Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 24, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
கல்முனை மக்கள் குறித்து பாராளுமன்றில் ஒப்பாரிவைத்தார் ஹக்கீம் - உலமா கட்சித் தலைவர் விமா்சனம்!
[Wednesday, 2012-10-17 08:46:16]
News Service

அரசாங்கத்துடன் இணையும் போது சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளைக் கூட நிபந்தனையாக முன்வைக்காத ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், சுனாமியால் இன்னமும் வீடுகள் கிடைக்காத கல்முனை மக்கள் பற்றிப் பேசுவது அவரின் அடுத்த கட்ட ஏமாற்று நடவடிக்கையாகும் என உலமா கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.

  

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

"சுனாமியால் பாதிக்கப்பட்டு இன்னமும் வீடுகள் கிடைக்காத கல்முனை மக்கள் பற்றி ரஊப் ஹக்கீம் அண்மையில் பாராளுமன்றத்தில் உரையாற்றிருந்தார். ஒரு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக இருந்து கொண்டு எதிர்கட்சி உறுப்பினர் போன்று இவர் பாராளுமன்றத்தில் உரையாற்றியதை பார்த்தபோது அவரது அரசியல் சாணக்கியத்தின் அதல பாதாள நிலை புரிந்தது. /p>

ஆளுங்கட்சியின் அமைச்சரவையில் அங்கம் வகிக்காத கட்சியே பாராளுமன்றத்தில் பேசிக் கொண்டிருக்கும். அரசில் அங்கம் வகிக்கும் கட்சி இதனை பேசிக் கொண்டிருக்காது செயலில் காட்டும். இவர்கள் அமச்சரவையில் இருந்து கொண்டே வாரத்துக்கொரு முறை ஜனாதிபதி தலைமையில் கூடிக் கொண்டே இது பற்றி அங்கு பேசாமல் பாராளுமன்றத்தில் ஒப்பாரி வைப்பதன் மூலம் நிறைவேற்று அதிகாரம் என்றால் என்னவென்று தெரியாமல் இருக்கிறார்களா என்று கேட்கின்றோம். அல்லது அப்பாவி கல்முனை மக்களை ஏமாற்றும் அடுத்த கட்ட நடவடிக்கையா? /p>

சுனாமியின் பின் ரஊப் ஹக்கீம் இரண்டு தடவைகள் அமைச்சராகி விட்டார். ஆனாலும் இது வரை கல்முனையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னமும் விமோசனம் கிடைக்கவில்லை என்றால் இவர்கள் அமைச்சர்களாக இருந்து யாருக்கு என்ன பிரயோசனம் கிடைக்கிறது என்ற கேள்வி எழுகிறது. /p>

2007ம் ஆண்டில் இந்த அரசுடன் இணைந்த போது இவர் சுனாமி மக்கள் பற்றி பேசவில்லை. பின்னர் அடுத்த வருடம் கட்சி மாறினார். பின்னர் 2010ம் ஆண்டு மீண்டும் கட்சி மாறி அரசுக்கு ஆதரவளித்தார். /p>

கடந்த கிழக்கு மாகாண சபை தேர்தலில் அரசை எதிர்த்து நின்றதோடு இந்த அரசாங்கத்தில் இருப்பதற்கு வெட்கப்படுகிறோம் என கூறினார். பின்னர் வெட்கங்கெட்டு கிழக்கு மாகாண சபையில் அரசுக்கு முட்டுக் கொடுத்தார். தாம் தீர்மானிக்கும் சக்தி என் பெருமைப்பட்டுக்கொண்ட இவர்கள் ஆகக்கு குறைந்தது சுனாமியால் வீடிழந்த அப்பாவி ஏழை மக்களுகக்கான வீடுகளையாவது குறிப்பிட்ட காலத்துள் வழங்க வேண்டும் என்று அரசுக்கு நிபந்தனை இட்டிருக்கலாம். /p>

