Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 26, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
கனடாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட ஈழத் தமிழன் கொழும்பு 4ம் மாடியில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்!
[Wednesday, 2012-10-10 10:45:21]
News Service

சன் சீ என்ற கப்பல் மூலம் கனடாவைச் சென்றடைந்த 492 அகதிகளில் ஒருவர் மாத்திரம் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். இவர் அரச படைகளும் விசேட பொலிசும் சித்திரவதைக் கூடமாகப் பயன்படுத்தும் கொழும்பு 4ம் மாடியில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.

  

அவருடைய இரண்டு கைகளும் கால்களும் அடித்து காயப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மருத்துவ சிகிச்சையின்றி கடும் துன்பம் அனுபவிக்கிறார். இந்த மனிதாபிமான மற்ற செயலுக்கு கனடா அரசு பொறுப்பேற்க வேண்டும். இலங்கைக்கு நாடு கடத்தப் படுவோர் மீது பாலியல் வன்முறை உட்பட எல்லாவகைச் சித்திரவதைகளும் செய்யப்படுவது வழமை.

இதைக் கனடா அரசு நன்கு அறிந்தும் மேற்கூறிய அகதியை அவருடைய விருப்பத்திற்கு மாறாக வலோற்காரமாக இலங்கைக்கு நாடுகடத்தியுள்ளது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்க மனித உரிமை மீறலாகும். ஜனநாயக நாடென்று தன்னைக் கூறிக்கொள்ளும் கனடாவுக்கு இது பொருத்தமானதல்ல.

ஐநா நிறைவேற்றிய அகதிகள் பாதுகாப்புச் சட்டம் எந்த நாட்டை விட்டுத் தப்பியோடி ஒருவர் அகதி அந்தஸ்துக் கோருகிறாரோ அவரை அந்த நாட்டிற்கே திருப்பி அனுப்பக் கூடாது என்று சொல்கிறது. இந்த விதியைக் கனடா மீறியுள்ளது.

அமெரிக்காவில் தலைமைச் செயலகத்தைக் கொண்டுள்ள ஹியூமன் றைட்ஸ் காப்பகம் (Human rights watch) நாடுகடத்தலுக்கு எதிராகக் குரல் கொடுத்து வருகிறது. இயல்பு நிலை திரும்பாத இலங்கைக்கு ஈழத் தமிழர்களை நாடு கடத்தக் கூடாது என்பதில் அது உறுதியாக இருக்கிறது. www.hrw.org/category/topic /refugees.

அதே நிலைப்பாட்டை அனைத்துலக மன்னிப்புச்சபை (Amnesty International) எடுத்துள்ளது. www.amnesty.org/en/50. 2012 மார்ச்சு 13ம் நாள் இந்த மனித உரிமை அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் "நூற்றுக் கணக்கானோர் விசாராணையின்றிச் சட்டத்திற்குப் புறம்பாக வெளித் தொடர்பின்றி இலங்கையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நாட்டின் நீண்ட போர் முடிவுக்கு வந்தாலும் சித்திரவதை, சட்டத்திற்குப் புறம்பான படுகொலைகள், தடுத்து வைத்தல்கள், காணாமற் போதல்கள் தொடர்ச்சியாக நடக்கின்றன. இலங்கையில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் விசாரணையின்றித் தண்டிக்கப்படாமல் நீடிக்கின்றன." என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த அறிக்கையின் தலைப்பு சிறை வைக்கப்பட்டவர்கள். இலங்கையின் பாதுகாப்புத் துறையால் தடுத்து வைக்கப்பட்டவர்கள் (Locked away. Sri Lanka's security detainees) சீனா, ஹொங் தீவில் இயங்கும் ஆசிய மனித உரிமை ஆணையம் (Asian Human Rights Commission சுவிற்சர்லாந்து, மனித உரிமைகளுக்கான ஆணைய அலுவலகத்தில் இயங்கும் சித்திரவதைக்கு எதிரான குழுவுக்கு (Office of the High Commissioner for Human Rights, Secretary, Committee Against Torture, Switzerland)

2011 யூலை 08ம் நாள் எழுதிய கடிதத்தில் "இலங்கையில் நாளாந்திரம் சித்திரவதைகள் நடப்பதாகத்" தெரிவிக்கப்பட்டுள்ளது. (Torture is practiced in Sri Lanka on a daily basis)

கனடா அரசு இனியாவது தவறை உணர்ந்து நாடுகடத்தப்பட்டு 4ம் மாடியில் சித்திரவதை அனுபவிக்கும் ஈழத் தமிழரின் பாதுகாப்பிற்குரிய நடவடிக்கை எடுக்குமென்று மனிதவுரிமைவாதிகளால் கோரிக்கை விடக்கப்பட்டுள்ளது.

