Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
June 19, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
தமிழக மீனவர்களை விமர்சிக்கவில்லை! - பாடகி சின்மயி நீண்ட விளக்கம்
[Tuesday, 2012-10-23 19:09:38]
News Service

மறவர் சீமையில் தமிழ் வளர்ச்சி குடும்பத்தைச் சேர்ந்தவள் நான். தமிழக மீனவர்களை விமர்சித்து நான் டிவிட் செய்யவில்லை என்று பாடகி சின்மயி விளக்கம் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக அவர் அளித்துள்ள நீண்ட விளக்கம்....

  

ஒட்டு மொத்த தமிழர்களுக்கு எதிரானவள், ஒரு குறிப்பிட்ட சாதித் திமிர், மீனவர்கள் குறித்து தரக்குறைவாகப் பேசினேன் என்று பலரும் தங்களுக்குத் தோன்றிய வகையில் மனம் போன போக்கில் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசினார்கள். நான் ஒரு தமிழச்சி. பல தமிழர்களின் வீட்டின் செல்லப் பிள்ளை. தமிழர்களின் ஆதரவினாலும், கடவுள் கிருபையினாலும், என் தாயாருடன் ஆசிர்வாததினாலும் வளர்ந்து வரும் இளம் திரைக் கலைஞர்களில் நானும் ஒருவள்.

சிறு வயது முதலே என்னை சீராட்டி, பாராட்டி வளர்த்து வருவது இந்தத் தமிழ்ச் சமூகம் தான். பாரம்பரியமாகவே தமிழ் வளர்க்கும் பரம்பரையில் வந்தவள் நான். வித்வான் ரா.ராகவ ஐயங்கார் , முனா ராகவ ஐயங்கார் அவர்களின் பேத்தி என் தாயார். மறவர் சீமையில் தமிழ் வளர்த்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவள் தான் நான்!

உள்ளூர்த் தமிழர்களானாலும் சரி, வெளிநாடுகளில் வசிக்கும் புலம் பெயர் தமிழர்களானாலும் சரி என்னை அவர்களின் சொந்த சகோதரியாகவே பார்த்து வருகிறார்கள். நானும் அவர்களிடத்தில் எனக்குள்ள மதிப்பை கட்டிக் காத்து வருகிறேன். அதிலும் சிறப்பாக இலங்கைத் தமிழர்களைப் பொறுத்த வரையில், எங்கள் மறவன் சீமையின் ஒரு Extension ஆகத்தான் நாங்கள் கருதுகிறோம். அவர்களுடைய கஷ்டத்தை இன்னும் அதிகமாக உணர்ந்திருக்கிறோம். நான் இலங்கை தமிழர்களுக்காக நடத்தி வந்த கச்சேரிகளில் பங்கு பெற்று மருத்துவம் மற்றும் படிப்பிற்கு சம்பந்தப்பட்ட Charitieகளுக்கு நிதியுதவி திரட்டியிருக்கிறோம்.

இந்தச் சமுதாயத்தால் வளர்ச்சி பெற்று வரும் ஒவ்வொரு தனி மனிதனும் தன்னால் இயன்ற அளவு சமுதாயம் வளரவும் பங்களிப்பு தரவேண்டும் என்ற நம்பிக்கை உடையவள் நான். என்னுடைய கடுமையான பணிகளுக்கு இடையே சமூக வலை தளங்களான ஃபேஸ்புக், ட்விட்டர் மூலமாக என்னுடைய கருத்துகளை பகிர்ந்து கொள்வதோடு இல்லாமல் அடுத்தவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விஷயத்தை எப்படி அணுகுகிறார்கள் என்று தெரிந்து கொண்டால் எனக்கு மிகுந்த பயனாக இருக்கும் என்று நம்பினேன். சுமார் இரண்டாண்டுகளுக்கு முன் சமூக வலை தளங்களான ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகியவற்றில் இணைந்து கொண்டேன். உலகெங்கிலும் வாழ்ந்து வரும் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் வரவேற்றார்கள். பேசினார்கள். விவாதித்தார்கள்.