சஊதி அரசினால் கட்டப்பட்ட வீடுகள் கூட துருப்பிடித்து அதில் ஷைத்தான்கள் வாழ்கின்றன. இந்த வீடுகளை சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கும் சக்தி நிறைவேற்று அதிகாரத்துக்கு இருந்தும் அதனை இன்னமும் எவ்வாறு சமூக நலனுக்கு பாவிப்பது என்ற அரசியல் கூட தெரியாமல்தான் இருக்கிறார்களா? அல்லது மக்கள் பிரச்சினைகளை தீர்க்காது பிச்சைக்காரனின் புண் போல் அடுத்த தேர்தலுக்கும் இவற்றை பயன்படுத்துவதற்கான திட்டமா? /p>

கிழக்கு மாகாண சபைக்கு ஆதரவளிக்கும் போதாவது இவற்றை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்காமல் பதவிகளுக்காக சரணடைந்து விட்டு இப்போது தூக்கத்திலிருந்து திடீரென விழித்துக் கொண்டவன் போல் சுனாமி மக்கள் பற்றி பேசுவது வெட்கங்கெட்ட செயலாகும். /p>

இத்தகைய ஒருவரைத் தலைவராகக் கொண்ட கட்சிக்கு மக்கள் ஆதரவு தருவது அதைவிட வெட்கங்கெட்ட செயலாகும்" எனவும் முபாறக் மௌலவி குறிப்பிட்டுள்ளார்.

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

முஸ்லீம்கள் மட்டுமல்ல சிங்களவர்களும் மாடு வெட்டுக்கிறார்கள்! Top News
[Friday, 2013-05-24 22:40:09]

மாடு வெட்டுவதை கண்டித்து இன்று கண்டி தலதா மாளிகைக்கு அருகில் புத்த பிக்கு ஒருவர் தீக்குளித்ததாக தினக்கதிரில் செய்தி வெளியானதை பார்த்த நேயர் ஒருவர் இந்த படத்தையும் அனுப்பி வைத்ததுடன் ஏன் சிங்களவர்கள் மாடு வெட்டுவதில்லையா என்ற கேள்வியையும் எழுப்பியிருந்தார். இலங்கையில் முஸ்லீம்கள் மட்டுமல்ல சிங்களவர்களும் மாடு வெட்டுகின்றனர். அதற்கான ஆதாரம் இதோ என இப்படத்தை அனுப்பியிருக்கிறார். இந்த புத்த பிக்கு எந்த உலகில் இருக்கிறார் என்ற கேள்வியையும் அவர் எழுப்பியிருந்தார்.



மட்டக்களப்பு கதிரவெளி விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற மாகாண மட்ட தமிழ் மொழித்தினப் போட்டி! Top News
[Friday, 2013-05-24 21:00:28]

மட்டக்களப்பில் நடைபெற்ற மாகாண மட்ட தமிழ் மொழித்தினப் போட்டியில்வாகரை கதிரவெளி விக்னேஸ்வரா மகா வித்தியாலயம் டெங்கை ஒழிப்போம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் கூத்து நிகழ்ச்சியில் முதலாம் இடத்தினைப் பெற்றுள்ளது. மனிதரைக் கொல்லும் கொடிய டெங்கு நோயை ஒழிக்கும் வகையில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக விசேட கூத்தாக இக்கூத்து தயாரிக்கப்பட்டது. மக்கள் மத்தியிலே டெங்கு நோய் சம்பந்தமாக சுற்றாடலை சுத்தமாக பேணுவது தொடர்பாக ஆலோசனை கூறப்படும் வேளையில் ஒரு சிலர் ஒத்துழையாமை, எதிர்ப்பு தெரிவித்தல், விமர்சனம் செய்தல் போன்ற வகைகளால் குறித்த நோக்கம் எட்டப்படவில்லை. இதே போன்றது ஒரு எண்ணக்கருவை மையமாக வைத்து டெங்கு நோயை பரப்புகின்ற நுளம்பை கட்டுப்படுத்துவதற்கான ஒரு மார்க்கமாகவே இந்த விசேட கூத்து டெங்கை ஒழிப்போம் எனும் தலைப்பில் தயாரிக்கப்பட்டது.



