Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 22, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
இனப்பிரச்சினை உள்நாட்டு விவகாரம், இதில் நாம் தலையிட முடியாது: கூட்டமைப்பின் கோரிக்கையை சீனா மறுப்பு
[Friday, 2012-10-19 08:44:12]
News Service

இனப்பிரச்சினை இலங்கையின் உள்நாட்டு விவகாரமாகும். இதற்கு இலங்கை அரசாங்கமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பேச்சுவார்த்தை நடத்தியே தீர்வு காணப்படவேண்டும். இந்த விடயத்தில் சீனா தலையீடுகளை மேற்கொள்ள முடியாது ௭ன்று இலங்கைக்கான சீனத் தூதுவர் வூ ஜியங்கோ தெரிவித்துள்ளார்.

  

இனப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வு உடனடியாக காணப்படுவது கடினமானதாகும். ௭னவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த விடயத்தில் பொறுமை காக்க வேண்டும் ௭ன்றும் அவர் அறிவுரை வழங்கியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான பாராளுமன்றத் தூதுக்குழுவினர் சீனத் தூதுவரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியபோதே மேற்கண்டவாறு அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

சீன தூதுவரின் அழைப்பின்பேரில் சம்பந்தன் ௭ம்.பி. தலைமையில் ௭ம்.பி.க்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், ௭ம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை சீனத் தூதுவரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர். கொழும்பிலுள்ள சீன தூதுவராலயத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் புதுடில்லிக்கு விஜயம்செய்து இந்தியத் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். இந்திய விஜயத்தின் பின்னர் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்தச் சந்திப்பின்போது இந்திய விஜயம் குறித்தும் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயம் தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது. சந்திப்பின்போது கருத்துத் தெரிவித்த கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், இலங்கையின் அபிவிருத்திக்கு சீனா உதவி வருகின்றமை வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும்.ஆனால் இராணுவத்தை நவீனமயப்படுத்துவதற்கும் இராணுவத்தினருக்கு குடிமனைகளை அமைப்பதற்கும் சீன அரசாங்கம் இலங்கைக்கு உதவி வருகின்றமை ஏற்றுக்கொள்ளத்தக்க நடவடிக்கையல்ல. இலங்கையில் கடந்த 65 வருடங்களாக ஜனநாயக ரீதியிலும் ஆயுதப் போராட்ட ரீதியிலும் தமிழ் மக்கள் உரிமைக்காக போராடினார்கள்.

இத்தகைய போராட்டங்களுக்கு மத்தியிலும் இன்னமும் தமிழ் மக்களுக்கு உரிய தீர்வு கிடைக்கப்பெறவில்லை. யாழ். குடாநாட்டில் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனர். தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்படுகின்றது.இடம்பெயர்ந்த மக்கள் இன்னமும் முழுமையாக மீளக் குடியேறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இனப்பரம்பலை மாற்றியமைக்கும் வகையில் வடக்கு கிழக்கில் குடியேற்றங்கள் இடம்பெற்று வருகின்றன. இந்த நிலையில் இலங்கையில் இராணுவத்தை நவீனமயப்படுத்த சீனா அதிகளவு உதவிகளை செய்வது நியாயமற்ற நடவடிக்கையாகும்.

இலங்கைக்கு அதிகளவு உதவிகளை வழங்கும் நாடு ௭ன்ற வகையில் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான ஆலோசனைகளை சீன அரசாங்கம் இலங்கைக்கு வழங்க வேண்டும். ஐ.நா.வில் பலம்மிக்க நாடாக சீனா திகழ்கின்றது.இந்த நிலையில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான அழுத்தங்களை, ஆலோசனைகளை இலங்கை அரசாங்கத்துக்கு சீனா வழங்க வேண்டும் ௭ன்று வலியுறுத்தியுள்ளனர். கூட்டமைப்பினரின் இந்த வலியுறுத்தலையடுத்து கருத்துத் தெரிவித்த இலங்கைக்கான சீனத் தூதுவர், இலங்கையின் அபிவிருத்திக்கு சீனா உதவிகளை வழங்கி வருகின்றது.

