Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
June 20, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
அண்ணன் சூர்யாவுக்காக, இரவல் குரல் கொடுத்த தம்பி கார்த்தி!
[Sunday, 2012-10-07 07:13:26]
News Service

நல்லவன் - கெட்டவன் என, இரு மாறுபட்ட வேடங்களில் சூர்யா நடித்திருக்கும், "மாற்றான் படம், ரசிகர்கள் வட்டாரத்தில், மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒட்டிப் பிறந்த இரட்டையர்களான சூர்யாவுக்கு நடுவே, சிக்கித் தவிக்கும் காஜல் அகர்வாலின் காதல் போராட்டத்தை, இயக்குனர் கே.வி.ஆனந்த் அழகான திரைக்கதையாக்கி உள்ளார்.

  

மாற்றான் திரைப்படம், வெகு விரைவில் திரைக்கு தரிசனம் தரவுள்ளது. இதற்கு நடுவே, "மாற்றான் படத்தை, பிரதர்ஸ் என்ற பெயரில் தெலுங்கு பேச வைப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கின்றன. சூர்யாவின் பல படங்கள் தெலுங்கில் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அப்போதெல்லாம் சூர்யாவுக்காக அங்குள்ள டப்பிங் கலைஞர் ஒருவர் தான் குரல் கொடுத்து வந்தார். ஆனால், இந்த முறை அப்படிச் செய்யாமல், அண்ணன் சூர்யாவுக்காக, தம்பி கார்த்தி இரவல் குரல் கொடுக்கிறார். டப்பிங்கின்போது கார்த்தி தெலுங்கு பேசிய அழகைப் பார்த்து பூரித்துப் போனாராம் சூர்யா.

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

என் வாழ்வில் தினம் தினம் காதலர்கள் - ஜே. ஜே நாயகி அமோகா ..
[Thursday, 2013-06-20 17:01:27]

ஜே. ஜே திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை அமோகா. அப்படத்திற்கு பிறகு தமிழ் தெலுங்கு மற்றும் இந்தி போன்ற படங்களில் நடித்த இவர் தற்போது படத்தின் ஒரு படப்பாடல்களில் நடனம் ஆடுவதில் தனது கவனத்தை திருப்பி வருகிறார். ஜே.ஜே படத்திற்கு பிறகு தமிழில் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் இந்தி திரையுலகிற்கு தனது பயணத்தை தொடர்ந்தார். இந்தித் திரையுலகில் தனது பெயரை நிஷா கோத்தாரி, பிரியங்கா கோத்தாரி என்று மாற்றிக்கொண்டார். அவ்வப்போது தமிழ் படங்களில் ஒரு பட பாடலுக்கு மட்டும் குத்தாட்டம் போட்டார். தற்போது படம் பேசும் என்ற படத்தில் ஒரு படப்பாடலுக்கு மட்டும் நடனம் ஆடிக்கொண்டிருந்த அமோகா ஆட்டத்தின் ஓய்வின் போது ஊடகத்தினரை சந்தித்தார். அப்போது திரையுலக அனுபவம் குறித்து அவர் கூறுகையில், என்னுடைய உண்மையான பெயர் பிரியங்கா கோத்தாரி அந்தப் பெயரிலேயயே திரையுலயில் சாதிக்க விரும்புகிறேன். ஜே. ஜே படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான போது எனக்கு புதுமையான அனுபவம் கிடைத்தது.



