Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 27, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மரணம்!
[Sunday, 2012-09-30 19:18:38]
News Service

நாட்டின் முதல் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த பிரஜேஸ் மிஸ்ரா வெள்ளிக்கிழமை இரவு காலமானார். அவருக்கு வயது 85. அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராக இருந்த போது, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் முதன் முதலில் நியமிக்கப்பட்ட பிரிஜேஸ் மிஸ்ரா, வாஜ்பாயின் முதன்மை செயலாளராகவும் இருந்துள்ளார்.

  

1928ம் ஆண்டு செப்டம்பர் 29 ம் தேதி மத்திய பிரதேச மாநிலத்தில் பிரஜேஸ் மிஸ்ரா பிறந்தார். அவரது தந்தை துவாரகா பிரசாத் மிஸ்ரா காங்கிரஸ் கட்சியில் சிறந்த தலைவராக இருந்தவர். முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியிடம் நெருக்கமாக இருந்தவர். மத்தியபிரதேச மாநிலத்தின் முதலமைச்சராகவும் இருந்துள்ளார்.

தந்தை காங்கிரஸ்காரராக இருந்தாலும் 1991ம் ஆண்டு பாஜகவில் இணைந்த பிரஜேஸ் மிஸ்ரா வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்ந்தவர். உள்நாட்டு, வெளிநாட்டு விவகாரங்களில் சிறப்பான பணிக்களை செய்துள்ளார். இந்தியா-பாகிஸ்தான், இந்தியா-சீனா, இந்தியா- அமெரிக்கா இடையேயான உறவுகளை சிறந்த ராஜதந்திர முறையை கையாண்டுள்ளார்.

1998ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அப்போதைய பிரதமர் வாஜ்பாய் அவர்களால் நியமிக்கப்பட்டார் 2004ம் ஆண்டுவரை அந்த பதவியை வகித்தார். தேசிய ஜனநாயக கூட்டனி ஆட்சி காலத்தில் மிஸ்ராவின் பணி சிறப்பு வாய்ந்ததாக இருந்துள்ளது. வெளியுறவுக் கொள்கையில் சிறந்த ராஜதந்திரியாக இருந்த அவர், 1998ம் ஆண்டு மே மாதம் இந்தியா நடத்திய அணுகுண்டு சோதனையின் போது முக்கிய பங்காற்றினார்.

நேற்று பிரஜேஸ் மிஸ்ரா 85 வது பிறந்த நாள் கொண்டாட இருந்த நிலையில் நேற்றுமுன்தினம் அவர் மயங்கிய நிலையில் வீட்டில் இருந்தார். இதனையடுத்து டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

இந்திய எல்லைக்குள் 5.கி.மீ தூரத்துக்கு சாலை அமைத்து அத்துமீறியது சீனப் படை!
[Monday, 2013-05-27 08:12:23]

எல்லையில் சீனாவின் அத்துமீறல் தொடர்ந்து நீடிக்கிறது. எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் இந்திய எல்லைக்குள் 5 கி.மீ. தூரத்துக்கு சீன ராணுவம் சாலை அமைத்துள்ளது. இந்திய வீரர்களை எல்லை கட்டுப்பாடு கோடு பகுதிக்கு செல்வதையும் சீன ராணுவத்தினர் தடுக்கின்றனர். காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் கடந்த மாதம் 15ம் தேதி இரவு தவுலத் பெக் ஓல்டி பகுதியில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி இந்திய எல்லைக்குள் சீன ராணுவத்தினர் 19 கி.மீ. ஊடுருவி கூடாரம் அமைத்தனர். ஆனால், ஊடுருவலே அல்ல என்று சீனா மறுத்தது. இது தொடர்பாக சீன அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. மேலும், எல்லை பகுதியில் இருதரப்பு ராணுவத்தினருக்கும் நடந்த பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து, இந்திய பகுதியில் இருந்து ராணுவத்தை வாபஸ் பெற்றதாக சீனா அறிவித்தது.



கொல்லாமல் விடமாட்டோம் - முஷாரப்புக்கு தலிபான்கள் மீண்டும் எச்சரிக்கை!
[Monday, 2013-05-27 08:08:22]

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்புக்கு தலிபான் தீவிரவாதிகள் மீண்டும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ படுகொலை, 2007ம் ஆண்டில் நீதிபதிகளை பதவி நீக்கம் செய்தது, 2006ம் ஆண்டில் பலுசிஸ்தான் தலைவர் கொல்லப்பட்டது போன்ற வழக்குகளில் பர்வேஸ் முஷாரப் கைது செய்யப்பட்டு ஏப்ரல் 19ம் தேதி முதல் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.கடந்த மார்ச் மாதம் அவர் பாகிஸ்தான் திரும்புவதற்கு முன்பே, தெஹ்ரிக்,இ,தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) தீவிரவாதிகள் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.



