Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 19, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க திட்டம் தீட்டும் விஷால்!
[Friday, 2012-10-12 05:10:13]
News Service

அவன் இவன் படத்தில் நடித்தபோதெல்லாம் தமிழ் சினிமாவையே முழுசாக நம்பியிருந்தார் விஷால். ஆனால் பிரபுதேவா இயக்கத்தில் நடித்த வெடி படத்தின் தோல்வி அவரை தடுமாற வைத்து விட்டது. கூடவே படம் சொந்த தயாரிப்பு என்பதால் படத்தை ரிலீஸ் பண்ணுவதிலும் ஏகப்பட்ட சிக்கல்கள்.

  

என்றாலும் அதே படத்தை தனது தாய்மொழியான தெலுங்கிலும் ரிலீஸ் பண்ணி ஓரளவு போட்ட பணத்தை கைப்பற்றினார். அதைத்தொடர்ந்து இப்போது தெலுங்கிலும் நிலையாக காலூன்ற வேண்டும் என்ற நோக்கத்தில் இருக்கிறார் விஷால்.

அதன்காரணமாக, தான் தமிழில் நடிக்கும் படங்களை தானே தெலுங்கில் ரிலீஸ் பண்ணும் முடிவில் இருக்கிறார். இதனால் தான் நடிக்கும் படங்களின் தெலுங்கு ரைட்ஸை முன்கூட்டியே பேசி வாங்கி விடுகிறார். இப்படி வாங்கும் படங்களை ஆந்திராவில் பெரிய அளவில் ஓடவைக்க வேண்டும் என்பதற்காக, விஷாலின் அண்ணனான விக்ரம், ஆந்திராவில் உள்ள முக்கிய நகரங்களில் விளம்பர பலகைகளை வைத்துள்ளாராம். விஷால் நடித்த ஒவ்வொரு படமும் திரைக்கு வரும்போதும் திருவிழாக்கோலம்போல் விளம்பரங்களை அள்ளி விடப்போகிறார்களாம். மற்ற நேரங்களில் இந்த பலகைகளில் மற்றவர்களின் விளம்பரங்களை வெளியிட்டு பெருந்தொகையாக வாடகை வசூலிக்கப்போகிறார்களாம். இப்படியாக ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடிக்கப்போகிறார்கள் விஷால் குழுமம்.

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

நட்சத்திர ஓட்டல்களில் நெருக்கமாகவுள்ள ஸ்ருதி - ரெய்னா..
[Friday, 2013-05-17 10:56:15]

நடிகர் கமலஹாசனின் மூத்த மகளும், நடிகையுமான ஸ்ருதிஹாசன் தற்போது தெலுங்கு, இந்திப் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். சித்தார்த்துடன் ஏற்கனவே ஸ்ருதிஹாசன் இணைந்து பேசப்பட்டார். பிறகு இருவரும் பிரிந்தனர். தற்போது ஸ்ருதி ரெய்னாவுடன் நெருங்கி பழகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரராக ரெய்னா உள்ளார். சமீபத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் 52 பந்தில் 99 ரன்கள் எடுத்து கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்தார். அந்த போட்டியை ஸ்ருதிஹாசனும் நேரில் பார்த்து ரெயினாவை உற்சாகப்படுத்தினார். இருவரும் நட்சத்திர ஓட்டல்களில் ஒன்றாக விருந்து சாப்பிடுவதாகவும் செய்தி பரவியுள்ளது.



சசிக்குமாரின் நண்பனாக நடிக்கும் 'நான் ஈ' சுதீப்!
[Friday, 2013-05-17 10:50:25]

ராஜமவுலி இயக்கிய, 'நான் ஈ' படத்தில் வில்லனாக நடித்து பாராட்டு பெற்றவர் சுதீப். கன்னட நடிகரான இவர், மீண்டும் தமிழ்ப் படம் ஒன்றில் நடிக்கிறார். கே.மஞ்சு தயாரிப்பில் சசிகுமார், லாவண்யா திரிபாதி, சந்தானம், சூரி நடிக்கும் படம், 'பிரம்மன்'. கமல்ஹாசன் உதவியாளர் சாக்ரடீஸ் இயக்குகிறார். ஜோமன் டி. ஜான் ஒளிப்பதிவு செய்கிறார். இவர் மலையாள ஹிட் படமான 'தட்டத்தின் மறையத்து' படத்துக்கு ஒளிப்பதிவு செய்தவர். தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். இந்தப் படத்தின் முதல் ஷெட்யூல் கோவையில் சமீபத்தில் 17 நாட்கள் நடந்து முடிந்தது. இந்தப் படத்தில் முக்கியமான கேரக்டர் ஒன்றில் சுதீப் நடித்தால் நன்றாக இருக்கும் என்று முடிவு செய்தனர். இதை இயக்குனர், தயாரிப்பாளர் கே. மஞ்சுவிடம் கூறினார். மஞ்சுவும் சுதீப்பும் நண்பர்கள் என்பதால் கதை கேட்கச் சம்மதித்தார். இதையடுத்து சாக்ரடீஸ், சுதீப்பிடம் கதையை சொன்னார்.



