Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 23, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
காவிரி நீரை தமிழகத்துக்கு வழங்குவதற்கு எதிராக கர்நாடகத் தமிழர்கள் போராட்டம் - அவர்களுக்குப் பாதுகாப்புக் கோருகிறார் ராமதாஸ்!
[Wednesday, 2012-10-03 19:14:23]
News Service

கர்நாடகத் தமிழர்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது -

  

காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடக் கூடாது என்று கூறி கர்நாடகத்தில் உள்ள கன்னட அடிப்படைவாத அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த போராட்டங்களால் இரு மாநில எல்லை பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது. அடுத்தகட்டமாக 6ம் தேதி கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என கன்னட அமைப்புகள் அறிவித்துள்ளன.

1991ம் ஆண்டில் நடந்ததைபோல இப்போதும் தமிழர்களுக்கு எதிராக கலவரம் வெடிக்கும் என அங்குள்ள அமைப்புகள் மிரட்டல் விடுத்துள்ளன. இதனால் பெங்களூர், மைசூர், மண்டியா, சாம்ராஜ் நகர் பகுதிகளில் வசிக்கும் தமிழர்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே, அங்குள்ள தமிழர்களுக்கும் அவர்களின் சொத்துக்களுக்கும் முழுமையான பாதுகாப்பு அளிக்கும்படி கர்நாடக அரசை தமிழக அரசு கேட்டுக்கொள்ள வேண்டும்.

தமிழர்கள் வாழும் பகுதிகளில் தமிழ் அதிகாரிகளையே பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும். தமிழக டிஜிபி நிலையில் உள்ள அதிகாரி ஒருவரை கர்நாடகத்துக்கு அனுப்பி பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்ய வேண்டும். கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டருடன் முதல்வர் ஜெயலலிதா பேச்சுவார்த்தை நடத்தி, தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

அதேவேளை, காவிரி நதியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதை எதிர்த்து பெங்களூர் தமிழ்ச்சங்கம் தலைமையில் தமிழ் அமைப்புகள் தர்னா போராட்டங்களில் ஈடுபட்டன. இதில் கன்னட நடிகர் அம்பரீஷ் கலந்து கொண்டார்.

காவிரி நதியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் விடுவதை கண்டித்து பெங்களூர், டவுன்ஹால் எதிரே, இன்று பெங்களூர் தமிழ்ச்சங்கத்தின் தலைமையில் பல்வேறு அமைப்புகள் அறப்போராட்டம் நடத்தின. போராட்டத்திற்கு தலைமையேற்று தமிழ்ச் சங்கத் தலைவர் தாமோதரன் கூறியது:

கர்நாடகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த ஓராண்டாக கடும் வறட்சி நிலவுகிறது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் வழக்கமாக பெய்யும் மழை பெய்யாத காரணத்தால், கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹேமாவதி, ஹாரங்கி உள்ளிட்ட அணைகள் முழுமையாக நிரம்பவில்லை. பெங்களூரின் பெரும்பாலான பகுதிகளில் குடிநீர் பிரச்னை தீவிரமாக உள்ளது. இந்த நிலையில், காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாத நிலையில் கர்நாடகம் இருக்கிறது.

இந்த விவகாரத்தை அரசியல் ஆக்காமல், இரு மாநில விவசாயிகளும், வல்லுநர்களும் கலந்து பேசி நீரின் இருப்புக்கு ஏற்ப விவசாய பரப்பளவை சுருக்கி கொள்வதுடன், ஒற்றை நாற்று முறையை பின்பற்றி நீரை சிக்கனமாக பயன்படுத்த விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மத்திய அரசும் தன் பொறுப்பை தட்டிக்கழிக்காமல் இருமாநிலங்களிலும் நீரில்லாமல் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வறட்சிநிவாரண உதவி வழங்குவதோடு, தேசிய அளவில் நதிகளை இணைக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

