Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 19, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
"தமிழர் நெஞ்சில் ரணத்தை ஏற்படுத்தும் சிங்களரின் போர் நினைவுச்சின்னம்" - கடிதத்தில் கண்ணீர் வடிக்கிறார் கருணாநிதி
[Wednesday, 2012-10-24 07:27:27]
News Service

சிங்களர்கள் போரின் நினைவுச் சின்னத்தை எழுப்பியிருப்பதாக வரும் தகவல், தமிழர் நெஞ்சில் ரணத்தை ஏற்படுத்தும் என்று கருணாநிதி இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார். தாய்த் தமிழகத்தின் தவிப்பு! என்ற தலைப்பில் அவர் வெளியிட்டுள்ள கடித அறிக்கை :

  

இலங்கையிலே தமிழர்கள் பல ஆண்டுகளாகப் படுகின்ற எல்லையில்லாத - எண்ணற்ற துயரங்கள் குறித்து, நம்மைப் பற்றி யார் குறை சொன்ன போதிலும், மற்றவர்களின் பாராட்டுக்காக நாம் காத்திருக்காமல், என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற வகையில், 1956ஆம் ஆண்டு முதல் ஆட்சியிலே இருந்தாலும், இல்லாவிட்டாலும், தொடர்ந்து நம்மால் முடிந்த அளவிற்குகுரல் கொடுத்து வருகிறோம் என்பதை உண்மையை நேசிப்பவர்கள் உணர்ந்தே இருப்பார்கள்.

நமது பல்வேறு கோரிக்கைகளுக்கு இந்திய அரசு உதவிட முன் வருவதாக உறுதி கூறிய போதிலும், உலக நாடுகளின் மத்தியில் நடுநிலை நாடுகளில் ஒன்று இந்தியா என்ற பெயரைத் தக்க வைத்துக் கொள்வதற் காகவாவது, சிலவற்றில் விட்டுக் கொடுத்துப் போகிறதோ இந்திய அரசு என்று சிலர் சந்தேகம் கொள்ளக் கூடிய அளவிலேதான் செயல்படுகிறது.

உதாரணமாக இலங்கைத் தமிழர்களைக் கொல்வதற்குக் காரணமாக இருக்கும் இலங்கை ராணுவத்தினருக்கு இந்தியாவிலே பயிற்சி அளிக்கக் கூடாது என்பதுதான் தமிழகத்திலே உணர்வுள்ள தமிழர்களின் கோரிக்கை, வேண்டுகோள். அந்த வேண்டுகோளை இந்திய அரசிடம் நாம் பல முறை விடுத்துள்ளோம். ஆனால் சிங்கள அரசின் அமைச்சரே நம்மிடம் சவால் விடுகின்ற அளவிற்கு, இலங்கை ராணுவத்திற்கு இந்தியாவிலே பயிற்சி அளிக்கச் செய்தே தீருவோம், முடிந்தால் தமிழகத்திலே உள்ளவர்கள் தடுத்துப் பார்க்கட்டும் என்கிறார்.

இந்திய அரசும் சிங்கள அமைச்சருக்கு நேரடியாகப் பதில் சொல்ல முன் வரவில்லை. இந்தியாவிலே இலங்கை ராணுவத்திற்கு பயிற்சி அளிக்க மாட்டோம் என்று இந்திய அரசின் சார்பில் திட்டவட்டமாகத் தெரிவிக்க அவர்களால் இயலவில்லை. இலங்கையில் படுகொலைக்கு ஆளான பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களும், இந்தியர்களும் தான் என்று ஏற்றுக் கொள்ள இந்திய அரசு இன்னமும் தயாராக இல்லைபோலும்!

இந்தியாவின் சலுகைகளைப் பெற்றுக் கொள்ளும் சிங்கள அரசு, மறைமுகமாகவோ அல்லது தெரிந்தும் தெரியாமலோ சீனாவின் உதவியை, பாகிஸ்தானின் துணையை தொடர்ந்து பெற்றுக் கொண்டுதான் உள்ளது.

எந்த அளவிற்குச் சிங்கள அரசு இலங்கைத் தமிழர்களுக்கு விரோதமாகச் செயல்படுகிறது என்பதற்கு மற்றுமோர் எடுத்துக்காட்டாக 22-10-2012 இந்து நாளிதழில் முதல் பக்கத்தில் ஒரு கட்டுரையை பிரபல பத்திரிகையாளர்கள் நிருபமா சுப்ரமணியனும், ஆர்.கே. ராதாகிருஷ்ணனும் எழுதியிருக்கிறார்கள். அந்தக் கட்டுரைக்கான தலைப்பே, விடுதலைப் புலிகள் இறுதியாக போரிட்ட இடத்திற்கு அருகிலேயே - தமிழர்களை வெறுப்பேற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ள வெற்றி நினைவுச் சின்னம் என்பதாகும். அதிலே உள்ள சில செய்திகள் வருமாறு -

இலங்கையில் வடக்குப் பகுதியின் மையத்தில் - 2009ஆம் ஆண்டு நடந்த உச்சக்கட்டப் போரில் பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட ரத்தம் தோய்ந்த பூமிக்கு அருகில் - அந்தப் போரில் இலங்கை அரசு பெற்ற வெற்றியை உணர்த்திடும் வகையில் ஒரு நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டுள்ளது.

