Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
June 19, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
தமிழகத்துக்கு காவிரி நீர் வழங்குவதைக் கண்டித்து நடத்தப்பட்ட 'பந்த்'தினால் முடங்கியது கர்நாடகம்!
[Saturday, 2012-10-06 18:29:40]
News Service

தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் இன்று பந்த் நடக்கிறது. பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் இயங்கவில்லை. கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களை தவிர்க்க தமிழகத்தில் இருந்து எந்த வாகனமும் கர்நாடகா செல்ல அனுமதிக்கப்படவில்லை.

  

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பையடுத்து கபினி அணையில் இருந்து தமிழகத்துக்கு காவிரி தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் இன்று மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டத்துக்கு கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்தன. இதற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இன்று காலை 6 மணி முதல் பந்த் தொடங்கியது.

அரசு மற்றும் தனியார் பஸ்கள், லாரி, வேன், ஆட்டோ உள்ளிட்ட எந்த வாகனங்களும் ஓடவில்லை. அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள் இயங்கவில்லை. பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. பேக்கரிகள், ஓட்டல்கள் உள்பட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. வர்த்தக நிறுவனங்களும் செயல்படவில்லை. இதனால், மாநிலம் முழுவதும் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதித்துள்ளது.

அசம்பாவித சம்பவங்களை தடுக்க தமிழக எல்லையில் உள்ள சாம்ராஜ் நகர், மண்டியா, கொள்ளேகால், மைசூர், பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். குறிப்பாக தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. சாலையில் 4 பேருக்கு மேல் சேர்ந்து நின்று பேசக்கூடாது. பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்க கூடாது. அவசர கால சிகிச்சைக்காக திறந்திருக்கும் மருத்துவமனைகளை மூட வலியுறுத்தக் கூடாது என போராட்டக்காரர்களுக்கு கர்நாடக போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பந்த் போராட்டம் காரணமாக தமிழகத்தில் இருந்து எந்த வாகனமும் கர்நாடகா செல்ல அனுமதிக்கப்படவில்லை. எல்லா வாகனங்களும் தமிழக எல்லைகளிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. ஈரோடு மாவட்டம் வழியாக கர்நாடகா செல்லும் பஸ்கள், கடந்த ஒரு வாரமாக தமிழக எல்லையான ஆசனூர் வரை மட்டுமே இயக்கப்படுகின்றன. இன்று பந்த் என்பதால் மைசூர், பெங்களூர் செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் எதுவும் இயக்கப்படவில்லை. தமிழக பதிவெண்கள் கொண்ட சுற்றுலா வாகனங்களும் பண்ணாரி செக்போஸ்ட்டிலேயே திருப்பி அனுப்பப்பட்டன.

திம்பம் மலைப்பாதை வழியாக செல்ல முடியாமல் 8,வது நாளாக சிமென்ட், நிலக்கரி, சமையல் எண்ணெய் ஏற்றிய லாரிகள் பண்ணாரியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இரு மாநில எல்லையிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விளைந்த மல்லிகை உள்ளிட்ட பூக்களை வாங்க கர்நாடக வியாபாரிகள் யாரும் வரவில்லை. கூடலூர் வழியாக கர்நாடகா செல்லும் அரசு மற்றும் தனியார் வாகனங்களும் கக்கநல்லா சோதனை சாவடியிலேயே நிறுத்தப்பட்டன.

கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் மற்றும் கேரளாவுக்கு காய்கறி லாரிகள் வரவில்லை. தமிழகத்தில் இருந்து கர்நாடகாவின் பல பகுதிகளுக்கு தினமும் சுமார் 500 அரசு பஸ்கள் இயக்கப்படும். அதேபோல கர்நாடகாவில் இருந்து 300,க்கும் அதிகமாக அந்த மாநில பஸ்கள் தமிழகத்துக்கு இயக்கப்படும். பந்த் காரணமாக இரு மாநில அரசு பஸ்களும் இன்று இயக்கப்படவில்லை. ஒசூர் இஎஸ்ஐ ஆஸ்பத்திரி அருகே போலீசார் வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் எல்லையோர பகுதியில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் கன்னட அமைப்பினர் நான்கு வழிப்பாதையின் இரண்டு பக்கமும் நடுரோட்டில் டயர்களை தீ வைத்து எரித்தனர். சென்னை கோயம்பேட்டில் இருந்து பெங்களூருக்கு தினமும் 35 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பந்த் காரணமாக பஸ்களில் பயணிகள் கூட்டம் குறைவாகவே இருந்தது. இந்த பஸ்கள் ஒசூர் அருகே எல்லையில் நிறுத்தப்பட்டன. சென்னையில் இருந்து கர்நாடகாவுக்கு ரயில் போக்குவரத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ரயில்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்கு சென்றனர். பந்த் காரணமாக தமிழக, கர்நாடக எல்லை பகுதிகளில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எல்லை பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

