Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 21, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
டெசோ தீர்மானங்களுடன் வரும் 6ம் திகதி ஐ.நா செல்கிறது ஸ்டாலின் குழு!
[Saturday, 2012-09-29 07:32:44]
News Service

திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் டெசோ உறுப்பினர்கள் கூட்டம் சென்னையில் அக்டோபர் 3-ஆம் தேதி மீண்டும் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோர் அக்டோபர் 6-ம் தேதி நியூயார்க் சென்று டெசோ மாநாட்டுத் தீர்மானங்களை ஐ.நா. சபையில் கொடுக்க உள்ளனர்.

  

அக்டோபர் 3-ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, திராவிட இயக்கத் தமிழர் பேரவைத் தலைவர் சுப.வீரபாண்டியன், முன்னாள் மத்திய இணையமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன், வழக்குரைஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ஹசன் முகமது ஜின்னா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

டெசோ அமைப்பின் உறுப்பினர்களாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனும், அக் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமாரும் உள்ளனர். தமிழகத்துக்கு கர்நாடகம் தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் சிதம்பரத்தில் இருந்து திருச்சி வரை திருமாவளவன் தலைமையில் ஊர்தி பயணம் நடைபெற உள்ளது. இந்தப் பயணம் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் முதலிலேயே அறிவிக்கப்பட்டுவிட்டதால் டெசோ கூட்டத்தில் இவர்கள் பங்கேற்க மாட்டார்கள் எனத் தெரிகிறது.

இலங்கைப் போரில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா. சபையின் மனித உரிமை ஆணையம் வரும் அக்டோபர் - நவம்பரில் ஆய்வு நடத்த உள்ளது. இந்த ஆய்வை நடத்தும் பொறுப்பு இந்தியா, ஸ்பெயின் ஆகிய நாடுகளிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வை இந்தியா மனிதாபிமானத்தோடு நடத்த வேண்டும் என்று கருணாநிதி ஏற்கெனவே கோரியிருந்தார். இது தொடர்பாக அக்டோபர் 3-ம் தேதி கூட்டத்தில் மீண்டும் வலியுறுத்தப்பட உள்ளது.

டெசோ மாநாட்டுத் தீர்மானங்களை இந்திய அரசின் சார்பில் ஐ.நா. சபையில் கொடுப்பதற்கு திமுக சார்பில் முயற்சிக்கப்பட்டது. ஆனால் இதற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்ததுடன், திமுக சார்பிலும் கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பின்னர் திமுகவின் நெருக்குதலால் டெசோ தீர்மானங்களை திமுக சார்பில் அளிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

திருப்பதி ஏழுமலையானுக்கு உள்ள அசையா சொத்துகளின் மதிப்பு 1 இலட்சம் கோடி ரூபா!
[Tuesday, 2013-05-21 07:36:52]

திருப்பதி ஏழுமலையானின் அசையா சொத்தின் மதிப்பு 1 லட்சம் கோடி ரூபாய் என, திருப்பதி தேவஸ்தான நிதி நிபுணர்கள் குழு கணக்கிட்டுள்ளது. திருப்பதி கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் நன்கொடை அளித்து வருகின்றனர். இதை நெறிமுறைப்படுத்த திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி எல்.வி.சுப்ரமணியன், சில நடைமுறைகளை மேற்கொண்டு வருகிறார். 2009ம் ஆண்டு நிலவரப்படி, வருவாய்ப் பிரிவு மேலதிகாரி, ராமச்சந்திர ரெட்டி, நாடு முழுவதும் மற்றும் பிற நாடுகளில் திருப்பதி கோவிலுக்கு சொந்தமாக உள்ள நிலங்கள் குறித்து, ஒரு ஆண்டு காலம் கணக்கிட்டு, 4,143 ஏக்கர் உள்ளதாக பதிவு செய்தார். இந்த அசையா சொத்துகளின் அப்போதையை மதிப்பு, 34.4 ஆயிரம் கோடி ரூபாய். இவற்றில் ஆந்திராவில் உள்ள அசையா சொத்து மதிப்பு, 33.1 ஆயிரம் கோடி ரூபாய்; அண்டை மாநிலங்களில், உள்ள அசையா சொத்து மதிப்பு, 298.59 கோடி ரூபாய்.



