Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 20, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
மூன்றாவது தடவையாக பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பு பெருமையுடன் வழங்கும் 'கற்க கசடற' Top News
[Friday, 2012-10-12 22:12:41]
News Service

தமிழ் இளையோர் அமைப்பு ஆண்டு தோறும் நடத்தி வரும் திருக்குறள் போட்டி இம்முறை தொல்காப்பியம் ஆத்திசூடி போன்ற எமது சங்ககால இலக்கியங்களை உள்ளடக்கிய ஒரு போட்டி நிகழ்வாக நடைபெறுகின்றது.

  

தொல்காப்பியர் எழுதிய தொல்காப்பியம் என்பது இன்று கிடைக்கப்பெறும் மிகப் பழைய தமிழ் இலக்கண நூலாகும். இது இலக்கிய வடிவிலிருக்கும் ஓர் இலக்கண நூலாகும். பழங்காலத்து நூலாக இருப்பினும், இன்றுவரை தமிழ் இலக்கண விதிகளுக்கு அடிப்படையான நூல் இதுவே. இதனை முதல்நூலாகக் கொண்டு காலந்தோறும் பல வழிநூல்கள் தோன்றின. அதேபோல் ஆத்திசூடி என்பது சங்க காலத்தில் வாழ்ந்த ஔவையார் இயற்றிய நீதி நூல் ஆகும்.

சிறுவர்கள் இளம் பருவத்திலேயே பாடம் செய்து மனதில் இருத்திக்கொள்ளும் வகையில் சிறுசிறு சொற்றொடர்களால் எளிமையாக அமைந்தது ஆத்திசூடி. தமிழ்ச் சமுதாயம் நல்லொழுக்கத்திற்கு முக்கியத்துவம் அளித்ததை உணர்த்தும் விதமாகவும் அன்று வழக்கத்திலிருந்த திண்ணைப் பள்ளிகள் குருகுலங்கள் முதல், இன்று பின்பற்றப் படுகிற கல்வி முறை வரை, தமிழ் கற்கும் போது தமிழின் உயிரெழுத்துக்களைச் சொல்லித் தருகின்ற பொருட்டு ஔவையின் ஆத்தி சூடியைக் கொண்டு கற்பிப்பதை நல்லாசிரியர்கள் கடைப்பிடித்து வருகின்றார்கள்.

இவ் நூல்கள் எமது காலத்துடன் அழியக்கூடிய சான்றுகள் உள்ளன இதனை நாம் எமக்கு பிறகு வரும் சந்ததியினர் பயன்படுத்தவும் அதன் முக்கியதுவத்தை எடுத்துக்காட்டவும் இளையோர் அமைப்பாகிய நாம் தலையாய கடமைப்பட்டுள்ளோம். இற்றைக்கு பல ஆண்டுக்கு முன்பு சிந்து சமவெளி நாகரிகத்தில் தோன்றிய தமிழ் மொழி எல்லாத்துக்கும் தாயாக இருந்துள்ளது.

அந்த தாயை நினைவுகூருமுகமாக அனைத்துலக தாய்மொழி நாளை முன்னிட்டு இவ் போட்டி நிகழ்வுகள் நடைபெறுகின்றது. இவ் போட்டி நான்கு வயது பிரிவிவாக இடம்பெற்று கடைசியில் இறுதிச்சுற்றும் பரிசளிப்பு விழாவும் இடம்பெறும். பரிசளிப்பு விழாவில் தமிழ் இளையோர் அமைப்பின் நடனம் பேச்சு கவிதை மற்றும் தமிழ் பாடசாலைகளின் மாணவர்களின் நடனம் பாட்டு என்பனவற்றுடன் மிக சிறப்பாக இடம்பெறவுள்ளது.

