Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 19, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
கதிர்காம முகாமில் உள்ள மக்களை பலவந்தமாக வெளியேற்றுவதை ஏற்றுக் கொள்ள முடியாது: -
[Sunday, 2012-09-23 09:38:20]
News Service

வவனியா - கதிர்காமர் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை பலவந்தமாக வெளியேற்றி தற்காலிக காணிகளில் குடியமர்த்துவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட்டு அந்த மக்களின் சொந்த இடங்களிலேயே குடியமர்த்துவதற்கு நடவடிக்கை ௭டுக்கப்பட வேண்டும் ௭ன தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கோரிக்கை விடுக்கின்றார்.

  

கதிர்காமர் முகாமில் இருக்கும் கேப்பா புலவு மக்களை அவர்களுடைய விருப்பமில்லாமல் அச்சுறுத்தி தற்காலிக காணிகளில் தங்க வைப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனை உடனடியாக தடுத்து நிறுத்துவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் சமூக அமைப்புகளும் கவனம் செலுத்த வேண்டுமெனவும் அவர் வேண்டுகோள் விடுக்கின்றார்.

நேற்று செட்டிக்குளம் கதிர்காமர் முகாமுக்கு சென்ற அரரசாங்க அதிபர், ஏனைய நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் வன்னி பகுதிக்கான கட்டளைத் தளபதி சமரசிங்க உள்ளிட்ட குழுவினர்கள் அங்குள்ள மக்களை ௭திர்வரும் திங்கட்கிழமை அங்கிருந்து வெளியேறுமாறும் திங்கட்கிழமை குறித்த முகாம் மூடப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

முகாமிலுள்ள மக்கள் தங்களது சொந்த இடங்களில் குடியமர்த்தப்படாவிட்டால் தாம் வெளியேற முடியாது ௭னவும் அவ்வாறு வெளியேறுவதானால் தாம் தங்க வைக்கின்ற தற்காலிக காணிகளிலிருந்து மீண்டும் தமது சொந்த காணிகளில் மீளகுடியமர்த்தப்படும் ௭ன்ற உறுதிமொழியினை அதிகாரமிக்க உயர் அதிகாரியொருவரின் உறுதிப்படுத்தலுடன் ௭ழுத்து மூலமாக வழங்க வேண்டும் ௭னவும் கோரியுள்ளனர்.

குறித்த மக்கள் அவர்களது சொந்த இடங்களில் அல்லாமல் மாற்றுக் காணிகளில் குடியமர்த்தப்படுவர் ௭ன அதிகாரிகள் மீண்டும் தெரிவித்துள்ளதை அடுத்து அங்கு சென்ற அதிகாரிகள் கோபமுற்றதாகவும் பின்னர் இராணுவ அதிகாரி கடுமையாக ௭ச்சரித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆகவே செட்டிக்குளம், கதிர்காம முகாமில் இருக்கும் மக்களை பலவந்தமாக அவர்களின் விருப்பமில்லாமல் தற்காலிக காணிகளில் குடியமர்த்துவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. அதனை தடுத்து நிறுத்துவதற்கு அனைவரும் ஒன்று பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

தனித் தமிழீழத்தினை வென்றடைவதற்கான தெளிவான நிகழ்ச்சி நிரலை முன்நிறுத்திய பிரதமர் உருத்திரகுமாரனின் மே 18 உரை!Top News
[Sunday, 2013-05-19 20:39:54]

முள்ளிவாய்க்கால் பெருவலியின் கூட்டுநினைவின் 4ம் ஆண்டினை உலகத் தமிழனம் நினைவேந்தியிருக்கும் இவ்வேளை, தமிழீத்தினை வென்றடைவதற்கான தமிழர் தரப்பின் நிகழ்ச்சி நிரலினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உரத்திரகுமாரன், தனது மே-18 தமிழீழத் தேசிய துக்க நாள் உரையில் தெளிவாக முன்னிறுத்தியுள்ளார். உலகத் தமிழினம் நோக்கிய தனதுரையின் தமிழீழ சுதந்திர சாசன முரசறைவுப் பெருநிகழ்வில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் வழங்கியிருந்தார்.