இந்திராகாந்தியின் ரே பரேலி தொகுதியில் போட்டியிடுகிறார் பேர்த்தி பிரியங்கா!
[Tuesday, 2013-05-21 07:28:05]

மக்களவைத் தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம், ரே பரேலி தொகுதியில் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா வதேரா போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திரா காந்தி பிரதிநிதித்துவம் செய்த ரே பரேலி தொகுதி அவரது குடும்பத்தின் விருப்பத் தொகுதியாக விளங்குகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் அங்கு காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்தது. அதனால், ரே பரேலி மக்களவைத் தொகுதி உறுப்பினரும் காங்கிரஸ் தலைவருமான சோனியா காந்தி, அவரது மகனும் காங்கிரஸ் துணைத் தலைவருமான ராகுல் காந்தி அதிருப்தி அடைந்தனர்.



பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு எட்டு மணிநேரம் இதய அறுவைச் சிகிச்சை!
[Tuesday, 2013-05-21 07:19:10]

பாமக நிறுவனர் ராமதாஸ், 8 மணிநேர இதய அறுவைச் சிகிச்சைக்கு பிறகு வார்டுக்கு கொண்டுவரப்பட்டார்.கடந்த ஏப்ரல் 30ம் தேதி கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட பாமக நிறுவனர் ராமதாஸ் மே 11ம் தேதி விடுதலை செய்யப்பட்டார்.அன்று பிற்பகல் தைலாபுரம் வீட்டுக்கு வந்து சேர்ந்தார். இரவு 7 மணியளவில் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதை தொடர்ந்து சென்னை அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கடந்த 14ம் தேதி ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அவருக்கு இதய அறுவைச் சிகிச்சை செய்ய மருத்துவர்களால் முடிவு செய்யப்பட்டது.நேற்று காலை 7 மணியளவில் ராமதாஸ் அறுவை சிகிச்சை அரங்குக்கு அழைத்து செல்லப்பட்டார்.



ஐபிஎல் சூதாட்டக் கும்பலின் தலைவர் சரண் - கைதான கிரிக்கெட் வீரர் வீட்டில் 20 இலட்சம் ரூபா சிக்கியது!
[Tuesday, 2013-05-21 07:08:58]

ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீஸாரால் தேடப்பட்டு வந்த சென்னை சூதாட்ட கும்பல் தலைவர் பிரசாந்த் நேற்று சரணடைந்தார். சென்னை உள்ளிட்ட பல இடங்களில் ஐ.பி.எல். சூதாட்டம் நடைபெறுவதாக சி.பி.சி.ஐ.டி. போலீஸாருக்கு கடந்த வியாழக்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி. போலீஸார் சென்னையில் தீவிரமாக சோதனை நடத்தி 6 பேரை கைது செய்தனர். ஆனால் சென்னையில் சூதாட்ட கும்பலின் தலைவராக செயல்பட்ட அயனாவரம் மேடவாக்கம் டேங்க் சாலை பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் தலைமறைவாகி விட்டார். இதில் பிரசாந்த் கார் சென்னை விமான நிலையத்தில் நின்றதால், அவர் வெளிநாட்டுக்கு தப்பியோடி இருக்கலாம் என போலீஸாரால் சந்தேகிக்கப்பட்டது.