உத்தர்காண்ட் வெள்ளத்தில் ஆயிரக்கணக்கானோர் பலி - சுஷ்மா சுவராஜ் அதிர்ச்சித் தகவல்!
[Wednesday, 2013-06-19 18:01:36]

இமயமலையை ஒட்டி அமைந்துள்ள இமாச்சல் பிரதேசம், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் பருவமழை பெய்து வருகிறது. இதில் உத்தரகாண்ட் மாநிலத்தின் கேதர்நாத், பத்ரிநாத், ஜொஷிமாத் ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய கடுமையான மழை கொட்டி வருகிறது. இந்த பேய் மழையினால் நிலச்சரிவும் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டு 100-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். உத்தரகாண்டில் ஏற்பட்ட சேதம் குறித்து பாரதீய ஜனதா கட்சியின் மக்களவை எதிர்கட்சித்தலைவர் சுஷ்மா சுவராஜ், மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேவுடன் நேற்றிரவு டெலிபோனில் தொடர்புகொண்டு பேசினார். அதுகுறித்து சுஷ்மா கூறியிருப்பதாவது-



இலங்கைக்குப் படையெடுக்கும் போராட்டத்தைக் கைவிட்டனர் இராமேஸ்வரம் மீனவர்கள்!
[Wednesday, 2013-06-19 17:54:20]

இலங்கை நோக்கி 1,000 படகுகளில் வெள்ளைக்கொடி கட்டி செல்லும் போராட்டத்தை, ராமேஸ்வரம் மீனவர்கள் வாபஸ் பெற்றனர். இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 57 பேரை விடுவிக்க கோரி, ஜூன் 22ல் ராமேஸ்வரத்தில் இருந்து 1,000 படகுகளில் வெள்ளைக்கொடி கட்டி, இலங்கைக்கு செல்லும் போராட்டத்தை மீனவர் சங்கத்தினர் அறிவித்திருந்தனர். இந்நிலையில் ராமநாதபுரம் கலெக்டர் நந்தகுமார் தலைமையில், மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடந்தது. "விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக, கலெக்டர் உறுதி அளித்ததை அடுத்து, போராட்டத்தை வாபஸ் பெற்றதாக' மீனவர் சங்க தலைவர் போஸ் தெரிவித்தார்.



இலங்கைக் கடற்படையை கண்டித்து செப்ரெம்பரில் மாநாடு - பாஜக அறிவிப்பு!
[Wednesday, 2013-06-19 17:51:16]

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்கி வருவதைக் கண்டித்து, மீனவர்களுக்கு ஆதரவாக தமிழக கடற்கரையோர மாவட்டங்களில் வரும் செப்டம்பரில் பாஜக மாநாடு நடத்தவுள்ளது என்று கட்சியின் மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். வேலூரில் பொன். ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் மேலும் கூறியதாவது: சேது சமுத்திர திட்டம் தமிழகத்துக்கு தேவையான திட்டம்தான். துரதிருஷ்டவசமாக அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.



கனிமொழிக்காக அன்புமணியிடம் தூது போனார் ஸ்டாலின் - சோனியாவுடன் திமுக எம்.பிக்கள் பேச்சு!
[Wednesday, 2013-06-19 17:18:19]

தமிழ்நாட்டில் இருந்து பாராளுமன்ற மேல்சபைக்கு 6 எம்.பி.க்களை தேர்வு செய்வதற்காக வருகிற 27-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி, தி.மு.க., தே.மு.தி.க. இடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. ஒரு எம்.பி.யை தேர்ந்து எடுக்க 34 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை. சட்டசபையில் அ.தி.மு.க.கூட்டணிக்கு 170 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.எனவே அ.தி.மு.க. சார்பில் நிறுத்தப்பட்டுள்ள டாக்டர் மைத்ரேயன்,கே.ஆர்.அர்ஜூனன், த.ரத்தினவேல், இரா.லட்சுமணன் மற்றும் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த டி.ராஜா ஆகிய 5 பேரும் தலா 34 ஓட்டுகள் வாங்கி வெற்றி பெறுவது உறுதி.