சிவகார்த்திகேயனுடன் நெருக்கமா? ப்ரியா ஆனந்தின் அதிரடி பதில்!
[Friday, 2013-05-17 10:45:21]

சிவகார்த்திகேயனுடன் நெருக்கமாக இருப்பதாக வெளியான தகவலில் உண்மையில்லை என்கிறார் நடிகை ப்ரியா ஆனந்த். தனுஷின் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் - ப்ரியா ஆனந்த் இணைந்து நடித்துள்ள படம் எதிர் நீச்சல். இப்படம் சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் எதிர் நீச்சல் படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்த சந்திப்பில் படத்தின் நாயகன் சிவகார்த்திக்கேயன், கதாநாயகிகள் பிரியா ஆனந்த், நந்திதா, இயக்குனர் துரை செந்தில் குமார், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் கலந்து கொண்டு நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது பிரியா ஆனந்திடம், தங்கள் படங்களில் கதாநாயகிகளை சிபாரிசு செய்வது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்று கேட்கப்பட்டது. அதற்கு, எனக்கு எந்த கதாநாயகனும் சிபாரிசு செய்யவில்லை என்பதால், அதுபற்றி கருத்து சொல்ல முடியாது என்றார். அடுத்து, சிவகார்த்திகேயனுடன் நெருக்கமாக பழகுவதாகக் கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு, இப்படியெல்லாம் கேட்பீர்கள் என்று தெரிந்துதான் அவரை விட்டு கொஞ்சம் தள்ளியே அமர்ந்திருக்கிறேன் என்று பதிலளித்துள்ளார்.



32 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஜில்லாவில் இணையும் மோகன்லால் - பூர்ணிமா
[Friday, 2013-05-17 10:20:22]

32 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்து நடிக்கின்றனர் மோகன்லாலும் பூர்ணிமா பாக்யராஜும். விஜய் நடிக்கும் "ஜில்லா" படத்தில் இருவரும் ஜோடியாக நடிக்கின்றனர். 1980-ல் "மஞ்சள் விரிஞ்ச பூக்கள்" என்ற மலையாள படத்தில் மோகன்லால் ஜோடியாக நடித்தார். இப்படம் பெரிய ஹிட்டானது. 32 ஆண்டுகளுக்கு பிறகு "ஜில்லா" படத்தில் மீண்டும் இருவரும் ஜோடியாக நடிக்கிறார்கள். இப்படத்தை நேசன் இயக்குகிறார். பூர்ணிமாவுடன் நடிப்பது மகிழ்ச்சி தருவதாக மோகன்லால் தெரிவித்துள்ளார். மோகன்லாலுடன் நடிப்பது குறித்து பூர்ணிமா கூறுகையில், "மோகன்லாலும் நானும் ஜோடியாக நடித்த 'மஞ்சள் விரிஞ்ச பூக்கள்' பெரிய வெற்றிப் படம். அதன் பிறகு இருவரும் நிறைய படங்களில் நடித்தோம். ஆனால் ஜோடியாக நடிக்கவில்லை.



