Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 20, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
பேராசிரியர் ஹூல்க்கு எதிரான வழக்கு அடுத்த ஆண்டு பெப்ரவரிக்கு ஒத்திவைப்பு!
[Friday, 2012-10-12 12:23:56]
News Service

ஊடக உரிமை மோசடி செய்து அவதூறு பரப்பினார் என தெரிவித்து பேராசிரியர் ஹுல் மற்றும் தென்னிலங்கை சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியருக்கும் வெளியீட்டாளருக்கும் எதிராக சட்டத்தரணி ரெங்கன் தேவராஜனால் தொடுக்கப்பட்டிருக்கும் வழக்கு 2013 பெப்ரவரி மாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

  

2011இல் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது சண்டே லீடர் பத்திரிகையின் வெளியீட்டாளர் மற்றும் ஆசிரியர் சார்பாக நீதிமன்றிற்கு சமூகமளித்திருந்த சட்டத்தரணி தவபாலன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சுமந்திரன் சண்டேலீடர் பத்திரிகையை பிரிதிநிதித்துவப்படுத்தி இருப்பதாக தெரிவித்திருந்த நிலையிலும் பேராசிரியர் சார்பாக எவரும் எவரும் சமூகமளித்திருக்கவில்லை.

இந்த நிலையில் - பேராசிரியருக்கு வெளிநாட்டு அமைச்சு ஊடாக மற்றுமொரு தடவை அழைப்பாணை அனுப்புமாறு யாழ்.மாவட்ட நீதிபதி ஆனந்தராஜா கால அவகாசம் வழங்கி இவ்வழக்கை 2013 பெப்ரவரி மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளார். மீண்டும் ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட்டாலும் பேராசிரியர் நீதிமன்றிற்கு சமூகமளிப்பாரா என்பதில் தனக்கு சந்தேகம் இருப்பதாக சட்டத்தரணி ரெங்கன் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்த நீதிபதி ஆனந்தராஜா, இந்த வழக்கின் பாரதூர தன்மையை பேராசிரியர் விளங்கிக்கொள்வார் என தான் நம்புவதாகவும், நீதிமன்றிற்கு சமூகமளிக்காமையினால் வரும் விளைவுகள் பற்றி பேராசிரியருக்கு நன்கு தெரிந்திருக்கும் என தான் கருதுவதாகவும் தெரிவித்ததுடன், வழக்கை அடுத்த வருடத்திற்கு ஒத்திவைத்தார்.

பேராசிரியர் ஹுல் தீவுப் பகுதி மக்களை இழிவுபடுத்தி பேசினார் எனவும், பாதிக்கப்பட்ட அந்த மக்களுக்கு சட்ட ஆலோசனை வழங்கியமைக்காக சட்டத்தரணி ரெங்கன் தேவராஜனுக்கு எதிராக ஊடகங்களில் அவதூறு பரப்பினார் என்றே இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தது.

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் தற்போதைக்கு வழங்கப்படத் தேவையில்லை - டக்ளஸ்!
[Monday, 2013-05-20 18:27:33]

தற்போதைக்கு மாகாணசபைகளுக்கு காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்படத் தேவையில்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். வட மாகாணசபைத் தேர்தல்கள் நடத்தப்படவுள்ள நிலையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஆங்கில ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டின் இரண்டு பிரதான இன சமூகங்களுக்கு இடையில் சரியான புரிந்துணர்வு எட்டப்படும் வரையில் காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் வழங்குவது தொடர்பிலான தீர்மானத்தை சற்றே ஒத்தி வைக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார். வட மாகாணசபைக்கு காணி காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்பட்டால் சிங்கள மக்கள் அது குறித்து கவனம் செலுத்துவர், இந்த அதிகாரங்கள் வழங்கப்படாவிட்டால் தமிழ் மக்கள் அது குறித்து கவனம் செலுத்துவர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