நாங்கள் தமிழ் மக்கள், சிங்கள மக்கள் ௭னப் பார்த்து உதவிகளை வழங்குவதில்லை. இலங்கைக்கு நாம் உதவுகின்றோம். இனப்பிரச்சினை ௭ன்பது உள்நாட்டுப் பிரச்சினையாகும். இதில் நாம் தலையிட முடியாது. இலங்கை அரசாங்கமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பேச்சுவார்த்தை நடத்தியே தீர்வொன்றினைக் காண வேண்டும். அரசியல் ரீதியான தீர்வு உடனடியாக வராது. இந்த விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொறுமையுடன் செயற்படவேண்டியது அவசியமாகும் ௭ன்று ௭டுத்துக்கூறியுள்ளார்.

சுமார் ஒரு மணிநேரம் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது சீனத் தூதுவருடன் தூதரக அதிகாரிகள் இருவரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

மின்கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் போராட்டம்!
[Wednesday, 2013-05-22 10:32:03]

சாதாரண மக்கள் இன்றும் அடக்கி ஒடுக்கப்படுகின்றனர். மக்கள் அவ்வாறு அடக்கி ஒடுக்கப்படுகின்றபோது அதற்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டிய கடமை தொழிற்சங்கம் என்ற வகையில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களுக்கும் உண்டு. இவ்வாறு யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் ஆர்.இராசகுமாரன் தெரிவித்தார். மின்கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ். பல்கலைக்கழக வாயிலில் நேற்று நடந்த கவனவீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர், பல்கலைக்கழக ஆசிரியர் தொழிற்சங்கம் என்ற ரீதியில் பல்கலைக்கழகத்தில் மட்டுமன்றி நாட்டில் எந்தவொரு மக்களும் அடக்கி ஒடுக்கப்படுகின்ற போது அதற்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டிய கடமை எமக்கு உண்டு. எதிர்காலத்தில் மக்கள் நசுக்கப்படும் போது அடக்கப்படும்போது அதற்கெதிராக நாம் குரல் கொடுப்போம் என்றார்.



எனக்குள் தமிழ் உணர்வை ஏற்படுத்திய சம்பந்தன் ஐயா, மாவை போன்றோரை எனது குருவாக மதிக்கின்றேன் - முரளிதரன்
[Wednesday, 2013-05-22 10:13:18]

எனக்குள் தமிழ் உணர்வை ஏற்படுத்திய சம்பந்தன் ஐயா மற்றும் மாவை சேனாதிராஜா போன்றோரை எனது குருவாக மதிக்கின்றேன் என பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் நேற்று சபையில் தெரிவித்தார். ஜனாதிபதியிடம் தான் விடுத்த வேண்டுகோளின் பேரிலேயே முன்னாள் போராளிகள் விடுதலை செய்யப்பட்டு புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்தோடு இணைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதியமைச்சர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே பிரதியமைச்சர் முரளிதரன் இதனைத் தெரிவித்தார்.



வடக்கை போன்று கிழக்கிலும் இராணுவ ஆட்சி: முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு
[Wednesday, 2013-05-22 10:02:05]

வடக்கில் நிலவி வரும் இராணுவ ஆட்சி போன்றே இப்போது கிழக்கிலும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஐக்கிய தேசிய கட்சியின் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றஞ்சாட்டியுள்ளார். ராஜகிரியில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.



