Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 26, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட 48 புகலிடக் கோரிக்கையாளர்கள் இலங்கை வந்தடைந்தனர்:
[Wednesday, 2012-10-24 10:09:45]
News Service

பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் இலங்கை வந்தடைந்தனர். தமிழர்கள் சிங்களவர்கள் உட்பட சுமார் 48 புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் கொழும்பு கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தை சென்றடைந்துள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  

முன்னதாக 60 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்படவிருப்பதாக பிரித்தானிய எல்லைப் பாதுகாப்புப் பிரிவு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. நாடு திரும்பிய இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களிடம் புலனாய்வுப் பிரிவினர் வாக்கு மூலங்களை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, புகலிடக் கோரிக்கையாளர்கள் சிலர் சட்டத்தரணிகள் ஊடாக விடுத்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் இறுதி நேரத்தில் இலங்கைக்கு நாடு கடத்தும் நடவடிக்கையை ரத்து செய்ததாக பிரித்தானியாவின் முன்னணி ஊடகமொன்று தகவல் வெளியிட்டிருந்தது.

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

இலங்கையில் எனக்கு பாதுகாப்பில்லை: அமெரிக்க தூதரிடம் அசாத் சாலி தெரிவிப்பு!
[Sunday, 2013-05-26 09:08:05]

இலங்கையில் தமக்கு பாதுகாப்பு இல்லை என்று கொழும்பு மாநகரசபையின் முன்னாள் பிரதி முதல்வரும், முஸ்லிம் தமிழ் தேசிய முன்னணியின் தலைவருமான அசாத் சாலி, அமெரிக்க தூதரிடம் தெரிவித்துள்ளார். அண்மையில் அமெரிக்க தூதரகத்தில் வைத்து, அசாத் சாலி அவரை சந்தித்து இந்த விடயம் குறித்து பேச்சு நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அரசாங்கம் தமக்கு உரிய பாதுகாப்பை வழங்க தவறிவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இந்த விடயம் தொடர்பில் இஸ்லாமிய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகவும் அசாத் சாலி தெரிவித்துள்ளார். இதேவேளை தமக்கு எதிராக அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து, மேலும் இரண்டு அடிப்படை மனித உரிமை மீறல் வழக்குகளை தாக்கல் செய்யவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



சர்வதேச திரைவெளியில் தடம்பதிக்க முனையும் ஈழத்தமிழ் கலைஞர்கள்! Top News Top News
[Sunday, 2013-05-26 08:55:00]

சர்வதேச திரைப்பட விழாக்களில் முக்கியமானாதொரு திரைப்பட விழாவென கருதப்படும் Shanghai International Film Festivalவில் கனடா வாழ் ஈழத்தமிழ் கலைஞர் லெனின்.எம்.சிவம் இயக்கிய A Gun & A Ring எனும் திரைப்படமும், றுகினா பசோ நாட்டில் இடம்பெறுகின்ற Cin Droit Libre de Ouagadougou விழாவில் பிரான்ஸ் வாழ் ஈழத் தமிழ்கலைஞர் விஜிதன் சொக்கா ஒளி-ஒலி பதிவுசெய்திருந்த journalistes-vos-papiers ஆவணப்படமும் கலந்து கொள்கின்றன.



தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மூன்று அமைச்சர்கள் ஆதரவு! - சுரேஸ்
[Sunday, 2013-05-26 08:46:50]

அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது தொடர்பான விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மூன்று இடதுசாரி அமைச்சர்கள் தங்களது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர். பேராசிரியர் திஸ்ஸ விதாரண, வாசுதேவ நாணயக்கார, மற்றும் டியு.குணசேகர ஆகியோரே தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். கடந்த புதன்கிழமை நாடாளுமன்றக் கட்டடத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவை இவர்கள் சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்பின் போது, 13வது திருத்தச்சட்டம் பலவீனப்படுத்தப்படக் கூடாது என்றும் அதில் எந்தத் திருத்தமும் செய்யப்படாமலேயே வடக்கு மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் மூன்று அமைச்சர்களும் கூறியதாக த.தே.கூட்டமைப்பின் பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.