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

காணி சுவீகரிப்பு மலையத்திலும் தொடர்கிறதா? மனோ கணேசன் கேள்வி!
[Sunday, 2013-05-26 12:45:14]

பயன்படுத்தப்படாத காணிகள் என்று சொல்லி, 25,000 ஏக்கர் மலையக தோட்டப்புற காணிகளை தோட்ட நிறுவனங்களிடமிருந்து மீளப்பெற்று, அவற்றை தெரிவு செய்யப்பட்ட வேலையற்ற இளைஞர்களுக்கு, ஆளுக்கு இரண்டு ஏக்கர்களாக பிரித்து வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. காணிகளை பெறுகின்ற வேலையற்ற இந்த இளைஞர்களுக்கு, இந்த காணிகளில் விவசாயம் செய்வதற்காக கடன் வழங்கவும், காணிகளில் பயிரிட நாற்றுகளை, விதைகளை வழங்கவும், உரவகைகளை வழங்கவும் அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இதற்காக முதல்கட்டமாக 100 மில்லியன் ரூபாவை திறைசேரி ஒதுக்கியுள்ளது. இந்த தோட்டப்புற காணிகளையும், கடன் உதவிகளையும் பெறுகின்ற 12,500 வேலையற்ற இளைஞர்கள் பட்டியலில், வேலையற்ற தோட்டப்புற மலையக தமிழ் இளைஞர்கள் எத்தனை பேரின் பெயர்கள் இடம்பெறுகின்றன என்பதை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மலையக தமிழ் அரசியல்வாதிகள் அறிவார்களா என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கேள்விகளை எழுப்பியுள்ளார்.



ஈழத்தமிழரை அழிப்பதில் கோத்தபாய தீவிரம் - மன்னார ஆயர் சாடல்!
[Sunday, 2013-05-26 12:38:49]

"13 ஆவது அரசமைப்பு திருத்தத்தின் பற்களை அரசு ஏற்கனவே கழற்றிவிட்டது. மிஞ்சியிருப்பது காணி, பொலிஸ் அதிகாரங்கள்தான். அவற்றையும் இல்லாதொழிக்குமாறு சிங்களப் பேரினவாதிகள் சிலர் கூச்சலிடுகின்றனர். அரசு அவ்வாறு செய்யுமானால் தமிழ் மக்கள் இறுதியாக வைத்துள்ள நம்பிக்கையையும் அது இழக்கும்.'' இவ்வாறு மன்னார் மறை மாவட்ட ஆயர் அதிவண. இராயப்பு ஜோசப் தெரிவித்தார்.



தடைசெய்யப்பட்ட வலயமாக கொழும்புத் துறைமுகம் பிரகடனம்!
[Sunday, 2013-05-26 12:34:46]

கொழும்புத் துறைமுக களஞ்சியசாலையை அண்மித்த பகுதி தடைசெய்யப்பட்ட வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. களஞ்சியசாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து தொடர்பில் விசாரணைகள் முடியும் வரையிலும் அந்த பகுதி தடைசெய்யப்பட்ட வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் உயரதிகாரியொருவர் தெரிவித்தார். பொலிஸ் மற்றும் துறைமுக பாதுகாப்பு பிரிவினர் அங்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் இரசாயன பகுப்பாய்வு அதிகாரிகள் விசாரணைகளை துரிதப்படுத்தியுள்ளனர். கொழும்பு துறைமுக களஞ்சியசாலையில் கடந்த 24 ஆம் திகதி திடீர் தீ விபத்து ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.