நாளைக்கு என்னையும் நான்காம் மாடியில் வைத்து விசாரணை செய்வீர்களா? - அமைச்சர்களிடம் கடுமையாக பேசிய சம்பந்தன்
[Friday, 2013-05-24 20:32:10]

தமிழ் எம்.பிக்கள் தொடர்ச்சியாக பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டு விசாரணை செய்யப்படும் விவகாரம் தொடர்பாக பாராளமன்றில் நேற்று மதியபோசனை இடைவேளையின் போது அமச்சர்களிடம் கடுமையாக பேசினார் சம்பந்தன் எம்.பி அண்மையில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன் மற்றும் சுரேஷ் ஆகியோரை நான்காம் மாடியில் வத்து விசாரித்துள்ளீர்கள் புதன்கிழமை சிவசக்தி ஆனந்தனை அழைத்து விசாரித்துள்ளீர்கள்.



சாரணர் பயிற்சிக்கு சென்ற மாணவன் ஆற்றில் மூழ்கி மரணம் - வாழைச்சேனையில் சம்பவம்!
[Friday, 2013-05-24 18:16:27]

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள மாந்தறை ஆற்றில் மூழ்கி மாணவர் ஒருவர் பலியாகியுள்ளார். இந்தச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் இடம்பெற்றதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர். மரணமானவர் பிறைந்துரைச்சேனை ஷாதுலியா வித்தியாலயத்தில் தரம் ஒன்பதில் கல்விகற்கும் பதுர்தீன் முஹம்மது பாயிஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.



ஒற்றுமையின் மூலமே பெற்றுக்கொண்ட சமாதானத்தை பாதுகாக்க முடியும் - ஹத்துருசிங்க!
[Friday, 2013-05-24 16:54:42]

2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் பெற்றுக்கொண்ட சாமாதானத்தை ஒற்றுமையின் மூலமே பாதுகாக்க முடியும் என்று யாழ். பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார். இன்று வெள்ளிக்கிழமை வெசாக் தினத்தையொட்டி பாதுகாப்பு படைகளின் ஏற்பாட்டில் நடைபெற்ற பசுமாடுகள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இதனை அவர் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்...



அரசியல் பேதங்களை பின்தள்ளி வைத்துவிட்டே சமய நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் - விமல் வீரவன்ச!
[Friday, 2013-05-24 16:49:50]

சமய நடவடிக்கைகளின் போது, அரசியல் பேதங்களை பின்தள்ளி வைக்க வேண்டும் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். சமய நடவடிக்கைகளின் போது அரசியல் கட்சிகள் பேதங்களை புறந்தள்ளி விட்டு, அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். விகாரை ஒன்றை அபிவிருத்தி செய்யும் பணியின் போது, அங்குள்ள மத தலைவர்களின் அரசியல் நிலைப்பாடுகளையோ பங்களிப்புச் சபையின் அரசியல் குறித்தே கவனம் செலுத்தக் கூடாது. எனினும் சில அரசியல்வாதிகளின் எதிரான அரசியல் செயற்பாடுகள் காரணமாக தற்போதுள்ள மத வழிப்பாட்டுத் தலங்கள் குறித்து கவனத்தில் கொள்ளாது செயற்பட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.



பிரித்தானியாவிற்கு ஆட்களை கடத்திவந்த இலங்கையர் கைது.
[Friday, 2013-05-24 16:46:01]

இலங்கையர்களை பிரித்தானியாவிற்கு சட்டவிரோதமாக ஆட்கடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக இலங்கையர் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இலங்கையில் பிறந்து தற்போது பிரித்தானியாவில் வசித்துவரும் 50 வயதான சுப்ரமணியம் விக்னராஜா என்பவர் மீதே ஆட்கடத்தல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. லண்டன் - லுடோன் மற்றும் இசெக்ஸ் பகுதிகளில் கடந்த புதனன்று மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் மேலும் 11 பேருடன் சுப்ரமணியம் விக்னராஜா என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.