ஆயுதக்குழு கடத்தலானது திட்டமிட்ட குடியேற்றங்களை தடுப்பவர்களை எச்சரிக்கும் செயற்பாடு - அரியநேந்திரன் எம்.பி!
[Sunday, 2013-05-26 08:40:58]

அம்பாறை மல்வத்தை பகுதியிலுள்ள தனியார் காணிகளில் திட்டமிடப்பட்டுள்ள அத்து மீறிய குடியேற்றத்தை எதிர்ப்பவர்களை அச்சுறுத்தவே தமிழரசுக்கட்சியின் அப்பகுதி மூத்த உறுப்பினர் ஆயுதக் குழுவால் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரந்திரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,



புலம்பெயர் தமிழர்களின் கைப்பாவையாக சர்வதேச மன்னிப்புச்சபை செயற்படுகிறது - ருவன் வணிகசூரிய
[Sunday, 2013-05-26 08:38:55]

போர்க்குற்றவாளிகள் இலங்கையில் சுதந்திரப் பறவைகளாக உலாவுகின்றனர் என்று சர்வதேச மன்னிப்புச்சபை சுமத்தியுள்ள குற்றச்சாட்டை அடியோடு நிராகரித்த இராணுவம், புலம்பெயர் தமிழர்களின் கைப்பாவையாக மன்னிப்புச்சபை செயற்பட்டு இலங்கைக்கு எதிராக இதுபோன்ற ஆதாரமற்ற பொய்க்குற்றச்சாட்டுகளை முன்வைத்து சர்வதேச ரீதியில் தமக்குள்ள நற்பெயரை இழக்கின்றது எனவும் இலங்கையில் போர்க்குற்றம் இடம்பெற்றதற்குத் தகுந்த ஆதாரங்கள் இருப்பின் அவற்றைச் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் சமர்ப்பிக்கவேண்டும் என்று இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய, மன்னிப்புச்சபையிடம் கோரிக்கை விடுத்தார்.



மீண்டும் தமரா குணநாயகத்தை ஜெனீவா அனுப்புவது குறித்து கவனம் செலுத்துகின்றது அரசு!
[Sunday, 2013-05-26 08:37:27]

இலங்கையின் சிரேஸ்ட இராஜதந்திரிகளில் ஒருவரான தமரா குணநாயகத்தை மீளவும் ஜெனீவா அனுப்பி வைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஜெனீவாவிற்கான இலங்கை வதிவிடப் பிரதிநிதியாக மீளவும் குணநாயகத்தை நியமிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜெனீவாவிற்கான இலங்கை வதிவிடப் பிரதிநிதியாக தற்போது ரேனுகா செனவிரட்ன கடமையாற்றி வருகின்றார். இவரை ஐரோப்பிய நாடொன்றின் தூதுவராக நியமித்து அந்தப் பதவியை குணநாயகத்திற்கு வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.



தற்கொலைகளில் இலங்கை உலகசாதனை படைத்துள்ளது - எதிர்க்கட்சி தெரிவிப்பு!
[Sunday, 2013-05-26 08:34:01]

இலங்கை தற்கொலைகளில் உலக சாதனை படைத்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. மதுபான மற்றும் தற்கொலைகள் நுகர்வில் இலங்கை உலக அரங்கில் முன்னணி வகிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார். போதைக்கு முற்றுப் புள்ளி என அரசாங்கம் பிரசாரம் செய்தாலும், உண்மையில் நிலைமை தலைகீழாகவே காணப்படுகின்றது. கண்டியில் பௌத்த பிக்கு ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள மேற்கொண்ட முயற்சி பாரதூரமானது. இதற்கு யார் உந்து சக்தியாக அமைந்தார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்ததுடன், உடலுக்கு தீ மூட்டிக் கொண்டமையின் பின்னணியில் ஏதேனும் அரசியல் சக்திகள் செயற்பட்டனவா என்பது குறித்து விசாரணை செய்யப்பட வேண்டும்.



கட்சியின் பௌத்த வாக்காளர்களை தக்க வைத்துக்கொள்ளுமாறு ரணிலிடம் கோரிக்கை!
[Sunday, 2013-05-26 08:27:26]

ஐக்கிய தேசியக் கட்சியின் பௌத்த வாக்காளர்களை தக்க வைத்துக் கொள்ளுமாறு கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பௌத்த கட்டமைப்பை வலுப்படுத்திக் கொள்ளக் கூடிய வகையிலான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கென மூன்று பிரதித் தலைவர்கள் நியமிக்கப்பட வேண்டும். இதன்படி மேல், மத்திய மற்றும் தென் மாகாணங்களை உள்ளடக்கக் கூடிய வகையில் பிரதித் தலைவர்கள் நியமிக்கப்பட வேண்டுமென கோரப்பட்டுள்ளது. எனினும், இந்த கோரிக்கை தொடர்பில் ரணில் விக்ரமசிங்க எவ்வித கருத்தையும் வெளியிடவில்லை.



ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளை மீறி இலங்கை செயற்படுகின்றது - அமெரிக்காவின் குற்றச்சாட்டினால் இராஜதந்திர முறுகல்!
[Sunday, 2013-05-26 08:19:31]

ஈரான் மீதான தடைகளை இலங்கை மீறுவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளதால், இரு நாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர முறுகல் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சிறிலங்கா அமைச்சரவைக் கூட்டத்தில், இந்த விவகாரம் குறித்து பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச பிரச்சினை எழுப்பியிருந்தார். இதுதொடர்பாக இலங்கை அரசாங்கத்துக்கு அமெரிக்கா தகவல் பரிமாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கிய மகிந்த ராஜபக்ச, இலங்கை போன்ற சிறிய நாடுகள் மீது அமெரிக்கா இத்தகைபய குற்றச்சாட்டுகளை கூறி வருவதாக குறிப்பிட்டதுடன்,



தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலை புலம்பெயர் தமிழர்கள் தயாரிக்கின்றனர் - சிங்கள் ஊடகம்!
[Sunday, 2013-05-26 08:14:28]

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலை புலம்பெயர் தமிழர்களே தயாரித்து வருவதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. எதிர்வரும் வட மாகாணசபைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலேய இவ்வாறு தயாரிக்கப்படுகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாரை தேர்தலில் களமிறக்க வேண்டும் என்பதனை புலம்பெயர் தமிழர்களே தீர்மானித்து வருகின்றனர். அதிகளவு சட்டத்தரணிகளை வேட்பாளர்களாக பெயரிட திட்டமிடப்பட்டுள்ளது. முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் உயர் நீதிமன்ற நீதவான் விக்னேஸ்வரனை நியமிக்கத் தீர்மானிக்க்பபட்டுள்ளது.



மட்டக்களப்பு கோராவெளி கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம்!Top News
[Saturday, 2013-05-25 21:09:14]

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வாழைச்சேனை புதுக்குடியிருப்பு கிராம எல்லையில் குடிகொண்டு அருள்பாலிக்கும் கோராவெளி கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த சடங்கு உற்வசத்தின் திருக்குளிர்த்தியாடும் நிகழ்வு இன்று சனிக்கிழமை இடம்பெற்றது. இவ்வாலய உற்சவம் கடந்த செவ்வாய்கிழமை ஆரம்பமாகி சனிக்கிழமை காலை தீ மிதிப்பு, திருக்குளிர்த்தியாடும் வைபவத்துடன் நிறைவுபெற்றுள்ளது. இறுதி நாள் அன்னதானக் குழுவினரால் அன்னதானம் வழங்கப்பட்டது. தீ மிதிப்பு நிகழ்வில் ஐநூக்கு மேற்பட்ட பக்தர் கலந்து கொண்டிருந்தனர்.



வெசாக் தினத்தில் தீக்குளித்த பிக்கு மரணம்!
[Saturday, 2013-05-25 21:04:22]

கண்டி தலதா மாளிகைக்கு முன்னால் மிருக வதையினை கண்டித்து தனக்கு தானே தீமூட்டிக்கொண்ட பௌத்த பிக்கு, சிகிச்சை பலனின்றி இன்று சனிக்கிழமை இரவு உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. கண்டி தலதா மாளிகைக்கு முன்பாகவே நேற்று வெள்ளிக்கிழமை அவர் தீ மூட்டிக்கொண்டார். வெசாக் தினத்தையொட்டி கண்டி தலதா மாளிகையில் விசேட மத நிகழ்வுகள் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையிலேயே அவர் தனக்கு தானே தீ மூட்டிக்கொண்டுள்ளார்.



