படைக்க மீனவர்கள் முடிவு!
[Thursday, 2013-06-20 06:32:39]

இலங்கை கடற்படையினர், ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களை கைது செய்து சிறையில் அடைப்பது, வலைகளை வெட்டி மீன்களை கடலில் மூழ்கடிப்பது போன்ற அட்டூழியங்கள் நீடிப்பதால், விசைப்படகுகளை தமிழக அரசிடம் ஒப்படைத்து, மாற்று தொழிலுக்கு நிதி வழங்க, 200 மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரத்தில் 770, மண்டபத்தில் 570, பாம்பனில் 100 உட்பட 1,650 விசைப்படகுகள் உள்ளன. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் மீன்பிடி தொழிலை நம்பி உள்ளன. ராமேஸ்வரம் மீனவர்கள் கரையில் இருந்து 12 நாட்டிக்கல் மைல் (22 கிலோ மீட்டர் ) தூரத்திற்குள் மட்டுமே மீன்பிடிக்க வேண்டும் என, நிபந்தனை உள்ளது.



உத்தர்காண்ட் வெள்ளத்தில் ஆயிரக்கணக்கானோர் பலி - சுஷ்மா சுவராஜ் அதிர்ச்சித் தகவல்!
[Wednesday, 2013-06-19 18:01:36]

இமயமலையை ஒட்டி அமைந்துள்ள இமாச்சல் பிரதேசம், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் பருவமழை பெய்து வருகிறது. இதில் உத்தரகாண்ட் மாநிலத்தின் கேதர்நாத், பத்ரிநாத், ஜொஷிமாத் ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய கடுமையான மழை கொட்டி வருகிறது. இந்த பேய் மழையினால் நிலச்சரிவும் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டு 100-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். உத்தரகாண்டில் ஏற்பட்ட சேதம் குறித்து பாரதீய ஜனதா கட்சியின் மக்களவை எதிர்கட்சித்தலைவர் சுஷ்மா சுவராஜ், மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேவுடன் நேற்றிரவு டெலிபோனில் தொடர்புகொண்டு பேசினார். அதுகுறித்து சுஷ்மா கூறியிருப்பதாவது-



இலங்கைக்குப் படையெடுக்கும் போராட்டத்தைக் கைவிட்டனர் இராமேஸ்வரம் மீனவர்கள்!
[Wednesday, 2013-06-19 17:54:20]

இலங்கை நோக்கி 1,000 படகுகளில் வெள்ளைக்கொடி கட்டி செல்லும் போராட்டத்தை, ராமேஸ்வரம் மீனவர்கள் வாபஸ் பெற்றனர். இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 57 பேரை விடுவிக்க கோரி, ஜூன் 22ல் ராமேஸ்வரத்தில் இருந்து 1,000 படகுகளில் வெள்ளைக்கொடி கட்டி, இலங்கைக்கு செல்லும் போராட்டத்தை மீனவர் சங்கத்தினர் அறிவித்திருந்தனர். இந்நிலையில் ராமநாதபுரம் கலெக்டர் நந்தகுமார் தலைமையில், மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடந்தது. "விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக, கலெக்டர் உறுதி அளித்ததை அடுத்து, போராட்டத்தை வாபஸ் பெற்றதாக' மீனவர் சங்க தலைவர் போஸ் தெரிவித்தார்.



இலங்கைக் கடற்படையை கண்டித்து செப்ரெம்பரில் மாநாடு - பாஜக அறிவிப்பு!
[Wednesday, 2013-06-19 17:51:16]

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்கி வருவதைக் கண்டித்து, மீனவர்களுக்கு ஆதரவாக தமிழக கடற்கரையோர மாவட்டங்களில் வரும் செப்டம்பரில் பாஜக மாநாடு நடத்தவுள்ளது என்று கட்சியின் மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். வேலூரில் பொன். ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் மேலும் கூறியதாவது: சேது சமுத்திர திட்டம் தமிழகத்துக்கு தேவையான திட்டம்தான். துரதிருஷ்டவசமாக அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.



