Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 23, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
நபியை இழிவுபடுத்தும் படத்தை யுடியூப்பில் இருந்து நீக்க அமெரிக்காவிடம் பாகிஸ்தான் கோரிக்கை!
[Monday, 2012-09-24 07:07:08]
News Service

நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தும் வீடியோ படத்தை, "யூ டியூப்' இணைய தளத்தில் இருந்து அகற்ற, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அமெரிக்க தூதரிடம், பாகிஸ்தான் அரசு வலியுறுத்தியுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில், உலக வர்த்தக மையக் கட்டடம் விமானங்களை மோதச் செய்து தரைமட்டமாக்கப்பட்ட சம்பவத்தை நினைவுகூரும் வகையில், 11ம் தேதி, பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன.

  

அதன் ஒரு பகுதியாக, நபிகள் நாயகத்தை கேலி செய்யும் வகையில் வெளியிடப்பட்ட வீடியோ படத்தால், உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம் நாடுகளில், பயங்கர வன்முறைச் சம்பவங்கள் நடந்தேறின. லிபியாவில் தூதர் உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டனர்.இந்நிலையில், இஸ்லாமாபாத்தில் உள்ள தற்காலிக அமெரிக்க தூதர், ரிச்சர்ட் ஹோக்லேண்ட், பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சக அலுவலகத்துக்கு வர வேண்டும் என, சம்மன் அனுப்பப்பட்டது.

இது குறித்து, பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:"முஸ்லிம்களின் அப்பாவித்தனம்' என்ற தலைப்பில் வெளியாகி உள்ள வீடியோ படம், உலகம் முழுவதும் உள்ள 150 கோடி முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல். உலகின், பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் மத்தியில் வன்முறை, வெறுப்பை ஏற்படுத்தும் தீய நோக்குடன் வீடியோ வெளியிடப் பட்டுள்ளது.

இக்கருத்தைக் கூறி, "யூ டியூப்' இணையதளத்தில் இருந்து சர்ச்சைக்குரிய வீடியோ படத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அமெரிக்க தூதரிடம் வலியுறுத்தி உள்ளோம்.எல்லா மதத்தவரிடமும் ஒற்றுமையையும், சகிப்புத் தன்மையையும் பேணிக் காப்பது அவசியம். மாறாக, வெறுப்பை வளர்க்கும் வகையில் வீடியோ படம் வெளியிடப்பட்டிருப்பது, மனித சமுதாயத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகக் கருதப்படும்.வீடியோ படத்தை கண்டிப்பதாகச் சொன்ன அமெரிக்க தூதர், அமெரிக்க அரசும், இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளதாகக் கூறினார். அமெரிக்க மக்களில் பெரும்பாலானோர், இந்த வீடியோவுக்கு கண்டனம் தெரிவிப்பதாக தூதர் தெரிவித்தார்.இவ்வாறு பாக்., வெளியுறவுத் துறை அமைச்சக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வீடியோ படத்துக்கு எதிராக பாகிஸ்தானில், கடந்த சில நாட்களாக வன்முறைச் சம்பவங்கள் நடக்கின்றன. பெஷாவர் நகரில் இரண்டு சினிமா தியேட்டர்கள், தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. வர்த்தக சபை கட்டடம் எரிக்கப்பட்டது. "டிவி' செய்தி சேனல் ஊழியர் ஒருவர் வன்முறையில் பலியானார்.தொடர் வன்முறை சம்பவங்கள் தொடர்பாக 6,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

எவரெஸ்டில் ஏறி சாதனை படைத்துள்ள 80 வயது ஜப்பானிய தாத்தா!
[Thursday, 2013-05-23 19:05:45]

எவ‌ரெஸ்ட் சிகரத்தில் ஏறி 80வயது ஜப்பான் தாத்தா சாதனை படைத்தார். ஜப்பானை சேர்ந்தவர் யூசீரோ மியூரா இவருக்கு வயது 80. எவரெஸ்ட் சிகரத்தை எட்டிய உலகின் அதிக வயதான தாத்தா என சாதனையைப் படைத்துள்ளார் இவர்.முன்னதாக 2008ம் ஆண்டில் 76வயதான நேபாளி தாத்தா ஒருவர் இந்தச் சாதனையை செய்திருந்தார். அவரது சாதனையை ஜப்பானிய தாத்தா முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



