Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
June 18, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை! - மம்தா அறிவிப்பு
[Monday, 2012-10-01 20:58:54]
News Service

சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் இன்று டெல்லியில் போராட்டம் நடத்தினார். முன்னதாக மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மந்திரி தினேஷ் திரிவேதி உள்ளிட்ட எம்.பி.க்கள் மற்றும் ஆதரவாளர்கள் பேரணியாக புறப்பட்டு ஜந்தர்மந்தர் மைதானத்திற்கு வந்தடைந்தனர்.

  

அப்போது அங்கு வந்த ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ், மம்தாவுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் பங்கேற்றார். தேசபக்தி பாடலை மம்தா பாடினார். அப்போது போராட்டத்தில் இடையூறு ஏற்படுத்த முயன்ற ஒருவரை வெளியேற்ற முயன்றனர். இதுபோன்ற இடையூறுகள் ஏற்படும் என்பது தெரிந்ததுதான் என்று மம்தா கூறினார். பின்னர் கூடியிருந்த ஆதரவாளர்களிடையே மம்தா பானர்ஜி பேசியதாவது-

சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து அடுத்த மாதம் முதல் நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும். இந்திய வணிகர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்களை பாதுகாக்கும் பொருட்டு நாடு முழுவதும் நான் சென்று போராட்டங்களில் பங்கேற்பேன். நவம்பர் மாதம் டெல்லியில் 48 மணி நேரம் தர்ணா போராட்டம் நடத்தப்படும். உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் நடத்த உள்ள பேரணி மற்றும் போராட்டத்தில் பங்கேற்கும்படி சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம்சிங் யாதவ், மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் ஆகியோருக்கு அழைப்பு விடுக்க உள்ளேன்.

இந்த அரசு ஆட்சியில் தொடருவதை நானும் விரும்பவில்லை. தேவைப்பட்டால் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரத் தயார். முலாயம்சிங் எனக்கு ஆதரவு அளித்தால், இந்த தீர்மானத்தை கொண்டு வருவேன். பாராளுமன்றத்திற்கு முன்கூட்டியே, அதாவது அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இடைத்தேர்தல் வரும் என கேள்விப்பட்டேன். எனவே இதற்கு தீர்வு காண்பதற்கு நான் தயார்.

அரசுக்கு மற்ற கட்சிகளும் ஆதரவு அளிப்பதை நிறுத்திவிட்டு, அரசின் முடிவுகளுக்கு எதிரான எங்கள் கட்சியின் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

இலங்கை தமிழர்கள் அமைதியாக வாழ்வதற்கு அனைத்து முயற்சிகளையும் இந்தியா மேற்கொள்கிறது! - கருணாநிதிக்கு மன்மோகன் கடிதம்
[Tuesday, 2013-06-18 07:09:19]

இலங்கை தமிழர்கள் அமைதியாக வாழ்வதற்கான வழிவகைகள் காணப்படும். இந்த இலக்கை அடைவதற்கான எல்லா முயற்சிகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம் என்று திமுக தலைவர் கருணாநிதிக்கு எழுதிய கடிதத்தில் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.இலங்கை தமிழர்களின் உரிமைகள், வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் விஷயத்தில் தலையிட வேண்டும். இலங்கை தமிழர்களுக்கு அதிகாரத்தை பெற்றுத்தரும் 13வது அரசியல் சட்ட திருத்தத்தை ரத்து செய்யும் முயற்சியை தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு திமுக தலைவர் கருணாநிதி கடந்த 9ம் தேதி எழுதிய கடிதத்தில் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதற்கு பிரதமர் மன்மோகன் சிங் பதில் அனுப்பியுள்ளார்.



சுதர்சன நாச்சியப்பன் உள்ளிட்ட 8 பேருக்கு மத்திய அமைச்சர் பதவி!
[Tuesday, 2013-06-18 07:01:22]

மத்திய அமைச்சரவை நேற்று மாற்றியமைக்கப்பட்டது. புதிதாக 8 அமைச்சர்கள் பதவியேற்றனர். தமிழகத்தை சேர்ந்த சுதர்சன நாச்சியப்பன் இணை அமைச்சரானார். ஜனாதிபதி மாளிகையில் நேற்று மாலையில் நடந்த நிகழ்ச்சியில் ஆஸ்கர் பெர்னாண்டஸ், கிரிஜா வியாஸ், தமிழகத்தை சேர்ந்த சுதர்சன நாச்சியப்பன் உட்பட 8 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்றனர். அவர்களுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.புதிய அமைச்சர்களில் ஆஸ்கர் பெர்னாண்டஸ், கிரிஜா வியாஸ், சிஸ்ராம் ஓலா, கே.எஸ்.ராவ் ஆகியோர் கேபினட் அமைச்சர்கள். சுதர்சன நாச்சியப்பன், ஜே.டி. சீலம், மாணிக்ராவ் காவிட், சந்தோஷ் சவுத்ரி ஆகியோர் இணை அமைச்சர்கள்.



