Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 18, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
இரு தரப்பு பேச்சுவார்த்தை இடம்பெற்று அதில் தீர்வு ஒன்று ௭ட்டப்பட வேண்டும் என இந்திய தரப்பிடம் வலியுறுத்துவோம்: - சுரேஷ் பிரேமச்சந்திரன்
[Saturday, 2012-09-29 10:57:28]
News Service

பாராளுமன்றத் தெரிவுக் குழுவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செல்வதானால் சரியானதொரு பிரேரணையைக் கொண்டு போக வேண்டும். இதற்கு அரசு - கூட்டமைப்பு இரு தரப்பு பேச்சுவார்த்தை இடம்பெற்று அதில் தீர்வு ஒன்று ௭ட்டப்பட வேண்டும். இதனை இந்திய தரப்பிடம் வலியுறுத்துவோம் ௭ன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் கருத்துத் தெரிவித்தார்.

  

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு புதுடில்லி விடுத்துள்ள அழைப்பு தொடர்பில் கருத்துக் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பொத்துவிலில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் இதனைத் தெரிவித்ததுடன் சமகால நிலைமைகள் தொடர்பான கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவின் அழைப்பை ஏற்று சந்திப்பிற்காகப் போகவிருக்கின்றது. ஆனால் இதுவரை ௭ம்மை ௭தற்காக அழைத்திருக்கிறார்களென்பது தெரியாது. ஆனாலும் ஜனாதிபதி அங்கு போய் வந்த அடிப்படையில் இந்திய அரசு மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கவேண்டுமென ஜனாதிபதியிடம் வலியுறுத்தியிருக்கிறது.

௭னவே பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்படுமென ௭திர்பார்க்கின்றோம். ஆனாலும் ஜனாதிபதியைப் பொறுத்தவரை கூட்டமைப்பு பாராளுமன்றத் தெரிவுக் குழுவுக்கு வர வேண்டுமென்பது தான் அவரது நிலைப்பாடாகும். சும்மா போவது ஏன்? பாராளுமன்றத் தெரிவுக் குழுவுக்குள் சும்மா போய் ௭துவும் நடக்காது. அப்படிப் போவதனால் சரியானதொரு பிரேரணையைக் கொண்டு போக வேண்டும். ஆகவே இருதரப்பு பேச்சுவார்த்தை இடம்பெற்று அதில் தீர்வு ஒன்று ௭ட்டப்பட்டு அதனைப் பாராளுமன்றத் தெரிவுக் குழுவுக்குக் கொண்டு செல்வது தான் நல்லது. இதனை நாம் இந்திய தரப்பு சந்திப்பு இடம்பெறும்போது விளக்கவுள்ளோம். கபளீகரம் வடக்கிலும் சரி, கிழக்கிலும் சரி, காணிகளைக் கபளீகரம் செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் நடந்து கொண்டிருக்கின்றன.

அதிலும் குறிப்பாக ஆயிரக்கணக்கான நம் காணிகள் இராணுவத்தால் கபளீகரம் செய்யப்பட்டுவருகின்றன. ௭ம் மக்கள் நடுத்தெருவிலும் காடுகளிலும் நிற்கத்தக்கதாக இக் கபளீகரம் மிக மிக மோசமாக நடைபெற்று வருகின்றது. இவ்விடயங்கள் உடனடியாக நிறுத்தப்பட்டு இராணுவம் ௭டுத்த காணிகளை மக்களுக்குத் திருப்பி வழங்க வேண்டுமென்பதும் வலியுறுத்தப்படும். இராணுவ மயம் வடக்கில் இன்று ஒருஇலட்சத்து ஐம்பதினாயிரம் இராணுவம் நிலை கொண்டுள்ளது. இவ்வளவு தொகை இராணுவம் இப்படியொரு சின்னப் பகுதிக்குத் தேவையில்லை. அங்கு இராணுவம் அகற்றப்பட்டு சாதாரண சூழ்நிலை தோற்றுவிக்கப்பட வேண்டும்.

நிச்சயமாக இந்த விடயம் குறித்தும் இந்திய அரசுடன் நாம் பேசுவோம். நம்பிக்கை மக்களுக்கும் இந்த அரசாங்கத்துக்குமிடையே நம்பிக்கை வர வேண்டமென்றால், அதேபோல் பேச்சுவார்த்தை மீது மக்கள் நம்பிக்கை கொள்ளவேண்டுமென்றால், இப்படியான விடயங்களை அரசு செய்ய வேண்டும். இவற்றை விடுத்து நாங்கள் வெறுமனே அரசுடன் பேச்சுவார்த்தைக்கு சென்றால் ௭ம் காணிகளைப் பிடிக்கிறார்கள், ௭ங்களது காணியில் குடியேற விடுகிறார்களில்லை, வெளியே போக முடியாதவாறு இராணுவ நடமாட்டங்கள் ௭ன நாம் அவலப்படும்போது நீங்கள் போய் ௭தைப் பேசப் போகிறீர்களென மக்கள் ௭ம்மை நோக்கி கேள்விகளைத் தொடுப்பர்.