பீகாரில் நம்பிக்கை வாக்கெடுப்பில் தப்பியது நிதிஷ்குமார் அரசு!
[Wednesday, 2013-06-19 17:08:39]

பீகார் சட்டப்பேரவையில் இன்று நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தள கட்சி வெற்றி பெற்றுள்ளது. பாஜவுடனான கூட்டணியை ஐக்கிய ஜனதா தளம் முறித்துக் கொண்ட நிலையில், இன்று பீகார் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பைக் கொண்டு வந்தார் முதல்வர் நிதிஷ் குமார்.நம்பிக்கை வாக்கெடுப்பு துவங்கியதும், பாஜக உறுப்பினர்கள் வெளி நடப்பு செய்ததை அடுத்து, 216 வாக்குகள் பெற்று, நிதிஷ்குமார் அரசு வெற்றி பெற்றது.



காஷ்மீர் முதல்வரையும் மத்திய அமைச்சரையும் விரட்டியடித்த பண்டிட்கள்!
[Wednesday, 2013-06-19 07:19:46]

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், சில ஆண்டுகளுக்கு முன் வரை, சகல பெருமையுடன் வாழ்ந்த பண்டிட் சமுதாயத்தினரை, பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் கைகோர்த்த உள்ளூர் சக்திகள் வெளியேற்றி விட்டன. அங்கு, பிராமணர்கள், பண்டிட்டுகள் என, அழைக்கப்படுகின்றனர். அகதிகள் முகாம்களில் வசிக்கும் அவர்கள், தங்களின் வழக்கமான, பூஜை, புனஸ்காரங்களை செய்யத் தவறுவதில்லை. நேற்று முன்தினம், துலாமல்லா என்ற இடத்தில் உள்ள, கிர் பவானி கோவிலில் பூஜை செய்து கொண்டிருந்த போது, அங்கு வந்த, மாநில முதல்வர், உமர் அப்துல்லாவை விரட்டி அடித்தனர்.



"மீண்டெழும் பாண்டியர் வரலாறு' நூலுக்கு தமிழக அரசு தடை - கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது என்று எழுத்தாளர்கள் கொதிப்பு!
[Wednesday, 2013-06-19 07:14:16]

பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் எனக் கூறி, "மீண்டெழும் பாண்டியர் வரலாறு' என்ற புத்தகத்தை, தமிழக அரசு தடை செய்துள்ளது, கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது; தடையை நீக்க வேண்டும்' என, எழுத்தாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செந்தில் மல்லர் என்பவர் எழுதிய, "மீண்டெழும் பாண்டியர் வரலாறு' என்ற புத்தகம், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் எனக் கூறி, அப்புத்தகத்தை வெளியிட, தமிழக அரசு தடை விதித்துள்ளது. இப் புத்தகத்திற்கு தடை செய்திருப்பது, தமிழகத்தில் உள்ள புத்தக பிரியர்களுக்கு, பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.



மன்மோகன்சிங்கின் குடுகுடு அமைச்சரவை!
[Wednesday, 2013-06-19 07:07:49]

எல்லா கட்சிகளும், இளைஞர் அணி, இளைஞர் பாசறை, புதிய உறுப்பினர் சேர்க்கை என "இள ரத்தத்தை' பாய்ச்சிக்கொண்டு இருக்கும் போது, மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான அரசில், வயதானவர்கள் நிறைய இடம் பெற்று, "தள்ளாடி'க் கொண்டு இருக்கிறது. கேபினட் அமைச்சர்களில் பிரதமர் மன்மோகன் சிங் உள்பட வயதானவர்களே அதிகம். இணை அமைச்சர்கள் மற்றும் தனிப்பொறுப்பு இணை அமைச்சர்கள் பட்டியலில் மட்டுமே, சற்று வயது குறைவானவர்கள் தென்படுகின்றனர்.கேபினட்டில் அதிக வயதானவராக தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்துறை அமைச்சர் சிஷ்ராம் ஓலா இருக்கிறார். இவரது வயது 86.