விஜய்யின் தீவிர ரசிகை நான் - பூர்ணா!
[Friday, 2013-05-17 10:12:48]

மலையாள கரையோரத்திலிருந்து வந்த நடிகை ஆரம்பத்தில் ஒன்றிரண்டு படங்கள் மட்டுமே நடித்து வந்தவர், தற்போது தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த வரிசையில் ஷக்திக்கு ஜோடியாக 'படம் பேசும்', உண்மையிலேயே இந்தப் படம் பற்றி பேசாதவர்களே இருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு மிரட்டியிருக்கிறார் இயக்குனர். அதையடுத்து, அருள்நிதியுடன் ஜோடி சேர்ந்து 'தகராறு' படம். அப்புறம் 'அர்ஜூணன் காதலி' இதில் என்னுடன் ஜெய் நடிக்கிறார். இந்தப் படமும் எனக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுக்கும். மிகவும் வித்தியாசமான கதைக்களம். அடுத்து, 'ஜன்னல் ஓரம்' இதுவும் எனக்கு ஸ்பெஷல் படம்தான். இவை எல்லாவும் விட, விஜய்யுடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்பது எனக்கு லட்சியமாகவே இருக்கிறது அந்த அளவுக்கு நான் அவரின் அதி தீவிர ரசிகை. என்கிறார்.



மிஸ்கின் படக்குழுவினரின் பாராட்டை பெற்ற 'வழக்கு எண்' ஸ்ரீ
[Friday, 2013-05-17 10:03:58]

கொலிவுட்டில் வெளியாகி வெற்றிப்படமாகிய வழக்கு எண் 18/9 படத்தின் நாயகன் ஸ்ரீ வானத்தில் பறந்து கொண்டிருக்கிறார். அவர் நடித்த முதல் படமே தேசிய அளவில் விருது பெற்றதோடு, வெற்றி பட நாயகனாக அறிமுகம் என்ற கூடுதல் தகுதியையும் அவருக்கு பெற்றுத்தந்தது. இதற்கெல்லாம் மேலாக ஸ்ரீ மிகவும் ரசித்து மதிக்கும் இயக்குனர் மிஸ்கினின் படத்தில் நாயகனாக வாய்ப்பு வந்த போது அவர் நிச்சயம் பறக்க தான் செய்வார். மிஷ்கின் தயாரித்து, இயக்கும் 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' ஸ்ரீ மேலிருந்து குதிக்கும் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது அவர் நிலை தடுமாறி மேலிருந்து கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. ஆனாலும் அவர் மீண்டும் எங்கிருந்து விழுந்தாரோ அந்த இடத்திற்கே சென்று தான் மீண்டும் நடிக்க தயார் என கூறியதோடு சரியாக குதித்து படக்குழுவினரின் பாராட்டை பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.



இரண்டாவது இன்னிங்சிலும் பட வேட்டையில் இறங்கியுள்ள நயன்தாரா..!
[Friday, 2013-05-17 09:57:40]

இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கிய, சிம்ரன், தேவயானி போன்ற நடிகைகளே தோற்றுவிட்ட நிலையில், மீண்டும் முதல் ரவுண்டை போலவே, தற்போது பிசியாக நடித்து வருகிறார் நயன்தாரா. தமிழில் வலை, ராஜாராணி உள்ளிட்ட படங்களில் நடித்துவரும் அவர், தற்போது வித்யா பாலன் நடித்த, கஹானி படத்தின், தமிழ், தெலுங்கு ரீ-மேக்கில் நடித்து வருகிறார். ஹரி இயக்கும், அருவா படத்திலும், நயன்தாரா தான், ஹீரோயினாம். ஐயா படத்துக்காக, கேரளாவில் இருந்து, நயன்தாராவை தமிழுக்கு அழைத்து வந்ததே, ஹரி தான். அதனால், அவரே, தன்னை மீண்டும் அழைத்திருப்பதால், புதிய உற்சாகத்தில் இருக்கிறார் நயன்தாரா.



டில்லியிலிருந்து குலு-மனாலிக்கு கார் ஓட்டிச்சென்ற தல
[Friday, 2013-05-17 09:54:28]

விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் நடிக்கும், தன், 53வது படத்துக்காக, தற்போது, இமயமலை பகுதிகளில் முகாமிட்டுள்ளார் அஜீத். க்ரைம், த்ரில்லர் கதையில் உருவாகி வரும், இதன் இறுதி கட்ட படப்பிடிப்பு, கடந்த இரண்டு வாரங்களாக லடாக், குலு-மனாலி போன்ற பகுதிகளில், துரிதமாக நடந்து வருகிறது. முன்னதாக, குலு-மனாலியில் நடந்த க்ளைமாக்ஸ் படப்பிடிப்புக்கு சென்ற அஜீத், டில்லியில் இருந்து தானே கார் ஓட்டிச் சென்றுள்ளார். அந்த களைப்பிலும் ஸ்பாட்டை அடைந்ததும், மேக்கப் போட்டுக் கொண்டு நடிக்கத் தொடங்கி விட்டாராம் அஜீத். கடந்த, ஓராண்டாகவே நடந்து வரும், இப்படத்தின் படப்பிடிப்பு, இதோடு முடிவடைகிறதாம். ஆகஸ்ட் மாதத்தில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.