நயன்தாரா.. கனவு பலித்தது - ஜெயம் ரவி
[Thursday, 2013-06-20 16:47:01]

நயன்தாராவுக்கு ரசிகர்கள் சினிமாவிற்கு வெளியே மட்டுமின்றி, உள்ளேயும் நிறையபேர் இருக்கிறார்கள். அந்த வகையில், தற்போதைய இளவட்ட நடிகர்களான சிம்புதான் அவரது முதல் ரசிகர். அவரையடுத்து ஆர்யா, விஷால், பரத், ஜெயம்ரவி என்றும் இன்னும் ஏராளமான இளவட்ட நடிகர்கள் நயன்தாராவின் தீவிர ரசிகர்களாக உள்ளனர். அவர் நடித்த படம் வந்து விட்டால், ரசிகர்களைப்போன்றே இவர்களும் பார்த்து விடுகிறார்கள். அதோடு, நோட்ஸ் எடுத்து வைத்துக்கொண்டு நயன்தாராவின் பர்பாமென்ஸ் எந்தெந்த இடத்தில் எப்படி எப்படி இருந்தது என்பதை புள்ளி விவரமாய் அவருக்கு சொல்லி, பெரிய மார்க்கே போடுகின்றனர். இப்படிப்பட்ட ரசிகர்கள் கோலிவுட்டில் இன்னமும் நயன்தாராவுக்கு இருப்பதால்தான், இரண்டாவது ரவுண்டிலும் அவரது மார்க்கெட் பரபரப்படைந்து நிற்கிறது. குறிப்பாக அஜீத் உள்ளிட்ட மேல்தட்டு நடிகர்களுடன் நடிப்பதற்கும் அவருக்கு சான்ஸ் கிடைத்து வருகிறது.



சூர்யாவோடு இணையும் அமலா பால்..
[Thursday, 2013-06-20 16:44:15]

'நீ தானே என் பொன்வசந்தம்' படத்தினை தொடர்ந்து கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கும் படம் 'துருவ நட்சத்திரம்'. சூர்யா கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில், பார்த்திபன், சிம்ரன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஆனால், படத்தின் கதாநாயகியாக யாரை ஒப்பந்தம் செய்வது என கெளதம் வாசுதேவ் மேனன் குழப்பத்தில் இருந்தார். சமீரா ரெட்டி, ஆண்ட்ரியா, த்ரிஷா என தன்னுடைய முந்தைய படங்களின் நாயகிகளில் ஒருவரை நடிக்க வைக்கலாம் என்ற முடிவுக்கு வந்தவர், ஒருவழியாக 'விண்ணைதாண்டி வருவாயா' படத்தில் நடித்த த்ரிஷாவையே, இந்தப் படத்திலும் நாயகியாக்கலாம் என்று நினைத்தாராம். ஆனால், அவருக்கு நெருங்கிய நண்பர்கள் சிலர், தற்போது மார்க்கெட்டில் இருக்கும் அமலா பால் நடித்தால் நன்றாக இருக்கும் என்றார்களாம். கதைக்குப் பொருத்தமாக இருப்பதோடு, தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பலமாக இருப்பார் என்றும் ஆலோசனை சொல்லப்பட்டதாம். உடனடியாக அமலாபாலை அழைத்துப் பேசி புக் செய்துவிட்டார் கெளதம் வாசுதேவ் மேனன். 'தலைவா' படத்திற்குப் பிறகு மீண்டும் ஒரு பெரிய பேனரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதால், உற்சாகத்தில் இருக்கிறார் அமலா பால்.



70 வயது இலங்கை ரசிகையின் பிறந்தநாளில் இன்ப அதிர்ச்சி கொடுத்த ஷாருக்கான் Top News
[Thursday, 2013-06-20 16:41:51]