திரிபுராவில் நாளிதழ் அலுவலகத்தில் மர்மநபர்கள் வெறியாட்டம் - மூன்று ஊழியர்கள் கத்தியால் குத்திக்கொலை!
[Monday, 2013-05-20 17:46:19]

திரிபுரா மாநிலத்தில் உள்ள தினசரி நாளிதழ் அலுவலகத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் பட்டப்பகலில் 3 பேரை வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திரிபுராவில் உள்ள அகர்தலா நகரில் தைனிக் ஞானதூத் என்ற நாளிதழ் அலுவலகம் உள்ளது.நேற்று மாலை 3 மணியளவில் இந்த அலுவலகத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள், தரை தளத்தில் பணியிலிருந்த புரூஃப் ரீடர் மற்றும் டிரைவர் ஆகியோரை சரமாரியாக கத்தியால் குத்தினர். இச்சம்பவத்தை பார்த்த நிருபர் ஒருவர் மயங்கி விழுந்ததால் அவரை ஒன்றும் செய்யாமல் முதல் மாடிக்கு சென்றனர்.



சீமானை 10 ஆண்டுகள் சிறையில் அடைக்க வேண்டும் - மத்திய அமைச்சர் நாராயணசாமி ஆவேசம்!
[Monday, 2013-05-20 17:41:34]

புதுவை மக்கள் காங்கிரஸ் கட்சி மீதும், ராஜீவ்காந்தி மீது மதிப்பும், மரியாதையும் கொண்டவர்கள். ராஜிவ் காந்தி 5 ஆண்டுகள் பிரதமராக பதவியில் இருந்த போது இந்தியாவை வல்லசராக்க அரும்பாடுபட்டார். ராஜிவ்காந்தி தீவிரவாதத்தை ஒடுக்குவதில் தீர்மானமாக இருந்தார். அவருடைய காலத்தில் மிசோரம், அசாம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தீவிரவாதம் ஒடுக்கப்பட்டது. இலங்கையில் தீவிரவாதத்தை ஒடுக்க அமைதிப்படையை அனுப்பி வைத்தார். போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு கப்பலில் உணவு பொருட்களை அனுப்பி வைத்தார்.அதனை பெற இலங்கை ராணுவம் முன்வராதபோது விமானம் மூலம் உணவு பொருட்களை தமிழர் பகுதியில் போடச் செய்தார். அவரை விடுதலை புலிகள் இயக்கத்தால் இழந்தோம்.



சீமானைக் கைது செய்யக் கோரி டிஜிபி அலுவலகத்தில் புகார்!
[Monday, 2013-05-20 17:34:35]

இந்து மக்கள் கட்சியின் சென்னை மண்டல தலைவர் முத்து ரமேஷ்குமார் டி.ஜி.பி. அலுவலகத்தில் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறி இருப்பதாவது-கடந்த 18-ந்தேதியன்று கடலூரில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் இந்தியாவில் பிரிவினையை தூண்டும் விதமாக காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் பேசி உள்ளார். தீவிரவாதி அப்சல்குரு தூக்கிலிடப்பட்டதை கண்டித்து ஹபீஸ் சையது என்ற தீவிரவாதியுடன் இணைந்து இஸ்லாமாபாத்தில் போராட்டம் நடத்தியவர்தான் இந்த யாசின் மாலிக்.இவ்வாறு இந்தியாவுக்கு எதிராக செயல்படும் தீவிரவாதிகளுடன் கைகோர்த்துள்ள அவர் தமிழகத்தில் பிரிவினையை தூண்டும் வகையில் பேசி உள்ளார்.



அதிருப்தியில் ஜெயலலிதா - அமைச்சரவை மாற்றம் எந்தநேரமும் நிகழலாம் என்பதால் கலக்கத்தில் அமைச்சர்கள்!
[Monday, 2013-05-20 17:27:54]

தமிழக அமைச்சர்கள் சிலரின் நடவடிக்கையில் முதல்வர் ஜெயலலிதா அதிருப்தியில் உள்ளதால், விரைவில் அமைச்சரவை மாற்றம் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் அமைச்சர்கள் சிலரின் செயல்பாடுகள் முதல்வருக்கு திருப்தியளிக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும், விரைவில் லோக்சபா தேர்தல் வருவதால், அதை எதிர்கொள்ளும் வகையில் அமைச்சரவை மாற்றியமைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சர் பதவியிலிருந்து கல்தா கொடுக்கப்பட்டவர்களில் சிலர் மீண்டும் அமைச்சர்களாக்கப்படலாம் என்பதால், அ.தி.மு.க.வில் பரபரப்பு நிலவுகிறது.