77 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் கனடாவில் வாழ்ந்த டைனோசர் கால்தடங்கள் கண்டுபிடிப்பு!
[Thursday, 2013-05-23 18:51:05]

கனடாவில் 77 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இருந்த டைனோசர் கால் தடத்தை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மிகவும் வேகமாக ஓடத் தக்க இந்த டைனோசர் ஒரு பாய்ச்சாலில் 1.6 மீட்டர் தூரம் தாண்டக் கூடியது. சராசரியாக ஒரு பெரிய வான் கோழியின் அளவை ஒத்ததாக 16 கிலோ எடை வரை இது இருந்திருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இவை தாவர உண்ணிகளாக இருந்திருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.



பாவம் இஸ்ரேல் இரண்டாவது அதிபர்! - அவரது சம்பளம் ட்ரைவரை விட 40 சதவீதம் குறைவாம்!
[Thursday, 2013-05-23 18:26:19]

இஸ்ரேல் நாட்டில் இரண்டாவது அதிபராக இருந்த இட்ஸ்ஹாக் பென்-சவி, தனது கார் டிரைவரைவிட 40 சதவீதம் குறைவாக சம்பளம் வாங்குகிறார். கார் டிரைவரைவிட இரண்டாவது அதிபர் குறைவாக சம்பளம் வாங்குவது அந்நாட்டில் பெரும் பிரச்சினையை ஏற்படுத்தி உள்ளது. தனது கார் டிரைவரைவிட அதிபர் குறைவாக சம்பளம் வாங்குவது அந்நாட்டின் அரசின் சார்பில் வெளியிட்டுள்ள ஆவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. 1962-ம் ஆண்டில் இஸ்ரேல் பார்லிமெண்டின் நிதிக்குழு இதுகுறித்து சிறப்பு கூட்டம் ஒன்றை நடத்தியது. இந்த கூட்டத்தில் துணை அதிபர் சம்பளத்தை எவ்வாறு உயர்த்துவது என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. ஆனால் இன்னும் அதிபரின் சம்பளம் உயர்த்தப்படவில்லை.



உலகின் சக்திவாய்ந்த பெண்களின் பட்டியல் - முதலிடத்தில் ஜேர்மனி அதிபர்,9வது இடத்தில் சோனியா!
[Thursday, 2013-05-23 18:13:55]

உலகின் சக்தி வாய்ந்த 100 பெண்கள் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் இந்திரா நூயி முதல் 10 இடங்களில் இடம் பெற்றுள்ளனர். சோனியா காந்தி 9வது இடத்தையும், இந்திரா நூயி 10வது இடத்தையும் பெற்றுள்ளார். ஜெர்மனை சேர்ந்த ஏஞ்சலா மெர்கல் முதல் இடத்தை பிடித்துள்ளார். இதனை அடுத்து முறையே பிரேசில் ஜனாதிபதி தில்மா ரவுசெப், மெலிண்டா கேட்ஸ் அமைப்பின் தலைவர் மெலிண்டா கேட்ஸ், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் மானைவி மிக்செல் ஒபாமா அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர்.



பொஸ்டன் குண்டுவெடிப்புடன் தொடர்புடையவர் விசாரணையில் சுட்டுக்கொலை!
[Thursday, 2013-05-23 18:03:26]

அமெரிக்காவில் பொஸ்டன் நகரில் கடந்த மாதம் 15-ந் தேதி நடந்த மரத்தான் ஓட்டப்பந்தயத்தில் குண்டு வெடித்தது. இதில் 3 பேர் பலியானார்கள், 200க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலில் தொடர்புடைய டேமர்லன் என்பவனை அமெரிக்க போலீசார் சுட்டு கொன்றனர். இந்த குண்டு வெடிப்பில் தொடர்புடைய இப்ராஹிம் தோசேவ் (27) என்பவரை எவ்பிஐ போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது போலீசாருக்கும் அவனுக்கும் வன்முறை ஏற்பட்டது. இதை தொடர்ந்து போலீசார் அவனை சுட்டு கொன்றனர். அவனுடைய சகோதரர்கள் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.