2009ஆம் ஆண்டு போரின் போது கொடுமையான நிகழ்ச்சிகள் நடந்த இடத்தில் கருங்கல் குன்று ஒன்றின் மீது இலங்கை ராணுவத்தின் ராணுவ வீரர் ஒருவர் முகத்தில் பெருமகிழ்ச்சியோடும், பெருமிதத்தோடும் ஒரு கையில் துப்பாக்கி ஏந்தியபடி - மற்றொரு கையில் இலங்கையின் தேசியக் கொடியை ஏந்தியபடி சிலை ஒன்று பொறிக்கப் பட்டுள்ளது. அந்த இடத்தின் ஒவ்வொரு மூலையிலும் கருங்கல்லால் செதுக்கப்பட்ட இலங்கை அரசின் தேசிய விலங்கான சிங்கம் நிறுவப்பட்டுள்ளது.

இந்தப் போர் நினைவுச் சின்னத்திற்கு அருகில், போர் அருங்காட்சியகம் ஒன்றும் உருவாக்கப் பட்டுள்ளது. இந்த இரண்டையும் பார்ப்பதற்காக சிங்களச் சுற்றுலா பயணியர் நாள்தோறும் வந்து சென்ற வண்ணம் உள்ளனர். போர் அருங்காட்சி யகத்தில் விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றிய துப்பாக்கி உள்ளிட்ட போர் ஆயுதங்கள், படகுகள் போன்றவை காட்சிப் பொருள்களாக வைக்கப் பட்டுள்ளன. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தங்கியிருந்த மறைவிடமும், கடல் புலிகள் பயிற்சிக்காகப் பயன்படுத்திய நீச்சல் குளமும் காட்சிப் பொருள்களாக ஆகியிருக்கின்றன. நீர் மூழ்கிக் கப்பல்கள், விடுதலைப் புலிகள் கைப்பற்றிய ஜோர்டான் நாட்டுக் கப்பல் போன்றவையும் அங்கே காட்சி அளிக்கின்றன.

புதுக் குடியிருப்பு சந்திப்பிலிருந்தே போர் நினைவுச் சின்னத்திற்கு போவதற்கு ராணுவத் தினர் தாங்களே பயணிகளை வழிகாட்டி அழைத்துச் செல்கின்றனர். இந்தச் சந்திப்பிலிருந்து 4.5 கிலோ மீட்டர் தொலைவில் முல்லைத் தீவுக்குச் செல்லும் சாலையில், போர் அருங்காட்சியகத்தைப் பற்றிய அறிவிப்புப் பலகை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. அந்த நினைவுச் சின்னத்திற்கும், போர் அருங்காட்சியகத்திற்கும் சென்றால், சிங்கள ராணுவ வீரர்களே ஒவ்வொன்றைப் பற்றிய விளக்கத்தையும், பின்னணியையும் சிங்கள மொழியிலே விவரிக்கிறார்கள். சில காட்சிப் பொருள்கள்,

ஒரு கூடத்திலும்; சில பொருள்கள் ஓர் அறையிலும்; மற்றவை திறந்த வெளியிலும் வைக்கப்பட்டுள்ளதாம். நினைவுச் சின்னத்திற்கு அருகில் உள்ள பெட்டிக்கடையை நடத்தும் சிங்கள ராணுவ வீரர் ஒருவர், நாள்தோறும் 500 முதல் 700 பேர் அங்கு வருவதாகவும், வார இறுதியில் 2000 பேர் வருவதாகவும் தெரிவித்தார். 250 கிலோ மீட்டர் தொலைவிலிருந்து நினைவுச் சின்னத்தைப் பார்க்க வந்திருந்த சிங்களக் கல்லூரி மாணவர் ஒருவர், எங்களுடைய ராணுவத்தைப் பற்றி நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். அதனாலே தான் நாங்கள் இங்கு வந்திருக்கிறோம் என்றாராம்.

போர் நினைவு சின்னத்திலிருந்து முல்லைத் தீவு வரையில் உள்ள சாலையின் இருமருங்கிலும் போரின் காரணமாக இடம் பெயர்ந்த தமிழர்கள் அவசரம் அவசரமாக விட்டுச் சென்ற துணிமணிகள், பாத்திரப் பண்டங்கள் போன்ற அனைத்தும் கீழே தாறுமாறாக இன்னமும் இறைந்து கிடக்கின்றனவாம். இந்தப் போர் நினைவுச் சின்னம் தமிழர்களின் கண்களில் விரலை விட்டுக் குத்துகின்ற அளவில் வேண்டுமென்றே திட்டமிட்டு அமைக்கப்பட்டுள்ளதாம்.