ஹிந்தி நடிகர் ஷாருக்கானுக்கு இந்தியா மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இந்த வரிசையில் இலங்கையில் 70 வயது சிரானி சமரசேகராவும் அவரது ரசிகர்களுல் ஒருவர். சிரானி கடந்த 15 வருடங்களாக ஷாருக்கானின் தீவிர ரசிகையாக இருக்கிறார். இவர் இந்த வயதிலும் ஷாருக்கின் புகைப்படங்களை அறை முழுவதும் ஒட்டிவைத்துள்ளார். அவர் படங்களை பல முறை தொடர்ந்து பார்த்து வருகிறார். ஷாருக்கான் மீது சிரானி பைத்தியமாக இருப்பதை அறிந்த அவரது மகன், தனது தாயின் 70 வது பிறந்தநாள் அன்று ஷாருக்கானை சந்திக்க வைத்து இன்ப அதிர்ச்சி அளிக்க விரும்பினர். இதற்காக அவர் ஷாருக்கானின் அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு அனுமதி பெற்றார். இதைத் தொடர்ந்து கடந்த வாரம், ஷாருக்கை சந்திப்பதற்காக அவர் இலங்கையிலிருந்து தனது தாயார் சிரானி சமரசேகராவுடன் இந்தியா வந்தார். ஷாருக்கான் வீட்டின் அருகில் உள்ள ஒரு ஹோட்டலில் அவர்களின் சந்திப்பு நடந்தது.



தனுஷுக்கு ஜோடியாகும் பாலிவுட் நடிகை அலியா பட்
[Thursday, 2013-06-20 16:06:39]

'மாற்றான்' படத்திற்குப் பிறகு கே.வி.ஆனந்த் இயக்கவிருக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் தனுஷ் தான் ஹீரோ என்பது ஏற்கெனவே முடிவான விஷயம். அதேபோல் இப்படத்திற்கு அனிருத்தான் இசையமைக்க இருக்கிறார். ஆனால், ஹாரிஸ் ஜெயராஜ்தான் இசையமைக்க ஒப்பந்தமாகியிருப்பதாகச் சொல்கிறார்கள். இந்தப்படத்தில் கரண் ஜோஹர் இயக்கத்தில் 2012-ல் வெளிவந்து ஹிட்டான 'ஸ்டூடன்ட் ஆஃப் த இயர்' பாலிவுட் படத்தின் நாயகி அலியா பட் தான் தனுஷுக்கு ஜோடியாகிறாராம். தன் முதல் படத்திலேயே பாலிவுட் ரசிகர்களை மெய் மறக்கச் செய்தவர், தற்போது தமிழர்களின் நெஞ்சத்திலும் குடியிருக்க வருகிறார்.



விரைவில் சந்திரமுகி - 2
[Thursday, 2013-06-20 13:29:48]

மலையாளத்தில் மோகன்லால் - சுரேஷ்கோபி, ஷோபனா நடித்த படம் மணிசித்திரதாழ். இப்படத்தை கன்னடத்தில் ஆப்தமித்ரா என்ற பெயரில் ரீமேக் செய்தார் பி.வாசு. அதையடுத்து தமிழில், சந்திரமுகி என்ற பெயரில் மீண்டும் ரீமேக் செய்தார் வாசு. மலையாளம், கன்னடத்தைவிட பெரிய அளவில் வசூல் சாதனை செய்தது அப்படம். முக்கியமாக, சந்திரமுகியாக கண்களை உருட்டி, ரசிகர்களை மிரட்டும் பேயாக நடித்த ஜோதிகா அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இந்த நிலையில், முதன்முதலில் மலையாளத்தில் வெளியான மணிசித்திரதாழ் படத்தின் இரண்டாம் பாகத்தை இப்போது படமாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள். அப்படத்திலும் மோகன்லால்- ஷோபனா இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்களாம். அப்படத்துக்கு கீதாஞ்சலி என பெயரும் வைத்து விட்டார்களாம்.



காதல் சந்தியாவோடு ஜோடி போட்டு நடிக்கும் சந்தானம்
[Thursday, 2013-06-20 13:18:55]