௭னவே இப்படியான சூழலில் நாம் அரசுடன் பேச்சுவார்த்தைக்குப் போனாலும் மக்கள் அதனை ஆதரிக்க மாட்டார்கள். ஆதலால் மக்களின் ஆதரவோடு பேச்சுவார்த்தை நடைபெற வழிவகை செய்ய வேண்டும் ௭ன்பதையும் நாம் இந்திய அரசுக்கு வலியுறுத்திச் சொல்லவுள்ளோம். முடிவுக்கு வரவில்லை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்திய சந்திப்பு தொடர்பாகக் கூடிப்பேசி ஒரு முடிவுக்கு வரவில்லை. பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டமைப்பிலுள்ள கட்சித் தலைவர்கள்கூடிப் பேசியே இது தொடர்பான முடிவை ௭டுப்போம். ஆனாலும் நான் மேலே கூறிய விடயங்களை இந்திய சந்திப்பின்போது முக்கிய விடயங்களாகக் கொள்வோம்.

கேள்வி: முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம் மக்களைப் புறந்தள்ளி அரசுக்கு முட்டுக் கொடுத்து கிழக்கு மாகாண சபையில் அரசு ஆட்சியமைத்துள்ளது. இதன் தாக்கம் நம் இரு சமூகங்களுக்கும் ௭ப்படி அமையும்?

பதில்: உண்மையில் இந்த மண்ணுக்குச் சொந்தக்கார்கள் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களுமே தான். அவர்களுக்கு அரியதோர் சந்தப்பம் கிடைத்தது ஆட்சி அதிகாரத்தை ௭டுத்துக் கொள்வதற்கு. ஆனால் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ௭டுத்த தூர நோக்கற்ற முடிவால் ௭ந்த விதத்திலும் பிரயோசனமற்றதாக அது அமைந்துவிட்டது மட்டுமின்றி ஆளும் தரப்பான சிங்கள பெரும்பான்மை இனத்தின் கையில் ஆட்சி அதிகாரமும் தாரைவார்க்கவும் பட்டுள்ளது.

அங்கு முஸ்லிம் முதலமைச்சராகவுமிருக்கலாம் அல்லது வேறு யாராகவுமிருக்கலாம். ஆனால் சிங்கள அரசின் கையில் தான் அதிகாரங்கள் போயுள்ளன. ௭னவே முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராகவிருப்பதால் ௭ல்லாம் தீர்ந்து விடுமென ௭திர்பார்க்க முடியாது. கிழக்கு மக்கள் முஸ்லிம் காங்கிரஸுக்கும் கூட்டமைப்பிற்கும் ஆணை கொடுத்தது அவர்கள் இணைந்து ஆட்சியமைப்பதற்காகவேதான். இன்று கிழக்கில் அரசு முன்னெடுக்கும் நடவடிக்கைகளை நோக்கினால், முடிவுகளைப் பார்த்தால் பௌத்த மதமெனும் அடிப்படையில் முஸ்லிம் மக்கள், தமிழ் மக்கள் வாழுமிடங்களிலும் புதிது புதிதாக புத்த விகாரைகள் வருகின்றன.

௭திர்காலத்திலும் இது தொடரும். அதேபோல் தமிழ், முஸ்லிம் மக்களின் காணிகள் பறிக்கப்படுகின்றன. இராணுவ முகாம்கள் நம்நிலத்தில் ஏற்படுத்தப்படுகின்றன. இவற்றையெல்லாம் ஆளும் கட்சியின் முதலமைச்சராகவிருப்பவர் நிறுத்துவாரா? முன்பு பிள்ளையான் முதலமைச்சராகவிருந்தார். அவர் இதனையெல்லாம் நிறுத்தினாரா? இல்லவே இல்லை! இப்பொழுது முஸ்லிம் ஒருவர் கிழக்கில் முதலமைச்சராகியிருக்கிறார்.

