Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 21, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
அணைகளில் இராணுவத்தை நிறுத்தி நீரைத் திறந்து விடவேண்டும்! - ராமதாஸ்
[Wednesday, 2012-10-10 07:40:13]
News Service

அணைகளின் பாதுகாப்புக்காக ராணுவத்தை நிறுத்தி, தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்து விட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

  

தமிழகத்திற்கு திறந்து விடப்பட்ட தண்ணீரை கர்நாடக அரசு திடீரென நிறுத்தி விட்டது. அணைகளில் நீர்மட்டம் குறைந்து விட்டதால் நிறுத்தப்பட்டு இருப்பதாக கர்நாடக மாநில முதல்வர் ஜெகதீஷ்ஷெட்டர் கூறுவதை ஏற்க முடியாது. கிருஷ்ணராஜசாகர் அணையை மூடியிருப்பது அரசியல் சட்டத்தையே அவமதிக்கும் செயலாகும். இத்தகைய செயல் தொடர்ந்தால் இந்தியவின் ஒருமைப்பாட்டையே கேள்விகுறியாக்கிவிடும்.

அரசியல் சட்டத்தையும், உச்ச நீதிமன்றத்தையும் அவமதித்த கர்நாடகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அனைத்து அணைகளையும் மத்திய அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். அணைகளின் பாதுகாப்புக்காக ராணுவத்தை நிறுத்தி, தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்து விட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே நேரத்தில் இப்பிரச்னையில் தமிழக அரசின் அணுகுமுறை சரியானதல்ல.

கர்நாடகத்தில் மூன்று முறை அனைத்து கட்சிகள் கூட்டம் நடத்தப்பட்டு அனைத்துக்கட்சி தலைவர்களும் ஒரே அணியில் திரண்டு மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். ஆனால் தமிழக அரசு, தன் மன போன போக்கில் செயல்பட்டு வருகிறது. இப்பிரச்னையில் அனைத்துக் கட்சிகளையும் ஓரணியில் திரட்டுவதற்காக அனைத்து கட்சி கூட்டத்தை தமிழக அரசு உடனடியாக கூட்ட வேண்டும். இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

திரிபுராவில் நாளிதழ் அலுவலகத்தில் மர்மநபர்கள் வெறியாட்டம் - மூன்று ஊழியர்கள் கத்தியால் குத்திக்கொலை!
[Monday, 2013-05-20 17:46:19]

திரிபுரா மாநிலத்தில் உள்ள தினசரி நாளிதழ் அலுவலகத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் பட்டப்பகலில் 3 பேரை வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திரிபுராவில் உள்ள அகர்தலா நகரில் தைனிக் ஞானதூத் என்ற நாளிதழ் அலுவலகம் உள்ளது.நேற்று மாலை 3 மணியளவில் இந்த அலுவலகத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள், தரை தளத்தில் பணியிலிருந்த புரூஃப் ரீடர் மற்றும் டிரைவர் ஆகியோரை சரமாரியாக கத்தியால் குத்தினர். இச்சம்பவத்தை பார்த்த நிருபர் ஒருவர் மயங்கி விழுந்ததால் அவரை ஒன்றும் செய்யாமல் முதல் மாடிக்கு சென்றனர்.



சீமானை 10 ஆண்டுகள் சிறையில் அடைக்க வேண்டும் - மத்திய அமைச்சர் நாராயணசாமி ஆவேசம்!
[Monday, 2013-05-20 17:41:34]

புதுவை மக்கள் காங்கிரஸ் கட்சி மீதும், ராஜீவ்காந்தி மீது மதிப்பும், மரியாதையும் கொண்டவர்கள். ராஜிவ் காந்தி 5 ஆண்டுகள் பிரதமராக பதவியில் இருந்த போது இந்தியாவை வல்லசராக்க அரும்பாடுபட்டார். ராஜிவ்காந்தி தீவிரவாதத்தை ஒடுக்குவதில் தீர்மானமாக இருந்தார். அவருடைய காலத்தில் மிசோரம், அசாம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தீவிரவாதம் ஒடுக்கப்பட்டது. இலங்கையில் தீவிரவாதத்தை ஒடுக்க அமைதிப்படையை அனுப்பி வைத்தார். போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு கப்பலில் உணவு பொருட்களை அனுப்பி வைத்தார்.அதனை பெற இலங்கை ராணுவம் முன்வராதபோது விமானம் மூலம் உணவு பொருட்களை தமிழர் பகுதியில் போடச் செய்தார். அவரை விடுதலை புலிகள் இயக்கத்தால் இழந்தோம்.