அலட்சியப் போக்குடனே அரசு எங்களை நடத்துகின்றது - ரவூப் ஹக்கீம்!
[Friday, 2013-05-24 16:45:51]

கிழக்கு மாகாணத்தில் இன்று ஐந்து உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சியை முஸ்லிம் காங்கிரஸ் கையில் வைத்துக்கொண்டிருக்கின்றது. ஆனால் அரசாங்கம் எங்களை அலட்சியப் போக்குடன் நடத்துகின்றது என அமைச்சர் ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை மாலை சாய்ந்தமருதில் இடம்பெற்ற நூலகத்திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் உரையாற்றுகையில்,



காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வட மாகாண சபைக்கு வழங்கப்பட வேண்டும் - ராஜித சேனாரத்ன!
[Friday, 2013-05-24 16:39:04]

வடக்கு மாகாண சபைக்கு 13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள காணி மற்றும் காவற்துறை அதிகாரங்களை வழங்க வேண்டும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள இந்த மாகாண சபைத் தேர்தல் 13வது அரசியல் அமைப்புத் திருத்தத்தின் கீழ் நடைபெறும் எனவும் அந்த மாகாணத்திற்கு அனைத்து அதிகாரங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு எனவும் அவர் கூறியுள்ளார்.



பெரியளவிலான விலையைக் கொடுத்தே இலங்கையில் சுதந்திரத்தைப் பெற்றுக்கொண்டோம் - சவேந்திர சில்வா
[Friday, 2013-05-24 16:27:18]

பெரியளவிலான விலையைக் கொடுத்தே இலங்கையில் சுதந்திரத்தைப் பெற்றுக்கொண்டோம் என ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கையின் பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டு நான்கு ஆண்டு வெற்றி விழா நியூயோர்க்கில் நடைபெற்றது. அந்த நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.



13வது திருத்தத்தை மட்டுமன்றி முழு அரசியல் யாப்பையும் மாற்ற வேண்டும் - பொதுபல சேனா!
[Friday, 2013-05-24 13:48:12]

13ஆவது திருத்தத்தையும் மாகாணசபை முறைமையையும் மாற்றி இனங்களுக்கிடையில் நல்லுறவையும் நாட்டில் சமாதானத்தையும் கொண்டுவர முடியாது. இந்நாட்டின் அரசியல் அமைப்பில் வெளிநாடுகளில் அழுத்தங்கள் காணப்படுவதால் முழு அரசியல் யாப்பையும் மாற்றியமைக்க வேண்டும்மென பொதுபலசேனா அமைப்பின் இணைப்பாளர் டிலந்த விதானகே தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,



புகலிடக் கோரிக்கையாளர்கள் இருவருக்கு சட்டவுரைஞர் உதவி!
[Friday, 2013-05-24 13:34:45]

இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவிருந்த 2 தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் பிறென்டன் ஓ கொனர் சட்டவுரைஞர் உதவி வழங்குவதற்கு ஏற்பாடு செய்துள்ளார். இந்த 2 புகலிடக் கோரிக்கையாளர்களும் அகதிகளுக்கு உதவி செய்யும் சட்டவுரைஞர் டேவிட் மான் என்பவருக்கு கிறிஸ்மஸ்தீவிலிருந்து அகதி பாதுகாப்புக்காக விண்ணப்பிக்க உதவி கோரி கடந்த புதன்கிழமை மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியிருந்தனர். அண்மையில் கிறிஸ்மஸ்தீவிலிருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட 31 தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களும் வழமை போல சட்ட ஆலோசனை இல்லாத நிலையில் விசாரிக்கப்பட்டதாக மனித உரிமைகள் சட்டவுரைஞர் டானியல் வெப் கூறியுள்ளார்.