இவரால் தான் அரசினதும் சிங்கள பேரினவாதத்தினதும் திட்டமிட்ட இத்தகைய செயற்பாடுகளை நிறுத்த முடியுமா? இல்லையே. முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராக வந்துவிட்டார். ௭னவே ௭மக்குப் பிரச்சினை இல்லையென்று முஸ்லிம்கள் நினைப்பார்களானால் அது தவறாகும். ஏனெனில் அந்த முஸ்லிம் முதலமைச்சரை இருத்தியிருப்பது ஆளும் கட்சியே தான். முந்தி ஒரு பிள்ளையான், இப்பொழுது மஜீத். இதுதான் வந்திருக்கிறதே தவிர வேறு ௭துவும் நடக்கவில்லை. இது நாம் விட்ட பெரிய தவறாகும்.

நிச்சயமாக இந்த நிலைமையால் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களுமே பாதிக்கப்படப் போகின்றனர். தூர நோக்கோடு பார்க்காமல் முஸ்லிம் காங்கிரஸ் செய்தது முதலாவது தவறாகும். இன்று முஸ்லிம் மக்கள் கிழக்கு தேர்தலில் கொடுத்த ஆணை வேறு ௭தற்கோவென ஹக்கீம் சொல்லும் விடயமு முள்ளது. இது மிகத் தவறான கூற்றாகும். தமிழ், முஸ்லிம் மக்கள் புரிந்துணர்வுடன் செயற்படுவதற்கான நல்ல சந்தர்ப்பம் வந்தது. இதைத் தவறவிட்டுள்ளோம். இந்த விடயம் தமிழ், முஸ்லிம் மக்களை நியாயமாகப் பாதித்துள்ளது.

கேள்வி: முஸ்லிம் காங்கிரஸ் ௭டுத்த முட்டாள் தனமான முடிவினால் வெந்து வெதும்பி நிற்கும் கிழக்கு முஸ்லிம் மக்கள் மத்தியில் ஓர் அச்ச நிலைமையுள்ளது. அதாவது முக்கிய சூழ்நிலைகள் அமையும் போது, முஸ்லிம் காங்கிரஸில் நம்பிக்கை இழந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தம்மைக் கைவிட்டு விடுமோ வென்ற ஆதங்கத்திற்கு நீங்கள் கூறும் ஆறுதல் ௭ன்ன?

பதில்: நிச்சயமாக விடப்பட்டுள்ள தவறு முஸ்லிம் காங்கிரஸுடையதே தவிர முஸ்லிம் மக்களுடையதல்ல. ௭னவே முஸ்லிம் மக்களுடைய ஆதங்கங்கள், ௭திர்பார்ப்புக்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நன்கு புரிந்து வைத்திருக்கின்றது. இங்கு முக்கியமாக நிரந்தர அரசியல் தீர்வு ௭ன்பது முஸ்லிம் மக்கள் சம்பந்தப்பட்டதும் தான். முஸ்லிம்களைத் தவிர்த்து விட்டு ஒரு அரசியல் தீர்வுக்குப் போக முடியாது.

௭னவே ௭ம்மைப் பொறுத்தவரை ஒரு பேச்சுவார்த்தையாக விருந்தாலென்ன அதனூடான ஓர் தீர்வுத் திட்டமாக விருந்தாலும் முஸ்லிம் மக்களுக்கும் அத்தீர்வுத் திட்டத்தில் ஒருபங்கிருக்கும். அவர்களும் வட கிழக்குப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களென்ற அடிப்படையில் இது அமையும். அது அவர்களுக்கான அரசியல் பாதுகாப்பு, உரிமைகள் ௭வ்வாறு நிலை நிறுத்தப்பட வேண்டமோ அது விடயங்களில் கூடுதலான அக்கறை செலுத்தப்படும். ௭னவே முஸ்லிம் காங்கிரஸ் விட்ட தவறையும் முஸ்லிம் மக்களையும் இணைத்துப் பார்க்க முடியாது.

கேள்வி: முஸ்லிம் காங்கிரஸ் மீது கிழக்கு முஸ்லிம்கள் நம்பிக்கை இழந்துள்ள நிலையில் இனிவரும் முக்கிய விடயங்களில் கூட்டமைப்பு முஸ்லிம்களை ௭வ்வாறு உள்வாங்கிக் கொள்ளும்?

பதில்: தமிழ், முஸ்லிம் ௭ன்றவேறுபாடில்லாமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முஸ்லிம் மக்கள் மத்தியில் தமதுகொள்கைகளைக் கூறி முஸ்லிம் மக்களையும் அணி திரட்ட வேண்டிய கால கட்டம்தான் இதுவென நான் நம்புகின்றேன். முஸ்லிம் காங்கிரஸை நம்பியோ, அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸை நம்பியோ ௭ம் முஸ்லிம் மக்களை விட முடியாது. இந்நிலையில் ஒரு தீர்வுத் திட்டத்தில் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முஸ்லிம்களையும் தம்முடன் அணி திரட்ட வேண்டும்.