ஆர்யா - சந்தானத்திடம் சிக்கி நொந்து நூடூல்ஸ் ஆன ஹன்சி..
[Friday, 2013-05-17 09:49:12]

ஆர்யா - சந்தானம் ஆகிய இரண்டு பேரும் இணைந்து நடித்தால், அந்த படத்தில் நடிக்கும் கதாநாயகியின் கதி, அதோகதி தான். கதாநாயகியை தினமும், கலாய்த்து, ஒரு வழியாக்கி விடுவர். அப்படி, அவர்களிடம், சேட்டை படத்தில் நடித்த போது, நொந்து நூடூல்ஸ் ஆனவர் தான், ஹன்சிகா. ஆனால், ஆர்யாவுடன் சேர்ந்து, ஹன்சிகாவை கலாய்த்த சந்தானம், தீயா வேலை செய்யணும் குமாரு படத்திற்காக சித்தார்த் - ஹன்சிகாவுடன் இணைந்து நடித்த போது, அவரை எந்நேரமும் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தாராம். மேலும், ஸ்பாட்டில் அனைவரும் ஹன்சிகாவை, சின்ன குஷ்பூ என்று சொல்ல, சந்தானமோ, "என் பார்வைக்கு அவர், ஏஞ்சலினா ஜோலி போல் காட்சி தருகிறார்" என்று, புகழ்ந்தாராம்.



தலைவாவில் மும்பை தாதாவாக நடித்துள்ள விஜய்..!
[Thursday, 2013-05-16 18:51:55]

கொலிவுட்டில் துப்பாக்கியை தொடர்ந்து விஜய் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம் தலைவா. ஏ.எல்.விஜய் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக அமலாபால் நடித்திருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். படம் விரைவில் திரைக்கு வரவிருக்கும் நிலையில் தலைவா குறித்து நாளுக்கு நாள் புதிது புதிதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. படத்தில் விஜய் மும்பை தாதாவாக நடித்திருக்கிறார் என்று அதன் இயக்குனர் ஏ.எல்.விஜய் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், கடந்த 1980ம் ஆண்டுகளில் மும்பையைக் கலக்கிய வரதராஜ முதலியாரை பிரதிபலிப்பது போன்று விஜய்யின் கதாபாத்திரம் இருக்கும்.



எதிர்நீச்சலில் மேக் அப் போடாமல் நடித்தேன்: நந்திதா பேட்டி!
[Thursday, 2013-05-16 18:41:34]

நடிகை ஆவதற்காக பட்டினி கிடந்தேன் என்றார் நந்திதா. 'அட்டகத்தி' படத்தில் நடித்த நந்திதா கூறியது: நான் பெங்களூரை சேர்ந்தவள். நடிகையாக வேண்டும் என்பது என் சிறுவயது கனவு. ஆனால் எனது பெற்றோர் அதற்கு சம்மதிக்கவில்லை. ஆனாலும் நடிகையாகியே தீர வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தேன். என் பெற்றோரிடம் பேசாமல் தனி அறைக்குள் சென்று பூட்டிக்கொண்டேன். 3 நாள் சாப்பிடாமல் பட்டினி கிடந்தேன். பிறகு நிபந்தனைகளுடன் என்னை நடிகையாக பெற்றோர் சம்மதித்தனர். படிப்பை முடித்துவிட்டு நடிக்க வேண்டும் என்று கூறினார்கள். ஏற்றுக்கொண்டேன். 'அட்டகத்தி' பட வாய்ப்பு வந்தபோது ஏற்றுக்கொண்டேன். 'நளனும் நந்தினியும்' விரைவில் வரவிருக்கிறது. 'எதிர்நீச்சல்' படத்தில் மேக் அப் போடாமல் நடித்தேன். இரட்டை ஹீரோயின் கதை என்பதால் நான் நடிக்க மறுத்ததாக எழுதினார்கள். அது தவறு. என்ன வாய்ப்பு வந்தாலும் அதில் எனது கேரக்டர் என்ன என்பதை மட்டும்தான் பார்க்கிறேன். பிடித்திருந்தால் நடிக்கிறேன். ஒரு வருடத்துக்குள் 4 படங்கள் நடித்து முடித்திருக்கிறேன். தற்போது தமிழ் கற்று வருகிறேன். இவ்வாறு நந்திதா கூறினார்.