சீமானைக் கைது செய்யக் கோரி டிஜிபி அலுவலகத்தில் புகார்!
[Monday, 2013-05-20 17:34:35]

இந்து மக்கள் கட்சியின் சென்னை மண்டல தலைவர் முத்து ரமேஷ்குமார் டி.ஜி.பி. அலுவலகத்தில் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறி இருப்பதாவது-கடந்த 18-ந்தேதியன்று கடலூரில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் இந்தியாவில் பிரிவினையை தூண்டும் விதமாக காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் பேசி உள்ளார். தீவிரவாதி அப்சல்குரு தூக்கிலிடப்பட்டதை கண்டித்து ஹபீஸ் சையது என்ற தீவிரவாதியுடன் இணைந்து இஸ்லாமாபாத்தில் போராட்டம் நடத்தியவர்தான் இந்த யாசின் மாலிக்.இவ்வாறு இந்தியாவுக்கு எதிராக செயல்படும் தீவிரவாதிகளுடன் கைகோர்த்துள்ள அவர் தமிழகத்தில் பிரிவினையை தூண்டும் வகையில் பேசி உள்ளார்.



அதிருப்தியில் ஜெயலலிதா - அமைச்சரவை மாற்றம் எந்தநேரமும் நிகழலாம் என்பதால் கலக்கத்தில் அமைச்சர்கள்!
[Monday, 2013-05-20 17:27:54]

தமிழக அமைச்சர்கள் சிலரின் நடவடிக்கையில் முதல்வர் ஜெயலலிதா அதிருப்தியில் உள்ளதால், விரைவில் அமைச்சரவை மாற்றம் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் அமைச்சர்கள் சிலரின் செயல்பாடுகள் முதல்வருக்கு திருப்தியளிக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும், விரைவில் லோக்சபா தேர்தல் வருவதால், அதை எதிர்கொள்ளும் வகையில் அமைச்சரவை மாற்றியமைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சர் பதவியிலிருந்து கல்தா கொடுக்கப்பட்டவர்களில் சிலர் மீண்டும் அமைச்சர்களாக்கப்படலாம் என்பதால், அ.தி.மு.க.வில் பரபரப்பு நிலவுகிறது.



மும்பை ஹோட்டலில் பெண்களுடன் தனியாக இருந்ததை படம்பிடித்து ஸ்ரீசாந்தை வளைத்துப் போட்ட தரகர்கள்!
[Monday, 2013-05-20 17:08:49]

மும்பை ஹோட்டலில் பெண்களுடன் இருந்ததை ரகசியமாக படம் எடுத்து, அதன் மூலம் ஸ்ரீசாந்த்தை சூதாட்டத்தில் ஈடுபடும்படி மிரட்ட தரகர்கள் திட்டமிட்டு இருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.கிரிக்கெட் சூதாட்ட புகாரில் கைதாகியுள்ள வீரர்கள் மற்றும் தரகர்களிடம் டெல்லி தனிப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.இதில் இந்த ஆண்டு தொடக்கத்தில் 6 முறை தரகர்கள் பெண்களை ஸ்ரீசாந்த் மற்றும் அஜித் சண்டிலா ஆகியோருக்கு ஏற்பாடு செய்து கொடுத்த அதிர்ச்சித் தகவல் தெரிய வந்துள்ளது. அதுபோல், ஸ்ரீசாந்த் பெண்களுடன் இருப்பதை ரகசியமாக வீடியோ படம் எடுத்து அதனைக் காட்டி மிரட்டி அவரை சூதாட்டத்தில் ஈடுபடும்படி கட்டாயப்படுத்தவும் தரகர்கள் திட்டமிட்டு இருந்தது அம்பலமாகியுள்ளது.