ஓர் இன சேர்க்கை (செக்ஸ்) உறவு வைத்த ஆண்களிடம் இருந்து இரத்ததானம் பெற கனடாவின் சுகாதாரத்துறை தடைவிதிப்பு!
[Thursday, 2013-05-23 10:19:36]

பிற ஆண்களிடம் ஓர் இன சேர்க்க (செக்ஸ்) உறவு வைத்த ஆண்களிடம் இருந்து இரத்ததானம் பெற கனடாவின் சுகாதாரத்துறை தடை விதித்துள்ளது. Dana Devine, vice-president of medical, scientific and research affairs at Canadian Blood Services அவர்கள் இன்று செய்தியாளர்களிடம் வான்கூவர் நகரத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கடந்த ஐந்து வருடங்களில் பிற ஆண்களிடம் செக்ஸ் வைத்த ஆண்களிடம் இருந்து ரத்ததானம் பெறுவதை தடை செய்வதாக அறிவித்தார்.



"ஹாரிபொட்டர்' முதல் புத்தகத்தின் கையெழுத்துப் பிரதி ஒன்றரை இலட்சம் பவுண்டுக்கு ஏலம்!
[Thursday, 2013-05-23 08:21:28]

பிரபல ஆங்கில எழுத்தாளர், ஜே.கே. ரவ்லிங் எழுதிய, "ஹாரிபொட்டர்' முதல் புத்தகத்தின் கையெழுத்துப் பிரதி மற்றும் அதில் இடம் பெற்ற படங்கள் ஆகியவை, லண்டனில்,ஒன்றரை இலட்சம் பவுண்டுக்கு ஏலம் போயின. லண்டனில், புகழ்பெற்ற ஏல நிறுவனத்தில் நடைபெற்ற ஏலத்தில், இவற்றை வாங்குவதற்காக, இரண்டு வர்த்தகர்களிடையே கடும் போட்டி ஏற்பட்டது. கடைசியாக ஒன்றரை இலட்சம் பவுண்ட் வரை சென்றது.



குவாடர் துறைமுகத்தை சாலை, ரயில், விமான மார்க்கங்களில் இணைக்கும் உடன்பாட்டில் சீனா - பாகிஸ்தான் கையெழுத்து!
[Thursday, 2013-05-23 08:14:33]

பாகிஸ்தானின் முக்கிய துறைமுகங்களில் ஒன்றான குவாடர் துறைமுகத்தை கையாளும் ஒப்பந்தத்தை சீனா கடந்த ஆண்டு பெற்றது. எண்ணெய் வளம் மிக்க அரபு நாடுகளில் இருந்து பெட்ரோலிய கச்சா எண்ணெய் ஏற்றிவரும் கப்பல்களுக்கு இந்த துறைமுகம் தான் மிக குறைந்த தூரத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஹோர்மஸ் ஜல சந்திப்பு பகுதியில் இந்த துறைமுகம் அமைந்துள்ளது. இங்கிருந்து மேற்கு சீன நகரங்கள் வெகு அருகாமையில் அமைந்துள்ளதால் குவாடர் துறைமுகத்தை சாலை, ரயில், விமானம் மார்க்கமாக இணைக்கும் ஒப்பந்தத்தில் பாகிஸ்தான்-சீனா அதிகாரிகள் நேற்று கையொப்பமிட்டனர்.



ஸ்வீடன் தலைநகரில் வரலாறு காணாத வன்முறைகள் - 30 கார்கள் தீக்கிரை!
[Thursday, 2013-05-23 08:09:17]

ஸ்வீடன் நாட்டில், என்றும் காணாத அளவிற்கு வன்முறைக் கலவரங்கள் நடந்தேறியுள்ளன. தலைநகர் ஸ்டாக்ஹோமின் அருகில் உள்ள ஏழ்மையான குடியேற்ற மக்கள் வசிக்கும் புறநகர் பகுதிகளில், நூற்றுக்கணக்கான இளைஞர்கள், கார்களைத் தீயிட்டுக் கொளுத்தியும், காவல்துறையினரையும், மீட்புப் பணிக்கு வந்தவர்களைத் தாக்கியும், மூன்று இரவுகளாக வன்முறைக் கலவரங்களில் ஈடுபட்டனர். செவ்வாய் அன்று இரவு, ஜாகோப்ஸ்பர்கில் உள்ள காவல்நிலையம் இளைஞர்களால் தாக்கப்பட்டது. இரண்டு பள்ளிகள் சேதப்படுத்தப்பட்டன.