திடீரென ஒரு நாள் தமிழக மீனவர்கள் மீதான இலங்கை அரசின் தாக்குதலைக் கண்டிக்கக்கோரி ட்விட்டரில் ஒரு சிலரால் ட்விட்டுகள் வெளியாகின. #TNFisherman என்ற hashடேக் (தொடர் கீச்சு) மூலம் அனைவரும் இலங்கை அரசை கண்டிக்க வேண்டும் என்று வற்புறுத்தத் தொடங்கினார்கள். என்னையும் கேட்டார்கள். நல்லதொரு காரியத்தில் நானும் இணைந்து செயல்படுவதில் என்றுமே தயங்கியதில்லை. ஆனால் மேற்படி #TNFishermanதொடர்பில் வெளியான பல்வேறு ட்வீட்டுகளில் நம் நாட்டு மூத்த அரசியல் தலைவர்கள் உள்பட பலரை கேவலமாகவும், அவதூறாகவும் திட்டி ட்விட்டினார்கள். எனவே எனக்கு இந்த ஒரு குழுவுடன் இணைந்து (இந்த எண்ணம் நல்லதாக இருந்தாலும்) குறிப்பிட்ட hashtag ஐ ஆதரிக்க மாட்டேன் என்று கூறினேன்.

இந்த hashtag இல் மேற்கண்ட காரணங்களுக்காக நான் வெகுவாக புறக்கணிக்கும் ஒரு குழுவினரால் வற்புறுத்தப்பட்டதால் இந்தத் தொடர் கீச்சில் இணைய மறுத்தேன். இதற்கும் மீனவர்கள் மேல் எனக்குள்ள அனுதாபத்திற்கும் எந்த வித தொடர்பும் கிடையாது. என் அனுதாபத்தை என்னுடைய முறையில், hashtag போடாமல் நானே தனியாக ஒரு ட்விட் போட்டேன். இவர்களுடன் இணைய மறுத்தேன். இது தவறா? இதில் மீனவர்களுடைய பிரச்னையை பேசுகிறார்கள, அல்லது தங்களுடைய தனிப்பட்ட பிரச்சனைய புகுத்துகிறார்களா?

அடுத்து "நீங்கள் மீன் சாப்பிடுவது இல்லையா?" என்ற கேள்விக்கு "இல்லை. நான் சைவம்" என்று பதில் கூறினேன். "மீன் தொட்டி வாஸ்துக்காக இருக்கிறதே" என்று அதே ட்விட்டில் பதில் கேலி செய்த பொது, "நான் மீன் சாப்பிடுவது இல்லை, தொட்டியில் வைத்து துன்புறுத்துவதும் இல்லை. PETA supporter" என்று ஒரு ":)" போட்டேன். இந்த பதில் கூட மேலே சொன்ன#TNFisherman Hash டேக் பிரச்னை நடப்பதற்கு முதல் நாள் வேறொரு கருத்துப் பரிமாற்றத்தின் போது தான்! ஆனால் நான் மீனவர்களைக் கொல்பவர்களைக் கண்டிக்க மாட்டேன். மீனவர்கள் மீன்களை கொல்கிறார்கள் என்றெல்லாம் கூறியதாக தகவல் திரித்துக் கூறப்பட்டு இணையம் முழுவதும் பரவியது.

இந்த கற்பனை கீச்சுக்குச் சொந்தக்காரர் திருவாளர் @rajanleaks. இதெல்லாம் உண்மை தானா என்று உங்களில் பலர் என் தரப்பு என்று ஒன்று இருக்கவேண்டும் என்று கூட நினைக்கத் தவறியது எனக்கு மிகவும் வருத்தமே. மற்றும் என்னுடைய சாதி, மதம், இனம் என்று சகல வகைகளிலும் ஏசப்பட்டேன் .

அந்த தருணத்தில் எழுந்த உணர்ச்சியின் வெளிப்பாடு பிறகொரு சமயம் இடஒதுக்கீடு தொடர்பான கருத்து விவாதத்தில் ஒரு மாணவி நூற்றிக்கு அருகில் மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும், FC என்ற காரணத்தினாலும், பண வசதிக் குறைவாலும், தனது மேற்படிப்பு தடைபட்டு போன வருத்தத்தை பகிர்ந்த போது, அந்த தருணத்தில் இந்த இட ஒதுக்கீடு அவசியம் தானா என்று நினைத்தேன். அது அந்த தருணத்தில் எழுந்த உணர்ச்சியின் வெளிப்பாடு. நீங்களும் அப்படித் தான் யோசிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். ஆனால் மீண்டும் என் சாதியைப் பிடித்து இழுத்து, இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவள் சின்மயி என்று பிரச்னை கிளப்பப்பட்டது.