வரலாறு காணாத மழையால் வடமாநிலங்கள் தவிப்பு - 131 பேர் பலி!
[Wednesday, 2013-06-19 07:02:48]

தீவிரமடைந்து வரும் தென்மேற்கு பருவமழை காரணமாக வடமாநிலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆங்காங்கு ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம், நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு போன்றவற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 131 ஆக உயர்ந்துள்ளது. வெள்ளம் காரணமாக புனித தலங்களில் மொத்தம் 73,000 பேர் சிக்கியுள்ளனர். 500-க்கும் மேற்பட்ட யாத்ரீகர்களைக் காணவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக உத்தரகண்ட், இமாசலப்பிரதேசம், ஹரியாணா உள்ளிட்ட வடமாநிலங்களில் இதன் பாதிப்பு அதிகமாக உள்ளது.



ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் கோளாறு - ஓடுபாதையில் கண்டுபிடிக்கப்பட்டதால் 182 பயணிகளும் தப்பினர்!
[Wednesday, 2013-06-19 06:48:41]

சென்னையில் இருந்து கொழும்பு செல்லும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் 182 பயணிகளுடன் நேற்று மாலை 5.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. விமானம் ஓடுபாதையில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுபிடித்தார். உடனே விமானத்தை அங்கேயே நிறுத்திய விமானி, விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு தெரிவித்தார். இதையடுத்து விமானத்தை இயக்க வேண்டாம். புறப்பட்ட இடத்திலேயே நிறுத்தும்படி கட்டுப்பாட்டு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.



வெள்ளத்தில் சிக்கிய இமாச்சல பிரதேச முதல்வர் 60 மணிநேரப் போராட்டத்தின் பின்னர் ஹெலி மூலம் மீட்பு!
[Tuesday, 2013-06-18 19:01:41]

வெள்ளத்தில் சிக்கிய இமாச்சல பிரதேச மாநில முதல்வர் வீரபத்திரசிங் 60 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டார். இவருடன் தவித்த 10 பேரும் பத்திரமாக மீட்டு கொண்டு வரப்பட்டனர். வட மாநிலங்களில் தற்போது பருவ மழை வெளுத்து வாங்கி வருகிறது. பஞ்சாப், அரியானா, குஜராத், உத்தர்கண்ட், டில்லி, மும்பை உள்ளிட்ட பகுதிகளில் கடும் மழை பெய்தது. இதில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 60 க்கும் மேற்பட்டோர் பலியாயினர். தொடர்ந்து இங்கு மீட்பு பணிகள் நடந்து வருகிறது. கங்கை, யமுனா நதியில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.



வெலிங்டன் இராணுவ முகாமை முற்றுகையிட்ட 400 பேர் கைது!
[Tuesday, 2013-06-18 18:56:45]

ஊட்டி வெலிங்டன் ராணுவ முகாமை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்திய 15க்கும் மேற்பட்ட அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 400 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் சட்டக்கல்லூரி மற்றும் கல்லூரி மாணவிகள் 15 பேரும் அடங்குவர்.இந்நிலையில், இதன் அடுத்தக் கட்டப் போராட்டம் குறித்து அனைத்துக் கட்சிக் குழுவுடன் கூடி விவாதிக்கப்பட்டு முடிவு செய்யப்பட்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இது குறித்து, பெரியார் தி.க.வின் ராமகிருஷ்ணன் கூறுகையில்,காங்கிரஸ் கட்சி அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்.



இறந்துபோன அர்ச்சகர் மறுநாள் உயிருடன் எழுந்தார் - இராமநாதபுரத்தில் பரபரப்பு!
[Tuesday, 2013-06-18 18:42:29]

ராமநாதபுரம் அருகே இறந்து போனதாகக் கருதப்பட்ட ஒருவர் உயிர் பிழைத்து மீண்டது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினம் சிருங்கேரி சங்கரமடம் வடக்கு தெருவில் வசித்து வருபவர் ரமணா ஐயர் என்பவரின் மகன் ரவி சாஸ்திரி(45).இவர், தேவிப்பட்டனம் திலகேஸ்வர சுவாமி கோயிலில் அர்ச்சகராக உள்ளார். கடந்த 13 ம் தேதி இதயக் கோளாறு காரணமாக இவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தார். இந்நிலையில் இதயக் கோளாறு காரணமாக 16ம் தேதி உயிரிழந்தார் என்று அறிவிக்கப்பட்டது.



