Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 23, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
ஹோன்டுராசில் கால்பந்தாட்ட மைதானத்தில் துப்பாக்கிச்சூடு - 11பேர் பலி!
[Tuesday, 2012-10-16 07:55:31]
News Service

மத்திய அமெரிக்க நாடான, ஹோன்டுராசில், கால்பந்து விளையாடியவர்கள் மீது நடந்த துப்பாக்கிச் சூட்டில், 11 பேர் பலியாகினர். கேட்டகாமஸ் என்ற நகரில், நேற்று, கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த குழுவினரை நோக்கி, விஷமிகள் சிலர் சுட்டதில், 11 இளைஞர்கள் பலியாகினர். இந்த படுகொலை சம்பவத்துக்கான காரணம் குறித்து, விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

  
Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

"ஹாரிபொட்டர்' முதல் புத்தகத்தின் கையெழுத்துப் பிரதி ஒன்றரை இலட்சம் பவுண்டுக்கு ஏலம்!
[Thursday, 2013-05-23 08:21:28]

பிரபல ஆங்கில எழுத்தாளர், ஜே.கே. ரவ்லிங் எழுதிய, "ஹாரிபொட்டர்' முதல் புத்தகத்தின் கையெழுத்துப் பிரதி மற்றும் அதில் இடம் பெற்ற படங்கள் ஆகியவை, லண்டனில்,ஒன்றரை இலட்சம் பவுண்டுக்கு ஏலம் போயின. லண்டனில், புகழ்பெற்ற ஏல நிறுவனத்தில் நடைபெற்ற ஏலத்தில், இவற்றை வாங்குவதற்காக, இரண்டு வர்த்தகர்களிடையே கடும் போட்டி ஏற்பட்டது. கடைசியாக ஒன்றரை இலட்சம் பவுண்ட் வரை சென்றது.



குவாடர் துறைமுகத்தை சாலை, ரயில், விமான மார்க்கங்களில் இணைக்கும் உடன்பாட்டில் சீனா - பாகிஸ்தான் கையெழுத்து!
[Thursday, 2013-05-23 08:14:33]

பாகிஸ்தானின் முக்கிய துறைமுகங்களில் ஒன்றான குவாடர் துறைமுகத்தை கையாளும் ஒப்பந்தத்தை சீனா கடந்த ஆண்டு பெற்றது. எண்ணெய் வளம் மிக்க அரபு நாடுகளில் இருந்து பெட்ரோலிய கச்சா எண்ணெய் ஏற்றிவரும் கப்பல்களுக்கு இந்த துறைமுகம் தான் மிக குறைந்த தூரத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஹோர்மஸ் ஜல சந்திப்பு பகுதியில் இந்த துறைமுகம் அமைந்துள்ளது. இங்கிருந்து மேற்கு சீன நகரங்கள் வெகு அருகாமையில் அமைந்துள்ளதால் குவாடர் துறைமுகத்தை சாலை, ரயில், விமானம் மார்க்கமாக இணைக்கும் ஒப்பந்தத்தில் பாகிஸ்தான்-சீனா அதிகாரிகள் நேற்று கையொப்பமிட்டனர்.



ஸ்வீடன் தலைநகரில் வரலாறு காணாத வன்முறைகள் - 30 கார்கள் தீக்கிரை!
[Thursday, 2013-05-23 08:09:17]

ஸ்வீடன் நாட்டில், என்றும் காணாத அளவிற்கு வன்முறைக் கலவரங்கள் நடந்தேறியுள்ளன. தலைநகர் ஸ்டாக்ஹோமின் அருகில் உள்ள ஏழ்மையான குடியேற்ற மக்கள் வசிக்கும் புறநகர் பகுதிகளில், நூற்றுக்கணக்கான இளைஞர்கள், கார்களைத் தீயிட்டுக் கொளுத்தியும், காவல்துறையினரையும், மீட்புப் பணிக்கு வந்தவர்களைத் தாக்கியும், மூன்று இரவுகளாக வன்முறைக் கலவரங்களில் ஈடுபட்டனர். செவ்வாய் அன்று இரவு, ஜாகோப்ஸ்பர்கில் உள்ள காவல்நிலையம் இளைஞர்களால் தாக்கப்பட்டது. இரண்டு பள்ளிகள் சேதப்படுத்தப்பட்டன.



