Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 21, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
ஜெகத் ஜெயசூரியவின் திமிர் பேச்சுக்கு பா.ம.க நிறுவுனர் ராமதாஸ் கண்டனம் தெரிவிப்பு!
[Thursday, 2012-10-04 22:20:27]
News Service

இலங்கை சிறப்புப் படையணியைச் சேர்ந்த 45 உயரதிகாரிகள் வரும் டிசம்பர் மாதம் பயிற்சிக்காக இந்தியா வர இருப்பதாகவும் முடிந்தால் அவர்களை தமிழக அரசியல்வாதிகள் தடுத்து நிறுத்திக்கொள்ளட்டும் என்று இராணுவத்தளபதி ஜெகத் ஜெயசூரிய தெரிவித்த கருத்துக்கு பா.ம.க நிறுவுனர் ராமதாஸ் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

  

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

இலங்கை ஜனாதிபதியின் சகோதரரும் அமைச்சருமான பசில் ராஜபக்ச நேற்று கொழும்பில் இந்திய பத்திரிகையாளர்களிடம் பேசும் போது, இலங்கை இராணுவ வீரர்களுக்கு இந்தியாவில் தான் பயிற்சி அளிக்கப்படும் என்றும், இதை எவராலும் தடுக்க முடியாது என்றும் கூறியிருந்தார்.

இதனால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகுவதற்கு முன்பாகவே இலங்கையின் அநுராதபுரத்தில் நடைபெற்ற இராணுவத்தின் 63ஆவது ஆண்டு விழாவில் பேசிய அந்நாட்டு இராணுவத் தளபதி ஜெகத் ஜெயசூரிய, இலங்கை இராணுவ வீரர்கள் சுமார் 800 பேர் இந்தியாவில் தற்போது பயிற்சி பெற்று வருகின்றனர் என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டிருக்கின்றார்.

அது மட்டுமின்றி, இராணுவ ஒத்துழைப்பைப் பொறுத்தவரையில் இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையில் நெருங்கிய புரிந்துணர்வு நிலவுகின்றது. தமிழக அரசியல்வாதிகள் என்னதான் எதிர்ப்புக் குரல் எழுப்பினாலும் இந்த ஒத்துழைப்பைத் தடுக்க முடியாது. தமிழக அரசியல்வாதிகளுக்கு நாங்களே தகவல் தருகிறோம். வரும் டிசம்பர் மாதத்தில் இலங்கை சிறப்புப் படையணியைச் சேர்ந்த 45 உயரதிகாரிகள் இந்தியா வருகின்றனர்.

முடிந்தால் தமிழக தலைவர்கள் அவர்களைத் தடுத்து நிறுத்திக் கொள்ளட்டும் என்று திமிருடனும் அகம்பாவத்துடனும் பேசியிருக்கின்றார். இலங்கைப் படைத்தளபதியின் இந்தப் பேச்சு கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

இலங்கைப் போரின் போது ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் இந்த ஜெயசுரிய. இதற்காகவே அமெரிக்காவிலும் பல ஐரோப்பிய நாடுகளிலும் இவர் நுழைவதற்கு தடைவிதிக்கப்பட்டிருக்கின்றது.

தமிழர்களை இனப்படுகொலை செய்ததற்காக கைது செய்யப்பட்டு, போர்க்குற்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்த வேண்டிய ஒரு கொடூரன், இன்று தமிழக அரசியல்வாதிகளுக்கு சவால் விடுக்குமளவிற்கு பேசத் துணிந்திருப்பதற்கு காரணம், நட்பு நாடு என்ற போர்வையில் இலங்கை அரசுக்கு இந்தியா அளித்து வரும் ஆதரவுதான்.

மத்தியில் ஆட்சி அமைப்பதில் தமிழகம் தொடர்ந்தும் முக்கிய பங்காற்றி வரும் நிலையில், "தமிழகத் தலைவர்கள் சொல்வதை இந்திய அரசு கேட்காது, நாங்கள் சொல்வதைத் தான் கேட்கும் என்று ஒரு சுண்டைக்காய் நாட்டின் தளபதி சொல்வதைக் கேட்கும் போது, இந்தியா ராஜபக்சவின் காலணி ஆதிக்கத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றதா? என்ற வினா எழுகின்றது.

இலங்கைப் படைத்தளபதியின் இந்தப் பேச்சு தமிழகத் தலைவர்களுக்கு மட்டுமின்றி இந்திய இறையாண்மைக்கும் விடப்பட்ட சவாலாகும்.