மீண்டும் த.தே.ம.மு உறுப்பினர்களை விசாரணைக்கு அழைத்தது குற்றத்தடுப்பு பொலிஸ்!
[Monday, 2013-05-20 18:17:34]

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் பொதுச் செயலாளர் உட் பட்ட 4பேர் பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரினால் இன்று மீளவும் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருப்பதாக கட்சியின் யாழ்.வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த 18ம் திகதி மன்னாரில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவு நாள் நிகழ்வில் கலந்துகொண்டிருந்த சமயம் முன்னணியின் பொதுச்செயலாளர் செ.கஜேந்திரன், சட்டத்தரணி வி.மணிவண்ணன் மற்றும் இளைஞரணி தலைவர் எஸ்.சத்தியசீலன் உட்பட 15பேர் கைதுசெய்யப்பட்டு விசாரணைகளின் பின்னர் நள்ளிரவு விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில் முன்னணியின் உபதலைவர் சி.கஜேந்திரகுமார், மற்றும் வவுனியா மாவட்ட அமைப்பாளர் எஸ்.வசந்தரூபன் ஆகியோர் இன்று காலை 9மணிக்கு பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரினால் மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.



இராணுவத்தினால் காணி சுவீகரிப்பு - தடுக்குமாறு நாமல் எம்.பிக்கு கடிதம்!
[Monday, 2013-05-20 18:13:18]

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான காணியினை அரசாங்க அதிபர் குழுவினர் சுவீகரிக்க முயற்சிப்பதாகவும் இதனை உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு, இலங்கை போக்குவரத்து சபை கிளிநொச்சிசாலை ஊழியர்கள் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பில் அவர்கள் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 12 ஏக்கர் காணியில், முதற்கட்டமாக வனவள திணைக்களத்திற்கும், சிறுவர் பூங்காவிற்கும், இராணுவத்தினரின் புனித பூமிக்குமாக எமது காணி சுவீகரிக்கப்பட்டது.



வவுனியாவில் 7 வயதுச் சிறுமி மீது பாலியல் வல்லுறவு - நீதி கோரி பாரிய ஆர்ப்பாட்டம்!Top News
[Monday, 2013-05-20 15:33:34]

வவுனியா நெடுங்கேணி சேனைப்பிலவில் 7 வயது சிறுமியொருவரைப் பாலியல் பலாத்காரம் செய்தவரை உடன் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் எனக்கோரி திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருக்கின்றது. சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் பேரில் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டு சிறுவர்களுக்கும் பெண்களுக்கும் எதிராக நடத்தப்படுகின்ற சித்திரவதைகள் வன்முறைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்திருக்கின்றனர்.



பாராளுமன்றத்திற்கு செல்வது போன்று அடிக்கடி 4ம் மாடிக்கும் செல்கின்றோம் - அரியநேந்திரன் எம்.பி!
[Monday, 2013-05-20 15:21:41]

எப்போதும் தமிழ் மக்களுக்கு சுதந்திரமான அரசியல் தீர்வு விடுதலை கிடைக்கின்றதோ அது வரையும் எமது பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.அரியநேந்திரன் தெரிவித்தார். முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளை நினைவு கூர்ந்து பிரார்த்தனை செய்யும் வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கணடவாறு கூறினார். தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்,



கோவையில் நடைபெற்ற மே 18 போர்க்குற்றநாள் நிகழ்வில் பெருமளவு ஈழ விடுதலை ஆதரவாளா்கள் பங்கேற்ப்பு. Top News
[Monday, 2013-05-20 10:26:35]

கோவையில் நேற்றையதினம் (18 05 2013) முள்ளிவாய்க்கால் இனப்படுகொல போர்க்குற்றநாள் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் ஏற்ப்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் பெருமளவான தமிழீழ விடுதலை ஆதரவாளா்களும் செயற்ப்பாட்டாளர்களும் கலந்துகொண்டனர்.



