Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 18, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
தமிழக சபாநாயகராக தனபால் பொறுப்பேற்றார் - துணை சபாநாயகர் பதவிக்கு பொள்ளாச்சி ஜெயராமன் போட்டி!
[Wednesday, 2012-10-10 20:15:20]
News Service

தமிழக சட்டசபை சபாநாயகராக இருந்த ஜெயக்குமார் ராஜினாமா செய்ததால் அ.தி.மு.க. சார்பில் புதிய சபாநாயகர் பதவிக்கு துணை சபாநாயகர் பி.தனபால் நிறுத்தப்பட்டார். அவரை எதிர்த்து யாரும் மனு தாக்கல் செய்யாததால் அவர் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். இன்று தமிழக சட்டசபையில் சபாநாயகராக பொறுப்பேற்றார்.

  

துணை சபநாயகர் பொறுப்பில் இருந்து பி.தனபால் விலகியதால், அப்பதவி காலியாக உள்ளது. இதற்கான தேர்தல் வருகிற 29-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா, துணை சபாநாயகர் வேட்பாளராக அதிமுக சார்பில் பொள்ளாச்சி ஜெயராமன் நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளார்.

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

அடுத்த தேர்தலில் விருதுநகரில் மதிமுக போட்டியிடும் என்கிறார் வைகோ!
[Saturday, 2013-05-18 19:55:45]

அடுத்தாண்டு நடைபெற உள்ள பார்லிமென்ட் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் ம.தி.மு.க. போட்டியிடும் என அதன் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். விருதுநகரில் நடைபெற்ற தேர்தல் நிதியளிப்பு கூட்டத்தில் கலந்து கொண்ட மதிமுக பொது செயலாளர் வரும் செப்டம்பர்15-ம் தேதி ம.தி.மு.க. மாநாடு விருதுநகரி்ல் நடத்தப்படும் எனவும் தெரிவித்தார். கடந்த பார்லிமென்ட் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட வைகோ, காங்கிரஸ் வேட்பாளர் மாணிக் தாகூரிடம் தோல்வி கண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



2011 ஐபிஎல் போட்டியின் போது ஸ்ரீசாந்த்துக்கு சூதாட்டக்காரர்களுடன் தொடர்பு? - புதிதாக எழும் சர்ச்சை!
[Saturday, 2013-05-18 19:50:57]

ஐ.பி.எல். போட்டியில் கிரிக்கெட் சூதாட்ட புகாரில் சிக்கி கைதான வீரர் ஸ்ரீசாந்த் மீது மேலும் பல புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. 2011 ஐ.பி.எல். போட்டியின்போதும், இவருக்கு சூதாட்ட தரகர்களுடன் தொடர்பு இருந்திருக்குமோ என்ற சந்தேகம் இந்த வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரிகளுக்கு எழுந்துள்ளது. 2011-ல் ஸ்ரீசாந்த் கொச்சி அணிக்காக விளையாடினார். அப்போது கொச்சி மைதானத்தில் நடந்த போட்டியில் கொச்சியும், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் கொச்சி அணி டாஸ் ஜெயித்து முதலில் பேட்டிங் செய்தது. 161 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து ஆடிய பெங்களூர் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது.



மனைவி மீது சந்தேகப்பட்டு இடுப்பில் பூட்டு மாட்டிய கணவனுக்கு 10 ஆண்டுச் சிறைத்தண்டனை!
[Saturday, 2013-05-18 19:46:28]

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற 40 வயது பெண்ணை, அவரது உறவினர்கள் கடந்த ஆண்டு இந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். வயிற்றில் இருந்த விஷத்தை எனிமா தந்து வெளியேற்ற முயன்ற டாக்டர்கள் அதிர்ச்சியடைந்தனர். விஷம் வெளியேற்றப்பட வேண்டிய உறுப்பில் கனமான இரும்பு பூட்டு மாட்டி பூட்டப்பட்டிருந்தது. இதுதொடர்பாக, அந்த பெண்ணிடம் டாக்டர்கள் விசாரித்தபோது அவர், 16 வயதில் எனக்கு திருமணம் நடந்தது. ஆரம்பத்தில் என்னிடம் அன்பாக நடந்து வந்த என் கணவர், நாளடைவில் என் நடத்தையில் சந்தேகப்படத் தொடங்கினார்.