புக்கர் பரிசை தட்டிச் சென்றார் அமெரிக்க எழுத்தாளர் - கன்னட எழுத்தாளர் ஏமாற்றம்!
[Thursday, 2013-05-23 07:50:27]

நியூயார்க்கில் வாழும் அமெரிக்க எழுத்தாளர் லிடியா டேவிஸுக்கு 2013-ம் ஆண்டுக்கான மேன் புக்கர் பரிசு கிடைத்துள்ளது. மிகச்சிறந்த எழுத்தாளரும், சிறந்த மொழிபெயர்ப்பாளருமான லிடியா டேவிஸுக்கு இதன் மூலம் 60 ஆயிரம் பவுண்ட் ரொக்கப் பரிசு கிடைத்துள்ளது. "தி எண்ட் ஆஃப் தி ஸ்டோரி' மற்றும் "வெரைடீஸ் ஆப் டிஸ்டர்பன்ஸ்' எனும் இரு நாவலுக்காக புக்கர் பரிசு கிடைத்துள்ளது. தி மேன் புக்கர் பரிசுக்காக தேர்வு செய்யப்பட்டவர்களில் பிரபல கன்னட எழுத்தாளர் யு.ஆர். அனந்தமூர்த்தியும் ஒருவர். இறுதியில் லிடியா தேர்வு செய்யப்பட்டதன் மூலம் புக்கர் விருது பெறும் வாய்ப்பை அனந்தமூர்த்தி இழந்தார்.



லண்டனில் பயங்கரவாத தாக்குதல் - படைச்சிப்பாயை வெட்டிக் கொன்றவர்கள் சுட்டுப் பிடிக்கப்பட்டனர்!
[Thursday, 2013-05-23 07:17:17]

லண்டனில் நேற்று நடைபெற்ற ஒரு பாரதூர தாக்குதல் சம்பவம் பிரிட்டனில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் நடந்த தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் இருவர் காயமடைந்துள்ள நிலையில் கோப்ரா என்று அழைக்கப்படும் இந்த அவசரக் குழுவின் கூட்டம் கூட்டப்பட்டது. இதை சந்தேகத்துக்குரிய இஸ்லாமிய பயங்கரவாதத் தாக்குதலாக பிரிட்டிஷ் காவல்துறை கருதுகிறது. இது ஒரு பயங்கரவாத தாக்குதல் என்பதற்கான வலுவான சான்றுகள் இருப்பதாக கூறியுள்ள பிரிட்டிஷ் பிரதமர் இத் தாக்குதல் தனக்கு அதிர்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.



ஒரு கோடி சட்டவிரோத குடியேற்றவாசிகளுக்கு குடியுரிமை வழங்க அமெரிக்க செனெட் ஒப்புதல்!
[Wednesday, 2013-05-22 19:09:35]

2 லட்சத்து 60 ஆயிரம் இந்தியர்கள் உள்ளிட்ட ஒரு கோடியே 10 லட்சம் பேருக்கு அமெரிக்க குடியுரிமை கிடைக்க உள்ளது. இதற்கான முக்கிய மசோதாவுக்கு, செனட் சபை குழு ஒப்புதல் அளித்தது.அமெரிக்க நாட்டில் உரிய ஆவணங்கள் இன்றி ஒரு கோடியே 10 லட்சம் வெளிநாட்டினர் வசித்து வருகின்றனர். இவர்களில் 2 லட்சத்து 60 ஆயிரம் பேர் இந்தியர்கள் ஆவார்கள். இவர்களுக்கு குடியுரிமை அளிக்க வகை செய்து, முழுமையான குடியுரிமை சீர்திருத்தம், எல்லை பாதுகாப்பு, பொருளாதார வாய்ப்பு மற்றும் குடியுரிமை நவீனமய சட்ட மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா, அமெரிக்க செனட் சபையின் நீதித்துறை குழுவின் பரிசீலனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.