ஜனாதிபதி மஹிந்த சீனாவுக்கு ஆறாவது தடவையாக விஜயம்!
[Monday, 2013-05-20 09:16:57]

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வரும் புதன்கிழமை சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. வரும் 22ம் நாள் தொடக்கம் 26ம் நாள் வரை சீனாவில் பயணம் மேற்கொள்ள ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார். எனினும் இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னமும் வெளியாகவில்லை. ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்ச பொறுப்பேற்ற பின்னர், சீனாவுக்கு மேற்கொள்ளவிருக்கும் ஆறாவது பயணம் இதுவாகும். அண்மையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் தலைமையிலான புதிய அரசாங்கம் பொறுப்பேற்ற பின்னர், சிறிலங்கா அதிபர் நடத்தவுள்ள முதல் சந்திப்பு இதுவாகும்.



கனடாவில் நாடு கடந்த தமிழீழ அரசின் சார்பில் நடைபெற்ற தமிழீழ தேசிய துக்க நாள் நிகழ்வு Top News
[Monday, 2013-05-20 09:15:07]

"ஈழத் தமிழ் மக்களுக்கான தீர்வு சுதந்திர இறைமை உடைய தமிழீழ அரசே"
- தமிழீழ சுதந்திர சாசன முரசறைவில் பிரதமர் உருத்திரகுமாரன் வலியுறுத்தினார்.

"தமிழீழ மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் வடக்கு, கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கி அமைய விருக்கும் தமிழீழ அரசு ஜனநாயக விழுமியங்களை அடிப்படையாகக் கொண்டிருக்கும். சுதந்திர இறைமை உடைய அரசே தமிழ் மக்களுக்கு அவசியம். மக்களால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளுக்கு சட்டமியற்றி, அதனை அமுல்படுத்தும் உரிமை இருக்கும். சட்டத்தின்முன் தமிழீழ மக்கள் அனைவருமே சரிசமமாக நடாத்தப்படுவார்கள். தமிழீழ அரசாங்கம் மதசார்பற்றதாக இருக்கும். தமிழ், முஸ்லீம் மக்களது தனித்துவம் பேணப்படும்.



கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கிடையில் இம்மாத இறுதிக்குள் புரிந்துணர்வு ஒப்பந்தம்: - சிவாஜிலிங்கம்
[Monday, 2013-05-20 09:12:26]

தமிழ் தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிக்களுக்கிடையில் இந்த மாத இறுதிக்குள் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும். இதற்கான முன்னேற்பாடுகள் இடம் பெற்று வருகின்றன. இதற்கான பொறுப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று ரெலோவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.



கனடாவின் நகர்வுகள் குறித்து உன்னிப்பாக கண்காணிக்கப்படும் என்கிறது இலங்கை அரசு!
[Monday, 2013-05-20 09:11:55]

கனடாவின் நகர்வுகள் தொடர்பில் உன்னிப்பாக கண்காணிக்கப்படும் என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளை தடுத்து நிறுத்தும் நோக்கில் கனடா நடவடிக்கைகளை மேற்கொள்கின்றதா என்பது குறித்து கவனிக்கப்பட உள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. இலங்கையில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகள் நடத்தப்படுவது குறித்து கனடாவும் பஹாமாஸூம் அண்மையில் நடாத்திய பேச்சுவார்த்தைகள் குறித்த தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது. நாட்டின் உண்மையான நிலைமைகள் குறித்து அந்தந்த நாடுகளுக்கு தெளிவுபடுத்துமாறு வெளிநாடுகளுக்கான இலங்கைத் தூதுரக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.