காஷ்மீர் போராட்டமும், தமிழர்களின் போராட்டமும் ஒரே மாதிரியானவை! - காஷ்மீர் விடுதலை முன்னணித் தலைவர் யாசின் மாலிக்
[Saturday, 2013-05-18 19:42:35]

காஷ்மீரில் நடைபெறும் விடுதலைப் போராட்டமும் தமிழ்மண்ணில் நடைபெறும் போராட்டமும் ஒரே மாதிரியானவை என்று கூறினார் பிரிவினைவாதத் தலைவரும் ஜம்மு கஷ்மீர் விடுதலை முன்னணித் தலைவருமான யாசின் மாலிக். கடலூரில் இன்று பிற்பகல் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் உள்ளரங்குக் கூட்டத்தில் பேசிய அவர், "இன விடுதலைக்கான போராட்டங்கள் அவ்வளவு எளிதாக வெற்றி பெறுவதில்லை. அதுபோல், அடக்குமுறைகள் மூலம் இன விடுதலைக்கான போராட்டங்கள் ஒடுக்கப்பட்டதுமில்லை. காஷ்மீரில் நடைபெறும் போராட்டமும், தமிழர்களின் போராட்டமும் ஒரே மாதிரியானதுதான்.



முள்ளிவாய்க்கால் நினைவு பொதுக்கூட்டத்துக்கு தமிழக அரசு தடை - மீறி கூட்டம் நடத்துகிறார் சீமான்!
[Saturday, 2013-05-18 19:36:07]

இலங்கையில் விடுதலைப் புலிகளுடனான யுத்தம் முடிவுக்கு வந்ததை ஒட்டி முள்ளிவாய்க்கால் நினைவு தினம் என்ற பொருளில் கடலூரில் பொதுக்கூட்டம் நடத்த நாம் தமிழர் இயக்கத்துக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஆனால் நீதிமன்றம் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி வழங்கியுள்ள நிலையில் தமிழக பொலிசார் கூட்டத்தை தடுக்க முயல்வதாகத் தெரிவித்துள்ள நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் சீமான் தடையை மீறி பொதுக்கூட்டம் நடத்த தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் இயக்கம் பொதுக்கூட்டமும் பேரணியும் நடத்த ஏற்பாடு செய்திருந்த நிலையில், இவற்றுக்கு எதிராக தமிழக பொலிசார் சென்னை உயர்நீதிமன்றத்தில் தடை உத்தரவு கோரியிருந்தது.



"எனது மகளின் மரணத்துக்கு நீதி வழங்குங்கள்" - நீதிபதியிடம் கதறி அழுத டில்லி மாணவியின் தாய்!
[Saturday, 2013-05-18 06:36:07]

தில்லியில், ஓடும் பேருந்தில் துணை மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்த வழக்கில் சாகேத் விரைவு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை அவரது தாய் சாட்சியம் அளித்தார். அப்போது, "எனது மகளின் மரணத்துக்கு நீதி வழங்குங்கள்' என்று நீதிபதியிடம் கண்ணீர் மல்க அவர் கை கூப்பி வேண்டிக் கொண்டார். தில்லியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 16-ஆம் தேதி ஓடும் பேருந்தில் துணை மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். 13 நாள்கள் சிகிச்சைக்குப் பிறகு சிங்கப்பூரில் அவர் உயிரிழந்தார்.தில்லி சாகேத் விரைவு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தினமும் விசாரிக்கப்பட்டு வருகிறது. அதில் மாணவியின் தாய் வெள்ளிக்கிழமை அளித்த சாட்சியம் வருமாறு:



100 மி.லீ குடிநீர் பாக்கெட் 7 ரூபா - தண்ணீர் தட்டுப்பாட்டால் தவிக்கும் சென்னை!
[Saturday, 2013-05-18 06:07:26]

பாட்டில், கேன் மற்றும் பாக்கெட்டுகளில் பொதிக்கப்பட்ட குடிநீரை தயாரிக்கும் நிறுவனங்கள், ஸ்டிரைக் அறிவித்து உற்பத்தியை நிறுத்தி உள்ளதால், சென்னை குடிமையங்களில், ஒரு பாக்கெட் குடிநீர் ஏழு ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கேன் குடிநீர் பயன்படுத்தி பழக்கப்பட்ட சென்னைவாசிகள், ஸ்டிரைக்கினால் ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டால், கேன்களைதேடி அல்லல்பட்டனர்.மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் தருவதாக கூறி, தமிழகத்தின் நகர்ப்புறங்களில், 900க்கும் மேற்பட்ட குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.சென்னை, காஞ்சிபும் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டும், இந்த தொழிலில், 309 நிறுவனங்கள் செயல்படுகின்றன.



முள்ளிவாய்க்காலில் தமிழர்களைக் கொன்று குவிக்க துணைபோன காங்கிரஸ் தலைமையகத்துக்கு பூட்டுப்போட முயன்றவர்கள் கைது!
[Saturday, 2013-05-18 05:56:49]

சென்னை, சத்தியமூர்த்தி பவனுக்கு, பூட்டு போடும் முற்றுகை போராட்டம் நடத்திய, இந்து மக்கள் கட்சியினர், 4 பேர் கைது செய்யப்பட்டனர். இலங்கை, முள்ளிவாய்க்கால் பகுதியில், 2 லட்சம் தமிழர்களை கொன்று குவிக்கக் காரணமான, காங்கிரஸ் கட்சியை, தமிழகத்தை விட்டு வெளியேறும்படி கோரி, சத்தியமூர்த்தி பவனுக்கு பூட்டு போடும் முற்றுகை போராட்டமும் நடத்தப்படும் என, இந்து மக்கள் கட்சியினர் அறிவித்திருந்தனர். அதன்படி நேற்று, சத்தியமூர்த்தி பவன் அருகே, இந்து மக்கள் கட்சியினர் திரண்டனர். அவர்கள் அனைவரும், கையில் கொடியுடனும், பூட்டுக்களுடனும் ஓடி வந்து கோஷமிட்டனர்.



பா.ம.க.நிறுவனர் ராமதாசுக்கு வரும் 20ம் தேதி "பைபாஸ் சர்ஜரி'!
[Saturday, 2013-05-18 05:52:37]

பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கு, வரும், 20ம் தேதி, சென்னையில் பைபாஸ் சர்ஜரி நடக்கவுள்ளது. விழுப்புரத்தில் போலீஸ் தடையை மீறி, கடந்த, 30ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டு, திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பின், மேலும் சில வழக்குகளிலும், கைது செய்யப்பட்ட அவர், அனைத்து வழக்குகளிலும் ஜாமின் பெற்று, கடந்த, 11ம் தேதி விடுதலை ஆனார். மூச்சு திணறல் காரணமாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில், அன்று இரவே அவர் சேர்க்கப்பட்டார்.



மனைவிக்காக இன்னொரு தாஜ்மகால் கட்டினார் போஸ்ட் மாஸ்டர்!
[Saturday, 2013-05-18 05:49:39]

உத்தர பிரதேசத்தில் மீண்டும் ஒரு காதல் சின்னம் கட்டப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற போஸ்ட் மாஸ்டர்ஒருவர், தன் மனைவியின் நினைவாக, தாஜ்மகாலின் மாதிரியில்,கட்டடம் ஒன்றை கட்டிஉள்ளார். உத்தர பிரதேச மாநிலம், புலந்த்சர் மாவட்டத்தை சேர்ந்தவர், பைசல் ஹசன் கதாரி, 77. தபால் துறையில், போஸ்ட் மாஸ்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி, தஜம்முலி பேகம், 2011ல், மரணம் அடைந்தார்.பைசல் ஹசன் - தஜம்முலி பேகம் தம்பதிக்கு, குழந்தை இல்லை என்றாலும், ஒருவருக்கொருவர், மிகுந்த பாசத்துடன் வாழ்ந்து வந்தனர். அதனால், மனைவி இறந்ததும், அவர் மீது கொண்ட பாசம் காரணமாக, அவரின் உடலை அடக்கம் செய்த இடத்தில், சிறிய அளவிலான, தாஜ்மகால் கட்ட, பைசல் ஹசன்திட்டமிட்டார்.