இலங்கைப் பிரச்சினையில் தமிழகத்தின் குரலை மத்திய அரசு தொடர்ந்தும் புறக்கணித்து வருகிறது. தமிழ் மக்களின் உணர்வுகளையும் மதிப்பதில்லை. பிரதமரை விமர்சித்து அமெரிக்காவின் டைம் இதழ் கட்டுரை எழுதியதற்காக கண்டனம் தெரிவித்த மத்திய அரசு, இலங்கை நாளிதழ் ஒன்றில் நமது பிரதமரையும் தமிழக முதல்வரையும் மிகவும் வக்கிரமான முறையில் சித்தரித்து, கேலிச் சித்திரம் வெளியிடப்பட்ட போது, இதைக் கண்டு கொள்ள வில்லை.

இந்திய அரசின் இந்த இலங்கை சார்புப் போக்கு தான் தமிழகத் தலைவர்களை எப்படி வேண்டுமானாலும் பேசலாம். அதைக் கண்டு கொள்ளாது என்று நினைக்கும் அளவுக்கு இலங்கை ஆட்சியாளர்களுக்கும் இராணுவத் தளபதிகளுக்கும் தைரியத்தைத் தந்துள்ளது.

இந்தப் போக்கு மிகவும் ஆபத்தானது. இதை அனுமதிக்கக் கூடாது. தமிழ்நாடு இந்தியாவின் ஒரு பகுதி எனக் கருதினால் இலங்கை அமைச்சர்கள் மற்றும் இராணுவத் தளபதியின் பேச்சுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும். அதுமட்டுமின்றி இந்தியாவில் பயிற்சி பெற்று வருவதாகக் கூறப்படும் சிங்கள வீரர்கள் 800 பேரையும் இலங்கைக்குத் திருப்பி அனுப்ப வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

சிறைக் கைதிகளுடன் தொலைபேசி பேச்சு எதற்கு? 4ம் மாடியில் வைத்து சிவசக்தி ஆனந்தனிம் விசாரணை!
[Tuesday, 2013-05-21 16:10:58]

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கொழும்பில் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று (21) காலை நான்காம் மாடிக்கு அழைக்கப்பட்டு இரண்டு மணி நேரத்துக்கும் அதிகமாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். வவுனியா சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த கைதிகள் அவருக்கு எடுத்த தொலைபேசி அழைப்புக்கள் தொடர்பாகவே அவர் மீது குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர். குற்றப்புலனாய்வுப் பிரிவின் விசாரணைக்கு வருமாறு வவுனியா பொலிஸ் நிலையம் ஊடாக அழைப்பாணை அனுப்பப்பட்டதையடுத்தே சிவசத்தி ஆனந்தன் இன்று (21) காலை 10.00 மணிக்கு கொழும்பிலுள்ள பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குச் சென்றிருந்தார்.



முஸ்லிம் மக்களை ஒடுக்குமுறைக்கு உட்படுத்துவதில் இலங்கை மும்முரம் - அமெரிக்கா!
[Tuesday, 2013-05-21 16:04:56]

இலங்கையில் முஸ்லிம் மக்கள் ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது. 2012ம் ஆண்டுக்கான அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் சர்வதேச மதச் சுதந்திர அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. கிறிஸ்தவ தேவாயலங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க தூதரகம் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளது. குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக விசாரணை நடாத்தி தண்டனை விதிக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



தனிநபர் பிரேரணை மூலம் 13ம் திருத்தத்தை நீக்க நடவடிக்கை!
[Tuesday, 2013-05-21 16:00:03]

13ம் திருத்தச் சட்டம் மற்றும் மாகாண சபை முறையை இரத்து செய்யுமாறு கோரி பாராளுமன்றில் தனிநபர் பிரேரணை ஒன்றை முன்வைக்கவுள்ளதாக ஹெல உறுமய கட்சியின் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். குறித்த பிரேரணை இந்த வாரம் பாராளுமன்றில் சமர்பிக்கப்படும் என அவர் தெரிவித்தார். 13ம் திருத்தச் சட்டமும் மாகாண சபை முறையும் பாராளுமன்ற முறைக்கு மாறானவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தியாவில் மாநிலம் ஒன்று அதிகாரத்தை மீறி செயற்பட்டால் அம்மாநிலத்தின் அதிகாரத்தை மத்திய அரசு பொறுப்பேற்க முடியும்.