சீன வெடிபொருள் தொழிற்சாலையில் பாரிய வெடிவிபத்து - 23 பேர் பலி!
[Wednesday, 2013-05-22 19:05:36]

சீனாவின் ஷண்டாங் பகுதியில் உள்ள வெடிப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 23 பேர் பலியாகியுள்ளனர். அதில் பலியானவர்களில் 10 பேரை அவர்களது டி.என்.ஏ.வை கொண்டு அடையாளம் காண முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தில் தொழிற்சாலையின் ஒரு பகுதியில் கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து தரை மட்டமாகி உள்ளது. இதில் 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதுதொடர்பாக விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



காந்தியின் இரத்தம் கடைச்சரக்கா? - கொதிக்கிறார் கொள்ளுப்பேரன்!
[Wednesday, 2013-05-22 18:49:57]

மகாத்மா காந்தியின் ரத்த மாதிரி உள்ளிட்ட பொருட்கள் கடைசரக்காக ஏலம் விடுவதை தடுக்க முடியவில்லையே என என் ரத்தம் கொதிக்கிறது என காந்தியின் கொள்ளுப் பேரனான துஷார் காந்தி வேதனையோடு கூறியுள்ளார். நேற்று, காந்தியின் ரத்தம், செருப்பு போன்ற உடமைகள் லண்டனில் சுமார் 3 இலட்சம் பவுண்டுக்கு ஏலத்தில் விற்கப்பட்டன. இது தனக்கு மிகவும் வேதனை அளிப்பதாக கூறியுள்ளார் காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தி. மேலும் அவர் கூறியதாவது. தேசப்பிதா காந்தியின் ரத்தம் வேற்று நாட்டில் கடை சரக்கைப் போல் ஏலம் விடப்பட்டதை அறிந்து எனது ரத்தம் கொதிக்கிறது.



சீனப்பிரதமர் வருகையால் பாகிஸ்தானில் செயலிழந்தன செல்போன்கள்!
[Wednesday, 2013-05-22 18:43:30]

சீனப் பிரதமர் இன்று பாகிஸ்தான் வருவதை முன்னிட்டு பாகிஸ்தான் அரசு தலைநகர் இஸ்லாமாபாத்திலும் அருகில் உள்ள ராணுவத்தளமான ராவல்பிண்டியிலும் அனைத்து செல்போன் சேவைகளையும் நிறுத்தி வைத்துள்ளது. பாகிஸ்தானின் தொலைத்தொடர்பு நிறுவனம் இன்று மதியம் அந்நாட்டு நேரப்படி 1 மணி வரை அனைத்து செல்போன் சேவைகளையும் நிறுத்தி வைக்குமாறு அறிக்கை விடுத்தது. போராளிகள் செல்போன்கள் மூலம் தாக்குதல்களைத் திட்டமிடுவதைத் தடுப்பதற்காகவே இத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



சொக்கலேட்டில் இரும்பு ஆணி - நட்டஈடு வழங்க காட்பரி நிறுவனம் இணக்கம்!
[Wednesday, 2013-05-22 18:39:09]

இங்கிலாந்தில் 1905 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட காட்பரி நிறுவனத்தின் விற்பனை பொருட்கள் அனைத்தும் உலக பிரசித்தி பெற்றவை. பாலிலேயே செய்யப்படும் இந்நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளும் சுவையும், தரமும் மிகுந்தவை. கடந்த 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16-ஆம் தேதி திரிபுரா மாநிலத்தின் அகர்தலாவைச் சேர்ந்த ஒருவர், தன்னுடைய மூன்று வயதுக் குழந்தைக்கு காட்பரிஸ் சாக்லேட் வாங்கிக் கொடுத்துள்ளார். அதனை அந்த குழந்தை சாப்பிட ஆரம்பித்தபோது, அதில் ஒரு இரும்பு ஆணி இருந்ததை கண்டு திடுக்கிட்டார். உடனேயே நுகர்வோர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கையும் பதிவு செய்தார்.



கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் - சிரியாவுக்கு இஸ்ரேலிய தளபதி எச்சரிக்கை!
[Wednesday, 2013-05-22 08:06:28]

இஸ்ரேலின் ஆதிக்கத்திற்குட்பட்ட கோலன் ஹய்ட்ஸ் பகுதியில் இஸ்ரேல் ராணுவ ஜீப் நேற்று ரோந்துப் பணியில் ஈடுபட்டது. அந்த ஜீப்பின் மீது குண்டுகளை வீசி சிரியா ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்தினர். எங்களது எல்லைக்குள் இஸ்ரேல் ஜீப் நுழைந்ததால் நாங்கள் தாக்கினோம் என்று சிரியா விளக்கம் அளித்தது. இந்நிலையில், ஊடகங்களுக்கு பேட்டியளித்த இஸ்ரேல் ராணுவ தளபதி லெப்ட்டினென்ட் ஜெனரல் பென்னி கேண்ட்ஸ், எங்கள் ஆதிக்கத்திற்கு உட்பட்ட பகுதியில் ராணுவத்தின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த சிரியா அரசு முயற்சித்து வருகிறது. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் சிரியா அதிபர் பஷர் அல் ஆசாத் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்தார்.



காந்தியின் இரத்தம் 7 ஆயிரம் பவுண்டுக்கே ஏலம் - தேய்ந்து போன காலணி, ஜெபமாலை, உயிலை விட மதிப்புக் குறைவு!
[Wednesday, 2013-05-22 08:01:12]

மகாத்மா காந்தியின் கடைசி உயில், ஜெப மாலை, ரத்த மாதிரி, தேய்ந்த காலணி உள்ளிட்ட பொருட்கள் லண்டனில் நேற்று ஏலம் விடப்பட்டன. இந்த ஏலத்தில், காந்தி தனது கைப்பட எழுதிய உயில் 40 ஆயிரம் பவுண்டுகள் வரை ஏலம் போகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பார்த்ததை விட மிக அதிகமாக 55 ஆயிரம் பவுண்டுகளுக்கு இந்த உயில் ஏலம் போனது. பரிசோதனைக்காக எடுக்கப்பட்ட அவரது ரத்த மாதிரி 10 ஆயிரம் பவுண்டுகள் ஏலம் போகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஏமாற்றம் அளிக்கும் வகையில் 7 ஆயிரம் பவுண்டுகளுக்கே ஏலம் போனது. காந்தியின் கைப்பட நூற்ற நூலில் இருந்து தயாரிக்கப்பட்ட சால்வை, 40 ஆயிரம் பவுண்டுகளுக்கு ஏலம் போனது. இது எதிர்பார்த்த தொகையை விட இரு மடங்கு அதிகமாகும்.



சீனப் பிரதமருக்கு நடுவானில் தடல்புடலான வரவேற்பு அளிக்க பாகிஸ்தான் ஏற்பாடு!
[Wednesday, 2013-05-22 07:51:33]

சீனாவின் "இரும்புச் சகோதரன்' என்று பாகிஸ்தானை வர்ணித்துள்ளார் அந்நாட்டு அதிபர் லீ கெகியாங். சீனப் பிரதமர் லீ கெகியாங் தனது மூன்று நாள் இந்தியப் பயணத்தை முடித்துக் கொண்டு, பாகிஸ்தானுக்கு இன்று பயணம் மேற்கொள்கிறார்.இந்நிலையில் லீ கெகியாங் கூறியுள்ளதாக பாகிஸ்தானின் அசோசியேட்டட் பிரஸ் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: தெற்காசியாவில் அமைதி, ஸ்திரத்தன்மை, பயங்கரவாத எதிர்ப்பு ஆகிய நடவடிக்கைகளில் பாகிஸ்தான் குறிப்பிடத்தக்க வகையில் பங்காற்றி வருகிறது. இதனை சீனா பாராட்டுகிறது.சர்வதேச சமூகமும் பாகிஸ்தானை ஆதரித்து, அதற்கு உரிய ஆதரவை வழங்க வேண்டும்.



ஈரான் அதிபர் தேர்தலில் போட்டியிட முன்னாள் அதிபருக்குத் தடை!
[Wednesday, 2013-05-22 07:39:17]

ஈரான் அதிபர் தேர்தலில் போட்டியிட அந்நாட்டு முன்னாள் அதிபருக்கு தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது. ஈரான் அதிபர் தேர்தல் வரும் ஜுன் மாதம் 14-ம் தேதி நடக்கிறது. இதில் கன்சர்வேடிவ், சீர்திருத்த கட்சிகள் சார்பில் மொத்தம் ஐந்து வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் முன்னாள்அதிபர் அக்பர் ஹஸ்மி ரப்சன்ஜானி போட்டியிட தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது. இதற்கான காரணம் வெளியிடபடவில்லை என அந்நாட்டு உள்துறை அமைச்சர் கூறினார். தற்போதைய அதிபர் முகமது அகமது நிஜாத்தும் அதிபர் பதவிக்கு மீண்டும் போட்டியிடுகிறார்.