புக்கர் பரிசை தட்டிச் சென்றார் அமெரிக்க எழுத்தாளர் - கன்னட எழுத்தாளர் ஏமாற்றம்!
[Thursday, 2013-05-23 07:50:27]

நியூயார்க்கில் வாழும் அமெரிக்க எழுத்தாளர் லிடியா டேவிஸுக்கு 2013-ம் ஆண்டுக்கான மேன் புக்கர் பரிசு கிடைத்துள்ளது. மிகச்சிறந்த எழுத்தாளரும், சிறந்த மொழிபெயர்ப்பாளருமான லிடியா டேவிஸுக்கு இதன் மூலம் 60 ஆயிரம் பவுண்ட் ரொக்கப் பரிசு கிடைத்துள்ளது. "தி எண்ட் ஆஃப் தி ஸ்டோரி' மற்றும் "வெரைடீஸ் ஆப் டிஸ்டர்பன்ஸ்' எனும் இரு நாவலுக்காக புக்கர் பரிசு கிடைத்துள்ளது. தி மேன் புக்கர் பரிசுக்காக தேர்வு செய்யப்பட்டவர்களில் பிரபல கன்னட எழுத்தாளர் யு.ஆர். அனந்தமூர்த்தியும் ஒருவர். இறுதியில் லிடியா தேர்வு செய்யப்பட்டதன் மூலம் புக்கர் விருது பெறும் வாய்ப்பை அனந்தமூர்த்தி இழந்தார்.



லண்டனில் பயங்கரவாத தாக்குதல் - படைச்சிப்பாயை வெட்டிக் கொன்றவர்கள் சுட்டுப் பிடிக்கப்பட்டனர்!
[Thursday, 2013-05-23 07:17:17]

லண்டனில் நேற்று நடைபெற்ற ஒரு பாரதூர தாக்குதல் சம்பவம் பிரிட்டனில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் நடந்த தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் இருவர் காயமடைந்துள்ள நிலையில் கோப்ரா என்று அழைக்கப்படும் இந்த அவசரக் குழுவின் கூட்டம் கூட்டப்பட்டது. இதை சந்தேகத்துக்குரிய இஸ்லாமிய பயங்கரவாதத் தாக்குதலாக பிரிட்டிஷ் காவல்துறை கருதுகிறது. இது ஒரு பயங்கரவாத தாக்குதல் என்பதற்கான வலுவான சான்றுகள் இருப்பதாக கூறியுள்ள பிரிட்டிஷ் பிரதமர் இத் தாக்குதல் தனக்கு அதிர்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.



ஒரு கோடி சட்டவிரோத குடியேற்றவாசிகளுக்கு குடியுரிமை வழங்க அமெரிக்க செனெட் ஒப்புதல்!
[Wednesday, 2013-05-22 19:09:35]

2 லட்சத்து 60 ஆயிரம் இந்தியர்கள் உள்ளிட்ட ஒரு கோடியே 10 லட்சம் பேருக்கு அமெரிக்க குடியுரிமை கிடைக்க உள்ளது. இதற்கான முக்கிய மசோதாவுக்கு, செனட் சபை குழு ஒப்புதல் அளித்தது.அமெரிக்க நாட்டில் உரிய ஆவணங்கள் இன்றி ஒரு கோடியே 10 லட்சம் வெளிநாட்டினர் வசித்து வருகின்றனர். இவர்களில் 2 லட்சத்து 60 ஆயிரம் பேர் இந்தியர்கள் ஆவார்கள். இவர்களுக்கு குடியுரிமை அளிக்க வகை செய்து, முழுமையான குடியுரிமை சீர்திருத்தம், எல்லை பாதுகாப்பு, பொருளாதார வாய்ப்பு மற்றும் குடியுரிமை நவீனமய சட்ட மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா, அமெரிக்க செனட் சபையின் நீதித்துறை குழுவின் பரிசீலனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.