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நானும் எத்தனை நாளைக்குத்தான் ஊரான் காதலையே ஊட்டி வளர்க்கிறது. எனக்கும் ஊட்டிக்குப்போய் டூயட் பாடனும்னு ஆசை இருக்காதா என்று சொல்லி, அப்பட நாயகி விசாகா சிங்குக்கு தானும் லவ் லட்டர் கொடுத்தார் சந்தானம். அது படத்துக்காக பேசிய டயலாக் என்றாலும, சந்தானத்துக்குள்ளும் அப்படியொரு எண்ணம் இருந்திருக்கிறது. அதன் வெளிப்பாடாக அதையடுத்து தான் நடித்து வரும் ஒவ்வொரு படங்களிலும் தனக்கொரு ஜோடி நடிகையை இணைத்து வருகிறார். குறிப்பாக, யா யா என்ற படத்தில் காதல் சந்தியாவை தனது ஜோடியாக்கியுள்ளார். ஒரு காலத்தில் பரத், ப்ருதிவிராஜ் போன்ற நடிகர்களுடன் டூயட் பாடிவந்த சந்தியாவுக்கு இப்போது சினிமாவில் மார்க்கெட் அச்சு கழண்டு கிடப்பதால், சந்தானம் கிடைப்பதே பெரிய விசயம் என்று இப்படத்தில் அவருக்கு ஜோடியாக காமெடி கதாநாயகியாக ஆக்டு கொடுத்திருக்கிறார்.



சிவகார்த்திகேயனுடன் நடிக்கும் வடிவேலு
[Thursday, 2013-06-20 13:07:34]

கல்லூரி மாணவர்கள் நகைச்சுவை நடிகர் வடிவேலு பேசி நடித்த கொமடி வசனங்களை இப்போதும் பயன்படுத்தி வருகின்றனர். அந்த அளவிற்கு அவரது பெருவாரியான வசனங்கள் மக்களோடு மக்களாக கலந்துவிட்டன. அவரது கொமடி வசனம் சினிமாக்காரர்களையும் கூட விட்டு வைக்கவில்லை. சிலர் அவரது கொமடிகளை எடுத்து தங்கள் படங்களுக்கும் பயன்படுத்துகின்றனர். அந்த வகையில், வின்னர் படத்தில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்றொரு சங்கத்தை அமைத்து கொமடி செய்திருந்தார் வடிவேலு. தற்போது அந்த வசனத்தையே சிவகார்த்திகேயன் நடிக்கும் ஒரு படத்திற்கு தலைப்பாக்கியுள்ளனர். ஆனால், வடிவேலுவின் தலைப்பை படத்திற்கு பயன்படுத்தி விட்டு அவரை நடிக்க வைக்காமல் இருந்தால் நன்றாக இருக்காதே என்ற நட்பிற்காக படத்தில் ஒரிரு காட்சிகளில்தோன்றுமாறு அவரைக் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.



காஜலின் இடத்தில் ஸ்ருதி ஹாசன்
[Thursday, 2013-06-20 13:03:20]

பாலிவுட்டில் லக் என்ற திரைப்படத்தின் மூலம் இந்தி திரையுலகிற்கு காலடி எடுத்து வைத்துள்ளார் ஸ்ருதி ஹாசன். ஆனால் படத்தின் தலைப்பில் மட்டுமே லக் இருந்ததே தவிர ஸ்ருதிஹாசனுக்கு லக் அடித்ததாக தெரியவில்லை. அதேநேரத்தில் தெலுங்கில் பவன்கல்யானுடன் நடித்த கப்பர் சிங் என்ற திரைப்படம் ஆந்திராவின் பட்டி தொட்டியெல்லாம் வசூலை வாரி குவித்துள்ளது. இப்படத்தின் மூலம் தெலுங்கில் முன்ணனி நடிகையாக வலம் வருகிறார் ஸ்ருதி ஹாசன். தற்போது தெலுங்கில் பலுபு, யெவடு, ராமய்யா வஸ்தாவய்யா ஆகிய தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தெலுங்கு படமான கப்பர் சிங் 2 ம் பாகத்தை படமாக்க திட்டமிட்டுள்ளனர். இதிலும் பவன் கல்யாண் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக காஜல் அகர்வால் என தகவல் எழுந்துள்ளது. ஆனால் காஜலின் சம்பள தொகை தயாரிப்பாளர்களை கதி கலங்க வைத்ததால், தற்போது அவருக்கு பதிலாக ஸ்ருதி ஹாசனையே ஒப்பந்தம் செய்துள்ளனராம்.