நக்சல்களால் கடத்தப்பட்ட மாநில காங்கிரஸ் தலைவர், மகன் சடலங்களாக மீட்பு- உயிருக்குப் போராடுகிறார் சுக்லா!
[Monday, 2013-05-27 07:37:22]

சட்டீஸ்கர் மாநிலத்தில் நக்சல்களால் கடத்திச் செல்லப்பட்ட மாநில காங்கிரஸ் தலைவரும் அவரது மகனும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த அவர்களின் உடல்கள் காட்டில் மீட்கப்பட்டன. நக்சல்கள் தாக்குதலில் காயமடைந்த முன்னாள் மத்திய அமைச்சர் வி.சி.சுக்லாவின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.பஸ்தார் மாவட்டம், ஜக்தல்பூர் அருகே நேற்று முன்தினம் மாலை காங்கிரஸ் பேரணி நடந்தது. இதில் மாநில காங்கிரஸ் தலைவர் நந்தகுமார் படேல், முன்னாள் மத்திய அமைச்சர் வி.சி.சுக்லா, மாநில முன்னாள் உள்துறை அமைச்சர் மகேந்திர கர்மா, முன்னாள் எம்எல்ஏ உதயகுமார் முதலியார் உட்பட காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்றனர்.



ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பையிடம் தோல்வி - போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றார் சச்சின்!
[Monday, 2013-05-27 07:25:22]

சூப்பர் கிங்ஸ் அணியுடனான ஐபிஎல் டி20 இறுதிப் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி 23 ரன் வித்தியாசத்தில் வென்றது. கொல்கத்தாவில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற மும்பை முதலில் பேட் செய்தது. தொடக்க வீரர்களாக ஸ்மித், தாரே களமிறங்கினர். மோகித் வீசிய முதல் ஓவரில் அதிரடி வீரர் ஸ்மித் வெறும் 4 ரன் மட்டுமே எடுத்து வெளியேற மும்பை அணிக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது. அடுத்து மார்க்கெல் வீசிய 2வது ஓவரின் முதல் பந்தில் தாரே டக் அவுட் ஆனார். கேப்டன் ரோகித் 2 ரன் எடுத்த நிலையில், மார்க்கெல் வேகத்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். மும்பை 3.2 ஓவரில் 16 ரன்னுக்கு 3 விக்கெட் பறிகொடுத்து பரிதவித்தது. கார்த்திக் 21 ரன் எடுத்து கிறிஸ் மோரிஸ் பந்துவீச்சில் கிளீன் போல்டாகி ஆட்டமிழந்தார். அடுத்து ராயுடுவுடன் அதிரடி வீரர் போலார்டு ஜோடி சேர்ந்தார்.



நிபுணர்குழு பரிந்துரையை அடுத்து கூடுகிறது திருப்பதி லட்டின் சுவை!
[Sunday, 2013-05-26 19:31:14]

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழங்கும் லட்டு பிரசாதம் உலக பிரசித்தி பெற்றது. இதன் சுவையும், மணமும் அலாதியானது. இதேபோல் மற்ற பிரதாசங்களும் தயாரிக்கப்படுகிறது. இந்த நிலையில் திருப்பதி கோவில் லட்டு பிரசாதத்தின் தரத்தை உயர்த்த தேவஸ்தான நிர்வாகிகள் முடிவு செய்து உள்ளனர். இதற்காக பல்வேறு நிபுணர்கள் கொண்ட குழுவை தேவஸ்தானம் நியமித்து உள்ளது. இக்குழுவினர் லட்டுவின் தரத்தை ஆய்வு செய்தனர். திருப்பதி கோவில் தினமும் 2 லட்சம் முதல் 3 லட்சம் லட்டுகள் தயார் செய்யப்படுகிறது. இதற்காக 9 முதல் 10 டன் நெய் உபயோகப்படுத்தப்படுகிறது.