அரசின் யுத்த வெற்றிவிழா ஒட்டு மொத்த தமிழ் மக்களுக்கும் இரத்தக் கண்ணீரால் எழுதப்பட்ட ஒரு துக்க தினம். - ஜனா
[Monday, 2013-05-20 09:06:05]

யுத்த வெற்றிவிழா இலங்கை அரசைப் பொறுத்தவரை கொண்டாட்ட நிகழ்வாக இருக்கும். ஆனால் ஒட்டு மொத்த தமிழ் மக்களுக்கும் இரத்தக் கண்ணீரால் எழுத்தப்பட்ட ஒரு துக்க தினம் என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவிக்கிறார். யுத்த வெற்றிக் கொண்டாட்டம் நடைபெறுவது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.



இலங்கை நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து நோர்வே அரசு அதிர்ச்சி!
[Monday, 2013-05-20 08:52:13]

இலங்கை நீதிமன்றின் தீர்ப்புகள் தமக்கு அதிர்ச்சியளிப்பதாக நோர்வே அரசாங்கம் அறிவித்துள்ளது. இலங்கைக்கான நோர்வே தூதரக அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தொடர முடியும் என கொழும்பு நீதிமன்றம் அண்மையில் அறிவித்திருந்தது. கொழும்பு மேலதிக நீதவான் அமாலி ரணவீர இந்த உத்தரவினை பிறப்பித்திருந்தார். முன்னணி தன்னார்வ தொண்டு நிறுவனமான சகவாழ்வு மன்றத்தின் தலைவர் குமார் ரூபசிங்கவினால் நோர்வே தூதரக அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. உறுதிமொழி அளிக்கப்பட்டதனைப் போன்று நிதி உதவிகள் தொடர்ச்சியாக வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. நோர்வேயின் முன்னாள் தூதுவர் ஹில்டே ஹரால்ஸ்டட் மற்றும் இரண்டு அதிகாரிகள் 98.5 மில்லியன் ரூபாவினை வழங்கத் தவறியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.



பௌத்த பிக்குகள் பொறுமையுடனும், புத்திசாலித்தனமாகவும் செயற்பட வேண்டும் - பிரதமர்
[Monday, 2013-05-20 08:39:20]

பௌத்த பிக்குகள் மிகவும் பொறுமையுடன் செயற்பட வேண்டுமென பிரதமர் டி.எம்.ஜயரட்ன தெரிவித்துள்ளார். சிலர் வேற்று மதங்களுடன் மோதல்களை ஏற்படுத்திக் கொள்ள முயற்சிக்கின்றனர். இதனால் நாட்டின் பெரும்பான்மை இனத்திற்கு அதிக அழிவு ஏற்படும். இதனை பௌத்த மாநாயக்கத் தேரர்கள் புரிந்து கொள்ள வேண்டும். பௌத்த மதத் தலைவர்கள் பொறுமையுடனும், புத்திசாலித்தனமாகவும் செயற்பட வேண்டும். மக்களின் மனதுகளை வென்றெடுக்கக் கூடிய மதத் தலைவர்கள் இல்லையென்றால், எத்தனை பெரிய விஹாரைகள் அமைத்தாலும் அதில் பயன் கிடையாது என பிரதமர் தெரிவித்துள்ளார். களனியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.



மெல்பேணில் நடைபெற்று வரும் தமிழர் இனவழிப்பு புகைப்படக் கண்காட்சி! Top News
[Monday, 2013-05-20 08:08:59]

