Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 24, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
இந்திய அரசை நடத்துவது மன்மோகன்சிங்கா? ராஜபக்ச குடும்பமா? - வைகோ கேள்வி
[Thursday, 2012-10-04 18:28:08]
News Service

இந்திய அரசாங்கத்தை நடத்துவது சோனியா காந்தியின் கைப்பாவையான டாக்டர் மன்மோகன்சிங் அவர்களா? அல்லது கொலைபாதகன் ராஜபக்சவின் குடும்பமா? என்ற கேள்வி விசுவரூபம் எடுத்துவிட்டது என்று வைகோ அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில்,

  

ஈழத் தமிழர்களை, ஈவு இரக்கமில்லாமல் படுகொலை செய்த சிங்கள கொலைவெறி இனவாத அரசின் அமைச்சரும், அதிபரின் சகோதரனுமான பசில் ராஜபக்சே, நேற்று கொழும்பில் மிகவும் திமிராகவும், அகம்பாவத்தோடும் என்ன எதிர்ப்பு இருந்தாலும், சிங்கள இராணுவ வீரர்கள் இந்தியாவில் தான் தொடர்ந்து பயிற்சி பெறுவார்கள், இதுவரை இந்தியாவில் தான் பயிற்சி பெற்றும் வந்தார்கள் என்று அறிவித்துள்ளான்.

இந்திய அரசாங்கத்தை நடத்துவது சோனியா காந்தியின் கைப்பாவையான டாக்டர் மன்மோகன்சிங் அவர்களா? அல்லது கொலைபாதகன் ராஜபக்சேயின் குடும்பமா? என்ற கேள்வி விசுவரூபம் எடுத்துவிட்டது. ஏனெனில், விடுதலைப் புலிகளுடன் யுத்தம் என்ற பெயரில் சிங்கள அரசும், இராணுவமும் நடத்திய தமிழ் இனக்கொலை யுத்தத்தை இயக்கியதும், இந்தியத் தளபதிகளை அனுப்பி திட்டம் வகுத்துக் கொடுத்ததும், இந்தியாவின் முப்படைகளின் ஆயுதங்களைப் பயன் படுத்தியதும் காங்கிரஸ் தலைமை தாங்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுதான் என்பது எள்ளளவும் சந்தேகத்திற்கு இடம் இன்றி வெட்ட வெளிச்சமாகிவிட்டது.

இந்தக் கூட்டணி அரசில் பங்கேற்ற தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் தமிழ் இனக்கொலைக்குக் காரணமான குற்றவாளிகளே ஆகும். இதற்குப் பின்னரும் காங்கிரசோடு கைகோர்ப்பதும், தமிழ் இனக்கொலை நடைபெற உதவிய அன்றைய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களித்ததும், தமிழ் இனத்துக்குச் செய்த துரோகம் ஆகும்.

தமிழ் ஈழ விடியலுக்கு உண்மையில் பாடுபடுவோர் யார்? அதற்கு துரோகம் இழைத்துக் கொண்டே தமிழ் நாட்டு மக்களை ஏமாற்றும் கபட வேடதாரிகள் யார்? என்பதை முத்துக்குமார் முதல் விஜயராஜ் வரை தங்கள் தேகத்தில் பற்ற வைத்தத் தியாக நெருப்பின் வெளிச்சம் அடையாளம் காட்டிவிட்டது. சிங்களக் கொலைகார கூட்டத்துக்கு இந்தியாவில் யாரெல்லாம் ஆதரவு தருகிறார்களோ, அவர்களை அரசியல் குப்பைத் தொட்டியில் தூக்கி எறிய வேண்டியது தமிழக மக்களின் கடமை மட்டும் அல்ல, இந்தியாவில் உள்ள மனித உரிமையில் அக்கறைகொண்ட அனைவரின் கடமையும் ஆகும் என்று வைகோ கூறியுள்ளார்.

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

இராணுவம் எந்நேரமும் போருக்குத் தயாராக இருக்க வேண்டும்! - பிரதமர் மன்மோகன்சிங்
[Friday, 2013-05-24 07:42:17]

முறைகேடுகளை தடுக்க ராணுவ தளவாடங்கள் கொள்முதலை வெளிப்படையாக மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். அரியானாவின் குர்கான் நகரில் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்துக்கு அடிக்கல் நாட்டும் விழா நேற்று நடந்தது. அடிக்கல் நாட்டி பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது: ராணுவ தளவாடங்கள் வாங்குவதில் முறைகேடு நடப்பதாக புகார்கள் வருகிறது. இதை தடுக்க தளவாடங்கள் வாங்குவதற்காக நடைமுறையில் மாற்றம் செய்ய வேண்டும். வெளிப்படையான முறையில் ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள் வாங்க புதிய நடைமுறை வகுக்கப்படுகிறது. இதை அமல்செய்யும்போது, முறைகேடுகள் நடப்பதை தடுக்க முடியும்.