மின்னல் வேகத்தில் பறக்கும் புறா நான்கு இலட்சம் டொலருக்கு ஏலம்!
[Wednesday, 2013-05-22 07:09:13]

மின்னல் வேகத்தில் பறக்கும் போல்ட் எனும் பெயருடைய ஒரு புறா உலக சாதனை ஒன்றை படைத்துள்ளது. அந்த ஆண் புறா ஒரு சீன தொழிலதிபருக்கு நான்கு லட்சம் டொலர்களுக்கு விற்கப்பட்டுள்ளது. ஒரு வயதாகும் அந்தப் புறா பெல்ஜியம் நாட்டில் வளர்க்கப்பட்டது.பெல்ஜியத்தில் போட்டிகளில் பறக்கும் வேகமான பறவைகள் ஏலம் விடப்பட்ட போதே இந்தப் புறாவை அந்த சீன தொழிலதிபர் வாங்கியுள்ளார். இந்த ஏலத்தில் பெரும்பாலான பறவைகளை சீனா மற்றும் தாய்வான் நாட்டிலிருந்தவர்களே வாங்கியுள்ளனர். இந்தப் புறாவை வளர்த்த லியோ ஹெரிமன்ஸ் பெல்ஜியப் புறாக்களை வளர்ப்பதில் பிரபலமானவர்.



கடும் மின் பற்றாக்குறையால் 20 மணிநேரம் வரை மின்தடையால் தவிக்கும் பாகிஸ்தான்!
[Tuesday, 2013-05-21 18:41:17]

பாகிஸ்தானில், கடும் மின் பற்றாக்குறையால், பல பகுதிகளில், 20 மணி நேரம் மின்வெட்டு அமலில் உள்ளது. பாகிஸ்தானில், தற்போது கடும் கோடை சுட்டெரிக்கிறது. எல்லா பகுதிகளிலும், 104 டிகிரிக்கு அதிகமான வெயில் வாட்டுகிறது. கடும் மின்சார பற்றாக்குறையினால், அலுவலகங்களில் ஏ.சி., பயன்படுத்த அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. மக்கள், ஷூ அணியும் போது, சாக்ஸ் அணிய வேண்டாம் என, பாகிஸ்தான் அரசு, மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. கடந்த ஆண்டு, பாகிஸ்தானில் போதிய மழை பெய்யாததால், நீர் நிலைகள் வறண்டு கிடக்கின்றன. நீர் மின்திட்டம் தடைப்பட்டுள்ளதால், பெரும்பாலான பகுதிகளில், 20 மணி நேரம் மின்வெட்டு அமலில் உள்ளது.



நியூயோர்க்கில் மேலாடையின்றி திரியும் பெண்களுக்கு இனி அபராதம் இல்லையாம்!
[Tuesday, 2013-05-21 18:35:36]

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இனி மேலாடை அணியாமல் சுற்றித் திரியும் பெண்களுக்கு அபராதம் விதிக்கப்பட மாட்டாது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுவரை, மேலாடை அணியாமல் சுதந்திரமாக ஆபாசமாக சுற்றித் திரிந்த பெண்களை போலீசார் கைது செய்து அபராதம் விதிக்கும் நடைமுறை இருந்து வந்தது. இருந்தபோதும், இந்த கட்டுப்பாடு, அபராதம் இதயெல்லாம் மீறி வருடந்தோறும் ஆகஸ்ட் 21ம் தேதியன்று அமெரிக்காவின் பல நகரங்களில் மேலாடை அணியாத பல பெண்கள் பேரணி நடத்தி புரட்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது திடீரென, நியூயார்க் நகரில் மேலாடை அணியாமல் நடமாடலாம். அப்படி நடமாடும் பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.