இந்தியா ஒரே நாடு என்பதை நினைவில் கொண்டு, இருமாநில மக்களும் மனிதநேயத்துடன் ஒற்றுமையுடன் பிரச்னைக்கு தீர்வுகாண இருமாநில அரசுகளை ஊக்கப்படுத்த வேண்டும். வறட்சியின் காரணமாக தமிழகத்திற்கு தண்ணீரை தொடர்ந்து தர இயலாத கர்நாடக அரசின் முடிவை தமிழ்ச்சங்கம் ஆதரிக்கிறது. அதே போல, அக்.6ம் தேதி நடைபெறும் கர்நாடக முழு அடைப்பு போராட்டத்திற்கு கர்நாடகம் முழுவதும் இயங்கிவரும் தமிழ் அமைப்புகள், தமிழர்கள் முழு ஆதரவு அளிப்பார்கள் என்று தெரிவித்தார்.

போராட்டத்தில் நடிகர் அம்பரீஷ் கலந்து கொண்டார். தமிழர்களின் உணர்வுகளுக்கு நன்றி தெரிவித்த அம்பரீஷ், கன்னடர்களோடு தமிழர்கள் போராட்டக்களத்தில் நிற்பது நமது ஒற்றுமையை வெளிப்படுத்துகிறது என்றார்.

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

காந்தியை அடைத்திருந்த எரவாடா சிறைக்கு இரவாடு இரவாக மாற்றப்பட்டார் சஞ்சய் தத்!
[Thursday, 2013-05-23 08:03:28]

மும்பை ஆர்தர் ரோடு சிறையில் இருந்து இரவோடு இரவாக புனே எரவாடா சிறைக்கு நடிகர் சஞ்சய் தத் மாற்றப்பட்டார்.மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் பிரபல நடிகர் சஞ்சய் தத்துக்கு சிறப்பு தடா நீதிமன்றம் 6 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதை கடந்த மார்ச் 21ம் தேதி உறுதி செய்த உச்ச நீதிமன்றம், தண்டனையை 5 ஆண்டுகளாக குறைத்தது. மேலும், அதன் உத்தரவுபடி கடந்த 16ம் தேதி சிறப்பு தடா நீதிமன்றத்தில் சஞ்சய் தத் சரண் அடைந்தார். பின்னர் அவர், மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு, மும்பை தாக்குதல் வழக்கு தீவிரவாதியான அஜ்மல் கசாப் அடைக்கப்பட்டு இருந்த பாதுகாப்பு மிக்க அண்டா சிறையில் அடைக்கப்பட்டார்.



ஊழலுக்கு பொறுப்பேற்று பிரதமர் மன்மோகன்சிங் பதவி விலக வேண்டும் -கருத்துக்கணிப்பில் தகவல்!
[Thursday, 2013-05-23 07:57:31]

ஊழலுக்கு பொறுப்பேற்று பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலக வேண்டும் என்று பெரும்பான்மையான மக்கள் விரும்புவதாக கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பதவி ஏற்று நான்கு ஆண்டுகள் நிறைவு செய்வதையொட்டி நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் இத்தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா முழுவதும் 12 நகரங்களில் 18 வயது நிரம்பிய வாக்காளர் உரிமை பெற்ற 2 லட்சம் பேரிடம் இருந்து கருத்துக்கணிப்பு பெறப்பட்டுள்ளது. இவர்களில் 61 சதவீதம் பேர் மன்மோகன் சிங் பிரதமராக நீடிக்ககூடாது என்று கருத்து கூறியுள்ளனர், மன்மோகன் சிங் பிரதமராக நீடிக்க வேண்டும் என்று 37 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.



சென்னையில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய நபர் 14 மணிநேர போராட்டத்தின் பின் பிடிபட்டார் - இலங்கைப் படங்களில் நடித்தவராம்!
[Thursday, 2013-05-23 07:43:49]

கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள அபார்ட்மென்ட்டில் துப்பாக்கியால் சுட்டு மிரட்டிய நபரை 14 மணி நேர பரபரப்புக்கு பின் போலீசார் பிடித்தனர். சினிமா பாணியில் நடந்த இச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சப்தமாலிகா என்ற 4 அடுக்கு அபார்ட்மென்ட்டில், விஜயகர்(50) என்பவர் 5 ஆண்டுகளுக்கு முன் வாடகைக்கு வந்தார். 2 ஆண்டுகளாக ஒழுங்காக வாடகை கொடுத்தார். பின்னர் கடந்த 3 ஆண்டுகளாக வாடகை தராமல் ஏமாற்றி வந்துள்ளார். இதனால் உரிமையாளர் நீதிமன்றம் மூலம் வீட்டை காலி செய்ய நடவடிக்கை எடுத்தார்.



நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் அஸ்தி எங்கே? - பதிலளிக்கும் படி மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!
[Thursday, 2013-05-23 07:30:31]

நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் அஸ்தி எங்கு இருக்கிறது என்பதை தெரிவிக்கும்படி மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியை சேர்ந்தவர் பிரசாந்த் பாலிவால். டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள பொதுநலன் வழக்கில் இவர் கூறியிருப்பதாவது: சுதந்திர போராட்ட வீரர் சுபாஷ் சந்திரபோசின் அஸ்தி, ஜெர்மனியில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வரும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். அதை இந்தியா கொண்டு வந்த பிறகு பொது மக்கள் அஞ்சலிக்காக பொது இடத்தில் வைக்க வேண்டும்.



பிணைப் பணம் செலுத்தாததால், 19 ஆண்டுகளை சிறையில் கழித்த தாயை மீட்ட மகன்!
[Thursday, 2013-05-23 07:22:24]

இந்தியாவில் பிணை வழங்கப்பட்ட ஒரு பெண் கைதி, சிறையிலிருந்து 19 ஆண்டுகளுக்குப் பின்னரே விடுதலை செய்யப்பட்டது குறித்து நீதிபதிகள் கவலை தெரிவித்துள்ளனர். வட இந்திய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் கொலைக்குற்றம் சாட்டப்பட்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட விஜய் குமாரி என்ற பெண், கர்ப்பமாயிருந்த நிலையில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார். தான் குற்றமற்றவர், தவறாகக் குற்றம் சாட்டப்பட்டவர் என்று கூறியிருந்தார். அவரது கணவர் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக மேல் முறையீடு செய்திருந்தார்.



உலகின் அதிவேக ஏவுகணையான பிரமோசை வெற்றிகரமாக ஏவியது இந்தியா!
[Wednesday, 2013-05-22 18:32:06]

உலகின் அதிவேக ஏவுகணையான பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணையை இந்தியா இன்று மீண்டும் வெற்றிகரமாக பரிசோதனை செய்தது. கோவா கடற்பகுதியில் ஐஎன்எஸ் தர்காஷ் போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணை, 290 கி.மீ. தூரம் பறந்து சென்று, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை துல்லியமாகத் தாக்கியது. இந்தியா-ரஷ்யா கூட்டுத் தயாரிப்பான பிரமோஸ் ஏவுகணையானது, 300 கிலோ எடை கொண்டது. ஒலியை விட 2.8 மடங்கு வேகத்துடன் பறக்கும். இன்று ஏவுகணை செலுத்தப்பட்ட அதிநவீன போர்க்கப்பலான ஐஎன்எஸ் தர்காஷ், கடந்த ஆண்டு கப்பல் படையில் சேர்க்கப்பட்டது.



இலங்கைத் தமிழர்களை வைத்து தமிழக கட்சிகள் பிழைப்பு நடத்துகின்றன - நாராயணசாமி குற்றச்சாட்டு!
[Wednesday, 2013-05-22 18:27:46]

இலங்கைத் தமிழர்களை வைத்து தமிழக கட்சிகள் அரசியல் நடத்துவதாக குற்றம்சாட்டியுள்ளார் மத்திய அமைச்சர் நாராயணசாமி. புதுவை மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினம் கட்சி அலுவலகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்டு நாராயணசாமி பேசியதாவது:- ராஜீவ்காந்தி நம்மோடு இருந்திருந்தால் இந்தியா சீனாவை தாண்டி வளர்ச்சி பெற்று இருக்கும். ராஜீவ்காந்தி பிரதமராக இருந்த காலத்தில் அண்டை நாடுகளுடன் உறவை மேம்படுத்தினார். அனைத்து கட்சிகள் வித்தியாசமின்றி வரவேற்று கைதட்டினார்கள். துரதிர்ஷ்டவமாக அவரை இழந்து விட்டோம்.