அதிலும் குறிப்பாக புத்திஜீவிகளை அணி திரட்டி அவர்களுக்கூடாக முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் கையாளப்பட வேண்டும். நான் நம்புகின்றேன். முஸ்லிம் மக்கள் முஸ்லிம் காங்கிரஸையே நம்புகின்றனரென்ற சூழல் முன்பிருந்தது. ஆனால் அத்தகைய சூழலை முஸ்லிம் காங்கிரஸே மாற்றியிருக்கின்றது. இந்நிலையில் ௭ன்னைப் பொறுத்தவரை முஸ்லிம் மக்கள் மத்தியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது கொள்கைகளைக் கூறி முஸ்லிம் மக்களுக்கு ௭ன்ன செய்யவிருக்கின்றோம் ௭ன்பதையும் ௭டுத்துக் கூறி அந்த மக்களையும் புத்திஜீவிகளையும் அணி திரட்டி அதனூடாகப் பிரச்சினைகளைக் கையாள வேண்டும்.

கேள்வி: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாகப் பதிவு செய்ய வேண்டுமென்பதில் முனைப்புக் காட்டப்படும் சூழலில் ௭திர்காலத்தில் முஸ்லிம்களுக்கும் கூட்டமைப்பில் உறுப்பினர் அங்கத்துவம் வழங்கப்படுமா?

பதில்: நிச்சயமாக முஸ்லிம் மக்களும் உள்வாங்கப்பட வேண்டும். அங்கத்துவர்களாக வர வேண்டும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அதி உயர் குழுக்களிலிருந்து உயர்மட்டம் வரையில் இடம்பெறத் தக்க நிலையையும் நாம் உருவாக்க வேண்டும் ௭ன்றே நான் ௭திர்பார்க்கிறேன். அதனூடாகத்தான் ஒவ்வொரு மட்டத்திலும் அவர்களுடைய பங்களிப்பு இருக்க வேண்டும். அவ்வாறான நிலைமையூடாகத்தான் தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும் விரும்பக் கூடிய தீர்வை நோக்கியும் நாம் போக முடியும். அன்றேல் தேவையற்ற விமர்சனங்களுக்கே வழிவகுக்கப்படும். ௭னவே அத்தகைய ஒன்றித்த சூழல்தான் ஆரோக்கியமானதாகவும் அமையும் ௭னத் தெரிவித்தார்.

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

மே 18 தமிழின அழிப்பு நினைவு நாள் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் அனுஷ்டிப்பு!Top News
[Saturday, 2013-05-18 21:10:40]

இலங்கைத்தீவில் தமிழர் தேசத்திற்கு எதிராக அரச பயங்கரவாதத்தால் மேற்கொள்ளப்பட்ட கொடிய மனிதப்பேரவலத்தின் உச்சத்தைத் தொட்ட மே 18-2009 நினைவுகளைச் சுமந்தபடி அதன் நான்காவது ஆண்டில் நிற்கின்றோம். ஆயிரக்கணக்கான மக்களை முள்ளிவாய்க்கால் என்ற குறுகிய நிலப்பரப்புக்குள் சிக்கவைத்து, சர்வதேச ரீதியாக தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை திட்டமிட்ட ரீதியில் பயன்படுத்தி, சாட்சிகள் அற்ற போரை நடத்தி, ஒரு தேசிய இனத்தின் அழிவை உறுதிப்படுத்துவதில் சிறிலங்கா அரசு கவனம் செலுத்தியிருந்தது. ஆனால் படுகொலை செய்யப்பட்ட மக்களின் ஏக்கங்களையோ அல்லது எமது மக்களின் நீடித்து நிலைக்கக் கூடிய சுதந்திரமான வாழ்வுக்காக இறுதிவரை போராடிய போராளிகளின் கனவுகளையோ மறைக்க முடியாதபடி, உலகத்தின் கண்களுக்கு ஈழத்தமிழர்களின் அடிப்படை அரசியலுரிமைக்கான தேவைகளும் நியாயப்பாடுகளும் வெளிச்சத்திற்கு வந்துகொண்டிருக்கின்றன.