இப்படிச் சொன்னவர், போரின் போது பெரிதும் பாதிக்கப்பட்ட ஒரு தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் தன்னுடைய தந்தையை சிறையிலிருந்து விடுவிப்பதற்கு நிறைய பணத்தைச் செலவு செய்ய வேண்டியிருந்ததாம். எவ்வளவோ தியாகங்களைச் செய்தும் கூட, தமிழர்களாகிய நாங்கள் எங்கிருக்கிறோம் என்றே தெரியாத நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று அவர் கண்ணீரோடு புலம்பினார்.

போரில் பலியாகி, அழிந்து போன அப்பாவித் தமிழர்களுக்கு எந்த நினைவுச் சின்னமும் அங்கே கிடையாது. ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் போரின் போது கொல்லப்பட்டதையே இலங்கை அரசு ஒப்புக் கொள்ளத் தயாராக இல்லை. போர் நினைவுச் சின்னமும், போர் அருங்காட்சியகமும் இலங்கை அரசின் நாகரிகமற்ற செயல். இலங்கை அரசு மேற்கொண்டு வருவதாகச் சொல்லிக் கொள்ளும் சமாதான முயற்சிக்கு, இந்தச் சின்னங்கள் எந்த வகையிலும் உதவிகரமாக இல்லை. இலங்கையின் வடக்குப் பகுதியில் சிங்கள ராணுவம் தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் இன்னமும் இருந்து வருகிறதுஎன்பதற்கு அடையாளம்தான், இந்தப் போர் நினைவுச் சின்னமும், அருங்காட்சியகமும் ஆகும்.

இது கண்டு போரினால் பாதிக்கப்பட்ட அப்பாவித் தமிழர்கள் அனைவரும் பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளார்கள். இலங்கை ராணுவத்தின் 19 பிரிவுகளில், 14 பிரிவுகள் வடக்குப் பகுதியில் மட்டும் இருந்து வருகின்றன. ராணுவ முகாம்கள் அனைத்தும் கண்டோன்மென்ட் பகுதிகளாக மாற்றப்பட்டு அங்கே ராணுவ வீரர்கள் தமது குடும்பங்களோடு குடியேறு வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தமிழர்கள் வாழ்ந்து வரும் பகுதிகள் இப்படி சிங்களர்களின் ஆக்கிர மிப்புக்கு உள்ளாவது கண்டு, தமிழர்கள் கவலை மிகக்கொண்டு கண்ணீர் சிந்துகின்றனர். புதுக்குடியிருப்பு - முல்லைத் தீவு - ஏ.9 நெடுஞ்சாலை போன்றவற்றில் காணப்படு வதைப் போல இலங்கை ராணுவத்தின் நடமாட்டம் யாழ்ப்பாணத் தீபகற்பத்தில் வெளிப்படையாகத் தெரியவில்லை.

யாழ்ப்பாணத் தீபகற்பத்தில் இருந்த பல்லாயிரக்கணக்கான தமிழ்க் குடும்பங்கள் பலாளி விமான தளத்திற்கு அருகிலே உள்ள கடும் கண்காணிப்புப் பகுதிக்கு இடம் பெயர வைக்கப்பட்டுள்ளார்கள். அகதிகள் முகாம்களில் வாடிக் கொண்டிருக்கும் இந்தத் தமிழர்கள் என்றாவது ஒரு நாள் தங்களுடைய சொந்த இடத்திற்குத்திரும்ப மாட்டோமா என்று ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குச் சொந்தமான நிலங்களில் இலங்கை ராணுவத்தினர் விவசாயம் செய்து காய்கறிகள் போன்றவற்றை விளைவித்து, பலனடைந்து பரவசப்பட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்துத் தமிழர்கள் குமுறுகின்றனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியாவுக்குச் செல்லப் பயன்படும் ஏ.9 நெடுஞ்சாலை முழுதும் புத்தவிகாரங்கள் புதியதாக முளைத்திருக்கின்றன. இலங்கை ராணுவத்தினரால் நடத்தப்படும் ஓட்டல்களும், கடைகளும் வழிநெடுகத் தோன்றியிருக்கின்றன. , எந்த அளவிற்கு ராஜபக்ஷே தலைமையிலான இலங்கை அரசு, இன்னமும் தமிழர்களை அவமானப்படுத்தி அடக்குவதுஎன்ற எண்ணத்தோடு; விடுதலைப் புலிகள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து முப்பதாண்டு களுக்கு மேலாக போரிட்ட இடத்திலே - அப்பாவித் தமிழர்கள் கால்நடைகளைப் போல வேட்டையாடப்பட்ட இடத்திலே - தங்கள் வெற்றியை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்ற அளவிற்கு நினைவுச் சின்னம் அமைத்து, அவற்றை அன்றாடம் நூற்றுக்கணக்கான சிங்களவர்கள் வந்து பார்த்துப் பரவசப்படு கிறார்கள் என்பதையெல்லாம் படிக்கும்போதே நம்முடைய நெஞ்சம் பதறுகிறது என்றால், அந்தக் கொடுமையை அங்கே அன்றாடம் காணுகின்ற ஈழத் தமிழர்களின் மனம் என்ன பாடுபடும்? இப்படிப்பட்ட செயல்கள் எல்லாம் அங்கேயுள்ள தமிழர்களை ஒற்றுமைப்படுத்தி வாழச் செய்யும் முயற்சிகள்தானா?