நத்தையை விடவும் மெதுவாக சென்ற தபால் - 31 ஆண்டுகள் கழித்து உரியவரிடம் போய் சேர்ந்தது!
[Monday, 2013-05-20 07:52:44]

குஜராத் மாநிலம் ஆனந்த் நகரில் இருந்து நவ்சாரி நகருக்கு அனுப்பப்பட்ட கடிதம் ஒன்று தபால் துறையினரின் அலட்சியத்தால் 31 வருடம் கழித்து பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. இத்தனை வருடங்கள் கழித்து தனக்கு வந்த கடிதம் குறித்து கடிதத்தைப் பெற்றவர் மிகவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். டாக்டர் அசோக் ஷெராப் (63) என்ற கண் மருத்துவர் நவ்சாரி நகரில் வாழ்ந்து வருகிறார். 1982-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தேதியன்று, அவரது நண்பர் டாக்டர் ஷ்யாம்குமார் புத்தாண்டு வாழ்த்துகளுடன் ஒரு கடிதத்தை அவருக்கு அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தைத்தான் தபால்துறை கடந்த வியாழன் அன்று அவருக்கு கொடுத்துள்ளது.



குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் பேசியதாக சீமான் உள்ளிட்ட மூவர் மீது வழக்குப்பதிவு!
[Monday, 2013-05-20 07:50:19]

குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் பேசியதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட 3 பேர் மீது போலீஸார் ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்தனர். நாம் தமிழர் கட்சி சார்பில் சனிக்கிழமை இரவு கடலூரில் இன எழுச்சிக் கருத்தரங்கம், பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர். தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் படத்தை விளம்பர போஸ்டர்களில் பயன்படுத்தியதாகக் கூறி போலீஸார், பேரணி மற்றும் பொதுக் கூட்டத்துக்கு வெள்ளிக்கிழமை இரவு தடைவிதித்தனர்.



மனிதன் வாழ்வதற்கேற்ற இரு கிரகங்களைக் கண்டுபிடித்த தமிழ் விஞ்ஞானி!
[Monday, 2013-05-20 07:32:52]

பூமியைப் போல், மனிதன் வாழ்வதற்கு ஏற்ற, இரண்டு கோள்களைக் கண்டுபிடித்தவர், தமிழகத்தைச் சேர்ந்த, விண்வெளி மற்றும் ஏவுகணை தொழில்நுட்ப விஞ்ஞானி சிவதாணுப்பிள்ளை. "கெப்லர் 22 எச்' மற்றும் "கிலிசென் 667 சி' என்ற, இரண்டு கோள்களைக் கண்டுபிடித்துள்ள இவர், அந்த இரண்டு கோள்களும், மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற சீதோஷ்ண நிலை கொண்டவை என, அறிவித்து, மனிதர்கள் வாழ, இன்னும் இரண்டு கோள்கள் உள்ளன என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளார்.சூரிய குடும்பத்தைச் சேராத இந்த, இரண்டு கோள்களும், எளிதில் சென்று வரக் கூடிய, 122 ஒளி ஆண்டு தூரத்தில் தான் இருக்கிறது எனத் தெரிவித்து, இந்தியர்களின் விண்வெளிப் பயணப் பசியைத் தூண்டி உள்ளார், சிவதாணுப்பிள்ளை.



தமிழகத்தில் அடியோடு படுத்துவிட்ட இலங்கையர்களின் சுற்றுலா!
[Monday, 2013-05-20 07:27:10]

அரசியல் பிரச்னைகளால், தமிழகத்துக்கு அன்னிய செலாவணியை ஈட்டி தரும், இலங்கை சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை, வெகுவாக குறைந்து விட்டது. கொழும்பிலிருந்து, திருச்சி விமான நிலையம் வந்து, திருச்சி மலைக்கோட்டை, ஸ்ரீரங்கம், சமயபுரம், தஞ்சை பெரிய கோவில், யூனியன் பிரதேசமான காரைக்காலில் உள்ள திருநள்ளாறு உள்ளிட்ட நவக்கிரக் கோவில்கள், ராமேஸ்வரம், மதுரை கோவில்களில் தரிசனம் செய்வது இலங்கை தமிழர்களின் வழக்கம். இலங்கையை சேர்ந்த சிங்களர்கள், தஞ்சை பூண்டி மாதா கோவில், நாகை வேளாங்கண்ணி தேவாலயங்களுக்கு செல்வதுடன், தஞ்சை பெரிய கோவில் மற்றும் ஒன்பது நவக்கிரக் கோவில்கள், ராமேஸ்வரம் கோவிலுக்கு ஆண்டுதோறும் சுற்றுலாவாக வருகின்றனர். இலங்கையில் உள்ள முஸ்லிம்களும் தமிழக சுற்றுலா பயணம் மேற்கொள்வது வழக்கம்.