படையினரால் மீட்கப்பட்ட வன்னி மக்களுக்கு உணவுகொடுக்க புலம்பெயர் சமூகம் முன்வரவில்லை - ஜனாதிபதி மகிந்த Top News
[Saturday, 2013-05-18 20:54:42]

"இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது படையினரால் மீட்கப்பட்ட மக்களுக்கு உணவுகொடுக்க புலம்பெயர் சமூகம் வரவில்லை" என்று இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூறுகிறார். இலங்கை அரசாங்கத்தின் நான்காவது போர் வெற்றிவிழா மேடையிலேயே மகிந்த ராஜபக்ஷ இவ்வாறு கூறினார். கொழும்பு காலி முகத்திடலில் நடந்த அரசாங்கத்தின் போர் வெற்றி விழாவில் சிறப்பு விருந்தினர்கள், அரசியல்வாதிகள், முப்படையினர் மற்றும் பொதுமக்கள் என பெருமளவிலானோர் கலந்துகொண்டனர். "மனிதக் கேடயங்களாக பிடித்து வைக்கப்பட்டிருந்த மக்களை படையினர் மீட்டனர். அவர்களுக்கு உணவுகொடுக்க புலம்பெயர் சமூகத்தினர் வரவில்லை, அரசாங்கமும் படையினரும் தான் உணவுகொடுத்து பராமரித்தார்கள்" என்றார் மகிந்த ராஜபக்ஷ.



ஸ்ரீலங்கா மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அனைத்து தமிழ் குடும்பங்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் - ஒன்ரோறியோ என்.டி.பி கட்சித் தலைவர்!
[Saturday, 2013-05-18 20:45:00]

தமிழினப் படுகொலை நாள் நடக்கவுள்ள தமிழர் நினைவு நாளுக்கு ஒன்ரோறியோ முதல்வர் காத்லீன் வ்ய்ன், அறிக்கை வெளியிட்டதை தொடர்ந்து ஒன்ரோறியோ என்.டி.பி கட்சித் தலைவர் அண்ட்ரியா ஹோர்வேத், ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். தமிழர் நினைவு தினத்தை முன்னிட்டு ஒன்ரோறியோ என்.டி.பி கட்சித் தலைவர் அண்ட்ரியா ஹோர்வேத் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது ,



யுத்த வெற்றிவிழா கொண்டாட்டத்தின் போது கடலுக்குள் மூழ்கிய கடற்படை படகு!
[Saturday, 2013-05-18 20:43:50]

தமிழின அழிப்பினை வெற்றிவிழாவாகக் கொண்டாடிய போது கடற்படைக்குச் சொந்தமான படகொன்று கடலில் மூழ்கியுள்ளதாக தெரியவந்திருக்கின்றது. இந்தச் சம்பவத்தினை கடற்படை ஊடகப் பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய உறுதிப்படுத்தியிருக்கின்றார். காலி முகத்திடல் கடற்பரப்பில் இன்று காலை இடம்பெற்ற யுத்த வெற்றிவிழாவின் போது குறித்த சிறிய ரக படகு மூழ்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். படகில் இருவர் பயணித்ததாகவும் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாகவும் ஒருவர் தப்பித்துக் கொண்டதாகவும் கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.



தமிழர்களின் காணிகளை இராணுவம் அபகரிப்பது குறித்து இந்தியா இலங்கைக்கு எச்சரிக்கை!
[Saturday, 2013-05-18 20:39:38]

இந்திய மத்திய அரசாங்கம் இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக கொழும்பின் முன்னணி ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. வட மாகாணத்தில் உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் படையினர் காணிகளை அபகரித்து செல்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்திய இலங்கை வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையில் நடைபெற்ற தொலைபேசி உரையாடலின் போது இந்த விடயம் கலந்துரையாடப்பட்டுள்ளது. வட மாகாண தமிழ் மக்களின் காணிகளை படையினர் சுவீகரிப்பதானது பொருத்தமாகாது என இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கையானது உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகளுக்கு புறம்பானது என குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான நடவடிக்கைகள் நல்லிணக்க முனைப்புக்களுக்கும் பாதகத்தை ஏற்படுத்தும் என அமைச்சர் குர்ஷித் சுட்டிக்காட்டியுள்ளார்.