அன்றிலிருந்து இன்று வரை பல சமயங்களில் பல இடங்களில் என்னை நேரடியாகவும், மறைமுகமாகவும் படு கேவலமான வசைச் சொற்களைக் கொண்டு ட்விட்டரில் விமரிசித்து வருகிறார்கள் ஒரு சிலர் கொண்ட கும்பல் ஒன்று. என்னைப் பெற்று வளர்த்தெடுத்த என் தாய்..என்னுடைய வளர்ச்சிக்காவே தன் நேரம் முழுவதையும் செலவழித்து வரும் என் தாய்.. இந்த மாதிரியான வசைச் சொற்களைக் கண்டு மனம் வருந்தினார். இப்படிப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று முடிவு செய்து, இந்த மாதிரி தொடர்ந்து வசைபாடுபவர்களின் பட்டியலைத் தயாரித்து போலீஸ் துறையிடம் கொடுக்கலாம் என்று முடிவு செய்தோம்.

பொது வெளியில் இப்படி அநாகரீகமாக நடந்த பலரின் பின்னணியை என் தாயார் கண்டறிந்து இவர்களில் பெரும்பாலானவர்கள் இள வயதும், திருமணம், சிறு குழந்தைகள் என்ற நிலையில் இருப்பதை உணர்ந்து அவசரத்தில் சட்ட நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவேண்டாம், பொறுமையாக பேசி உணர்த்த முயற்சிக்கலாம் என்று பலரிடம் அலைபேசியிலும், அவர்களின் நண்பர்கள் மூலமாகவும், ஒரு முடிவு காண, என் தாயார் முயற்சித்தார். அதன் விளைவு தான் திரு sharankay அவர்களின் மிக கீழ்த்தரமான கீசுகளின் வெளிபாடு.

இதற்கு பிறகும் நாங்கள் சட்டபூர்வமான நடவடிக்கையை எடுக்காவிட்டால் எங்களுக்கே மிகவும் தீதாத முடியும் என்ற காரணத்தினால் இந்த முடிவிற்கு தள்ளப்பட்டோம். நாங்கள் பரிதாபப்பட்டதை பயந்து விட்டதாக நினைத்து அதன் பிறகு தான் அநாகரிகத்தின் உச்சத்தையும் கடந்துவிட்டனர். மற்றபடி யாரையும் பழிவாங்குவதிலோ, தண்டனை வாங்கி கொடுப்பதிலோ எங்களுக்கு எந்த விதமான மகிழ்ச்சியும் கிடையாது.

இவற்றைத் தொடர வேண்டாம் என்று ஃபோன் மூலம் என் அம்மா சம்பந்தப்பட்டவர்களிடம் தொடர்பு கொண்டு பேச முயற்சித்த போதும் அதனை மிரட்டல் விடுவதாகக் கூறி திசை திருப்ப முயன்றார்கள். என் அம்மாவையும் மிகத் தரக்குறைவாக கிண்டல், கேலி செய்து ட்விட்டினார்கள். அதன்பிறகு சட்டத்தின் துணியை நாடுவதை தவிர வேறு வழில்லாத நிலைக்கு தள்ளப்பட்டோம். இதற்குப் பிறகும் ஒரு பத்திரிகையின் கார்ட்டூனிஸ்ட் மூலம் நாங்கள் பேசாத வார்த்தைகளை நாங்கள் பேசியதாகச் சொல்லி பொய்ச் செய்தி பரப்பி உலகம் முழுதும் உள்ள தமிழர்களின் கொந்தளிப்பான உணர்சிகளை தூண்டும் வகையாக விஷயத்தை திசை திருப்பப்பட்டது.