கனிமொழிக்காக அன்புமணியிடம் தூது போனார் ஸ்டாலின் - சோனியாவுடன் திமுக எம்.பிக்கள் பேச்சு!
[Wednesday, 2013-06-19 17:18:19]

தமிழ்நாட்டில் இருந்து பாராளுமன்ற மேல்சபைக்கு 6 எம்.பி.க்களை தேர்வு செய்வதற்காக வருகிற 27-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி, தி.மு.க., தே.மு.தி.க. இடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. ஒரு எம்.பி.யை தேர்ந்து எடுக்க 34 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை. சட்டசபையில் அ.தி.மு.க.கூட்டணிக்கு 170 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.எனவே அ.தி.மு.க. சார்பில் நிறுத்தப்பட்டுள்ள டாக்டர் மைத்ரேயன்,கே.ஆர்.அர்ஜூனன், த.ரத்தினவேல், இரா.லட்சுமணன் மற்றும் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த டி.ராஜா ஆகிய 5 பேரும் தலா 34 ஓட்டுகள் வாங்கி வெற்றி பெறுவது உறுதி.



பீகாரில் நம்பிக்கை வாக்கெடுப்பில் தப்பியது நிதிஷ்குமார் அரசு!
[Wednesday, 2013-06-19 17:08:39]

பீகார் சட்டப்பேரவையில் இன்று நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தள கட்சி வெற்றி பெற்றுள்ளது. பாஜவுடனான கூட்டணியை ஐக்கிய ஜனதா தளம் முறித்துக் கொண்ட நிலையில், இன்று பீகார் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பைக் கொண்டு வந்தார் முதல்வர் நிதிஷ் குமார்.நம்பிக்கை வாக்கெடுப்பு துவங்கியதும், பாஜக உறுப்பினர்கள் வெளி நடப்பு செய்ததை அடுத்து, 216 வாக்குகள் பெற்று, நிதிஷ்குமார் அரசு வெற்றி பெற்றது.



காஷ்மீர் முதல்வரையும் மத்திய அமைச்சரையும் விரட்டியடித்த பண்டிட்கள்!
[Wednesday, 2013-06-19 07:19:46]

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், சில ஆண்டுகளுக்கு முன் வரை, சகல பெருமையுடன் வாழ்ந்த பண்டிட் சமுதாயத்தினரை, பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் கைகோர்த்த உள்ளூர் சக்திகள் வெளியேற்றி விட்டன. அங்கு, பிராமணர்கள், பண்டிட்டுகள் என, அழைக்கப்படுகின்றனர். அகதிகள் முகாம்களில் வசிக்கும் அவர்கள், தங்களின் வழக்கமான, பூஜை, புனஸ்காரங்களை செய்யத் தவறுவதில்லை. நேற்று முன்தினம், துலாமல்லா என்ற இடத்தில் உள்ள, கிர் பவானி கோவிலில் பூஜை செய்து கொண்டிருந்த போது, அங்கு வந்த, மாநில முதல்வர், உமர் அப்துல்லாவை விரட்டி அடித்தனர்.



"மீண்டெழும் பாண்டியர் வரலாறு' நூலுக்கு தமிழக அரசு தடை - கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது என்று எழுத்தாளர்கள் கொதிப்பு!
[Wednesday, 2013-06-19 07:14:16]

பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் எனக் கூறி, "மீண்டெழும் பாண்டியர் வரலாறு' என்ற புத்தகத்தை, தமிழக அரசு தடை செய்துள்ளது, கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது; தடையை நீக்க வேண்டும்' என, எழுத்தாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செந்தில் மல்லர் என்பவர் எழுதிய, "மீண்டெழும் பாண்டியர் வரலாறு' என்ற புத்தகம், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் எனக் கூறி, அப்புத்தகத்தை வெளியிட, தமிழக அரசு தடை விதித்துள்ளது. இப் புத்தகத்திற்கு தடை செய்திருப்பது, தமிழகத்தில் உள்ள புத்தக பிரியர்களுக்கு, பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.