படைப் புலனாய்வாளர்களினால் முல்லைத்தீவு வாக்காளர் பட்டியல் சேகரிப்பு!
[Tuesday, 2013-05-21 15:52:52]

2013 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர்ப் பட்டியலை தயாரிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள 2012 ஆம் ஆண்டுக்குரிய வாக்காளர் பட்டியல் முல்லைத்தீவு மாவட்டக் கிராம சேவகர்களிடம் இருந்து படைப் புலனாய்வாளர்கள் பெற்று வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. தற்போது நாடளாவிய ரீதியில் 2013 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர்ப் பட்டியல் தயாரிப்பு நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. இதற்கான 2012 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியல் ஒவ்வொரு கிராம சேவையாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோரக் கிராம சேவகர் பிரிவுகள் மற்றும் நகரப் பகுதிக் கிராம சேவகர் பிரிவுகளில் இவ்வாறு வழங்கப்பட்ட வாக்காளர் பெயர்ப் பட்டியலை இராணுவ முகாம்களில் இருந்து வந்து தம்மைப் புலனாய்வாளர்கள் என அறிமுகப்படுத்துபவர்கள் பெற்றுச் செல்கின்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.



கச்சதீவை இலங்கையிடமிருந்து மீட்க மன்மோகன் சிங்கிற்கு கடிதம் அனுப்பினார் தமிழக முதல்வர்!
[Tuesday, 2013-05-21 15:42:57]

கச்சதீவை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதலமைச்சர் ஜெயலலிதா திங்கட்கிழமை அனுப்பிவைத்துள்ள அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கச்சதீவை இலங்கையிடம் இருந்து மீண்டும் இந்தியாவுக்கு மீட்பது தொடர்பாக கடந்த 3-5-2013 அன்று தமிழக சட்டசபையில் கொண்டு வந்து ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பற்றி உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். அந்த தீர்மான நகலை இந்த கடிதத்துடன் இணைத்துள்ளேன்.



ஈழத்தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் இந்தியாவிற்கு தோல்வி - ஏற்றுக்கொண்டார் இந்திய உயர்ஸ்தானிகர்! Top News
[Tuesday, 2013-05-21 15:36:16]

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் இந்தியா தோல்வி கண்டுள்ளது எனவும் இதனை தான் ஒப்புக்கொள்வதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்தா, தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரிடம் ஒப்புக் கொண்டுள்ளார். நேற்று கொழும்பு ஹலதாரி ஹோட்டலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் இந்திய உயர் ஸ்தானிகரக்கு விசேட விருந்துபசாரமொன்று வழங்கப்பட்டது. அதில் இரு தரப்பினருக்குமிடையெ இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்திய உயர்ஸ்தானிகர் மேற்கண்டவாறு குறிப்பிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.



இந்திய இராணுவத்தை விரட்டவே புலிகளுக்கு பிரேமதாஸ ஆயுதங்களை வழங்கினார் - சஜித் விளக்கம்!
[Tuesday, 2013-05-21 09:49:06]

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸா ஆயுதங்களை கொடுத்தது ஏன்? என்று ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதியின் மகனுமான சஜித் பிரேமதாஸ தெளிவுப்படுத்தியுள்ளார். யுத்தம் நிறைவடைந்து 4 ஆண்டுகள் பூர்த்தியடைந்ததை கொண்டாடும் வகையில் காலி முகத்திடலில் சனிக்கிழமை நடைபெற்ற வைபவத்தில் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னாள் ஜனாதிபதி புலிகளுக்கு ஆயுதம் கொடுத்தார். அத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலமாக நாட்டைபிரிப்பதற்கு முயன்றனர் என்று குற்றஞ்சாட்டினார்.