இலங்கையைப் போல சிறந்த நிர்வாகத்தைக் கொண்ட நாடு உலகில் கிடையாது - பிரதமர்
[Saturday, 2013-05-25 20:09:26]

இலங்கையில் மதங்களுக்கிடையில் பாராபட்சம் நிலவுவதாகக் காட்டி நாட்டைப் பிளவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் சர்வதேச நீதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என பிரதமர் டி.எம். ஜயரட்ண குற்றம் சாட்டியுள்ளார். கண்டி தலதா மாளிகையில் ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்ற விசேட நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, எதிர்வரும் காலங்களில் எந்தவொரு நாடோ அல்லது இனவாதிகளோ நாட்டை அபகரிக்க இடமளிக்க முடியாது. நாட்டில் மதங்களுக்கிடையில் பாராபட்சம் நிலவுவதாகக் காட்டி நாட்டைப் பிளவுபடுத்துவதற்கான சூழ்ச்சிகளை சர்வதேம் மேற்கொண்டு வருகின்றது. எனவே இந்த விடயத்தில் அனைவரும் மிகுந்த கவனம் செலுத்துவது அவசியமாகும். நாட்டில் யுத்தம் முடிவடைந்த பின்னர் சகல மதங்களும் பராமரிக்கப்பட்டு மதத் தலங்களும் அபிவிருத்தி செய்யப்பட்டு வரும் நிலையில் இங்கு மதங்களுக்கிடையில் எத்தகைய ஏற்றத்தாழ்வும் கிடையாது.



அறுவை சிகிச்சையின் போது பெண்ணின் வயிற்றுக்குள் ஊசியை வைத்து தைத்த வைத்தியர் - கிண்ணியாவில் சம்பவம்
[Saturday, 2013-05-25 18:59:57]

கிழக்கு மாகாணத்தில் கிண்ணியா பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு அறுவை சிகிச்சை செய்யும் போது அப்பெண்ணின் வயிற்றுக்குள் ஊசியினை வைத்து தைக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அறுவை சிகிச்சைக்கு பின்னர் குறித்த பெண்ணுக்கு ஏற்பட்ட வயிற்று வலி காரணமாக கடந்த 22 ஆம் திகதி வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். அப்பெண்ணின் வயிற்றுப் பகுதியை எக்ஸ்ரே எடுத்து பார்த்த போது வயிற்றுகுள் ஊசி இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் மீண்டும் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்துவதற்காக அப்பெண் கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



சார்க் நாடுகளின் திரைப்பட விழா இ்ம்மாதம் 26ஆம் திகதி ஆரம்பம்..
[Saturday, 2013-05-25 18:49:27]

இலங்கையிலுள்ள தெற்காசிய நாடுகளின் கலாசார மத்திய நிலையம் ஏற்பாடு செய்துள்ள சார்க் நாடுகளின் திரைப்பட விழா இம்மாதம் 26ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை தேசிய திரைப்பட கூட்டுத்தாபனத்தில் நடைபெறவுள்ளது. ஆப்கானிஸ்தான் தவிர்ந்த ஏனைய நாடுகள் இந்த திரைப்பட விழாவுக்காக சினிமா திரைப்படங்களையும் விவரணத்திரைப்படங்களையும் அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விழாவின் போது தெரிவு செய்யப்படும் சிறந்த திரைப்படங்கள் விவரணப்படங்கள் மற்றும் சிறந்த நடிகர் நடிகைகளுக்கு விருதுகளும் வழங்கப்படவுள்ளன. கடந்த ஆண்டில் இலங்கை திரைப்படம் ஒன்றே மேற்படி விழாவின் போது சிறந்த திரைப்படமாக தெரிவு செய்யப்பட்டது.



வராலற்று சிறப்பினைச் பதிவு செய்த தமிழீழ சுதந்திர சாசன முரசறைவு மாநாடு !Top News
[Saturday, 2013-05-25 17:43:54]

ஈழவிடுதலைப் போராட்டத்தில் பெரும் வராலற்று சிறப்பினைச் பதிவதாக தமிழீழ சுதந்திர சாசன முரசறைவும் அதனையொட்டிய இடம்பெற்றிருந்த மாநாடும் அமைந்திருந்ததென மாநாட்டின் செயற்குழு தனது உத்தியோகபூர்வ ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தமிழீழ சுதந்திர சாசன மாநாட்டு செயற்குழுத் தலைவர் நிமால் விநாயகமூர்த்தி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது : அடிமை ஒழிப்புக்குக் குரல் கொடுத்த பெருமகன் திரு. 'தாடுஸ் ஸ்டீவன்சன்' அவர்களின் பிறப்பிடமாகிய அமெரிக்காவின் பென்சில்வேனிய மாநிலத்தின் லாங்காஸ்டர் நகரில் தமிழீழசுதந்திர சாசனம் மே-18மம் நாள் சனிக்கிழமை (18-05-2013) உணர்வெழுச்சியுடன் முரசறையப்பட்டது.