மன்மோகன்சிங்கின் குடுகுடு அமைச்சரவை!
[Wednesday, 2013-06-19 07:07:49]

எல்லா கட்சிகளும், இளைஞர் அணி, இளைஞர் பாசறை, புதிய உறுப்பினர் சேர்க்கை என "இள ரத்தத்தை' பாய்ச்சிக்கொண்டு இருக்கும் போது, மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான அரசில், வயதானவர்கள் நிறைய இடம் பெற்று, "தள்ளாடி'க் கொண்டு இருக்கிறது. கேபினட் அமைச்சர்களில் பிரதமர் மன்மோகன் சிங் உள்பட வயதானவர்களே அதிகம். இணை அமைச்சர்கள் மற்றும் தனிப்பொறுப்பு இணை அமைச்சர்கள் பட்டியலில் மட்டுமே, சற்று வயது குறைவானவர்கள் தென்படுகின்றனர்.கேபினட்டில் அதிக வயதானவராக தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்துறை அமைச்சர் சிஷ்ராம் ஓலா இருக்கிறார். இவரது வயது 86.



வரலாறு காணாத மழையால் வடமாநிலங்கள் தவிப்பு - 131 பேர் பலி!
[Wednesday, 2013-06-19 07:02:48]

தீவிரமடைந்து வரும் தென்மேற்கு பருவமழை காரணமாக வடமாநிலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆங்காங்கு ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம், நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு போன்றவற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 131 ஆக உயர்ந்துள்ளது. வெள்ளம் காரணமாக புனித தலங்களில் மொத்தம் 73,000 பேர் சிக்கியுள்ளனர். 500-க்கும் மேற்பட்ட யாத்ரீகர்களைக் காணவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக உத்தரகண்ட், இமாசலப்பிரதேசம், ஹரியாணா உள்ளிட்ட வடமாநிலங்களில் இதன் பாதிப்பு அதிகமாக உள்ளது.



ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் கோளாறு - ஓடுபாதையில் கண்டுபிடிக்கப்பட்டதால் 182 பயணிகளும் தப்பினர்!
[Wednesday, 2013-06-19 06:48:41]

சென்னையில் இருந்து கொழும்பு செல்லும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் 182 பயணிகளுடன் நேற்று மாலை 5.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. விமானம் ஓடுபாதையில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுபிடித்தார். உடனே விமானத்தை அங்கேயே நிறுத்திய விமானி, விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு தெரிவித்தார். இதையடுத்து விமானத்தை இயக்க வேண்டாம். புறப்பட்ட இடத்திலேயே நிறுத்தும்படி கட்டுப்பாட்டு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.



வெள்ளத்தில் சிக்கிய இமாச்சல பிரதேச முதல்வர் 60 மணிநேரப் போராட்டத்தின் பின்னர் ஹெலி மூலம் மீட்பு!
[Tuesday, 2013-06-18 19:01:41]

வெள்ளத்தில் சிக்கிய இமாச்சல பிரதேச மாநில முதல்வர் வீரபத்திரசிங் 60 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டார். இவருடன் தவித்த 10 பேரும் பத்திரமாக மீட்டு கொண்டு வரப்பட்டனர். வட மாநிலங்களில் தற்போது பருவ மழை வெளுத்து வாங்கி வருகிறது. பஞ்சாப், அரியானா, குஜராத், உத்தர்கண்ட், டில்லி, மும்பை உள்ளிட்ட பகுதிகளில் கடும் மழை பெய்தது. இதில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 60 க்கும் மேற்பட்டோர் பலியாயினர். தொடர்ந்து இங்கு மீட்பு பணிகள் நடந்து வருகிறது. கங்கை, யமுனா நதியில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.



வெலிங்டன் இராணுவ முகாமை முற்றுகையிட்ட 400 பேர் கைது!
[Tuesday, 2013-06-18 18:56:45]

ஊட்டி வெலிங்டன் ராணுவ முகாமை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்திய 15க்கும் மேற்பட்ட அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 400 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் சட்டக்கல்லூரி மற்றும் கல்லூரி மாணவிகள் 15 பேரும் அடங்குவர்.இந்நிலையில், இதன் அடுத்தக் கட்டப் போராட்டம் குறித்து அனைத்துக் கட்சிக் குழுவுடன் கூடி விவாதிக்கப்பட்டு முடிவு செய்யப்பட்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இது குறித்து, பெரியார் தி.க.வின் ராமகிருஷ்ணன் கூறுகையில்,காங்கிரஸ் கட்சி அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்.