இராணுவத்தின் காணி அபகரிப்புக்கு எதிரான 1478 ரிட் மனுக்கள் மீதான விசாரணை 27 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!
[Tuesday, 2013-05-21 09:38:00]

யாழ்ப்பாணத்தில் தமக்கு சொந்தமான காணிகளை இழந்துள்ள 1,474 பேர் தாக்கல் செய்துள்ள ரிட் மனுக்கள் மீதான விசாரணையை மேன்முறையீட்டு நீதிமன்றம் மே மாதம் 27 ஆம் திகதி வரையிலும் ஒத்திவைத்துள்ளது. தமக்கு சொந்தமான 6381 ஏக்கருக்கு கூடுதலான் பாரம்பரிய தனியார் நிலங்களை சுவீகரிக்க அரசாங்கம் எடுக்கு நடவடிக்கைகளை எதிர்த்தே கடந்த 15 ஆம் திகதி புதன்கிழமை இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் நீதியரசர் கே. ஸ்ரீஸ்கந்தராஜா முன்னிலையில் நேற்று ஆராயப்பட்டன. 1474 ரிட் மனுக்களையும் ஏற்கவேண்டும் என்பதற்கான ஆதாரங்களை மே மாதம் 27 ஆம் திகதி முன்வைக்குமாறு பணித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் அன்றைய தினத்திற்கே வழக்கையும் ஒத்திவைத்தது.



நிறைவேற்று அதிகாரம் உள்ளபோது வடக்கு தேர்தல் பற்றி அச்சம் கொள்ளவேண்டியதில்லை! - மல்வத்து பௌத்த பீடம் அரசுக்கு ஆலோசனை!
[Tuesday, 2013-05-21 09:34:47]

இலங்கையில் எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில் நடத்தப்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் வடக்கு மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னதாக மாகாணசபைகளுக்கு உள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை ஒழித்துவிடுவதற்கான முஸ்தீபுகள் நடப்பதாக ஆளுந்தரப்பு தகவல்கள் கூறுகின்றன. இந்த நிலைமையில், தேர்தலுக்கு முன்னதாக அந்த அதிகாரங்களை ஒழிப்பதில் அரசாங்கம் அக்கறை செலுத்தத் தேவையில்லை என்று நாட்டில் செல்வாக்கு மிக்க மல்வத்து பௌத்த பீடம் அரசாங்கத்துக்கு ஆலோசனை கூறியுள்ளது.



பாடுமீன் சமூக அபிவிருத்திச் சங்கம் பிரான்ஸ் - இலவசபாட வகுப்புக்களை நடாத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
[Tuesday, 2013-05-21 09:30:17]

பிரான்ஸ் நாட்டை தளமாக கொண்டு செயற்படும் பாடுமீன் சமூக அபிவிருத்திச் சங்கம் பின் தங்கிய பகுதிகளில் கல்வி கற்கும் மாணவர்களில கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கில் இலவசபாட வகுப்புக்களை நடாத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.



13 ஆவது திருத்த சட்டத்தை ரத்துச் செய்யும் அதிகாரம் அரசாங்கத்திற்கு கிடையாது: வாசுதேவ, திஸ்ஸ விதாரண எச்சரிக்கை!
[Tuesday, 2013-05-21 09:27:37]

அரசியல் அமைப்பில் காணப்படுகின்ற 13 ஆவது திருத்தச்சட்டத்தை ரத்துச் செய்யும் தார்மீக அதிகாரம் அரசாங்கத்திற்கோ அதனைச் சார்ந்த பங்காளிக் கட்சிகளுக்கோ கிடையாது. அவ்வாறானதொரு நடவடிக்கை எத்தரப்பில் முன்னெடுக்கப்பட்டாலும் அதனை தோல்வியடையச் செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம் என்று அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார மற்றும் திஸ்ஸ விதாரண ஆகியோர் எச்சரித்துள்ளனர். மாகாணசபை முறைமையை ஒழிப்பதற்கு ஆளும் கட்சியில் உள்ள பெரும்பாலானவர்கள் எதிர்ப்பாகவே உள்ளனர். இந்த நிலையில் 13 ஆவது திருத்தச்சட்டத்தை ரத்துச் செய்வதற்கான பிரேரணையை கொண்டு வந்தாலும் அதனை நிறைவேற்றிக்கொள்ள முடியாமல் அப்பிரேரணையானது மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவின்றி தோல்வியடையும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.



எமது படையினரை நாம் எங்கு வைத்திருப்பதென்பதை தீர்மானிக்கும் உரிமை சர்வதேச சமூகத்துக்கு கிடையாது: - இராணுவத் தளபதி ஜெகத் ஜயசூரியா
[Tuesday, 2013-05-21 09:27:05]

வடக்கில் நாம் பெரும் படைக்குறைப்பை மேற்கொண்டுள்ளோம் போர்க்காலத்தில் யாழ். மாவட்டத்தில் 16 இராணுவ முகாம்கள் இருந்தன. தற்போது 3 இராணுவ முகாம்கள் மாத்திரமே அங்குள்ளன என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜெகத் ஜயசூரியா தெரிவித்துள்ளார். அரச வானொலி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே இராணுவத் தளபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.