அவுஸ்திரேலியா மெல்பேர்ண் நகரில் ஞாயிற்றுக்கிழமை (19-05-2013) அன்று தமிழர் இனவழிப்பை நினைவுபடுத்தும் புகைப்படக் கண்காட்சி தொடங்கிவைக்கப்பட்டது. மதியம் இரண்டு மணிக்குத் தொடங்கப்பட்ட இந்நிகழ்வு தமிழ் ஏதிலிகள் கழகத்தைச் (Tamil refugee Council) சேர்ந்த Ron Guy தலைமையில் இடம்பெற்றது. இக்கண்காட்சியில், முள்ளிவாய்க்கால் பேரழிவின் இறுதிக்காலப்பகுதியில் எடுக்கப்பட்ட, இதுவரை வெளிவராத புகைப்படங்களும் போரின் பின்னான எமது மக்களின் அவல வாழ்வை வெளிப்படுத்தும் புகைப்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இப்படங்கள் அனைத்தும் முள்ளிவாய்க்கால் காலப்பகுதி தொடக்கம் கடந்த ஆண்டின் இறுதிவரை தமிழர் தாயகத்தில் நடைபெற்ற தமிழின அழிப்பின் சாட்சியமாக உள்ளன. இப்படங்களில் பெரும்பாலானவற்றைப் படம்பிடித்து பாதுகாப்பாக அந்த ஆவணங்களை அவுஸ்திரேலியா வரை கொண்டு வந்து சேர்ந்த்தவரும் நேரடியாக இக்கண்காட்சித் தொடக்க நிகழ்வில் கலந்துகொண்டார்.



முப்பது வருடங்களாக தமிழர்கள் போராடி அழிவைத்தான் பெற்றுக்கொண்டுள்ளனர் - ஹிஸ்புல்லா
[Monday, 2013-05-20 07:59:39]

பதவிகளுக்காக முஸ்லிம் சமூகத்தை காட்டிக் கொடுக்க மாட்டேன் என பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார். முஸ்லிம்கள் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கும் பல சவால்களுக்கும் முகம் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் முஸ்லிம் சமூகம் பொறுமையுடனும் நிதானத்துடனும் செயற்பட வேண்டும். முஸ்லிம் சமூகத்தை நிதானத்துடன் வழி நடத்த வேண்டிய பொறுப்பு முஸ்லிம் அரசியல் தலைவர்கள், சமூக சமய தலைவர்களுக்கு உண்டு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முஸ்லிம்களுக்கு கடந்த காலங்களில் ஏற்பட்ட பிரச்சினைகளை விட அதிகமான பிரச்சினைகள் எதிர்காலத்தில் வரலாம் பாரிய சவால்கள் ஏற்படலாம். எந்த பிரச்சினை வந்த போதும் நாம் பொறுமையாகவும் நிதானத்துடனும் நடந்து கொள்ள வேண்டும்.



மேற்குலகிற்கு அடி பணிந்து வடமாகாணசபை தேர்தலை நடாத்துவது படையினரை அவமானப்படுத்தும் செயல் - சம்பிக்க ரணவக்க
[Monday, 2013-05-20 07:50:35]

மேற்குலக அழுத்தங்களுக்கு அடிபணிந்து வடக்கு மாகாணசபைக்குத் தேர்தலை நடத்துவது தாய்நாட்டுக்காக தமது உயிர்களைக் கொடுத்த போர்வீரர்களை அவமானப்படுத்தும் செயல் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். ஜாதிக ஹெல உறுமயவினால் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்ட போர்வீரர்களை நினைவு கூரும் நான்காவது ஆண்டு நினைவு நிகழ்வில் உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் ஈழப்போரில் வெற்றி பெற்றிருந்தால், இப்போது சிறிலங்காவுக்கு எதிராக அரசியல் நடத்தும் இந்திய அரசியல்வாதிகளான கருணாநிதியும், ஜெயலலிதாவும் உயிருடன் கூட இருந்திருக்கமாட்டார்கள். பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால் அரசியல்வாதிகளான சம்பந்தன், ரவூப் ஹக்கீம், அசாத் சாலி போன்றோரும் உயிருடன் இருந்திருக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



போலிப்பிரச்சாரங்களை விடுத்து இராணுவக் குறைப்பினை ஏற்றுக்கொள்ளுங்கள் - கோத்தாபாய கோரிக்கை!
[Monday, 2013-05-20 07:23:10]