இந்நிலையிலும் ஏராளமான தமிழ்ச் சகோதர, சகோதரிகள் தங்களால் ஆன அனைத்து உதவிகளையும் எங்களுக்குச் செய்தார்கள். வழி நடத்தினார்கள். ஆறுதல் சொன்னார்கள். இந்தவொரு சிரமமான சூழலில் எனக்கு முழு ஆதரவளித்த ஒட்டுமொத்த தமிழ்ச் சமுதாயத்துக்கும் நாங்கள் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

இலங்கைக்குப் படையெடுக்கும் போராட்டத்தைக் கைவிட்டனர் இராமேஸ்வரம் மீனவர்கள்!
[Wednesday, 2013-06-19 17:54:20]

இலங்கை நோக்கி 1,000 படகுகளில் வெள்ளைக்கொடி கட்டி செல்லும் போராட்டத்தை, ராமேஸ்வரம் மீனவர்கள் வாபஸ் பெற்றனர். இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 57 பேரை விடுவிக்க கோரி, ஜூன் 22ல் ராமேஸ்வரத்தில் இருந்து 1,000 படகுகளில் வெள்ளைக்கொடி கட்டி, இலங்கைக்கு செல்லும் போராட்டத்தை மீனவர் சங்கத்தினர் அறிவித்திருந்தனர். இந்நிலையில் ராமநாதபுரம் கலெக்டர் நந்தகுமார் தலைமையில், மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடந்தது. "விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக, கலெக்டர் உறுதி அளித்ததை அடுத்து, போராட்டத்தை வாபஸ் பெற்றதாக' மீனவர் சங்க தலைவர் போஸ் தெரிவித்தார்.



இலங்கைக் கடற்படையை கண்டித்து செப்ரெம்பரில் மாநாடு - பாஜக அறிவிப்பு!
[Wednesday, 2013-06-19 17:51:16]

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்கி வருவதைக் கண்டித்து, மீனவர்களுக்கு ஆதரவாக தமிழக கடற்கரையோர மாவட்டங்களில் வரும் செப்டம்பரில் பாஜக மாநாடு நடத்தவுள்ளது என்று கட்சியின் மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். வேலூரில் பொன். ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் மேலும் கூறியதாவது: சேது சமுத்திர திட்டம் தமிழகத்துக்கு தேவையான திட்டம்தான். துரதிருஷ்டவசமாக அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.



கனிமொழிக்காக அன்புமணியிடம் தூது போனார் ஸ்டாலின் - சோனியாவுடன் திமுக எம்.பிக்கள் பேச்சு!
[Wednesday, 2013-06-19 17:18:19]

தமிழ்நாட்டில் இருந்து பாராளுமன்ற மேல்சபைக்கு 6 எம்.பி.க்களை தேர்வு செய்வதற்காக வருகிற 27-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி, தி.மு.க., தே.மு.தி.க. இடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. ஒரு எம்.பி.யை தேர்ந்து எடுக்க 34 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை. சட்டசபையில் அ.தி.மு.க.கூட்டணிக்கு 170 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.எனவே அ.தி.மு.க. சார்பில் நிறுத்தப்பட்டுள்ள டாக்டர் மைத்ரேயன்,கே.ஆர்.அர்ஜூனன், த.ரத்தினவேல், இரா.லட்சுமணன் மற்றும் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த டி.ராஜா ஆகிய 5 பேரும் தலா 34 ஓட்டுகள் வாங்கி வெற்றி பெறுவது உறுதி.



பீகாரில் நம்பிக்கை வாக்கெடுப்பில் தப்பியது நிதிஷ்குமார் அரசு!
[Wednesday, 2013-06-19 17:08:39]

பீகார் சட்டப்பேரவையில் இன்று நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தள கட்சி வெற்றி பெற்றுள்ளது. பாஜவுடனான கூட்டணியை ஐக்கிய ஜனதா தளம் முறித்துக் கொண்ட நிலையில், இன்று பீகார் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பைக் கொண்டு வந்தார் முதல்வர் நிதிஷ் குமார்.நம்பிக்கை வாக்கெடுப்பு துவங்கியதும், பாஜக உறுப்பினர்கள் வெளி நடப்பு செய்ததை அடுத்து, 216 வாக்குகள் பெற்று, நிதிஷ்குமார் அரசு வெற்றி பெற்றது.