பெண்களை வைத்து வீரர்களை மடக்கிய சூதாட்டக்காரர்கள் - மன்னிப்புக் கேட்டார் ஸ்ரீசாந்த் தந்தை!
[Friday, 2013-05-17 17:00:05]

கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட வீரர்களுக்கு பெண்களை சப்ளை செய்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங் விவகாரத்தில் சிக்கிய கிரிக்கெட் வீரர்களுக்கு பெண்களையும் புக்கிகள் சப்ளை செய்ததாக டெல்லி போலீசார் பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளனர். நடப்பு ஐபிஎல் 6வது கிரிக்கெட் தொடரின் கரும்புள்ளியாக ஸ்பாட் பிக்சிங் விவகாரம் அமைந்திருக்கிறது. டெல்லி போலீஸ் அதிகாரி பத்ரீஷ் தத்தின் மர்ம மரணத்தின் மூலம் அம்பலத்துக்கு வந்த கிரிக்கெட் மோசடியில் அடுத்தடுத்து புது தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.



இந்திய மீனவர்களை விடுவிக்கும்படி இலங்கை அதிகாரிகளிடம் கெஞ்சினார் சல்மான் குர்ஷித்!
[Friday, 2013-05-17 16:47:06]

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்று இலங்கையிடம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் வலியுறுத்தியுள்ளார். இலங்கை தூதரக அதிகாரிகளிடம் தொலைபேசி வாயிலாக பேசிய சல்மான் குர்ஷித், இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விரைவில் இலங்கை விடுதலை செய்ய வேண்டும். 2012ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5ம் தேதி கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த வழக்குகளை விரைந்து முடிக்கவும், அவர்கள் வெளியில் வருவதற்கும் வழி காண வேண்டும்.



8 வயது மாணவனை சுவரில் தலையை மோதிக் கொன்ற ஆசிரியர் கைது!
[Friday, 2013-05-17 16:43:46]

மேற்கு வங்க மாநிலம், 24வது தெற்கு பர்கானா, பசந்தி நகர் பகுதியில் நிர்தேஷ்காளி என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது.நேற்று முன் தினம், இப்பள்ளியில் படிக்கும் 8 வயது மாணவன் வகுப்பறையில் புத்தகப் பையை தூக்கி வீசியதற்காக கோபமடைந்த ஆசிரியர் அந்த மாணவனை அடித்துள்ளார். அவனை பிரம்பால் அடித்தும் ஆவேசம் அடங்காத ஆசிரியர் மாணவனின் தலையை பிடித்து சுவற்றில் மோதினார். இதனால், தலையில் பலத்த காயமடைந்த மாணவனை சிகிச்சைக்காக பெற்றோர் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.சிகிச்சை பலனின்றி அந்த மாணவன் இன்று பரிதாபமாக உயிரிழந்தான். இச்சம்பவம் தொடர்பாக ஆசிரியரை கைது செய்த போலீசார், 8 வயது மாணவனை இவ்வளவு கொடூரமான முறையில் தண்டித்தது குறித்து விசாரித்து வருகின்றனர்.