இலங்கைப் படையினருக்கு பயிற்சி அளிப்பதற்கு எதிராக இன்று போராட்டம் - வெலிங்டனில் இராணுவத்தினர், பொலிசார் குவிப்பு!
[Tuesday, 2013-06-18 06:56:58]

இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பதை எதிர்த்து குன்னூர் வெலிங்டன் ராணுவ முகாமை பல்வேறு அரசியல் கட்சிகள் இன்று முற்றுகையிடப்போவதாக அறிவித்துள்ளன. இதையடுத்து, ராணுவம் மற்றும் போலீசாரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டம் குன்னூர் அடுத்த வெலிங்டன் கன்டோன்மென்ட் பகுதியில் ராணுவ முகாம், ராணுவ பயிற்சி மையம் உள்ளது. இந்த மையத்தில் கடந்த 27ம் தேதி முதல் இலங்கை ராணுவ அதிகாரிகள் விங் கமாண்டர் எம்.எஸ். பண்டார தசநாயக, மேஜர் சி.எஸ்.ஹரிஷ்சந்திரா ஹெட்டியராச்சிகே ஆகியோருக்கு இந்திய ராணுவத்தினர் பயிற்சி அளித்து வருகின்றனர்.



வற்றிய மேட்டூர் அணைக்குள் தெரியும் கோவிலுக்குள் புராதன காலப் புதையல்?
[Tuesday, 2013-06-18 06:51:04]

மேட்டூர் அணை கட்டப்பட்ட போது மேச்சேரி அருகே இருந்த சோழப்பாடி வீரபத்திரன் கோயில் நீரில் மூழ்கியது. இதனால் அப்பகுதியில் வசித்த மக்கள், அங்கிருந்த கோயில் சிலைகளை எடுத்து சென்று, தற்போது தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சோழப்பாடியில் வைத்து புதிய கோயில்களை கட்டினர். மேட்டூர் நீர்தேக்கம் தற்போது வறண்டுள்ள நிலையில், கடந்த 80 ஆண்டுகளாக நீரில் மூழ்கியிருந்த இந்த கோயில் வெளியே தெரிகிறது. 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோயில் சுட்ட செங்கற்கள் மற்றும் சுண்ணாம்பு கலவையால், நேர்த்தியான வேலைப்பாடுகளுடன் முன் மண்டபம், நுழைவு வாயில், உள் மண்டபம், மூலஸ்தானம் ஆகிய நான்கு நிலைகளோடு அமைக்கப்பட்டுள்ளது.



சர்ச்சையில் சிக்கினார் ஷாருக்கான் - குழந்தையின் பாலினத்தை சட்டவிரோதமாக அறிந்தாரா?
[Tuesday, 2013-06-18 06:44:03]

பாலிவுட் நடிகர் ஷாருக் கான் மீது, மகாராஷ்டிரா மாநில கதிரியக்கவியல் நிபுணர்கள் சங்கத்தின் சார்பில், மாநில சுகாதாரத் துறை அமைச்சரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக் கான், அண்மையில், தான் மூன்றுவது முறையாக தந்தையாகப் போவதாகக் கூறி, மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். ஷாருக் கான் மற்றும் அவரது மனைவி கவுரி ஆகியோர், வாடகைத் தாய் உதவியுடன், தங்களின் மூன்றாவது குழந்தையை பெற்றெடுக்கப் போவதாக, ஊடகங்களில் செய்திகள் வெளியாயின. அந்தக் குழந்தை, ஜூலை மாதம், முதல் வாரத்தில் பிறக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. அப்போது, தான் ஒரு ஆண் குழந்தைக்கு தந்தை ஆகப் போவதாக ஷாருக் கான், தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.



சுதர்சன நாச்சியப்பனுக்கும் அமைச்சர் பதவி?
[Monday, 2013-06-17 17:42:18]

மத்திய மந்திரிசபை மாற்றம் இன்றுமாலை நடைபெற உள்ளது.ரெயில்வே, நெடுஞ்சாலை, வீட்டுவசதி, ஊரக மேம்பாடு ஆகிய இலாகாக்களுக்கு புதிய மந்திரிகள் இன்று பொறுப்பு ஏற்க உள்ளனர். சிலரது இலாகா மாற்றம் செய்யப்பட உள்ளது. 10 முதல் 12 பேர் மத்திய மந்திரி சபையில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களில் 8 பேர் புதுமுகங்கள். சிஸ்ராம்ஓலா, ஜெ.டி. சீலம், சுதர்சன நாச்சியப்பன், சந்தோஷ் சவுத்திரி ஆகியோரும் மந்திரி சபையில் சேர்த்துக் கொள்ளப்பட உள்ளனர்.