கடலூரில் பொலிசாருக்கு கண்கட்டிவித்தை காட்டிய காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் யாசிம் மாலிக்!
[Monday, 2013-05-20 07:18:05]

கடலூரில், "நாம் தமிழர்' கட்சி சார்பில் நடந்த கூட்டத்தில், கடும் போலீஸ் பாதுகாப்புக்கு இடையே பங்கேற்ற, காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர், திடீரென மேடையிலிருந்து மாயமானார். அவரை நிழல் போல் கண்காணித்த போலீசார், அவர் சென்ற இடம் தெரியாமல் திகைத்தனர்.நாம் தமிழர் கட்சி சார்பில், கடலூரில் கடந்த, 18ம்தேதி நடந்த கருத்தரங்கம் மற்றும் பொதுக் கூட்டத்தில், சீமான், காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் யாசிம் மாலிக் பங்கேற்பதாக தகவல் கிடைத்ததால், இரவோடு இரவாக ஐ.ஜி.கண்ணப்பன், டி.ஐ.ஜி. முருகன் தலைமை யில் கடலூர், விழுப்புரம்,திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் இருந்து, 700க்கும் மேற்பட்ட போலீசார், கண்காணிப்புக்காக கடலூரில் குவிக்கப்பட்டனர்.



கைது செய்யச் சென்ற பொலிசாரை மிரட்டிய ஸ்ரீசாந்த் பொலிஸ் காவலில் அவஸ்தை - கூட இருந்தவர் மராட்டிய நடிகையாம்!
[Sunday, 2013-05-19 20:11:44]

கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட புகாரின் பேரில் மும்பையில் ஸ்ரீசாந்தை கைது செய்த டெல்லி போலீசாரை அவர் மிரட்டிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. மும்பையில் உள்ள ஆடம்பர ஓட்டலில் டெல்லி போலீசார் ஸ்ரீசாந்தை கைது செய்த போது, தனது செல்போனை போலீசாரை நோக்கி வீசிய அவர், யார் கிட்ட பேசணும்?. மகாராஷ்டிரா முதல் மந்திரி கிட்ட பேசறீங்களா? கேரள முதல் மந்திரி கிட்ட பேசறீங்களா? என்று போலீசாரையே மிரட்டும் தோரணையில் கூறியுள்ளார்.போலீஸ் நிலையத்திற்கு போகும்வரை போலீசாருடன் ஒத்துழைக்காமல் வயலண்ட்டாக இருந்த ஸ்ரீசாந்த், இவரை வரவேற்க ஏற்கனவே கஸ்டடியில் சூதாட்ட தரகர்கள் அமர்ந்திருப்பதை பார்த்ததும் கப்-சிப் என்று சைலெண்ட்டாக ஆகி விட்டதாக போலீஸ் வட்டாரங்கள் இன்று தெரிவித்தன.



ஊசி மூலம் உடலில் அசிட் செலுத்தி கொலைக் குற்றவாளியை கொன்ற பொலிசார் - உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பு!
[Sunday, 2013-05-19 19:57:39]

உத்தரப்பிரதேசத்தில் கொலை குற்றவாளி ஒருவரை போலீசார் அசிட் மற்றும் பெட்ரோலினை ஊசி வாயிலாக செலுத்தி சித்ரவதை செய்து கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. உபி. மாநிலம் ஈட்டா மாவட்டத்தைச் சேர்ந்த பல்பீர், பானிகான் ஆகியோர் , கொலை செய்த வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் போலீசாரால் சித்ரவதை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. கடந்த வெள்ளியன்று பல்பீர் என்பவரின் உடல்நிலை மோசமானதை தொடர்ந்து லக்னோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பல்பீர் இறந்தார். அவர் ஊசி வாயிலாக அசிட், பெட்ரோ‌ல் செலுத்தப்பட்டதாக தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட நான்கு போலீசார் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.