பாமகவுக்காக திருமாவளவனை கழற்றிவிட முனைகிறதா திமுக?
[Thursday, 2013-05-23 19:34:22]

பாமக இடம்பெறும் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம் பெறாது என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ள நிலையில், இரண்டு திராவிட கட்சிகளுடனும் பாமக கூட்டணி அமைக்காது என அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். 2006 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலின்போது, திமுக.கூட்டணியில் பாமகவும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் இணைந்திருந்தது. அதன்பிறகு கடந்த 2012ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்லில் அதிமுகவுடன் பா.ம.க. கூட்டணி அமைத்துக் கொண்டது. அதிலிருந்து பாமகவுக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் பனிப்போர் தொடங்கியது.



ஐபிஎல் சூதாட்டத்தில் தமிழ் நடிகைகளுக்கும் தொடர்பு - மெய்யப்பனே அனுப்பினாராம்!
[Thursday, 2013-05-23 19:21:29]

ஐபிஎல் ஸ்பாட் பிக்ஸிங் தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளருமான சீனிவாசன், அவரது மருமகன் குருநாத் மெய்யப்பன் ஆகியோரது சென்னை வீடுகளில் மும்பை போலீசார் சோதனை மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். ஸ்பாட் பிக்ஸிங் விவகாரத்தில் ஸ்ரீசாந்த், சாண்டிலா, சவான் ஆகிய வீரர்கள் சிக்கினர். சென்னை, கோயம்புத்தூர், மும்பை, கொல்கத்தா என நாடு முழுவதும் பல நகரங்களில் பிக்சிங் தரகர்கள் தொடர்ந்தும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் முன்னணி தமிழ் நடிகைகளுக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுவதால், அவர்களும் விசாரிக்கப்படவுள்ளனர்.



நோ பால் போடாத ஸ்ரீசாந்தை கேவலமாகத் திட்டிய புக்கிகள் - வெளிவரும் புதிய தகவல்கள்!
[Thursday, 2013-05-23 19:13:41]

ஐபிஎல் போட்டியில் ஒரு ஓவரின் கடைசிப் பந்தில் நோ பால் போடாதது தொடர்பாக ஸ்ரீசாந்த்தை சூதாட்ட புக்கிகள் அசிங்கம் அசிங்கமாக திட்டிய கதை அம்பலத்திற்கு வந்துள்ளது. மே 9ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும் இடையிலான ஐபிஎல் போட்டியின்போது நடந்த பிக்ஸிங் தொடர்பாகவே இந்த வாய்ச்சண்டை நடந்ததாம். இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணியின் பந்து வீச்சாளராக செயல்பட்ட ஸ்ரீசாந்த் சூதாட்ட புக்கிகளுக்கு சிக்னல் காட்டி விட்டு தனது 2வது ஓவரை வீசினார். அதில் அவர் 13 ரன்களை விட்டுக் கொடுத்தார். மொத்தம் இரண்டு ஓவர்கள் வீசிய ஸ்ரீசாந்த் 18 ரன்கள் கொடுத்தார். 2வது ஓவரில் அவர்14 ரன்கள் விட்டுத் தர வேண்டும் என்பது புக்கிகள் பிறப்பித்த உத்தரவாகும். இருப்பினும் 13 ரன்கள்தான் கொடுத்தார் ஸ்ரீசாந்த்.



