Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 25, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
தமிழ் தேசிய கூட்டமைப்பின் இந்திய விஜயத்துக்கான ஏற்பாடுகள் தயார்: இந்திய மத்திய அரசு
[Thursday, 2012-10-04 09:09:08]
News Service

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் இந்திய விஜயத்துக்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக இந்திய மத்திய அரசாங்கத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கூட்டமைப்பு இந்த மாதம் 10ம் திகதி இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, இந்தியா சென்று மூன்று வார காலப்பகுதிக்குள் இந்த விஜயம் அமைவதானது, முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

  

இதேவேளை இந்த முறை இந்தியா, தமிழ் தேசிய கூட்டமைப்பை நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் இணைய வேண்டும் என்று வலியுறுத்தும் என்று ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. புதுடெல்லி அரசாங்கத்தின் அதிகாரி ஓருவரை மேற்கோள் காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் அங்கம் வகிப்பதன் ஊடாக இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்று ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத் தரப்பினர் தொடர்r;சியாக வலியுறுத்துகின்றனர்.

எனினும், இதுவும் கடந்த காலத்தை போன்ற ஒரு தோல்வி அடையும் முயற்சி என்ற அடிப்படையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு அதில் இணைய மறுப்பு தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில் இந்தியா, தமிழ் தேசிய கூட்டமைப்பை இந்த தெரிவுக் குழுவில் இணைவதற்கு வலியுறுத்தலாம் என்று அந்த ஊடகம் தகவல்கள் வெளியிட்டுள்ளது.

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

கைதிகளுக்கு இம்முறை பொதுமன்னிப்பு இல்லை - சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர்!
[Saturday, 2013-05-25 17:39:43]

இம்முறை வெசாக் பண்டிகையின் போது சிறைக் கைதிகள் எவருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்படவில்லையென புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் ஜி.எஸ்.விதானகே தெரிவித்துள்ளார். சிறு குற்றங்களை புரிந்து தற்போது சிறையில் உள்ள குற்றவாளிகள் சிலரின் பெயரை நீதி அமைச்சுக்கு பரிந்துரை செய்தபோதிலும் அதற்கான அனுமதி தமக்கு கிடைக்கவில்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



கொழும்பு துறைமுக தீ விபத்து தொடர்பில் 13 பேரிடம் வாக்கு மூலம்!
[Saturday, 2013-05-25 17:31:37]

கொழும்புத் துறைமுக களஞ்சியசாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து தொடர்பில் இதுவரையிலும் 13 பேரிடம் வாக்குமூலங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இரசாயன பகுப்பாய்வு நடவடிக்கைகளும் இன்று இடம்பெற்றன. கொழும்பு துறைமுக களஞ்சியசாலையில் நேற்று 24 ஆம் திகதி ஏற்பட்ட திடீர் தீ விபத்தையடுத்து களஞ்சியசாலை தொகுதியை பொலிஸார் பொறுப்பேற்றதுடன் விசாரணைகளையும் துரிதப்படுத்தினர். இந்நிலையிலேயே இதுவரையிலும் 13 பேரிடம் வாக்குமூலங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.



பிரபல தமிழ்ப் பின்னணிப் பாடகர் டி.எம்.சௌந்தரராஜன் சந்று முன்பு காலமானார்!
[Saturday, 2013-05-25 17:26:59]

பிரபல தமிழ் திரைப்பட பின்னணிப் பாடகர் டி. எம். சௌந்தரராஜன் அவர்கள் சென்னையில் காலமானார். இருதயக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் பின்னர் வீடு திரும்பியிருந்தார். ஆயினும் இன்று சனிக்கிழமை சற்று நேரம் முன்னதாக அவர் தனது வீட்டில் காலமானார். அவருக்கு வயது 91. தென்னிந்திய திரையுலகில் அரை நூற்றாண்டுக்கும் அதிகமாக பின்னணி பாடி வந்த இவர், பட்டினத்தார் உட்பட சில திரைப்படங்களிலும் நடித்திருந்தார்.