தயவு செய்து இவ் மின்னஞ்சலுடன் இணைக்கப்பட்டுள்ள பதாகைகளை உங்கள் இணைய தளத்தில் இணைத்து இவ் போட்டியினை சிரமம் இன்றி நடத்தி முடிக்க உதவி புரியுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

மேலதிக விபரங்களுக்கு

Web: http://www.tyouk.org
Follow us: http://twitter.com/#!/TYOUK
Face Book: http://www.facebook.com/tyouk.media

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

லயன் எயார் விமானம் தொடர்பில் கிளம்பியது புதிய சந்தேகம் - சுட்டு வீழ்த்தப்பட்டதா? கடத்தப்பட்டதா என குழப்பம்!
[Monday, 2013-05-20 19:51:45]

இரணைதீவுக் கடலில் 1998ம் ஆண்டில் வீழ்ந்த லயன் எயர் விமானம், சுட்டு வீழ்த்தப்பட்டதா அல்லது கடத்தப்பட்டதா என்ற சந்தேகம், அதில் பயணம் செய்தவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்களிடம் எழுந்துள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது. இரணைதீவுக் கடலில் இந்த மாதம் 4ம் நாள் தீவிரவாத புலனாய்வுப் பிரிவின் வழிகாட்டலில், லயன் எயர் விமானத்தின் சிதைவுகளை சிறிலங்கா கடற்படையினர் மீட்டனர். கடலில் 25 அடி ஆழத்தில் இருந்த சுழியோடிகளால் விமானத்தின் இரண்டு இறக்கைகள், மூன்று சக்கரங்கள் உள்ளிட்ட பல பாகங்கள் மீட்கப்பட்டன. இரண்டு நாட்கள் நீடித்த இந்த மீட்புப் பணியின் போது, பெண் ஒருவரின் தேசிய அடையாள அட்டை, செயற்கைப் பல், மற்றும் மனித எலும்புகள் சிலவும் மீட்கப்பட்டதாக கூறப்பட்டது.



வேலைநிறுத்த போராட்டத்தின் போது ஏதாவது ஒரு காரியாலயம் மூடப்பட்டால் நான் பதவி துறப்பேன்: பிரதியமைச்சர்
[Monday, 2013-05-20 19:04:39]

மின்சார கட்டண அதிகரிப்பிற்கு எதிராக எதிர்க்கட்சிகளினால் முன்னெடுக்கப்படும் வேலைநிறுத்த போராட்டத்தின் போது ஏதாவது ஒரு காரியாலயம் மூடப்பட்டால் நான் பதவிதுறப்பேன் என்று பிரதியமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். அரசாங்க காரியாலயங்கள் அல்லது எந்தவொரு தனியார் காரியாலயமும் நாளை செவ்வாய்க்கிழமை மூடப்பட்டால் நான் பதவிதுறப்பேன். என்று பெருந்தோட்ட கைத்தொழில் பிரதியமைச்சர் ஏர்ல் குணசேகர தெரிவித்துள்ளார். கம்பளை ரத்னாசார விஹாரையில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற வைபவமொன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு சவால் விடுத்தார்.



ஆட்கொணர்வு மனுவை மீளப்பெறுமாறு காணாமல்போனவர்களின் உறவினர்களுக்கு படையினர் அச்சுறுத்தல்!
[Monday, 2013-05-20 19:00:15]

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்து, பின்னர் காணாமற்போனவர்கள் தொடர்பில் வவுனியா மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுவை திரும்பப் பெறுமாறு மனுதாரர்களுக்கு இனந்தெரியாத நபர்களால் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான முன்னாள் போராளிகள் 2009 ம் ஆண்டு மே 18ம் திகதி இராணுவத்தினரின் அறிவித்தலுக்கு அமைய சரணடைந்திருந்தனர். இதன் பின்னர் சரணடைந்தவர்கள் அவர்களது உறவினர்களின் கண்ணெதிரே படையினரால் பஸ்களில் ஏற்றிச் செல்லப்பட்டனர். எனினும் அதன் பின்னர் அவர்களது நிலை என்னவென்று தெரியா நிலையில் அவர்களது உறவினர்கள் உள்ளனர்.