இலங்கை, சிங்கள பெளத்தர்களின் நாடு எனக் கூறுபவர்கள் இந்நாட்டின் வரலாறு தெரியாதவர்கள் - சுரேஷ் எம்.பி
[Sunday, 2013-05-19 20:39:12]

இலங்கை சிங்கள பெளத்தர்களின் நாடு எனக் கூறுபவர்கள் இந்நாட்டின் வரலாறு தெரியாதவர்கள். விஜயன் வருகைக்குப் பின்னரே இலங்கையில் பெளத்த மதம் பரவியதாக மகாவம்சம் தெரிவிக்கின்றது. இப்படியிருக்க இது சிங்கள பெளத்தர்களின் நாடு என எப்படி கூற முடியும்? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். விஜயனின் வருகைக்கு முன்னர் இங்கு நாகர்கள் வாழ்ந்துள்ளனர். அவர்கள் தமிழ் பேசுபவர்கள், சிவ வழிபாடு செய்பவர்கள், தமிழ் பண்டைய மொழி. இதற்கு நீண்ட வரலாறு உண்டு. சிங்கள மொழி நான்காம் நூற்றாண்டில் தோன்றியதாக கூறப்படுகின்றது.



மலையகத்தின் மூத்த தொழிற்சங்கவாதி ஓ.ஏ.ராமையா காலமானார்.
[Sunday, 2013-05-19 20:30:51]

மலையகத்தின் மூத்த தொழிற்சங்கவாதி ஓ.ஏ.ராமையா காலமானார். சுகவீனமுற்றிருந்த அவர், தனது 76-வது வயதில் நேற்றிரவு காலமானார். ஓ.ஏ.ராமையா நாவலபிட்டி, பூண்டுலோயாவில் உள்ள தோட்டமொன்றில் 1938ம் ஆண்டில் பிறந்தார். ஹட்டனில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது பூதவுடல், நாளை ஹட்டன் நகரசபை மண்டபத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர், மாலை நாவலபிட்டிக்கு தகனக் கிரியைக்காக கொண்டுசெல்லப்படவுள்ளது. செங்கொடிச் சங்கத்தின் செயலாளர் ஓ.ஏ.ராமையா, 1950களின் இறுதியில் தனது தொழிற்சங்க வாழ்க்கையைத் தொடங்கினார். இலங்கை பெருந்தோட்ட தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பின் செயலாளராகவும் பணியாற்றிய அவர், மலையக தொழிற்சங்க அரசியலில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக பங்களிப்புச் செய்துள்ளார்.



படையினரின் பிரசன்னம் வட மாகாணசபைத் தேர்தலின்போது அதிகரிக்கும் - சுட்டிக்காட்டியது கபே!
[Sunday, 2013-05-19 15:02:46]

எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள வட மாகாணசபைத் தேர்தலின் போது படையினரின் பிரசன்னம் அதிகரிக்கும் என தேர்தல் கண்காணிப்பு நிறுவனங்கள் அச்சம் வெளியிட்டுள்ளன. தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வடக்கில் இராணுவத்தின் பிரசன்னம் உயர்வடையக் கூடிய சாத்தியம் அதிகரித்துள்ளதாக கபே என்ற தேர்தல் கண்காணிப்பு அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது, தேர்தல் நடாத்தப்படுவதற்கு முன்னதாக கருத்துச் சுதந்திரம், ஊடக சுதந்திரம் மற்றும் சுதந்திரமாக நடமாடக் கூடிய உரிமைகள் முழுமையாக உறுதிப்படுத்தப்பட வேண்டியது அவசியமானது என அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரஞ்சித் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார். சுதந்திரமாக சென்று பிரச்சாரங்களை மேற்கொள்வதில் தொடர்ந்தும் தடைகள் நீடிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.



தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அத்திவாரம் தமிழரசுக் கட்சியே - மாவை சேனாதிராஜா எம்.பி!
[Sunday, 2013-05-19 14:58:10]

'தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட காலத்தில் இருந்து அதன் அத்திவாரமாக தமிழரசுக்கட்சி திகழ்கிறது' என்று தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார். நல்லூர் பிரதேச சபையின் நிதியில் அமைக்கப்பட்ட 'யாழ்ப்பாணம் வரவேற்கிறது' வளைவு திறப்பு விழா, இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறுகையில்,



யுத்த வெற்றிக் கொண்டாட்டத்தின்போது கடலில் மூழ்கிய கடற்படை வீரரின் சடலம் மீட்பு!
[Sunday, 2013-05-19 14:53:27]

யுத்த வெற்றி விழா கொண்டாடத்தின் போது காணாமற் போன கடற்படை வீரரது சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. இவரது சடலம் பம்பலப்பிட்டி கடற்பரப்பில் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார். காலி முகத்திடல் கடற்பரப்பில் நேற்று (18) காலை இடம்பெற்ற யுத்த வெற்றிவிழாவின் போது குறித்த சிறிய ரக படகு மூழ்கியது. படகில் இருவர் பயணித்ததாகவும் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாகவும் ஒருவர் தப்பித்துக் கொண்டதாகவும் கடற்படை தகவல்கள் தெரிவித்தன.