உலக நாடுகள் ஒருபோதும் அங்கீகரிக்க ஒப்புக் கொள்ள முடியாத போர்க் குற்றங்கள் அனைத்தையும் மனசாட்சி உறுத்தல் சிறிதுமின்றிப் புரிந்து விட்டு; ஐ.நா. போன்ற சர்வதேச மன்றங்கள் கொஞ்சங்கூடச் சகித்துக் கொள்ளவியலாத மனித உரிமை மீறல்களை எல்லையில்லாத அளவுக்குச் செய்து விட்டு; மனித மனமோ - மனித நேயமோ சிறுதுளியுமின்றி மிகப் பெரிய இனப் படுகொலையை நிறைவேற்றிவிட்டு; பல்லாயிரக்கணக்கான தமிழ் இளம் பெண்டிரை விதவையராக்கி விட்டு; நீண்ட நெடிய வரலாறும், பண்பாட்டுப் பாரம்பரியமும் கொண்ட தமிழ் தேசிய இனத்தை தரணியெங்கும் தெருக்களிலே அலைய வைத்து விட்டு; போரில் வெற்றி பெற்று விட்டதாகக் கருதிக் கொண்டு, போலிப் பூரிப்போடு, போர் நினைவுச் சின்னம்எழுப்பியிருக்கிறது சிங்களப் பேரினவாதம்!

ஈழத் தமிழர்களின் தியாக பூமியில் சிங்களர்கள் எழுப்பியுள்ள இந்த நினைவுச் சின்னம், உலகத் தமிழர்களின் நெஞ்சங்களிலெல்லாம் நெருப்பைக் கொட்டும் என்று தெரிந்தே, வேண்டுமென்றே அவர்களின் உள்ளங்களை யெல்லாம் நோகச் செய்ய வேண்டுமென்ற நோக்கத்தோடு இந்த நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டுள்ளது என்பதுதான் உண்மை.

இலங்கையிலே ஒற்றுமையும் அமைதியும் ஏற்பட வேண்டுமென்று பெரிதும் விரும்புகின்ற ஐ.நா. மன்றம் போன்ற சர்வதேச நிறுவனங்கள் இந்த உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் கடந்த மாதம் நாம் நடத்திய டெசோ மாநாட்டிலே இந்தக் கருத்துக்களை யெல்லாம் உள்ளடக்கித்தான் பதினான்கு தீர்மானங்களை நிறைவேற்றினோம்.

நமது டெசோ மாநாட்டில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட அந்தத் தீர்மானங்களைத் தான் இந்த மாதக் கடைசியிலே நமது கழகப் பொருளாளர் தம்பி மு.க. ஸ்டாலினும், நாடாளு மன்றக் கழகக் குழுவின் தலைவர் தம்பி டி.ஆர். பாலுவும்எடுத்துச் சென்று ஐ.நா. சபையிலே ஒப்படைக்க விருக்கிறார்கள்.

இதற்குப் பிறகாவது, இலங்கைத் தமிழர்களுக்கு விடிவு காலம் பிறக்காதா, அவர்களின் நல்வாழ்வுக்காக நாளும் நாளும் ஏங்கிக் கொண்டிருக்கும் உலகத் தமிழர்களின் துயரம் நீங்காதா என்ற ஏக்கத்தோடுதான் தாய்த்தமிழகம் தவித்துக் கொண்டிருக்கின்றது! - என்று இந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் மு.கருணாநிதி.

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

தமிழீழ மக்களின் சுதந்திர வேட்கையினை முரசறைந்த தமிழீழ சுதந்திர சாசனம் : 110 000 மேற்பட்ட மக்கள் பங்கெடுப்பு ! சிங்கள தேசத்திற்கு பேரிடி!Top News Top News
[Sunday, 2013-05-19 22:04:59]

தமிழர் தேசத்தினை போரில் வெற்றிகொண்டுவிட்டதென்ற மிதப்பில் சிங்கள தேசம் தனது இராணுவ அணிவகுப்புடன் பவனிவந்தவேளை, 1 இலட்சத்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் பங்கெடுத்துக் கொண்ட தமிழீழ சுதந்திர சாசனம் முரசறையப்பட்டது. 2009ம் ஆண்டுக்கு பின்னரான ஈழவிடுதலைப் போராட்டத்தின் விடுதலைப்பாதையில் இராஜதந்திர களத்தில் தமிழீழ சுதந்திர சானத்தின் முரசறைவு தமிழர் தரப்பின் வரலாற்று முக்கியமிக்கதொரு பெரும் அரசியல் முன்னகர்வாக கருதப்படுவதோடு ஆயிரக்கணக்கான தமிழீழத் தாயக மக்கள் தங்கள் கருத்துக்களை இச்சாசன உருவாக்கத்திற்கு வழங்கியுள்ளமை உணர்வெழுச்சியினை ஏற்படுத்தியுள்ளது.