வயதுச் சர்ச்சையில் சிக்கினார் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்!
[Friday, 2013-05-17 16:40:20]

பிரதமர் மன்மோகன் சிங்கின் வயது எண்பதா எண்பத்தி இரண்டா என்ற புதிய சர்ச்சை தற்போது தலைதூக்கியுள்ளது.பாராளுமன்ற மேல்சபை தேர்தலில் போட்டியிட பிரதமர் மன்மோகன் சிங் அசாம் சட்டசபை செயலாளரிடம் கடந்த புதன்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார்.அந்த மனுவில் வயது தொடர்பாக குறிப்பிட்ட அவர், தனக்கு 82 வயதாவதாக கூறியுள்ளார். ஆனால், பிரதமரின் இணைய தளம் மற்றும் பாராளுமன்ற இணைய தளம் ஆகியவற்றில் பிரதமரின் பிறந்த தேதி 26-09-1932 என குறிப்பிடப்பட்டுள்ளது.



தேம்பித் தேம்பி அழுதபடி சிறைக்குச் சென்ற சஞ்சய் தத்!
[Friday, 2013-05-17 16:35:26]

சிறைவாசம் அனுபவிக்கத் தொடங்கியுள்ள நடிகர் சஞ்சய்தத் நேற்று இரவு முழுவதும் தூக்கமின்றி தவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சஞ்சய் தத்தின் தனது சிறைவாசத்தின் முதல் நாள் இரவு அனுபவம் தொடர்பாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்றிரவு 11 மணியளவில் சிறையில் அவருக்கென ஒதுக்கப்பட்ட அறைக்கு சஞ்சய் தத் அழைத்துச் செல்லப்பட்டார். வீட்டில் இருந்து அனுப்பப்பட்ட உணவை சாப்பிட்ட பின்னர், குடிப்பதற்கு அவர் தண்ணீர் கேட்டார். சிறை அதிகாரிகள் ஒரு பாட்டிலில் தண்ணீர் தந்தனர்.



ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்ட கிரிக்கெட் வீரர்கள் சிக்கியது எப்படி?
[Friday, 2013-05-17 09:53:55]

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கடைசியாக விளையாடிய 3 போட்டிகளிலும் ஸ்பாட் பிக்சிங் நடந்தது என்று டெல்லி போலீஸ் கமிஷனர் நீரஜ் குமார் கூறினார்.இது பற்றி, டெல்லியில் போலீஸ் கமிஷனர் நீரஜ் குமார் அளித்த பேட்டி: ஸ்ரீசாந்த், சாண்டிலா, அங்கீத் சவான் ஆகியோரை தவிர மற்ற வீரர்கள் யாரும் சூதாட்டத்தில் ஈடுபடவில்லை. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கடந்த 5, 9 மற்றும் 15ம் தேதிகளில் முறையே புனே வாரியர்ஸ், பஞ்சாப், மும்பை இந்தியன்ஸ் அணிகளுடன் ஆடிய ஆட்டங்களில் ஸ்பாட் பிக்சிங் நடந்துள்ளது. இதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது.போட்டியின்போது தாங்கள் கூறியபடி செய்ய போவதை தெரிவிக்க குறிப்பிட்ட சில சிக்னல்களை வீரர்களுக்கு தரகர்கள் சொல்லி கொடுத்துள்ளனர்.



தமிழகத்தில் போர்க்கொடி தூக்கியுள்ள கேன் வாட்டர் நிறுவனங்கள் - சுத்திகரிக்கப்பட்ட தண்ணீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து!
[Friday, 2013-05-17 09:49:30]

மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் உரிமம் பெறாத மேலும் 92 கேன் வாட்டர் நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இதை கண்டித்து கேன் வாட்டர் நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தி போராட்டத்தில் குதித்துள்ளன. நிலத்தடி நீரை சுத்திகரிக்க தமிழகத்தில் 950 பேக்கேஜ் குடிநீர் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. இவை தண்ணீரை சுத்திகரித்து கேன்களில் அடைத்து சப்ளை செய்கின்றன. இந்நிலையில், கேன் தண்ணீர் சரியாக சுத்திகரிக்காமல் சப்ளை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பான வழக்கு சென்னை பசுமை தீர்ப்பாயத்தில் நடந்தது. இதையடுத்து, மாசு கட்டுப்பாட்டு வாரியம் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு சென்று ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும் என தீர்ப்பாயம் உத்தரவிட்டது.