ஸ்ரீலங்கா அரசிற்கு எதிராக அணி திரட்டுகின்றார் அமைச்சர் டக்ளஸ்!
[Sunday, 2013-05-19 11:29:30]

13வது அரசியலமைப்பு திருத்த சட்டத்தை ஒழிக்கும் நடவடிக்கைக்கு எதிராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான குழுவொன்று ஒன்றிணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 13வது திருத்தத்திற்கு அமைய காணி, காவல்துறை அதிகாரங்கள் மாகாணசபைகளிடமே தொடர்ந்து இருப்பதையும், 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதை உறுதிப்படுத்தவும் இந்த அணி உருவாக்கப்பட்டுள்ளது. டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையிலான இந்த அணியில் ஆளும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் உள்ளிட்ட அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் 31 பேர் இடம்பெற்றுள்ளனர்.



ஸ்ரீலங்காவிற்கு எதிரான ஐ.நா தீர்மானத்தின் பின்னரான நிலைமைகள் குறித்து அமெரிக்கா கவனம்!
[Sunday, 2013-05-19 11:15:16]

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் பின்னரான நிலைமைகள் குறித்து அமெரிக்கா கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. மனித உரிமை நிலைமைகளை மேம்படுத்துமாறு கோரி இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. இந்தத் தீர்மானத்தில் குறிப்பிட்பட்ட பரிந்துரைகளை அரசாங்கம் பின்பற்றுகின்றதா? இல்லையா? என்பது குறித்து கவனம் செலுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்ட எஸ்.கஜேந்திரன் உள்ளிட்ட 15 பேர் விடுதலை!
[Sunday, 2013-05-19 09:00:35]

கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் உட்பட 15 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.பி.லக்சிறி விஜியசிங்க தெரிவித்தார். முள்ளிவாய்க்காலில் இறந்த தமிழ் உறவுகளை நினைவுகூரும் முகமாக மன்னார் பெரியகடை பொதுமண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட அஞ்சலி கூட்ட நிகழ்வில் கலந்து கொண்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் கஜேந்திரன் உள்ளிட்ட 9 ஆண்கள் மற்றும் 6 பெண்கள் கைது செய்யப்பட்டனர். இதன் போது செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் ஜோசப் பெணாண்டோவும் கைது செய்யப்பட்டார்.



இன்னொரு இனத்தை அழித்து விழா கொண்டாடுவதுதான் வெற்றி விழாவா?: முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் அரியநேந்திரன் Top News
[Sunday, 2013-05-19 08:32:44]

தமிழ் மக்களுக்கு சுதந்திரமான அரசியல் தீர்வு விடுதலை எப்போது கிடைக்கின்றதோ, அது வரையும் எமது பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளுகளை நினைவு கூர்ந்து பிராத்தனை செய்யும் வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். மட்டக்களப்பிலுள்ள இலங்கை தமிழரசுக்கட்சியின் கிளை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த வைபவத்தில் தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன்; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு செல்லுவது போல அடிக்கடி 4ம் மாடிக்கும் செல்கின்றனர். ஒரு மாதத்திற்கு இரண்டு தடவைகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு செல்வது போன்று மாதத்திற்கு ஒரு தடவையாவது 4ம் மாடிக்கு செல்ல வேண்டியுள்ளது.



நோர்வேயில் எழுச்சியுற நடைபெற்ற இன அழிப்பு நாள் நினைவேந்தல் நிகழ்வு Top News
[Sunday, 2013-05-19 07:45:25]

18.05.2013 மாலை 1700 மணிக்கு இன அழிப்பு நாள் நினைவேந்தல் பேரணி ஒஸ்லோ மத்திய தொடரூந்து நிலைத்தின் அருகாமையிலுள்ள சதுக்கத்தில் இருந்து ஆரம்பமாகி நோர்வே பாராளமன்றத்தை சென்றடைந்தது. பாராளமன்றத்தின் முற்பகுதியில் முள்ளிவாய்கால் பெரும் நெருப்பில் கொண்ட கொள்கைக்காக பெரும் புயலை எதிர்கொண்டு வீரகளமாடிய வேங்கைகளுக்கும் அவர்களின் கேடயமாய் நின்று மானப்போர் புரிந்த மக்களுக்கும் மலர் வணக்கம் செலுத்தப்பட்டது. ஈழத்தமிழ் அவையினர் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த பேரணியில் பல நூற்றுக்கணக்கான மக்கள் கரம்கோர்த்து தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தினர்.