புத்த பிக்கு ஒருவர் வெசாக் தினமான இன்று தீக்குளிப்பு!Top News
[Friday, 2013-05-24 13:29:15]

வெசாக் தினமான இன்று கண்டி புனித தலதா மாளிகைக்கு அருகில் பௌத்த பிக்கு ஒருவர் தனக்கு தானே தீ வைத்துக் கொண்டுள்ளார். இச்சம்பவம் இன்று காலை சுமார் 11 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. மாடுகள் கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த பிக்கு தனக்கு தீ வைத்துக் கொண்டுள்ளார். உடம்பில் பெற்றோல் ஊற்றி தீ வைத்துக்கொண்ட பிக்குவை அருகில் இருந்தவர்கள் பிடித்து தீயை அணைத்து கண்டி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.



ஆட்கடத்தல் நடவடிக்கைகளுடன் தொடர்புடைய கனேடிய தமிழர் கைது!!
[Friday, 2013-05-24 13:24:03]

சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளுடன் தொடர்புடைய இலங்கையர்கள் டொமினிக்கன் குடியரசில் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட கனேடிய பிரஜையான கருணாநிதி நல்லதம்பி என்பவரே இந்த சட்டவிரோத ஆட்கடத்தல் கும்பலுக்கு தலைமை தாங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கனேடிய கடவுச் சீட்டுத் திணைக்களத்தில் கடவுச் சீட்டுக்களைத் திருடி அவற்றில் மாற்றங்களைச் செய்து வேறு நாடுகளுக்கு மக்களை சட்டவிரோதமான முறையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். நல்லதம்பி என்பவரே கடவுச் சீட்டுக்களை திருடியதாகத் தெரிவிக்கப்படுகிறது.



விபத்தில் மரணமடைந்த வாழைச்சேனை இந்துக்கல்லூரி ஆசிரியர் ஹேமராஜனின் பூதவுடல் உடலம் நல்லடக்கம் செய்யப்பட்டது. Top News
[Friday, 2013-05-24 12:27:40]

வாழைச்சேனையில் கடந்த புதன்கிழமையன்று இடம்பெற்ற வாகன விபத்தில் மரணமடைந்த வாழைச்சேனை இந்துக்கல்லூரியின் கணிதப் பாட ஆசிரியர் சி.ஹேமராஜனின் பூதவுடல் அடக்கம் செய்வதற்காக பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் என ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் மத்தியில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. மாணவர்கள் கண்ணீர் மல்க ஆசிரியரின் பூதவுடல் நல்அடக்கல் செய்யப்பட்டது.



இலங்கை போர்க்குற்றவாளிகள் சுதந்திர பறவைகளாக உலாவுகிறார்கள்: சர்வதேச மன்னிப்புச் சபை
[Friday, 2013-05-24 10:05:51]

இலங்கையில் போர் முடிவடைந்தாலும் போர்க்குற்ற முறையீடுகள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் ஆகியவை விசாரணைக்குட்படுத்தப்படவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் சுதந்திரப் பறவைகளாக உலாவுகிறார்கள் என லண்டனை தலைமையகமாகக் கொண்டு செயற்படும் சர்வதேச மன்னிப்புச் சபை அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது. கட்டாயத்தின் பேரில் காணாமற்போகச் செய்யப்பட்ட இருபதுக்கு மேற்பட்டோர் குறித்து இலங்கையில் கடந்தஆண்டு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு காணாமற் போகச் செய்யப்பட்டோரில் அரசியல்வாதிகள், வர்த்தகப் பிரமுகர்கள், சந்தேகத்துக்குரிய குற்றவாளிகள் ஆகியோர் அடங்குவர் என்றும் மேற்படி சபை அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. சர்வதேச மன்னிப்புச் சபையால் நேற்று வியாழக்கிழமை விடுக்கப்பட்டுள்ள இந்த அறிக்கை இலங்கையை கடுமையாக விமர்சிக்கிறது.