மனித எலும்புக்கூடுகள் குருநாகல் மலையில் மீட்பு!
[Sunday, 2013-05-19 21:43:37]

குருநாகல், யதிஸ்ஸா மலைப் பகுயிலிருந்து மனித எலும்புக்கூடுகள் இரண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளன.பொலிஸருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின்படி இவ் மனித எலும்புக் கூடுகள் இரண்டும் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. எலும்புக் கூடுகளில் ஒன்று ஆண் எனவும் மற்றையது பெண் எனவும் சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.



பிரான்சில் நடைபெற்ற மே. 18 தமிழின அழிப்பு நினைவு நாள் Top News
[Sunday, 2013-05-19 21:12:43]

தமிழின அழிப்பு நினைவு நாள் மே. 18 நான்காவது ஆண்டில் பிரான்சில் மாபெரும் நினைவுப் பேரணி 18.05.2013 நடைபெற்றது. தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவும், அதன் உப கட்டமைப்புக்களும், தமிழீழ மக்கள் பேரவையும் இணைந்து இப் பேரணியை ஏற்பாடு செய்திருந்தனர். இன்றைய போராட்டத்தில் குர்திஸ்தான் விடுதலை அமைப்பும் பங்கு கொண்டு தமது முழு ஆதரவையும் தெரிவித்தனர்.



ஈழத்தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண சீனா அழுத்தம் கொடுக்க வேண்டும் - கூட்டமைப்பு!
[Sunday, 2013-05-19 21:00:04]

தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண சீனா, இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு யதார்த்தமான முறையில் தீர்வு காண்பதற்கும், அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைப்பதற்கும் அரசாங்கம் மெய்யாகவே முனைப்புகாட்ட, சீனா அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளின் அழுத்தங்களை ஈடு செய்வதற்கு இலங்கை அரசாங்கம் சீனாவின் உதவியை நாடி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.



பிரபாகரனின் படம் ஜெயலலிதாவுக்கு ஓட்டுக் கேட்கும்போது பிடித்தது, இப்போது பிடிக்கவில்லையா? சீமான் கேள்வி!
[Sunday, 2013-05-19 20:52:15]

கடலூரில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்துக்கு போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இதையடுத்து சிறிய அளவுக் கூட்டமாக உள்ளரங்கில் ஒரு திருமண மண்டபத்தில் கூட்டம் நடைபெற்றது. இதனால், பொதுக்கூட்டத்துக்காகப் போடப்பட்ட மேடைகளை கட்சியினர் பிரித்து எடுத்தனர். மேடை கலைக்கப்பட்டு பேனர்கள் எடுக்கப்பட்டது. இந்நிலையில் உள்ளரங்குக் கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், கடந்த தேர்தலில் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக ஓட்டுக் கேட்டு பல்வேறு கூட்டங்களை நடத்தினேன். அந்தக் கூட்டங்கள் நடந்த மேடைகளில் எல்லாம் பிரபாகரன் படத்தைப் போட்டிருந்தோம். அப்போது பிடித்தது, இப்போது பிடிக்கவில்லையா? இதுபோல் 2 ஆயிரத்துக்கும் அதிகமான கூட்டங்களில் நான் பேசியிருக்கிறேன். அந்தக் கூட்டங்களில் எல்லாம் பிரபாகரன் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அப்போதெல்லாம் என்ன கலவரமா வெடித்தது?



மாகாணசபை முறைமை அவசியமா? இல்லையா? - சர்வஜன வாக்கெடுப்பு நடாத்த அரசு திட்டம்!
[Sunday, 2013-05-19 20:44:48]

வடக்குத் தேர்தலுக்கு எதிராக பத்து லட்சம் கையொப்பங்கள் திரட்டப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வடக்குத் தேர்தல் நடத்துவதனை தடுக்குமாறு கோரி தேசிய சுதந்திர முண்ணனி இந்தக் கோரிக்கையை முன்வைக்கவுள்ளது. வடக்குத் தேர்தல்களை ரத்துச் செய்யுமாறு கோரி பத்து லட்சம் கையொப்பங்கள் திரட்டப்பட்டு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. பொதுமக்களின் கையொப்பங்கள் திரட்டும் நடவடிக்கை நாளை முதல் ஆரம்பமாகவுள்ளது. கொழும்பில் நடைபெறவுள்ள இந்த ஆரம்ப நிகழ்வில் கட்சியின் தலைவர் விமல் வீரவன்ச கலந்து கொள்வார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. வடமாகாணசபைத் தேர்தலுக்கு முன்னதாக காணி,மற்றும் காவல்துறை அதிகாரங்கள் ரத்துச் செய்யப்படவுள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.