காஷ்மீர் முதல்வரையும் மத்திய அமைச்சரையும் விரட்டியடித்த பண்டிட்கள்!
[Wednesday, 2013-06-19 07:19:46]

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், சில ஆண்டுகளுக்கு முன் வரை, சகல பெருமையுடன் வாழ்ந்த பண்டிட் சமுதாயத்தினரை, பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் கைகோர்த்த உள்ளூர் சக்திகள் வெளியேற்றி விட்டன. அங்கு, பிராமணர்கள், பண்டிட்டுகள் என, அழைக்கப்படுகின்றனர். அகதிகள் முகாம்களில் வசிக்கும் அவர்கள், தங்களின் வழக்கமான, பூஜை, புனஸ்காரங்களை செய்யத் தவறுவதில்லை. நேற்று முன்தினம், துலாமல்லா என்ற இடத்தில் உள்ள, கிர் பவானி கோவிலில் பூஜை செய்து கொண்டிருந்த போது, அங்கு வந்த, மாநில முதல்வர், உமர் அப்துல்லாவை விரட்டி அடித்தனர்.



"மீண்டெழும் பாண்டியர் வரலாறு' நூலுக்கு தமிழக அரசு தடை - கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது என்று எழுத்தாளர்கள் கொதிப்பு!
[Wednesday, 2013-06-19 07:14:16]

பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் எனக் கூறி, "மீண்டெழும் பாண்டியர் வரலாறு' என்ற புத்தகத்தை, தமிழக அரசு தடை செய்துள்ளது, கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது; தடையை நீக்க வேண்டும்' என, எழுத்தாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செந்தில் மல்லர் என்பவர் எழுதிய, "மீண்டெழும் பாண்டியர் வரலாறு' என்ற புத்தகம், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் எனக் கூறி, அப்புத்தகத்தை வெளியிட, தமிழக அரசு தடை விதித்துள்ளது. இப் புத்தகத்திற்கு தடை செய்திருப்பது, தமிழகத்தில் உள்ள புத்தக பிரியர்களுக்கு, பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.



மன்மோகன்சிங்கின் குடுகுடு அமைச்சரவை!
[Wednesday, 2013-06-19 07:07:49]

எல்லா கட்சிகளும், இளைஞர் அணி, இளைஞர் பாசறை, புதிய உறுப்பினர் சேர்க்கை என "இள ரத்தத்தை' பாய்ச்சிக்கொண்டு இருக்கும் போது, மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான அரசில், வயதானவர்கள் நிறைய இடம் பெற்று, "தள்ளாடி'க் கொண்டு இருக்கிறது. கேபினட் அமைச்சர்களில் பிரதமர் மன்மோகன் சிங் உள்பட வயதானவர்களே அதிகம். இணை அமைச்சர்கள் மற்றும் தனிப்பொறுப்பு இணை அமைச்சர்கள் பட்டியலில் மட்டுமே, சற்று வயது குறைவானவர்கள் தென்படுகின்றனர்.கேபினட்டில் அதிக வயதானவராக தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்துறை அமைச்சர் சிஷ்ராம் ஓலா இருக்கிறார். இவரது வயது 86.



வரலாறு காணாத மழையால் வடமாநிலங்கள் தவிப்பு - 131 பேர் பலி!
[Wednesday, 2013-06-19 07:02:48]

தீவிரமடைந்து வரும் தென்மேற்கு பருவமழை காரணமாக வடமாநிலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆங்காங்கு ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம், நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு போன்றவற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 131 ஆக உயர்ந்துள்ளது. வெள்ளம் காரணமாக புனித தலங்களில் மொத்தம் 73,000 பேர் சிக்கியுள்ளனர். 500-க்கும் மேற்பட்ட யாத்ரீகர்களைக் காணவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக உத்தரகண்ட், இமாசலப்பிரதேசம், ஹரியாணா உள்ளிட்ட வடமாநிலங்களில் இதன் பாதிப்பு அதிகமாக உள்ளது.



ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் கோளாறு - ஓடுபாதையில் கண்டுபிடிக்கப்பட்டதால் 182 பயணிகளும் தப்பினர்!
[Wednesday, 2013-06-19 06:48:41]

சென்னையில் இருந்து கொழும்பு செல்லும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் 182 பயணிகளுடன் நேற்று மாலை 5.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. விமானம் ஓடுபாதையில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுபிடித்தார். உடனே விமானத்தை அங்கேயே நிறுத்திய விமானி, விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு தெரிவித்தார். இதையடுத்து விமானத்தை இயக்க வேண்டாம். புறப்பட்ட இடத்திலேயே நிறுத்தும்படி கட்டுப்பாட்டு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.