கிளி.வட்டக்கச்சி இந்து மயானத்திற்கு எரிகொட்டகை கையளிப்பு! Top News
[Saturday, 2013-05-25 17:19:40]

வட்டக்கச்சி மம்மில் இந்து மயானத்திற்கு இராமநாதபுரத்தைச் சேர்ந்த அமரர் இராஜேஸ்வரி வேலுப்பிள்ளை ஞாபகார்த்தமாக அவரின் குடும்பத்தவரால் எரிகொட்டகை அமைத்து வழங்கப்பட்டது. அமரர் இராஜேஸ்வரி வேலுப்பிள்ளை அவர்களது நிதிப் பங்களிப்பில் வட்டக்கச்சி அறிவொளி சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் இவ் எரிகொட்டகை அமைக்கப்பட்டு, வட்டக்கச்சி கிராம முன்னேற்ற சங்கங்களிடம் கையளிக்கும் நிகழ்வு கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் வி.சுவிஸ்கரன் தலைமையில் மம்மில் இந்து மயானத்தில் இடம்பெற்றது.



இலங்கையை சேர்ந்த தமிழ்ப் பணிப்பெண் ஜோர்தானில் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகம்! Top News
[Saturday, 2013-05-25 17:15:20]

ஜோர்தானில் இலங்கைப் பணிப்பெண் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அவரது பெற்றோர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். மட்டக்களப்பு, வாழைச்சேனை பிரதேசத்தில் கறுவாக்கேணியை சேர்ந்த 21 வயதான நாகேந்திரன் காந்திமதி என்ற பெண் ஜோர்தானில் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக இம்மாதம் 19-ம் திகதி அவரது குடும்பத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 6-ம் திகதி உயிரிழந்ததாகக் கூறப்படும் குறித்த பெண்ணின் மரணம் தொடர்பில் தமக்கு இரண்டு வாரங்களுக்குப் பின்னரே அறிவிக்கப்பட்டதாக அவரது குடும்பத்தினர் பிபிசி தமிழோசையிடம் கூறுகின்றனர். கடந்த 2010-ம் ஆண்டு ஜூலை 22ம் திகதி இவர் வீட்டுப் பணிப்பெண்ணாக ஜோர்தான் சென்றுள்ளார்.



இளம் பெண்ணை மிரட்டி பல தடவை பாலியல் வல்லுறவு - படத் தயாரிப்பாளர் கைது!
[Saturday, 2013-05-25 14:30:48]

யுவதியொருவரை தொடர்ச்சியாக மிரட்டி வல்லுறவுக்குட்படுத்தி வந்த பிரபல திரைப்பட தயாரிப்பாளரொருவரை நாரஹெம்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த யுவதி அதுருகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதானவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. யுவதி சினிமாவில் நடிப்பதற்காக தயாரிப்பாளரிடம் வந்துள்ளதாகவும் அவருக்கு வாய்ப்பு தருவதாகக் கூறி அவரை நிர்வாணமாக படமெடுத்து பின்னர் அதனை வெளியிடப்போவதாக மிரட்டியே குறித்த நபர் தொடர்ச்சியாக வல்லுறவுக்குட்படுத்தியுள்ளார்.



முக்கோண பாதையில் 3 கோள்கள் - இலங்கையர்கள் பார்வையிடலாம்!
[Saturday, 2013-05-25 14:27:24]

சூரியனை சுற்றியுள்ள கோள்களில் மூன்று கோள்கள் முக்கோண பாதையில் தற்போது சுற்றிவருவதை வானத்தில் பார்க்கலாம் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீக விஞ்ஞான பிரிவின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்தார். இரவில் வானத்தில் தெட்டத்தெளிவாக தெரிகின்ற சனி, கோள்மண்டத்தில் மிகப்பெரிய கோளான வியாழன் மற்றும் சூரியனுக்கு மிகவும் அண்மையில் இருக்கின்ற புதன் ஆகிய கோள்களே முக்கோண பாதையில் சுற்றிவருகின்றன. இலங்கையின் வடமேல் வானத்திலேயே இதனை பார்க்க முடியும் என்று தெரிவித்துள்ள பேராசிரியர் சந்தன ஜயரத்ன இது போன்றதொரு நிகழ்வை 2021 ஆம் ஆண்டே பார்க்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.