ஆந்திராவில் வறுத்தெடுக்கும் வெயிலுக்கு நேற்று ஒரே நாளில் 22பேர் பலி!
[Thursday, 2013-05-23 18:38:19]

ஆந்திராவில் அக்னி வெயில் சுட்டெரிக்கிறது. பல மாவட்டங்களில் 104 டிகிரியை கடந்து வெயில் வாட்டி வதைக்கிறது. அதிகபட்சமாக கரீம் நகர் மாவட்டத்தில் 116 டிகிரி வெயில் கொளுத்தியது. ராம் குண்டாவில் 114.8 டிகிரியும், வரங்கல், ஓங்கோல் மாவட்டத்தில் 113 டிகிரியும் வெயில் பதிவானது. கடும் வெயிலுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் நேற்று ஒரே நாளில் 22 பேர் பலியாகி உள்ளனர். வரங்கல் மாவட்டத்தில் 7 பேரும், ஆதிலாபாத்தில் 6 பேரும், கரீம் நகரில் 6 பேரும், கிழக்கு கோதாவரியில் 3 பேரும் பலியாகி உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் 48 வயது மேற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



13 வயதுக்குட்பட்டவர்கள் பேஸ் புக் கணக்கு தொடங்குவதை தடை செய்ய வேண்டும் - மத்திய அரசுக்கு டெல்லி ஐகோர்ட் உத்தரவு!
[Thursday, 2013-05-23 18:34:53]

13 வயதுக்குட்பட்டவர்கள் பேஸ் புக் கணக்கு தொடங்குவதை மத்திய அரசு தடை செய்ய வேண்டும் என டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 18 வயதுக்குட்பட்ட மைனர்கள் பேஸ் புக் போன்ற தளங்களில் கணக்கு தொடங்குவது இந்திய மெஜாரட்டி சட்டம், இந்திய ஒப்பந்த சட்டம், தகவல் மற்றும் தொழில் நுட்ப சட்டத்தை மீறுவதாக உள்ளது. எனவே 18 வயதுக்குட்பட்டவர்கள் பேஸ் புக் போன்ற தளங்களில் கணக்கு தொடங்குவதை தடை செய்ய வேண்டும் என பா.ஜ.க. மூத்த தலைவர் கே.என்.கோவிந்தாச்சாரியா டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்.



காந்தியை அடைத்திருந்த எரவாடா சிறைக்கு இரவாடு இரவாக மாற்றப்பட்டார் சஞ்சய் தத்!
[Thursday, 2013-05-23 08:03:28]

மும்பை ஆர்தர் ரோடு சிறையில் இருந்து இரவோடு இரவாக புனே எரவாடா சிறைக்கு நடிகர் சஞ்சய் தத் மாற்றப்பட்டார்.மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் பிரபல நடிகர் சஞ்சய் தத்துக்கு சிறப்பு தடா நீதிமன்றம் 6 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதை கடந்த மார்ச் 21ம் தேதி உறுதி செய்த உச்ச நீதிமன்றம், தண்டனையை 5 ஆண்டுகளாக குறைத்தது. மேலும், அதன் உத்தரவுபடி கடந்த 16ம் தேதி சிறப்பு தடா நீதிமன்றத்தில் சஞ்சய் தத் சரண் அடைந்தார். பின்னர் அவர், மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு, மும்பை தாக்குதல் வழக்கு தீவிரவாதியான அஜ்மல் கசாப் அடைக்கப்பட்டு இருந்த பாதுகாப்பு மிக்க அண்டா சிறையில் அடைக்கப்பட்டார்.



ஊழலுக்கு பொறுப்பேற்று பிரதமர் மன்மோகன்சிங் பதவி விலக வேண்டும் -கருத்துக்கணிப்பில் தகவல்!
[Thursday, 2013-05-23 07:57:31]

ஊழலுக்கு பொறுப்பேற்று பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலக வேண்டும் என்று பெரும்பான்மையான மக்கள் விரும்புவதாக கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பதவி ஏற்று நான்கு ஆண்டுகள் நிறைவு செய்வதையொட்டி நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் இத்தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா முழுவதும் 12 நகரங்களில் 18 வயது நிரம்பிய வாக்காளர் உரிமை பெற்ற 2 லட்சம் பேரிடம் இருந்து கருத்துக்கணிப்பு பெறப்பட்டுள்ளது. இவர்களில் 61 சதவீதம் பேர் மன்மோகன் சிங் பிரதமராக நீடிக்ககூடாது என்று கருத்து கூறியுள்ளனர், மன்மோகன் சிங் பிரதமராக நீடிக்க வேண்டும் என்று 37 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.