ஆந்திராவில் கொளுத்தி எரியும் அக்னி வெயிலால் சுருண்டு விழும் மக்கள் - நேற்றும் 544 பேரைப் பலியெடுத்தது!
[Sunday, 2013-05-26 19:26:22]

அக்னி நட்சத்திர வெயில் வடமாநிலங்களில் வாட்டி வதைத்து வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக அக்னி வெயில் அனல் காற்றை கக்கி வருகிறது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் 108 டிகிரியை கடந்து வெயில் கொளுத்தியது. ஆனால் ஆந்திராவில் குறைந்த பட்சமாக 115 டிகிரி வெயில் அடிக்கிறது. கம்மம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 122 டிகிரி வெயில் கொளுத்தியது. நேற்று 118 டிகிரி வெயில் பதிவானது. இதற்கு அடுத்தப்படியாக விசாகப்பட்டினத்தில் 116 டிகிரி வெயில் அடித்தது.



வி.சி.சுக்லாவை பார்க்க தலைவர்கள் படையெடுப்பு - இதற்கெல்லாம் பயப்படமாட்டோம் என்கிறார் ராகுல்!
[Sunday, 2013-05-26 19:19:29]

சட்டீஸ்கர் மாநிலத்தில் நேற்று நக்ஸலைட்கள் திடீரெனத் தாக்கியதில் மாநில காங்கிரஸ் தலைவர் நந்தகுமார் படேல், மூத்த காங்கிரஸ் தலைவர் மஹேந்திர கர்மா ஆகியோர் கொல்லப்பட்டனர். கட்சித் தலைவர் வி.சி.சுக்லா படுகாயம் அடைந்து தில்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை இன்று மதியம் 3.45க்கு பாஜக தலைவர் எல்.கே. அத்வானி சென்று பார்த்து, ஆறுதல் கூறினார். 4.50க்கு கர்காவ்னில் உள்ள மெடாண்டா மருத்துவமனைக்கு வந்திருந்த பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் சந்தித்து ஆறுதல் கூறினர். மாலை 5.30 மணி அளவில் ஹரியானா மாநில முதல்வர் பூபெந்தர் சிங் ஹூடா மருத்துவமனைக்கு வந்து வி.சி.சுக்லாவின் உடல் நலம் குறித்து விசாரித்தார்.



டிஎம்எஸ் உடல் இன்றுமாலை தீயுடன் சங்கமித்தது - ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி!
[Sunday, 2013-05-26 18:45:17]

மறைந்த பழம்பெரும் பின்னணிப் பாடகர் டி.எம்.செளந்தரராஜன் இறுதிச் சடங்குகள் இன்று மாலை நடந்தது. ஆயிரக்கணக்கானோர் அதில் கலந்து கொண்டனர். சாகாவரம் படைத்த பல ஆயிரம் பாடல்களைப் பாடிய டிஎம்எஸ் கண் மூடி விட்டார். அவரது மறைவால் உலகத் தமிழர்கள் பெரும் சோகமடைந்துள்ளனர். எங்கு பார்த்தாலும் டிஎம்எஸ் பேச்சாகவே உள்ளது. காய்கறிக் கடை, டீக் கடை, கறிக் கடை என்று எந்த இடமாக இருந்தாலும் மக்கள் டிஎம்எஸ்ஸின் குரலையும், அவரது பாடல்களையும் பற்றியே பேசியபடி உள்ளனர். சென்னையில் உள்ள டிஎம்எஸ்ஸின் வீட்டில் திரைப்படத் துறையினர், அரசியல் துறையினர், பல்துறைப் பிரபலங்கள், ரசிகர்கள் குவி்ந்து அஞ்சலி செலுத்தி வந்தனர்.



டோனியின் வியூகங்களை தரகர்களுக்குப் போட்டுக் கொடுத்ததை ஒப்புக்கொண்டார் குருநாத் மெய்யப்பன்!
[Sunday, 2013-05-26 18:38:16]

ஐபில் சூதாட்டத்தில் கைதான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிஇஓ குருநாத் மெய்யப்பன் தான் பெட்டிங்கில் இழந்த பணத்தை சம்பாதிக்க தனது அணியின் வியூகங்களை தரகர்களுக்கு தெரிவித்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். ஐபிஎல் ஸ்பாட் பிக்ஸிங்கில் தொடர்புடைய மறைந்த பாலிவுட் நடிகர் தாரா சிங்கின் மகன் வின்து தாரா சிங் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளரும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் சீனிவாசனின் மருமகனும், அணியின் சிஇஓவுமான குருநாத் மெய்யப்பன் சார்பில் பெட்டிங்கில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.