காங்கிரசின் ஆதரவை நாடுகிறது தேமுதிக - எம்எல்ஏக்களை ஞானதேசிகனிடம் தூது அனுப்பினார் விஜயகாந்த்!
[Tuesday, 2013-06-18 18:38:18]

தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு வருகிற 27 ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. தேமுதிக சார்பில் ஏ.ஆர் இளங்கோவன் வேட்பாளராக நிறூத்தப்பட்டுள்ளார்.இந் நிலையில் இன்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகனை சத்தியமூர்த்தி பவனில் தே.மு.தி.கவை சேர்ந்த அனகை முருகேசன், பாஸ்கர், அருண் சுப்பிரமணியன், முத்துக்குமார், மனோகர் ஆகிய 5 எம்.எல்.ஏக்கள் சந்தித்து மாநிலங்கள தேர்தலில் தங்கள் வேட்பாளருக்கு ஆதரவு தரும்படி கோரிக்கை வைத்தனர்.அவர்களிடம் மேலிடத்தில் கேட்டு முடிவைத் தெரிவி்ப்பதாக ஞானதேசிகன் கூறி உள்ளதாக கூறப்பட்டுகிறது.



சஞ்சய் தத் ஒருமாத சிறைவாசம் நிறைவு - இனிமேல் தான் உண்மையான சோதனை!
[Tuesday, 2013-06-18 18:36:52]

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், சிறையில் அடைக்கப்பட்டு, ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து, கோர்ட் உத்தரவின் படி, இனி அவருக்கு வீட்டிலிருந்து உணவு, மின் விசிறி, படுக்கை ஆகியவை வழங்கப்பட மாட்டாது. மாதம் ஒரு முறை அவரது உறவினர்கள் மட்டுமே அவரை சிறையில் சந்திக்க முடியும்.மும்பை தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களின் போது, ஆயுதம் வைத்திருந்த குற்றத்திற்காக, நடிகர் சஞ்சய் தத்துக்கு, ஐந்தாண்டு சிறை தண்டனை வழங்கி, மும்பை, "தடா' கோர்ட் தீர்ப்பளித்தது. ஏற்கனவே, ஒன்றரை ஆண்டு சிறை வாசத்தை முடித்து விட்டதால், கடந்த மாதம் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட சஞ்சய், மேலும், மூன்றரை ஆண்டு சிறையில் இருக்க கட்டாயம் ஏற்பட்டுள்ளது.



இலங்கை தமிழர்கள் அமைதியாக வாழ்வதற்கு அனைத்து முயற்சிகளையும் இந்தியா மேற்கொள்கிறது! - கருணாநிதிக்கு மன்மோகன் கடிதம்
[Tuesday, 2013-06-18 07:09:19]

இலங்கை தமிழர்கள் அமைதியாக வாழ்வதற்கான வழிவகைகள் காணப்படும். இந்த இலக்கை அடைவதற்கான எல்லா முயற்சிகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம் என்று திமுக தலைவர் கருணாநிதிக்கு எழுதிய கடிதத்தில் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.இலங்கை தமிழர்களின் உரிமைகள், வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் விஷயத்தில் தலையிட வேண்டும். இலங்கை தமிழர்களுக்கு அதிகாரத்தை பெற்றுத்தரும் 13வது அரசியல் சட்ட திருத்தத்தை ரத்து செய்யும் முயற்சியை தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு திமுக தலைவர் கருணாநிதி கடந்த 9ம் தேதி எழுதிய கடிதத்தில் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதற்கு பிரதமர் மன்மோகன் சிங் பதில் அனுப்பியுள்ளார்.



சுதர்சன நாச்சியப்பன் உள்ளிட்ட 8 பேருக்கு மத்திய அமைச்சர் பதவி!
[Tuesday, 2013-06-18 07:01:22]

மத்திய அமைச்சரவை நேற்று மாற்றியமைக்கப்பட்டது. புதிதாக 8 அமைச்சர்கள் பதவியேற்றனர். தமிழகத்தை சேர்ந்த சுதர்சன நாச்சியப்பன் இணை அமைச்சரானார். ஜனாதிபதி மாளிகையில் நேற்று மாலையில் நடந்த நிகழ்ச்சியில் ஆஸ்கர் பெர்னாண்டஸ், கிரிஜா வியாஸ், தமிழகத்தை சேர்ந்த சுதர்சன நாச்சியப்பன் உட்பட 8 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்றனர். அவர்களுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.புதிய அமைச்சர்களில் ஆஸ்கர் பெர்னாண்டஸ், கிரிஜா வியாஸ், சிஸ்ராம் ஓலா, கே.எஸ்.ராவ் ஆகியோர் கேபினட் அமைச்சர்கள். சுதர்சன நாச்சியப்பன், ஜே.டி. சீலம், மாணிக்ராவ் காவிட், சந்தோஷ் சவுத்ரி ஆகியோர் இணை அமைச்சர்கள்.