முதல்வர் பாதுகாப்புக்கு நின்ற பொலிசார் நடுத்தெருவில் லத்தியால் அடித்துக் கொண்டு சண்டை - ஒருவர் கவலைக்கிடம்!
[Wednesday, 2013-05-22 18:14:21]

உத்தர பிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் இன்று லக்னோ கோமதி நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். இதையொட்டி அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். அவர்களில் தலைமைக் காவலர் முகுல் சந்திர யாதவுக்கும், கான்ஸ்டபிள் சுனிர் தீக்சித்துக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி, ஒருவரையொருவர் லத்தியால் தாக்கிக்கொண்டனர்.கண்ணிமைக்கும் நேரத்தில் சாலையோரம் நடந்த இந்த சண்டையில் ஒருவரின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. மற்றொருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.



சென்னை அடுக்குமாடிக் குடியிருப்பில் துப்பாக்கியுடன் புகுந்து மிரட்டும் நபரைப் பிடிக்க கொமாண்டோப் படை சுற்றிவளைப்பு!
[Wednesday, 2013-05-22 18:08:52]

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கியுடன் புகுந்து மிரட்டி வரும் நபரைப் பிடிக்க கமாண்டோ படை வரவழைக்கப்பட்டுள்ளது. கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையையொட்டி உள்ள டெய்லர்ஸ் ரோட்டில் சப்தமாலிகா அபார்ட்மெண்ட் உள்ளது. 3 மாடிகள் கொண்ட இந்த அடுக்கு மாடி குடியிருப்பில் முதல் தளத்தில் விஜய்கர் (40) என்ற சினிமா பைனான்சியர் வாடகைக்கு குடியிருக்கிறார். இவரது மனைவி ஜெபி, மகன், மகளுடன் விடுமுறையை கழிக்க வெளியூர் சென்று இருக்கிறார்கள். விஜய்கர் சரிவர வாடகை தருவதில்லை.பராமரிப்பு கட்டணமும் செலுத்தவில்லை. இதனால் அவரை வீட்டை காலி செய்யுமாறு உரிமையாளர் கூறியதாக தெரிகிறது.



டோனி மனைவி அருகே அமர்ந்து போட்டியை பார்த்தது ஏன்? - சூதாட்டத்தில் சிக்கிய பாலிவூட் நடிகர் விண்டு தாராசிங் தகவல்!
[Wednesday, 2013-05-22 17:59:56]

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளரும் இந்திய கிரிக்கெட் சபைத் தலைவருமான சீனிவாசனின் மருமகனும் அந்த அணியின் சிஇஓவுமான குருநாத் மெய்யப்பன்தான் தம்மை சென்னை போட்டியை பார்க்க வருமாறு அழைத்தார் என்று ஐபிஎல் பிக்சிங்கில் சிக்கி சிறைக்குப் போயிருக்கும் பாலிவுட் நடிகர் வின்து தாராசிங் கூறியுள்ளார்.கடந்த மாதம் ஏப்ரல் 9-ந் தேதியன்று சென்னை சேப்பாக்கத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இந்தப் போட்டியைக் காண வின்து தாரா சிங் சென்னை வந்திருந்தார். அத்துடன் சென்னை அணியின் கேப்டன் டோணியின் மனைவி சாக்ஷி அருகே அமர்ந்து போட்டியை கண்டு ரசித்தார்.