தமிழர் படுகொலை நினைவு தினத்தில் உங்களுடன் நானும் இணைந்து கொள்கிறேன் - ஒன்ராறியோ முதல்வர் காத்லீன்!
[Saturday, 2013-05-18 20:38:22]

சமீப காலமாகவே தமிழர்களுடன் கை கோர்த்து செயல்படுவதையே பெரும்பான்மையான கனடிய அரசியல் கட்சிகள் விரும்புகின்றன என்பதும் கனடாவில் தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக தமிழினம் மாறி என்பதும் நாம் அனைவரும் அறிந்ததே. வருடம் முழுவதும் பல நிகழ்வுகளும், விழாக்களும் நம்மவர்களிடையே நடத்தப்பட்டு வந்த போதிலும் கூட பிரதான உணர்வு ரீதியான நிகழ்வாக நம்மவர்கள் அனைவராலும் கருதப்படுவது இனவழிப்பு நினைவுநாள் தொடர்பான் நிகழ்வுதான்.



இன்று தமிழீழ சுதந்திர சாசனம் முரசறைவு : ஈழவிடுதலைப் போராட்டத்தில் வரலாற்று முன்னகர்வு!Top NewsTop News
[Saturday, 2013-05-18 20:35:53]

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பெரும் முன்னகர்வாக தமிழீழ சுதந்திர சாசனம் முள்ளிவாய்க்கால் பெருவலியினை கூட்டு நினைவு கொள்ளும் மே-18ம் நாளாகிய இன்று முரசறையப்படுகின்றது. இந்த முரசறைவுக்கான மாநாடு கடந்த 15ம் நாள் முதல் அமெரிக்காவின் பென்சிலவேனியா பெருநகரில் இடம்பெற்று வரும் நிலையில் இன்று சனிக்கிழமை அமெரிக்க நேரம் மதியம் 12 மணிக்கு தமிழீழ சுதந்திர சாசனம் முரசறையப்படவிருக்கின்றது.



விடுதலைப் புலிகளுக்கு யார் அஞ்சலி செலுத்தினாலும் கைதுசெய்யப்படுவர் - வன்னி இராணுவ கட்டளைத் தளபதி
[Saturday, 2013-05-18 20:22:29]

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அஞ்சலி செலுத்தும் யாராக இருந்தாலும் அவர்கள் கைது செய்யப்படுவர் என்று வன்னி மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி பொனிபஸ் பெரேரா தெரிவித்துள்ளார். நேற்று செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் ஒரே ஒரு இராணுவமே உள்ளது. இலங்கையர்கள் யாரும் யாருக்கு வேண்டுமானாலும் தமது ஆதரவை வெளிப்படுத்தும் உரிமை இருக்கிறது. ஆனால் விடுதலைப் புலிகள் இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான அமைப்பு. இந்த அமைப்புக்கு ஆதரவாக ஏற்பாடு செய்கின்ற எந்த நிகழ்வுகளுக்கு எதிராகவும் இராணுவம் நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



முள்ளிவாய்க்காலில் உயிர்நீர்த்த உறவுகளுக்கு கண்ணீர் மல்க வவுனியாவில் நினைவு பிரார்த்தனை!Top News
[Saturday, 2013-05-18 20:08:27]

இறுதியுத்தத்தின் போது முள்ளிவாய்க்கால் உயிர் நீத்த பொதுமக்களின் 4 ஆம் ஆண்டு நினைவு தினமும் ஆத்ம சாந்திப் பிரார்த்தனைக் கூட்டமும் இன்றுகாலை 10 மணிக்கு வவுனியா கலாசார மண்டபத்தில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. இன்று காலை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தலைமையில் அகவணக்கத்துடன் ஆரம்பமானது. இந்நிகழ்வில் உயிர் நீத்த மக்களுக்கான நினைவுச் சுடர் ஏற்றலையும் மலர் அஞ்சலியையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா, தமிழர் விடுதலைக்கூட்டணியின் பொதுச் செயலாளர் வீ. ஆனந்தசங்கரி, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், ஐக்கிய சோசலிச முன்னணியின் தலைவர் சிறிதுங்க வீரசூரிய, பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், சிறீதரன், சரவணபவன், வினோ ரோதநாதலிங்கம், சிவசக்தி ஆனந்தன்,



சொந்தங்களுக்காக கண்ணீர் சிந்தும் உரிமையும் இல்லையா? கஜேந்திரன் கைதுக்கு கூட்டமைப்பு கண்டனம்!
[Saturday, 2013-05-18 19:55:44]

யுத்தத்தில் உயிர்நீத்த தம் சொந்தங்களை நினைவு கூர்ந்து கண்ணீர்மல்க அமைதியாக அனுஸ்டிக்கப்பட்ட இரங்கல் கூட்டத்தில் வைத்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இக்கைதினை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது என அதன் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பாக தமிழ்மிரரிடம் கூறுகையில்...