அன்னபூரணியின் அமெரிக்க பயணத்தின் வைர விழா வல்வையில் கொண்டாடப்பட்டது. Top News
[Friday, 2013-05-24 10:03:50]

இரு நிகழ்வுகளும் வல்வை வரலாற்று ஆவண காப்பகம் Images of Valvai அமைந்த வல்வெட்டித்துறை 'கீதாஞ்சலி" இல்லத்தில் 27 -04 -2013 காலை 10.00மணிக்கு ஆவண காப்பக நிறுவனர் ந.நகுலசிகாமணி அவர்கள் தலைமையில்; இ.குகதாஸ் அவர்களின் இறைவணக்கத் துடன் ஆரம்பமாகியது. சிறப்பு நிகழ்வுகளில் ஒன்றான சீமாட்டி அன்னபூரணியின் அமெரிக்க பயணத்தின் 75ஆவது ஆண்டை நினைவுகூரும் கேக் (Cake) ஐ கப்டன் கலைநேசன் கப்டன் விநாயகமூர்த்தி கப்பல் பொறியியலாளர் கா.றஞ்சனதாஸ் ஆகியோர் வெட்டி சிறப்பித்தனர்.



கொழும்பு துறைமுகத்தில் பாரிய தீ விபத்து
[Friday, 2013-05-24 09:58:24]

கொழும்பு துறைமுகத்தின் (CFS 1) களஞ்சியசாலையில் இன்று அதிகாலை பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் பாரிய சேதசங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது பொலிஸாரும், தீயணைப்புப் படையினரும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதேவேளை இச்சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.



அதிகாரப்பகிர்விற்கு ஆதரவளித்திருந்தால் பல உயிர்களை காப்பாற்றியிருக்க முடியும் - லக்ஸ்மன் கிரியல்ல
[Friday, 2013-05-24 09:48:33]

அதிகாரப் பகிர்விற்கு ஆதரவளித்திருந்தால் யுத்தத்தை தடுத்திருக்க முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். 2001ம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் அதிகாரப் பகிர்வு யோசனைத் திட்டமொன்றை முன்வைத்ததாககத் தெரிவித்துள்ளார். தற்போது அதிகாரப் பகிர்வு குறித்து பேசும் தரப்பினர் அதனை எதிர்த்ததாகக் குறிப்பிட்டுள்ளார். அதிகாரப் பகிர்வு யோசனைத் திட்டத்திற்கு ஆதரவளிக்கப்பட்டிருந்தால் யுத்தத்தினால் உயிரிழந்த பெரும் எண்ணிக்கையிலான உயிர்களை காப்பாற்றியிருக்க முடியும் என தெரிவித்துள்ளார்.



மாகாணசபைகளுக்கு காவல்துறை அதிகாரங்களை வழங்கினால் பாதுகாப்புத் தரப்பினருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் - கோதபாய
[Friday, 2013-05-24 09:39:48]

மாகாணசபைகளுக்கு காவல்துறை அதிகாரங்கள் வழங்கக் கூடாது என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 13ம் திருத்தச் சட்டத்திற்கு அமைவாக மாகாணசபைகளுக்கு காவல்துறை அதிகாரங்களை வழங்கப்படுவதனை ஒரு போதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறு அதிகாரங்களை வழங்குவதனால் பாதுகாப்புத் தரப்பினருக்கு அச்சுறுத்தல் ஏற்படக் கூடுமென தெரிவித்துள்ளார். அரசாங்க அதிகாரி என்ற ரீதியில் நாட்டின் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பில் ஆலோசனை வழங்குவது தமது கடமை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதனை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்பதனை அரசாங்கமே தீர்மானிக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். மாகாணசபைகளுக்கு காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்பட்டால் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது தொடர்பில் பாரிய பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.


AJRwindows22.05.13
Suresh-remax-2013-01-01
Ramans2011
RoyaShades-l2011(04-12-11)
TDE_Computers2011
Mahesan supramaniyam 031109
TamilsGuid-191012-2013
NIRO-DANCE-100213
Canada Kanthasamy Kovil
INNSYS-20120930
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com