நேற்றைய தினம் சுவிஸில் நடைபெற்ற மே-18 முள்ளிவாய்க்கால் செந்நெருப்புநாள் நிகழ்வு! Top News
[Sunday, 2013-05-19 07:38:28]

விடுதலைக்காகப் போராடிய தமிழினத்தை உலக நாடுகள் பலவற்றின் துணையோடு இனப்படுகொலை செய்த, இந்தக்காலத்தின் அதியுச்ச இனப்பேரழிப்பு நடந்த தமிழீழத்தில், இறுதிவரை மண்டியிடாது போராடிய மாவீரர்களுக்கும், மக்களுக்குமான நான்காம் ஆண்டு நினைவு எழுச்சி நிகழ்வான மே-18 முள்ளிவாய்க்கால் செந்நெருப்புநாள், நேற்று சூரிச் மாநிலத்தில் அமைந்துள்ள Helvetia Platz திடலில் நடைபெற்றது. இதில் சுவிஸ் வாழ் தமிழ்மக்கள் மிகவும் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டிருந்தனர். சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற வணக்க நிகழ்வானது பொதுச்சுடரேற்றலுடன் ஆரம்பமாகி, சுவிஸ் மற்றும் தமிமீழத் தேசியக்கொடிகள் ஏற்றப்பட்டதனைத் தொடர்ந்து, ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கத்துடன், மலரஞ்சலி செலுத்தப்பட்டது.



'புலிகளின் தலைவர் பிரபாகரன் எரித்திரியாவில் இருப்பது பேய் கதை' - இராணுவப்பேச்சாளர் ருவான்
[Sunday, 2013-05-19 07:25:25]

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் 2009 ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற யுத்தத்தில் நந்திக்கடல் களப்பில் பலியாகிவிட்டார். அதனை அவருடைய சகாக்களே உறுதிப்படுத்திவிட்டனர். இந்நிலையில், பிரபாகரன் எரித்திரியாவில் இருப்பது என்பதை இலங்கை படைத்தரப்பு முற்றாக மறுத்துள்ளதுடன். பிரபாகரன் எரித்திரியாவில் இருப்பது என்பது ஒரு பேய்கதையாகும் என்றும் இராணுவம் அறிவித்துள்ளது.



லண்டனில நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பேரணியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கெடுப்பு Top News
[Sunday, 2013-05-19 07:22:29]

பிரித்தானிய தமிழர் பேரவையினால் லண்டனில் நேற்றையதினம் 18-05-13 சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவெழுச்சி பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கலந்து கொண்டு எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய நாடுகளின் மகா நாட்டில் கலந்து கொள்வது என்ற பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனின் முடிவுக்கு தமது கண்டனத்தையும் ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தியிருக்கிரார்கள்.



இறந்த உறவுகளுக்காக ஒரு சொட்டுக் கண்ணீர் விட முடியவில்லை - மாவை சேனாதிராசா
[Sunday, 2013-05-19 07:17:29]

இறந்தவர்களுக்காக ஒரு சொட்டுக் கண்ணீர் விட முடியாத அளவிற்கு இராணுவ அடக்குமுறையை இந்த அரசாங்கம் பிரயோகித்து வருகின்றது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் போது உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் மே 18 நினைவு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.



படையினரால் மீட்கப்பட்ட வன்னி மக்களுக்கு உணவுகொடுக்க புலம்பெயர் சமூகம் முன்வரவில்லை - ஜனாதிபதி மகிந்த Top News
[Saturday, 2013-05-18 20:54:42]

"இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது படையினரால் மீட்கப்பட்ட மக்களுக்கு உணவுகொடுக்க புலம்பெயர் சமூகம் வரவில்லை" என்று இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூறுகிறார். இலங்கை அரசாங்கத்தின் நான்காவது போர் வெற்றிவிழா மேடையிலேயே மகிந்த ராஜபக்ஷ இவ்வாறு கூறினார். கொழும்பு காலி முகத்திடலில் நடந்த அரசாங்கத்தின் போர் வெற்றி விழாவில் சிறப்பு விருந்தினர்கள், அரசியல்வாதிகள், முப்படையினர் மற்றும் பொதுமக்கள் என பெருமளவிலானோர் கலந்துகொண்டனர். "மனிதக் கேடயங்களாக பிடித்து வைக்கப்பட்டிருந்த மக்களை படையினர் மீட்டனர். அவர்களுக்கு உணவுகொடுக்க புலம்பெயர் சமூகத்தினர் வரவில்லை, அரசாங்கமும் படையினரும் தான் உணவுகொடுத்து பராமரித்தார்கள்" என்றார் மகிந்த ராஜபக்ஷ.