சங்கீதக் கதிரை விளையாட்டு போல அரசிலிருந்து முஸ்லிம் காங்கிரஸ் வெளியேற முடியாது - ஹக்கீம்
[Wednesday, 2013-05-22 09:52:01]

சங்கீதக் கதிரை விளையாட்டில் பாடல் நின்றவுடன் கதிரையை நீக்கிவிட்டுச் செல்வது போன்று, அரசை விட்டு வெளியேறும் சித்து விளையாட்டில் எமது கட்சி ஈடுபடமாட்டாது. ஆனால் சில சக்திகள் அவ்வாறுதான் விரும்புகின்றன. இவ்வாறு முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் குற்றம் சாட்டியுள்ளார். குருநாகல் மாவட்டத்தில் குளியாப்பிட்டி, தம்பதெனிய, நிக்கவரெட்டிய தேர்தல் தொகுதிகளில் உள்ள சில கிராமங்களில் நடைபெற்ற கூட்டங்களின் போதே அவர் இவ்வாறு கூறினார்.



அரசின் ஏதேச்சாதிகார நடவடிக்கைகள் நிறுத்தப்படும் வரை - பொதுநலவாய நாடுகள் மாநாடு இலங்கையில் நடாத்தக் கூடாது: - மங்கள சமரவீர
[Wednesday, 2013-05-22 09:49:34]

பொதுநலவாய நாடுகளின் தலைவர்களது அமர்வுகளுக்கான மாநாடு இலங்கையில் நடாத்தப்படக் கூடாது என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் ஏதேச்சாதிகார நடவடிக்கைகள் நிறுத்தப்படும் வரையில் அமர்வுகளை நடத்தக் கூடாது என அவர் பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.



மாத்தளை மனித புதைகுழி விசாரணைகளில் சந்கேம்: ஐ.நாவின் தலையீட்டை கோருகிறது ஆசிய மனித உரிமை ஆணைக்குழு!
[Wednesday, 2013-05-22 09:41:00]

மாத்தளை பாரிய மனித புதைகுழி விசாரணைகள் குறித்து ஆசிய மனித உரிமை ஆணைக்குழு கேள்வி எழுப்பியுள்ளது. பாரிய மனித புதை குழி தொடர்பான விசாரணைகளில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. 154 பேரின் உடல் எச்சங்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பில் விசாரணை நடத்திய சட்ட வைத்திய அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன், வழக்கு விசாரணை நடத்தி வரும் நீதவானும் இடமாற்றம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாரிய மனித புதைகுழி தொடர்பில் சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் இந்த இடமாற்ற உத்தரவுகள் குறித்த தகல்கள் வெளியாகியுள்ளன. இந்த விசாரணைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பு தலையீடு செய்ய வேண்டுமென ஆசிய மனித உரிமை ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.



யுத்தம் புலிகளுக்கு எதிரானது என்று கூறப்படுகின்ற போதிலும் அது தமிழர்களுக்கு எதிராகவே நடத்தப்பட்டுள்ளது - சம்பந்தன்
[Wednesday, 2013-05-22 09:25:28]

நடந்து முடிந்துள்ள யுத்தம் புலிகளுக்கு எதிரானது என்று வர்ணிக்கப்பட்டாலும் அது தமிழ் சிவிலியன்களுக்கு எதிராகவே பாவிக்கப்பட்டது. எனினும், யுத்தம் நிறைவடைந்துள்ள இன்றைய காலகட்டத்தில் சமாதானத்தையும் சமவுரிமையுடனான சக வாழ்வையும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அதற்காக இந்நாட்டில் நீண்டு நிலைத்து நிற்கக்கூடிய அரசியல் தீர்வு ஒன்று தேவையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட எம்.பி.யுமான இரா. சம்பந்தன் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அரசியல் தீர்வு என்பதும் சமாதான சகவாழ்வு என்பதும் தமிழ் மக்களுக்கு மாத்திரமின்றி இந்நாட்டில் வாழும் சகலருக்கும் அது வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.



சம்பூரில் அனல் மின் நிலையம் அமைப்பது தொடர்பிலான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.
[Wednesday, 2013-05-22 09:24:12]

திருமலை மாவட்டம் - சம்பூர் அனல் மின் நிலையம் தொடர்பில் சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்குமிடையில் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்படவுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் இலங்கை அரசுடன் இந்திய தேசிய அனல் மின்சக்தி கூட்டுத்தாபனம் கைச்சாத்திடவுள்ளது. இது தொடர்பாகக் காணப்பட்ட உடன்பாட்டையடுத்தே இந்த ஒப்பந்தம் அடுத்த மாதம் கைச்சாத்திடப்படவுள்ளது.