சீனாவுடனான பிரச்சினைக்கு உடனடித் தீர்வு கிடைக்காது - பாதுகாப்பு அமைச்சர் அந்தோனி!
[Sunday, 2013-05-26 08:09:16]

சீனா உடனான பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு கிடைத்து அதிசயம் நடக்கும் என தான் எதிர்பார்க்கவில்லை என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோனி தெரிவித்துள்ளார். கேரளாவில் எழிமலா என்ற இடத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில இதனை அவர் தெரிவித்தார். இந்தியா சீனா இரு நாடுகளிடையே ஒத்துழைப்பும் போட்டியும் உள்ளது என்றும் அண்டை நாடுகளாக உள்ள இரு நாடுகளும் இணைந்து பணியாற்றும் என்றும் ஏ.கே. அந்தோனி தெரிவித்துள்ளார். இரு நாடுகளிடையே நிலவும் பிரச்னைகளை பேச்சுவார்த்தை மூலம் தீ்ர்க்க முயற்சி எடுத்து வருவதாகவும் ஏ.கே. அந்தோனி கூறினார். அதற்கு இரு நாடுகளும் போதிய கால அவகாசம் எடுத்துக் கொள்வது இயற்கையே என்றும் அவர் குறிப்பிட்டார்.



ஏழுமலையானிடம் 50 ஆயிரம் கோடி ரூபா மதிப்புள்ள 11 டன் தங்க ஆபரணங்கள் - படங்களை இணையத்தில் வெளியிட முடிவு!
[Sunday, 2013-05-26 07:37:44]

திருப்பதி ஏழுமலையான் கோயில் நகை, ஆபரணங்களின் படங்களை இணைய தளத்தில் வெளியிட தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமிக்காக 11 டன் தங்க நகைகள், 5 ஆயிரம் ஆபரணங்கள் உள்ளன. இதில் மூலவருக்கும், உற்சவருக்கும் தினமும் பல்வேறு அலங்காரம் செய்யப்படுகிறது. சிறப்பு உற்சவ நாட்களில் சுவாமிக்கு வைர கிரீடங்கள் அணிவிக்கப்படுகிறது. இதற்காக 19ம் நூற்றாண்டில் பல்லவ ராணி, கிருஷ்ண தேவராயர், வெங்கடகிரி ஜமீன்தாரர்கள் விலை உயர்ந்த வைரம், வைடூரியங்கள் பொருத்திய ஆபரணங்களை வழங்கினர். இவை பாதுகாப்பாகவும், கணக்கு சரியாகவும் உள்ளதா என பல ஆண்டுகளாக பக்தர்கள் மத்தியில் சந்தேகம் இருந்து வந்தது.



பாமக இடம்பெறும் அணியில் விடுதலைச் சிறுத்தைகள் இருக்காது - திருமாவளவன் திட்டவட்டம்!
[Sunday, 2013-05-26 07:31:32]

பாமக இடம்பெறும் அணியில் விடுதலைச் சிறுத்தைகள் இடம்பெறுவது என்பது சாத்தியமில்லாதது என்று அக் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். மாநிலங்களவைத் தேர்தலில் பாமகவின் ஆதரவை கேட்டுப் பெறுவதற்கான முயற்சியில் திமுக ஈடுபட்டுள்ளது.சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பா.ம.க. நிறுவனர் ராமதாசை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி இருவரும் வெள்ளிக்கிழமை சந்தித்து உடல்நலம் விசாரித்துள்ளனர். மாநிலங்களவைத் தேர்தலுக்கு பா.ம.க.வின் ஆதரவை திமுக கேட்டுள்ளதுடன், பா.ம.க.வும் திமுகவை ஆதரிப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.



நக்சல்களின் தாக்குதலில் முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட 21 பேர் பலி - வி.சி.சுக்லாவுக்கு காயம், மாநில காங்கிரஸ் தலைவர் கடத்தல்!
[Sunday, 2013-05-26 07:13:53]