மக்கள் எழுச்சியைக் கண்டு ராஜபக்ஷ ரெஜிமென்ட் பயந்துவிட்டது - ரணில்!
[Monday, 2013-05-20 18:42:18]

ராஜபக்ஷ ரெஜிமென்ட் கடந்த 15 ஆம் திகதி இடம்பெற்ற மக்கள் எழுச்சியைக் கண்டு பயந்துள்ள நிலையில் நாளை இடம்பெறவுள்ள தேசிய தொழிற்சங்க போராட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமென எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,



காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் தற்போதைக்கு வழங்கப்படத் தேவையில்லை - டக்ளஸ்!
[Monday, 2013-05-20 18:27:33]

தற்போதைக்கு மாகாணசபைகளுக்கு காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்படத் தேவையில்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். வட மாகாணசபைத் தேர்தல்கள் நடத்தப்படவுள்ள நிலையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஆங்கில ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டின் இரண்டு பிரதான இன சமூகங்களுக்கு இடையில் சரியான புரிந்துணர்வு எட்டப்படும் வரையில் காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் வழங்குவது தொடர்பிலான தீர்மானத்தை சற்றே ஒத்தி வைக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார். வட மாகாணசபைக்கு காணி காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்பட்டால் சிங்கள மக்கள் அது குறித்து கவனம் செலுத்துவர், இந்த அதிகாரங்கள் வழங்கப்படாவிட்டால் தமிழ் மக்கள் அது குறித்து கவனம் செலுத்துவர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



மீண்டும் த.தே.ம.மு உறுப்பினர்களை விசாரணைக்கு அழைத்தது குற்றத்தடுப்பு பொலிஸ்!
[Monday, 2013-05-20 18:17:34]

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் பொதுச் செயலாளர் உட் பட்ட 4பேர் பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரினால் இன்று மீளவும் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருப்பதாக கட்சியின் யாழ்.வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த 18ம் திகதி மன்னாரில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவு நாள் நிகழ்வில் கலந்துகொண்டிருந்த சமயம் முன்னணியின் பொதுச்செயலாளர் செ.கஜேந்திரன், சட்டத்தரணி வி.மணிவண்ணன் மற்றும் இளைஞரணி தலைவர் எஸ்.சத்தியசீலன் உட்பட 15பேர் கைதுசெய்யப்பட்டு விசாரணைகளின் பின்னர் நள்ளிரவு விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில் முன்னணியின் உபதலைவர் சி.கஜேந்திரகுமார், மற்றும் வவுனியா மாவட்ட அமைப்பாளர் எஸ்.வசந்தரூபன் ஆகியோர் இன்று காலை 9மணிக்கு பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரினால் மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.



இராணுவத்தினால் காணி சுவீகரிப்பு - தடுக்குமாறு நாமல் எம்.பிக்கு கடிதம்!
[Monday, 2013-05-20 18:13:18]

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான காணியினை அரசாங்க அதிபர் குழுவினர் சுவீகரிக்க முயற்சிப்பதாகவும் இதனை உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு, இலங்கை போக்குவரத்து சபை கிளிநொச்சிசாலை ஊழியர்கள் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பில் அவர்கள் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 12 ஏக்கர் காணியில், முதற்கட்டமாக வனவள திணைக்களத்திற்கும், சிறுவர் பூங்காவிற்கும், இராணுவத்தினரின் புனித பூமிக்குமாக எமது காணி சுவீகரிக்கப்பட்டது.



வடக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியிடம் கோரவில்லை: தயா மாஸ்டர்
[Monday, 2013-05-20 17:51:40]

தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் எந்தவொரு கட்சியையும் அணுகவில்லை என தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்குமாறு எந்தவொரு அரசியல் கட்சியிடமும் கோரவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் கீழ் தேர்தலில் போட்டியிட தயா மாஸ்டர் சந்தர்ப்பம் கோரியதாகவும் அதனை நிராகரித்ததாகவும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்திருந்தார். எனினும், இவ்வாறான எந்தவொரு கோரிக்கையையும் முன்வைக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



வவுனியாவில் 7 வயதுச் சிறுமி மீது பாலியல் வல்லுறவு - நீதி கோரி பாரிய ஆர்ப்பாட்டம்!Top News
[Monday, 2013-05-20 15:33:34]

வவுனியா நெடுங்கேணி சேனைப்பிலவில் 7 வயது சிறுமியொருவரைப் பாலியல் பலாத்காரம் செய்தவரை உடன் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் எனக்கோரி திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருக்கின்றது. சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் பேரில் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டு சிறுவர்களுக்கும் பெண்களுக்கும் எதிராக நடத்தப்படுகின்ற சித்திரவதைகள் வன்முறைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்திருக்கின்றனர்.