சாதாரணமாக பேசினாலே, தண்ணி அடித்து விட்டு பேசுவது போல் இருக்கிறது - புலம்பும் விமல்
[Thursday, 2013-05-16 18:34:00]

களவானி படத்தின் மூலம் வெற்றி நாயகனாக ஜொலித்தவர் நடிகர் விமல், தொடர்ந்து வாகை சூடவா போன்ற எதார்த்த படங்களிலும், கலகலப்பு, கேடி பில்லா கில்லாடி ரங்கா போன்ற நகைச்சுவை படங்களிலும் அசத்தினார். இன்றைய தேதியில் சிறு பட்ஜெட் படாதிபதிகளின் விருப்ப நாயகர்களில் நடிகர் விமலும் ஒருவர். தற்போது நேற்று இன்று, ரெண்டாவது படம், தேசிங்கு ராஜா, ஜன்னல் ஓரம் உள்ளிட்ட அரைடஜன் படங்களில் நடித்து வரும் விமல், தினமலருக்கு அளித்த சிறப்பு பேட்டி இதோ...



'பலுபு' படத்தில் நடிகையாக நடிக்கும் லட்சுமி ராய்..
[Thursday, 2013-05-16 18:26:30]

கோபிசந்த் மலினேனி இயக்கும் தெலுங்கு படம் 'பலுபு'. இந்த படத்தில் ரவிதேஜா, ஸ்ருதி ஹாசன், அஞ்சலி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்க, லட்சுமி ராய் ஒரு சிறப்பு தோற்றத்தில் அதாவது நடிகை லட்சுமி ராய் ஆகவே நடிக்க இருக்கிறார். ஜெயனன் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு தமன் இசை அமைக்கிறார். விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வரும் இப்படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது.



தமிழ்நாடு திரைப்படம் திரையிடுவோர் சங்கம் சார்பில் கமல்ஹாஸன் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது!
[Thursday, 2013-05-16 18:10:28]

எக்ஸிபிட்டர்ஸ் அசோசியேஷன்ஸ் எனும் தமிழ்நாடு திரைப்படம் திரையிடுவோர் சங்கம் சார்பில் கமல்ஹாஸன் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. சங்கத்தின் பதிவு எண்ணை அவர் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறி இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுகுறித்து அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், "தமிழ்நாட்டில் திரைப்பட வளர்ச்சிக்காகவும், திரையரங்க உரிமையாளர்களின் நன்மைக்காகவும் எங்கள் சங்கம் பாடுபட்டு வருகிறது. கமல்ஹாசன் பங்குதாரராக உள்ள ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் விஸ்வரூபம் என்ற படத்தை தயாரித்தது. இந்த படத்தை 11-1-2013 அன்று திரையரங்குகளிலும் டி.டி.எச்சிலும் ஒரே நேரத்தில் வெளியிடுவதாக கமல்ஹாசன் அறிவித்தார். இதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் படம் ரீலிஸ் ஆகும் தேதி தள்ளிவைக்கப்பட்டது. இதற்கிடையில் முஸ்லீம் அமைப்பினர் எதிர்ப்பால் தமிழக அரசு இப்படத்துக்கு தடை விதித்தது.



உடம்பை காட்டுவதற்காக சினிமாவுக்கு வரவில்லை - லட்சுமி மேனன்
[Thursday, 2013-05-16 17:53:46]

1.எந்த மாதிரியான கதைகளுக்கு முன்னுரிமை தருகிறீர்கள்?

இந்த மாதிரி கதைகளில் தான், நடிக்க வேண்டும் என்ற, எந்த திட்டமும் என்னிடம் இல்லை. சொல்லப்போனால், கும்கி மற்றும் சுந்தரபாண்டியன் படங்களில் நடிப்பதற்கு முன், கதையே கேட்கவில்லை. இப்போது வரை, அப்படி தான் சென்று கொண்டிருக்கிறது.