23வது ஐ.நா மனித உரிமை பேரவை கூட்டத்தொடர் திங்களன்று ஆரம்பம்!
[Saturday, 2013-05-25 14:21:40]

ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் 23 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. எதிர்வரும் ஹூன் மாதம் 14 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள இந்த 23 ஆவது கூட்டத்தொடரின் அமர்வுகளின் போது நாடுகளின் மனித உரிமை நிலைமைகள் குறித்து ஆராயப்படவுள்ளதுடன் பல்வேறு நாடுகள் தொடர்பில் பிரேரணைகளும் முன்வைக்கப்படவுள்ளன. 47 உறுப்பு நாடுகள் இந்தக் கூட்டத்தொடரில் கலந்துகொள்ளவுள்ளதுடன் மேலும் பலநாடுகளும் அவதானிப்பு நாடுகளாகவும் கலந்துகொள்ளவுள்ளன.



ஈழத்தமிழருக்கு ஆதரவான கட்சி விரைவில் புதுடில்லியில் உதயமாகும் - தா.பாண்டியன்!
[Saturday, 2013-05-25 14:13:19]

புதுடில்லியில் விரைவில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான ஆட்சி நிச்சயம் அமையும். எதிர்வரும் இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் அது வெளிப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார். நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை சென்னையில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவுதின நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரை நிகழ்த்துகையிலேயே பாண்டியன் இதனைத் தெரிவித்தார். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவுமிக்க ஆட்சியொன்று புதுடில்லியில் வெகுவிரைவில் அமையும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு. அதன் மூலம் ஈழத் தமிழர் பிரச்சினைக்கு நியாயமான தீர்வினை விரைவாக எட்டுவதற்கான அழுத்தத்தை இலங்கை அரசுக்கு கொடுக்க முடியும் என்றும் பாண்டியன் தனது உரையில் குறிப்பிட்டார்.



13வது திருத்தச் சட்டம் தொடர்பில் கருத்துக் கூறுவதற்கு கோத்தபாயவிற்கு அதிகாரமில்லை - வாசுதேவ நாணயக்கார!
[Saturday, 2013-05-25 14:04:31]

13வது திருத்தச் சட்டம் தொடர்பில் கருத்துக்களை தெரிவிப்பதற்கு பாதுகாப்பு செயலாலர் கோத்தபாய ராஜபக்சவிற்கு அதிகாரமோ உரிமையோ கிடையாது என்று மொழி மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஜாதிக ஹெல உறுமயவினால் முன் வைக்கப்படவுள்ள தனி நபர் பிரேரணை செல்லுபடியற்றதாகும். எனவே, அரசு மேற்படி பிரேரனைக்கு அங்கீகாரம் வழங்காது என்று மொழி மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.



மட்டக்களப்பு நுழைவாயிலில் வைக்கப்படும் புத்தர் சிலை இனங்களுக்கிடையே மனக்கசப்பை ஏற்படுத்தும் - யோகேஸ்வரன் எம்.பி பிரதமருக்கு கடிதம்!
[Saturday, 2013-05-25 13:57:56]

மட்டக்களப்பு நகரின் வடக்கு நுழைவாயில் நெடுஞ்சாலையோரத்தில் புத்தர் சிலை நிறுவுவதற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியானது இனங்களுக்கிடையில் மனக்கசப்பை ஏற்படுத்தும் செயலாகும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். புத்தர் சிலையை நிறுவுதல் தொடர்பில் பிரதமர் தி.மு ஜயரட்னவிற்கு எழுதியுள்ள கடிதத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,