பாராளுமன்றத்திற்கு செல்வது போன்று அடிக்கடி 4ம் மாடிக்கும் செல்கின்றோம் - அரியநேந்திரன் எம்.பி!
[Monday, 2013-05-20 15:21:41]

எப்போதும் தமிழ் மக்களுக்கு சுதந்திரமான அரசியல் தீர்வு விடுதலை கிடைக்கின்றதோ அது வரையும் எமது பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.அரியநேந்திரன் தெரிவித்தார். முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளை நினைவு கூர்ந்து பிரார்த்தனை செய்யும் வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கணடவாறு கூறினார். தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்,



கோவையில் நடைபெற்ற மே 18 போர்க்குற்றநாள் நிகழ்வில் பெருமளவு ஈழ விடுதலை ஆதரவாளா்கள் பங்கேற்ப்பு. Top News
[Monday, 2013-05-20 10:26:35]

கோவையில் நேற்றையதினம் (18 05 2013) முள்ளிவாய்க்கால் இனப்படுகொல போர்க்குற்றநாள் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் ஏற்ப்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் பெருமளவான தமிழீழ விடுதலை ஆதரவாளா்களும் செயற்ப்பாட்டாளர்களும் கலந்துகொண்டனர்.



ஜனாதிபதி மஹிந்த சீனாவுக்கு ஆறாவது தடவையாக விஜயம்!
[Monday, 2013-05-20 09:16:57]

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வரும் புதன்கிழமை சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. வரும் 22ம் நாள் தொடக்கம் 26ம் நாள் வரை சீனாவில் பயணம் மேற்கொள்ள ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார். எனினும் இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னமும் வெளியாகவில்லை. ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்ச பொறுப்பேற்ற பின்னர், சீனாவுக்கு மேற்கொள்ளவிருக்கும் ஆறாவது பயணம் இதுவாகும். அண்மையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் தலைமையிலான புதிய அரசாங்கம் பொறுப்பேற்ற பின்னர், சிறிலங்கா அதிபர் நடத்தவுள்ள முதல் சந்திப்பு இதுவாகும்.



கனடாவில் நாடு கடந்த தமிழீழ அரசின் சார்பில் நடைபெற்ற தமிழீழ தேசிய துக்க நாள் நிகழ்வு Top News
[Monday, 2013-05-20 09:15:07]

"ஈழத் தமிழ் மக்களுக்கான தீர்வு சுதந்திர இறைமை உடைய தமிழீழ அரசே"
- தமிழீழ சுதந்திர சாசன முரசறைவில் பிரதமர் உருத்திரகுமாரன் வலியுறுத்தினார்.

"தமிழீழ மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் வடக்கு, கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கி அமைய விருக்கும் தமிழீழ அரசு ஜனநாயக விழுமியங்களை அடிப்படையாகக் கொண்டிருக்கும். சுதந்திர இறைமை உடைய அரசே தமிழ் மக்களுக்கு அவசியம். மக்களால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளுக்கு சட்டமியற்றி, அதனை அமுல்படுத்தும் உரிமை இருக்கும். சட்டத்தின்முன் தமிழீழ மக்கள் அனைவருமே சரிசமமாக நடாத்தப்படுவார்கள். தமிழீழ அரசாங்கம் மதசார்பற்றதாக இருக்கும். தமிழ், முஸ்லீம் மக்களது தனித்துவம் பேணப்படும்.



கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கிடையில் இம்மாத இறுதிக்குள் புரிந்துணர்வு ஒப்பந்தம்: - சிவாஜிலிங்கம்
[Monday, 2013-05-20 09:12:26]

தமிழ் தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிக்களுக்கிடையில் இந்த மாத இறுதிக்குள் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும். இதற்கான முன்னேற்பாடுகள் இடம் பெற்று வருகின்றன. இதற்கான பொறுப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று ரெலோவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.



கனடாவின் நகர்வுகள் குறித்து உன்னிப்பாக கண்காணிக்கப்படும் என்கிறது இலங்கை அரசு!
[Monday, 2013-05-20 09:11:55]

கனடாவின் நகர்வுகள் தொடர்பில் உன்னிப்பாக கண்காணிக்கப்படும் என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளை தடுத்து நிறுத்தும் நோக்கில் கனடா நடவடிக்கைகளை மேற்கொள்கின்றதா என்பது குறித்து கவனிக்கப்பட உள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. இலங்கையில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகள் நடத்தப்படுவது குறித்து கனடாவும் பஹாமாஸூம் அண்மையில் நடாத்திய பேச்சுவார்த்தைகள் குறித்த தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது. நாட்டின் உண்மையான நிலைமைகள் குறித்து அந்தந்த நாடுகளுக்கு தெளிவுபடுத்துமாறு வெளிநாடுகளுக்கான இலங்கைத் தூதுரக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.



அரசின் யுத்த வெற்றிவிழா ஒட்டு மொத்த தமிழ் மக்களுக்கும் இரத்தக் கண்ணீரால் எழுதப்பட்ட ஒரு துக்க தினம். - ஜனா
[Monday, 2013-05-20 09:06:05]

யுத்த வெற்றிவிழா இலங்கை அரசைப் பொறுத்தவரை கொண்டாட்ட நிகழ்வாக இருக்கும். ஆனால் ஒட்டு மொத்த தமிழ் மக்களுக்கும் இரத்தக் கண்ணீரால் எழுத்தப்பட்ட ஒரு துக்க தினம் என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவிக்கிறார். யுத்த வெற்றிக் கொண்டாட்டம் நடைபெறுவது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.



இலங்கை நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து நோர்வே அரசு அதிர்ச்சி!
[Monday, 2013-05-20 08:52:13]

இலங்கை நீதிமன்றின் தீர்ப்புகள் தமக்கு அதிர்ச்சியளிப்பதாக நோர்வே அரசாங்கம் அறிவித்துள்ளது. இலங்கைக்கான நோர்வே தூதரக அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தொடர முடியும் என கொழும்பு நீதிமன்றம் அண்மையில் அறிவித்திருந்தது. கொழும்பு மேலதிக நீதவான் அமாலி ரணவீர இந்த உத்தரவினை பிறப்பித்திருந்தார். முன்னணி தன்னார்வ தொண்டு நிறுவனமான சகவாழ்வு மன்றத்தின் தலைவர் குமார் ரூபசிங்கவினால் நோர்வே தூதரக அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. உறுதிமொழி அளிக்கப்பட்டதனைப் போன்று நிதி உதவிகள் தொடர்ச்சியாக வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. நோர்வேயின் முன்னாள் தூதுவர் ஹில்டே ஹரால்ஸ்டட் மற்றும் இரண்டு அதிகாரிகள் 98.5 மில்லியன் ரூபாவினை வழங்கத் தவறியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.



பௌத்த பிக்குகள் பொறுமையுடனும், புத்திசாலித்தனமாகவும் செயற்பட வேண்டும் - பிரதமர்
[Monday, 2013-05-20 08:39:20]