'வாங்கண்ணா வணக்கங்கண்ணா' பாடலில் விஜய்யுடன் நடனமாடிய ஜி.வி.பிரகாஷ்
[Thursday, 2013-06-20 12:44:30]

கொலிவுட்டில் வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ் குமார். மிகவும் குறுகிய காலத்திற்குள் 25 படங்களுக்கு இசையமைத்துள்ளார் ஜி.வி.பிரகாஷ். இவர் பரதேசி படத்திற்கு பின்பு அன்னக்கொடியும் கொடிவீரனும், தலைவா ஆகிய படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளர் பட்டியலில் சேர்ந்துள்ளார். மேலும் ஜி.வி.பிரகாஷை கதாநாயகனாக நடிக்க வைப்பதற்கான முயற்சிகள் நடந்து வந்தன. ஆனால் அதற்கு மறுத்துவிட்ட ஜி.வி., தற்போது மத யானைக்கூட்டம் என்ற படத்தை தயாரித்து வருகிறார். இதற்கிடையே சில படங்களில் பாடல் காட்சிகளில் முகம் காட்டி வந்த ஜி.வி.பிரகாஷ், தலைவா படத்தில் 'வாங்கண்ணா வணக்கங்கண்ணா' என்ற பாடலில் விஜய் மற்றும் சந்தானத்துடன் இணைந்து நடனமாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.



யு சான்றிதழிற்காக போராடும் மரியான்
[Wednesday, 2013-06-19 18:38:39]

பரத்பாலா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் மரியான். மூன்று எண்ணெய் நிறுவன தொழிலாளர்களை சூடானில் பிணையக் கைதிகளாக பிடித்து வைத்து சித்ரவதை செய்வதுதான் இப்படத்தின் மையக்கருவாம். அதிலிருந்து தனுஷ் எப்படி தப்பி வருகிறார் என்பதுதான் க்ளைமாக்சாம். ஆனால், இந்த க்ளைமாக்ஸ் காட்சியை கொடூரமான முறையில் படமாக்கியிருக்கிறார்களாம். இதனால் சென்சார் சான்றிதழுக்காக அனுப்பி வைக்கப்பட்ட மரியானுக்கு யுஏ சான்றிதழ் வழங்கிவிட்டார்களாம். யு சான்றிதழ் கிடைத்தால் படத்துக்கு வரிவிலக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்த மரியான் டீமி்ற்கு இநத யுஏ சான்றிதழ் விவகாரம் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் வருகிற 27-ந்தேதிக்கு படத்தை வெளியிட திட்டமிட்டிருப்பவர்கள், முன்னதாக படத்தை மேல்முறையீட்டு குழுவுக்கு அனுப்பி வைத்து எப்படியாவது யு சான்றிதழ் வாங்கி விட வேண்டும் என்று வரிந்து கட்டி நிற்கிறார்கள்.



கவுண்டமணியின் வேடத்தில் பிரம்மானந்தம்
[Wednesday, 2013-06-19 18:35:17]

ஆக்ஷன் கிங் அர்ஜூன் தயாரித்து நடிக்கும் படம் ஜெய்ஹிந்த்-2. ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் ஜெய்ஹிந்த். இப்படத்தில் அர்ஜூனுக்கு ஜோடியாக ரஞ்சிதா நடித்திருந்தார். இப்படத்தில் வரும் கவுண்டமணி- செந்தில் நகைச்சுவை காட்சிகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இருக்கிறார் அர்ஜூன். புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக சுர்வீன் சாவ்லா நடிக்கிறார். இந்நிலையில் இப்படத்தில் செந்தில் நடிப்பது உறுதியாகிவிட்ட நிலையில், கவுண்டமணிக்கு பதில் தெலுங்கு நடிகர் பிரம்மானந்தம் நடிக்கப் போகிறாராம். ஏன் இந்த மாற்றம் என்ற கேள்விக்கு, அர்ஜூன் தரப்பில் சும்மா தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பழைய ஜெய்ஹிந்த் படத்துக்கும், ஜெய்ஹிந்த்-2க்கும் படத்தலைப்பை தவிர வேறு ஒற்றுமை ஒன்றும் இல்லை என்றும் தெளிவுப்படுத்தியுள்ளார்.