சென்னையில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய நபர் 14 மணிநேர போராட்டத்தின் பின் பிடிபட்டார் - இலங்கைப் படங்களில் நடித்தவராம்!
[Thursday, 2013-05-23 07:43:49]

கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள அபார்ட்மென்ட்டில் துப்பாக்கியால் சுட்டு மிரட்டிய நபரை 14 மணி நேர பரபரப்புக்கு பின் போலீசார் பிடித்தனர். சினிமா பாணியில் நடந்த இச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சப்தமாலிகா என்ற 4 அடுக்கு அபார்ட்மென்ட்டில், விஜயகர்(50) என்பவர் 5 ஆண்டுகளுக்கு முன் வாடகைக்கு வந்தார். 2 ஆண்டுகளாக ஒழுங்காக வாடகை கொடுத்தார். பின்னர் கடந்த 3 ஆண்டுகளாக வாடகை தராமல் ஏமாற்றி வந்துள்ளார். இதனால் உரிமையாளர் நீதிமன்றம் மூலம் வீட்டை காலி செய்ய நடவடிக்கை எடுத்தார்.



நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் அஸ்தி எங்கே? - பதிலளிக்கும் படி மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!
[Thursday, 2013-05-23 07:30:31]

நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் அஸ்தி எங்கு இருக்கிறது என்பதை தெரிவிக்கும்படி மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியை சேர்ந்தவர் பிரசாந்த் பாலிவால். டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள பொதுநலன் வழக்கில் இவர் கூறியிருப்பதாவது: சுதந்திர போராட்ட வீரர் சுபாஷ் சந்திரபோசின் அஸ்தி, ஜெர்மனியில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வரும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். அதை இந்தியா கொண்டு வந்த பிறகு பொது மக்கள் அஞ்சலிக்காக பொது இடத்தில் வைக்க வேண்டும்.



பிணைப் பணம் செலுத்தாததால், 19 ஆண்டுகளை சிறையில் கழித்த தாயை மீட்ட மகன்!
[Thursday, 2013-05-23 07:22:24]

இந்தியாவில் பிணை வழங்கப்பட்ட ஒரு பெண் கைதி, சிறையிலிருந்து 19 ஆண்டுகளுக்குப் பின்னரே விடுதலை செய்யப்பட்டது குறித்து நீதிபதிகள் கவலை தெரிவித்துள்ளனர். வட இந்திய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் கொலைக்குற்றம் சாட்டப்பட்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட விஜய் குமாரி என்ற பெண், கர்ப்பமாயிருந்த நிலையில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார். தான் குற்றமற்றவர், தவறாகக் குற்றம் சாட்டப்பட்டவர் என்று கூறியிருந்தார். அவரது கணவர் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக மேல் முறையீடு செய்திருந்தார்.



உலகின் அதிவேக ஏவுகணையான பிரமோசை வெற்றிகரமாக ஏவியது இந்தியா!
[Wednesday, 2013-05-22 18:32:06]

உலகின் அதிவேக ஏவுகணையான பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணையை இந்தியா இன்று மீண்டும் வெற்றிகரமாக பரிசோதனை செய்தது. கோவா கடற்பகுதியில் ஐஎன்எஸ் தர்காஷ் போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணை, 290 கி.மீ. தூரம் பறந்து சென்று, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை துல்லியமாகத் தாக்கியது. இந்தியா-ரஷ்யா கூட்டுத் தயாரிப்பான பிரமோஸ் ஏவுகணையானது, 300 கிலோ எடை கொண்டது. ஒலியை விட 2.8 மடங்கு வேகத்துடன் பறக்கும். இன்று ஏவுகணை செலுத்தப்பட்ட அதிநவீன போர்க்கப்பலான ஐஎன்எஸ் தர்காஷ், கடந்த ஆண்டு கப்பல் படையில் சேர்க்கப்பட்டது.



இலங்கைத் தமிழர்களை வைத்து தமிழக கட்சிகள் பிழைப்பு நடத்துகின்றன - நாராயணசாமி குற்றச்சாட்டு!
[Wednesday, 2013-05-22 18:27:46]

இலங்கைத் தமிழர்களை வைத்து தமிழக கட்சிகள் அரசியல் நடத்துவதாக குற்றம்சாட்டியுள்ளார் மத்திய அமைச்சர் நாராயணசாமி. புதுவை மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினம் கட்சி அலுவலகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்டு நாராயணசாமி பேசியதாவது:- ராஜீவ்காந்தி நம்மோடு இருந்திருந்தால் இந்தியா சீனாவை தாண்டி வளர்ச்சி பெற்று இருக்கும். ராஜீவ்காந்தி பிரதமராக இருந்த காலத்தில் அண்டை நாடுகளுடன் உறவை மேம்படுத்தினார். அனைத்து கட்சிகள் வித்தியாசமின்றி வரவேற்று கைதட்டினார்கள். துரதிர்ஷ்டவமாக அவரை இழந்து விட்டோம்.