இந்திய நலனுக்கு எதிராக சீனா ஒருபோதும் செயற்படாது - பிரணாப்பிடம் வாக்குறுதி கொடுத்தார் சீனப்பிரதமர்!
[Wednesday, 2013-05-22 07:45:07]

இந்தியாவின் நலனுக்கு எதிராக சீன அரசு ஒருபோதும் செயல்படாது என்று சீன பிரதமர் லீ கெகியாங் கூறினார். இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள சீன பிரதமர் லீ கெகியாங்,செவ்வாய்க்கிழமை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்துப் பேசினார். அப்போது இத்தகைய உறுதிமொழியை அவர் அளித்தார். சீனாவின் மிகச் சிறந்த வர்த்தகக் கூட்டாளி நாடாகத்தான் இந்தியாவைப் பார்க்கிறோம். இத்தகைய சூழலில் இந்தியாவுக்கு எதிராக ஒருபோதும் செயல்பட மாட்டோம் என்று அவர் கூறினார். இந்தியாவுடனான இரு தரப்பு உறவை மேலும் வலுப்படுத்தவே சீனா விரும்புகிறது என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.



சென்னையில் 7 பரிமாண தியேட்டர் - இந்தியாவிலேயே முதல்முறை!
[Wednesday, 2013-05-22 07:31:56]

சென்னை புரசைவாக்கம் அபிராமி மெகா மாலில், இந்தியாவிலேயே முதல்முறையாக 7டி (7 பரிமாண) தியேட்டர் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. இசையமைப்பாளர் தேவா திறந்து வைத்தார். தியேட்டர் குறித்து அதன் உரிமையாளர் அபிராமி ராமநாதன் நிருபர்களிடம் கூறியதாவது: முதல் பரிமாணம் என்பது, சிறந்த முப்பரிமாணத்தில் படம் பார்ப்பது. 2வது, அற்புதமான அதிரும் ஒலி கொண்டது. 3வது, உணர்வது. 4வது, நறுமணம். 5வது, காற்று மற்றும் மின்னல். 6வது, மழை. 7வது, பனிப்பொழிவு. இந்த 7டி தியேட்டருக்கான உபகரணங்கள் மற்றும் 7டி படங்கள் இஸ்ரேல் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.



இணையத் தொலைத்தொடர்பு சேவையை கட்டுப்படுத்த 128 ஆண்டுகால சட்டத்தைத் திருத்துகிறது இந்தியா!
[Wednesday, 2013-05-22 07:27:31]

இணையதள தொலைதொடர்பு சேவையை, பயங்கரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகள் தவறாக பயன்படுத்துவதை தடுக்க, 128 ஆண்டு பழமை வாய்ந்த, "இந்திய டெலிகிராப்' சட்டத்தில், திருத்தம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில், இணையதள தொலைதொடர்பு சேவை, முக்கிய இடத்தை பெறுகிறது. இந்தச்சேவையை, பயங்கரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகள், சர்வசாதாரணமாக பயன்படுத்தி, சதி வேலைகளில் ஈடுபடுகின்றனர் . இதைத் தடுக்கும் வகையில், 128 ஆண்டுகளாக அமலில் உள்ள, இந்திய டெலிகிராப் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.



அரசியலில் குதிக்கிறார் பிரபல பாலிவுட் நடிகை பிரீத்தி ஜிந்தா!
[Wednesday, 2013-05-22 07:22:33]

பிரபல பாலிவுட் நடிகை, பிரீத்தி ஜிந்தா. ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியின் உரிமையாளராகவும் இருக்கிறார். சமீபத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: சமீபகாலமாக நாட்டில் நடக்கும் நிகழ்வுகள் என்னை மிகவும் கவலை அடைய செய்துள்ளன. எனவே, ஒரு நல்ல மாற்றம் ஏற்பட வேண்டும் என்று விரும்புகிறேன். இந்த மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று கருதுகிறேன். இதனால் அரசியலில் ஈடுபடுவது பற்றி சமீபகாலமாக யோசித்து வருகிறேன். அரசியிலில் ஈடுபட்டால், நான் நேர்மையான அரசியல்வாதியாக இருப்பேன். நிச்சயம் ஊழலில் ஈடுபட மாட்டேன். அரசியலில் ஈடுபட்டால் கவர்ச்சிகரமான அரசியல்வாதியாக இருப்பேன். நல்ல ஆடைகளுடனும், நல்ல கூந்தலுடனும் காட்சி அளிப்பேன். ஒரு நாள் மக்களை சந்தித்து எனக்கு வாக்களியுங்கள் என்று கேட்பேன். ஊழல் ஒழிந்தால் இந்தியா பிரகாசிக்கும். ஊழலால் ஏழை மக்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள். இது எனக்கு வேதனையாக இருக்கிறது என்றார்.