வெள்ளத்தில் சிக்கிய இமாச்சல பிரதேச முதல்வர் 60 மணிநேரப் போராட்டத்தின் பின்னர் ஹெலி மூலம் மீட்பு!
[Tuesday, 2013-06-18 19:01:41]

வெள்ளத்தில் சிக்கிய இமாச்சல பிரதேச மாநில முதல்வர் வீரபத்திரசிங் 60 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டார். இவருடன் தவித்த 10 பேரும் பத்திரமாக மீட்டு கொண்டு வரப்பட்டனர். வட மாநிலங்களில் தற்போது பருவ மழை வெளுத்து வாங்கி வருகிறது. பஞ்சாப், அரியானா, குஜராத், உத்தர்கண்ட், டில்லி, மும்பை உள்ளிட்ட பகுதிகளில் கடும் மழை பெய்தது. இதில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 60 க்கும் மேற்பட்டோர் பலியாயினர். தொடர்ந்து இங்கு மீட்பு பணிகள் நடந்து வருகிறது. கங்கை, யமுனா நதியில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.



வெலிங்டன் இராணுவ முகாமை முற்றுகையிட்ட 400 பேர் கைது!
[Tuesday, 2013-06-18 18:56:45]

ஊட்டி வெலிங்டன் ராணுவ முகாமை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்திய 15க்கும் மேற்பட்ட அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 400 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் சட்டக்கல்லூரி மற்றும் கல்லூரி மாணவிகள் 15 பேரும் அடங்குவர்.இந்நிலையில், இதன் அடுத்தக் கட்டப் போராட்டம் குறித்து அனைத்துக் கட்சிக் குழுவுடன் கூடி விவாதிக்கப்பட்டு முடிவு செய்யப்பட்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இது குறித்து, பெரியார் தி.க.வின் ராமகிருஷ்ணன் கூறுகையில்,காங்கிரஸ் கட்சி அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்.



இறந்துபோன அர்ச்சகர் மறுநாள் உயிருடன் எழுந்தார் - இராமநாதபுரத்தில் பரபரப்பு!
[Tuesday, 2013-06-18 18:42:29]

ராமநாதபுரம் அருகே இறந்து போனதாகக் கருதப்பட்ட ஒருவர் உயிர் பிழைத்து மீண்டது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினம் சிருங்கேரி சங்கரமடம் வடக்கு தெருவில் வசித்து வருபவர் ரமணா ஐயர் என்பவரின் மகன் ரவி சாஸ்திரி(45).இவர், தேவிப்பட்டனம் திலகேஸ்வர சுவாமி கோயிலில் அர்ச்சகராக உள்ளார். கடந்த 13 ம் தேதி இதயக் கோளாறு காரணமாக இவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தார். இந்நிலையில் இதயக் கோளாறு காரணமாக 16ம் தேதி உயிரிழந்தார் என்று அறிவிக்கப்பட்டது.



காங்கிரசின் ஆதரவை நாடுகிறது தேமுதிக - எம்எல்ஏக்களை ஞானதேசிகனிடம் தூது அனுப்பினார் விஜயகாந்த்!
[Tuesday, 2013-06-18 18:38:18]

தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு வருகிற 27 ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. தேமுதிக சார்பில் ஏ.ஆர் இளங்கோவன் வேட்பாளராக நிறூத்தப்பட்டுள்ளார்.இந் நிலையில் இன்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகனை சத்தியமூர்த்தி பவனில் தே.மு.தி.கவை சேர்ந்த அனகை முருகேசன், பாஸ்கர், அருண் சுப்பிரமணியன், முத்துக்குமார், மனோகர் ஆகிய 5 எம்.எல்.ஏக்கள் சந்தித்து மாநிலங்கள தேர்தலில் தங்கள் வேட்பாளருக்கு ஆதரவு தரும்படி கோரிக்கை வைத்தனர்.அவர்களிடம் மேலிடத்தில் கேட்டு முடிவைத் தெரிவி்ப்பதாக ஞானதேசிகன் கூறி உள்ளதாக கூறப்பட்டுகிறது.