ஸ்ரீலங்கா மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அனைத்து தமிழ் குடும்பங்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் - ஒன்ரோறியோ என்.டி.பி கட்சித் தலைவர்!
[Saturday, 2013-05-18 20:45:00]

தமிழினப் படுகொலை நாள் நடக்கவுள்ள தமிழர் நினைவு நாளுக்கு ஒன்ரோறியோ முதல்வர் காத்லீன் வ்ய்ன், அறிக்கை வெளியிட்டதை தொடர்ந்து ஒன்ரோறியோ என்.டி.பி கட்சித் தலைவர் அண்ட்ரியா ஹோர்வேத், ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். தமிழர் நினைவு தினத்தை முன்னிட்டு ஒன்ரோறியோ என்.டி.பி கட்சித் தலைவர் அண்ட்ரியா ஹோர்வேத் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது ,



யுத்த வெற்றிவிழா கொண்டாட்டத்தின் போது கடலுக்குள் மூழ்கிய கடற்படை படகு!
[Saturday, 2013-05-18 20:43:50]

தமிழின அழிப்பினை வெற்றிவிழாவாகக் கொண்டாடிய போது கடற்படைக்குச் சொந்தமான படகொன்று கடலில் மூழ்கியுள்ளதாக தெரியவந்திருக்கின்றது. இந்தச் சம்பவத்தினை கடற்படை ஊடகப் பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய உறுதிப்படுத்தியிருக்கின்றார். காலி முகத்திடல் கடற்பரப்பில் இன்று காலை இடம்பெற்ற யுத்த வெற்றிவிழாவின் போது குறித்த சிறிய ரக படகு மூழ்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். படகில் இருவர் பயணித்ததாகவும் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாகவும் ஒருவர் தப்பித்துக் கொண்டதாகவும் கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.



தமிழர்களின் காணிகளை இராணுவம் அபகரிப்பது குறித்து இந்தியா இலங்கைக்கு எச்சரிக்கை!
[Saturday, 2013-05-18 20:39:38]

இந்திய மத்திய அரசாங்கம் இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக கொழும்பின் முன்னணி ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. வட மாகாணத்தில் உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் படையினர் காணிகளை அபகரித்து செல்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்திய இலங்கை வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையில் நடைபெற்ற தொலைபேசி உரையாடலின் போது இந்த விடயம் கலந்துரையாடப்பட்டுள்ளது. வட மாகாண தமிழ் மக்களின் காணிகளை படையினர் சுவீகரிப்பதானது பொருத்தமாகாது என இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கையானது உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகளுக்கு புறம்பானது என குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான நடவடிக்கைகள் நல்லிணக்க முனைப்புக்களுக்கும் பாதகத்தை ஏற்படுத்தும் என அமைச்சர் குர்ஷித் சுட்டிக்காட்டியுள்ளார்.



தமிழர் படுகொலை நினைவு தினத்தில் உங்களுடன் நானும் இணைந்து கொள்கிறேன் - ஒன்ராறியோ முதல்வர் காத்லீன்!
[Saturday, 2013-05-18 20:38:22]

சமீப காலமாகவே தமிழர்களுடன் கை கோர்த்து செயல்படுவதையே பெரும்பான்மையான கனடிய அரசியல் கட்சிகள் விரும்புகின்றன என்பதும் கனடாவில் தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக தமிழினம் மாறி என்பதும் நாம் அனைவரும் அறிந்ததே. வருடம் முழுவதும் பல நிகழ்வுகளும், விழாக்களும் நம்மவர்களிடையே நடத்தப்பட்டு வந்த போதிலும் கூட பிரதான உணர்வு ரீதியான நிகழ்வாக நம்மவர்கள் அனைவராலும் கருதப்படுவது இனவழிப்பு நினைவுநாள் தொடர்பான் நிகழ்வுதான்.


Ramans2011
TDE_Computers2011
TamilsGuid-191012-2013
Mahesan supramaniyam 031109
NIRO-DANCE-100213
Suresh-remax-2013-01-01
RoyaShades-l2011(04-12-11)
Canada Kanthasamy Kovil
INNSYS-20120930
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com