டோனி மனைவியுடன் அமர்ந்து கிரிக்கெட் பார்த்த தாராசிங்கின் மகன் சூதாட்டத்தில் சிக்கியதால் பரபரப்பு!
[Wednesday, 2013-05-22 07:17:24]

ஸ்பாட் பிக்சிங் சூதாட்டம் தொடர்பாக பிரபல நடிகர் தாராசிங்கின் மகன் வின்டு தாரா சிங் நேற்று கைது செய்யப்பட்டார். அவரை 3 நாள் காவலில் வைத்து விசாரிக்க போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டம் தொடர்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அஜித் சாண்டிலா, அங்கீத் சவான் மற்றும் புக்கிகள் (தரகர்கள்) கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் நடத்தப்படும் தீவிர விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வரிசையாக வெளியாகி கொண்டிருக்கின்றன. நாடு முழுவதும் பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த சூதாட்டத்தில் தொடர்புடைய நடிகர் வின்டு தாரா சிங்கை மும்பையில் போலீசார் நேற்று கைது செய்தனர்.



இந்தியப் பொருட்களுக்கு சீன சந்தையைத் திறந்துவிட சீனப்பிரதமர் இணக்கம்!
[Tuesday, 2013-05-21 18:27:16]

சீன சந்தையில் இந்திய பொருட்களுக்கு அனுமதியளிக்கப்படும் என உறுதியளித்துள்ள சீனப்பிரதமர் லீ கெகியாங், இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக பிரச்னைகள் தீர்க்கப்படும் என உறுதியளித்துள்ளார். மூன்று நாள் பயணமாக டில்லி வந்துள்ள சீனப்பிரதமர் லீ கெகியாங், நேற்று முன்தினம் இரவு பிரதமர் மன்மோகன் சிங்கை தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசினர். பின்னர் அவருக்கு பிரதமர் விருந்தளித்தார். இன்று டில்லியில் நடந்த தொழிலதிபர்கள் மாநாட்டில் சீனப்பிரதமர் லீ கெகியாங் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது, வர்த்தகம் தொடர்பாக இந்தியா தெரிவித்துள்ள கவலைகள் தீர்க்கப்படும். இந்திய பொருட்களை, சீன சந்தைகள் பயன்படுத்த மேலும் பல வசதிகள் செய்து தரப்படும்.



சீனப் பிரதமரைக் கவர்ந்த 3 இடியட்ஸ் இந்திப்படம்!
[Tuesday, 2013-05-21 18:16:34]

சீனப் பிரதமர் லீ கெகியாங் 3 நாள் பயணமாக நேற்று முன்தினம் டெல்லி வந்தார். நேற்று அவர் பிரதமர் மன்மோகன்சிங்கை 2-வது முறையாக சந்தித்துப் பேசினார். அப்போது இந்தியா - சீனா இடையேயான எல்லைப் பிரச்சினைப் பற்றி பேசினார்கள். இரு நாடுகள் இடையே வர்த்தகம், பொருளாதார ஒத்துழைப்பு, அணுமின் உற்பத்தி திட்டங்கள், ராணுவ ஒத்துழைப்பு குறித்து பேசினார்கள். பின்னர் சீனப் பிரதமர் இந்திய குழுவினருடன் இயல்பான முறையில் பேசினார். அப்போது சீனாவில் இந்திப் படங்களுக்கு வரவேற்பு இருப்பதாக தெரிவித்தார்.