சஞ்சய் தத் ஒருமாத சிறைவாசம் நிறைவு - இனிமேல் தான் உண்மையான சோதனை!
[Tuesday, 2013-06-18 18:36:52]

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், சிறையில் அடைக்கப்பட்டு, ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து, கோர்ட் உத்தரவின் படி, இனி அவருக்கு வீட்டிலிருந்து உணவு, மின் விசிறி, படுக்கை ஆகியவை வழங்கப்பட மாட்டாது. மாதம் ஒரு முறை அவரது உறவினர்கள் மட்டுமே அவரை சிறையில் சந்திக்க முடியும்.மும்பை தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களின் போது, ஆயுதம் வைத்திருந்த குற்றத்திற்காக, நடிகர் சஞ்சய் தத்துக்கு, ஐந்தாண்டு சிறை தண்டனை வழங்கி, மும்பை, "தடா' கோர்ட் தீர்ப்பளித்தது. ஏற்கனவே, ஒன்றரை ஆண்டு சிறை வாசத்தை முடித்து விட்டதால், கடந்த மாதம் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட சஞ்சய், மேலும், மூன்றரை ஆண்டு சிறையில் இருக்க கட்டாயம் ஏற்பட்டுள்ளது.



இலங்கை தமிழர்கள் அமைதியாக வாழ்வதற்கு அனைத்து முயற்சிகளையும் இந்தியா மேற்கொள்கிறது! - கருணாநிதிக்கு மன்மோகன் கடிதம்
[Tuesday, 2013-06-18 07:09:19]

இலங்கை தமிழர்கள் அமைதியாக வாழ்வதற்கான வழிவகைகள் காணப்படும். இந்த இலக்கை அடைவதற்கான எல்லா முயற்சிகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம் என்று திமுக தலைவர் கருணாநிதிக்கு எழுதிய கடிதத்தில் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.இலங்கை தமிழர்களின் உரிமைகள், வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் விஷயத்தில் தலையிட வேண்டும். இலங்கை தமிழர்களுக்கு அதிகாரத்தை பெற்றுத்தரும் 13வது அரசியல் சட்ட திருத்தத்தை ரத்து செய்யும் முயற்சியை தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு திமுக தலைவர் கருணாநிதி கடந்த 9ம் தேதி எழுதிய கடிதத்தில் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதற்கு பிரதமர் மன்மோகன் சிங் பதில் அனுப்பியுள்ளார்.



சுதர்சன நாச்சியப்பன் உள்ளிட்ட 8 பேருக்கு மத்திய அமைச்சர் பதவி!
[Tuesday, 2013-06-18 07:01:22]

மத்திய அமைச்சரவை நேற்று மாற்றியமைக்கப்பட்டது. புதிதாக 8 அமைச்சர்கள் பதவியேற்றனர். தமிழகத்தை சேர்ந்த சுதர்சன நாச்சியப்பன் இணை அமைச்சரானார். ஜனாதிபதி மாளிகையில் நேற்று மாலையில் நடந்த நிகழ்ச்சியில் ஆஸ்கர் பெர்னாண்டஸ், கிரிஜா வியாஸ், தமிழகத்தை சேர்ந்த சுதர்சன நாச்சியப்பன் உட்பட 8 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்றனர். அவர்களுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.புதிய அமைச்சர்களில் ஆஸ்கர் பெர்னாண்டஸ், கிரிஜா வியாஸ், சிஸ்ராம் ஓலா, கே.எஸ்.ராவ் ஆகியோர் கேபினட் அமைச்சர்கள். சுதர்சன நாச்சியப்பன், ஜே.டி. சீலம், மாணிக்ராவ் காவிட், சந்தோஷ் சவுத்ரி ஆகியோர் இணை அமைச்சர்கள்.



இலங்கைப் படையினருக்கு பயிற்சி அளிப்பதற்கு எதிராக இன்று போராட்டம் - வெலிங்டனில் இராணுவத்தினர், பொலிசார் குவிப்பு!
[Tuesday, 2013-06-18 06:56:58]

இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பதை எதிர்த்து குன்னூர் வெலிங்டன் ராணுவ முகாமை பல்வேறு அரசியல் கட்சிகள் இன்று முற்றுகையிடப்போவதாக அறிவித்துள்ளன. இதையடுத்து, ராணுவம் மற்றும் போலீசாரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டம் குன்னூர் அடுத்த வெலிங்டன் கன்டோன்மென்ட் பகுதியில் ராணுவ முகாம், ராணுவ பயிற்சி மையம் உள்ளது. இந்த மையத்தில் கடந்த 27ம் தேதி முதல் இலங்கை ராணுவ அதிகாரிகள் விங் கமாண்டர் எம்.எஸ். பண்டார தசநாயக, மேஜர் சி.எஸ்.ஹரிஷ்சந்திரா ஹெட்டியராச்சிகே ஆகியோருக்கு இந்திய ராணுவத்தினர் பயிற்சி அளித்து வருகின்றனர்.