மெரினாவில நடைபெற்ற மே 18 போர்க்குற்றநாள் நினைவேந்தல் நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். Top News
[Sunday, 2013-05-19 20:44:05]

சிங்கள இனவெறியர்களால் இலங்கைத் தீவில் ஈழத்தில் நடாத்தப்பட்ட தமிழினப் படுகொலையின் நான்காம் ஆண்டு நினைவு தினம் நினைவேந்தல் நிகழ்ச்சியாக இன்று 19.05.13 சென்னை மெரினாவில் கடைப்பிடிக்கப்பட்டது. இந்நிகழ்வானது மே 17 இயக்கத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.



தனித் தமிழீழத்தினை வென்றடைவதற்கான தெளிவான நிகழ்ச்சி நிரலை முன்நிறுத்திய பிரதமர் உருத்திரகுமாரனின் மே 18 உரை!Top News
[Sunday, 2013-05-19 20:39:54]

முள்ளிவாய்க்கால் பெருவலியின் கூட்டுநினைவின் 4ம் ஆண்டினை உலகத் தமிழனம் நினைவேந்தியிருக்கும் இவ்வேளை, தமிழீத்தினை வென்றடைவதற்கான தமிழர் தரப்பின் நிகழ்ச்சி நிரலினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உரத்திரகுமாரன், தனது மே-18 தமிழீழத் தேசிய துக்க நாள் உரையில் தெளிவாக முன்னிறுத்தியுள்ளார். உலகத் தமிழினம் நோக்கிய தனதுரையின் தமிழீழ சுதந்திர சாசன முரசறைவுப் பெருநிகழ்வில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் வழங்கியிருந்தார்.



இலங்கை, சிங்கள பெளத்தர்களின் நாடு எனக் கூறுபவர்கள் இந்நாட்டின் வரலாறு தெரியாதவர்கள் - சுரேஷ் எம்.பி
[Sunday, 2013-05-19 20:39:12]

இலங்கை சிங்கள பெளத்தர்களின் நாடு எனக் கூறுபவர்கள் இந்நாட்டின் வரலாறு தெரியாதவர்கள். விஜயன் வருகைக்குப் பின்னரே இலங்கையில் பெளத்த மதம் பரவியதாக மகாவம்சம் தெரிவிக்கின்றது. இப்படியிருக்க இது சிங்கள பெளத்தர்களின் நாடு என எப்படி கூற முடியும்? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். விஜயனின் வருகைக்கு முன்னர் இங்கு நாகர்கள் வாழ்ந்துள்ளனர். அவர்கள் தமிழ் பேசுபவர்கள், சிவ வழிபாடு செய்பவர்கள், தமிழ் பண்டைய மொழி. இதற்கு நீண்ட வரலாறு உண்டு. சிங்கள மொழி நான்காம் நூற்றாண்டில் தோன்றியதாக கூறப்படுகின்றது.



மலையகத்தின் மூத்த தொழிற்சங்கவாதி ஓ.ஏ.ராமையா காலமானார்.
[Sunday, 2013-05-19 20:30:51]

மலையகத்தின் மூத்த தொழிற்சங்கவாதி ஓ.ஏ.ராமையா காலமானார். சுகவீனமுற்றிருந்த அவர், தனது 76-வது வயதில் நேற்றிரவு காலமானார். ஓ.ஏ.ராமையா நாவலபிட்டி, பூண்டுலோயாவில் உள்ள தோட்டமொன்றில் 1938ம் ஆண்டில் பிறந்தார். ஹட்டனில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது பூதவுடல், நாளை ஹட்டன் நகரசபை மண்டபத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர், மாலை நாவலபிட்டிக்கு தகனக் கிரியைக்காக கொண்டுசெல்லப்படவுள்ளது. செங்கொடிச் சங்கத்தின் செயலாளர் ஓ.ஏ.ராமையா, 1950களின் இறுதியில் தனது தொழிற்சங்க வாழ்க்கையைத் தொடங்கினார். இலங்கை பெருந்தோட்ட தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பின் செயலாளராகவும் பணியாற்றிய அவர், மலையக தொழிற்சங்க அரசியலில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக பங்களிப்புச் செய்துள்ளார்.



படையினரின் பிரசன்னம் வட மாகாணசபைத் தேர்தலின்போது அதிகரிக்கும் - சுட்டிக்காட்டியது கபே!
[Sunday, 2013-05-19 15:02:46]

எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள வட மாகாணசபைத் தேர்தலின் போது படையினரின் பிரசன்னம் அதிகரிக்கும் என தேர்தல் கண்காணிப்பு நிறுவனங்கள் அச்சம் வெளியிட்டுள்ளன. தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வடக்கில் இராணுவத்தின் பிரசன்னம் உயர்வடையக் கூடிய சாத்தியம் அதிகரித்துள்ளதாக கபே என்ற தேர்தல் கண்காணிப்பு அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது, தேர்தல் நடாத்தப்படுவதற்கு முன்னதாக கருத்துச் சுதந்திரம், ஊடக சுதந்திரம் மற்றும் சுதந்திரமாக நடமாடக் கூடிய உரிமைகள் முழுமையாக உறுதிப்படுத்தப்பட வேண்டியது அவசியமானது என அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரஞ்சித் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார். சுதந்திரமாக சென்று பிரச்சாரங்களை மேற்கொள்வதில் தொடர்ந்தும் தடைகள் நீடிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.