திட்டமிட்டவாறு செப்டெம்பரில் வட மாகாணசபை தேர்தல் நடைபெறும் - ஜீ.எல்.பீரிஸ்
[Wednesday, 2013-05-22 09:11:33]

வடமாகாணத்துக்கான தேர்தல் திட்டமிட்டவாறு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறும். அதில் எந்தவித மாற்றமும் கிடையாது. அதேபோன்று கூட்டு அரசாங்கத்தில் அங்கம் வைத்திருக்கின்ற அரசியல் கட்சிகள் 13ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் பல்வேறு கருத்துக்களை முன்வைத்திருக்கின்ற போதிலும் அதிகுறித்து அலட்டிக்கொள்ளத்தேவையில்லை. தேவைப்பட்ட நேரத்தில் அரசாங்கம் உரிய முடிவுகளை மேற்கொள்ளும் என்று வெளிவிவகார அமைச்சர் பேராசியர் ஜீ.எல்.பீரிஸ் நேற்று சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை ஐ.நா. அறிக்கை மற்றும் வடக்கு, கிழக்கின் காணி விவகாரம் தொடர்பில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனினால் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணைக்கு பதிலளித்து பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.



யாழ்ப்பாணத்தின் இராணுவ முகாம்கள் பல பலாலிக்கு மாற்றப்படவுள்ளன!
[Wednesday, 2013-05-22 09:04:39]

யாழ்ப்பாணத்தின் இராணுவ முகாம்கள் பல பலாலிக்கு மாற்றப்படும் என இராணுவம் அறிவித்துள்ளது. யாழ்ப்பாண குடாநாட்டில் காணப்படும் இராணுவ முகாம்களே இவ்வாறு பலாலிக்கு மாற்றப்படவுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக மூன்று இராணுவ முகாம்கள் யாழ்ப்பாணத்தில் தொடர்ந்தும் இயங்கும் என இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார். ஏனைய அனைத்து முகாம்களும் பலாலிக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளன. தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.



வாழைச்சேனை கல்குடா வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். Top News
[Wednesday, 2013-05-22 08:57:08]

இச்சம்பவம் இன்று புதன்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.

வாழைச்சேனை இந்துக்கல்லூரியில் கணித பாடம் கற்பிக்கும் சிவநேசன் கேமராஜன் (வயது 30) என்பவரே இவ்வாறு ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார். அவரோடு இப்பாடசாலையில் சிற்றூழியராக கடமையாற்றும் மார்கண்டு அகிலன் (வயது 30) என்பவரும் படுகாயமடைந்துள்ளார்.



இசட் புள்ளி சர்ச்சைகளுக்கு ஷிரானி பண்டாரநாயக்கவே பொறுப்பு - பந்துல
[Wednesday, 2013-05-22 08:44:31]

இசட் புள்ளி சர்ச்சைகளுக்கு முன்னாள் பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவே பொறுப்பு சொல்ல வேண்டுமென கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். 2011ம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை இசட் புள்ளி தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டிருந்தது. மாணவர்களுக்கு நியாயமான முறையில் தீர்வுகளை வழங்க அரசாங்கம் திட்டமிட்டிருந்தது. எனினும், அப்போதைய பிரதம நீதியரசர் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு வழங்க சந்தர்ப்பம் அளிக்கவில்லை. ஐந்து பல்கலைக்கழக பேராசிரியர்களை அரசாங்கம் நியமித்திருந்த போதிலும், உச்ச நீதிமன்றம் பேராசிரியர் தட்டீல் என்பவரின் பரிந்துரைகளை மட்டுமே ஏற்றுக்கொண்டது. இதன் காரணமாகவே இசட் புள்ளி தொடர்பில் மாணவர்கள் நெருக்கடிகளை எதிர்நோக்கினர் என கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.