சிறுத்தையுடன் ஒருநாள் முழுக்க நடித்த தனுஷ்!
[Thursday, 2013-05-16 17:47:25]

தனுஷின் சமீபகால படங்கள் தோல்விகளை சந்தித்து வருவதால், மரியான் படத்தை பெரிய அளவில் எதிர்பார்க்கிறார். ஏ.ஆர்.ரகுமான், பரத்பாலா, பூ பார்வதி கூட்டணியில் இணைந்திருப்பவர், இந்த படத்துக்காக நீச்சலே தெரியாமல் தண்ணீருக்குள் நடுக்கடலுக்குள் சென்று நடித்திருக்கிறார். அதோடு படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி நபீபியாவில் படமானபோது அங்குள்ள பாலைவனத்தில் பயங்கர வெயிலில் செருப்பு கூட அணியாமல் நடித்தாராம். அதோடு ஒரு காட்சியில் சிறுத்தையுடன் ஒருநாள் முழுக்க நடித்தாராம் தனுஷ். அப்போதெல்லாம் இவ்வளவு ரிஸ்க் எடுத்து நடிக்க வேண்டுமா என்று பயந்தாராம். ஆனால் இப்போது படம் நன்றாக வந்திருப்பதைப்பார்க்கும்போது பட்ட கஷ்டத்துக்கு நல்ல பலன் கிடைத்து விட்டது என்று சந்தோசத்தை வெளிப்படுத்துகிறார் தனுஷ். மேலும். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் படத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்டநாள் ஆசை. அது இப்போது நிறைவேறியிருக்கிறது. குறிப்பா இந்த படத்தில் ரகுமானின் இசையில் நானும் ஒரு பாடல் எழுதியிருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சியை தருகிறது என்கிறார் தனுஷ்.



விலைமாது வேடத்தில் தத்ரூபமாக நடித்துள்ள ஸ்ருதி: அதிர்ச்சியில் பாலிவுட்!
[Thursday, 2013-05-16 17:43:00]

சமீபத்தில் மேக்ஸிம் இதழுக்கு படுகவர்ச்சியாக அட்டைப்பட போஸ் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியவர் ஸ்ருதிஹாசன். ஆனால் அந்த பரபரப்பு அடங்குவதற்குள் இப்போது இன்னொரு பரபரப்பை கொளுத்திப் போட்டிருக்கிறார் அவர். அதாவது, தமிழ் தவிர மற்ற மொழிப்படங்களில் ஆரம்பத்திலிருந்தே படுகவர்ச்சியாக நடித்து வருகிறார் ஸ்ருதி. அந்த வகையில் தற்போது பிரபுதேவா இயக்கத்தில் ராமய்யா வாஸ்தவய்யா என்ற படத்தில் நடித்துள்ள ஸ்ருதி, அதையடுத்து நடித்து வரும் டி டே என்ற இந்தி படத்தில் விலைமாதுவாக நடித்து வருகிறார். இந்த வேடத்தில் நடிப்பதற்கு பாலிவுட்டின் முன்னணி நடிகைகளே அலறிக்கொண்டு ஓடினார்களாம். ஆனால் ஸ்ருதியை அணுகியபோது, அந்த கேரக்டராகவே வாழ்ந்து காட்டுகிறேன் என்று சவாலாக ஏற்று நடித்து வருகிறாராம். நிகில் அத்வானி என்பவர் இயக்கும் இப்படத்தில் விபச்சார விடுதி காட்சிகளில் வாடிக்கையாளர்களுடன் உறவு கொள்ளும் காட்சிகளில் மிக தத்ரூபமாக நடித்திருப்பதாக பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார் ஸ்ருதிஹாசன்.



முனி பாகம் - 3ல் 6 வேடங்களில் அசத்தும் ராகவா லாரன்ஸ்!
[Thursday, 2013-05-16 17:37:39]

முனி படத்தின் இரண்டாம் பாகமான காஞ்சனா படத்தை இயக்கி நடித்த ராகவா லாரன்ஸ் இப்போது மூன்றாம் பாகத்தை தொடங்கிவிட்டார். முதல் இரண்டு பாகங்களையும் விட மெகா ஹிட் கொடுத்து விட வேண்டும் என்பதற்காக ஒரு வருடமாக கதை பண்ணி வந்த லாரன்ஸ், இப்போது படப்பிடிப்பு நடத்த ஆயத்தமாகி விட்டார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக டாப்சி நடிக்கிறார். இப்படத்தில் நாயகியாக முதலில் லட்சுமிராய்தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் பின்னர் அவரை நீக்கிவிட்டு டாப்சியை புக் பண்ணிய லாரன்ஸ், இசையமைப்பாளராக முதலில் விஜய் ஆண்டனியிடம் பேசியிருந்தவர் இப்போது அவரையும் நீக்கி விட்டு எதிர் நீச்சல் படத்துக்கு ஹிட் பாடல்களைக் கொடுத்த அனிருத்தை புக் பண்ணியுள்ளார். மேலும் முதல் இரண்டு பாகங்களை விட இந்த படத்தை அதிக திகில் காட்சிகளுடன் படமாக்கவிருக்கும் லாரன்ஸ், இப்படத்துக்காக 6 விதமான கெட்டப்புகளில் தோன்றுகிறாராம். அதனால் இப்படம் மெகா பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகிறதாம்.