அம்மாவைக் கொலை செய்து மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் தப்பிச் செல்லும்போது மரணம்!
[Sunday, 2013-05-26 11:59:47]

கொலை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்லும் போது மரணமடைந்துள்ளார். தாயைக் கொலை செய்து மகளை கடத்திச் சென்று பாழடைந்த வீடொன்றில் வைத்து பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய சந்தேக நபரே தப்பிச் செல்லும் போது மரணடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் இன்று அதிகாலை 4 மணியளவில் பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முற்பட்டவேளை உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் புத்திக சிறிவர்தன தெரிவித்தார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,



இலங்கையில் எனக்கு பாதுகாப்பில்லை: அமெரிக்க தூதரிடம் அசாத் சாலி தெரிவிப்பு!
[Sunday, 2013-05-26 09:08:05]

இலங்கையில் தமக்கு பாதுகாப்பு இல்லை என்று கொழும்பு மாநகரசபையின் முன்னாள் பிரதி முதல்வரும், முஸ்லிம் தமிழ் தேசிய முன்னணியின் தலைவருமான அசாத் சாலி, அமெரிக்க தூதரிடம் தெரிவித்துள்ளார். அண்மையில் அமெரிக்க தூதரகத்தில் வைத்து, அசாத் சாலி அவரை சந்தித்து இந்த விடயம் குறித்து பேச்சு நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அரசாங்கம் தமக்கு உரிய பாதுகாப்பை வழங்க தவறிவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இந்த விடயம் தொடர்பில் இஸ்லாமிய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகவும் அசாத் சாலி தெரிவித்துள்ளார். இதேவேளை தமக்கு எதிராக அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து, மேலும் இரண்டு அடிப்படை மனித உரிமை மீறல் வழக்குகளை தாக்கல் செய்யவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



சர்வதேச திரைவெளியில் தடம்பதிக்க முனையும் ஈழத்தமிழ் கலைஞர்கள்! Top News Top News
[Sunday, 2013-05-26 08:55:00]

சர்வதேச திரைப்பட விழாக்களில் முக்கியமானாதொரு திரைப்பட விழாவென கருதப்படும் Shanghai International Film Festivalவில் கனடா வாழ் ஈழத்தமிழ் கலைஞர் லெனின்.எம்.சிவம் இயக்கிய A Gun & A Ring எனும் திரைப்படமும், றுகினா பசோ நாட்டில் இடம்பெறுகின்ற Cin Droit Libre de Ouagadougou விழாவில் பிரான்ஸ் வாழ் ஈழத் தமிழ்கலைஞர் விஜிதன் சொக்கா ஒளி-ஒலி பதிவுசெய்திருந்த journalistes-vos-papiers ஆவணப்படமும் கலந்து கொள்கின்றன.



தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மூன்று அமைச்சர்கள் ஆதரவு! - சுரேஸ்
[Sunday, 2013-05-26 08:46:50]

அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது தொடர்பான விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மூன்று இடதுசாரி அமைச்சர்கள் தங்களது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர். பேராசிரியர் திஸ்ஸ விதாரண, வாசுதேவ நாணயக்கார, மற்றும் டியு.குணசேகர ஆகியோரே தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். கடந்த புதன்கிழமை நாடாளுமன்றக் கட்டடத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவை இவர்கள் சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்பின் போது, 13வது திருத்தச்சட்டம் பலவீனப்படுத்தப்படக் கூடாது என்றும் அதில் எந்தத் திருத்தமும் செய்யப்படாமலேயே வடக்கு மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் மூன்று அமைச்சர்களும் கூறியதாக த.தே.கூட்டமைப்பின் பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.



ஆயுதக்குழு கடத்தலானது திட்டமிட்ட குடியேற்றங்களை தடுப்பவர்களை எச்சரிக்கும் செயற்பாடு - அரியநேந்திரன் எம்.பி!
[Sunday, 2013-05-26 08:40:58]

அம்பாறை மல்வத்தை பகுதியிலுள்ள தனியார் காணிகளில் திட்டமிடப்பட்டுள்ள அத்து மீறிய குடியேற்றத்தை எதிர்ப்பவர்களை அச்சுறுத்தவே தமிழரசுக்கட்சியின் அப்பகுதி மூத்த உறுப்பினர் ஆயுதக் குழுவால் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரந்திரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,