மகனின் திருமண அழைப்பிதழ் ஒன்றுக்கு 15 ஆயிரம் ரூபா செலவிட்டுள்ள கர்நாடக அரசியல் தலைவர்!
[Friday, 2013-05-17 09:39:48]

பெல்லாரி சுரங்க அதிபரும், தேவகவுடாவின், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான சூரிய நாராயண ரெட்டி, தன் மகன் சரத் திருமண அழைப்பிதழை தயாரிக்க, அழைப்பிதழ் ஒன்றுக்கு, 15 ஆயிரம் ரூபாய் செலவழித்துள்ளார். அழைப்பிதழ்களை தயாரிப்பதில் புகழ் பெற்ற, மும்பை ரவீஷ் கபூர் பிரின்டர்ஸ் நிறுவனத்தில், இந்த அழைப்பிதழ்களை தயாரித்துள்ளனர். இவர்கள், ஏற்கனவே, இரண்டு ஆண்டுகளுக்கு முன், தொழிலதிபர் ராஜ்குந்த்ரா, பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி ஆகியோரின் திருமண அழைப்பிதழை தயாரிக்க, அழைப்பிதழ் ஒன்றுக்கு, 12 ஆயிரம் ரூபாய் கட்டணமாக பெற்றுள்ளனர்.



தைரியமிருந்தால் சட்டசபைக்கு வரட்டும் - கருணாநிதிக்கு சவால் விட்ட அமைச்சர்!
[Friday, 2013-05-17 09:34:11]

கருணாநிதிக்கு தைரியமிருந்தால், சட்டசபைக்கு வந்து, கருத்துகளைக் கூறட்டும்,''என, வீட்டுவசதித் துறை அமைச்சர் வைத்திலிங்கம் சவால் விடுத்துள்ளார். அ.தி.மு.க., அரசின் சாதனைகளைப் பாராட்டி, புதிய தமிழகம் எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி பேசுகையில்,"தி.மு.க.- தே.மு.தி.க., எம்.எல்.ஏ.க்களும், சபையில் இருந்திருந்தால், இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். எதிர்காலத்தில், அவர்களும் சபையில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்,'' என்றார். இதற்கு, நிதி அமைச்சர் பன்னீர்செல்வம், "தி.மு.க.வை, யாரும் வெளியேற்றவில்லை. வெளியேற வேண்டும் என, திட்டமிட்டு அவர்களே வெளியேறி விட்டனர்.



இந்தியப் பெருங்கடலில் சீன ஆதிக்கம் அதிகரிப்பு - தமிழகத்தில் விமானப்படையை பலப்படுத்துகிறது இந்தியா!
[Friday, 2013-05-17 09:27:46]

இந்திய பெருங்கடலில், சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதால், அதை கண்காணிக்க வேண்டிய கட்டாயம், மத்திய அரசுக்கு உருவாகியுள்ளது. அதனால், இந்திய விமானப் படையின், புதிய விமான தளம், தஞ்சாவூரில் அமைக்கப்பட்டு, அதன் திறப்பு விழா, வரும், 27ம் தேதி நடைபெறுகிறது. இந்திய விமானப் படைக்கு சொந்தமான விமான தளங்கள், தமிழகத்தில், கோவை அருகே சூலூரிலும், சென்னையை அடுத்த தாம்பரத்திலும் ஏற்கனவே உள்ளன. தற்போது, மூன்றாவதாக, தஞ்சாவூரில், புதிய விமானத் தளம், 150 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா, வரும், 27ம் தேதி நடக்கிறது. ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி, புதிய விமான தளத்தை திறந்து வைக்கிறார்.


Mahesan supramaniyam 031109
TDE_Computers2011
RoyaShades-l2011(04-12-11)
Suresh-remax-2013-01-01
TamilsGuid-191012-2013
NIRO-DANCE-100213
INNSYS-20120930
Canada Kanthasamy Kovil
Ramans2011
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com