உத்தர்கண்ட் மாநிலத்தில் பெருவெள்ளத்துக்கு 60 பேர் பலி - ஹர்பஜன்சிங் உள்ளிட்ட 30 ஆயிரம் யாத்திரீகர்களும் சிக்கினர்!
[Monday, 2013-06-17 17:34:32]

உத்தர்கண்ட் மாநிலத்தில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 60 பேர் பலியாகிருப்பதாக அஞ்சப்படுகிறது. மேலும் பலர் தங்களின் வீடுகளை இழந்தும், யாத்திரையாக சென்ற பக்தர்கள் பலர் தங்கள் ஊருக்கு திரும்ப முடியாமல் 30 ஆயிரம் பேர் ஆங்காங்கே தவித்தும் வருகின்றனர். இந்த யாத்ரீகர்களில் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கும் உள்ளார். இவர்கள் கடந்த 2 நாட்களாக உணவு, குடிநீர் இன்றி தவித்து வருகின்றனர்.இவர்களை மீட்கும் பணிக்கு பாதுகாப்பு மற்றும் ராணுவ வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.



மாநிலங்களவைத் தேர்தலில் டி.ராஜாவுக்கு அதிமுக திடீர் ஆதரவு!
[Monday, 2013-06-17 17:27:27]

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் இந்தியக் கம்யூனிஸ்ட் வேட்பாளர் டி.ராஜாவுக்கு அதிமுக ஆதரவு அளிப்பதை அடுத்து, தங்கள் தரப்பில் இருந்து ஒரு வேட்பாளரை வாபஸ் பெற அதிமுக முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சிபிஐ தேசியச் செயலர் டி.ராஜாவுக்கு அதிமுக ஆதரவு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும், டி.ராஜா உள்ளிட்டோர் இன்று காலை முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து பேசியபிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் தெரிகிறது. இதனிடையே அதிமுகவின் ஐந்தாவது வேட்பாளராக கடைசி நேரத்தில் அறிவிக்கப்பட்ட தங்கமுத்து தனது வேட்பு மனுவை வாபஸ் பெறுவார் என்று கூறப்படுகிறது.



இலங்கைக் கடற்படையின் தாக்குதல்கள் - மீண்டும் மன்மோகனுக்கு கடிதம் அனுப்பினார் ஜெயலலிதா!
[Monday, 2013-06-17 17:20:13]

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்தி வரும் தாக்குதல் மற்றும் அவ்வப்போது சிறை பிடித்துச் செல்லும் சம்பவங்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து இன்று அவர் எழுதியுள்ள கடிதத்தில், இந்திய கடல் பகுதிதயில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதும், கைது செய்து சிறை வைப்பதும் தொடர்கதையாகி வருகிறது.



தமிழக அமைச்சர்கள் இருவர் அதிரடியாக பதவிநீக்கம்!
[Monday, 2013-06-17 17:14:41]

தமிழக அமைச்சரவை இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழக அமைச்சரவையில் இருந்து செல்லப்பாண்டியன் மற்றும் முகம்மது ஜான் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இவர்கள் இருவருக்கும் பதிலாக எஸ்.பி.சண்முகநாதன் மற்றும் அப்துல் ரஹீம் புதிய அமைச்சர்களாக மாற்றப்பட்டுள்ளனர். எஸ்.பி.சண்முகநாதன் சுற்றுலாத்துறை அமைச்சராகவும், அப்துல் ரஹீம் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.



தன் மரணத்துக்கு சில தினங்கள் முன்பு - மனதை கரையவைத்த அமரர் மணிவண்ணனின் இறுதி செவ்வி!
[Monday, 2013-06-17 11:24:29]

தன் மரணத்துக்கு சில தினங்கள் முன்பு ஒரு பண்பலை வானொலியில் தன் குரு பாரதிராஜாவுக்கு செலுத்திய மரியாதை இது.இன்றைக்கு மணிவண்ணன் என்கிற ஒரு திரைப்பட இயக்குநர் என்கிற அடையாளம் தந்தது, எனது குருநாதர், என் ஆசான், நான் இப்போதும் போற்றும் இயக்குநர் பாரதிராஜாதான். அவர் இல்லாமல் இருந்திருந்தால், என் வாழ்க்கை எங்கேயோ திசைமாறிப் போயிருக்கும்.