புலம்பெயர் தமிழர்களின் கைப்பாவையாக சர்வதேச மன்னிப்புச்சபை செயற்படுகிறது - ருவன் வணிகசூரிய
[Sunday, 2013-05-26 08:38:55]

போர்க்குற்றவாளிகள் இலங்கையில் சுதந்திரப் பறவைகளாக உலாவுகின்றனர் என்று சர்வதேச மன்னிப்புச்சபை சுமத்தியுள்ள குற்றச்சாட்டை அடியோடு நிராகரித்த இராணுவம், புலம்பெயர் தமிழர்களின் கைப்பாவையாக மன்னிப்புச்சபை செயற்பட்டு இலங்கைக்கு எதிராக இதுபோன்ற ஆதாரமற்ற பொய்க்குற்றச்சாட்டுகளை முன்வைத்து சர்வதேச ரீதியில் தமக்குள்ள நற்பெயரை இழக்கின்றது எனவும் இலங்கையில் போர்க்குற்றம் இடம்பெற்றதற்குத் தகுந்த ஆதாரங்கள் இருப்பின் அவற்றைச் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் சமர்ப்பிக்கவேண்டும் என்று இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய, மன்னிப்புச்சபையிடம் கோரிக்கை விடுத்தார்.



மீண்டும் தமரா குணநாயகத்தை ஜெனீவா அனுப்புவது குறித்து கவனம் செலுத்துகின்றது அரசு!
[Sunday, 2013-05-26 08:37:27]

இலங்கையின் சிரேஸ்ட இராஜதந்திரிகளில் ஒருவரான தமரா குணநாயகத்தை மீளவும் ஜெனீவா அனுப்பி வைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஜெனீவாவிற்கான இலங்கை வதிவிடப் பிரதிநிதியாக மீளவும் குணநாயகத்தை நியமிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜெனீவாவிற்கான இலங்கை வதிவிடப் பிரதிநிதியாக தற்போது ரேனுகா செனவிரட்ன கடமையாற்றி வருகின்றார். இவரை ஐரோப்பிய நாடொன்றின் தூதுவராக நியமித்து அந்தப் பதவியை குணநாயகத்திற்கு வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.



தற்கொலைகளில் இலங்கை உலகசாதனை படைத்துள்ளது - எதிர்க்கட்சி தெரிவிப்பு!
[Sunday, 2013-05-26 08:34:01]

இலங்கை தற்கொலைகளில் உலக சாதனை படைத்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. மதுபான மற்றும் தற்கொலைகள் நுகர்வில் இலங்கை உலக அரங்கில் முன்னணி வகிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார். போதைக்கு முற்றுப் புள்ளி என அரசாங்கம் பிரசாரம் செய்தாலும், உண்மையில் நிலைமை தலைகீழாகவே காணப்படுகின்றது. கண்டியில் பௌத்த பிக்கு ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள மேற்கொண்ட முயற்சி பாரதூரமானது. இதற்கு யார் உந்து சக்தியாக அமைந்தார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்ததுடன், உடலுக்கு தீ மூட்டிக் கொண்டமையின் பின்னணியில் ஏதேனும் அரசியல் சக்திகள் செயற்பட்டனவா என்பது குறித்து விசாரணை செய்யப்பட வேண்டும்.



கட்சியின் பௌத்த வாக்காளர்களை தக்க வைத்துக்கொள்ளுமாறு ரணிலிடம் கோரிக்கை!
[Sunday, 2013-05-26 08:27:26]

ஐக்கிய தேசியக் கட்சியின் பௌத்த வாக்காளர்களை தக்க வைத்துக் கொள்ளுமாறு கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பௌத்த கட்டமைப்பை வலுப்படுத்திக் கொள்ளக் கூடிய வகையிலான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கென மூன்று பிரதித் தலைவர்கள் நியமிக்கப்பட வேண்டும். இதன்படி மேல், மத்திய மற்றும் தென் மாகாணங்களை உள்ளடக்கக் கூடிய வகையில் பிரதித் தலைவர்கள் நியமிக்கப்பட வேண்டுமென கோரப்பட்டுள்ளது. எனினும், இந்த கோரிக்கை தொடர்பில் ரணில் விக்ரமசிங்க எவ்வித கருத்தையும் வெளியிடவில்லை.



ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளை மீறி இலங்கை செயற்படுகின்றது - அமெரிக்காவின் குற்றச்சாட்டினால் இராஜதந்திர முறுகல்!
[Sunday, 2013-05-26 08:19:31]

ஈரான் மீதான தடைகளை இலங்கை மீறுவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளதால், இரு நாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர முறுகல் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சிறிலங்கா அமைச்சரவைக் கூட்டத்தில், இந்த விவகாரம் குறித்து பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச பிரச்சினை எழுப்பியிருந்தார். இதுதொடர்பாக இலங்கை அரசாங்கத்துக்கு அமெரிக்கா தகவல் பரிமாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கிய மகிந்த ராஜபக்ச, இலங்கை போன்ற சிறிய நாடுகள் மீது அமெரிக்கா இத்தகைபய குற்றச்சாட்டுகளை கூறி வருவதாக குறிப்பிட்டதுடன்,



தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலை புலம்பெயர் தமிழர்கள் தயாரிக்கின்றனர் - சிங்கள் ஊடகம்!
[Sunday, 2013-05-26 08:14:28]

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலை புலம்பெயர் தமிழர்களே தயாரித்து வருவதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. எதிர்வரும் வட மாகாணசபைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலேய இவ்வாறு தயாரிக்கப்படுகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாரை தேர்தலில் களமிறக்க வேண்டும் என்பதனை புலம்பெயர் தமிழர்களே தீர்மானித்து வருகின்றனர். அதிகளவு சட்டத்தரணிகளை வேட்பாளர்களாக பெயரிட திட்டமிடப்பட்டுள்ளது. முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் உயர் நீதிமன்ற நீதவான் விக்னேஸ்வரனை நியமிக்கத் தீர்மானிக்க்பபட்டுள்ளது.



டி.எம்.எஸ் மறைவுக்கு தலைவர்கள், கவிஞர்கள், திரையுலகின் இரங்கல்! Top News
[Sunday, 2013-05-26 07:26:36]

பிரபல பின்னணி பாடகர் டி.எம்.சௌந்திரராஜன் நேற்று பிற்பகல் சென்னையில் காலமானார். அவரது மறைவுக்கு தமிழக கவர்னர் ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, தேமுதிக தலைவர் விஜயகாந்த்,மதிமுக பொதுச்செயலர் வைகோ மற்றும் கவிஞர்கள் வாலி, வைரமுத்து, நடிகர் சிவகுமார் உள்ளிட்ட திரைத்துறையினரும் இரங்கல் தெரிவித்து அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.



மட்டக்களப்பு கோராவெளி கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம்!Top News
[Saturday, 2013-05-25 21:09:14]

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வாழைச்சேனை புதுக்குடியிருப்பு கிராம எல்லையில் குடிகொண்டு அருள்பாலிக்கும் கோராவெளி கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த சடங்கு உற்வசத்தின் திருக்குளிர்த்தியாடும் நிகழ்வு இன்று சனிக்கிழமை இடம்பெற்றது. இவ்வாலய உற்சவம் கடந்த செவ்வாய்கிழமை ஆரம்பமாகி சனிக்கிழமை காலை தீ மிதிப்பு, திருக்குளிர்த்தியாடும் வைபவத்துடன் நிறைவுபெற்றுள்ளது. இறுதி நாள் அன்னதானக் குழுவினரால் அன்னதானம் வழங்கப்பட்டது. தீ மிதிப்பு நிகழ்வில் ஐநூக்கு மேற்பட்ட பக்தர் கலந்து கொண்டிருந்தனர்.



வெசாக் தினத்தில் தீக்குளித்த பிக்கு மரணம்!
[Saturday, 2013-05-25 21:04:22]

கண்டி தலதா மாளிகைக்கு முன்னால் மிருக வதையினை கண்டித்து தனக்கு தானே தீமூட்டிக்கொண்ட பௌத்த பிக்கு, சிகிச்சை பலனின்றி இன்று சனிக்கிழமை இரவு உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. கண்டி தலதா மாளிகைக்கு முன்பாகவே நேற்று வெள்ளிக்கிழமை அவர் தீ மூட்டிக்கொண்டார். வெசாக் தினத்தையொட்டி கண்டி தலதா மாளிகையில் விசேட மத நிகழ்வுகள் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையிலேயே அவர் தனக்கு தானே தீ மூட்டிக்கொண்டுள்ளார்.