மும்பை ஹோட்டலில் பெண்களுடன் தனியாக இருந்ததை படம்பிடித்து ஸ்ரீசாந்தை வளைத்துப் போட்ட தரகர்கள்!
[Monday, 2013-05-20 17:08:49]

மும்பை ஹோட்டலில் பெண்களுடன் இருந்ததை ரகசியமாக படம் எடுத்து, அதன் மூலம் ஸ்ரீசாந்த்தை சூதாட்டத்தில் ஈடுபடும்படி மிரட்ட தரகர்கள் திட்டமிட்டு இருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.கிரிக்கெட் சூதாட்ட புகாரில் கைதாகியுள்ள வீரர்கள் மற்றும் தரகர்களிடம் டெல்லி தனிப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.இதில் இந்த ஆண்டு தொடக்கத்தில் 6 முறை தரகர்கள் பெண்களை ஸ்ரீசாந்த் மற்றும் அஜித் சண்டிலா ஆகியோருக்கு ஏற்பாடு செய்து கொடுத்த அதிர்ச்சித் தகவல் தெரிய வந்துள்ளது. அதுபோல், ஸ்ரீசாந்த் பெண்களுடன் இருப்பதை ரகசியமாக வீடியோ படம் எடுத்து அதனைக் காட்டி மிரட்டி அவரை சூதாட்டத்தில் ஈடுபடும்படி கட்டாயப்படுத்தவும் தரகர்கள் திட்டமிட்டு இருந்தது அம்பலமாகியுள்ளது.



நத்தையை விடவும் மெதுவாக சென்ற தபால் - 31 ஆண்டுகள் கழித்து உரியவரிடம் போய் சேர்ந்தது!
[Monday, 2013-05-20 07:52:44]

குஜராத் மாநிலம் ஆனந்த் நகரில் இருந்து நவ்சாரி நகருக்கு அனுப்பப்பட்ட கடிதம் ஒன்று தபால் துறையினரின் அலட்சியத்தால் 31 வருடம் கழித்து பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. இத்தனை வருடங்கள் கழித்து தனக்கு வந்த கடிதம் குறித்து கடிதத்தைப் பெற்றவர் மிகவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். டாக்டர் அசோக் ஷெராப் (63) என்ற கண் மருத்துவர் நவ்சாரி நகரில் வாழ்ந்து வருகிறார். 1982-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தேதியன்று, அவரது நண்பர் டாக்டர் ஷ்யாம்குமார் புத்தாண்டு வாழ்த்துகளுடன் ஒரு கடிதத்தை அவருக்கு அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தைத்தான் தபால்துறை கடந்த வியாழன் அன்று அவருக்கு கொடுத்துள்ளது.



குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் பேசியதாக சீமான் உள்ளிட்ட மூவர் மீது வழக்குப்பதிவு!
[Monday, 2013-05-20 07:50:19]

குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் பேசியதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட 3 பேர் மீது போலீஸார் ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்தனர். நாம் தமிழர் கட்சி சார்பில் சனிக்கிழமை இரவு கடலூரில் இன எழுச்சிக் கருத்தரங்கம், பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர். தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் படத்தை விளம்பர போஸ்டர்களில் பயன்படுத்தியதாகக் கூறி போலீஸார், பேரணி மற்றும் பொதுக் கூட்டத்துக்கு வெள்ளிக்கிழமை இரவு தடைவிதித்தனர்.