ஐ.நாவின் தீர்மானங்களை நிறைவேற்றாத அரசு, தமிழர்களின் பிரச்சினையைத் தீர்க்குமா? - பொன். செல்வராசா
[Tuesday, 2013-05-21 09:13:15]

யுத்தத்தை மறக்க வேண்டும் என்று அசோகச் சக்கரவர்த்தி கூறியுள்ள வேளையில் அரசாங்கம் போரின் வெற்றியைக் கொண்டாடுகின்றது. ஐக்கிய நாடுகளின் தீர்மானங்களை நெறிப்படுத்த முடியாத அரசு தமிழ் பேசும் மக்களின் பிரச்சினையைத் தீர்ப்பார்களா என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா கேள்வி எழுப்பினார். 2006ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதி யுதத்தில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்களின் 4ஆம் ஆண்டு நிறைவு அஞ்சலியும் ஆத்மசாந்திப் பூசையும் மட்டக்களப்பு நகர தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. அதன் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.



முள்ளிவாய்க்கால் தமிழ் இன அழிப்பு நினைவு சுமந்து யேர்மனியில் தொடரும் கவனயீர்ப்பு நிகழ்வுகள் Top News
[Tuesday, 2013-05-21 09:13:12]

முள்ளிவாய்க்கால் தமிழ் இன அழிப்பு நினைவு சுமந்து யேர்மனியில் தொடரும் கவனயீர்ப்பு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழ் இன அழிப்பு நினைவு சுமந்து யேர்மனி பெர்லின் மற்றும் பீலேபெல்ட் நகரங்களில் கவனயீர்ப்பு மற்றும் இன அழிப்பு கண்காட்சி முன்னெடுக்கப்பட்டது . யேர்மனியின் தலைநகரத்தில் மக்கள் நடமாடும் நகர மத்தியில் கவனயீர்ப்பு நிகழ்வு பல்லின சமூகத்தினரிடம் செல்லும் வகையில் சிறீலங்கா அரசு ஈழத்தமிழர்கள் மீது முன்னெடுக்கும் இன அழிப்பை வெளிக்காட்டும் முகமாக யேர்மன் மொழியில் தகவல்கள் வாசிக்கப்பட்டு மற்றும் பதாதைகள் தாங்கி துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டது .



சிறிலங்கா ஜனாதிபதி மகிந்தராஜபக்சவின் சீனப் பயணம் பிற்போடப்பட்டுள்ளது!
[Tuesday, 2013-05-21 09:10:25]

சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சீனாவிற்கான பயணம் பிற்போடப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. எதிரவரும் 27ம் திகதியே அவர் சீனாவுக்குப் பயணமாகவுள்ளதாக சீன வெளிவிவகார அமைச்சை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. முன்னதாக, சிறிலங்கா அதிபர் நாளை சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. எனினும், இந்தப் பயணம் பிற்போட்படு எதிர்வரும் 27ம் நாள் தொடக்கம் 30ம் நாள் வரை இடம்பெறும் என்று சீன வெளிவிவகார அமைச்சு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. புதிய சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்தப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். இந்தப் பயணம் இரு நாடுகளுக்கும் இடையில் உள்ள நெருக்கமான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



சிரேஷ்ட அமைச்சரின் பெயரில் பண மோசடி
[Tuesday, 2013-05-21 08:59:31]

சிரேஷ்ட அமைச்சர் ஒருவரின் பெயரைப் பயன்படுத்தி இளைஞர் யுவதிகளை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் கண்டி நீதிவான் நீதிமன்றத்தினால் 25 ஆயிரம் ரொக்கப் பிணையிலும் இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் சரீரப்பிணையிலும் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கண்டி வெரல்லகம பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு தான் நிதி மோசடியில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டதையடுத்து பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். மேற்படி நபர் சிரேஷ்ட அமைச்சர் ஒருவரது பெயரைக் கூறி அவர் தனக்கு மிகவும் நெருங்கியவர் என போலியான கதைகளைக் கூறியும் அவரூடாக வங்கிகளில் தொழில் பெற்றத் தருவதாகக் கூறியுமே இவ்வாறு பண மோசடியில் ஈடுபட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பன்வில பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்தே குறித்த நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இது தொடர்பான மேலதிக விசாரணைகள் ஜுன் மாதம் 26 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டன.