சீன வெடிபொருள் தொழிற்சாலையில் பாரிய வெடிவிபத்து - 23 பேர் பலி!
[Wednesday, 2013-05-22 19:05:36]

சீனாவின் ஷண்டாங் பகுதியில் உள்ள வெடிப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 23 பேர் பலியாகியுள்ளனர். அதில் பலியானவர்களில் 10 பேரை அவர்களது டி.என்.ஏ.வை கொண்டு அடையாளம் காண முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தில் தொழிற்சாலையின் ஒரு பகுதியில் கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து தரை மட்டமாகி உள்ளது. இதில் 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதுதொடர்பாக விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



காந்தியின் இரத்தம் கடைச்சரக்கா? - கொதிக்கிறார் கொள்ளுப்பேரன்!
[Wednesday, 2013-05-22 18:49:57]

மகாத்மா காந்தியின் ரத்த மாதிரி உள்ளிட்ட பொருட்கள் கடைசரக்காக ஏலம் விடுவதை தடுக்க முடியவில்லையே என என் ரத்தம் கொதிக்கிறது என காந்தியின் கொள்ளுப் பேரனான துஷார் காந்தி வேதனையோடு கூறியுள்ளார். நேற்று, காந்தியின் ரத்தம், செருப்பு போன்ற உடமைகள் லண்டனில் சுமார் 3 இலட்சம் பவுண்டுக்கு ஏலத்தில் விற்கப்பட்டன. இது தனக்கு மிகவும் வேதனை அளிப்பதாக கூறியுள்ளார் காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தி. மேலும் அவர் கூறியதாவது. தேசப்பிதா காந்தியின் ரத்தம் வேற்று நாட்டில் கடை சரக்கைப் போல் ஏலம் விடப்பட்டதை அறிந்து எனது ரத்தம் கொதிக்கிறது.



சீனப்பிரதமர் வருகையால் பாகிஸ்தானில் செயலிழந்தன செல்போன்கள்!
[Wednesday, 2013-05-22 18:43:30]

சீனப் பிரதமர் இன்று பாகிஸ்தான் வருவதை முன்னிட்டு பாகிஸ்தான் அரசு தலைநகர் இஸ்லாமாபாத்திலும் அருகில் உள்ள ராணுவத்தளமான ராவல்பிண்டியிலும் அனைத்து செல்போன் சேவைகளையும் நிறுத்தி வைத்துள்ளது. பாகிஸ்தானின் தொலைத்தொடர்பு நிறுவனம் இன்று மதியம் அந்நாட்டு நேரப்படி 1 மணி வரை அனைத்து செல்போன் சேவைகளையும் நிறுத்தி வைக்குமாறு அறிக்கை விடுத்தது. போராளிகள் செல்போன்கள் மூலம் தாக்குதல்களைத் திட்டமிடுவதைத் தடுப்பதற்காகவே இத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



சொக்கலேட்டில் இரும்பு ஆணி - நட்டஈடு வழங்க காட்பரி நிறுவனம் இணக்கம்!
[Wednesday, 2013-05-22 18:39:09]

இங்கிலாந்தில் 1905 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட காட்பரி நிறுவனத்தின் விற்பனை பொருட்கள் அனைத்தும் உலக பிரசித்தி பெற்றவை. பாலிலேயே செய்யப்படும் இந்நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளும் சுவையும், தரமும் மிகுந்தவை. கடந்த 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16-ஆம் தேதி திரிபுரா மாநிலத்தின் அகர்தலாவைச் சேர்ந்த ஒருவர், தன்னுடைய மூன்று வயதுக் குழந்தைக்கு காட்பரிஸ் சாக்லேட் வாங்கிக் கொடுத்துள்ளார். அதனை அந்த குழந்தை சாப்பிட ஆரம்பித்தபோது, அதில் ஒரு இரும்பு ஆணி இருந்ததை கண்டு திடுக்கிட்டார். உடனேயே நுகர்வோர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கையும் பதிவு செய்தார்.



கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் - சிரியாவுக்கு இஸ்ரேலிய தளபதி எச்சரிக்கை!
[Wednesday, 2013-05-22 08:06:28]

இஸ்ரேலின் ஆதிக்கத்திற்குட்பட்ட கோலன் ஹய்ட்ஸ் பகுதியில் இஸ்ரேல் ராணுவ ஜீப் நேற்று ரோந்துப் பணியில் ஈடுபட்டது. அந்த ஜீப்பின் மீது குண்டுகளை வீசி சிரியா ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்தினர். எங்களது எல்லைக்குள் இஸ்ரேல் ஜீப் நுழைந்ததால் நாங்கள் தாக்கினோம் என்று சிரியா விளக்கம் அளித்தது. இந்நிலையில், ஊடகங்களுக்கு பேட்டியளித்த இஸ்ரேல் ராணுவ தளபதி லெப்ட்டினென்ட் ஜெனரல் பென்னி கேண்ட்ஸ், எங்கள் ஆதிக்கத்திற்கு உட்பட்ட பகுதியில் ராணுவத்தின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த சிரியா அரசு முயற்சித்து வருகிறது. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் சிரியா அதிபர் பஷர் அல் ஆசாத் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்தார்.