மனிதன் வாழ்வதற்கேற்ற இரு கிரகங்களைக் கண்டுபிடித்த தமிழ் விஞ்ஞானி!
[Monday, 2013-05-20 07:32:52]

பூமியைப் போல், மனிதன் வாழ்வதற்கு ஏற்ற, இரண்டு கோள்களைக் கண்டுபிடித்தவர், தமிழகத்தைச் சேர்ந்த, விண்வெளி மற்றும் ஏவுகணை தொழில்நுட்ப விஞ்ஞானி சிவதாணுப்பிள்ளை. "கெப்லர் 22 எச்' மற்றும் "கிலிசென் 667 சி' என்ற, இரண்டு கோள்களைக் கண்டுபிடித்துள்ள இவர், அந்த இரண்டு கோள்களும், மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற சீதோஷ்ண நிலை கொண்டவை என, அறிவித்து, மனிதர்கள் வாழ, இன்னும் இரண்டு கோள்கள் உள்ளன என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளார்.சூரிய குடும்பத்தைச் சேராத இந்த, இரண்டு கோள்களும், எளிதில் சென்று வரக் கூடிய, 122 ஒளி ஆண்டு தூரத்தில் தான் இருக்கிறது எனத் தெரிவித்து, இந்தியர்களின் விண்வெளிப் பயணப் பசியைத் தூண்டி உள்ளார், சிவதாணுப்பிள்ளை.



தமிழகத்தில் அடியோடு படுத்துவிட்ட இலங்கையர்களின் சுற்றுலா!
[Monday, 2013-05-20 07:27:10]

அரசியல் பிரச்னைகளால், தமிழகத்துக்கு அன்னிய செலாவணியை ஈட்டி தரும், இலங்கை சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை, வெகுவாக குறைந்து விட்டது. கொழும்பிலிருந்து, திருச்சி விமான நிலையம் வந்து, திருச்சி மலைக்கோட்டை, ஸ்ரீரங்கம், சமயபுரம், தஞ்சை பெரிய கோவில், யூனியன் பிரதேசமான காரைக்காலில் உள்ள திருநள்ளாறு உள்ளிட்ட நவக்கிரக் கோவில்கள், ராமேஸ்வரம், மதுரை கோவில்களில் தரிசனம் செய்வது இலங்கை தமிழர்களின் வழக்கம். இலங்கையை சேர்ந்த சிங்களர்கள், தஞ்சை பூண்டி மாதா கோவில், நாகை வேளாங்கண்ணி தேவாலயங்களுக்கு செல்வதுடன், தஞ்சை பெரிய கோவில் மற்றும் ஒன்பது நவக்கிரக் கோவில்கள், ராமேஸ்வரம் கோவிலுக்கு ஆண்டுதோறும் சுற்றுலாவாக வருகின்றனர். இலங்கையில் உள்ள முஸ்லிம்களும் தமிழக சுற்றுலா பயணம் மேற்கொள்வது வழக்கம்.



கடலூரில் பொலிசாருக்கு கண்கட்டிவித்தை காட்டிய காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் யாசிம் மாலிக்!
[Monday, 2013-05-20 07:18:05]

கடலூரில், "நாம் தமிழர்' கட்சி சார்பில் நடந்த கூட்டத்தில், கடும் போலீஸ் பாதுகாப்புக்கு இடையே பங்கேற்ற, காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர், திடீரென மேடையிலிருந்து மாயமானார். அவரை நிழல் போல் கண்காணித்த போலீசார், அவர் சென்ற இடம் தெரியாமல் திகைத்தனர்.நாம் தமிழர் கட்சி சார்பில், கடலூரில் கடந்த, 18ம்தேதி நடந்த கருத்தரங்கம் மற்றும் பொதுக் கூட்டத்தில், சீமான், காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் யாசிம் மாலிக் பங்கேற்பதாக தகவல் கிடைத்ததால், இரவோடு இரவாக ஐ.ஜி.கண்ணப்பன், டி.ஐ.ஜி. முருகன் தலைமை யில் கடலூர், விழுப்புரம்,திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் இருந்து, 700க்கும் மேற்பட்ட போலீசார், கண்காணிப்புக்காக கடலூரில் குவிக்கப்பட்டனர்.