புதுடில்லி வந்த சீனப் பிரதமருக்கு விமான நிலையத்தில் அமோக வரவேற்பு!
[Sunday, 2013-05-19 19:44:11]

சீன பிரதமர், லி கெகியாங், மூன்று நாள் பயணமாக, இன்று மதியம், இந்தியா வந்தார். சீன பிரதமராக சமீபத்தில் பொறுப்பேற்ற லி கெகியாங், தன் முதல் வெளிநாட்டுச் சுற்றுப்பயணமாக, இன்று இந்தியா வந்தார். மதியம், டில்லி வந்த அவர், தனிப்பட்ட முறையில், பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின் போது, எல்லை விவகாரம், தண்ணீர் பிரச்னை உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்க உள்ளார். இரவில் அவருக்கு, பிரதமர், மன்மோகன் விருந்து அளிக்கிறார். அதில், மத்தியில் ஆளும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் அமைச்சர்கள், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். சீனப்பிரதமர் லி கெகியாங்குடன், உயர்மட்டக்குழுவும் வந்துள்ளது.



பற்றியெரியும் சென்னைத் துறைமுகம் - பல பகுதிகளில் புகைமண்டலம்!
[Sunday, 2013-05-19 19:36:24]

சென்னை துறைமுக வளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை துறைமுகத்தின் 7வது நுழைவுவாயிலில் உள்ள புட் கார்பரேஷன் நிறுவனத்தின் குடோன் அருகே நிறுத்தப்பட்டிருந்த 5 லாரிகள் திடீரென தீப்பிடித்து எரிந்து வருகின்றன. இதனால் பயங்கர புகை கிளம்பியது. இந்த புகை, துறைமுகம், மண்ணாடி உள்ளிட்ட பகுதிகளில் புகை சூழ்ந்துள்ளது. இதனால் அந்த பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.



பொலிசார் முன்வாசல் வழியே அதிரடியாக நுழைய பின்வாசல் வழியாகத் தப்பியோடினார் சீமான்!
[Sunday, 2013-05-19 19:08:08]

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான். தலைமையில், நேற்று கடலூரில் இன எழுச்சிப் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், திருமண மண்டபம் ஒன்றில் உள்ளரங்குக் கூட்டம் நடத்தி பேசினார் சீமான். இரவு பத்து மணிக்குள்ளாக பேச்சை முடித்து விட வேண்டும் என்று போலீஸார் ஏற்கனவே வலியுறுத்தியிருந்தனர். 9 மணி துவங்கி, 9.30 வரை இரு முறை கூட்டத்தை முடிக்கச் சொல்லி போலீஸ் தரப்பில் அவசரப்படுத்தினர். ஆனால் 9.40 வரை நிர்வாகிகளே பேசிக்கொண்டிருந்தனர். பின்னர் பேச வந்தார் சீமான். அப்போது 10 மணியாகி விட்டது. எனவே போலீஸார் 10 மணிக்கும் 10.10க்கும் 10.15க்கும் என மூன்று முறை மண்டபத்துக்குள் நுழைய முயற்சி செய்தனர். ஆனால், போலீசாரை உள்ளே விட மறுத்தனர் நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள்.



இந்திய இராணுவத்துக்குள் பாகிஸ்தான் உளவுப்பிரிவு ஊடுருவல் - முக்கிய தகவல்களை வழங்கிய அதிகாரி கைது!
[Sunday, 2013-05-19 10:03:23]

பாகிஸ்தானின் உளவுப் பிரிவான ஐஎஸ்ஐ-க்கு இந்திய ராணுவத்தின் முக்கிய தகவல்களை அளித்த குற்றச்சாட்டுக்காக ராணுவப் பணியாளர் பி.கே.சின்ஹா (43) கைது செய்யப்பட்டார். சின்ஹா, தென்மேற்குப் பகுதி படைப்பிரிவில் ராணுவ வீரர்களுக்கு ஆயுதங்கள் உள்ளிட்ட பொருள்கள் சப்ளை செய்யும் பிரிவில் எழுத்தராகப் பணி புரிந்து வருகிறார். அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சின்ஹா, இந்திய ராணுவத்தின் நடமாட்டம் உள்ளிட்ட முக்கியமான தகவல்கள் மற்றும் ஆவணங்களை நேபாளத்தில் செயல்படும் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ பிரிவிடம் அளித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 15-ம் தேதி அலுவலக ரகசியச் சட்டத்தின் கீழ் சின்ஹா கைது செய்யப்பட்டார்.