வீதிகளில் பிகினி உடையில் திரியும் நமீதா
[Wednesday, 2013-06-19 18:32:47]

சினிமாவில் குட்டை பாவாடை, பிகினி கலாசாராம் என்றெல்லாம் கட்டவிழ்த்து விட்ட நமீதாவுக்கு போதாத நேரம் போலிருக்கு. அதனால்தான் அவர் எந்த அளவுக்கு இறங்கி நடிக்க தயாராக இருந்தும் துக்கடா வேடங்களை அவருக்கு கொடுக்கக்கூட கோடம்பாக்கத்தில் எந்த புண்ணியவான்களும் முன்வரவில்லை. இதனால் தனது பெரிய உடம்பு, பெரிய திரைக்காரர்களுக்கு வேண்டாததாகி விட்டது என்று இப்போது சின்னத்திரை பக்கம் தலை காட்டி வருகிறார். ஆனால், கோலிவுட்டில் வேலை வெட்டி இல்லாமல், சதா வீட்டு மோட்டு வளையத்தையே பார்த்து பார்த்து அவருக்கு செம போரடித்து விட்டதாம். அதனால் அடிக்கடி மும்பைக்கும், சில வெளிநாடுகளுக்கும் எஸ்கேப்பாகி வருகிறார் நமீதா. அப்படி அங்கு செல்லும்போது, சென்னையில் வீதிகளில் செல்வது போல் உடம்பை கவர் பண்ணி செல்லாமல் பிகினி உடையணிந்து ஹாயாக காத்தாட திரிகிறாராம் நமீதா.



ரகசியமாக தயாராகும் ரஜினியின் புதிய படம்
[Wednesday, 2013-06-19 18:28:50]

கோச்சடையான் படத்துக்கு முன்பாக புதிய படமொன்றில் நடிக்க உள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினி. இந்தியத் திரையுலகின் முதல் மோஷன் கேப்சரிங் படமாக தயாராகி வருகிறது கோச்சடையான். இதில் ரஜினி நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக பாலிவுட் நாயகி தீபிகா படுகோனேவும் நடிக்கின்றனர். படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதனிடையே ரஜினிகாந்த் கோச்சடையான் படத்தின் வெளியீட்டு முன்பாக ஒரு புதிய படத்தில் நடிக்க திட்டமிட்டிருக்கிறார். இதற்கு காரணம் கோச்சடையான் படம் தொடர்ந்து தள்ளிக் கொண்டே போவது தானாம். இந்தப் படத்தை ரஜினியின் ஆஸ்த்தான இயக்குனரான கே.எஸ்.ரவிக்குமார் இயக்க இருக்கிறார். சமீபத்தில் கே.எஸ்.ரவிக்குமாரை அழைத்து பேசிய ரஜினி, முத்து, படையப்பா பாணியில் நகைச்சுவை கலந்த ஆக்ஷன் படத்தை தயார் பண்ணுங்கள் என்று கூறியுள்ளாராம். மேலும் படத்தை இரண்டு மாதத்தில் முடித்துவிட வேண்டும் என்றும், படப்பிடிப்பு முடிவடைந்த பிறகுதான் படம் பற்றிய தகவல்களை வெளியிட வேண்டும் என்றும் கண்டிஷனும் போட்டிருக்கிறார்.