கைது செய்யச் சென்ற பொலிசாரை மிரட்டிய ஸ்ரீசாந்த் பொலிஸ் காவலில் அவஸ்தை - கூட இருந்தவர் மராட்டிய நடிகையாம்!
[Sunday, 2013-05-19 20:11:44]

கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட புகாரின் பேரில் மும்பையில் ஸ்ரீசாந்தை கைது செய்த டெல்லி போலீசாரை அவர் மிரட்டிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. மும்பையில் உள்ள ஆடம்பர ஓட்டலில் டெல்லி போலீசார் ஸ்ரீசாந்தை கைது செய்த போது, தனது செல்போனை போலீசாரை நோக்கி வீசிய அவர், யார் கிட்ட பேசணும்?. மகாராஷ்டிரா முதல் மந்திரி கிட்ட பேசறீங்களா? கேரள முதல் மந்திரி கிட்ட பேசறீங்களா? என்று போலீசாரையே மிரட்டும் தோரணையில் கூறியுள்ளார்.போலீஸ் நிலையத்திற்கு போகும்வரை போலீசாருடன் ஒத்துழைக்காமல் வயலண்ட்டாக இருந்த ஸ்ரீசாந்த், இவரை வரவேற்க ஏற்கனவே கஸ்டடியில் சூதாட்ட தரகர்கள் அமர்ந்திருப்பதை பார்த்ததும் கப்-சிப் என்று சைலெண்ட்டாக ஆகி விட்டதாக போலீஸ் வட்டாரங்கள் இன்று தெரிவித்தன.



ஊசி மூலம் உடலில் அசிட் செலுத்தி கொலைக் குற்றவாளியை கொன்ற பொலிசார் - உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பு!
[Sunday, 2013-05-19 19:57:39]

உத்தரப்பிரதேசத்தில் கொலை குற்றவாளி ஒருவரை போலீசார் அசிட் மற்றும் பெட்ரோலினை ஊசி வாயிலாக செலுத்தி சித்ரவதை செய்து கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. உபி. மாநிலம் ஈட்டா மாவட்டத்தைச் சேர்ந்த பல்பீர், பானிகான் ஆகியோர் , கொலை செய்த வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் போலீசாரால் சித்ரவதை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. கடந்த வெள்ளியன்று பல்பீர் என்பவரின் உடல்நிலை மோசமானதை தொடர்ந்து லக்னோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பல்பீர் இறந்தார். அவர் ஊசி வாயிலாக அசிட், பெட்ரோ‌ல் செலுத்தப்பட்டதாக தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட நான்கு போலீசார் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.



புதுடில்லி வந்த சீனப் பிரதமருக்கு விமான நிலையத்தில் அமோக வரவேற்பு!
[Sunday, 2013-05-19 19:44:11]

சீன பிரதமர், லி கெகியாங், மூன்று நாள் பயணமாக, இன்று மதியம், இந்தியா வந்தார். சீன பிரதமராக சமீபத்தில் பொறுப்பேற்ற லி கெகியாங், தன் முதல் வெளிநாட்டுச் சுற்றுப்பயணமாக, இன்று இந்தியா வந்தார். மதியம், டில்லி வந்த அவர், தனிப்பட்ட முறையில், பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின் போது, எல்லை விவகாரம், தண்ணீர் பிரச்னை உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்க உள்ளார். இரவில் அவருக்கு, பிரதமர், மன்மோகன் விருந்து அளிக்கிறார். அதில், மத்தியில் ஆளும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் அமைச்சர்கள், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். சீனப்பிரதமர் லி கெகியாங்குடன், உயர்மட்டக்குழுவும் வந்துள்ளது.