கல்லுடன் கட்டப்பட்ட நிலையில் கிணற்றிலிருந்து இளம் பெண்ணின் சடலம் மீட்பு: முல்லைத்தீவில் சம்பவம்!
[Saturday, 2013-05-25 09:56:07]

முல்லைத்தீவு பனிச்சங்குளப் பகுதியில் பாலியல்வல்லுறவுக்கு உள்ளாகியிருக்கலாம் என சந்ததேகிக்கப்படும் நிலையில் கிணற்றில் இருந்து இளம் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத நிலையில் இச் சடலம் இருப்பதாகவும் சடலத்திலுடன் கல்லுக்கட்டப்பட்டு போடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பிட்ட சடலம் தற்போது கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கிளிநொச்சி வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



ஆஸிக்கு செல்ல முயற்சித்த 21 இலங்கையர்கள் கேரளாவில் கைது!
[Saturday, 2013-05-25 09:30:44]

சட்டவிரோதமாக ஆஸ்திரேலியாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற 21 இலங்கை அகதிகள் இந்தியாவின் கேரளா மாநிலத்தின் ஏர்ணாகுளம் பிரதேசத்தில் வைத்து நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக கியூ பிரிவு பொலிஸார் மற்றும் கேரளப் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கப் பெற்ற தகவலின்படி இந்தச் சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 7 ஆண்கள், 6 பெண்கள் மற்றும் 8 சிறுவர்கள் நியூகொச்சின் பகுதி ஹோட்டல் ஒன்றில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் சென்னையிலிருந்து ரயில் மூலமாக கேரளா சென்றுள்ளனர்.



திருகோணமலை நகரசபையுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்பாடு குறித்து அமெரிக்க அதிகாரிகளிடம் விசாரணை செய்யவுள்ள இலங்கை அரசு!
[Saturday, 2013-05-25 09:14:17]

அமெரிக்க தகவல் நிலையத்தை அமைப்பது தொடர்பாக, திருகோணமலை நகரசபையுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்பாடு குறித்து, கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுரக அதிகாரிகளிடம் விளக்கம் கோர சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. திருகோணமலையில் பொது தகவல் மற்றும் செயற்பாட்டு நிலையத்தை (அமெரிக்கன் கோணர்) அமைப்பதற்கு கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம், திருகோணமலை நகரசபையுடன் கடந்த 22ம் நாள் உடன்பாடு ஒன்றைச் செய்து கொண்டது. இந்த உடன்பாடு குறித்து சிறிலங்கா வெளிவிவகார அமைச்சுக்குத் தெரியப்படுத்தப்படாதது சிறிலங்கா அரசாங்கத்துக்கு விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையிலேயே கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரிகளிடம் விளக்கம் கோர சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு முடிவு செய்துள்ளது.



வடக்கு தேர்தலினில் பொருத்தமானவர்கள் நிறுத்தப்படவேண்டும்! - குமாரவடிவேல் குருபரன்!
[Saturday, 2013-05-25 08:44:20]

வடக்கு மாகாணசபை தேர்தலில் எவரையும் போட்டியிடக்கூடாதெனவும் பகிஸ்கரிக்கவேண்டுமெனவும் சிவில் சமூகம் வேண்டுகோள் விடுத்திருப்பதாக கூறப்படுவது தவறான தகவலென சிவில் சமூக அமைப்புக்கள் சார்பினில் குரல்தரவல்லவரான சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் தெரிவித்தார்.



ஜனநாயக பண்புகளைக் கொண்ட அரசாங்கம் ஆசியப் பிராந்தியத்திலே இலங்கையில்தான் உள்ளது - ஜனாதிபதி பெருமிதம்!
[Saturday, 2013-05-25 08:27:33]

ஆசியாவிலேயே ஜனநாயக பண்புகளை முழுமையாக பின்பற்றி நிலையான அரசாங்கமொன்றை உருவாக்கியுள்ள நாடு இலங்கைதான் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். மஹரகம இளைஞர் சேவைகள் மன்ற அரங்கில் இரண்டாவது இளைஞர் பாராளுமன்றத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்"டவாறு குறிப்பிட்டார். ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது:-