திருப்பதியைத் திணறடிக்கும் இலட்சக்கணக்கான பக்தர்கள் - கூட்டநெரிசலில் பெண்கள், குழந்தைகள் மயக்கம்!
[Sunday, 2013-05-19 08:26:30]

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று ஒரே நாளில் லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நெரிசலில் சிக்கிய குழந்தைகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆந்திரா, தமிழகம், கர்நாடகா மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். ஏழுமலையானை தரிசிக்க மலைப்பாதை வழியாக நடந்து வரும் பக்தர்கள் நேற்று அதிகளவில் குவிந்தனர். பக்தர்களின் வருகை நேற்று அதிகமாக இருந்ததால் வைகுண்டம் காம்ப்ளக்சில் உள்ள 31 அறைகளும் நிரம்பியது. இதனால் நாராயணகிரி தோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கைக்குழந்தைகளுடன் தரிசனத்துக்காக காத்திருந்தனர்.



குடிநீர் உற்பத்தியாளர்களின் போராட்டம் திடீரென வாபஸ் - சென்னை வாசிகள் நிம்மதிப் பெருமூச்சு!
[Sunday, 2013-05-19 08:23:44]

கேன் குடிநீர் உற்பத்தியாளர் போராட்டம் திடீரென வாபஸ் பெறப்பட்டுள்ளது. இன்று முதல் குடிநீர் கேன் விற்பனை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 309 சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை கேன்களில் நிரப்பி விற்கும் நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களில் தண்ணீர் சரியாக சுத்திகரிக்காமல் விநியோகம் செய்யப்படுவதாக நிறைய புகார்கள் வந்தன. இதை தொடர்ந்து, பசுமை தீர்ப்பாயம் உத்தரவின்படி மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தண்ணீர் கேன் நிறுவனங்களுக்கு சீல் வைத்தனர். கடந்த 4 நாட்களில் மட்டும் சுமார் 121 நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு பேக்கேஜ் குடிநீர் உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர்.



கடலூர் கூட்டத்தில் காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் - பொலிசார் விசாரணை!
[Sunday, 2013-05-19 08:19:39]

காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் யாசின் மாலிக் கடலூர் நிகழ்ச்சியில் பங்கேற்றது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூரில் நேற்று நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த கருத்தரங்கில் காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் யாசின் மாலிக் பேசினார். அவர் தனது உரையில் இலங்கையில் ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்ட நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த செயல் மக்கள் திரள்வதை பார்த்து அரசுக்கு பயமா என்று எண்ண தோன்றுகிறது. ஜனநாயக அமைப்புகளை கட்டுப்படுத்துவது இந்தியாவின் ஜனநாயகமற்ற முகத்தை காட்டுகிறது. தமிழீழத்துக்கான தமிழக மக்களின் போராட்டம் தனித்து நிற்கவில்லை. நம்முடைய வலிகள் ஒரே மாதிரியானவை.



நாய், நரி, பன்றிக்கு கூட நாட்டை ஆளும் ஆசை வரும்போது, தமிழனுக்கு அந்த ஆசை வரக்கூடாதா? - கடலூரில் சீமான் ஆவேசம்!
[Sunday, 2013-05-19 08:15:08]

கடலூரில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்துக்கு நேற்று தடை விதிக்கப்பட்டது. எனினும், நேற்று காலை நடந்த கருத்தரங்கில் கட்சியின் தலைவர் சீமான் பேசியதாவது: நம் மாநாடு, பொதுக்கூட்டம் மீது தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கையானது நாம் சரியான பாதையில் செல்கிறோம் என்பதை காட்டுகிறது. நாய், நரி, பன்றிக்கு கூட நாட்டை ஆள ஆசை வரலாம். ஆனால், தமிழனுக்கு அந்த ஆசை வரக்கூடாது என நினைக்கின்றனர். ஆறு மாதம் கழித்து பார்ப்போம், நாம் என்ன செய்யப்போகிறோம் என்பதை. அப்போது அவர்கள் உணர்வார்கள். நாங்கள் இல்லா மல் எந்தக் கட்சியும் தேர்தலில் வெற்றி பெற முடியாது. தமிழீழம் அமைய பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினார்.


RoyaShades-l2011(04-12-11)
TDE_Computers2011
Canada Kanthasamy Kovil
NIRO-DANCE-100213
Mahesan supramaniyam 031109
INNSYS-20120930
TamilsGuid-191012-2013
Suresh-remax-2013-01-01
Ramans2011
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com