தமிழ்த் தேசிய முன்னணியின் பொதுச்செயலாளர் கஜேந்திரன் கைது!
[Saturday, 2013-05-18 19:43:06]

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் உட்பட அந்தக் கட்சியின் சில உறுப்பினர்கள் மன்னார் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டதாக அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன. மன்னாரில் அந்தக் கட்சியின் சார்பில் முள்ளிவாய்க்கால் நினைவுநிகழ்வு ஒன்றை நடத்தியபோதே இவர்கள் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. கஜேந்திரனுடன், அவர்களது கட்சியின் தேசிய அமைப்பாளரான மணிவண்ணன் என்னும் சட்டத்தரணியும் வேறு சுமார் 10 பேரும் கைது செய்யப்பட்டதாக கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார்.



பொதுபலசேனாவிலுள்ளவர்களை உடன் அங்கொடைக்கு அனுப்பவேண்டும்: - விக்கிரமபாகு கருணாரட்ன
[Saturday, 2013-05-18 13:37:57]

பொதுபலசேனாவிலுள்ளவர்களை உடன் அங்கொடைக்கு அனுப்பவேண்டும். இல்லையேல் ,இலங்கை ஆங்கிலேயரின் நாடு என்றும் கூட இன்னும் சில நாட்களில் சொல்லுவார்கள் என்று நவசமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்தார். "இலங்கை பெளத்த நாடு. அதை ஏற்க முடியாதவர்கள் இங்கு வாழத்தேவையில்லை என பொதுபலசேனாவினர் இனவாதத்தைக் கக்குகின்றனர். வரலாறு தெரியாது அவர்கள் வாய்க்கு வந்ததையெல்லாம் வைத்துக்கொண்டு வீர வசனம் பேசுகின்றனர்.



வவுனியாவில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தழிப்பு!Top News
[Saturday, 2013-05-18 13:34:14]

முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் உயிர் நீத்த மக்களின் ஆண்டு நினைவாக 2010ம் ஆண்டு மே மாதம் 16ம் திகதி திறந்து வைக்கப்பட்ட வவுனியா சம்மளங்குளம் நினைவுத்தூபி நேற்றிரவு இனம் தெரியாத தமிழ்த் தேசியத்திற்கு எதிரான குழுக்களால் இடித்தழிக்ககப்பட்டுள்ளதாக வவுனியா நகரசபை பதில் தலைவர் எம்.எம்.ரதன் தெரிவித்துள்ளார். சம்பவம் அறிந்த இன்று காலை நேரடியாக அதனை வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் மற்றும் நானும் சென்று பார்வையிட்டோம். இச்சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக தெரிவித்தார்.



புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பான கண்காணிப்பு பிரிவில் ஆட்குறைப்பு செய்கின்றது அவுஸ்திரேலியா!
[Saturday, 2013-05-18 13:31:16]

அவுஸ்திரேலியாவின் புகலிடக் கோரிக்கையாளர் கண்காணிப்பு பிரிவில் ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. அவுஸ்திரேலியாவின் மத்திய காவல்துறைப் பிரிவினர் புகலிடக் கோரிக்கையாளர் நடவடிக்கைகள் குறித்து கண்காணித்து வருகின்றனர். புகலிடக் கோரிக்கையாளர்களின் நடவடிக்கைகள் குறித்து ஜகர்த்தாவில் கடமையாற்றி வந்த அவுஸ்திரேலிய மத்திய காவல்துறை உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, 40 வீதமான காவல்துறையினர் அவுஸ்திரேலியாவிற்கு மீள அழைக்கப்படுவர்.



வடக்கு, கிழக்கு வாழ் மக்களின் இதயம் எனக்கு நன்கு தெரியும் - ஜனாதிபதி!
[Saturday, 2013-05-18 13:22:26]

வடக்கு கிழக்கு மக்கள் தேர்தலொன்றில் பொன்னம்பலத்தை தோல்வியடையச்செய்து கொப்பேகடுவையை வெற்றிப்பெறச்செய்தவர்கள். அங்குள்ள மக்களின் இதயத்தைப்பற்றி எனக்கு நன்கு தெரியும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். மீட்டெடுக்கப்பட்ட தாய்நாட்டிலிருந்து ஒரு அங்குலத்தையேனும் அபகரிப்பதற்கோ இன்றேல் நாட்டை பிரிப்பதற்கோ ஒருபோதும் நான் இடமளிக்கமாட்டேன் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவுகூர்ந்து நடைபெற்ற வைபவத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.