இலங்கைப் படையினருக்கு பயிற்சி அளிப்பதற்கு எதிராக இன்று போராட்டம் - வெலிங்டனில் இராணுவத்தினர், பொலிசார் குவிப்பு!
[Tuesday, 2013-06-18 06:56:58]

இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பதை எதிர்த்து குன்னூர் வெலிங்டன் ராணுவ முகாமை பல்வேறு அரசியல் கட்சிகள் இன்று முற்றுகையிடப்போவதாக அறிவித்துள்ளன. இதையடுத்து, ராணுவம் மற்றும் போலீசாரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டம் குன்னூர் அடுத்த வெலிங்டன் கன்டோன்மென்ட் பகுதியில் ராணுவ முகாம், ராணுவ பயிற்சி மையம் உள்ளது. இந்த மையத்தில் கடந்த 27ம் தேதி முதல் இலங்கை ராணுவ அதிகாரிகள் விங் கமாண்டர் எம்.எஸ். பண்டார தசநாயக, மேஜர் சி.எஸ்.ஹரிஷ்சந்திரா ஹெட்டியராச்சிகே ஆகியோருக்கு இந்திய ராணுவத்தினர் பயிற்சி அளித்து வருகின்றனர்.



வற்றிய மேட்டூர் அணைக்குள் தெரியும் கோவிலுக்குள் புராதன காலப் புதையல்?
[Tuesday, 2013-06-18 06:51:04]

மேட்டூர் அணை கட்டப்பட்ட போது மேச்சேரி அருகே இருந்த சோழப்பாடி வீரபத்திரன் கோயில் நீரில் மூழ்கியது. இதனால் அப்பகுதியில் வசித்த மக்கள், அங்கிருந்த கோயில் சிலைகளை எடுத்து சென்று, தற்போது தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சோழப்பாடியில் வைத்து புதிய கோயில்களை கட்டினர். மேட்டூர் நீர்தேக்கம் தற்போது வறண்டுள்ள நிலையில், கடந்த 80 ஆண்டுகளாக நீரில் மூழ்கியிருந்த இந்த கோயில் வெளியே தெரிகிறது. 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோயில் சுட்ட செங்கற்கள் மற்றும் சுண்ணாம்பு கலவையால், நேர்த்தியான வேலைப்பாடுகளுடன் முன் மண்டபம், நுழைவு வாயில், உள் மண்டபம், மூலஸ்தானம் ஆகிய நான்கு நிலைகளோடு அமைக்கப்பட்டுள்ளது.



சர்ச்சையில் சிக்கினார் ஷாருக்கான் - குழந்தையின் பாலினத்தை சட்டவிரோதமாக அறிந்தாரா?
[Tuesday, 2013-06-18 06:44:03]

பாலிவுட் நடிகர் ஷாருக் கான் மீது, மகாராஷ்டிரா மாநில கதிரியக்கவியல் நிபுணர்கள் சங்கத்தின் சார்பில், மாநில சுகாதாரத் துறை அமைச்சரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக் கான், அண்மையில், தான் மூன்றுவது முறையாக தந்தையாகப் போவதாகக் கூறி, மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். ஷாருக் கான் மற்றும் அவரது மனைவி கவுரி ஆகியோர், வாடகைத் தாய் உதவியுடன், தங்களின் மூன்றாவது குழந்தையை பெற்றெடுக்கப் போவதாக, ஊடகங்களில் செய்திகள் வெளியாயின. அந்தக் குழந்தை, ஜூலை மாதம், முதல் வாரத்தில் பிறக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. அப்போது, தான் ஒரு ஆண் குழந்தைக்கு தந்தை ஆகப் போவதாக ஷாருக் கான், தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.


Suresh-remax-2013-01-01
TamilsGuid-191012-2013
RoyaShades-l2011(04-12-11)
NIRO-DANCE-100213
Ramans2011
Mahesan supramaniyam 031109
TDE_Computers2011
INNSYS-20120930
AJRwindows22.05.13
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com