பௌத்த பிக்குகள் மிகவும் பொறுமையுடன் செயற்பட வேண்டுமென பிரதமர் டி.எம்.ஜயரட்ன தெரிவித்துள்ளார். சிலர் வேற்று மதங்களுடன் மோதல்களை ஏற்படுத்திக் கொள்ள முயற்சிக்கின்றனர். இதனால் நாட்டின் பெரும்பான்மை இனத்திற்கு அதிக அழிவு ஏற்படும். இதனை பௌத்த மாநாயக்கத் தேரர்கள் புரிந்து கொள்ள வேண்டும். பௌத்த மதத் தலைவர்கள் பொறுமையுடனும், புத்திசாலித்தனமாகவும் செயற்பட வேண்டும். மக்களின் மனதுகளை வென்றெடுக்கக் கூடிய மதத் தலைவர்கள் இல்லையென்றால், எத்தனை பெரிய விஹாரைகள் அமைத்தாலும் அதில் பயன் கிடையாது என பிரதமர் தெரிவித்துள்ளார். களனியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.



மெல்பேணில் நடைபெற்று வரும் தமிழர் இனவழிப்பு புகைப்படக் கண்காட்சி! Top News
[Monday, 2013-05-20 08:08:59]

அவுஸ்திரேலியா மெல்பேர்ண் நகரில் ஞாயிற்றுக்கிழமை (19-05-2013) அன்று தமிழர் இனவழிப்பை நினைவுபடுத்தும் புகைப்படக் கண்காட்சி தொடங்கிவைக்கப்பட்டது. மதியம் இரண்டு மணிக்குத் தொடங்கப்பட்ட இந்நிகழ்வு தமிழ் ஏதிலிகள் கழகத்தைச் (Tamil refugee Council) சேர்ந்த Ron Guy தலைமையில் இடம்பெற்றது. இக்கண்காட்சியில், முள்ளிவாய்க்கால் பேரழிவின் இறுதிக்காலப்பகுதியில் எடுக்கப்பட்ட, இதுவரை வெளிவராத புகைப்படங்களும் போரின் பின்னான எமது மக்களின் அவல வாழ்வை வெளிப்படுத்தும் புகைப்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இப்படங்கள் அனைத்தும் முள்ளிவாய்க்கால் காலப்பகுதி தொடக்கம் கடந்த ஆண்டின் இறுதிவரை தமிழர் தாயகத்தில் நடைபெற்ற தமிழின அழிப்பின் சாட்சியமாக உள்ளன. இப்படங்களில் பெரும்பாலானவற்றைப் படம்பிடித்து பாதுகாப்பாக அந்த ஆவணங்களை அவுஸ்திரேலியா வரை கொண்டு வந்து சேர்ந்த்தவரும் நேரடியாக இக்கண்காட்சித் தொடக்க நிகழ்வில் கலந்துகொண்டார்.



முப்பது வருடங்களாக தமிழர்கள் போராடி அழிவைத்தான் பெற்றுக்கொண்டுள்ளனர் - ஹிஸ்புல்லா
[Monday, 2013-05-20 07:59:39]

பதவிகளுக்காக முஸ்லிம் சமூகத்தை காட்டிக் கொடுக்க மாட்டேன் என பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார். முஸ்லிம்கள் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கும் பல சவால்களுக்கும் முகம் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் முஸ்லிம் சமூகம் பொறுமையுடனும் நிதானத்துடனும் செயற்பட வேண்டும். முஸ்லிம் சமூகத்தை நிதானத்துடன் வழி நடத்த வேண்டிய பொறுப்பு முஸ்லிம் அரசியல் தலைவர்கள், சமூக சமய தலைவர்களுக்கு உண்டு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முஸ்லிம்களுக்கு கடந்த காலங்களில் ஏற்பட்ட பிரச்சினைகளை விட அதிகமான பிரச்சினைகள் எதிர்காலத்தில் வரலாம் பாரிய சவால்கள் ஏற்படலாம். எந்த பிரச்சினை வந்த போதும் நாம் பொறுமையாகவும் நிதானத்துடனும் நடந்து கொள்ள வேண்டும்.


NIRO-DANCE-100213
TDE_Computers2011
Canada Kanthasamy Kovil
INNSYS-20120930
TamilsGuid-191012-2013
Ramans2011
RoyaShades-l2011(04-12-11)
Suresh-remax-2013-01-01
Mahesan supramaniyam 031109
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com