கனடிய கொன்சவ்வேட்டிவ் மத்திய அரசில் தமிழ் கனடிய சமூகத்திற்கு ஆதரவாக பல நண்பர்களும் ஆதரவாளர்களும் இருக்கிறார்கள், அதில் நானும் ஒருவன் - பிரட் பட் எம்.பி.
[Saturday, 2013-05-18 11:24:16]

கனடாவில் வாழும் தமிழ் கனடிய சமூகம் இலங்கையில் இடம்பெற்ற பல தசாப்தகால உள்நாட்டுப் போர் நிறைவின் நான்காவது ஆண்டு நினைவை அனுஸ்டிக்கும் போது நாமும் அச்சமூகத்துடன் இணைந்து கொள்கிறோம். பல தசாப்த காலமாக போரில் கொல்லப்பட்ட அல்லது காயமடைந்த அப்பாவிப் பொதுமக்களை இவ்வாரத்தில் நினைவுகூர்வதுடன் இலங்கையில் வாழும் மக்களுக்கும் ஒரு சுபீட்சமான எதிர்காலம் அமையுமென எதிர்பார்க்கும் காலமாக அமைகிறது.



டென்மார்க்கில் பாராளமன்றம் நோக்கி பேரணியாக சென்ற மக்கள் மனு கையளித்தனர்! Top News
[Saturday, 2013-05-18 08:14:10]

17.05.2013 அன்று டென்மார்க் வெளிவிவகார அமைச்சகத்தின் அலுவகத்தின் முன்பாக பேரணி ஆரம்பமானது. அதனைத்தொடர்ந்து பாராளமன்றம், நோக்கி பெரும் திரளான மக்கள் உணர்வு பூர்வமாக முள்ளிவாய்காலில் இடம்பெற்ற இனவழிப்பில் இறந்த தமிழீழ மக்களின் படங்கள் மற்றும் தமிழீழ தேசிய கொடியை ஏந்தியவண்ணம் தமிழீழம் ஒன்றே இறுதி முடிவு என்ற உணர்வுடன் ஊர்வலமாக பாராளமன்றம், நோக்கி பேரணியாக வந்தடைந்தார்கள்.



லண்டனில் இன்றைய பேரணிக்கான ஏற்பாடுகள் சிறப்பான முறையில் பூர்த்தி:
[Saturday, 2013-05-18 07:59:08]

லண்டனில் இன்று சனிக்கிழமை முள்ளிவாய்க்கால் நினைவெழுச்சி பேரணி மற்றும் மற்றும் பொதுக்கூட்டம் ஆகியவற்றுக்கான ஏற்பாடுகள் மிகச் சிறப்பாக பிரித்தானிய தமிழர் பேரவையினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்றைய தினம் பி.ப 1 மணிக்கு North Carriage Park, Hyde Park (Closest station: Marble Arch) ஆரம்பிக்கும் பேரணி பி.ப 3 மணியளவில் Waterloo Place , (Closest station: Piccadilly Circus) நிறைவுறும். இதனைத் தொடர்ந்து முக்கிய பிரமுகர்கள் உரையாற்றவிருப்பதுடன் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறும்.



மே 18 - தமிழர் இனவழிப்பு நினைவு நாள் - 2013 - தமிழீழ விடுதலைப் புலிகள் விடுத்துள்ள அறிக்கை
[Saturday, 2013-05-18 07:49:51]

இன்று தமிழர் இனவழிப்பு நினைவுநாள். ஆண்டாண்டு காலமாக அன்னியப் படைகளாலும் இனவாத அரசாங்கங்களாலும் எமது இனத்தின்மீது நிகழ்த்தப்பட்ட இனவழிப்பு நடவடிக்கைகளின் குறியீடாகவும் எமது இனம் எழுச்சி கொள்ள வேண்டியதைச் சுட்டும் முரசறைவாகவும் இந்நாள் அமையப் பெறுகின்றது.



தயா மாஸ்டரின் கோரிக்கையை நிராகரித்தது எதிர்க்கட்சி!
[Saturday, 2013-05-18 07:48:10]

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டரின் கோரிக்கையை ஐக்கிய தேசியக் கட்சி நிராகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வட மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிட தயா மாஸ்டர் கோரியதாகவும், அதனை நிராகரித்ததாகவும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த போது இது தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் ஐக்கிய தேசியக் கட்சியையும், புலிகளையும் இணைத்து பல்வேறு சேறு பூசல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.


Canada Kanthasamy Kovil
TamilsGuid-191012-2013
NIRO-DANCE-100213
Suresh-remax-2013-01-01
RoyaShades-l2011(04-12-11)
Mahesan supramaniyam 031109
Ramans2011
TDE_Computers2011
INNSYS-20120930
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com