காந்தியின் இரத்தம் 7 ஆயிரம் பவுண்டுக்கே ஏலம் - தேய்ந்து போன காலணி, ஜெபமாலை, உயிலை விட மதிப்புக் குறைவு!
[Wednesday, 2013-05-22 08:01:12]

மகாத்மா காந்தியின் கடைசி உயில், ஜெப மாலை, ரத்த மாதிரி, தேய்ந்த காலணி உள்ளிட்ட பொருட்கள் லண்டனில் நேற்று ஏலம் விடப்பட்டன. இந்த ஏலத்தில், காந்தி தனது கைப்பட எழுதிய உயில் 40 ஆயிரம் பவுண்டுகள் வரை ஏலம் போகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பார்த்ததை விட மிக அதிகமாக 55 ஆயிரம் பவுண்டுகளுக்கு இந்த உயில் ஏலம் போனது. பரிசோதனைக்காக எடுக்கப்பட்ட அவரது ரத்த மாதிரி 10 ஆயிரம் பவுண்டுகள் ஏலம் போகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஏமாற்றம் அளிக்கும் வகையில் 7 ஆயிரம் பவுண்டுகளுக்கே ஏலம் போனது. காந்தியின் கைப்பட நூற்ற நூலில் இருந்து தயாரிக்கப்பட்ட சால்வை, 40 ஆயிரம் பவுண்டுகளுக்கு ஏலம் போனது. இது எதிர்பார்த்த தொகையை விட இரு மடங்கு அதிகமாகும்.



சீனப் பிரதமருக்கு நடுவானில் தடல்புடலான வரவேற்பு அளிக்க பாகிஸ்தான் ஏற்பாடு!
[Wednesday, 2013-05-22 07:51:33]

சீனாவின் "இரும்புச் சகோதரன்' என்று பாகிஸ்தானை வர்ணித்துள்ளார் அந்நாட்டு அதிபர் லீ கெகியாங். சீனப் பிரதமர் லீ கெகியாங் தனது மூன்று நாள் இந்தியப் பயணத்தை முடித்துக் கொண்டு, பாகிஸ்தானுக்கு இன்று பயணம் மேற்கொள்கிறார்.இந்நிலையில் லீ கெகியாங் கூறியுள்ளதாக பாகிஸ்தானின் அசோசியேட்டட் பிரஸ் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: தெற்காசியாவில் அமைதி, ஸ்திரத்தன்மை, பயங்கரவாத எதிர்ப்பு ஆகிய நடவடிக்கைகளில் பாகிஸ்தான் குறிப்பிடத்தக்க வகையில் பங்காற்றி வருகிறது. இதனை சீனா பாராட்டுகிறது.சர்வதேச சமூகமும் பாகிஸ்தானை ஆதரித்து, அதற்கு உரிய ஆதரவை வழங்க வேண்டும்.



ஈரான் அதிபர் தேர்தலில் போட்டியிட முன்னாள் அதிபருக்குத் தடை!
[Wednesday, 2013-05-22 07:39:17]

ஈரான் அதிபர் தேர்தலில் போட்டியிட அந்நாட்டு முன்னாள் அதிபருக்கு தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது. ஈரான் அதிபர் தேர்தல் வரும் ஜுன் மாதம் 14-ம் தேதி நடக்கிறது. இதில் கன்சர்வேடிவ், சீர்திருத்த கட்சிகள் சார்பில் மொத்தம் ஐந்து வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் முன்னாள்அதிபர் அக்பர் ஹஸ்மி ரப்சன்ஜானி போட்டியிட தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது. இதற்கான காரணம் வெளியிடபடவில்லை என அந்நாட்டு உள்துறை அமைச்சர் கூறினார். தற்போதைய அதிபர் முகமது அகமது நிஜாத்தும் அதிபர் பதவிக்கு மீண்டும் போட்டியிடுகிறார்.


Canada Kanthasamy Kovil
Suresh-remax-2013-01-01
Ramans2011
NIRO-DANCE-100213
AJRwindows22.05.13
INNSYS-20120930
TDE_Computers2011
Mahesan supramaniyam 031109
TamilsGuid-191012-2013
RoyaShades-l2011(04-12-11)
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com