வற்றிய மேட்டூர் அணைக்குள் தெரியும் கோவிலுக்குள் புராதன காலப் புதையல்?
[Tuesday, 2013-06-18 06:51:04]

மேட்டூர் அணை கட்டப்பட்ட போது மேச்சேரி அருகே இருந்த சோழப்பாடி வீரபத்திரன் கோயில் நீரில் மூழ்கியது. இதனால் அப்பகுதியில் வசித்த மக்கள், அங்கிருந்த கோயில் சிலைகளை எடுத்து சென்று, தற்போது தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சோழப்பாடியில் வைத்து புதிய கோயில்களை கட்டினர். மேட்டூர் நீர்தேக்கம் தற்போது வறண்டுள்ள நிலையில், கடந்த 80 ஆண்டுகளாக நீரில் மூழ்கியிருந்த இந்த கோயில் வெளியே தெரிகிறது. 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோயில் சுட்ட செங்கற்கள் மற்றும் சுண்ணாம்பு கலவையால், நேர்த்தியான வேலைப்பாடுகளுடன் முன் மண்டபம், நுழைவு வாயில், உள் மண்டபம், மூலஸ்தானம் ஆகிய நான்கு நிலைகளோடு அமைக்கப்பட்டுள்ளது.



சர்ச்சையில் சிக்கினார் ஷாருக்கான் - குழந்தையின் பாலினத்தை சட்டவிரோதமாக அறிந்தாரா?
[Tuesday, 2013-06-18 06:44:03]

பாலிவுட் நடிகர் ஷாருக் கான் மீது, மகாராஷ்டிரா மாநில கதிரியக்கவியல் நிபுணர்கள் சங்கத்தின் சார்பில், மாநில சுகாதாரத் துறை அமைச்சரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக் கான், அண்மையில், தான் மூன்றுவது முறையாக தந்தையாகப் போவதாகக் கூறி, மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். ஷாருக் கான் மற்றும் அவரது மனைவி கவுரி ஆகியோர், வாடகைத் தாய் உதவியுடன், தங்களின் மூன்றாவது குழந்தையை பெற்றெடுக்கப் போவதாக, ஊடகங்களில் செய்திகள் வெளியாயின. அந்தக் குழந்தை, ஜூலை மாதம், முதல் வாரத்தில் பிறக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. அப்போது, தான் ஒரு ஆண் குழந்தைக்கு தந்தை ஆகப் போவதாக ஷாருக் கான், தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.



சுதர்சன நாச்சியப்பனுக்கும் அமைச்சர் பதவி?
[Monday, 2013-06-17 17:42:18]

மத்திய மந்திரிசபை மாற்றம் இன்றுமாலை நடைபெற உள்ளது.ரெயில்வே, நெடுஞ்சாலை, வீட்டுவசதி, ஊரக மேம்பாடு ஆகிய இலாகாக்களுக்கு புதிய மந்திரிகள் இன்று பொறுப்பு ஏற்க உள்ளனர். சிலரது இலாகா மாற்றம் செய்யப்பட உள்ளது. 10 முதல் 12 பேர் மத்திய மந்திரி சபையில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களில் 8 பேர் புதுமுகங்கள். சிஸ்ராம்ஓலா, ஜெ.டி. சீலம், சுதர்சன நாச்சியப்பன், சந்தோஷ் சவுத்திரி ஆகியோரும் மந்திரி சபையில் சேர்த்துக் கொள்ளப்பட உள்ளனர்.


INNSYS-20120930
Suresh-remax-2013-01-01
Mahesan supramaniyam 031109
Ramans2011
NIRO-DANCE-100213
AJRwindows22.05.13
RoyaShades-l2011(04-12-11)
TDE_Computers2011
TamilsGuid-191012-2013
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com