இறந்துபோன அர்ச்சகர் மறுநாள் உயிருடன் எழுந்தார் - இராமநாதபுரத்தில் பரபரப்பு!
[Tuesday, 2013-06-18 18:42:29]

ராமநாதபுரம் அருகே இறந்து போனதாகக் கருதப்பட்ட ஒருவர் உயிர் பிழைத்து மீண்டது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினம் சிருங்கேரி சங்கரமடம் வடக்கு தெருவில் வசித்து வருபவர் ரமணா ஐயர் என்பவரின் மகன் ரவி சாஸ்திரி(45).இவர், தேவிப்பட்டனம் திலகேஸ்வர சுவாமி கோயிலில் அர்ச்சகராக உள்ளார். கடந்த 13 ம் தேதி இதயக் கோளாறு காரணமாக இவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தார். இந்நிலையில் இதயக் கோளாறு காரணமாக 16ம் தேதி உயிரிழந்தார் என்று அறிவிக்கப்பட்டது.



காங்கிரசின் ஆதரவை நாடுகிறது தேமுதிக - எம்எல்ஏக்களை ஞானதேசிகனிடம் தூது அனுப்பினார் விஜயகாந்த்!
[Tuesday, 2013-06-18 18:38:18]

தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு வருகிற 27 ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. தேமுதிக சார்பில் ஏ.ஆர் இளங்கோவன் வேட்பாளராக நிறூத்தப்பட்டுள்ளார்.இந் நிலையில் இன்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகனை சத்தியமூர்த்தி பவனில் தே.மு.தி.கவை சேர்ந்த அனகை முருகேசன், பாஸ்கர், அருண் சுப்பிரமணியன், முத்துக்குமார், மனோகர் ஆகிய 5 எம்.எல்.ஏக்கள் சந்தித்து மாநிலங்கள தேர்தலில் தங்கள் வேட்பாளருக்கு ஆதரவு தரும்படி கோரிக்கை வைத்தனர்.அவர்களிடம் மேலிடத்தில் கேட்டு முடிவைத் தெரிவி்ப்பதாக ஞானதேசிகன் கூறி உள்ளதாக கூறப்பட்டுகிறது.



சஞ்சய் தத் ஒருமாத சிறைவாசம் நிறைவு - இனிமேல் தான் உண்மையான சோதனை!
[Tuesday, 2013-06-18 18:36:52]

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், சிறையில் அடைக்கப்பட்டு, ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து, கோர்ட் உத்தரவின் படி, இனி அவருக்கு வீட்டிலிருந்து உணவு, மின் விசிறி, படுக்கை ஆகியவை வழங்கப்பட மாட்டாது. மாதம் ஒரு முறை அவரது உறவினர்கள் மட்டுமே அவரை சிறையில் சந்திக்க முடியும்.மும்பை தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களின் போது, ஆயுதம் வைத்திருந்த குற்றத்திற்காக, நடிகர் சஞ்சய் தத்துக்கு, ஐந்தாண்டு சிறை தண்டனை வழங்கி, மும்பை, "தடா' கோர்ட் தீர்ப்பளித்தது. ஏற்கனவே, ஒன்றரை ஆண்டு சிறை வாசத்தை முடித்து விட்டதால், கடந்த மாதம் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட சஞ்சய், மேலும், மூன்றரை ஆண்டு சிறையில் இருக்க கட்டாயம் ஏற்பட்டுள்ளது.


Mahesan supramaniyam 031109
RoyaShades-l2011(04-12-11)
TamilsGuid-191012-2013
NIRO-DANCE-100213
TDE_Computers2011
INNSYS-20120930
Ramans2011
Suresh-remax-2013-01-01
AJRwindows22.05.13
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com