பற்றியெரியும் சென்னைத் துறைமுகம் - பல பகுதிகளில் புகைமண்டலம்!
[Sunday, 2013-05-19 19:36:24]

சென்னை துறைமுக வளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை துறைமுகத்தின் 7வது நுழைவுவாயிலில் உள்ள புட் கார்பரேஷன் நிறுவனத்தின் குடோன் அருகே நிறுத்தப்பட்டிருந்த 5 லாரிகள் திடீரென தீப்பிடித்து எரிந்து வருகின்றன. இதனால் பயங்கர புகை கிளம்பியது. இந்த புகை, துறைமுகம், மண்ணாடி உள்ளிட்ட பகுதிகளில் புகை சூழ்ந்துள்ளது. இதனால் அந்த பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.



பொலிசார் முன்வாசல் வழியே அதிரடியாக நுழைய பின்வாசல் வழியாகத் தப்பியோடினார் சீமான்!
[Sunday, 2013-05-19 19:08:08]

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான். தலைமையில், நேற்று கடலூரில் இன எழுச்சிப் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், திருமண மண்டபம் ஒன்றில் உள்ளரங்குக் கூட்டம் நடத்தி பேசினார் சீமான். இரவு பத்து மணிக்குள்ளாக பேச்சை முடித்து விட வேண்டும் என்று போலீஸார் ஏற்கனவே வலியுறுத்தியிருந்தனர். 9 மணி துவங்கி, 9.30 வரை இரு முறை கூட்டத்தை முடிக்கச் சொல்லி போலீஸ் தரப்பில் அவசரப்படுத்தினர். ஆனால் 9.40 வரை நிர்வாகிகளே பேசிக்கொண்டிருந்தனர். பின்னர் பேச வந்தார் சீமான். அப்போது 10 மணியாகி விட்டது. எனவே போலீஸார் 10 மணிக்கும் 10.10க்கும் 10.15க்கும் என மூன்று முறை மண்டபத்துக்குள் நுழைய முயற்சி செய்தனர். ஆனால், போலீசாரை உள்ளே விட மறுத்தனர் நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள்.



இந்திய இராணுவத்துக்குள் பாகிஸ்தான் உளவுப்பிரிவு ஊடுருவல் - முக்கிய தகவல்களை வழங்கிய அதிகாரி கைது!
[Sunday, 2013-05-19 10:03:23]

பாகிஸ்தானின் உளவுப் பிரிவான ஐஎஸ்ஐ-க்கு இந்திய ராணுவத்தின் முக்கிய தகவல்களை அளித்த குற்றச்சாட்டுக்காக ராணுவப் பணியாளர் பி.கே.சின்ஹா (43) கைது செய்யப்பட்டார். சின்ஹா, தென்மேற்குப் பகுதி படைப்பிரிவில் ராணுவ வீரர்களுக்கு ஆயுதங்கள் உள்ளிட்ட பொருள்கள் சப்ளை செய்யும் பிரிவில் எழுத்தராகப் பணி புரிந்து வருகிறார். அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சின்ஹா, இந்திய ராணுவத்தின் நடமாட்டம் உள்ளிட்ட முக்கியமான தகவல்கள் மற்றும் ஆவணங்களை நேபாளத்தில் செயல்படும் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ பிரிவிடம் அளித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 15-ம் தேதி அலுவலக ரகசியச் சட்டத்தின் கீழ் சின்ஹா கைது செய்யப்பட்டார்.


INNSYS-20120930
Canada Kanthasamy Kovil
TDE_Computers2011
Mahesan supramaniyam 031109
RoyaShades-l2011(04-12-11)
NIRO-DANCE-100213
Ramans2011
TamilsGuid-191012-2013
Suresh-remax-2013-01-01
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com