ஊடகவியலாளருக்கும் பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸார் அழைப்பாணை!
[Wednesday, 2013-05-22 08:36:25]

மன்னார் பிராந்திய ஊடகவியலாளர் ஜோசப் பெர்ணாண்டோவை இன்று காலை 9 மணிக்கு பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரின் வவுனியா காரியாலயத்திற்கு சமூகமளிக்கமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. யுத்தத்தில் உயிரிழத்த மக்களுக்காக கடந்த 18ஆம் திகதி மாலை மன்னாரில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் அஞ்சலி நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது அங்கு சென்ற பொலிஸாரும், இராணுவத்தினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணண் உட்பட அந்த நிகழ்வில் கலந்து கொண்ட 15 பேரை கைது செய்திருந்தனர்.



உரிமைகளுக்காக குரல் கொடுக்காதுவிடின் சீனிக்காகவும், பாணுக்காகவும் காத்துக்கிடக்கும் நிலை உருவாகும் - ரணில்!
[Tuesday, 2013-05-21 21:23:41]

சிறிமாவோ ஆட்சிக்காலத்தைப் போன்று நாட்டு மக்களை ஒருவேளை உணவிற்காக வரிசையில் நிறுத்தும் முயற்சிலேயே தற்போதைய அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. பொதுமக்கள் நிலமையை புரிந்து கொண்டு உரிமக்காக குரல்கொடுக்காவிடின் பாணுக்காகவும் சினிக்காகவும் காத்துக்கிடக்கும் நிலையே உருவாகும். என்று எதிர்க்கட்சித் தலைவரும் ஜக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். தொழிச்சங்கங்கள் ஒன்றிணைந்து நடத்தும் தேசிய அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தைக் கண்டு அரசாங்கம் பயந்து போய் உள்ளது. ஆகவே தற்போது நாட்டில் காணப்படுகின்ற மக்கள் எழுச்சி 2014 ஆம் ஆண்டில் ஆட்சி மாற்றத்திற்கான அறிகுறியாகும்.இதனை இலக்காகக் கொண்டே நாம் செயற்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.



வாழ்க்கையில் விரக்தி - சென்னையில் தாய்,மனைவி,மகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்த இலங்கைத் தமிழரால் பரபரப்பு!
[Tuesday, 2013-05-21 20:17:06]

சென்னையில் டிராவல்ஸ் நிறுவனம் வைத்திருந்த இலங்கைத் தமிழர் தனது தாய், மனைவி மற்றும் மகளின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு தானும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இலங்கையின் உள்நாட்டு போர் காரணமாக இலங்கைத் தமிழரான சுந்தரேசன் என்பவர் தனது தாயுடன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் வந்து குடியேறினார்.



எதிர்க்கட்சிகள் ஏற்பாடு செய்த வேலை நிறுத்த போராட்டம் படு தோல்வி!
[Tuesday, 2013-05-21 20:02:19]

இலங்கையின் இரும்புத் தொழிச் சங்கம் என ஒருகாலத்தில் பேசப்பட்ட ஜேவீபீ தொழிற் சங்கமும், அதிக உறுப்பினர்களைக் கொண்டதாக கணிக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற்சங்கமும் ஏற்பாடு செய்திருந்த வேலை நிறுத்த போராட்டம் படு தோல்வியடைந்துள்ளது. வேலை நிறுத்த போராட்டம் நடந்தது என்பதற்கான அடையாளத்தையே இலங்கையில் காண முடியவில்லை எனக் கூறப்படுகிறது. கொழும்பில் தனியார் வர்த்தக நிலையங்கள் கூட அதாவது கோட்டை புறக்கோட்டை கடைகள் எல்லாம் இயங்கியது. வெளி மாவட்டங்களிலும் சகலதும் இயங்கியதாக தெரியவருகின்றது. அரசாங்கம் அச்சுறுத்தி அரச ஊழியா்களை வேலைக்கு வர வைத்தது என்று கூறினாலும் தனியார் நிறுவனங்கள் கடைகளுக்கு என்ன நடந்தது? ஒன்று கூட மூடப்படவில்லை என சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.