முதல்வர் பாதுகாப்புக்கு நின்ற பொலிசார் நடுத்தெருவில் லத்தியால் அடித்துக் கொண்டு சண்டை - ஒருவர் கவலைக்கிடம்!
[Wednesday, 2013-05-22 18:14:21]

உத்தர பிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் இன்று லக்னோ கோமதி நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். இதையொட்டி அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். அவர்களில் தலைமைக் காவலர் முகுல் சந்திர யாதவுக்கும், கான்ஸ்டபிள் சுனிர் தீக்சித்துக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி, ஒருவரையொருவர் லத்தியால் தாக்கிக்கொண்டனர்.கண்ணிமைக்கும் நேரத்தில் சாலையோரம் நடந்த இந்த சண்டையில் ஒருவரின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. மற்றொருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.



சென்னை அடுக்குமாடிக் குடியிருப்பில் துப்பாக்கியுடன் புகுந்து மிரட்டும் நபரைப் பிடிக்க கொமாண்டோப் படை சுற்றிவளைப்பு!
[Wednesday, 2013-05-22 18:08:52]

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கியுடன் புகுந்து மிரட்டி வரும் நபரைப் பிடிக்க கமாண்டோ படை வரவழைக்கப்பட்டுள்ளது. கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையையொட்டி உள்ள டெய்லர்ஸ் ரோட்டில் சப்தமாலிகா அபார்ட்மெண்ட் உள்ளது. 3 மாடிகள் கொண்ட இந்த அடுக்கு மாடி குடியிருப்பில் முதல் தளத்தில் விஜய்கர் (40) என்ற சினிமா பைனான்சியர் வாடகைக்கு குடியிருக்கிறார். இவரது மனைவி ஜெபி, மகன், மகளுடன் விடுமுறையை கழிக்க வெளியூர் சென்று இருக்கிறார்கள். விஜய்கர் சரிவர வாடகை தருவதில்லை.பராமரிப்பு கட்டணமும் செலுத்தவில்லை. இதனால் அவரை வீட்டை காலி செய்யுமாறு உரிமையாளர் கூறியதாக தெரிகிறது.



டோனி மனைவி அருகே அமர்ந்து போட்டியை பார்த்தது ஏன்? - சூதாட்டத்தில் சிக்கிய பாலிவூட் நடிகர் விண்டு தாராசிங் தகவல்!
[Wednesday, 2013-05-22 17:59:56]

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளரும் இந்திய கிரிக்கெட் சபைத் தலைவருமான சீனிவாசனின் மருமகனும் அந்த அணியின் சிஇஓவுமான குருநாத் மெய்யப்பன்தான் தம்மை சென்னை போட்டியை பார்க்க வருமாறு அழைத்தார் என்று ஐபிஎல் பிக்சிங்கில் சிக்கி சிறைக்குப் போயிருக்கும் பாலிவுட் நடிகர் வின்து தாராசிங் கூறியுள்ளார்.கடந்த மாதம் ஏப்ரல் 9-ந் தேதியன்று சென்னை சேப்பாக்கத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இந்தப் போட்டியைக் காண வின்து தாரா சிங் சென்னை வந்திருந்தார். அத்துடன் சென்னை அணியின் கேப்டன் டோணியின் மனைவி சாக்ஷி அருகே அமர்ந்து போட்டியை கண்டு ரசித்தார்.



இந்திய நலனுக்கு எதிராக சீனா ஒருபோதும் செயற்படாது - பிரணாப்பிடம் வாக்குறுதி கொடுத்தார் சீனப்பிரதமர்!
[Wednesday, 2013-05-22 07:45:07]

இந்தியாவின் நலனுக்கு எதிராக சீன அரசு ஒருபோதும் செயல்படாது என்று சீன பிரதமர் லீ கெகியாங் கூறினார். இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள சீன பிரதமர் லீ கெகியாங்,செவ்வாய்க்கிழமை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்துப் பேசினார். அப்போது இத்தகைய உறுதிமொழியை அவர் அளித்தார். சீனாவின் மிகச் சிறந்த வர்த்தகக் கூட்டாளி நாடாகத்தான் இந்தியாவைப் பார்க்கிறோம். இத்தகைய சூழலில் இந்தியாவுக்கு எதிராக ஒருபோதும் செயல்பட மாட்டோம் என்று அவர் கூறினார். இந்தியாவுடனான இரு தரப்பு உறவை மேலும் வலுப்படுத்தவே சீனா விரும்புகிறது என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.