வாய் பேச முடியாத சிறுமியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய குடும்பஸ்தர் - திருகோணமலையில் சம்பவம்
[Tuesday, 2013-05-21 08:45:10]

திருகோணமலை லிங்கநகர் பகுதியைச் சேர்ந்த 12 வயதான விசேட தேவையுடைய சிறுமியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய 33 வயதான நபர் ஒருவர் எதிர்வரும் 31ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த சிறுமி கடந்த சனிக்கிழமை பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு இன்று திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். கைது செய்யப்பட்டவர் லிங்கநகரைச் சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதி என தெரியவந்துள்ளது. அவரது மனைவி வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சந்தேகநபர் சிறுமியை பலாத்காரதிற்கு உட்படுத்தியுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை யாழ்ப்பாணத்தில் தங்கி வேலை செய்வதாகவும் தாய் மனநிலை பாதிக்கப்பட்டவர் எனவும் விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது நான்காம் தரத்தில் கல்வி பயிலும் வாய் பேசமுடியாத சிறுமி தனது ஆசிரியரிடம் இப்பிரச்சினையை தெரிவித்தன் பின்னர் சம்மந்தப்பட்ட நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



மனித உரிமைக்கும் சுதந்திரத்திற்கும் ஸ்ரீலங்காவில் இன்னும் இடமில்லை - மனித உரிமை ஆர்வலர் குழு தெரிவிப்பு!
[Monday, 2013-05-20 22:34:42]

இலங்கையில் விடுதலைப் புலிகளின் வீழ்ச்சியுடன் யுத்தம் முடிவுக்கு வந்து நான்கு ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும் அந்நாட்டில் அடிப்படை மனித உரிமைகளுக்கும் சுதந்திரத்துக்கும் மரியாதை மென்மேலும் குறைந்துகொண்டு போவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம், அரச படைகளும் விடுதலைப் புலிகளும் செய்ததாகக் குற்றம்சாட்டப்படும் போர்க்குற்றங்களை விசாரிக்கவோ சட்ட நவடிக்கை எடுக்கவோ அர்த்தமுள்ள நடவடிக்கை ஒன்றையும் இதுவரையில் எடுக்கவில்லை என மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம்சாட்டியுள்ளது.



மே18 நான்காம் ஆண்டு நினைவேந்தல், மயிலாடுதுறையில் நடைபெற்றது. Top News
[Monday, 2013-05-20 21:10:53]

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை போர்க்குற்றநாள் நினைவேந்தல் நிகழ்வு நேற்றுமுன்தினம் மயிலாடு துறையில் இடம்பெற்றது (18 05 2013). இதில் ஏராளமான தமிழின உணர்வாளர்கள் கலந்துகொண்டதோடு படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு அஞ்சலிகளையும் செலுத்தியுள்ளனர்.



நெதர்லாந் நாட்டில் இடம்பெற்ற தமிழினவழிப்பின் 4ம் அண்டு நினைவு நாள். Top News
[Monday, 2013-05-20 20:22:03]

சிங்கள பேரினவாதம் 60 ஆண்டுகளாக தமிழிழ மக்கள் மீது திட்டமிட்ட தமிழினவழிப்பை மேற்கொள்கின்றது. சிங்கள பேரினவாதம் செய்த தமிழினவழிப்பின் உச்சக்கட்டமே 18. வைகாசி 2009ம் ஆண்டாகும். வைகாசி 18ம் திகதியை உலகெங்கும் வாழ்கின்ற தமிழீழ உறவுகள் ஓர் துயரநாளாகவும் தமிழீழ மண்ணை மீட்டெடுக்க வேண்டுமென உறுதியெடுக்கின்ற நாளாகவும் எழுச்சிப்பூர்வமாக நினைவுகூர்ந்து வருகின்றார்கள்.


Canada Kanthasamy Kovil
TDE_Computers2011
NIRO-DANCE-100213
Ramans2011
INNSYS-20120930
RoyaShades-l2011(04-12-11)
TamilsGuid-191012-2013
Mahesan supramaniyam 031109
Suresh-remax-2013-01-01
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com