வரும் ஜுனில் இந்தியாவுக்கு கிடைக்கிறது புதிய இன்டர்நெட் முகவரி!
[Tuesday, 2013-05-21 18:07:06]

வரும் ஜூன் மாதத்தில் இந்தியாவுக்கு புதிய இன்டர்நெட் முகவரி கிடைக்க உள்ளது. இந்தியாவில் டொமைன் நேம்களின் மிகப் பெரிய வினியோகஸ்தரான டைரக்டி குழுமம் டாட் இன் டாட் நெட் (.IN.NET) என்ற புதிய இன்டர்நெட் முகவரியை அறிமுகப் படுத்தியுள்ளது. அதாவது முகேஷ்அன்ட்சன்ஸ்.இன் அல்லது .காம் என்று பதிவு செய்வதற்கு பதிலாக முகேஷ்.இன்.நெட் என்று பதிவு செய்யலாம். உலக அளவில் இன்டர்நெட்டை அதிகமாகப் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் மட்டும் சுமார் 3 மில்லியன் டொமைன் நேம்கள் மற்றும் இன்டர்நெட் முகவரிகள் பயன்பாட்டில் உள்ளன. டாட் இன் டாட் நெட் முகவரியை முன்பதிவு செய்ய விரும்புவர்கள் வரும் ஜூன் மாதம் 18ம் தேதி முதல் செய்யலாம்.



யாசின் மாலிக்கை நாம் தமிழர் கூட்டத்துக்கு அழைத்து வந்ததில் என்ன தவறு? - சீமான் ஆவேசக் கேள்வி!
[Tuesday, 2013-05-21 17:50:01]

ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் யாசின் மாலிக்கை நாம் தமிழர் கூட்டத்துக்கு அழைத்து வந்ததில் என்ன தவறு? பிரதமர்களும் அரசு அதிகாரிகளும் அழைத்துப் பேச்சு நடத்தும் யாசின் மாலிக் தமிழகத்துக்கு வரக்கூடாதா.. இது என்ன தலைக்கு ஒரு சீயக்காய், தாடிக்கு ஒரு சீயக்காயா? என்று ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார் சீமான். நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடலூர் நகரில் நாம் தமிழர் கட்சி நடத்திய உள்அரங்குக் கூட்டத்தில் ஜம்மு - காஷ்மீர் விடுதலை முன்னணியில் தலைவர் யாசின் மாலிக் கலந்துகொண்டதற்கு காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிகள் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்துள்ளன. காஷ்மீர் மக்களால் பெரிதும் மதிக்கப்படும் தலைவரான யாசின் மாலிக்கின் ஜம்மு காஷ்மீர் விடுதலை இயக்கம் ஒரு தடை செய்யப்பட்ட இயக்கம் அல்ல.



சென்னையில் தாய், மனைவி, மகளைக் கொன்று விட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த இலங்கைத் தமிழர்!
[Tuesday, 2013-05-21 17:27:19]

சென்னையில் டிராவல்ஸ் நிறுவனம் வைத்திருந்த இலங்கை தமிழர் தனது தாய், மனைவி, மகளை கழுத்தை அறுத்துக் கொன்றுவிட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். சென்னை ஆதம்பாக்கம் தில்லைகங்கா நகர் 42வது தெருவைச் சேர்ந்தவர் இலங்கை தமிழர் சுந்தரேசன்(52). இலங்கையின் உள்நாட்டு போர் காரணமாக அவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் வந்து குடியேறினார். அவர் தன்னுடன் தனது தாயையும் அழைத்து வந்தார். ஆதம்பாக்கத்தில் அவர் டிராவல்ஸ் நிறுவனம் ஒன்றை வைத்து நடத்தி வந்தார். அவரது மனைவி சித்ரா(45). அவர்களுக்கு சமீரா(12) என்ற மகள் இருந்தார். அவர் நங்கநல்லூரில் உள்ள பள்ளி ஒன்றில் 8ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் லாபத்தில் சென்ற டிராவல்ஸ் நிறுவனம் கடந்த சில மாதங்களாக நஷ்டத்தில் ஓடியது.


Ramans2011
TDE_Computers2011
Suresh-remax-2013-01-01
TamilsGuid-191012-2013
Canada Kanthasamy Kovil
RoyaShades-l2011(04-12-11)
AJRwindows22.05.13
NIRO-DANCE-100213
INNSYS-20120930
Mahesan supramaniyam 031109
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com