விடுதலைக்கான இன்றைய கனவும் நாளைய வெற்றியும்: - முரசறையப்பட்ட தமிழீழ சுதந்திர சாசனத்தின் உள்ளடக்கம் வெளிவந்தது ! Top News Top News
[Tuesday, 2013-05-21 19:57:07]

2009ம் ஆண்டுக்கு பின்னரான ஈழவிடுதலைப் போராட்டத்தின் விடுதலைப்பாதையின் பெரும் இராஜதந்திர முன்னகர்வாக மே-18 முள்ளிவாய்க்கால் நான்காம் ஆண்டு கூட்டுநினைவேந்தல் நாளில் உலகத் தமிழர்களின் முரசறைவாக அமைந்த தமிழீழ சுதந்திர சாசனத்தின் உள்ளடக்கம் வெளிவந்துள்ளது. தமிழீழத் தாயக மக்கள் மக்கள் உட்பட 1 இலட்சத்துக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ்மக்கள் பங்கெடுத்த உருவாக்கியிருந்த தமிழீழ சுதந்திர சாசனத்தின் உள்ளடக்கத்தின் விபரம் :



ஈழத்தமிழர்கள் உயிரிழக்கக் காரணமானவருக்கு வரவேற்பு கொடுப்பது தேசத்திற்கு பெருமை தரக்கூடியதா? சீமான் கேள்வி!
[Tuesday, 2013-05-21 19:36:12]

இலங்கையில் தமிழ் மக்கள் உயிரிழக்கக் காரணமானவரை அழைத்து, இரத்தின கம்பள வரவேற்பு கொடுப்பது தேசத்திற்கு பெருமை தரக்கூடியதா? என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வியெழுப்பியுள்ளார். நாம் தமிழர் கட்சி கூட்டத்துக்கு யாசின் மாலிக்கை அழைத்தமை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,



கனேடிய சட்டங்களுக்கு அமைவாக தமிழ் மக்களின் சுதந்திர போராட்டத்துக்கு கரங்கோர்த்து நிற்பேன் - ராதிகா
[Tuesday, 2013-05-21 19:28:40]

கனேடிய சட்டங்களுக்கு அமைவாக தமிழ் மக்களின் சுதந்திர போராட்டத்துக்கு கரங்கோர்த்து நிற்பேன் என கனேடிய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபைஈசன் தெரிவித்துள்ளார். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் கனேடிய மண்ணில் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த மே-18 முள்ளிவாய்க்கால் துக்க நாள் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.



மக்களின் ஒருமித்த எதிர்ப்பைக் கண்டு அரசு பயந்துள்ளது - கே. டி. லால்காந்த
[Tuesday, 2013-05-21 19:16:53]

வேலை நிறுத்தத்திற்கு எதிராக அரசாங்கம் மேற்கொண்ட செயற்பாடுகள் தோல்வியிலேயே முடிவடைந்துள்ளன. நாம் அரசாங்கத்திற்கு எதைக் கூற விரும்பினோமோ அந்த விடயத்தை இன்று வெற்றிகரமாக செய்து காட்டியுள்ளோம் என தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் தலைவர் கே.டி. லால்காந்த தெரிவித்தார். நிப்போன் ஹோட்டலில் இன்று செவ்வாய்க்கிழமை தொழிற்சங்க ஒருங்கிணைப்பிற்கான இணைப்புக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


RoyaShades-l2011(04-12-11)
Ramans2011
Canada Kanthasamy Kovil
Mahesan supramaniyam 031109
TamilsGuid-191012-2013
Suresh-remax-2013-01-01
INNSYS-20120930
NIRO-DANCE-100213
TDE_Computers2011
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com