43ஆயிரம் படைவீரர்கள் நிலைநிறுத்தப்பட்டிருந்த வடக்கில் தற்போது 13ஆயிரத்து 200 படைவீரர்களே கடமையில் உள்ளனர். போலிப்பிரச்சாரங்களை விடுத்து இராணுவக் குறைப்பினை ஏற்றுக்கொள்ளுங்கள் என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, வடக்கில் தற்போது இராணுவத்தின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன் உள்நாட்டு பாதுகாப்பு விவகாரங்களில் புறச் சக்திகள் தலையீடு செய்வதற்கு ஒரு போதும் அனுமதியளிக்க முடியாது. அண்மையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மன் குர்ஷித், காணி சுவீகரிப்பு மற்றும் படையினர் நிலைநிறுத்தம் தொடர்பில் கேள்வி எழுப்பியிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும், இந்தத் தகவல்களில் உண்மைகள் எதுவும் இல்லை. வடக்கில் பலாலி, காங்கேசன்துறை பகுதிகளில் காணி சுவீகரிப்பு தொடர்பில் இந்தியா கேள்வி எழுப்பவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



தமிழீழ மக்களின் சுதந்திர வேட்கையினை முரசறைந்த தமிழீழ சுதந்திர சாசனம் : 110 000 மேற்பட்ட மக்கள் பங்கெடுப்பு ! சிங்கள தேசத்திற்கு பேரிடி!Top News Top News
[Sunday, 2013-05-19 22:04:59]

தமிழர் தேசத்தினை போரில் வெற்றிகொண்டுவிட்டதென்ற மிதப்பில் சிங்கள தேசம் தனது இராணுவ அணிவகுப்புடன் பவனிவந்தவேளை, 1 இலட்சத்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் பங்கெடுத்துக் கொண்ட தமிழீழ சுதந்திர சாசனம் முரசறையப்பட்டது. 2009ம் ஆண்டுக்கு பின்னரான ஈழவிடுதலைப் போராட்டத்தின் விடுதலைப்பாதையில் இராஜதந்திர களத்தில் தமிழீழ சுதந்திர சானத்தின் முரசறைவு தமிழர் தரப்பின் வரலாற்று முக்கியமிக்கதொரு பெரும் அரசியல் முன்னகர்வாக கருதப்படுவதோடு ஆயிரக்கணக்கான தமிழீழத் தாயக மக்கள் தங்கள் கருத்துக்களை இச்சாசன உருவாக்கத்திற்கு வழங்கியுள்ளமை உணர்வெழுச்சியினை ஏற்படுத்தியுள்ளது.



மனித எலும்புக்கூடுகள் குருநாகல் மலையில் மீட்பு!
[Sunday, 2013-05-19 21:43:37]

குருநாகல், யதிஸ்ஸா மலைப் பகுயிலிருந்து மனித எலும்புக்கூடுகள் இரண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளன.பொலிஸருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின்படி இவ் மனித எலும்புக் கூடுகள் இரண்டும் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. எலும்புக் கூடுகளில் ஒன்று ஆண் எனவும் மற்றையது பெண் எனவும் சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.



பிரான்சில் நடைபெற்ற மே. 18 தமிழின அழிப்பு நினைவு நாள் Top News
[Sunday, 2013-05-19 21:12:43]

தமிழின அழிப்பு நினைவு நாள் மே. 18 நான்காவது ஆண்டில் பிரான்சில் மாபெரும் நினைவுப் பேரணி 18.05.2013 நடைபெற்றது. தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவும், அதன் உப கட்டமைப்புக்களும், தமிழீழ மக்கள் பேரவையும் இணைந்து இப் பேரணியை ஏற்பாடு செய்திருந்தனர். இன்றைய போராட்டத்தில் குர்திஸ்தான் விடுதலை அமைப்பும் பங்கு கொண்டு தமது முழு ஆதரவையும் தெரிவித்தனர்.


Canada Kanthasamy Kovil
RoyaShades-l2011(04-12-11)
TDE_Computers2011
INNSYS-20120930
Ramans2011
TamilsGuid-191012-2013
NIRO-DANCE-100213
Mahesan supramaniyam 031109
Suresh-remax-2013-01-01
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com