சென்னையில் 7 பரிமாண தியேட்டர் - இந்தியாவிலேயே முதல்முறை!
[Wednesday, 2013-05-22 07:31:56]

சென்னை புரசைவாக்கம் அபிராமி மெகா மாலில், இந்தியாவிலேயே முதல்முறையாக 7டி (7 பரிமாண) தியேட்டர் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. இசையமைப்பாளர் தேவா திறந்து வைத்தார். தியேட்டர் குறித்து அதன் உரிமையாளர் அபிராமி ராமநாதன் நிருபர்களிடம் கூறியதாவது: முதல் பரிமாணம் என்பது, சிறந்த முப்பரிமாணத்தில் படம் பார்ப்பது. 2வது, அற்புதமான அதிரும் ஒலி கொண்டது. 3வது, உணர்வது. 4வது, நறுமணம். 5வது, காற்று மற்றும் மின்னல். 6வது, மழை. 7வது, பனிப்பொழிவு. இந்த 7டி தியேட்டருக்கான உபகரணங்கள் மற்றும் 7டி படங்கள் இஸ்ரேல் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.



இணையத் தொலைத்தொடர்பு சேவையை கட்டுப்படுத்த 128 ஆண்டுகால சட்டத்தைத் திருத்துகிறது இந்தியா!
[Wednesday, 2013-05-22 07:27:31]

இணையதள தொலைதொடர்பு சேவையை, பயங்கரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகள் தவறாக பயன்படுத்துவதை தடுக்க, 128 ஆண்டு பழமை வாய்ந்த, "இந்திய டெலிகிராப்' சட்டத்தில், திருத்தம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில், இணையதள தொலைதொடர்பு சேவை, முக்கிய இடத்தை பெறுகிறது. இந்தச்சேவையை, பயங்கரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகள், சர்வசாதாரணமாக பயன்படுத்தி, சதி வேலைகளில் ஈடுபடுகின்றனர் . இதைத் தடுக்கும் வகையில், 128 ஆண்டுகளாக அமலில் உள்ள, இந்திய டெலிகிராப் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.



அரசியலில் குதிக்கிறார் பிரபல பாலிவுட் நடிகை பிரீத்தி ஜிந்தா!
[Wednesday, 2013-05-22 07:22:33]

பிரபல பாலிவுட் நடிகை, பிரீத்தி ஜிந்தா. ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியின் உரிமையாளராகவும் இருக்கிறார். சமீபத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: சமீபகாலமாக நாட்டில் நடக்கும் நிகழ்வுகள் என்னை மிகவும் கவலை அடைய செய்துள்ளன. எனவே, ஒரு நல்ல மாற்றம் ஏற்பட வேண்டும் என்று விரும்புகிறேன். இந்த மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று கருதுகிறேன். இதனால் அரசியலில் ஈடுபடுவது பற்றி சமீபகாலமாக யோசித்து வருகிறேன். அரசியிலில் ஈடுபட்டால், நான் நேர்மையான அரசியல்வாதியாக இருப்பேன். நிச்சயம் ஊழலில் ஈடுபட மாட்டேன். அரசியலில் ஈடுபட்டால் கவர்ச்சிகரமான அரசியல்வாதியாக இருப்பேன். நல்ல ஆடைகளுடனும், நல்ல கூந்தலுடனும் காட்சி அளிப்பேன். ஒரு நாள் மக்களை சந்தித்து எனக்கு வாக்களியுங்கள் என்று கேட்பேன். ஊழல் ஒழிந்தால் இந்தியா பிரகாசிக்கும். ஊழலால் ஏழை மக்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள். இது எனக்கு வேதனையாக இருக்கிறது என்றார்.


TamilsGuid-191012-2013
Mahesan supramaniyam 031109
Suresh-remax-2013-01-01
Ramans2011
Canada Kanthasamy Kovil
INNSYS-20120930
AJRwindows22.05.13
TDE_Computers2011
RoyaShades-l2011(04-12-11)
NIRO-DANCE-100213
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com