சத்தீஸ்கர் மாநிலத்தில் நேற்று மாலை நக்சலைட்கள் நடத்திய தாக்குதலில் முன்னாள் மாநில உள்துறை அமைச்சர் உள்ளிட்ட 21 பேர் கொல்லப்பட்டதுடன் முன்னாள் மத்திய அமைச்சர் வி.சி.சுக்லா உள்ளிட்ட பலர் படுகாயமடைந்தார். இந்தச் சம்பவம் மத்திய அரசை பெரிதும் அதிரச்சியடைய வைத்துள்ளது. சத்தீஸ்கரின் ஜக்தால்பூர் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சிமாற்ற யாத்திரை சனிக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு விட்டு காங்கிரஸ் தலைவர்கள் ஜக்தால்பூருக்கு வாகனங்களில் திரும்பிக் கொண்டிருந்தனர். கீடம் காட்டி என்ற வனப்பகுதியை அடுத்த தர்பா காட்டி கிராமத்தில் மாலை 5.30 மணியளவில் அவர்களது வாகனங்கள் சென்றபோது, ஆயுதம் தாங்கிய சுமார் 100-150 மாவோயிஸ்ட்டுகள் அவர்களை வழிமறித்தனர்.



அறுபது ஆண்டுகளில் யாரும் பெறாத இடத்தைப் பெற்றார் டிஎம்எஸ் - கருணாநிதி இரங்கல்!
[Saturday, 2013-05-25 18:52:59]

சென்னையில் இன்று காலமான பிரபல பின்னணிப் பாடகர் டி.எம்.செளந்தரராஜனுக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு:- 1950ஆம் ஆண்டில் சேலம் மாடர்ன் தியேட்டரில் மந்திரிகுமாரி திரைப்படத்திற்கு நான் திரைக்கதை-வசனம் எழுதிய காலத்திலிருந்து, நண்பர் டி.எம்.எஸ். அவர்களுடன் எனக்கு நல்ல நட்பு உண்டு. திரை இசை, மக்கள் இசை! அதன் அறுபது ஆண்டு கால வரலாற்றில் வேறு எந்தப் பாடகரும் பெறாத இடத்தை டி.எம்.எஸ். பெற்றிருக்கிறார். தியாகராஜ பாகவதரைப் பின்பற்றிப் பாடத் தொடங்கியவர்; இசை அமைப்பாளர் ஜி. ராமநாதனால் சிறந்த பின்னணிப் பாடகராக உருவாக்கப்பட்டவர்.



ஐபிஎல் சூதாட்டத்தில் கிறிஸ் கெய்ல் மீதும் சந்தேகம்!
[Saturday, 2013-05-25 18:42:17]

நாட்டை உலுக்கி எடுத்து வரும் ஐபிஎல் பிக்ஸிங் விவகாரத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் புயலாக வர்ணிக்கப்படும் கிறிஸ் கெய்ல் பெயரும் அடிபடுகிறது. பிக்ஸிங் விவகாரத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 3 வீரர்கள் சிறைக்குப் போனார்கள். பிறகு நாட்டின் பல நகரங்களிலும் பல புக்கிகள் தொடர்ந்தும் சிக்கி வருகின்றனர். பாலிவுட் நடிகர் வின்துவும் சிக்கப் போய் இப்போ சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகி குருநாத் மெய்யப்பன் சிறைக்குப் போயிருக்கிறார். அத்துடன் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியின் 8 வீரர்கள் சிக்கப் போவதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இந்த நிலையில் ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வீரர் கிறிஸ் கெய்ல் பெயரும் பிக்ஸிங் விவகாரத்தில் அடிபடுகிறது.



ஆந்திராவில் அனலாய் கொதிக்கும் வெயில் - நேற்று மட்டும் 293 பேர் பலி!
[Saturday, 2013-05-25 18:20:26]

ஆந்திராவில் கடந்த சில நாட்களாக அனல் காற்றுடன் வெயில் கொளுத்துகிறது. நேற்று மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் 115 டிகிரிக்கும் அதிகமாக வெயில் பதிவானது. கம்மம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 122 டிகிரி வெயில் கொளுத்தியது. நெருப்பு மழை கொட்டுவது போல் அனல் காற்று வீசியது. இரவு 10 மணி ஆன போதிலும் வெப்பத்தின் தாக்கம் குறையவில்லை. அனல் காற்று மற்றும் வெயிலின் வெப்பத்துக்கு ஆந்திராவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 293 பேர் பலியானார்கள். இவர்களில் பெரும்பாலானோர் முதியவர்கள், கூலித் தொழிலாளர்கள், குழந்தைகள் ஆவார்கள்.