குவைத்தில் இரு தமிழர்களின் தலைகள் கடைசி நேரத்தில் தப்பின - தூக்குத்தண்டனை நிறுத்திவைப்பு!
[Monday, 2013-06-17 07:32:16]

குவைத்தில், இன்று இரண்டு தமிழர்களுக்கு நிறைவேற்றப்பட இருந்த தூக்குத் தண்டனை நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுரேஷ் சண்முகசுந்தரம், காளிதாஸ் செல்லையன் ஆகியோரின் தூக்குத் தண்டனைகளே நிறுத்தப்பட்டுள்ளதாக, குவைத்திற்கான இந்திய தூதர் கூறியுள்ளார். இருவரின் தண்டனையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.



புதுடெல்லியில் கொட்டிய பேய்மழை - இந்திராகாந்தி விமான நிலையத்துக்குள் முழங்கால் அளவுக்கு வெள்ளம்!
[Monday, 2013-06-17 07:26:32]

டெல்லியில் நேற்று பலத்த மழை பெய்தது. டெல்லி நகரம் முழுவதும் சராசரியாக 36.6 மில்லி மீட்டர் மழை செய்துள்ளது.ஆனால், புதுடெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் அருகே பிற்பகல் 1 மணியிலிருந்து 5.30 மணி வரை சுமார் 4.30 மணி நேரம் அடைமழை ஓயாமல் பெய்தது.இதனால் விமான நிலையம் அருகே பகல் 1 மணி முதல் 2.30 மணி வரை 62.8 மில்லி மீட்டர் மழையும், 2.30 முதல் 5.30மணி வரை 55 மில்லி மீட்டர் மழையும் என 4 1/2 மணி நேரத்தில் 117.8 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. போதுமான வடிகால் வசதி இல்லாததால் மழைநீர் வெளியேற வழியின்றி வெள்ளமாக பெருக்கெடுத்து விமான நிலையத்தின் 3வது நுழைவு வாயில் பகுதியை வெள்ளக்காடாக மாற்றியது.



டி.ராஜாவுடன் போட்டியில்லை என்கிறார் தா.பாண்டியன் - ஆதரிக்கும்படி ஜெயலலிதாவிடம் வேண்டுகோள்!
[Monday, 2013-06-17 06:57:48]

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்சியினருக்குள் கருத்து வேறுபாடு இல்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறினார். மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட தா.பாண்டியன் விரும்புவதாகவும், அதனால் து.ராஜா, தா.பாண்டியன் ஆகிய இருவரில் யாரைத் தேர்ந்தெடுப்பது என்பதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரிடையே குழப்பம் நிலவியதாகப் பரவலாகப் பேசப்பட்டது.இது தொடர்பாக தா.பாண்டியன் கூறியது:



தமிழக மீனவர்கள் 8 பேரையும் ஜுன் 27 வரை தடுத்து வைக்க மன்னார் நீதிபதி உத்தரவு!
[Monday, 2013-06-17 06:52:19]

கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேசுவரத்தைச் சேர்ந்த 8 மீனவர்களையும் ஜூன் 27 வரை சிறையிலடைக்க மன்னார் நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். ராமேசுவரத்தைச் சேர்ந்த குணபால், தங்கச்சிமடத்தைச் சேர்ந்த சர்புதீன் ஆகிய இருவருக்கும் சொந்தமான விசைப்படகுகளில் 8 மீனவர்கள் கச்சத்தீவு அருகே சனிக்கிழமை கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, இலங்கை கடற்படையினர் இவர்கள் 8 பேரையும் கைது செய்து, தலைமன்னார் கடற்படை முகாமில் வைத்து விசாரித்தனர்.



மாநிலங்களவையின் 6 இடங்களுக்கு 7 பேர் போட்டி - தேர்தல் நடப்பது எப்படி?
[Monday, 2013-06-17 06:47:07]

தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு 7 பேர் போட்டியிடுகின்றனர். இதனால் தேர்தல் நடைபெறுவது உறுதியாகியுள்ளது. மாநிலங்களவையின் மொத்த உறுப்பினர்கள் 250 பேர். 238 பேரை எம்எல்ஏக்கள் தேர்ந்தெடுப்பார்கள். 12 பேர் நியமன எம்பிக்கள். தமிழகத்தின் சார்பில் 18 பேர் எம்பிக்களாக இருக்கலாம். அதில் 6 பேரின் பதவிக்காலம் அடுத்த மாதம் 24ம் தேதியுடன் முடிகிறது. அதற்கு தற்போது தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு உறுப்பினரை தேர்வு செய்ய 34 பேர் ஆதரித்து வாக்களிக்க வேண்டும்.