தமிழ் சினிமாவில் கேரள அழகிகளின் புதிய டிரெண்
[Wednesday, 2013-06-19 18:26:03]

கேரளாவில் இருந்து வந்த மூன்று அழகிகள், தமிழ் திரையுலகில் புதிய டிரெண்டை உருவாக்கி வருகிறார்கள். எந்த மொழி நடிகையாக இருந்தாலும், தமிழில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். ஏனெனில் தமிழ் அவர்களுக்கென்று தனித்தனி அடையாளத்தை ஏற்படுத்தி தருகிறது. தற்போதைய சூழலில் பெரும்பாலான நடிகைகள் தாராளமாக கவர்ச்சி காட்டி நடித்து வருகின்றனர். இந்நிலையில் கேரளாவில் இருந்து வந்து தமிழ் படங்களில் நடிக்கும் 3 நடிகைகள் புதிய டிரெண்டை செட் பண்ணுகின்றனர். அதாவது, மூன்று பேரும் நடிப்பு தான் முக்கியம், கவர்ச்சி காட்டி நடிக்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளனர். நித்யா மேனனின் நடிப்பை இயக்குனர்களும், பத்திரிக்கைகளும் பாராட்டுகின்றன. ஆனால் அவர் எனக்கு கதாபாத்திரம் தான் முக்கியம், கவர்ச்சி காட்டி நடிக்க வேண்டிய அவசியம் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் தமிழில் மிக வேகமாக வளர்ந்து வரும் லக்ஷமி மேனனும், கவர்ச்சிக்கு தடை விதித்துள்ளார். இப்பட்டியலில் இணைந்துள்ளார் மற்றொரு நாயகி நஸ்ரியா நஸீம்.



சித்தார்த் - சமந்தா ஜோடி திருமணத்திற்கு பெற்றோர்களின் சம்மதம்
[Wednesday, 2013-06-19 18:19:38]

சித்தார்த், சமந்தா திருமண ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளதால் தனது கைவசம் உள்ள படங்களை விரைவில் முடிக்கவுள்ளார் சமந்தா. சமந்தாவை விட சித்தார்த்திற்கு வயது அதிகம். ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனவர் என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்தன. சமந்தா பெற்றோர் தரப்பிலும் அதிருப்தி இருந்தது. இதுபோல் சித்தார்த் பெற்றோரும் காதலை ஏற்கவில்லை. இதையடுத்து பெற்றோரை சமரசப்படுத்தி சம்மதம் வாங்கும் முயற்சியில் இருவரும் ஈடுபட்டுள்ளனராம். இது நிமிர்த்தமாக சமந்தா நேரடியாக சித்தார்த் வீட்டிற்கு சென்று, அவரது பெற்றோர்களையும், உறவினர்களையும் சந்தித்து நீண்ட நேரம் பேசி விட்டுச் சென்றுள்ளாராம். நீண்ட யோசனைக்கு பின்பு சித்தார்த் பெற்றோர் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது.



ஜெயம் ரவியுடன் ஜோடி சேரும் நயன்தாரா
[Wednesday, 2013-06-19 18:05:10]

பிரபுதேவாவுடனான காதல் முறிவுக்கு பின்பு நயன்தாராவின் மவுசு கூடிவிட்டது. இந்த ஆண்டு மட்டும் உதயநிதி ஸ்டாலின், அஜித், ஆர்யா ஆகியோருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதுதவிர கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் தமிழ் - தெலுங்கில் உருவாகும் அனாமிகா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தமிழில் மீண்டும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். ஜெயம் ராஜாவின் இயக்கத்தில், ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்கவிருக்கிறார். தில்லாலங்கிடிக்குப் பிறகு ராஜா - ரவி இணையும் இந்தப் படத்தை கல்பாத்தி அகோரத்தின் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஏற்கெனவே நிமிர்ந்து நில் படத்தில் ரவியின் ஜோடியாக நயன்தாராதான் ஒப்பந்தமானார். ஆனால் சில காரணங்களால் அவருக்குப் பதில் அமலா பால் ஒப்பந்தமானார். இப்போது மீண்டும் இருவரும் இணைகிறார்கள்.