யேர்மனியில் எழுச்சியுட​ன் நடைபெற்ற தமிழ் இனவழிப்பு நாள் - 2013!Top News
[Sunday, 2013-05-19 14:58:17]

ஒட்டுமொத்த உலகச் சதியுடன், சிறீலங்கா பயங்கரவாத அரசாங்கம் தமிழீழத்தில் நடாத்திய இனவழிப்பு நாளான மே-18 இன் நினைவுநாள் நேற்று யேர்மனியின் டுசில்டோர்ப் நகரில் எழுச்சியுடன் நடைபெற்றது. பிற்பகல் 14:00 மணியளவில் டுசில்டோர்ப் தொடரூந்து நிலையத்தின் முன்பாக ஆரம்பித்த மக்களின் பேரணி , கோட்டொலிகள் , பதாதைகள் அடங்கலாக நகர நிகழ்வுத் திடலை நோக்கி நகர ஆரம்பித்தது. முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனவழிப்புக் கொடூரங்களை நினைவுபடுத்திய பதாதைகளை மக்கள் ஏந்தியிருந்தனர். வீதியின் இருமருங்கிலும் நின்ற யேர்மனிய மற்றும் வெளிநாட்டு மக்களுக்குத் தெளிவுபடுத்தும் வகையில் துண்டுப்பிரசுரங்கள் விநியோக்கிக்கப் பட்டன. எமது மண்ணில் நடைபெற்ற தமிழின அழிப்பினை நினைவுபடுத்தும் வகையில், அதற்கு நியாயம் கோரும் வகையிலும் எழுப்பப்பட்ட கோட்டொலிகள் வெளிநாட்டவர்களின் கவனத்தை ஈர்த்தன.



தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அத்திவாரம் தமிழரசுக் கட்சியே - மாவை சேனாதிராஜா எம்.பி!
[Sunday, 2013-05-19 14:58:10]

'தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட காலத்தில் இருந்து அதன் அத்திவாரமாக தமிழரசுக்கட்சி திகழ்கிறது' என்று தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார். நல்லூர் பிரதேச சபையின் நிதியில் அமைக்கப்பட்ட 'யாழ்ப்பாணம் வரவேற்கிறது' வளைவு திறப்பு விழா, இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறுகையில்,



யுத்த வெற்றிக் கொண்டாட்டத்தின்போது கடலில் மூழ்கிய கடற்படை வீரரின் சடலம் மீட்பு!
[Sunday, 2013-05-19 14:53:27]

யுத்த வெற்றி விழா கொண்டாடத்தின் போது காணாமற் போன கடற்படை வீரரது சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. இவரது சடலம் பம்பலப்பிட்டி கடற்பரப்பில் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார். காலி முகத்திடல் கடற்பரப்பில் நேற்று (18) காலை இடம்பெற்ற யுத்த வெற்றிவிழாவின் போது குறித்த சிறிய ரக படகு மூழ்கியது. படகில் இருவர் பயணித்ததாகவும் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாகவும் ஒருவர் தப்பித்துக் கொண்டதாகவும் கடற்படை தகவல்கள் தெரிவித்தன.



ஸ்ரீலங்கா அரசிற்கு எதிராக அணி திரட்டுகின்றார் அமைச்சர் டக்ளஸ்!
[Sunday, 2013-05-19 11:29:30]

13வது அரசியலமைப்பு திருத்த சட்டத்தை ஒழிக்கும் நடவடிக்கைக்கு எதிராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான குழுவொன்று ஒன்றிணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 13வது திருத்தத்திற்கு அமைய காணி, காவல்துறை அதிகாரங்கள் மாகாணசபைகளிடமே தொடர்ந்து இருப்பதையும், 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதை உறுதிப்படுத்தவும் இந்த அணி உருவாக்கப்பட்டுள்ளது. டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையிலான இந்த அணியில் ஆளும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் உள்ளிட்ட அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் 31 பேர் இடம்பெற்றுள்ளனர்.