மணிப்பூரில் பேச்சுக்கு வந்த போராளிக் குழுத் தலைவர் சுட்டுக்கொலை!
[Saturday, 2013-05-25 17:58:50]

மணிப்பூர் மாநிலத்தைப் பிரிக்க வேண்டும் என்று குகி தேசிய முன்னணி உள்ளிட்ட பல போராளி இயக்கங்கள் போராடி வருகின்றன. தற்போது அந்த இயக்கங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தி, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதற்காக நியமிக்கப்பட்ட சிறப்பு முகாம்களில் தீவிரவாத இயக்க தலைவர்கள் தங்கியிருக்கின்றனர். அமைதி பேச்சுவார்த்தைக்காக, சேனாபதி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் தங்கியிருந்த குகி தேசிய முன்னணி தலைவர் சீகோபாவ் கிப்கன் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். அந்த முகாமின் கமாண்டராகவும் அவர் செயல்பட்டு வந்தார்.



எல்லையில் பாகிஸ்தான் படையினர் சுட்டதில் இந்திய பிரிகேடியர் படுகாயம் - மற்றொரு வீரர் கண்ணிவெடிக்குப் பலி!
[Saturday, 2013-05-25 17:52:00]

இந்திய எல்லையான காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பிரிகேடியர் ஒருவரும், 2 வீரர்களும் காயமடைந்தனர். எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் துத்மாரி கலி என்ற இடத்தில், பாகிஸ்தான் ராணுவத்தினர் சிறிய ரக ஆயுதங்களைக் கொண்டு இந்திய எல்லையைக் குறி வைத்து தாக்குதல் நடத்தினர். இதில் மூன்று பேர் காயமடைந்தனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் எல்லைப் பகுதியான பூஞ்சில் நேரிட்ட கண்ணிவெடித் தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் காயமடைந்தார்.



தேன்மதுர தமிழ் இசையால் கோடிக்கணக்கான இதயங்களை கட்டிப்போட்ட மதுரக் குரல் இன்று ஓய்ந்தது! Top News
[Saturday, 2013-05-25 17:26:59]

பிரபல தமிழ் திரைப்பட பின்னணிப் பாடகர் டி. எம். சௌந்தரராஜன் அவர்கள் சென்னையில் காலமானார். இருதயக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் பின்னர் வீடு திரும்பியிருந்தார். ஆயினும் இன்று சனிக்கிழமை சற்று நேரம் முன்னதாக அவர் தனது வீட்டில் காலமானார். அவருக்கு வயது 91. தென்னிந்திய திரையுலகில் அரை நூற்றாண்டுக்கும் அதிகமாக பின்னணி பாடி வந்த இவர், பட்டினத்தார் உட்பட சில திரைப்படங்களிலும் நடித்திருந்தார். 1923 ஆம் ஆண்டு மதுரையில் சௌராஸ்டிர குடும்பத்தில் பிறந்த இவரது தகப்பனார் பெயர் மீனாட்சி ஐயங்கார். 1950 ஆம் ஆண்டும் கிருஷ்ண விஜயம் என்னும் படத்தில் 'ராதே என்னை விட்டுப் போகாதடி'' என்னும் பாடலுடன் இவர் அறிமுகமானார். தமிழ் தவிர தெலுங்கு மலையாளம் ஆகிய மொழிகளிலுமாக 10, 000 பாடல்களுக்கும் அதிகமாக அவர் பாடியிருக்கிறார்.



மருத்துவமனையில் ராமதாசை சந்தித்து நலம் விசாரித்தார் கனிமொழி - பாமகவுடன் கூட்டணிக்கு திமுக புதுவியூகம்!
[Saturday, 2013-05-25 08:05:35]

மாநிலங்களவைத் தேர்தலில் தி.மு.க. எப்படியாவது ஓரிடத்தையாவது கைப்பற்ற வேண்டும் என்பதில் முனைப்பாக இருக்கிறது. கனிமொழி, திருச்சி சிவா ஆகிய இருவரின் மாநிலங்களவை உறுப்பினர் பதவி வரும் ஜூலை மாதம் 24-ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், கனிமொழியை மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராக்க வேண்டும் என்கிற முயற்சியில் தி.மு.க. தலைமை ஈடுபட்டிருக்கிறது.மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற வேண்டும் என்ற எண்ணத்தில் கனிமொழி, கடலூர் மற்றும் தூத்துக்குடி தொகுதிகளில் கள ஆய்வுகள் செய்திருந்தார்.


RoyaShades-l2011(04-12-11)
AJRwindows22.05.13
Suresh-remax-2013-01-01
Canada Kanthasamy Kovil
NIRO-DANCE-100213
TDE_Computers2011
INNSYS-20120930
Mahesan supramaniyam 031109
TamilsGuid-191012-2013
Ramans2011
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com