3000 கிலோகிராம் இரும்புகள் கோப்பாயில் திருட்டு - நான்குபேர் கைது!
[Saturday, 2013-05-25 08:18:03]

யாழ்ப்பாணம், கோப்பாய் கோண்டாவில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 3000 கிலோகிராம் இரும்புகள் திருடப்பட்டுள்ளதாக சந்தேகத்தின் பேரில் நான்குபேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். களவாடப்பட்ட இரும்புகளில் 1800 கிலோகிராம் இரும்புகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த பொலிஸார். மீட்கப்பட்ட இரும்புகளில் பாரிய ஆயுதங்களின் உதிரிபாகங்களும் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த ஆயுதங்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.



வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை ஈழத்தமிழர்களுக்கும் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கும் இடையிலான ஒரு உறவுப் பாலம்! - நக்கீரன்
[Saturday, 2013-05-25 08:10:25]

தமிழர்களிடை ஒற்றுமை இல்லை, அவிழ்த்துவிட்ட நெல்லிக்காய் மூட்டை போல இருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டைப் பலர் முன் வைக்கிறார்கள். ஒற்றுமை என்பது ஒரு ஒப்பீட்டுச் சொல். நூற்றுக்கு நூறு ஒற்றுமை எந்த இனத்தவரிடமும் இல்லை. ஒற்றுமைக்குப் பெயர் போன யூதர்கள் பற்றி ஒரு பகிடி சொல்வார்கள். பத்து யூதர்கள் இருந்தால் பதினொரு கட்சிகள் இருக்குமாம். எல்லாம் வீட்டுக்கு வீடு வாசல்படி என்று சொன்ன கதைதான்.



விடுதலைப்புலிகள் தொடர்பில் பிரதியமைச்சர் முரளிதரன் விடுத்த கோரிக்கை அரசினால் நிராகரிப்பு!
[Saturday, 2013-05-25 08:10:06]

தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில், பிரதி அமைச்சர் விநாகமூர்த்தி முரளிதரன் விடுத்துள்ள கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது. கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள புலி உறுப்பினர்களை விடுதலை செய்யுமாறு பிரதியமைச்சர் முரளிதரன் அரசாங்கத்திடம் கோரியிருந்தார். விமானங்கள் மீது தாக்குதல் நடத்தியமை, இராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியமை, மக்களை கொலை செய்தமை உள்ளிட்ட பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 200 புலிஉறுப்பினர்கள் கைது செய்பப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சிறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் மட்டும் பொது மன்னிப்பு அடிப்படையில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.



இலங்கையைச் சேர்ந்த 16 புகலிடக் கோரிக்கையாளர்களை நாடுகடத்தியது அவுஸ்திரேலியா!
[Saturday, 2013-05-25 07:57:36]

சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்குச் சென்ற மேலும் 16 இலங்கையர்கள் நேற்று வெள்ளிக்கிழமை அந்நாட்டு அரசாங்கத்தினால் பலவந்தமாக நாடு கடத்தப்பட்டுள்ளனர். படகுகள் மூலம் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய வேண்டாம் எனத் தொடர்ச்சியாகக் கோரிக்கை விடுத்து வருகின்ற போதும், அக்கோரிக்கையை செவிமடுக்காது சட்டவிரோதமாக வந்த 16 பேரே இவ்வாறு நாடு கடத்தப்பட்டிருப்பதாக அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் பிரன்டன் ஓ கொன்னர் தெரிவித்தார். கடந்த வருடம் ஓகஸ்ட் மாதத்திலிருந்து சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களை அவுஸ்திரேலியா நாடு கடத்தி வருகிறது.


Canada Kanthasamy Kovil
TamilsGuid-191012-2013
RoyaShades-l2011(04-12-11)
Suresh-remax-2013-01-01
INNSYS-20120930
TDE_Computers2011
Ramans2011
NIRO-DANCE-100213
Mahesan supramaniyam 031109
AJRwindows22.05.13
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com