எதிர்நீச்சல் வெற்றிபெற்றதால் பிசியான நடிகையாகிவிட்டார் ப்ரியாஆனந்த்!
[Thursday, 2013-05-16 17:31:52]

வாமனன், 180, இங்கிலீஷ் விங்கிலீஷ் படங்களில் நடித்ததுவரை இருக்கிற இடமே தெரியாமல் இருந்த ப்ரியா ஆனந்த், இப்போது பரபரப்பான நடிகையாகி விட்டார். எதிர் நீச்சல் படம் கொடுத்த வெற்றி காரணமாக, இப்போது சிவா நடிக்கும் வணக்கம் சென்னை, கடல் கெளதம் நடிக்கும் வை ராஜா வை மற்றும் விக்ரம் பிரபுவுடன் ஒரு படம் என மூன்று படங்களில் கமிட்டாகியிருக்கிறார். சிவகார்த்திகேயனுடனும் ஒரு படத்தில் நடிக்கிறார். ஆக, இப்போது வேக வேகமாக ப்ரியா ஆனந்தின் கால்சீட் டைரி நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது. மேலும், தமிழ் நடிகை என்பதும் இவருக்கு ஒரு ப்ளஸ் பாய்ண்டாக இருக்கிறது. தமிழ் தெரிந்த நடிகையாக தேடிக்கொண்டிருந்த சில இயக்குனர்களும் இப்போது ப்ரியாஆனந்திடம் கதை சொல்லி வருகின்றனர். அதனால் அண்டை மாநிலங்களுக்கு செல்வதை நிறுத்தி விட்டு, இப்போது சென்னையிலேயே முகாமிட்டபடி முழுநேர தமிழ் நடிகையாகியிருக்கிறார் ப்ரியா.



விருதுகள் வேண்டாம் ரசிகர்களின் கரகோசங்களே போதும் - கார்த்தி
[Wednesday, 2013-05-15 17:20:42]

கொலிவுட்டில் ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தில் பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கும் கார்த்தி நான் விருதுக்கு ஆசைப்பட்டு படங்களில் நடிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். தற்போது கார்த்தி நடிக்கும் ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சி பகுதியில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொள்ள வந்த நடிகர் கார்த்தி கிணத்துக்கடவு அருகே சிங்கராம்பாளையத்தில் உள்ள மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் காப்பகத்துக்கு சென்றார். அங்கு குழந்தைகளுடன் பேசி மகிழ்ந்த அவர், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ஆல் இன் ஆல் அழகு ராஜா, பிரியாணி படங்களில் தற்போது நடித்து வருகிறேன். ஆல் இன் அழகு ராஜா படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நடைபெற்று வருகிறது. அதேபோல் பிரியாணி படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நடந்து வருகிறது. எந்த கதாபாத்திரத்திலும் நடிக்க தயாராக இருக்கிறேன். தேசிய அளவில் விருது பெற வேண்டும் என்ற எண்ணத்தில் நடிப்பதில்லை. நான் நடித்து வெளியாகும் படங்களுக்கு ரசிகர்கள் அமோக ஆதரவு தந்தாலே போதும். அதுவே விருது கிடைத்த பெருமைக்கு சமமாகி விடும். மேலும் பாடல்கள் இல்லாத படங்களில் ரசனை இருக்காது என்று தெரிவித்துள்ளார்.


RoyaShades-l2011(04-12-11)
INNSYS-20120930
NIRO-DANCE-100213
Mahesan supramaniyam 031109
Ramans2011
Canada Kanthasamy Kovil
TamilsGuid-191012-2013
TDE_Computers2011
Suresh-remax-2013-01-01
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com