கைதிகளுக்கு இம்முறை பொதுமன்னிப்பு இல்லை - சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர்!
[Saturday, 2013-05-25 17:39:43]

இம்முறை வெசாக் பண்டிகையின் போது சிறைக் கைதிகள் எவருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்படவில்லையென புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் ஜி.எஸ்.விதானகே தெரிவித்துள்ளார். சிறு குற்றங்களை புரிந்து தற்போது சிறையில் உள்ள குற்றவாளிகள் சிலரின் பெயரை நீதி அமைச்சுக்கு பரிந்துரை செய்தபோதிலும் அதற்கான அனுமதி தமக்கு கிடைக்கவில்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



கொழும்பு துறைமுக தீ விபத்து தொடர்பில் 13 பேரிடம் வாக்கு மூலம்!
[Saturday, 2013-05-25 17:31:37]

கொழும்புத் துறைமுக களஞ்சியசாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து தொடர்பில் இதுவரையிலும் 13 பேரிடம் வாக்குமூலங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இரசாயன பகுப்பாய்வு நடவடிக்கைகளும் இன்று இடம்பெற்றன. கொழும்பு துறைமுக களஞ்சியசாலையில் நேற்று 24 ஆம் திகதி ஏற்பட்ட திடீர் தீ விபத்தையடுத்து களஞ்சியசாலை தொகுதியை பொலிஸார் பொறுப்பேற்றதுடன் விசாரணைகளையும் துரிதப்படுத்தினர். இந்நிலையிலேயே இதுவரையிலும் 13 பேரிடம் வாக்குமூலங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.



கிளி.வட்டக்கச்சி இந்து மயானத்திற்கு எரிகொட்டகை கையளிப்பு! Top News
[Saturday, 2013-05-25 17:19:40]

வட்டக்கச்சி மம்மில் இந்து மயானத்திற்கு இராமநாதபுரத்தைச் சேர்ந்த அமரர் இராஜேஸ்வரி வேலுப்பிள்ளை ஞாபகார்த்தமாக அவரின் குடும்பத்தவரால் எரிகொட்டகை அமைத்து வழங்கப்பட்டது. அமரர் இராஜேஸ்வரி வேலுப்பிள்ளை அவர்களது நிதிப் பங்களிப்பில் வட்டக்கச்சி அறிவொளி சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் இவ் எரிகொட்டகை அமைக்கப்பட்டு, வட்டக்கச்சி கிராம முன்னேற்ற சங்கங்களிடம் கையளிக்கும் நிகழ்வு கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் வி.சுவிஸ்கரன் தலைமையில் மம்மில் இந்து மயானத்தில் இடம்பெற்றது.



இலங்கையை சேர்ந்த தமிழ்ப் பணிப்பெண் ஜோர்தானில் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகம்! Top News
[Saturday, 2013-05-25 17:15:20]

ஜோர்தானில் இலங்கைப் பணிப்பெண் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அவரது பெற்றோர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். மட்டக்களப்பு, வாழைச்சேனை பிரதேசத்தில் கறுவாக்கேணியை சேர்ந்த 21 வயதான நாகேந்திரன் காந்திமதி என்ற பெண் ஜோர்தானில் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக இம்மாதம் 19-ம் திகதி அவரது குடும்பத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 6-ம் திகதி உயிரிழந்ததாகக் கூறப்படும் குறித்த பெண்ணின் மரணம் தொடர்பில் தமக்கு இரண்டு வாரங்களுக்குப் பின்னரே அறிவிக்கப்பட்டதாக அவரது குடும்பத்தினர் பிபிசி தமிழோசையிடம் கூறுகின்றனர். கடந்த 2010-ம் ஆண்டு ஜூலை 22ம் திகதி இவர் வீட்டுப் பணிப்பெண்ணாக ஜோர்தான் சென்றுள்ளார்.


TDE_Computers2011
Ramans2011
INNSYS-20120930
Canada Kanthasamy Kovil
Mahesan supramaniyam 031109
RoyaShades-l2011(04-12-11)
Suresh-remax-2013-01-01
AJRwindows22.05.13
TamilsGuid-191012-2013
NIRO-DANCE-100213
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com