இனப்படுகொலை செய்த குவாதமாலா முன்னாள் இராணுவ ஆட்சியாளருக்கு வழங்கப்பட்ட தண்டனை ரத்து!
[Tuesday, 2013-05-21 18:31:01]

குவாதமாலா நாட்டின் முன்னாள் இராணுவ ஆட்சியாளர் எஃப்ரெய்ன் ரியோஸ் மோன்து இனப்படுகொலையில் ஈடுபட்டதாக குற்றங்காணப்பட்டு வழங்கப்பட்டிருந்த தீர்ப்பை அந்நாட்டின் அரசியல் சாசன நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. மோன்து மீது கீழ் நீதிமன்றத்தில் நடந்த வழக்கின் இறுதி வாரங்களில் வழங்கப்பட்டிருந்த சாட்சிகளை மீண்டும் விசாரிக்க வேண்டும் என இந்த நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 1980களில் குவாதெமாலாவில் நடந்த உள்நாட்டு யுத்தத்தில் இக்ஸில் மாயா இனக்குழுவை சேர்ந்த சுமார் 1800 பேரைக் கொல்ல உத்தரவிட்டிருந்ததாக இம்மாதத்தில் முன்னதாக மொன்து மீது குற்றங்காணப்பட்டிருந்தது.



ஆயிரம் கோடி டொலர் வரிஏய்ப்பு செய்த ஆப்பிள் நிறுவனம் - செனெட் ஆய்வறிக்கையில் தகவல்!
[Tuesday, 2013-05-21 17:44:44]

உலகின் முன்னணி கணினி நிறுவனங்களில் ஒன்றான ஆப்பிள் தனது இலாபத்தை பல்வேறு சகோதர நிறுவனங்களுக்கும் பகிர்ந்து கணக்கு காட்டிய விதத்தில் ஆயிரம் கோடி டொலர் கணக்கில் வரி செலுத்தாமல் தப்பித்துள்ளது என அமெரிக்க செனெட் ஆய்வறிக்கை ஒன்று கண்டறிந்துள்ளது. ஆப்பிள் நிறுவனம் விதிமீறல் எதிலும் ஈடுபட்டதாக இந்த ஆய்வறிக்கை குற்றம்சாட்டவில்லை என்றாலும், ஆப்பிள் நிறுவனத்தின் இந்த துணை நிறுவனங்கள் பல வரி செலுத்துவதற்காக எந்த ஒரு நாட்டிலுமே பதியப்பட்டிருக்கவில்லை என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. அயர்லாந்தின் கோர்க் நகரில் பதியப்பட்டுள்ள இப்படியான ஒரு துணை நிறுவனம், கடந்த ஐந்து ஆண்டுகளாக தொழில் நிறுவனங்களுக்கான வருமான வரி என்று கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒரு டாலர் கூட செலுத்தியிருக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.



அமெரிக்காவில் 320 கி.மீ வேகத்தில் சுழன்றடித்த சூறாவளி - 91 பேர் பலி!
[Tuesday, 2013-05-21 17:32:56]

அமெரிக்காவின் ஒக்லஹோமா மாகாணத்தில் வீசிய மிகக் கடுமையான சூறாவளியில் சிக்கி 91 பேர் பலியாயினர். திங்கள்கிழமை மதியம் தாக்கிய இந்த சூறாவளியின் போது மணிக்கு 320 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று சுழன்றடித்தது. திடீரென இந்த சூறாவளி வலிமை அடைந்து குடியிருப்புப் பகுதிகளை தாக்கியதால், பள்ளியில் இருந்து சிறுவர்கள் பலர் உயிரிழந்தனர். உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக் கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. பல குடியிருப்புப் பகுதிகள் மொத்தமாகவே தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. உத்தியோகபூர்வ உயிரிழப்பு எண்ணிக்கை 51 என்றாலும், அதற்கும் மேற்பட்டு 40 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்படுள்ளதாக மாநில மருத்துவ ஆய்வாளர் அலுவலகம் தெரிவிக்கிறது.


Suresh-remax-2013-01-01
Ramans2011
RoyaShades-l2011(04-12-11)
Mahesan supramaniyam 031109
INNSYS-20120930
Canada Kanthasamy Kovil
TDE_Computers2011
AJRwindows22.05.13
NIRO-DANCE-100213
TamilsGuid-191012-2013
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com