குஜராத்தில் பிரிட்டன் இளவரசரின் வம்சாவளியினரைத் தேடுவதில் சூரத் மக்கள் ஆர்வம்!
[Sunday, 2013-06-16 20:12:19]

பிரிட்டன் இளவரசர், வில்லியமின் உடலில், இந்திய மரபணு இருப்பதாக வெளியான தகவலை அடுத்து, குஜராத் மாநிலத்தில், வில்லியமின் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள், யாராவது வசிக்கின்றனரா என, தெரிந்து கொள்வதற்கான நடவடிக்கைகளில், சிலர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.பிரிட்டன் இளவரசர், வில்லியமின் உடலில், இந்திய மரபணு இருப்பதாகவும், அவர், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்றும், பிரிட்டனில் உள்ள, மரபணுச் சோதனை நடத்தும் நிறுவனம், ஒரு ஆச்சர்ய தகவலை வெளியிட்டது.



ஆறு ஆண்டுகளில் மூன்று மடங்கானது கனிமொழியின் சொத்து - தற்போது மதிப்பு 26.67 கோடி ரூபா!
[Sunday, 2013-06-16 20:06:17]

திமுக எம்.பி. கனிமொழியின் சொத்துக்கள் கடந்த 6 ஆண்டுகளில் ரூ.8.56 கோடியில் இருந்து ரூ.26.67 கோடியாக அதிகரித்துள்ளது. திமுக எம்.பி. கனிமொழி மீண்டும் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடுகிறார். இதற்கான வேட்புமனுவை அவர் நேற்று தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கலின்போது தனது சொத்து விவரங்களை அவர் அளித்தார். தனக்கு ரூ.16.67 கோடி மதிப்புள்ள அசையும் சொத்துக்கள் மற்றும் ரூ.10 கோடி அசையா சொத்துக்கள் என்று மொத்தம் ரூ.26.67 கோடிக்கு சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு அவரிடம் ரூ.8.56 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் தான் இருந்தன.



பீகாரில் பாஜகவுடனான 17 ஆண்டுகால கூட்டணியை முறித்தார் நிதீஷ்குமார்!
[Sunday, 2013-06-16 20:03:15]

பீகார் முதல்வர் நிதீஷ் குமாருக்கும், பாஜகவுக்கும் இடையிலான பீகார் மாநிலம் தழுவிய 17 ஆண்டு கால கூட்டணி முடிவுக்கு வந்து விட்டது. தனது வீட்டில் ஐக்கிய ஜனதாதள தலைவர்கள், எம்.எல்.ஏக்கள் கூட்டம் முடிந்தவுடன் நேராக ஆளுநரைச் சந்தித்து கூட்டணியிலிருந்து விலகி விட்டதை தெரிவித்தார் நிதீஷ் குமார். நிதீஷ் குமார் வீட்டில் கூட்டம் முன்னதாக நிதீஷ் குமார் வீட்டில் ஐக்கிய ஜனதாதள தலைவர்கள், எம்.எல்.ஏக்கள் கூட்டம் கூடியது. அதில் பாஜக கூட்டணியை முறி்த்துக் கொள்வது தொடர்பான ஆலோசனை நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு முன்னதாக, அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டினார் நிதீஷ் குமார்.



மாநிலங்களவைத் தேர்தலில் டி.ராஜாவும் போட்டி!
[Sunday, 2013-06-16 19:41:09]

மாநிலங்களவைத் தேர்தல்களில் தமிழகத்திலிருந்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக டி ராஜா போட்டியிடுவார் என கட்சியின் பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி இன்று சென்னையில் அறிவித்தார். கட்சியின் தேசியச் செயலர் ராஜா கடந்த முறை திமுக ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இம்முறை அ இஅதிமுக கூட்டணியிலிருப்பதால் அதன் ஆதரவு கிடைக்கும் எனக் கட்சித் தலைமை எதிர்பார்த்தது, ஆனால் ஆளும் அ இஅதிமுகவோ ஐந்து இடங்களுக்குப் போட்டியிடுகிறது. அவை அனைத்திலும் வெற்றி பெறவே அதற்கு வேறு சில தோழமைக் கட்சிகளின் ஆதரவு தேவைப்படும்.


NIRO-DANCE-100213
TamilsGuid-191012-2013
TDE_Computers2011
RoyaShades-l2011(04-12-11)
INNSYS-20120930
Ramans2011
AJRwindows22.05.13
Suresh-remax-2013-01-01
Mahesan supramaniyam 031109
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com