இலங்கையைப் போல சிறந்த நிர்வாகத்தைக் கொண்ட நாடு உலகில் கிடையாது - பிரதமர்
[Saturday, 2013-05-25 20:09:26]

இலங்கையில் மதங்களுக்கிடையில் பாராபட்சம் நிலவுவதாகக் காட்டி நாட்டைப் பிளவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் சர்வதேச நீதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என பிரதமர் டி.எம். ஜயரட்ண குற்றம் சாட்டியுள்ளார். கண்டி தலதா மாளிகையில் ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்ற விசேட நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, எதிர்வரும் காலங்களில் எந்தவொரு நாடோ அல்லது இனவாதிகளோ நாட்டை அபகரிக்க இடமளிக்க முடியாது. நாட்டில் மதங்களுக்கிடையில் பாராபட்சம் நிலவுவதாகக் காட்டி நாட்டைப் பிளவுபடுத்துவதற்கான சூழ்ச்சிகளை சர்வதேம் மேற்கொண்டு வருகின்றது. எனவே இந்த விடயத்தில் அனைவரும் மிகுந்த கவனம் செலுத்துவது அவசியமாகும். நாட்டில் யுத்தம் முடிவடைந்த பின்னர் சகல மதங்களும் பராமரிக்கப்பட்டு மதத் தலங்களும் அபிவிருத்தி செய்யப்பட்டு வரும் நிலையில் இங்கு மதங்களுக்கிடையில் எத்தகைய ஏற்றத்தாழ்வும் கிடையாது.



அறுவை சிகிச்சையின் போது பெண்ணின் வயிற்றுக்குள் ஊசியை வைத்து தைத்த வைத்தியர் - கிண்ணியாவில் சம்பவம்
[Saturday, 2013-05-25 18:59:57]

கிழக்கு மாகாணத்தில் கிண்ணியா பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு அறுவை சிகிச்சை செய்யும் போது அப்பெண்ணின் வயிற்றுக்குள் ஊசியினை வைத்து தைக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அறுவை சிகிச்சைக்கு பின்னர் குறித்த பெண்ணுக்கு ஏற்பட்ட வயிற்று வலி காரணமாக கடந்த 22 ஆம் திகதி வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். அப்பெண்ணின் வயிற்றுப் பகுதியை எக்ஸ்ரே எடுத்து பார்த்த போது வயிற்றுகுள் ஊசி இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் மீண்டும் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்துவதற்காக அப்பெண் கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



சார்க் நாடுகளின் திரைப்பட விழா இ்ம்மாதம் 26ஆம் திகதி ஆரம்பம்..
[Saturday, 2013-05-25 18:49:27]

இலங்கையிலுள்ள தெற்காசிய நாடுகளின் கலாசார மத்திய நிலையம் ஏற்பாடு செய்துள்ள சார்க் நாடுகளின் திரைப்பட விழா இம்மாதம் 26ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை தேசிய திரைப்பட கூட்டுத்தாபனத்தில் நடைபெறவுள்ளது. ஆப்கானிஸ்தான் தவிர்ந்த ஏனைய நாடுகள் இந்த திரைப்பட விழாவுக்காக சினிமா திரைப்படங்களையும் விவரணத்திரைப்படங்களையும் அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விழாவின் போது தெரிவு செய்யப்படும் சிறந்த திரைப்படங்கள் விவரணப்படங்கள் மற்றும் சிறந்த நடிகர் நடிகைகளுக்கு விருதுகளும் வழங்கப்படவுள்ளன. கடந்த ஆண்டில் இலங்கை திரைப்படம் ஒன்றே மேற்படி விழாவின் போது சிறந்த திரைப்படமாக தெரிவு செய்யப்பட்டது.


AJRwindows22.05.13
RoyaShades-l2011(04-12-11)
INNSYS-20120930
TamilsGuid-191012-2013
Suresh-remax-2013-01-01
Ramans2011
Canada Kanthasamy Kovil
TDE_Computers2011
Mahesan supramaniyam 031109
NIRO-DANCE-100213
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com