ஸ்ரீலங்காவிற்கு எதிரான ஐ.நா தீர்மானத்தின் பின்னரான நிலைமைகள் குறித்து அமெரிக்கா கவனம்!
[Sunday, 2013-05-19 11:15:16]

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் பின்னரான நிலைமைகள் குறித்து அமெரிக்கா கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. மனித உரிமை நிலைமைகளை மேம்படுத்துமாறு கோரி இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. இந்தத் தீர்மானத்தில் குறிப்பிட்பட்ட பரிந்துரைகளை அரசாங்கம் பின்பற்றுகின்றதா? இல்லையா? என்பது குறித்து கவனம் செலுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்ட எஸ்.கஜேந்திரன் உள்ளிட்ட 15 பேர் விடுதலை!
[Sunday, 2013-05-19 09:00:35]

கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் உட்பட 15 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.பி.லக்சிறி விஜியசிங்க தெரிவித்தார். முள்ளிவாய்க்காலில் இறந்த தமிழ் உறவுகளை நினைவுகூரும் முகமாக மன்னார் பெரியகடை பொதுமண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட அஞ்சலி கூட்ட நிகழ்வில் கலந்து கொண்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் கஜேந்திரன் உள்ளிட்ட 9 ஆண்கள் மற்றும் 6 பெண்கள் கைது செய்யப்பட்டனர். இதன் போது செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் ஜோசப் பெணாண்டோவும் கைது செய்யப்பட்டார்.



இன்னொரு இனத்தை அழித்து விழா கொண்டாடுவதுதான் வெற்றி விழாவா?: முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் அரியநேந்திரன் Top News
[Sunday, 2013-05-19 08:32:44]

தமிழ் மக்களுக்கு சுதந்திரமான அரசியல் தீர்வு விடுதலை எப்போது கிடைக்கின்றதோ, அது வரையும் எமது பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளுகளை நினைவு கூர்ந்து பிராத்தனை செய்யும் வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். மட்டக்களப்பிலுள்ள இலங்கை தமிழரசுக்கட்சியின் கிளை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த வைபவத்தில் தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன்; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு செல்லுவது போல அடிக்கடி 4ம் மாடிக்கும் செல்கின்றனர். ஒரு மாதத்திற்கு இரண்டு தடவைகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு செல்வது போன்று மாதத்திற்கு ஒரு தடவையாவது 4ம் மாடிக்கு செல்ல வேண்டியுள்ளது.



நோர்வேயில் எழுச்சியுற நடைபெற்ற இன அழிப்பு நாள் நினைவேந்தல் நிகழ்வு Top News
[Sunday, 2013-05-19 07:45:25]

18.05.2013 மாலை 1700 மணிக்கு இன அழிப்பு நாள் நினைவேந்தல் பேரணி ஒஸ்லோ மத்திய தொடரூந்து நிலைத்தின் அருகாமையிலுள்ள சதுக்கத்தில் இருந்து ஆரம்பமாகி நோர்வே பாராளமன்றத்தை சென்றடைந்தது. பாராளமன்றத்தின் முற்பகுதியில் முள்ளிவாய்கால் பெரும் நெருப்பில் கொண்ட கொள்கைக்காக பெரும் புயலை எதிர்கொண்டு வீரகளமாடிய வேங்கைகளுக்கும் அவர்களின் கேடயமாய் நின்று மானப்போர் புரிந்த மக்களுக்கும் மலர் வணக்கம் செலுத்தப்பட்டது. ஈழத்தமிழ் அவையினர் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த பேரணியில் பல நூற்றுக்கணக்கான மக்கள் கரம்கோர்த்து தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தினர்.



நேற்றைய தினம் சுவிஸில் நடைபெற்ற மே-18 முள்ளிவாய்க்கால் செந்நெருப்புநாள் நிகழ்வு! Top News
[Sunday, 2013-05-19 07:38:28]

விடுதலைக்காகப் போராடிய தமிழினத்தை உலக நாடுகள் பலவற்றின் துணையோடு இனப்படுகொலை செய்த, இந்தக்காலத்தின் அதியுச்ச இனப்பேரழிப்பு நடந்த தமிழீழத்தில், இறுதிவரை மண்டியிடாது போராடிய மாவீரர்களுக்கும், மக்களுக்குமான நான்காம் ஆண்டு நினைவு எழுச்சி நிகழ்வான மே-18 முள்ளிவாய்க்கால் செந்நெருப்புநாள், நேற்று சூரிச் மாநிலத்தில் அமைந்துள்ள Helvetia Platz திடலில் நடைபெற்றது. இதில் சுவிஸ் வாழ் தமிழ்மக்கள் மிகவும் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டிருந்தனர். சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற வணக்க நிகழ்வானது பொதுச்சுடரேற்றலுடன் ஆரம்பமாகி, சுவிஸ் மற்றும் தமிமீழத் தேசியக்கொடிகள் ஏற்றப்பட்டதனைத் தொடர்ந்து, ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கத்துடன், மலரஞ்சலி செலுத்தப்பட்டது.


Mahesan supramaniyam 031109
TamilsGuid-191012-2013
TDE_Computers2011
Canada Kanthasamy Kovil
NIRO-DANCE-100213
Ramans2011
RoyaShades-l2011(04-12-11)
INNSYS-20120930
Suresh-remax-2013-01-01
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com