இயக்குநர் மணிரத்தினத்தின் சினிமா குடோனில் தீ விபத்து - முழுவதும் தீக்கிரை
[Wednesday, 2013-06-19 17:58:56]

இயக்குநர் மணிரத்தினத்தின் திரைப்படப் பொருட்கள் தயாரிப்புக் கூடம் தீவிபத்தில் சிக்கிய சேதமடைந்தது. இந்த கிட்டங்கியானது தியாகராய நகர் ஜி.என்.செட்டி சாலையில் உள்ளது. இங்கு நேற்று நள்ளிரவில் தீவிபத்து ஏற்பட்டது. மின்சாரக் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் கிட்டங்கி முழுவதுமாக எரிந்து போய் விட்டது.



காஜல் அகர்வாலின் 28 வது பிறந்தநாள் இன்று
[Wednesday, 2013-06-19 17:53:13]

காஜல் அகர்வால் இன்று தனது 28வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பழனி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் காஜல் அகர்வால். அதன் பின் மோதி விளையாடு, நான் மகான் அல்ல, மாற்றான் ஆகிய படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு வெற்றி நாயகி என்ற பெயரை வாங்கிக் கொடுத்த படம் துப்பாக்கி தான். துப்பாக்கியின் வெற்றிக்கு பிறகு காஜலுக்கு தமிழ் திரையுலகில் மவுசு கூடிவிட்டது. தற்போது மீண்டும் விஜய்யுடன் இணைந்து ஜில்லாவிலும், கார்த்தியுடன் ஆல் இன் ஆல் அழகுராஜா என்ற படத்திலும் நடித்து வருகிறார். சமீபத்தில் இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் கமல் இயக்கி நடிக்கும் படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை கால்ஷீட் பிரச்னையால் ஏற்க மறுத்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.



இந்திய படங்களில் நடிக்க ஆசைப்படுகிறார் ஜாக்கிசான்
[Wednesday, 2013-06-19 17:38:08]

முதன் முறையாக இந்தியாவில் நேற்று தொடங்கிய சீன திரைப்பட திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. டெல்லியில் நடைபெறும் இவ்விழாவை பிரபல நடிகரும், இயக்குனரும், தயாரிப்பாளருமான ஜாக்கிசான் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இந்த திரைப்பட விழாவில் ஜாக்கிசான் இயக்கி நடித்துள்ள 'தி சைனீஸ் ஜோடியாக்' என்ற படம் முதல் படமாக திரையிடப்பட்டது. இதுகுறித்து ஜாக்கிசான் கூறுகையில், நான் இந்தியாவில் 10 வருடங்களுக்கு முன் மல்லிகா ஷெராவத்துடன் 'தி மித்' திரைப்படத்தில் நடித்தேன். அந்த படப்பிடிப்பில் 4 மாதங்கள் இங்கு தங்கி இருந்த போது பல இந்திய படங்களை பார்த்தேன். பாட்டுப் பாடுவதும் ஆடுவதும் எனக்கு மிகவும் பிடிக்கும். நான் நல்ல பாடகர். இந்திய இயக்குனர்கள் நல்ல கதாபாத்திரத்துடன் என்னை அழைப்பார்கள் என்று நம்புகிறேன். நான் நன்றாக சண்டை போடுபவன் மட்டும் அல்ல, நல்ல நடிகனும் கூட. 3 இடியட்ஸ் மட்டும் இல்லாமல் பாலிவிட்டில் பல நல்ல படங்கள் உள்ளன.


Suresh-remax-2013-01-01
RoyaShades-l2011(04-12-11)
Mahesan supramaniyam 031109
AJRwindows22.05.13
TDE_Computers2011
NIRO-DANCE-100213
Ramans2011
INNSYS-20120930
TamilsGuid-191012-2013
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com